Monday, September 26, 2016

2 Naa'laagamam 9 | 2 நாளாகமம் 9 | 2 Chronicles 9

சேபாவின்  ராஜஸ்திரீ  சாலொமோனின்  கீர்த்தியைக்  கேள்விப்பட்டபோது,  விடுகதைகளினாலே  சாலொமோனைச்  சோதிக்கிறதற்காக,  மிகுந்த  பரிவாரத்தோடும்,  கந்தவர்க்கங்களையும்,  மிகுதியான  பொன்னையும்  இரத்தினங்களையும்  சுமக்கிற  ஒட்டகங்களோடும்  எருசலேமுக்கு  வந்தாள்;  அவள்  சாலொமோனிடத்தில்  வந்தபோது,  தன்  மனதிலிருந்த  எல்லாவற்றையும்  குறித்து  அவனிடத்தில்  சம்பாஷித்தாள்.  (2நாளாகமம்  9:1)

seabaavin  raajasthiree  saalomoanin  keerththiyaik  kea'lvippattapoathu,  vidukathaiga'linaalea  saalomoanaich  soathikki’ratha’rkaaga,  miguntha  parivaaraththoadum,  kanthavarkkangga'laiyum,  miguthiyaana  ponnaiyum  iraththinangga'laiyum  sumakki’ra  ottagangga'loadum  erusaleamukku  vanthaa'l;  ava'l  saalomoanidaththil  vanthapoathu,  than  manathiliruntha  ellaavat’raiyum  ku’riththu  avanidaththil  sambaashiththaa'l.  (2naa’laagamam  9:1)

அப்பொழுது  சாலொமோன்  அவள்  கேட்டவைகளையெல்லாம்  விடுவித்தான்;  அவளுக்கு  விடுவிக்காதபடிக்கு  ஒன்றாகிலும்  சாலொமோனுக்கு  மறைபொருளாயிருக்கவில்லை.  (2நாளாகமம்  9:2)

appozhuthu  saalomoan  ava'l  keattavaiga'laiyellaam  viduviththaan;  ava'lukku  viduvikkaathapadikku  on’raagilum  saalomoanukku  ma’raiporu'laayirukkavillai.  (2naa’laagamam  9:2)

சேபாவின்  ராஜஸ்திரீ  சாலொமோனுடைய  ஞானத்தையும்  அவன்  அரமனையையும்,  (2நாளாகமம்  9:3)

seabaavin  raajasthiree  saalomoanudaiya  gnaanaththaiyum  avan  aramanaiyaiyum,  (2naa’laagamam  9:3)

அவன்  பந்தியின்  போஜனபதார்த்தங்களையும்,  அவன்  ஊழியக்காரரின்  வீடுகளையும்,  அவன்  உத்தியோகஸ்தரின்  வரிசையையும்,  அவர்கள்  வஸ்திரங்களையும்,  அவனுடைய  பானபாத்திரக்காரரையும்,  அவர்கள்  வஸ்திரங்களையும்,  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்  நடைமண்டபத்தையும்  கண்டபோது  அவள்  ஆச்சரியத்தால்  பிரமைகொண்டு,  (2நாளாகமம்  9:4)

avan  panthiyin  poajanapathaarththangga'laiyum,  avan  oozhiyakkaararin  veeduga'laiyum,  avan  uththiyoagastharin  varisaiyaiyum,  avarga'l  vasthirangga'laiyum,  avanudaiya  baanapaaththirakkaararaiyum,  avarga'l  vasthirangga'laiyum,  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkum  nadaima'ndabaththaiyum  ka'ndapoathu  ava'l  aachchariyaththaal  piramaiko'ndu,  (2naa’laagamam  9:4)

