அப்பொழுது
யூதா ஜனங்கள் எல்லாரும்
பதினாறு வயதான உசியாவை
அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின்
ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். (2நாளாகமம்
26:1)
appozhuthu yoothaa
janangga'l ellaarum
pathinaa’ru vayathaana
usiyaavai
azhaiththuvanthu, avanai avan thagappanaagiya amathsiyaavin sthaanaththilea raajaavaakkinaarga'l. (2naa’laagamam 26:1)
ராஜா தன் பிதாக்களோடே
நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக்
கட்டி, அதைத் திரும்ப
யூதாவின் வசமாக்கிக்கொண்டான். (2நாளாகமம்
26:2)
raajaa than pithaakka'loadea niththiraiyadainthapinbu, ivan ealoathaik
katti,
athaith thirumba yoothaavin vasamaakkikko'ndaan. (2naa’laagamam 26:2)
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு
வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம்
எருசலேமில் அரசாண்டான்; எருசலேம்
நகரத்தாளான அவன் தாயின்பேர்
எக்கோலியாள். (2நாளாகமம் 26:3)
usiyaa raajaavaagi’rapoathu, pathinaa’ru vayathaayirunthu, aimbaththira'ndu varusham
erusaleamil arasaa'ndaan; erusaleam nagaraththaa'laana avan thaayinpear ekkoaliyaa'l.
(2naa’laagamam 26:3)
அவன் தன் தகப்பனாகிய
அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின்
பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
(2நாளாகமம் 26:4)
avan than thagappanaagiya amathsiyaa seythapadiyellaam karththarin
paarvaikkuch
semmaiyaanathaich seythu, (2naa’laagamam 26:4)
தேவனுடைய
தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின்
நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை
வாய்க்கச்செய்தார். (2நாளாகமம் 26:5)
theavanudaiya tharisanangga'lil buththimaanaayiruntha sagariyaavin naadka'lilea
theavanaith theada manathi'nanggiyirunthaan; avan karththaraith theadina
naadka'lil theavan avan kaariyangga'lai vaaykkachseythaar. (2naa’laagamam 26:5)
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு
யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின்
அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும்
இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும்
பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
(2நாளாகமம் 26:6)
avan pu’rappattuppoay, pelistharoadu yuththampa'n'ni, kaaththin
alanggaththaiyum, yabneayin alanggaththaiyum, asthoaththin
alanggaththaiyum idiththuppoattu, asthoath
naattilum
pelistharukku'l'lum patta'nangga'laik kattinaan. (2naa’laagamam 26:6)
பெலிஸ்தரையும்
கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும்
மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.
(2நாளாகமம் 26:7)
pelistharaiyum koorbaagaalilea kudiyirukki’ra arabiyaraiyum meguniyaraiyum vella,
theavan avanukkuth thu'nainin’raar. (2naa’laagamam 26:7)
அம்மோனியர்
உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய
கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும்
எட்டினது; அவன் மிகவும்
பெலங்கொண்டான். (2நாளாகமம் 26:8)
ammoaniyar usiyaavukkuk kaa'nikkaiga'laik koduththaarga'l; avanudaiya
keerththi egipthin ellaimattum ettinathu; avan migavum belangko'ndaan. (2naa’laagamam 26:8)
உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு
வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும்
கோபுரங்களைக் கட்டி அவைகளைப்
பலப்படுத்தினான். (2நாளாகமம் 26:9)
usiyaa erusaleamilea moolaivaasalmealum, pa'l'laththaakku vaasalmealum, alanggaththuk koadiga'lmealum koapurangga'laik katti avaiga'laip balappaduththinaan. (2naa’laagamam 26:9)
அவனுக்குப்
பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம்
ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக்
கட்டி, அநேக துரவுகளை
வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப்
பிரியனாயிருந்தான். (2நாளாகமம் 26:10)
avanukkup pa'l'laththaakkilum samaboomiyilum aneagam aadumaaduga'lum, malaiga'lileayum vayalve'liyileayum payirkkudiga'lum, thiraadchaththoattakkaararum u'ndaayirunthapadiyinaal, avan vanaantharaththilea koapurangga'laik katti, aneaga thuravuga'lai vettinaan; avan ve'l'laa'nmaip piriyanaayirunthaan. (2naa’laagamam 26:10)
உசியாவுக்கு
யுத்தவீரரின் சேனையும் இருந்தது;
அது சம்பிரதியாகிய ஏயெலினாலும்
ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின்
பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு
வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
(2நாளாகமம் 26:11)
usiyaavukku yuththaveerarin seanaiyum irunthathu;
athu sambirathiyaagiya eayelinaalum
aathikkakkaaranaagiya maaseayaavinaalum ilakkampaarkkappattapadiyea, raajaavin
pirabukka'lil oruvanaagiya ananiyaavinkeezh vaguppu vaguppaaych seavagampa'n'nap pu’rappattathu. (2naa’laagamam 26:11)
பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம்
இரண்டாயிரத்து அறுநூறு. (2நாளாகமம்
26:12)
baraakkiramasaaliga'laana vamsaththalaivarin thogaiyellaam ira'ndaayiraththu a’runoo’ru. (2naa’laagamam 26:12)
இவர்கள்
கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக
ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து
ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
(2நாளாகமம் 26:13)
ivarga'l kaiyinkeezhch saththurukka'lukku viroathamaaga raajaavukkuth
thu'naini’rka, baraakkiramaththoadea yuththampa'n'nugi’ra moon’ruladchaththu eazhaayiraththu ainnoo’rupearaana seanai irunthathu.
