Friday, September 30, 2016

2 Naa'laagamam 28 | 2 நாளாகமம் 28 | 2 Chronicles 28

ஆகாஸ்  ராஜாவாகிறபோது  இருபது  வயதாயிருந்து,  பதினாறு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  ஆனாலும்  அவன்,  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போல்,  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்யாமல்,  (2நாளாகமம்  28:1)

aagaas  raajaavaagi’rapoathu  irubathu  vayathaayirunthu,  pathinaa’ru  varusham  erusaleamil  arasaa'ndaan;  aanaalum  avan,  than  thagappanaagiya  thaaveethaippoal,  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seyyaamal,  (2naa’laagamam  28:1)

இஸ்ரவேல்  ராஜாக்களின்  வழிகளில்  நடந்து,  பாகால்களுக்கு  வார்ப்பு  விக்கிரகங்களைச்  செய்தான்.  (2நாளாகமம்  28:2)

israveal  raajaakka'lin  vazhiga'lil  nadanthu,  baagaalga'lukku  vaarppu  vikkiragangga'laich  seythaan.  (2naa’laagamam  28:2)

அவன்  இன்னோம்  குமாரரின்  பள்ளத்தாக்கிலே  தூபங்காட்டி,  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியே  தன்  குமாரரை  அக்கினியிலே  தகித்துப்போட்டு,  (2நாளாகமம்  28:3)

avan  innoam  kumaararin  pa'l'laththaakkilea  thoobangkaatti,  karththar  israveal  puththirarukku  munbaagath  thuraththina  jaathiga'ludaiya  aruvaruppuga'linpadiyea  than  kumaararai  akkiniyilea  thagiththuppoattu,  (2naa’laagamam  28:3)

மேடைகளிலும்,  மலைகளிலும்,  பச்சையான  சகல  மரங்களின்  கீழும்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தான்.  (2நாளாகமம்  28:4)

meadaiga'lilum,  malaiga'lilum,  pachchaiyaana  sagala  marangga'lin  keezhum  baliyittuth  thoobangkaattivanthaan.  (2naa’laagamam  28:4)

ஆகையால்  அவனுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவனைச்  சீரியருடைய  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவர்கள்  அவனை  முறிய  அடித்து,  அவனுக்கு  இருக்கிறவர்களிலே  பெரிய  கூட்டத்தைச்  சிறைபிடித்துத்  தமஸ்குவுக்குக்  கொண்டுபோனார்கள்;  அவன்  இஸ்ரவேலுடைய  ராஜாவின்  கையிலும்  ஒப்புக்கொடுக்கப்பட்டான்;  இவன்  அவனை  வெகுவாய்  முறிய  அடித்தான்.  (2நாளாகமம்  28:5)

aagaiyaal  avanudaiya  theavanaagiya  karththar  avanaich  seeriyarudaiya  raajaavin  kaiyil  oppukkoduththaar;  avarga'l  avanai  mu’riya  adiththu,  avanukku  irukki’ravarga'lilea  periya  koottaththaich  si’raipidiththuth  thamaskuvukkuk  ko'ndupoanaarga'l;  avan  isravealudaiya  raajaavin  kaiyilum  oppukkodukkappattaan;  ivan  avanai  veguvaay  mu’riya  adiththaan.  (2naa’laagamam  28:5)

எப்படியெனில்,  யூதா  மனுஷர்  தங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரை  விட்டபடியினால்,  ரெமலியாவின்  குமாரனாகிய  பெக்கா  அவர்களில்  ஒரேநாளில்  லட்சத்திருபதினாயிரம்பேரைக்  கொன்றுபோட்டான்;  அவர்கள்  எல்லாரும்  மகா  வீரராயிருந்தவர்கள்.  (2நாளாகமம்  28:6)

eppadiyenil,  yoothaa  manushar  thangga'l  pithaakka'lin  theavanaagiya  karththarai  vittapadiyinaal,  remaliyaavin  kumaaranaagiya  pekkaa  avarga'lil  oreanaa'lil  ladchaththirubathinaayirampearaik  kon’rupoattaan;  avarga'l  ellaarum  mahaa  veeraraayirunthavarga'l.  (2naa’laagamam  28:6)