ராஜாவை  நோக்கி:  உம்முடைய  வர்த்தமானங்களையும்  உம்முடைய  ஞானத்தையும்  குறித்து,  நான்  என்  தேசத்திலே  கேட்ட  செய்தி  மெய்யாயிற்று.  (2நாளாகமம்  9:5)

raajaavai  noakki:  ummudaiya  varththamaanangga'laiyum  ummudaiya  gnaanaththaiyum  ku’riththu,  naan  en  theasaththilea  keatta  seythi  meyyaayit’ru.  (2naa’laagamam  9:5)

நான்  வந்து  அதை  என்  கண்களால்  காணுமட்டும்  அவர்கள்  வார்த்தைகளை  நம்பவில்லை;  உம்முடைய  பெரிய  ஞானத்தில்  பாதியாகிலும்  அவர்கள்  எனக்கு  அறிவிக்கவில்லை;  நான்  கேள்விப்பட்ட  பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்  அதிகம்  உண்டாயிருக்கிறது.  (2நாளாகமம்  9:6)

naan  vanthu  athai  en  ka'nga'laal  kaa'numattum  avarga'l  vaarththaiga'lai  nambavillai;  ummudaiya  periya  gnaanaththil  paathiyaagilum  avarga'l  enakku  a’rivikkavillai;  naan  kea'lvippatta  pirasthaabaththaippaarkkilum  athigam  u'ndaayirukki’rathu.  (2naa’laagamam  9:6)

உம்முடைய  ஜனங்கள்  பாக்கியவான்கள்;  எப்போதும்  உமக்கு  முன்பாக  நின்று,  உம்முடைய  ஞானத்தைக்  கேட்கிற  உம்முடைய  ஊழியக்காரரும்  பாக்கியவான்கள்.  (2நாளாகமம்  9:7)

ummudaiya  janangga'l  baakkiyavaanga'l;  eppoathum  umakku  munbaaga  nin’ru,  ummudaiya  gnaanaththaik  keadki’ra  ummudaiya  oozhiyakkaararum  baakkiyavaanga'l.  (2naa’laagamam  9:7)

உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  நீர்  ராஜாவாயிருக்கும்படிக்கு,  உம்மைத்  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கப்பண்ண,  உம்மேல்  பிரியங்கொண்ட  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஸ்தோத்திரிக்கப்படுவாராக;  உம்முடைய  தேவன்  இஸ்ரவேலை  என்றென்றைக்கும்  நிலைநிறுத்தும்படிக்குச்  சிநேகிக்கிறதினாலே,  அவர்  நியாயமும்  நீதியும்  செய்கிறதற்கு  உம்மை  அவர்கள்மேல்  ராஜாவாக  வைத்தார்  என்றாள்.  (2நாளாகமம்  9:8)

ummudaiya  theavanaagiya  karththarukku  munbaaga  neer  raajaavaayirukkumpadikku,  ummaith  thammudaiya  singgaasanaththinmeal  veet’rirukkappa'n'na,  ummeal  piriyangko'nda  ummudaiya  theavanaagiya  karththar  sthoaththirikkappaduvaaraaga;  ummudaiya  theavan  isravealai  en’ren’raikkum  nilaini’ruththumpadikkuch  sineagikki’rathinaalea,  avar  niyaayamum  neethiyum  seygi’ratha’rku  ummai  avarga'lmeal  raajaavaaga  vaiththaar  en’raa'l.  (2naa’laagamam  9:8)

அவள்  ராஜாவுக்கு  நூற்றிருபது  தாலந்து  பொன்னையும்,  மிகுதியான  கந்தவர்க்கங்களையும்,  இரத்தினங்களையும்  கொடுத்தாள்;  சேபாவின்  ராஜஸ்திரீ  ராஜாவாகிய  சாலொமோனுக்குக்  கொடுத்த  அப்படிப்பட்ட  கந்தவர்க்கங்களைப்போல  ஒருக்காலும்  வரவில்லை.  (2நாளாகமம்  9:9)

ava'l  raajaavukku  noot’rirubathu  thaalanthu  ponnaiyum,  miguthiyaana  kanthavarkkangga'laiyum,  iraththinangga'laiyum  koduththaa'l;  seabaavin  raajasthiree  raajaavaagiya  saalomoanukkuk  koduththa  appadippatta  kanthavarkkangga'laippoala  orukkaalum  varavillai.  (2naa’laagamam  9:9)

