Friday, September 30, 2016

2 Naa'laagamam 29 | 2 நாளாகமம் 29 | 2 Chronicles 29

எசேக்கியா  இருபத்தைந்தாம்  வயதில்  ராஜாவாகி,  இருபத்தொன்பது  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  சகரியாவின்  குமாரத்தியாகிய  அவனுடைய  தாயின்பேர்  அபியாள்.  (2நாளாகமம்  29:1)

eseakkiyaa  irubaththainthaam  vayathil  raajaavaagi,  irubaththonbathu  varusham  erusaleamil  arasaa'ndaan;  sagariyaavin  kumaaraththiyaagiya  avanudaiya  thaayinpear  abiyaa'l.  (2naa’laagamam  29:1)

அவன்  தன்  தகப்பனாகிய  தாவீது  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  29:2)

avan  than  thagappanaagiya  thaaveethu  seythapadiyellaam  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seythaan.  (2naa’laagamam  29:2)

அவன்  தன்  ராஜ்யபாரத்தின்  முதலாம்  வருஷம்  முதலாம்  மாதத்தில்  கர்த்தருடைய  ஆலயத்தின்  கதவுகளைத்  திறந்து,  அவைகளைப்  பழுதுபார்த்து,  (2நாளாகமம்  29:3)

avan  than  raajyabaaraththin  muthalaam  varusham  muthalaam  maathaththil  karththarudaiya  aalayaththin  kathavuga'laith  thi’ranthu,  avaiga'laip  pazhuthupaarththu,  (2naa’laagamam  29:3)

ஆசாரியரையும்  லேவியரையும்  அழைத்துவந்து,  அவர்களைக்  கிழக்கு  வீதியிலே  கூடிவரச்செய்து,  (2நாளாகமம்  29:4)

aasaariyaraiyum  leaviyaraiyum  azhaiththuvanthu,  avarga'laik  kizhakku  veethiyilea  koodivarachseythu,  (2naa’laagamam  29:4)

அவர்களை  நோக்கி:  லேவியரே,  கேளுங்கள்;  நீங்கள்  இப்போது  உங்களைப்  பரிசுத்தம்  பண்ணிக்கொண்டு,  உங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பரிசுத்தம்பண்ணி,  அசுத்தமானதைப்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  வெளியே  கொண்டுபோங்கள்.  (2நாளாகமம்  29:5)

avarga'lai  noakki:  leaviyarea,  kea'lungga'l;  neengga'l  ippoathu  ungga'laip  parisuththam  pa'n'nikko'ndu,  ungga'l  pithaakka'lin  theavanaagiya  karththarudaiya  aalayaththaip  parisuththampa'n'ni,  asuththamaanathaip  parisuththa  sthalaththilirunthu  ve'liyea  ko'ndupoangga'l.  (2naa’laagamam  29:5)

நம்முடைய  பிதாக்கள்  துரோகம்பண்ணி,  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  அவரை  விட்டு  விலகி,  தங்கள்  முகங்களைக்  கர்த்தருடைய  வாசஸ்தலத்தை  விட்டுத்  திருப்பி,  அதற்கு  முதுகைக்  காட்டினார்கள்.  (2நாளாகமம்  29:6)

nammudaiya  pithaakka'l  thuroagampa'n'ni,  nammudaiya  theavanaagiya  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  avarai  vittu  vilagi,  thangga'l  mugangga'laik  karththarudaiya  vaasasthalaththai  vittuth  thiruppi,  atha’rku  muthugaik  kaattinaarga'l.  (2naa’laagamam  29:6)

அவர்கள்  பரிசுத்தஸ்தலத்தில்  இஸ்ரவேலின்  தேவனுக்குச்  சர்வாங்க  தகனபலி  செலுத்தாமலும்,  தூபங்காட்டாமலும்,  விளக்குகளை  அணைத்துப்போட்டு,  மண்டபத்தின்  கதவுகளையும்  பூட்டிப்போட்டார்கள்.  (2நாளாகமம்  29:7)

avarga'l  parisuththasthalaththil  isravealin  theavanukkuch  sarvaangga  thaganabali  seluththaamalum,  thoobangkaattaamalum,  vi'lakkuga'lai  a'naiththuppoattu,  ma'ndabaththin  kathavuga'laiyum  poottippoattaarga'l.  (2naa’laagamam  29:7)