அன்றியும்  எப்பிராயீமின்  பராக்கிரமசாலியான  சிக்ரியும்,  ராஜாவின்  குமாரனாகிய  மாசேயாவையும்,  அரமனைத்  தலைவனாகிய  அஸ்ரிக்காமையும்,  ராஜாவுக்கு  இரண்டாவதான  எல்க்கானாவையும்  கொன்றுபோட்டான்.  (2நாளாகமம்  28:7)

an’riyum  eppiraayeemin  baraakkiramasaaliyaana  sikriyum,  raajaavin  kumaaranaagiya  maaseayaavaiyum,  aramanaith  thalaivanaagiya  asrikkaamaiyum,  raajaavukku  ira'ndaavathaana  elkkaanaavaiyum  kon’rupoattaan.  (2naa’laagamam  28:7)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  சகோதரரில்  இரண்டு  லட்சம்பேராகிய  ஸ்திரீகளையும்  குமாரரையும்  குமாரத்திகளையும்  சிறைபிடித்து,  அவர்களுடைய  அநேக  திரவியங்களைக்  கொள்ளையிட்டு,  கொள்ளைப்பொருளைச்  சமாரியாவுக்குக்  கொண்டுபோனார்கள்.  (2நாளாகமம்  28:8)

israveal  puththirar  thangga'l  sagoathararil  ira'ndu  ladchampearaagiya  sthireega'laiyum  kumaararaiyum  kumaaraththiga'laiyum  si’raipidiththu,  avarga'ludaiya  aneaga  thiraviyangga'laik  ko'l'laiyittu,  ko'l'laipporu'laich  samaariyaavukkuk  ko'ndupoanaarga'l.  (2naa’laagamam  28:8)

அங்கே  ஓதேத்  என்னும்  பேருள்ள  கர்த்தருடைய  தீர்க்கதரிசி  ஒருவன்  இருந்தான்;  அவன்  சமாரியாவுக்கு  வருகிற  சேனைக்கு  எதிராகப்  போய்,  அவர்களை  நோக்கி:  இதோ,  உங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தர்  யூதாவின்மேல்  கோபங்கொண்டபடியினால்  அவர்களை  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுத்தார்;  நீங்களோ  வானபரியந்தம்  எட்டுகிற  உக்கிரத்தோடே  அவர்களைச்  சங்காரம்பண்ணினீர்கள்.  (2நாளாகமம்  28:9)

anggea  oatheath  ennum  pearu'l'la  karththarudaiya  theerkkatharisi  oruvan  irunthaan;  avan  samaariyaavukku  varugi’ra  seanaikku  ethiraagap  poay,  avarga'lai  noakki:  ithoa,  ungga'l  pithaakka'lin  theavanaagiya  karththar  yoothaavinmeal  koabangko'ndapadiyinaal  avarga'lai  ungga'l  kaiga'lil  oppukkoduththaar;  neengga'loa  vaanapariyantham  ettugi’ra  ukkiraththoadea  avarga'laich  sanggaarampa'n'nineerga'l.  (2naa’laagamam  28:9)

இப்போதும்  யூதாவின்  புத்திரரையும்  எருசலேமியரையும்  நீங்கள்  உங்களுக்கு  வேலைக்காரராகவும்  வேலைக்காரிகளாகவும்  கீழ்ப்படுத்தவேண்டும்  என்று  நினைக்கிறீர்கள்;  ஆனாலும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமான  குற்றங்கள்  உங்களிடத்திலும்  இல்லையோ?  (2நாளாகமம்  28:10)

ippoathum  yoothaavin  puththiraraiyum  erusaleamiyaraiyum  neengga'l  ungga'lukku  vealaikkaararaagavum  vealaikkaariga'laagavum  keezhppaduththavea'ndum  en’ru  ninaikki’reerga'l;  aanaalum  ungga'l  theavanaagiya  karththarukku  viroathamaana  kut’rangga'l  ungga'lidaththilum  illaiyoa?  (2naa’laagamam  28:10)

ஆதலால்  நீங்கள்  எனக்குச்  செவிகொடுத்து,  நீங்கள்  உங்கள்  சகோதரரிடத்தில்  சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத்  திரும்ப  அனுப்பிவிடுங்கள்;  கர்த்தருடைய  உக்கிரமான  கோபம்  உங்கள்மேல்  இருக்கிறது  என்றான்.  (2நாளாகமம்  28:11)

aathalaal  neengga'l  enakkuch  sevikoduththu,  neengga'l  ungga'l  sagoathararidaththil  si’raipidiththukko'nduvanthavarga'laith  thirumba  anuppividungga'l;  karththarudaiya  ukkiramaana  koabam  ungga'lmeal  irukki’rathu  en’raan.  (2naa’laagamam  28:11)