ஓப்பீரிலிருந்து  பொன்னைக்  கொண்டுவருகிற  ஈராமின்  வேலைக்காரரும்  சாலொமோனின்  வேலைக்காரரும்  வாசனை  மரங்களையும்  இரத்தினங்களையும்  கொண்டுவந்தார்கள்.  (2நாளாகமம்  9:10)

oappeerilirunthu  ponnaik  ko'nduvarugi’ra  eeraamin  vealaikkaararum  saalomoanin  vealaikkaararum  vaasanai  marangga'laiyum  iraththinangga'laiyum  ko'nduvanthaarga'l.  (2naa’laagamam  9:10)

அந்த  வாசனைமரங்களால்  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்துக்கும்  ராஜ  அரமனைக்கும்  ஊன்றுகால்களையும்,  சங்கீதக்காரருக்குச்  சுரமண்டலங்களையும்  தம்புருகளையும்  உண்டாக்கினான்;  அப்படிப்பட்டவைகள்  அதற்கு  முன்னே  யூதேயா  தேசத்தில்  ஒருக்காலும்  காணப்படவில்லை.  (2நாளாகமம்  9:11)

antha  vaasanaimarangga'laal  raajaa  karththarudaiya  aalayaththukkum  raaja  aramanaikkum  oon’rukaalga'laiyum,  sanggeethakkaararukkuch  surama'ndalangga'laiyum  thamburuga'laiyum  u'ndaakkinaan;  appadippattavaiga'l  atha’rku  munnea  yootheayaa  theasaththil  orukkaalum  kaa'nappadavillai.  (2naa’laagamam  9:11)

சேபாவின்  ராஜஸ்திரீ  ராஜாவுக்குக்  கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும்  அதிகமாய்  அவள்  ஆசைப்பட்டுக்கேட்ட  எல்லாவற்றையும்  ராஜாவாகிய  சாலொமோன்  அவளுக்குக்  கொடுத்தான்;  பின்பு  அவள்  தன்  பரிவாரத்தோடுங்கூட  தன்  தேசத்திற்குத்  திரும்பிப்போனாள்.  (2நாளாகமம்  9:12)

seabaavin  raajasthiree  raajaavukkuk  ko'nduvanthavaiga'laippaarkkilum  athigamaay  ava'l  aasaippattukkeatta  ellaavat’raiyum  raajaavaagiya  saalomoan  ava'lukkuk  koduththaan;  pinbu  ava'l  than  parivaaraththoadungkooda  than  theasaththi’rkuth  thirumbippoanaa'l.  (2naa’laagamam  9:12)

வியாபாரிகளும்  வர்த்தகரும்  கொண்டுவரும்  பொன்னைத்தவிர,  சாலொமோனுக்கு  ஒவ்வொரு  வருஷத்திலும்  வந்த  பொன்  அறுநூற்று  அறுபத்தாறு  தாலந்து  நிறையாயிருந்தது.  (2நாளாகமம்  9:13)

viyaabaariga'lum  varththagarum  ko'nduvarum  ponnaiththavira,  saalomoanukku  ovvoru  varushaththilum  vantha  pon  a’runoot’ru  a’rubaththaa’ru  thaalanthu  ni’raiyaayirunthathu.  (2naa’laagamam  9:13)

அரபிதேசத்துச்  சகல  ராஜாக்களும்  மாகாணங்களின்  அதிபதிகளும்  சாலொமோனுக்குப்  பொன்னையும்  வெள்ளியையும்  கொண்டுவருவார்கள்.  (2நாளாகமம்  9:14)

arabitheasaththuch  sagala  raajaakka'lum  maagaa'nangga'lin  athibathiga'lum  saalomoanukkup  ponnaiyum  ve'l'liyaiyum  ko'nduvaruvaarga'l.  (2naa’laagamam  9:14)