ஆகையால்  கர்த்தருடைய  கடுங்கோபம்  யூதாவின்மேலும்  எருசலேமின்மேலும்  வந்து,  அவர்  இவர்களை,  நீங்கள்  உங்கள்  கண்களினால்  காண்கிறபடி,  துயரத்துக்கும்  திகைப்புக்கும்  பழிப்புக்கும்  ஒப்புக்கொடுத்தார்.  (2நாளாகமம்  29:8)

aagaiyaal  karththarudaiya  kadungkoabam  yoothaavinmealum  erusaleaminmealum  vanthu,  avar  ivarga'lai,  neengga'l  ungga'l  ka'nga'linaal  kaa'ngi’rapadi,  thuyaraththukkum  thigaippukkum  pazhippukkum  oppukkoduththaar.  (2naa’laagamam  29:8)

இதோ,  இதினிமித்தம்  நம்முடைய  பிதாக்கள்  பட்டயத்தினால்  விழுந்து,  நம்முடைய  குமாரரும்  நம்முடைய  குமாரத்திகளும்  நம்முடைய  மனைவிகளும்  சிறையிருப்பில்  அகப்பட்டார்கள்.  (2நாளாகமம்  29:9)

ithoa,  ithinimiththam  nammudaiya  pithaakka'l  pattayaththinaal  vizhunthu,  nammudaiya  kumaararum  nammudaiya  kumaaraththiga'lum  nammudaiya  manaiviga'lum  si’raiyiruppil  agappattaarga'l.  (2naa’laagamam  29:9)

இப்போதும்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருடைய  உக்கிரகோபம்  நம்மைவிட்டுத்  திரும்பும்படிக்கு,  அவரோடே  உடன்படிக்கைபண்ண  என்  மனதிலே  நிர்ணயித்துக்கொண்டேன்.  (2நாளாகமம்  29:10)

ippoathum  isravealin  theavanaagiya  karththarudaiya  ukkirakoabam  nammaivittuth  thirumbumpadikku,  avaroadea  udanpadikkaipa'n'na  en  manathilea  nir'nayiththukko'ndean.  (2naa’laagamam  29:10)

என்  குமாரரே,  இப்பொழுது  அசதியாயிராதேயுங்கள்;  நீங்கள்  கர்த்தருக்குப்  பணிவிடை  செய்யும்படி  அவருக்கு  முன்பாக  நிற்கவும்,  அவருக்கு  ஊழியஞ்செய்கிறவர்களும்  தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும்  உங்களை  அவர்  தெரிந்துகொண்டார்  என்றான்.  (2நாளாகமம்  29:11)

en  kumaararea,  ippozhuthu  asathiyaayiraatheayungga'l;  neengga'l  karththarukkup  pa'nividai  seyyumpadi  avarukku  munbaaga  ni’rkavum,  avarukku  oozhiyagnseygi’ravarga'lum  thoobangkaattugi’ravarga'lumaayirukkavum  ungga'lai  avar  therinthuko'ndaar  en’raan.  (2naa’laagamam  29:11)

அப்பொழுது  கோகாத்  புத்திரரில்  அமாசாயின்  குமாரன்  மாகாத்தும்,  அசரியாவின்  குமாரன்  யோவேலும்,  மெராரியின்  புத்திரரில்  அப்தியின்  குமாரன்  கீசும்,  எகலேலின்  குமாரன்  அசரியாவும்,  கெர்சோனியரில்  சிம்மாவின்  குமாரன்  யோவாகும்,  யோவாகின்  குமாரன்  ஏதேனும்,  (2நாளாகமம்  29:12)

appozhuthu  koagaath  puththiraril  amaasaayin  kumaaran  maagaaththum,  asariyaavin  kumaaran  yoavealum,  meraariyin  puththiraril  abthiyin  kumaaran  keesum,  egalealin  kumaaran  asariyaavum,  kersoaniyaril  simmaavin  kumaaran  yoavaakum,  yoavaakin  kumaaran  eatheanum,  (2naa’laagamam  29:12)

