Monday, September 26, 2016

2 Naa'laagamam 7 | 2 நாளாகமம் 7 | 2 Chronicles 7


சாலொமோன்  ஜெபம்பண்ணி  முடிக்கிறபோது,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  சர்வாங்க  தகனபலியையும்  மற்றப்  பலிகளையும்  பட்சித்தது;  கர்த்தருடைய  மகிமையும்  ஆலயத்தை  நிரப்பிற்று.  (2நாளாகமம்  7:1)

saalomoan  jebampa'n'ni  mudikki’rapoathu,  akkini  vaanaththilirunthu  i’ranggi,  sarvaangga  thaganabaliyaiyum  mat’rap  baliga'laiyum  padchiththathu;  karththarudaiya  magimaiyum  aalayaththai  nirappit’ru.  (2naa’laagamam  7:1)

கர்த்தருடைய  மகிமை  கர்த்தருடைய  ஆலயத்தை  நிரப்பினதினால்,  ஆசாரியர்கள்  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கக்கூடாதிருந்தது.  (2நாளாகமம்  7:2)

karththarudaiya  magimai  karththarudaiya  aalayaththai  nirappinathinaal,  aasaariyarga'l  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkakkoodaathirunthathu.  (2naa’laagamam  7:2)

அக்கினி  இறங்குகிறதையும்,  கர்த்தருடைய  மகிமை  ஆலயத்தின்மேல்  தங்கியிருக்கிறதையும்,  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரும்  கண்டபோது,  தளவரிசைமட்டும்  தரையிலே  முகங்குப்புறக்  குனிந்து  பணிந்து,  கர்த்தர்  நல்லவர்,  அவருடைய  கிருபை  என்றுமுள்ளது  என்று  சொல்லி,  அவரைத்  துதித்தார்கள்.  (2நாளாகமம்  7:3)

akkini  i’ranggugi’rathaiyum,  karththarudaiya  magimai  aalayaththinmeal  thanggiyirukki’rathaiyum,  israveal  puththirar  ellaarum  ka'ndapoathu,  tha'lavarisaimattum  tharaiyilea  mugangkuppu’rak  kuninthu  pa'ninthu,  karththar  nallavar,  avarudaiya  kirubai  en’rumu'l'lathu  en’ru  solli,  avaraith  thuthiththaarga'l.  (2naa’laagamam  7:3)

அப்பொழுது  ராஜாவும்  சகல  ஜனங்களும்  கர்த்தருடைய  சந்நிதியில்  பலிகளைச்  செலுத்தினார்கள்.  (2நாளாகமம்  7:4)

appozhuthu  raajaavum  sagala  janangga'lum  karththarudaiya  sannithiyil  baliga'laich  seluththinaarga'l.  (2naa’laagamam  7:4)

ராஜாவாகிய  சாலொமோன்  இருபத்தீராயிரம்  மாடுகளையும்,  லட்சத்திருபதினாயிரம்  ஆடுகளையும்  பலியிட்டான்;  இவ்விதமாய்  ராஜாவும்  சகல  ஜனங்களும்  தேவனுடைய  ஆலயத்தைப்  பிரதிஷ்டைபண்ணினார்கள்.  (2நாளாகமம்  7:5)

raajaavaagiya  saalomoan  irubaththeeraayiram  maaduga'laiyum,  ladchaththirubathinaayiram  aaduga'laiyum  baliyittaan;  ivvithamaay  raajaavum  sagala  janangga'lum  theavanudaiya  aalayaththaip  pirathishdaipa'n'ninaarga'l.  (2naa’laagamam  7:5)

ஆசாரியர்கள்  தங்கள்  பணிவிடைகளைச்செய்து  நின்றார்கள்;  தாவீதுராஜா  லேவியரைக்கொண்டு,  கர்த்தருடைய  கிருபை  என்றுமுள்ளது  என்று  அவரைத்  துதித்துப்  பாடும்படியாகச்  செய்வித்த  கர்த்தரின்  கீதவாத்தியங்களை  அவர்களும்  வாசித்துச்  சேவித்து  நின்றார்கள்;  ஆசாரியர்கள்  அவர்களுக்கு  எதிராக  நின்று  பூரிகைகளை  ஊதினார்கள்;  இஸ்ரவேலர்  எல்லாரும்  நின்றுகொண்டிருந்தார்கள்.  (2நாளாகமம்  7:6)

aasaariyarga'l  thangga'l  pa'nividaiga'laichseythu  nin’raarga'l;  thaaveethuraajaa  leaviyaraikko'ndu,  karththarudaiya  kirubai  en’rumu'l'lathu  en’ru  avaraith  thuthiththup  paadumpadiyaagach  seyviththa  karththarin  keethavaaththiyangga'lai  avarga'lum  vaasiththuch  seaviththu  nin’raarga'l;  aasaariyarga'l  avarga'lukku  ethiraaga  nin’ru  poorigaiga'lai  oothinaarga'l;  isravealar  ellaarum  nin’ruko'ndirunthaarga'l.  (2naa’laagamam  7:6)