அப்பொழுது  எப்பிராயீம்  புத்திரரின்  தலைவரில்  சிலபேராகிய  யோகனானின்  குமாரன்  அசரியாவும்,  மெஷிலெமோத்தின்  குமாரன்  பெரகியாவும்,  சல்லூமின்  குமாரன்  எகிஸ்கியாவும்,  அத்லாயின்  குமாரன்  அமாசாவும்  யுத்தத்திலிருந்து  வந்தவர்களுக்கு  விரோதமாக  எழும்பி,  (2நாளாகமம்  28:12)

appozhuthu  eppiraayeem  puththirarin  thalaivaril  silapearaagiya  yoaganaanin  kumaaran  asariyaavum,  meshilemoaththin  kumaaran  berakiyaavum,  salloomin  kumaaran  egiskiyaavum,  athlaayin  kumaaran  amaasaavum  yuththaththilirunthu  vanthavarga'lukku  viroathamaaga  ezhumbi,  (2naa’laagamam  28:12)

அவர்களை  நோக்கி:  நீங்கள்  சிறைபிடித்த  இவர்களை  இங்கே  உள்ளே  கொண்டுவரவேண்டாம்;  நம்மேல்  திரளான  குற்றமும்,  இஸ்ரவேலின்மேல்  உக்கிரமான  கோபமும்  இருக்கையில்,  நீங்கள்  கர்த்தருக்கு  முன்பாக  நம்மேல்  குற்றம்  சுமரப்பண்ணத்தக்கதாய்,  நம்முடைய  பாவங்களையும்  நம்முடைய  குற்றங்களையும்  அதிகமாக்க  நினைக்கிறீர்கள்  என்றார்கள்.  (2நாளாகமம்  28:13)

avarga'lai  noakki:  neengga'l  si’raipidiththa  ivarga'lai  inggea  u'l'lea  ko'nduvaravea'ndaam;  nammeal  thira'laana  kut’ramum,  isravealinmeal  ukkiramaana  koabamum  irukkaiyil,  neengga'l  karththarukku  munbaaga  nammeal  kut’ram  sumarappa'n'naththakkathaay,  nammudaiya  paavangga'laiyum  nammudaiya  kut’rangga'laiyum  athigamaakka  ninaikki’reerga'l  en’raarga'l.  (2naa’laagamam  28:13)

அப்பொழுது  ஆயுதபாணிகளானவர்கள்  சிறைபிடித்தவர்களையும்,  கொள்ளையுடைமைகளையும்,  பிரபுக்களுக்கு  முன்பாகவும்  சமஸ்த  சபைக்கு  முன்பாகவும்  விட்டுவிட்டார்கள்.  (2நாளாகமம்  28:14)

appozhuthu  aayuthabaa'niga'laanavarga'l  si’raipidiththavarga'laiyum,  ko'l'laiyudaimaiga'laiyum,  pirabukka'lukku  munbaagavum  samastha  sabaikku  munbaagavum  vittuvittaarga'l.  (2naa’laagamam  28:14)

அப்பொழுது  பேர்  குறிக்கப்பட்ட  மனுஷர்  எழும்பி,  சிறைபிடிக்கப்பட்டவர்களைச்  சேர்த்துக்கொண்டு,  அவர்களில்  வஸ்திரமில்லாத  சகலருக்கும்  கொள்ளையில்  எடுக்கப்பட்ட  வஸ்திரங்களைக்  கொடுத்து,  உடுப்பையும்  பாதரட்சைகளையும்  போடுவித்து,  அவர்களுக்குச்  சாப்பிடவும்  குடிக்கவும்  கொடுத்து,  அவர்களுக்கு  எண்ணெய்  வார்த்து,  அவர்களில்  பலட்சயமானவர்களையெல்லாம்  கழுதைகள்மேல்  ஏற்றி,  பேரீச்சமரங்களின்  பட்டணமாகிய  எரிகோவிலே  அவர்கள்  சகோதரரிடத்துக்குக்  கொண்டுவந்து  விட்டு,  சமாரியாவுக்குத்  திரும்பினார்கள்.  (2நாளாகமம்  28:15)

appozhuthu  pear  ku’rikkappatta  manushar  ezhumbi,  si’raipidikkappattavarga'laich  searththukko'ndu,  avarga'lil  vasthiramillaatha  sagalarukkum  ko'l'laiyil  edukkappatta  vasthirangga'laik  koduththu,  uduppaiyum  paatharadchaiga'laiyum  poaduviththu,  avarga'lukkuch  saappidavum  kudikkavum  koduththu,  avarga'lukku  e'n'ney  vaarththu,  avarga'lil  paladchayamaanavarga'laiyellaam  kazhuthaiga'lmeal  eat’ri,  peareechchamarangga'lin  patta'namaagiya  erigoavilea  avarga'l  sagoathararidaththukkuk  ko'nduvanthu  vittu,  samaariyaavukkuth  thirumbinaarga'l.  (2naa’laagamam  28:15)