(2naa’laagamam 26:13)
இந்தச்
சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும்,
தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற
கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். (2நாளாகமம்
26:14)
inthach seanaiyilu'l'lavarukkellaam usiyaa keadagangga'laiyum, eettiga'laiyum, thalaichseeraakka'laiyum,
maarkkavasangga'laiyum, villuga'laiyum, kalle’rigi’ra kava'nga'laiyum aayaththappaduththinaan. (2naa’laagamam 26:14)
கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று
அம்புகளையும் பெரிய கற்களையும்
பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள்
கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே
அவன் கீர்த்தி வெகுதூரம்
பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய்
அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று. (2நாளாகமம்
26:15)
koapurangga'lmealum alanggakkoadiga'lmealum nin’ru ambuga'laiyum periya
ka’rka'laiyum pirayoagikki’ratha’rku nibu'naraana thozhilaa'liga'l ka’rpiththa yanthirangga'laiyum avan erusaleamil u'ndaakkinaan; appadiyea
avan keerththi veguthooram parambit’ru; avan balappadumattum aachchariyamaay avanukku
anugoolamu'ndaayit’ru. (2naa’laagamam 26:15)
அவன் பலப்பட்டபோது, தனக்குக்
கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு
விரோதமாக மீறுதல் செய்து,
தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய
ஆலயத்திற்குள் பிரவேசித்தான். (2நாளாகமம்
26:16)
avan balappattapoathu, thanakkuk keadu'ndaagumattum, avanudaiya manam meattimaiyaagi, than theavanaagiya karththarukku viroathamaaga mee’ruthal seythu, thoobapeedaththinmeal thoobangkaattak karththarudaiya aalayaththi’rku'l piraveasiththaan. (2naa’laagamam 26:16)
ஆசாரியனாகிய
அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின்
ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும்,
அவன் பிறகே உட்பிரவேசித்து, (2நாளாகமம்
26:17)
aasaariyanaagiya asariyaavum, avanoadeakoodak karththarin
aasaariyaraana baraakkiramasaaliga'laagiya e'nbathupearum, avan pi’ragea udpiraveasiththu, (2naa’laagamam 26:17)
ராஜாவாகிய
உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே,
கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு
அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின்
குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்;
பரிசுத்த ஸ்தலத்தை விட்டு
வெளியே போம்; மீறுதல்
செய்தீர்; இது தேவனாகிய
கர்த்தராலே உமக்கு மேன்மையாக
லபியாது என்றார்கள். (2நாளாகமம்
26:18)
raajaavaagiya usiyaavoadu ethirththunin’ru: usiyaavea, karththarukkuth thoobangkaattugi’rathu umakku aduththathalla; thoobangkaattugi’rathu parisuththamaakkappatta aaroanin
kumaararaagiya aasaariyarukkea adukkum;
parisuththa sthalaththai
vittu
ve'liyea poam; mee’ruthal seytheer; ithu theavanaagiya karththaraalea umakku
meanmaiyaaga labiyaathu en’raarga'l. (2naa’laagamam 26:18)
அப்பொழுது
உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து,
ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது,
ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய
ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற
அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம்
தோன்றிற்று. (2நாளாகமம் 26:19)
appozhuthu usiyaa koabangko'ndaan; avan thoobakalasaththaith than kaiyilea pidiththu,
aasaariyaroadea koabamaayp peasugi’rapoathu, aasaariyarukku munbaagak karththarudaiya aalayaththilea thoobapeedaththin munni’rki’ra avanudaiya net’riyilea kushdaroagam thoan’rit’ru. (2naa’laagamam 26:19)
பிரதான
ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப்
பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே
குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத்
தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர்
தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே
போகத் தீவிரப்பட்டான். (2நாளாகமம்
26:20)
pirathaana aasaariyanaagiya asariyaavum sagala
aasaariyarum avanaip
paarkkumpoathu, ithoa, avan than net’riyilea kushdaroagam pidiththavanen’ruka'ndu, avanaith
theeviramaay anggeayirunthu ve'lippadappa'n'ninaarga'l; karththar thannai
adiththathinaal avan thaanum
ve'liyea poagath theevirappattaan. (2naa’laagamam 26:20)
ராஜாவாகிய
உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய
ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே
குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம்
ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின்
ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
(2நாளாகமம் 26:21)
raajaavaagiya usiyaa than mara'nanaa'lmattum kushdaroagiyaayirunthu, karththarudaiya aalayaththukkup pu’rambaakkappattapadiyinaal, oru thaniththa veettilea kushdaroagiyaay vaasampa'n'ninaan; avan kumaaranaagiya yoathaam raajaavin
aramanai visaarippukkaaranaayirunthu, theasaththin janangga'lai niyaayam
visaariththaan. (2naa’laagamam 26:21)
உசியாவின்
ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின்
குமாரனாகிய ஏசாயா என்னும்
தீர்க்கதரிசி எழுதினான். (2நாளாகமம்
26:22)
usiyaavin aathiyoadantha nadapadiyaana
mat’ra
varththamaanangga'lai aamoathsin kumaaranaagiya easaayaa ennum theerkkatharisi ezhuthinaan. (2naa’laagamam 26:22)
உசியா தன் பிதாக்களோடே
நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக்
குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை
அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான
நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம்
அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(2நாளாகமம் 26:23)
usiyaa than pithaakka'loadea niththiraiyadainthapinbu, janangga'l avanaik kushdaroagiyen’ru solli, avanai
avan pithaakka'la'ndaiyil, raajaakka'lai
adakkampa'n'nugi’ra idaththi’rku arugaana nilaththilea
adakkampa'n'ninaarga'l; avan kumaaranaagiya yoathaam avan sthaanaththil raajaavaanaan. (2naa’laagamam 26:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!