ராஜாவாகிய  சாலொமோன்  இருநூறு  பரிசைகளை  அடித்த  பொன்தகட்டால்  செய்வித்தான்;  ஒவ்வொரு  பரிசைக்கு  அறுநூறு  சேக்கல்  நிறை  பொன்தகட்டைச்  செலவழித்தான்.  (2நாளாகமம்  9:15)

raajaavaagiya  saalomoan  irunoo’ru  parisaiga'lai  adiththa  ponthagattaal  seyviththaan;  ovvoru  parisaikku  a’runoo’ru  seakkal  ni’rai  ponthagattaich  selavazhiththaan.  (2naa’laagamam  9:15)

அடித்த  பொன்தகட்டால்  முந்நூறு  கேடகங்களையும்  உண்டாக்கினான்;  ஒவ்வொரு  கேடகத்திற்கு  முந்நூறு  சேக்கல்நிறை  பொன்னைச்  செலவழித்தான்;  அவைகளை  ராஜா  லீபனோன்  வனம்  என்னும்  மாளிகையிலே  வைத்தான்.  (2நாளாகமம்  9:16)

adiththa  ponthagattaal  munnoo’ru  keadagangga'laiyum  u'ndaakkinaan;  ovvoru  keadagaththi’rku  munnoo’ru  seakkalni’rai  ponnaich  selavazhiththaan;  avaiga'lai  raajaa  leebanoan  vanam  ennum  maa'ligaiyilea  vaiththaan.  (2naa’laagamam  9:16)

ராஜா  தந்தத்தினால்  ஒரு  பெரிய  சிங்காசனத்தையும்  செய்வித்து,  அதைப்  பசும்பொன்தகட்டால்  மூடினான்.  (2நாளாகமம்  9:17)

raajaa  thanthaththinaal  oru  periya  singgaasanaththaiyum  seyviththu,  athaip  pasumponthagattaal  moodinaan.  (2naa’laagamam  9:17)

அந்தச்  சிங்காசனத்துக்குப்  பொன்னினால்  செய்யப்பட்ட  ஆறு  படிகளும்,  ஒரு  பாதபடியும்,  உட்காரும்  இடத்திற்கு  இருபுறத்திலும்  கைச்சாய்மானங்களும்  இருந்தன;  இரண்டு  சிங்கங்கள்  கைச்சாய்மானங்கள்  அருகே  நின்றது.  (2நாளாகமம்  9:18)

anthach  singgaasanaththukkup  ponninaal  seyyappatta  aa’ru  padiga'lum,  oru  paathapadiyum,  udkaarum  idaththi’rku  irupu’raththilum  kaichsaaymaanangga'lum  irunthana;  ira'ndu  singgangga'l  kaichsaaymaanangga'l  arugea  nin’rathu.  (2naa’laagamam  9:18)

அந்த  ஆறு  படிகளின்மேலும்,  இரண்டு  பக்கத்திலும்  பன்னிரண்டு  சிங்கங்கள்  நின்றன;  எந்த  ராஜ்யத்திலும்  இப்படிப்  பண்ணப்படவில்லை.  (2நாளாகமம்  9:19)

antha  aa’ru  padiga'linmealum,  ira'ndu  pakkaththilum  pannira'ndu  singgangga'l  nin’rana;  entha  raajyaththilum  ippadip  pa'n'nappadavillai.  (2naa’laagamam  9:19)