சாலொமோன்  உண்டாக்கின  வெண்கலப்பலிபீடம்  சர்வாங்க  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்  நிணத்தையும்  கொள்ளமாட்டாதிருந்தபடியினால்,  கர்த்தருடைய  ஆலயத்துக்கு  முன்னிருக்கிற  பிராகாரத்தின்  நடுமையத்தைச்  சாலொமோன்  பரிசுத்தப்படுத்தி,  அங்கே  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளின்  நிணத்தையும்  செலுத்தினான்.  (2நாளாகமம்  7:7)

saalomoan  u'ndaakkina  ve'ngalapbalipeedam  sarvaangga  thaganabaliga'laiyum  poajanabaliga'laiyum  ni'naththaiyum  ko'l'lamaattaathirunthapadiyinaal,  karththarudaiya  aalayaththukku  munnirukki’ra  piraagaaraththin  nadumaiyaththaich  saalomoan  parisuththappaduththi,  anggea  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'lin  ni'naththaiyum  seluththinaan.  (2naa’laagamam  7:7)

அக்காலத்தில்தானே  சாலொமோனும்,  ஆமாத்தின்  எல்லையிலிருந்து  எகிப்தின்  நதிமட்டும்  வந்து,  அவனோடேகூட  இருந்த  மகா  பெரிய  கூட்டமாகிய  இஸ்ரவேல்  அனைத்தும்  ஏழுநாளளவும்  பண்டிகையை  ஆசரித்து,  (2நாளாகமம்  7:8)

akkaalaththilthaanea  saalomoanum,  aamaaththin  ellaiyilirunthu  egipthin  nathimattum  vanthu,  avanoadeakooda  iruntha  mahaa  periya  koottamaagiya  israveal  anaiththum  eazhunaa'la'lavum  pa'ndigaiyai  aasariththu,  (2naa’laagamam  7:8)

எட்டாம்நாளை  விசேஷித்த  ஆசரிப்பு  நாளாய்க்  கொண்டாடினார்கள்;  ஏழுநாள்  பலிபீடத்துப்  பிரதிஷ்டையையும்,  ஏழுநாள்  பண்டிகையையும்  ஆசரித்தார்கள்.  (2நாளாகமம்  7:9)

ettaamnaa'lai  viseashiththa  aasarippu  naa'laayk  ko'ndaadinaarga'l;  eazhunaa'l  balipeedaththup  pirathishdaiyaiyum,  eazhunaa'l  pa'ndigaiyaiyum  aasariththaarga'l.  (2naa’laagamam  7:9)

ஏழாம்  மாதத்தின்  இருபத்துமூன்றாம்  தேதியிலே  தங்கள்  தங்கள்  கூடாரங்களுக்குப்  போக  ஜனங்களுக்கு  விடைகொடுத்தான்;  கர்த்தர்  தாவீதுக்கும்,  சாலொமோனுக்கும்,  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கும்  செய்த  நன்மைக்காகச்  சந்தோஷமும்  மனமகிழ்ச்சியுமாய்ப்  போனார்கள்.  (2நாளாகமம்  7:10)

eazhaam  maathaththin  irubaththumoon’raam  theathiyilea  thangga'l  thangga'l  koodaarangga'lukkup  poaga  janangga'lukku  vidaikoduththaan;  karththar  thaaveethukkum,  saalomoanukkum,  thamathu  janamaagiya  isravealukkum  seytha  nanmaikkaagach  santhoashamum  manamagizhchchiyumaayp  poanaarga'l.  (2naa’laagamam  7:10)

