யோதாம்
ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து,
பதினாறு வருஷம் எருசலேமிலே
அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
(2நாளாகமம் 27:1)
yoathaam raajaavaagi’rapoathu irubaththainthu vayathaayirunthu, pathinaa’ru varusham
erusaleamilea arasaa'ndaan; saathoakkin kumaaraththiyaagiya avan thaayinpear erusaa'l. (2naa’laagamam 27:1)
அவன் தன் தகப்பனாகிய
உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின்
பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்;
ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின்
ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள்
இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். (2நாளாகமம்
27:2)
avan than thagappanaagiya usiyaa seythapadiyellaam karththarin
paarvaikkuch
semmaiyaanathaich seythaan; aanaalum
avanaippoalak karththarin aalayaththi’rku'l piraveasiyaathirunthaan; janangga'l innum thangga'laik keduththukko'ndirunthaarga'l. (2naa’laagamam 27:2)
அவன் கர்த்தருடைய ஆலயத்தின்
உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின்
மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
(2நாளாகமம் 27:3)
avan karththarudaiya aalayaththin
uyarntha vaasalaik kattinathumallaamal,
oapealin mathilinmeal aneaga kattadangga'laiyum kattinaan. (2naa’laagamam 27:3)
யூதாவின்
மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே
கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
(2நாளாகமம் 27:4)
yoothaavin malaiga'lilea patta'nangga'laiyum, kaaduga'lilea koattaiga'laiyum koapurangga'laiyum kattinaan. (2naa’laagamam 27:4)
அவன் அம்மோன் புத்திரருடைய
ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை
மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன்
புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து
வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும்,
பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம்
மூன்றாம் வருஷத்திலும் அம்மோன்
புத்திரர் அப்படியே அவனுக்குச்
செலுத்தினார்கள். (2நாளாகமம் 27:5)
avan ammoan
puththirarudaiya raajaavoadu yuththampa'n'ni avarga'lai mea’rko'ndaan; aathalaal
ammoan puththirar avanukku
antha varushaththilea noo’ruthaalanthu ve'l'liyaiyum, pathinaayirangkalak koathumaiyaiyum, pathinaayirangkala vaa’rkoathumaiyaiyum koduththaarga'l; ira'ndaam
moon’raam
varushaththilum ammoan puththirar
appadiyea avanukkuch seluththinaarga'l. (2naa’laagamam 27:5)
யோதாம்
தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு
முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
(2நாளாகமம் 27:6)
yoathaam than vazhiga'laith than theavanaagiya karththarukku
munbaaga
nearaakkinathinaal balappattaan. (2naa’laagamam 27:6)
யோதாமின்
மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய
சகல யுத்தங்களும், அவனுடைய
நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது. (2நாளாகமம் 27:7)
yoathaamin mat’ra varththamaanangga'lum, avanudaiya sagala
yuththangga'lum, avanudaiya
nadaiga'lum, israveal
yoothaa raajaakka'lin pusthagaththil ezhuthiyirukki’rathu. (2naa’laagamam 27:7)
அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து
வயதாயிருந்து, பதினாறு வருஷம்
எருசலேமில் அரசாண்டான். (2நாளாகமம்
27:8)
avan raajaavaagi’rapoathu irubaththainthu vayathaayirunthu, pathinaa’ru varusham
erusaleamil arasaa'ndaan. (2naa’laagamam 27:8)
யோதாம்
தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத்
தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில்
ராஜாவானான். (2நாளாகமம் 27:9)
yoathaam than pithaakka'loadea niththiraiyadainthapinbu, avanaith thaaveethin
nagaraththilea adakkampa'n'ninaarga'l; avan kumaaranaagiya aagaas avan sthaanaththil
raajaavaanaan. (2naa’laagamam 27:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!