அக்காலத்திலே  ஆகாஸ்  என்னும்  ராஜா,  அசீரியாவின்  ராஜாக்கள்  தனக்கு  ஒத்தாசைபண்ண  அவர்களிடத்துக்கு  ஆட்களை  அனுப்பினான்.  (2நாளாகமம்  28:16)

akkaalaththilea  aagaas  ennum  raajaa,  aseeriyaavin  raajaakka'l  thanakku  oththaasaipa'n'na  avarga'lidaththukku  aadka'lai  anuppinaan.  (2naa’laagamam  28:16)

ஏதோமியரும்  கூடவந்து,  யூதாவை  முறிய  அடித்து,  சிலரைச்  சிறைபிடித்துப்  போயிருந்தார்கள்.  (2நாளாகமம்  28:17)

eathoamiyarum  koodavanthu,  yoothaavai  mu’riya  adiththu,  silaraich  si’raipidiththup  poayirunthaarga'l.  (2naa’laagamam  28:17)

பெலிஸ்தரும்  யூதாவிலே  சமபூமியிலும்  தெற்கேயும்  இருக்கிற  பட்டணங்களின்மேல்  விழுந்து,  பெத்ஷிமேசையும்,  ஆயலோனையும்,  கெதெரோத்தையும்,  சொக்கோவையும்  அதின்  கிராமங்களையும்,  திம்னாவையும்  அதின்  கிராமங்களையும்,  கிம்சோவையும்  அதின்  கிராமங்களையும்  பிடித்து  அங்கே  குடியேறினார்கள்.  (2நாளாகமம்  28:18)

pelistharum  yoothaavilea  samaboomiyilum  the’rkeayum  irukki’ra  patta'nangga'linmeal  vizhunthu,  bethshimeasaiyum,  aayaloanaiyum,  ketheroaththaiyum,  sokkoavaiyum  athin  kiraamangga'laiyum,  thimnaavaiyum  athin  kiraamangga'laiyum,  kimsoavaiyum  athin  kiraamangga'laiyum  pidiththu  anggea  kudiyea’rinaarga'l.  (2naa’laagamam  28:18)

யூதாவின்  ராஜாவாகிய  ஆகாசினிமித்தம்  கர்த்தர்  யூதாவைத்  தாழ்த்தினார்;  அவன்  யூதாவைச்  சீர்குலைத்து,  கர்த்தருக்கு  விரோதமாய்  மிகவும்  துரோகம்பண்ணினான்.  (2நாளாகமம்  28:19)

yoothaavin  raajaavaagiya  aagaasinimiththam  karththar  yoothaavaith  thaazhththinaar;  avan  yoothaavaich  seerkulaiththu,  karththarukku  viroathamaay  migavum  thuroagampa'n'ninaan.  (2naa’laagamam  28:19)

அசீரியாவின்  ராஜாவாகிய  தில்காத்பில்நேசர்  அவனிடத்தில்  வந்தான்;  அவனை  நெருக்கினானே  அல்லாமல்  அவனைப்  பலப்படுத்தவில்லை.  (2நாளாகமம்  28:20)

aseeriyaavin  raajaavaagiya  thilkaathpilneasar  avanidaththil  vanthaan;  avanai  nerukkinaanea  allaamal  avanaip  balappaduththavillai.  (2naa’laagamam  28:20)

ஆகாஸ்  கர்த்தருடைய  ஆலயத்தில்  ஒரு  பங்கும்,  ராஜ  அரமனையில்  ஒரு  பங்கும்,  பிரபுக்களின்  கையில்  ஒரு  பங்கும்  எடுத்து,  அசீரியாவின்  ராஜாவுக்குக்  கொடுத்தும்,  அவனுக்கு  உதவிகிடைக்கவில்லை.  (2நாளாகமம்  28:21)

aagaas  karththarudaiya  aalayaththil  oru  panggum,  raaja  aramanaiyil  oru  panggum,  pirabukka'lin  kaiyil  oru  panggum  eduththu,  aseeriyaavin  raajaavukkuk  koduththum,  avanukku  uthavikidaikkavillai.  (2naa’laagamam  28:21)