இவ்விதமாய்  சாலொமோன்  கர்த்தருடைய  ஆலயத்தையும்  ராஜ  அரமனையையும்  கட்டித்  தீர்த்தான்;  கர்த்தருடைய  ஆலயத்திலும்  தன்  அரமனையிலும்  சாலொமோன்  செய்ய  மனதாயிருந்ததெல்லாம்  அநுகூலமாயிற்று.  (2நாளாகமம்  7:11)

ivvithamaay  saalomoan  karththarudaiya  aalayaththaiyum  raaja  aramanaiyaiyum  kattith  theerththaan;  karththarudaiya  aalayaththilum  than  aramanaiyilum  saalomoan  seyya  manathaayirunthathellaam  anugoolamaayit’ru.  (2naa’laagamam  7:11)

கர்த்தர்  இரவிலே  சாலொமோனுக்குத்  தரிசனமாகி:  நான்  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டு,  இந்த  ஸ்தலத்தை  எனக்குப்  பலியிடும்  ஆலயமாகத்  தெரிந்துகொண்டேன்.  (2நாளாகமம்  7:12)

karththar  iravilea  saalomoanukkuth  tharisanamaagi:  naan  un  vi'n'nappaththaik  keattu,  intha  sthalaththai  enakkup  baliyidum  aalayamaagath  therinthuko'ndean.  (2naa’laagamam  7:12)

நான்  மழையில்லாதபடிக்கு  வானத்தை  அடைத்து,  அல்லது  தேசத்தை  அழிக்க  வெட்டுக்கிளிகளுக்குக்  கட்டளையிட்டு,  அல்லது  என்  ஜனத்திற்குள்  கொள்ளைநோயை  அனுப்பும்போது,  (2நாளாகமம்  7:13)

naan  mazhaiyillaathapadikku  vaanaththai  adaiththu,  allathu  theasaththai  azhikka  vettukki'liga'lukkuk  katta'laiyittu,  allathu  en  janaththi’rku'l  ko'l'lainoayai  anuppumpoathu,  (2naa’laagamam  7:13)

என்  நாமம்  தரிக்கப்பட்ட  என்  ஜனங்கள்  தங்களைத்  தாழ்த்தி,  ஜெபம்பண்ணி,  என்  முகத்தைத்  தேடி,  தங்கள்  பொல்லாத  வழிகளைவிட்டுத்  திரும்பினால்,  அப்பொழுது  பரலோகத்திலிருக்கிற  நான்  கேட்டு,  அவர்கள்  பாவத்தை  மன்னித்து,  அவர்கள்  தேசத்துக்கு  க்ஷேமத்தைக்  கொடுப்பேன்.  (2நாளாகமம்  7:14)

en  naamam  tharikkappatta  en  janangga'l  thangga'laith  thaazhththi,  jebampa'n'ni,  en  mugaththaith  theadi,  thangga'l  pollaatha  vazhiga'laivittuth  thirumbinaal,  appozhuthu  paraloagaththilirukki’ra  naan  keattu,  avarga'l  paavaththai  manniththu,  avarga'l  theasaththukku  ksheamaththaik  koduppean.  (2naa’laagamam  7:14)

இந்த  ஸ்தலத்திலே  செய்யப்படும்  ஜெபத்திற்கு,  என்  கண்கள்  திறந்தவைகளும்,  என்  செவிகள்  கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.  (2நாளாகமம்  7:15)

intha  sthalaththilea  seyyappadum  jebaththi’rku,  en  ka'nga'l  thi’ranthavaiga'lum,  en  seviga'l  kavanikki’ravaiga'lumaayirukkum.  (2naa’laagamam  7:15)

என்  நாமம்  இந்த  ஆலயத்தில்  என்றென்றைக்கும்  இருக்கும்படி,  நான்  இதைத்  தெரிந்துகொண்டு  பரிசுத்தப்படுத்தினேன்;  என்  கண்களும்  என்  இருதயமும்  எந்நாளும்  இங்கே  இருக்கும்.  (2நாளாகமம்  7:16)

en  naamam  intha  aalayaththil  en’ren’raikkum  irukkumpadi,  naan  ithaith  therinthuko'ndu  parisuththappaduththinean;  en  ka'nga'lum  en  iruthayamum  ennaa'lum  inggea  irukkum.  (2naa’laagamam  7:16)

உன்  தகப்பனாகிய  தாவீது  நடந்ததுபோல,  நீ  எனக்கு  முன்பாக  நடந்து,  நான்  உனக்குக்  கற்பித்தபடியெல்லாம்  செய்து,  என்  கட்டளைகளையும்  என்  நியாயங்களையும்  கைக்கொள்வாயானால்,  (2நாளாகமம்  7:17)

un  thagappanaagiya  thaaveethu  nadanthathupoala,  nee  enakku  munbaaga  nadanthu,  naan  unakkuk  ka’rpiththapadiyellaam  seythu,  en  katta'laiga'laiyum  en  niyaayangga'laiyum  kaikko'lvaayaanaal,  (2naa’laagamam  7:17)

