Friday, September 30, 2016

2 Naa'laagamam 30 | 2 நாளாகமம் 30 | 2 Chronicles 30

அதன்பின்பு  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கும்படி,  எருசலேமில்  இருக்கிற  கர்த்தருடைய  ஆலயத்திற்கு  வாருங்கள்  என்று  எசேக்கியா  இஸ்ரவேல்  யூதா  எங்கும்  ஆட்களை  அனுப்பினதும்  அன்றி,  எப்பிராயீம்  மனாசே  கோத்திரங்களுக்கும்  நிருபங்களை  எழுதியனுப்பினான்.  (2நாளாகமம்  30:1)

athanpinbu  isravealin  theavanaagiya  karththarukkup  paskaavai  aasarikkumpadi,  erusaleamil  irukki’ra  karththarudaiya  aalayaththi’rku  vaarungga'l  en’ru  eseakkiyaa  israveal  yoothaa  enggum  aadka'lai  anuppinathum  an’ri,  eppiraayeem  manaasea  koaththirangga'lukkum  nirubangga'lai  ezhuthiyanuppinaan.  (2naa’laagamam  30:1)

பஸ்காவை  இரண்டாம்  மாதத்தில்  ஆசரிக்கும்படி,  ராஜாவும்  அவனுடைய  பிரபுக்களும்  எருசலேமிலுள்ள  சபையார்  யாவரும்  யோசனைபண்ணியிருந்தார்கள்.  (2நாளாகமம்  30:2)

paskaavai  ira'ndaam  maathaththil  aasarikkumpadi,  raajaavum  avanudaiya  pirabukka'lum  erusaleamilu'l'la  sabaiyaar  yaavarum  yoasanaipa'n'niyirunthaarga'l.  (2naa’laagamam  30:2)

ஆசாரியர்  போதுமானபேர்  தங்களைப்  பரிசுத்தம்பண்ணாமலும்,  ஜனங்கள்  எருசலேமில்  இன்னும்  கூடிவராமலும்  இருந்தபடியினால்,  அதின்  காலத்தில்  அதை  ஆசரிக்கக்கூடாமற்போயிற்று.  (2நாளாகமம்  30:3)

aasaariyar  poathumaanapear  thangga'laip  parisuththampa'n'naamalum,  janangga'l  erusaleamil  innum  koodivaraamalum  irunthapadiyinaal,  athin  kaalaththil  athai  aasarikkakkoodaama’rpoayit’ru.  (2naa’laagamam  30:3)

இந்தக்  காரியம்  ராஜாவின்  பார்வைக்கும்  சமஸ்த  சபையின்  பார்வைக்கும்  நியாயமாய்க்  காணப்பட்டது.  (2நாளாகமம்  30:4)

inthak  kaariyam  raajaavin  paarvaikkum  samastha  sabaiyin  paarvaikkum  niyaayamaayk  kaa'nappattathu.  (2naa’laagamam  30:4)

எழுதியிருக்கிறபடி  வெகுகாலமாய்  அவர்கள்  அதை  ஆசரிக்கவில்லை;  ஆகையால்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கும்படி  எருசலேமுக்கு  வாருங்கள்  என்று  பெயெர்செபாமுதல்  தாண்மட்டுமுள்ள  இஸ்ரவேல்  தேசமெங்கும்  பறைசாற்றுவிக்கத்  தீர்மானம்பண்ணினார்கள்.  (2நாளாகமம்  30:5)

ezhuthiyirukki’rapadi  vegukaalamaay  avarga'l  athai  aasarikkavillai;  aagaiyaal  isravealin  theavanaagiya  karththarukkup  paskaavai  aasarikkumpadi  erusaleamukku  vaarungga'l  en’ru  beyersebaamuthal  thaa'nmattumu'l'la  israveal  theasamenggum  pa’raisaat’ruvikkath  theermaanampa'n'ninaarga'l.  (2naa’laagamam  30:5)