ராஜாவாகிய  சாலொமோனுக்கு  இருந்த  பானபாத்திரங்களெல்லாம்  பொன்னும்,  லீபனோன்  வனம்  என்னும்  மாளிகையின்  பணிமுட்டுகளெல்லாம்  பசும்பொன்னுமாயிருந்தது;  ஒன்றும்  வெள்ளியினால்  செய்யப்படவில்லை;  சாலொமோனின்  நாட்களில்  வெள்ளி  ஒரு  பொருளாய்  எண்ணப்படவில்லை.  (2நாளாகமம்  9:20)

raajaavaagiya  saalomoanukku  iruntha  baanapaaththirangga'lellaam  ponnum,  leebanoan  vanam  ennum  maa'ligaiyin  pa'nimuttuga'lellaam  pasumponnumaayirunthathu;  on’rum  ve'l'liyinaal  seyyappadavillai;  saalomoanin  naadka'lil  ve'l'li  oru  poru'laay  e'n'nappadavillai.  (2naa’laagamam  9:20)

ராஜாவின்  கப்பல்கள்  ஈராமின்  வேலைக்காரருடன்  தர்ஷீசுக்குப்  போய்வரும்;  தர்ஷீசின்  கப்பல்கள்  மூன்று  வருஷத்துக்கு  ஒருதரம்  பொன்னையும்,  வெள்ளியையும்,  யானைத்  தந்தங்களையும்,  குரங்குகளையும்,  மயில்களையும்  கொண்டுவரும்.  (2நாளாகமம்  9:21)

raajaavin  kappalga'l  eeraamin  vealaikkaararudan  tharsheesukkup  poayvarum;  tharsheesin  kappalga'l  moon’ru  varushaththukku  orutharam  ponnaiyum,  ve'l'liyaiyum,  yaanaith  thanthangga'laiyum,  kurangguga'laiyum,  mayilga'laiyum  ko'nduvarum.  (2naa’laagamam  9:21)

பூமியின்  சகல  ராஜாக்களைப்பார்க்கிலும்  ராஜாவாகிய  சாலொமோன்  ஐசுவரியத்திலும்  ஞானத்திலும்  சிறந்தவனாயிருந்தான்.  (2நாளாகமம்  9:22)

boomiyin  sagala  raajaakka'laippaarkkilum  raajaavaagiya  saalomoan  aisuvariyaththilum  gnaanaththilum  si’ranthavanaayirunthaan.  (2naa’laagamam  9:22)

சாலொமோனின்  இருதயத்திலே  தேவன்  அருளிய  ஞானத்தைக்  கேட்பதற்குப்  பூமியின்  ராஜாக்கள்  எல்லாரும்  அவன்  முகதரிசனத்தைத்  தேடினார்கள்.  (2நாளாகமம்  9:23)

saalomoanin  iruthayaththilea  theavan  aru'liya  gnaanaththaik  keadpatha’rkup  boomiyin  raajaakka'l  ellaarum  avan  mugatharisanaththaith  theadinaarga'l.  (2naa’laagamam  9:23)

வருஷாவருஷம்  அவரவர்  தங்கள்  காணிக்கையாகிய  வெள்ளிப்பாத்திரங்களையும்,  பொற்பாத்திரங்களையும்,  வஸ்திரங்களையும்,  ஆயுதங்களையும்,  கந்தவர்க்கங்களையும்,  குதிரைகளையும்,  கோவேறு  கழுதைகளையும்  கொண்டுவருவார்கள்.  (2நாளாகமம்  9:24)

varushaavarusham  avaravar  thangga'l  kaa'nikkaiyaagiya  ve'l'lippaaththirangga'laiyum,  po’rpaaththirangga'laiyum,  vasthirangga'laiyum,  aayuthangga'laiyum,  kanthavarkkangga'laiyum,  kuthiraiga'laiyum,  koavea’ru  kazhuthaiga'laiyum  ko'nduvaruvaarga'l.  (2naa’laagamam  9:24)