எலிச்சாப்பான்  புத்திரரில்  சிம்ரியும்,  ஏயெலும்,  ஆசாப்பின்  புத்திரரில்  சகரியாவும்,  மத்தனியாவும்,  (2நாளாகமம்  29:13)

elichsaappaan  puththiraril  simriyum,  eayelum,  aasaappin  puththiraril  sagariyaavum,  maththaniyaavum,  (2naa’laagamam  29:13)

ஏமானின்  புத்திரரில்  எகியேலும்,  சிமேயியும்,  எதுத்தூனின்  புத்திரரில்  செமாயாவும்,  ஊசியேலும்  ஆகிய  இந்த  லேவியர்  எழும்பி,  (2நாளாகமம்  29:14)

eamaanin  puththiraril  egiyealum,  simeayiyum,  ethuththoonin  puththiraril  semaayaavum,  oosiyealum  aagiya  intha  leaviyar  ezhumbi,  (2naa’laagamam  29:14)

தங்கள்  சகோதரரைக்  கூடிவரச்செய்து,  பரிசுத்தம்பண்ணிக்கொண்டு,  கர்த்தருடைய  வசனங்களுக்கொத்த  ராஜாவினுடைய  கற்பனையின்படியே  கர்த்தருடைய  ஆலயத்தைச்  சுத்திகரிக்க  வந்தார்கள்.  (2நாளாகமம்  29:15)

thangga'l  sagoathararaik  koodivarachseythu,  parisuththampa'n'nikko'ndu,  karththarudaiya  vasanangga'lukkoththa  raajaavinudaiya  ka’rpanaiyinpadiyea  karththarudaiya  aalayaththaich  suththigarikka  vanthaarga'l.  (2naa’laagamam  29:15)

ஆசாரியர்கள்  கர்த்தருடைய  ஆலயத்தைச்  சுத்திகரிக்கும்படி  உட்புறத்திலே  பிரவேசித்து,  கர்த்தருடைய  ஆலயத்தில்  கண்ட  சகல  அசுத்தத்தையும்  வெளியே  கர்த்தருடைய  ஆலயப்பிராகாரத்தில்  கொண்டுவந்தார்கள்;  அப்பொழுது  லேவியர்  அதை  எடுத்து,  வெளியே  கீதரோன்  ஆற்றிற்குக்  கொண்டுபோனார்கள்.  (2நாளாகமம்  29:16)

aasaariyarga'l  karththarudaiya  aalayaththaich  suththigarikkumpadi  udpu’raththilea  piraveasiththu,  karththarudaiya  aalayaththil  ka'nda  sagala  asuththaththaiyum  ve'liyea  karththarudaiya  aalayappiraagaaraththil  ko'nduvanthaarga'l;  appozhuthu  leaviyar  athai  eduththu,  ve'liyea  keetharoan  aat’ri’rkuk  ko'ndupoanaarga'l.  (2naa’laagamam  29:16)

முதல்  மாதம்  முதல்  தேதியிலே  அவர்கள்  பரிசுத்தம்பண்ணத்துவக்கி,  எட்டாந்தேதியிலே  கர்த்தருடைய  மண்டபத்திலே  பிரவேசித்து,  கர்த்தருடைய  ஆலயத்தை  எட்டுநாளில்  பரிசுத்தம்பண்ணி,  முதலாம்  மாதம்  பதினாறாம்  தேதியில்  அதை  முடித்தார்கள்.  (2நாளாகமம்  29:17)

muthal  maatham  muthal  theathiyilea  avarga'l  parisuththampa'n'naththuvakki,  ettaantheathiyilea  karththarudaiya  ma'ndabaththilea  piraveasiththu,  karththarudaiya  aalayaththai  ettunaa'lil  parisuththampa'n'ni,  muthalaam  maatham  pathinaa’raam  theathiyil  athai  mudiththaarga'l.  (2naa’laagamam  29:17)