அப்பொழுது  இஸ்ரவேலை  அரசாளும்  புருஷன்  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  நான்  உன்  தகப்பனாகிய  தாவீதோடே  உடன்படிக்கைபண்ணினபடியே,  உன்  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தை  நிலைக்கப்பண்ணுவேன்.  (2நாளாகமம்  7:18)

appozhuthu  isravealai  arasaa'lum  purushan  unakku  illaama’rpoavathillai  en’ru  naan  un  thagappanaagiya  thaaveethoadea  udanpadikkaipa'n'ninapadiyea,  un  raajyabaaraththin  singgaasanaththai  nilaikkappa'n'nuvean.  (2naa’laagamam  7:18)

நீங்கள்  வழிவிலகி,  நான்  உங்களுக்கு  முன்வைத்த  என்  கட்டளைகளையும்  என்  கற்பனைகளையும்  விட்டுப்போய்,  வேறே  தேவர்களைச்  சேவித்து,  அவர்களைப்  பணிந்துகொள்வீர்களேயாகில்,  (2நாளாகமம்  7:19)

neengga'l  vazhivilagi,  naan  ungga'lukku  munvaiththa  en  katta'laiga'laiyum  en  ka’rpanaiga'laiyum  vittuppoay,  vea’rea  theavarga'laich  seaviththu,  avarga'laip  pa'ninthuko'lveerga'leayaagil,  (2naa’laagamam  7:19)

நான்  அவர்களுக்குக்  கொடுத்த  என்  தேசத்தில்  இருந்து  அவர்களைப்  பிடுங்கி,  என்  நாமத்திற்கென்று  நான்  பரிசுத்தப்படுத்தின  இந்த  ஆலயத்தை  என்  சமுகத்தினின்று  தள்ளி,  அதை  எல்லா  ஜனசதளங்களுக்குள்ளும்  பழமொழியாகவும்  வசைச்சொல்லாகவும்  வைப்பேன்.  (2நாளாகமம்  7:20)

naan  avarga'lukkuk  koduththa  en  theasaththil  irunthu  avarga'laip  pidunggi,  en  naamaththi’rken’ru  naan  parisuththappaduththina  intha  aalayaththai  en  samugaththinin’ru  tha'l'li,  athai  ellaa  janasatha'langga'lukku'l'lum  pazhamozhiyaagavum  vasaichsollaagavum  vaippean.  (2naa’laagamam  7:20)

அப்பொழுது  உன்னதமாயிருக்கிற  இந்த  ஆலயத்தைக்  கடந்துபோகிறவன்  எவனும்  பிரமித்து:  கர்த்தர்  இந்தத்  தேசத்திற்கும்  இந்த  ஆலயத்திற்கும்  இப்படிச்  செய்தது  என்ன  என்று  கேட்பான்.  (2நாளாகமம்  7:21)

appozhuthu  unnathamaayirukki’ra  intha  aalayaththaik  kadanthupoagi’ravan  evanum  piramiththu:  karththar  inthath  theasaththi’rkum  intha  aalayaththi’rkum  ippadich  seythathu  enna  en’ru  keadpaan.  (2naa’laagamam  7:21)

அதற்கு  அவர்கள்:  தங்கள்  பிதாக்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  தங்கள்  தேவனாகிய  கர்த்தரைவிட்டு,  வேறே  தேவர்களைப்  பற்றிக்கொண்டு,  அவைகளை  நமஸ்கரித்து,  சேவித்தபடியினால்,  கர்த்தர்  இந்தத்  தீங்கையெல்லாம்  அவர்கள்மேல்  வரப்பண்ணினார்  என்று  சொல்லுவார்கள்  என்றார்.  (2நாளாகமம்  7:22)

atha’rku  avarga'l:  thangga'l  pithaakka'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'nina  thangga'l  theavanaagiya  karththaraivittu,  vea’rea  theavarga'laip  pat’rikko'ndu,  avaiga'lai  namaskariththu,  seaviththapadiyinaal,  karththar  inthath  theenggaiyellaam  avarga'lmeal  varappa'n'ninaar  en’ru  solluvaarga'l  en’raar.  (2naa’laagamam  7:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!