அப்படியே  ராஜாவும்  அவனுடைய  பிரபுக்களும்  கொடுத்த  நிருபங்களை  அஞ்சல்காரர்  வாங்கி,  ராஜாவுடைய  கட்டளையின்படியே  இஸ்ரவேல்  யூதா  எங்கும்போய்:  இஸ்ரவேல்  புத்திரரே,  ஆபிரகாம்  ஈசாக்கு  இஸ்ரவேல்  என்பவர்களுடைய  தேவனாகிய  கர்த்தரிடத்துக்குத்  திரும்புங்கள்;  அப்பொழுது  அசீரியருடைய  ராஜாக்களின்  கைக்குத்  தப்பியிருக்கிற  மீதியான  உங்களண்டைக்கு  அவர்  திரும்புவார்.  (2நாளாகமம்  30:6)

appadiyea  raajaavum  avanudaiya  pirabukka'lum  koduththa  nirubangga'lai  agnchalkaarar  vaanggi,  raajaavudaiya  katta'laiyinpadiyea  israveal  yoothaa  enggumpoay:  israveal  puththirarea,  aabirahaam  eesaakku  israveal  enbavarga'ludaiya  theavanaagiya  karththaridaththukkuth  thirumbungga'l;  appozhuthu  aseeriyarudaiya  raajaakka'lin  kaikkuth  thappiyirukki’ra  meethiyaana  ungga'la'ndaikku  avar  thirumbuvaar.  (2naa’laagamam  30:6)

தங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தருக்குத்  துரோகம்பண்ணின  உங்கள்  பிதாக்களைப்போலவும்  உங்கள்  சகோதரரைப்போலவும்  இராதேயுங்கள்;  அதற்காக,  நீங்கள்  காண்கிறபடியே,  அவர்கள்  பாழாய்ப்போகிறதற்கு  ஒப்புக்கொடுத்தாரே.  (2நாளாகமம்  30:7)

thangga'l  pithaakka'lin  theavanaagiya  karththarukkuth  thuroagampa'n'nina  ungga'l  pithaakka'laippoalavum  ungga'l  sagoathararaippoalavum  iraatheayungga'l;  atha’rkaaga,  neengga'l  kaa'ngi’rapadiyea,  avarga'l  paazhaayppoagi’ratha’rku  oppukkoduththaarea.  (2naa’laagamam  30:7)

இப்போதும்  உங்கள்  பிதாக்களைப்போல  உங்கள்  கழுத்தைக்  கடினப்படுத்தாதேயுங்கள்;  நீங்கள்  கர்த்தருக்கு  உடன்பட்டு,  அவர்  சதாகாலத்துக்கும்  பரிசுத்தம்பண்ணின  அவருடைய  பரிசுத்தஸ்தலத்திற்கு  வந்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தரைச்  சேவியுங்கள்;  அப்பொழுது  அவருடைய  உக்கிரமான  கோபம்  உங்களைவிட்டுத்  திரும்பும்.  (2நாளாகமம்  30:8)

ippoathum  ungga'l  pithaakka'laippoala  ungga'l  kazhuththaik  kadinappaduththaatheayungga'l;  neengga'l  karththarukku  udanpattu,  avar  sathaakaalaththukkum  parisuththampa'n'nina  avarudaiya  parisuththasthalaththi’rku  vanthu,  ungga'l  theavanaagiya  karththaraich  seaviyungga'l;  appozhuthu  avarudaiya  ukkiramaana  koabam  ungga'laivittuth  thirumbum.  (2naa’laagamam  30:8)

நீங்கள்  கர்த்தரிடத்துக்குத்  திரும்பினால்,  உங்கள்  சகோதரரும்  உங்கள்  பிள்ளைகளும்  தங்களைச்  சிறைபிடித்தவர்களுக்கு  முன்பாக  இரக்கம்  பெறுகிறதற்கும்,  இந்தத்  தேசத்திற்குத்  திரும்புகிறதற்கும்  அது  ஏதுவாகும்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  கிருபையும்  இரக்கமுமுள்ளவர்;  நீங்கள்  அவரிடத்திற்குத்  திரும்பினால்,  அவர்  தம்முடைய  முகத்தை  உங்களைவிட்டு  விலக்குவதில்லை  என்றார்கள்.  (2நாளாகமம்  30:9)

neengga'l  karththaridaththukkuth  thirumbinaal,  ungga'l  sagoathararum  ungga'l  pi'l'laiga'lum  thangga'laich  si’raipidiththavarga'lukku  munbaaga  irakkam  pe’rugi’ratha’rkum,  inthath  theasaththi’rkuth  thirumbugi’ratha’rkum  athu  eathuvaagum;  ungga'l  theavanaagiya  karththar  kirubaiyum  irakkamumu'l'lavar;  neengga'l  avaridaththi’rkuth  thirumbinaal,  avar  thammudaiya  mugaththai  ungga'laivittu  vilakkuvathillai  en’raarga'l.  (2naa’laagamam  30:9)