அவர்கள்  ராஜாவாகிய  எசேக்கியாவினிடத்தில்  போய்:  நாங்கள்  கர்த்தரின்  ஆலயத்தையும்,  சர்வாங்க  தகனபலிபீடத்தையும்,  அதினுடைய  சகல  பணிமுட்டுகளையும்,  சமுகத்தப்பங்களின்  மேஜையையும்,  அதின்  சகல  பணிமுட்டுகளையும்  சுத்திகரித்து,  (2நாளாகமம்  29:18)

avarga'l  raajaavaagiya  eseakkiyaavinidaththil  poay:  naangga'l  karththarin  aalayaththaiyum,  sarvaangga  thaganabalipeedaththaiyum,  athinudaiya  sagala  pa'nimuttuga'laiyum,  samugaththappangga'lin  meajaiyaiyum,  athin  sagala  pa'nimuttuga'laiyum  suththigariththu,  (2naa’laagamam  29:18)

ராஜாவாகிய  ஆகாஸ்  அரசாளும்போது  தம்முடைய  பாதகத்தினால்  எறிந்துபோட்ட  சகல  பணிமுட்டுகளையும்  முஸ்திப்பாக்கிப்  பரிசுத்தம்பண்ணினோம்;  இதோ,  அவைகள்  கர்த்தரின்  ஆலயத்திற்கு  முன்பாக  இருக்கிறது  என்றார்கள்.  (2நாளாகமம்  29:19)

raajaavaagiya  aagaas  arasaa'lumpoathu  thammudaiya  paathagaththinaal  e’rinthupoatta  sagala  pa'nimuttuga'laiyum  musthippaakkip  parisuththampa'n'ninoam;  ithoa,  avaiga'l  karththarin  aalayaththi’rku  munbaaga  irukki’rathu  en’raarga'l.  (2naa’laagamam  29:19)

அப்பொழுது  ராஜாவாகிய  எசேக்கியா  காலமே  எழுந்திருந்து,  நகரத்தின்  பிரபுக்களைக்  கூட்டிக்கொண்டு,  கர்த்தரின்  ஆலயத்திற்குப்  போனான்.  (2நாளாகமம்  29:20)

appozhuthu  raajaavaagiya  eseakkiyaa  kaalamea  ezhunthirunthu,  nagaraththin  pirabukka'laik  koottikko'ndu,  karththarin  aalayaththi’rkup  poanaan.  (2naa’laagamam  29:20)

அப்பொழுது  ராஜ்யபாரத்திற்காகவும்  பரிசுத்த  ஸ்தலத்திற்காகவும்  யூதாவுக்காகவும்  ஏழு  காளைகளையும்,  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்,  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  ஏழு  வெள்ளாட்டுக்கடாக்களையும்  பாவநிவாரணபலியாகக்  கொண்டுவந்தார்கள்;  அவைகளைக்  கர்த்தருடைய  பலிபீடத்தின்மேல்  பலியிடுங்கள்  என்று  அவன்  ஆசாரியராகிய  ஆரோனின்  புத்திரருக்குச்  சொன்னான்.  (2நாளாகமம்  29:21)

appozhuthu  raajyabaaraththi’rkaagavum  parisuththa  sthalaththi’rkaagavum  yoothaavukkaagavum  eazhu  kaa'laiga'laiyum,  eazhu  aattukkadaakka'laiyum,  eazhu  aattukkuttiga'laiyum,  eazhu  ve'l'laattukkadaakka'laiyum  paavanivaara'nabaliyaagak  ko'nduvanthaarga'l;  avaiga'laik  karththarudaiya  balipeedaththinmeal  baliyidungga'l  en’ru  avan  aasaariyaraagiya  aaroanin  puththirarukkuch  sonnaan.  (2naa’laagamam  29:21)

அப்படியே  ஆசாரியர்  காளைகளை  அடித்து,  அந்த  இரத்தத்தைப்  பிடித்துப்  பலிபீடத்தின்மேல்  தெளித்தார்கள்;  ஆட்டுக்கடாக்களை  அடித்து,  அவைகளின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  தெளித்தார்கள்;  ஆட்டுக்குட்டிகளையும்  அடித்து,  அவைகளின்  இரத்தத்தையும்  பலிபீடத்தின்மேல்  தெளித்தார்கள்.  (2நாளாகமம்  29:22)

appadiyea  aasaariyar  kaa'laiga'lai  adiththu,  antha  iraththaththaip  pidiththup  balipeedaththinmeal  the'liththaarga'l;  aattukkadaakka'lai  adiththu,  avaiga'lin  iraththaththaip  balipeedaththinmeal  the'liththaarga'l;  aattukkuttiga'laiyum  adiththu,  avaiga'lin  iraththaththaiyum  balipeedaththinmeal  the'liththaarga'l.  (2naa’laagamam  29:22)

