கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன்
செய்த வேலையெல்லாம் முடிந்தபோது,
சாலொமோன் தன் தகப்பனாகிய
தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து,
வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய
ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
(2நாளாகமம் 5:1)
karththarudaiya
aalayaththukkaagach saalomoan seytha
vealaiyellaam mudinthapoathu, saalomoan than thagappanaagiya thaaveethu
parisuththampa'n'numpadi nearnthavaiga'laik ko'nduvanthu,
ve'l'liyaiyum, ponnaiyum, sagala pa'nimuttuga'laiyum, theavanudaiya
aalayaththin pokkishangga'lil vaiththaan. (2naa’laagamam 5:1)
பின்பு கர்த்தருடைய
உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும்
தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன்
இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப்
பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின்
வம்சத் தலைவர் எல்லாரையும்
எருசலேமிலே கூடிவரச்செய்தான். (2நாளாகமம்
5:2)
pinbu karththarudaiya udanpadikkaippettiyaich seeyoan ennum thaaveethin nagaraththilirunthu ko'nduvarumpadi saalomoan isravealin
moopparaiyum, koaththirap pirabukka'laagiya israveal puththirarin
vamsath
thalaivar ellaaraiyum erusaleamilea koodivarachseythaan. (2naa’laagamam 5:2)
அப்படியே இஸ்ரவேலர்
எல்லாரும் ஏழாம் மாதத்தின்
பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள். (2நாளாகமம்
5:3)
appadiyea isravealar ellaarum
eazhaam maathaththin pa'ndigaiyilea raajaavinidaththil koodivanthaarga'l. (2naa’laagamam 5:3)
இஸ்ரவேலின் மூப்பர்
எல்லாரும் வந்தபின்பு லேவியர்
பெட்டியை எடுத்து, (2நாளாகமம்
5:4)
isravealin mooppar ellaarum
vanthapinbu leaviyar
pettiyai
eduththu, (2naa’laagamam 5:4)
பெட்டியையும், ஆசரிப்புக்
கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த
பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக்
கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.
(2நாளாகமம் 5:5)
pettiyaiyum, aasarippuk koodaaraththaiyum, koodaaraththilirukki’ra parisuththa pa'nimuttuga'laiyum ko'nduvanthaarga'l; avaiga'laik ko'nduvanthavarga'l leaviyaraana
aasaariyarea. (2naa’laagamam 5:5)
ராஜாவாகிய சாலொமோனும்,
அவனோடே கூடின இஸ்ரவேல்
சபையார் அனைவரும், பெட்டிக்கு
முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும்
அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப்
பலியிட்டார்கள். (2நாளாகமம் 5:6)
raajaavaagiya saalomoanum, avanoadea
koodina israveal sabaiyaar anaivarum,
pettikku
munbaaga
e'n'nikkaikkum thogaikkum adanggaatha earaa'lamaana aadumaaduga'laip baliyittaarga'l. (2naa’laagamam 5:6)
அப்படியே ஆசாரியர்
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை,
ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே,
கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக்
கொண்டுவந்து வைத்தார்கள். (2நாளாகமம்
5:7)
appadiyea aasaariyar karththarudaiya udanpadikkaip
pettiyai,
aalayaththin
sannithiyaagiya mahaa parisuththamaana sthalaththilea, kearubeenga'ludaiya settaiga'lukkuk keezhaagak ko'nduvanthu
vaiththaarga'l. (2naa’laagamam 5:7)
கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள்
இரண்டிரண்டு செட்டைகளை விரித்து
உயர இருந்து பெட்டியையும்
அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. (2நாளாகமம்
5:8)
kearubeenga'l, pettiyirukkum sthaanaththinmeal, thangga'l ira'ndira'ndu settaiga'lai viriththu
uyara irunthu pettiyaiyum athin tha'nduga'laiyum moodikko'ndirunthana. (2naa’laagamam 5:8)
பெட்டியிலிருக்கிற தண்டுகளின்
முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு
முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத்
தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே
அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது. (2நாளாகமம்
5:9)
pettiyilirukki’ra tha'nduga'lin munaiga'l sannithi sthalaththi’rku munnea
kaa'nappadaththakkathaay anthath tha'nduga'lai izhuththaarga'l; pu’rambea avaiga'l kaa'nappadavillai; athu innaa'lvaraikkum anggea irukki’rathu. (2naa’laagamam 5:9)
இஸ்ரவேல் புத்திரர்
எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர்
ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை
பண்ணினபோது, மோசே அந்தப்
பெட்டியிலே வைத்த இரண்டு
கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
(2நாளாகமம் 5:10)
israveal puththirar egipthilirunthu pu’rappattapin, karththar oareabilea avarga'loadu udanpadikkai
pa'n'ninapoathu, moasea anthap pettiyilea vaiththa
ira'ndu ka’rpalagaiga'lea allaamal
athilea vea’ron’rum irunthathillai. (2naa’laagamam 5:10)
வகுப்புகளின் முறைகளைப்
பாராமல், ஆசாரியர் எல்லோரும்
தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள். (2நாளாகமம்
5:11)
vaguppuga'lin mu’raiga'laip paaraamal, aasaariyar elloarum
thangga'laip parisuththampa'n'nikko'ndaarga'l. (2naa’laagamam 5:11)
ஆசாப், ஏமான்,
எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய
குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான
லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத்
தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப்
பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்;
அவர்களோடும் கூடப் பூரிகைகளை
ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
(2நாளாகமம் 5:12)
aasaap, eamaan,
ethuththoonudaiya koottaththaarum, avarga'ludaiya kumaarar sagoathararudaiya koottaththaarumaagiya paadagaraana leaviyaranaivarum melliya
pudavaiga'laith thariththu,
kaiththaa'langga'laiyum thamburuga'laiyum surama'ndalangga'laiyum pidiththup
balipeedaththi’rkuk kizhakkea
nin’raarga'l; avarga'loadum koodap
poorigaiga'lai oothugi’ra aasaariyarga'l noot’rirubathupear nin’raarga'l. (2naa’laagamam 5:12)
அவர்கள் ஒருமிக்கப்
பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க்
கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்;
ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர்
பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத்
தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர்,
அவர் கிருபை என்றுமுள்ளது
என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய
வீடாகிய தேவாலயம் மேகத்தினால்
நிறையப்பட்டது. (2நாளாகமம் 5:13)
avarga'l orumikkap
poorigaiga'lai oothi,
eagasaththamaayk karththaraith
thuthiththu sthoaththiriththup paadinaarga'l; aasaariyar parisuththa sthalaththilirunthu pu’rappadugaiyilum, paadagar poorigaiga'l thaa'langga'l keethavaaththiyangga'ludaiya saththaththaith thonikkappa'n'ni, karththar
nallavar, avar kirubai en’rumu'l'lathu en’ru avarai
sthoaththirikkaiyilum, karththarudaiya veedaagiya theavaalayam
meagaththinaal ni’raiyappattathu. (2naa’laagamam 5:13)
அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள்
ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய
மகிமை தேவனுடைய ஆலயத்தை
நிரப்பிற்று. (2நாளாகமம் 5:14)
antha meagaththinimiththam
aasaariyarga'l oozhiyagnseythu ni’rkakkoodaama’rpoayit’ru; karththarudaiya magimai theavanudaiya
aalayaththai nirappit’ru. (2naa’laagamam 5:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!