அப்படி  அந்த  அஞ்சல்காரர்  எப்பிராயீம்  மனாசே  தேசங்களில்  செபுலோன்  மட்டுக்கும்  ஊரூராகத்  திரிந்தார்கள்;  ஆனாலும்  அவர்கள்  இவர்களைப்பார்த்து  நகைத்துப்  பரிகாசம்பண்ணினார்கள்.  (2நாளாகமம்  30:10)

appadi  antha  agnchalkaarar  eppiraayeem  manaasea  theasangga'lil  sebuloan  mattukkum  oorooraagath  thirinthaarga'l;  aanaalum  avarga'l  ivarga'laippaarththu  nagaiththup  parigaasampa'n'ninaarga'l.  (2naa’laagamam  30:10)

ஆகிலும்  ஆசேரிலும்,  மனாசேயிலும்,  செபுலோனிலும்,  சிலர்  மனத்தாழ்மையாகி  எருசலேமுக்கு  வந்தார்கள்.  (2நாளாகமம்  30:11)

aagilum  aasearilum,  manaaseayilum,  sebuloanilum,  silar  manaththaazhmaiyaagi  erusaleamukku  vanthaarga'l.  (2naa’laagamam  30:11)

யூதாவிலும்  கர்த்தருடைய  வார்த்தையின்படியே,  ராஜாவும்  பிரபுக்களும்  கட்டளையிட்டபிரகாரம்  செய்கிறதற்கு,  தேவனுடைய  கரம்  அவர்களை  ஒருமனப்படுத்திற்று.  (2நாளாகமம்  30:12)

yoothaavilum  karththarudaiya  vaarththaiyinpadiyea,  raajaavum  pirabukka'lum  katta'laiyittapiragaaram  seygi’ratha’rku,  theavanudaiya  karam  avarga'lai  orumanappaduththit’ru.  (2naa’laagamam  30:12)

அப்படியே  இரண்டாம்  மாதத்தில்  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகையை  ஆசரிக்க  வெகு  ஜனங்கள்  எருசலேமில்  மகாபெரிய  சபையாய்க்  கூடினார்கள்.  (2நாளாகமம்  30:13)

appadiyea  ira'ndaam  maathaththil  pu'lippillaatha  appappa'ndigaiyai  aasarikka  vegu  janangga'l  erusaleamil  mahaaperiya  sabaiyaayk  koodinaarga'l.  (2naa’laagamam  30:13)

அவர்கள்  எழும்பி,  எருசலேமில்  உண்டான  பலிபீடங்களையும்,  தூபபீடங்களையும்  அகற்றிக்  கீதரோன்  ஆற்றிலே  போட்டார்கள்.  (2நாளாகமம்  30:14)

avarga'l  ezhumbi,  erusaleamil  u'ndaana  balipeedangga'laiyum,  thoobapeedangga'laiyum  agat’rik  keetharoan  aat’rilea  poattaarga'l.  (2naa’laagamam  30:14)

பின்பு  அந்த  இரண்டாம்  மாதம்  பதினாலாந்தேதியில்  பஸ்காவின்  ஆட்டுக்குட்டிகளை  அடித்தார்கள்;  ஆசாரியரும்  லேவியரும்  வெட்கி,  தங்களைச்  சுத்தம்பண்ணி,  சர்வாங்க  தகனபலிகளைக்  கர்த்தருடைய  ஆலயத்திற்குக்  கொண்டுவந்து,  (2நாளாகமம்  30:15)

pinbu  antha  ira'ndaam  maatham  pathinaalaantheathiyil  paskaavin  aattukkuttiga'lai  adiththaarga'l;  aasaariyarum  leaviyarum  vedki,  thangga'laich  suththampa'n'ni,  sarvaangga  thaganabaliga'laik  karththarudaiya  aalayaththi’rkuk  ko'nduvanthu,  (2naa’laagamam  30:15)

தேவனுடைய  மனுஷனாகிய  மோசேயின்  நியாயப்பிரமாணத்திற்கு  ஏற்ற  தங்கள்  முறைமையின்படியே  தங்கள்  ஸ்தானத்திலே  நின்றார்கள்;  ஆசாரியர்  லேவியரின்  கையிலிருந்து  இரத்தத்தை  வாங்கித்  தெளித்தார்கள்.  (2நாளாகமம்  30:16)

theavanudaiya  manushanaagiya  moaseayin  niyaayappiramaa'naththi’rku  eat’ra  thangga'l  mu’raimaiyinpadiyea  thangga'l  sthaanaththilea  nin’raarga'l;  aasaariyar  leaviyarin  kaiyilirunthu  iraththaththai  vaanggith  the'liththaarga'l.  (2naa’laagamam  30:16)