பிற்பாடு  பாவநிவாரண  பலிக்கான  வெள்ளாட்டுக்கடாக்களை  ராஜாவுக்கும்  சபையாருக்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்;  அவைகள்மேல்  அவர்கள்  தங்கள்  கைகளை  வைத்தார்கள்.  (2நாளாகமம்  29:23)

pi’rpaadu  paavanivaara'na  balikkaana  ve'l'laattukkadaakka'lai  raajaavukkum  sabaiyaarukku  munbaagak  ko'nduvanthaarga'l;  avaiga'lmeal  avarga'l  thangga'l  kaiga'lai  vaiththaarga'l.  (2naa’laagamam  29:23)

இஸ்ரவேல்  அனைத்திற்காகவும்,  சர்வாங்க  தகனபலியையும்  பாவநிவாரண  பலியையும்  செலுத்துங்கள்  என்று  ராஜா  சொல்லியிருந்தான்;  ஆதலால்  ஆசாரியர்  அவைகளை  அடித்து,  இஸ்ரவேல்  அனைத்திற்கும்  பாவநிவிர்த்தி  உண்டாக்க,  அவைகளின்  இரத்தத்தால்  பலிபீடத்தின்மேல்  பிராயச்சித்தஞ்செய்தார்கள்.  (2நாளாகமம்  29:24)

israveal  anaiththi’rkaagavum,  sarvaangga  thaganabaliyaiyum  paavanivaara'na  baliyaiyum  seluththungga'l  en’ru  raajaa  solliyirunthaan;  aathalaal  aasaariyar  avaiga'lai  adiththu,  israveal  anaiththi’rkum  paavanivirththi  u'ndaakka,  avaiga'lin  iraththaththaal  balipeedaththinmeal  piraayachchiththagnseythaarga'l.  (2naa’laagamam  29:24)

அவன்,  தாவீதும்,  ராஜாவின்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத்தும்,  தீர்க்கதரிசியாகிய  நாத்தானும்  கற்பித்தபடியே,  கைத்தாளங்களையும்  தம்புருகளையும்  சுரமண்டலங்களையும்  வாசிக்கிற  லேவியரைக்  கர்த்தருடைய  ஆலயத்திலே  நிறுத்தினான்;  இப்படிச்  செய்யவேண்டும்  என்கிற  கற்பனை  கர்த்தரால்  அவருடைய  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  உண்டாயிருந்தது.  (2நாளாகமம்  29:25)

avan,  thaaveethum,  raajaavin  gnaanathirushdikkaaranaagiya  kaaththum,  theerkkatharisiyaagiya  naaththaanum  ka’rpiththapadiyea,  kaiththaa'langga'laiyum  thamburuga'laiyum  surama'ndalangga'laiyum  vaasikki’ra  leaviyaraik  karththarudaiya  aalayaththilea  ni’ruththinaan;  ippadich  seyyavea'ndum  engi’ra  ka’rpanai  karththaraal  avarudaiya  theerkkatharisiga'laikko'ndu  u'ndaayirunthathu.  (2naa’laagamam  29:25)

அப்படியே  லேவியர்  தாவீதின்  கீதவாத்தியங்களையும்,  ஆசாரியர்  பூரிகைகளையும்  பிடித்து  நின்றார்கள்.  (2நாளாகமம்  29:26)

appadiyea  leaviyar  thaaveethin  keethavaaththiyangga'laiyum,  aasaariyar  poorigaiga'laiyum  pidiththu  nin’raarga'l.  (2naa’laagamam  29:26)