தான்  நெருக்கப்படுகிற  காலத்திலும்  கர்த்தருக்கு  விரோதமாய்  அந்த  ஆகாஸ்  என்னும்  ராஜா  துரோகம்பண்ணிக்கொண்டே  இருந்தான்.  (2நாளாகமம்  28:22)

thaan  nerukkappadugi’ra  kaalaththilum  karththarukku  viroathamaay  antha  aagaas  ennum  raajaa  thuroagampa'n'nikko'ndea  irunthaan.  (2naa’laagamam  28:22)

எப்படியென்றால்:  சீரியா  ராஜாக்களின்  தெய்வங்கள்  அவர்களுக்குத்  துணை  செய்கிறபடியினால்,  அவர்கள்  எனக்கும்  துணைசெய்ய  அவர்களுக்குப்  பலியிடுவேன்  என்று  சொல்லி,  தன்னை  முறிய  அடித்த  தமஸ்குவின்  தெய்வங்களுக்கு  அவன்  பலியிட்டான்;  ஆனாலும்  அது  அவனும்  இஸ்ரவேல்  அனைத்தும்  நாசமாகிறதற்கு  ஏதுவாயிற்று.  (2நாளாகமம்  28:23)

eppadiyen’raal:  seeriyaa  raajaakka'lin  theyvangga'l  avarga'lukkuth  thu'nai  seygi’rapadiyinaal,  avarga'l  enakkum  thu'naiseyya  avarga'lukkup  baliyiduvean  en’ru  solli,  thannai  mu’riya  adiththa  thamaskuvin  theyvangga'lukku  avan  baliyittaan;  aanaalum  athu  avanum  israveal  anaiththum  naasamaagi’ratha’rku  eathuvaayit’ru.  (2naa’laagamam  28:23)

ஆகாஸ்  தேவனுடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளைச்  சேர்த்து,  தேவனுடைய  ஆலயத்தின்  பணிமுட்டுகளைத்  துண்டுதுண்டாக்கி,  கர்த்தருடைய  ஆலயத்தின்  கதவுகளைப்  பூட்டிப்போட்டு,  எருசலேமில்  மூலைக்குமூலை  பலிபீடங்களை  உண்டுபண்ணி,  (2நாளாகமம்  28:24)

aagaas  theavanudaiya  aalayaththin  pa'nimuttuga'laich  searththu,  theavanudaiya  aalayaththin  pa'nimuttuga'laith  thu'nduthu'ndaakki,  karththarudaiya  aalayaththin  kathavuga'laip  poottippoattu,  erusaleamil  moolaikkumoolai  balipeedangga'lai  u'ndupa'n'ni,  (2naa’laagamam  28:24)

அந்நிய  தெய்வங்களுக்குத்  தூபங்காட்டும்படிக்கு,  யூதாவின்  ஒவ்வொரு  பட்டணத்திலும்  மேடைகளை  உண்டுபண்ணி,  தன்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபமூட்டினான்.  (2நாளாகமம்  28:25)

anniya  theyvangga'lukkuth  thoobangkaattumpadikku,  yoothaavin  ovvoru  patta'naththilum  meadaiga'lai  u'ndupa'n'ni,  than  pithaakka'lin  theavanaagiya  karththarukkuk  koabamoottinaan.  (2naa’laagamam  28:25)

அவனுடைய  மற்ற  வர்த்தமானங்களும்,  அவனுடைய  ஆதியோடந்தமான  சகல  நடபடிகளும்  யூதா  இஸ்ரவேல்  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  28:26)

avanudaiya  mat’ra  varththamaanangga'lum,  avanudaiya  aathiyoadanthamaana  sagala  nadapadiga'lum  yoothaa  israveal  raajaakka'lin  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  28:26)

ஆகாஸ்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்பு,  அவனை  எருசலேம்  நகரத்தில்  அடக்கம்பண்ணினார்கள்;  ஆனாலும்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  கல்லறைகளில்  அவனைக்  கொண்டுவந்து  வைக்கவில்லை;  அவன்  குமாரனாகிய  எசேக்கியா  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2நாளாகமம்  28:27)

aagaas  than  pithaakka'loadea  niththiraiyadainthapinbu,  avanai  erusaleam  nagaraththil  adakkampa'n'ninaarga'l;  aanaalum  israveal  raajaakka'lin  kalla’raiga'lil  avanaik  ko'nduvanthu  vaikkavillai;  avan  kumaaranaagiya  eseakkiyaa  avan  sthaanaththil  raajaavaanaan.  (2naa’laagamam  28:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!