சபையிலே  அநேகர்  தங்களைப்  பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்;  ஆகையால்  சுத்தமில்லாத  எல்லாரையும்  கர்த்தருக்குப்  பரிசுத்தம்பண்ண,  லேவியர்  அவர்களுக்காகப்  பஸ்காவின்  ஆட்டுக்குட்டிகளை  அடிக்கும்  காரியத்தை  விசாரித்தார்கள்.  (2நாளாகமம்  30:17)

sabaiyilea  aneagar  thangga'laip  parisuththampa'n'nikko'l'laathirunthaarga'l;  aagaiyaal  suththamillaatha  ellaaraiyum  karththarukkup  parisuththampa'n'na,  leaviyar  avarga'lukkaagap  paskaavin  aattukkuttiga'lai  adikkum  kaariyaththai  visaariththaarga'l.  (2naa’laagamam  30:17)

அதேனென்றால்  எப்பிராயீம்,  மனாசே,  இசக்கார்,  செபுலோன்  மனுஷரில்  ஏராளமான  அநேகம்  ஜனங்கள்  தங்களைச்  சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும்,  எழுதியிராதபிரகாரமாகப்  பஸ்காவைச்  சாப்பிட்டார்கள்.  (2நாளாகமம்  30:18)

atheanen’raal  eppiraayeem,  manaasea,  isakkaar,  sebuloan  manusharil  earaa'lamaana  aneagam  janangga'l  thangga'laich  suththampa'n'nikko'l'laathirunthum,  ezhuthiyiraathapiragaaramaagap  paskaavaich  saappittaarga'l.  (2naa’laagamam  30:18)

எசேக்கியா  அவர்களுக்காக  விண்ணப்பம்பண்ணி,  தங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரான  தேவனைத்  தேடும்படிக்கு,  தங்கள்  இருதயத்தை  நேராக்கினவர்கள்  பரிசுத்த  ஸ்தலத்திற்கேற்ற  சுத்தாங்கம்  அடையாதிருந்தாலும்,  கிருபையுள்ள  கர்த்தர்  அவர்கள்  எல்லாருக்கும்  மன்னிப்பாராக  என்றான்.  (2நாளாகமம்  30:19)

eseakkiyaa  avarga'lukkaaga  vi'n'nappampa'n'ni,  thangga'l  pithaakka'lin  theavanaagiya  karththaraana  theavanaith  theadumpadikku,  thangga'l  iruthayaththai  nearaakkinavarga'l  parisuththa  sthalaththi’rkeat’ra  suththaanggam  adaiyaathirunthaalum,  kirubaiyu'l'la  karththar  avarga'l  ellaarukkum  mannippaaraaga  en’raan.  (2naa’laagamam  30:19)

கர்த்தர்  எசேக்கியாவின்  விண்ணப்பத்தைக்  கேட்டு,  ஜனங்களுக்கு  அநுகூலஞ்செய்தார்.  (2நாளாகமம்  30:20)

karththar  eseakkiyaavin  vi'n'nappaththaik  keattu,  janangga'lukku  anugoolagnseythaar.  (2naa’laagamam  30:20)

அப்படியே  எருசலேமிலே  காணப்பட்ட  இஸ்ரவேல்  புத்திரர்  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகையை  ஏழுநாளளவும்  மகா  ஆனந்தத்தோடே  ஆசரித்தார்கள்;  லேவியரும்  ஆசாரியரும்  தினந்தினம்  கர்த்தருக்கென்று  பேரோசையாய்த்  தொனிக்கும்  கீதவாத்தியங்களால்  கர்த்தரைத்  துதித்துக்கொண்டிருந்தார்கள்.  (2நாளாகமம்  30:21)

appadiyea  erusaleamilea  kaa'nappatta  israveal  puththirar  pu'lippillaatha  appappa'ndigaiyai  eazhunaa'la'lavum  mahaa  aananthaththoadea  aasariththaarga'l;  leaviyarum  aasaariyarum  thinanthinam  karththarukken’ru  pearoasaiyaayth  thonikkum  keethavaaththiyangga'laal  karththaraith  thuthiththukko'ndirunthaarga'l.  (2naa’laagamam  30:21)