அப்பொழுது  எசேக்கியா  சர்வாங்க  தகனபலிகளைப்  பலிபீடத்தின்மேல்  செலுத்தக்  கட்டளையிட்டான்;  அதைச்  செலுத்தத்  துவக்கின  நேரத்தில்  கர்த்தரைத்  துதிக்கும்  கீதமும்  பூரிகைகளும்,  இஸ்ரவேல்  ராஜாவாகிய  தாவீது  ஏற்படுத்தின  கீதவாத்தியங்களும்  முழங்கத்  தொடங்கினது.  (2நாளாகமம்  29:27)

appozhuthu  eseakkiyaa  sarvaangga  thaganabaliga'laip  balipeedaththinmeal  seluththak  katta'laiyittaan;  athaich  seluththath  thuvakkina  nearaththil  karththaraith  thuthikkum  keethamum  poorigaiga'lum,  israveal  raajaavaagiya  thaaveethu  ea’rpaduththina  keethavaaththiyangga'lum  muzhanggath  thodangginathu.  (2naa’laagamam  29:27)

கீதத்தைப்பாடி,  பூரிகைகளை  ஊதிக்கொண்டிருக்கையில்,  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தித்  தீருமட்டும்  சபையார்  எல்லாரும்  பணிந்துகொண்டிருந்தார்கள்.  (2நாளாகமம்  29:28)

keethaththaippaadi,  poorigaiga'lai  oothikko'ndirukkaiyil,  sarvaangga  thaganabaliyaich  seluththith  theerumattum  sabaiyaar  ellaarum  pa'ninthuko'ndirunthaarga'l.  (2naa’laagamam  29:28)

பலியிட்டுத்  தீர்ந்தபோது,  ராஜாவும்  அவனோடிருந்த  அனைவரும்  தலைகுனிந்து  பணிந்துகொண்டார்கள்.  (2நாளாகமம்  29:29)

baliyittuth  theernthapoathu,  raajaavum  avanoadiruntha  anaivarum  thalaikuninthu  pa'ninthuko'ndaarga'l.  (2naa’laagamam  29:29)

பின்பு  எசேக்கியா  ராஜாவும்  பிரபுக்களும்  லேவியரை  நோக்கி:  நீங்கள்  தாவீதும்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  ஆசாபும்  பாடின  வார்த்தைகளினால்  கர்த்தரைத்  துதியுங்கள்  என்றார்கள்;  அப்பொழுது  மகிழ்ச்சியோடே  துதிசெய்து  தலைகுனிந்து  பணிந்துகொண்டார்கள்.  (2நாளாகமம்  29:30)

pinbu  eseakkiyaa  raajaavum  pirabukka'lum  leaviyarai  noakki:  neengga'l  thaaveethum  gnaanathirushdikkaaranaagiya  aasaapum  paadina  vaarththaiga'linaal  karththaraith  thuthiyungga'l  en’raarga'l;  appozhuthu  magizhchchiyoadea  thuthiseythu  thalaikuninthu  pa'ninthuko'ndaarga'l.  (2naa’laagamam  29:30)

அதின்பின்பு  எசேக்கியா:  இப்போதும்  நீங்கள்  கர்த்தருக்கென்று  உங்களைப்  பரிசுத்தம்பண்ணினீர்கள்;  ஆகையால்  கிட்டவந்து,  கர்த்தருடைய  ஆலயத்திற்குத்  தகனபலிகளையும்  ஸ்தோத்திரபலிகளையும்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அப்பொழுது  சபையார்  தகனபலிகளையும்  ஸ்தோத்திரபலிகளையும்,  இஷ்டமுள்ளவர்களெல்லாம்  சர்வாங்க  தகனபலிகளையும்  கொண்டுவந்தார்கள்.  (2நாளாகமம்  29:31)

athinpinbu  eseakkiyaa:  ippoathum  neengga'l  karththarukken’ru  ungga'laip  parisuththampa'n'nineerga'l;  aagaiyaal  kittavanthu,  karththarudaiya  aalayaththi’rkuth  thaganabaliga'laiyum  sthoaththirabaliga'laiyum  ko'nduvaarungga'l  en’raan;  appozhuthu  sabaiyaar  thaganabaliga'laiyum  sthoaththirabaliga'laiyum,  ishdamu'l'lavarga'lellaam  sarvaangga  thaganabaliga'laiyum  ko'nduvanthaarga'l.  (2naa’laagamam  29:31)