சாலொமோனுக்கு  நாலாயிரம்  குதிரைலாயங்களும்  இரதங்களும்  இருந்தன,  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்;  அவைகளை  இரதங்கள்  வைக்கும்  பட்டணங்களிலும்,  அவர்களை  எருசலேமில்  தன்னிடத்திலும்  ராஜா  வைத்திருந்தான்.  (2நாளாகமம்  9:25)

saalomoanukku  naalaayiram  kuthirailaayangga'lum  irathangga'lum  irunthana,  panneeraayiram  kuthiraiveerarum  irunthaarga'l;  avaiga'lai  irathangga'l  vaikkum  patta'nangga'lilum,  avarga'lai  erusaleamil  thannidaththilum  raajaa  vaiththirunthaan.  (2naa’laagamam  9:25)

நதிதுவக்கிப்  பெலிஸ்தரின்  தேசமட்டுக்கும்  எகிப்தின்  எல்லைவரைக்கும்  இருக்கிற  சகல  ராஜாக்களையும்  அவன்  ஆண்டான்.  (2நாளாகமம்  9:26)

nathithuvakkip  pelistharin  theasamattukkum  egipthin  ellaivaraikkum  irukki’ra  sagala  raajaakka'laiyum  avan  aa'ndaan.  (2naa’laagamam  9:26)

எருசலேமிலே  ராஜா  வெள்ளியைக்  கற்கள்போலவும்,  கேதுருமரங்களைப்  பள்ளத்தாக்குகளில்  இருக்கும்  காட்டத்திமரங்கள்போலவும்  அதிகமாக்கினான்.  (2நாளாகமம்  9:27)

erusaleamilea  raajaa  ve'l'liyaik  ka’rka'lpoalavum,  keathurumarangga'laip  pa'l'laththaakkuga'lil  irukkum  kaattaththimarangga'lpoalavum  athigamaakkinaan.  (2naa’laagamam  9:27)

எகிப்திலும்  மற்ற  தேசங்களிலுமிருந்து  சாலொமோனுக்குக்  குதிரைகள்  கொண்டுவரப்பட்டது.  (2நாளாகமம்  9:28)

egipthilum  mat’ra  theasangga'lilumirunthu  saalomoanukkuk  kuthiraiga'l  ko'nduvarappattathu.  (2naa’laagamam  9:28)

சாலொமோனுடைய  ஆதியந்தமான  மற்ற  நடபடிகள்  தீர்க்கதரிசியாகிய  நாத்தானின்  புஸ்தகத்திலும்,  சீலோனியனாகிய  அகியா  எழுதின  தீர்க்கதரிசனத்திலும்,  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமைக்குறித்து  ஞானதிருஷ்டிக்காரனாகிய  இத்தோ  எழுதின  தரிசனங்களிலும்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  9:29)

saalomoanudaiya  aathiyanthamaana  mat’ra  nadapadiga'l  theerkkatharisiyaagiya  naaththaanin  pusthagaththilum,  seeloaniyanaagiya  agiyaa  ezhuthina  theerkkatharisanaththilum,  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamaikku’riththu  gnaanathirushdikkaaranaagiya  iththoa  ezhuthina  tharisanangga'lilum  allavoa  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  9:29)

சாலொமோன்  எருசலேமிலே  இஸ்ரவேலையெல்லாம்  நாற்பது  வருஷம்  அரசாண்டான்.  (2நாளாகமம்  9:30)

saalomoan  erusaleamilea  isravealaiyellaam  naa’rpathu  varusham  arasaa'ndaan.  (2naa’laagamam  9:30)

பின்பு  சாலொமோன்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தான்;  அவனை  அவன்  தகப்பனாகிய  தாவீதின்  நகரத்தில்  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  ரெகொபெயாம்  ராஜாவானான்.  (2நாளாகமம்  9:31)

pinbu  saalomoan  than  pithaakka'loadea  niththiraiyadainthaan;  avanai  avan  thagappanaagiya  thaaveethin  nagaraththil  adakkampa'n'ninaarga'l;  avan  sthaanaththilea  avan  kumaaranaagiya  regobeyaam  raajaavaanaan.  (2naa’laagamam  9:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!