கர்த்தருக்கு  அடுத்த  காரியத்தில்  நல்ல  உணர்வுள்ள  எல்லா  லேவியரோடும்  எசேக்கியா  பட்சமாய்ப்  பேசினான்;  இப்படி  அவர்கள்  பண்டிகையின்  ஏழுநாளளவும்  புசித்து,  ஸ்தோத்திரபலிகளைச்  செலுத்தி,  தங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரைத்  துதித்துக்கொண்டிருந்தார்கள்.  (2நாளாகமம்  30:22)

karththarukku  aduththa  kaariyaththil  nalla  u'narvu'l'la  ellaa  leaviyaroadum  eseakkiyaa  padchamaayp  peasinaan;  ippadi  avarga'l  pa'ndigaiyin  eazhunaa'la'lavum  pusiththu,  sthoaththirabaliga'laich  seluththi,  thangga'l  pithaakka'lin  theavanaagiya  karththaraith  thuthiththukko'ndirunthaarga'l.  (2naa’laagamam  30:22)

பின்பு  வேறே  ஏழுநாளளவும்  ஆசரிக்கச்  சபையார்  எல்லாரும்  யோசனைபண்ணி,  அந்த  ஏழுநாளும்  ஆனந்தத்தோடே  ஆசரித்தார்கள்.  (2நாளாகமம்  30:23)

pinbu  vea’rea  eazhunaa'la'lavum  aasarikkach  sabaiyaar  ellaarum  yoasanaipa'n'ni,  antha  eazhunaa'lum  aananthaththoadea  aasariththaarga'l.  (2naa’laagamam  30:23)

யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியா  சபைக்கு  ஆயிரம்  காளைகளையும்  ஏழாயிரம்  ஆடுகளையும்  கொடுத்தான்;  பிரபுக்களும்  சபைக்கு  ஆயிரம்  காளைகளையும்  பதினாயிரம்  ஆடுகளையும்  கொடுத்தார்கள்;  ஆசாரியரில்  அநேகம்பேர்  தங்களைச்  சுத்தம்பண்ணினார்கள்.  (2நாளாகமம்  30:24)

yoothaavin  raajaavaagiya  eseakkiyaa  sabaikku  aayiram  kaa'laiga'laiyum  eazhaayiram  aaduga'laiyum  koduththaan;  pirabukka'lum  sabaikku  aayiram  kaa'laiga'laiyum  pathinaayiram  aaduga'laiyum  koduththaarga'l;  aasaariyaril  aneagampear  thangga'laich  suththampa'n'ninaarga'l.  (2naa’laagamam  30:24)

யூதாவின்  சபையனைத்தும்,  ஆசாரியரும்,  லேவியரும்,  இஸ்ரவேலிலிருந்து  வந்தவர்களுடைய  சபையனைத்துமாகிய  இஸ்ரவேல்  தேசத்திலிருந்துவந்த  அந்நியரும்,  யூதாவில்  குடியிருந்தவர்களும்  மகிழ்ச்சியாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  30:25)

yoothaavin  sabaiyanaiththum,  aasaariyarum,  leaviyarum,  isravealilirunthu  vanthavarga'ludaiya  sabaiyanaiththumaagiya  israveal  theasaththilirunthuvantha  anniyarum,  yoothaavil  kudiyirunthavarga'lum  magizhchchiyaayirunthaarga'l.  (2naa’laagamam  30:25)

அப்படியே  எருசலேமில்  மகா  சந்தோஷம்  உண்டாயிருந்தது;  தாவீதின்  குமாரனாகிய  சாலொமோன்  என்னும்  இஸ்ரவேலுடைய  ராஜாவின்  நாட்கள்முதற்கொண்டு  இப்படி  எருசலேமில்  நடந்ததில்லை.  (2நாளாகமம்  30:26)

appadiyea  erusaleamil  mahaa  santhoasham  u'ndaayirunthathu;  thaaveethin  kumaaranaagiya  saalomoan  ennum  isravealudaiya  raajaavin  naadka'lmutha’rko'ndu  ippadi  erusaleamil  nadanthathillai.  (2naa’laagamam  30:26)

லேவியரான  ஆசாரியர்கள்  எழுந்து  நின்று,  ஜனத்தை  ஆசீர்வதித்தார்கள்;  அவர்களுடைய  சத்தம்  கேட்கப்பட்டு,  அவர்களுடைய  விண்ணப்பம்  அவருடைய  பரிசுத்த  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  வந்து  எட்டினது.  (2நாளாகமம்  30:27)

leaviyaraana  aasaariyarga'l  ezhunthu  nin’ru,  janaththai  aaseervathiththaarga'l;  avarga'ludaiya  saththam  keadkappattu,  avarga'ludaiya  vi'n'nappam  avarudaiya  parisuththa  vaasasthalamaagiya  paraloagaththil  vanthu  ettinathu.  (2naa’laagamam  30:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!