சபையார்  கொண்டுவந்த  சர்வாங்க  தகனபலிகளின்  தொகை  எழுபது  காளைகளும்,  நூறு  ஆட்டுக்கடாக்களும்,  இருநூறு  ஆட்டுக்குட்டிகளுமே;  இவைகளெல்லாம்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனமாயின.  (2நாளாகமம்  29:32)

sabaiyaar  ko'nduvantha  sarvaangga  thaganabaliga'lin  thogai  ezhubathu  kaa'laiga'lum,  noo’ru  aattukkadaakka'lum,  irunoo’ru  aattukkuttiga'lumea;  ivaiga'lellaam  karththarukkuch  sarvaangga  thaganamaayina.  (2naa’laagamam  29:32)

அறுநூறு  காளைகளும்  மூவாயிரம்  ஆடுகளும்  பிரதிஷ்டையாக்கப்பட்டது.  (2நாளாகமம்  29:33)

a’runoo’ru  kaa'laiga'lum  moovaayiram  aaduga'lum  pirathishdaiyaakkappattathu.  (2naa’laagamam  29:33)

ஆனாலும்  ஆசாரியர்கள்  கொஞ்சம்  பேரானதினால்  அவர்களால்  அந்தச்  சர்வாங்க  தகனமான  ஜீவன்களையெல்லாம்  அடித்துத்  தோலுரிக்க  முடியாதிருந்தது;  அதினாலே  அந்த  வேலை  தீருமட்டாகவும்,  மற்ற  ஆசாரியர்  தங்களைப்  பரிசுத்தம்பண்ணுமட்டாகவும்,  அவர்கள்  சகோதரராகிய  லேவியர்  அவர்களுக்கு  உதவிசெய்தார்கள்;  தங்களைப்  பரிசுத்தம்பண்ணிக்கொள்ள  லேவியர்  ஆசாரியரைப்பார்க்கிலும்  மன  உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  29:34)

aanaalum  aasaariyarga'l  kogncham  pearaanathinaal  avarga'laal  anthach  sarvaangga  thaganamaana  jeevanga'laiyellaam  adiththuth  thoalurikka  mudiyaathirunthathu;  athinaalea  antha  vealai  theerumattaagavum,  mat’ra  aasaariyar  thangga'laip  parisuththampa'n'numattaagavum,  avarga'l  sagoathararaagiya  leaviyar  avarga'lukku  uthaviseythaarga'l;  thangga'laip  parisuththampa'n'nikko'l'la  leaviyar  aasaariyaraippaarkkilum  mana  u’rchaagamu'l'lavarga'laayirunthaarga'l.  (2naa’laagamam  29:34)

சர்வாங்க  தகனபலிகளும்,  ஸ்தோத்திரபலிகளின்  கொழுப்பும்,  சர்வாங்க  தகனங்களுக்கடுத்த  பானபலிகளும்  மிகுதியாயிருந்தது;  இவ்விதமாய்க்  கர்த்தருடைய  ஆலயத்தின்  ஆராதனை  திட்டம்பண்ணப்பட்டது.  (2நாளாகமம்  29:35)

sarvaangga  thaganabaliga'lum,  sthoaththirabaliga'lin  kozhuppum,  sarvaangga  thaganangga'lukkaduththa  baanabaliga'lum  miguthiyaayirunthathu;  ivvithamaayk  karththarudaiya  aalayaththin  aaraathanai  thittampa'n'nappattathu.  (2naa’laagamam  29:35)

தேவன்  ஜனத்தை  ஆயத்தப்படுத்தினதைக்குறித்து  எசேக்கியாவும்  ஜனங்கள்  எல்லாரும்  சந்தோஷப்பட்டார்கள்;  இந்தக்  காரியத்தைச்  செய்யும்படியான  யோசனை  சடுதியாய்  உண்டாயிற்று.  (2நாளாகமம்  29:36)

theavan  janaththai  aayaththappaduththinathaikku’riththu  eseakkiyaavum  janangga'l  ellaarum  santhoashappattaarga'l;  inthak  kaariyaththaich  seyyumpadiyaana  yoasanai  saduthiyaay  u'ndaayit’ru.  (2naa’laagamam  29:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!