யோசபாத்
தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின்
நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம்
ராஜாவானான். (2நாளாகமம் 21:1)
yoasapaath than pithaakka'loadea niththiraiyadainthu, thaaveethin
nagaraththil than pithaakka'la'ndaiyilea adakkampa'n'nappattaan; avan sthaanaththilea avan kumaaranaagiya yoaraam raajaavaanaan. (2naa’laagamam 21:1)
அவனுக்கு
யோசபாத்தின் குமாரராகிய அசரியா,
ஏகியேல், சகரியா, அசரியா,
மிகாவேல், செப்பத்தியா என்னும்
சகோதரர் இருந்தார்கள்; இவர்கள்
எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய
யோசபாத்தின் குமாரர். (2நாளாகமம்
21:2)
avanukku yoasapaaththin kumaararaagiya asariyaa, eagiyeal, sagariyaa, asariyaa, migaaveal, seppaththiyaa ennum sagoatharar irunthaarga'l; ivarga'l ellaarum
isravealin raajaavaagiya yoasapaaththin kumaarar.
(2naa’laagamam 21:2)
அவர்களுடைய
தகப்பன் வெள்ளியும் பொன்னும்
உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே
அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக்
கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு
ராஜ்யத்தைக் கொடுத்தான். (2நாளாகமம்
21:3)
avarga'ludaiya thagappan ve'l'liyum ponnum
uchchithangga'lumaana aneagam nankodaiga'laiyum, yoothaavilea
ara'naana patta'nangga'laiyum avarga'lukkuk koduththaan;
yoaraam seashdapuththiranaanapadiyinaal, avanukku
raajyaththaik koduththaan. (2naa’laagamam 21:3)
யோராம்
தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்
எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில்
சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். (2நாளாகமம்
21:4)
yoaraam than thagappanudaiya raajyabaaraththi’rku vanthu
thannaip balappaduththikko'ndapinbu, avan thannudaiya sagoatharar ellaaraiyum
isravealin pirabukka'lil silaraiyum pattayaththaal kon’rupoattaan. (2naa’laagamam 21:4)
யோராம்
ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து,
எட்டு வருஷம் எருசலேமில்
அரசாண்டான். (2நாளாகமம் 21:5)
yoaraam raajaavaagi’rapoathu, muppaththira'ndu vayathaayirunthu, ettu varusham
erusaleamil arasaa'ndaan. (2naa’laagamam 21:5)
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின்
வழியிலே நடந்து, ஆகாபின்
வீட்டார் செய்ததுபோலச் செய்தான்;
ஆகாபின் குமாரத்தி அவனுக்கு
மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
(2நாளாகமம் 21:6)
avan israveal
raajaakka'lin vazhiyilea nadanthu,
aagaabin
veettaar seythathupoalach seythaan; aagaabin kumaaraththi
avanukku manaiviyaayirunthaa'l; avan karththarin paarvaikkup
pollaappaanathaich seythaan. (2naa’laagamam 21:6)
கர்த்தர்
தாவீதுக்கும் அவன் குமாரருக்கும்
என்றென்றைக்கும் ஒரு விளக்கைக்
கட்டளையிடுவேன் என்று சொல்லி,
அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின்
வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார். (2நாளாகமம்
21:7)
karththar thaaveethukkum avan kumaararukkum en’ren’raikkum oru vi'lakkaik
katta'laiyiduvean en’ru solli,
avanoadea pa'n'nina udanpadikkaiyinimiththam thaaveethin
vamsaththai azhikkach siththamillaathirunthaar. (2naa’laagamam 21:7)
அவன் நாட்களில் யூதாவுடைய
கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி,
தங்களுக்கு ஒரு ராஜாவை
ஏற்படுத்திக்கொண்டார்கள். (2நாளாகமம் 21:8)
avan naadka'lil
yoothaavudaiya kaiyinkeezhiruntha eathoamiyar
kalagampa'n'ni, thangga'lukku oru raajaavai ea’rpaduththikko'ndaarga'l. (2naa’laagamam 21:8)
அதினால்
யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும்
புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில்
எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட
ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும்
முறிய அடித்தான். (2நாளாகமம்
21:9)
athinaal yoaraam
than pirabukka'loadum than sagala
irathangga'loadum pu’rappattuppoanaan; avan iraaththiriyil ezhunthirunthu, thannai
va'lainthuko'nda eathoamiyaraiyum irathangga'lin thalaivaraiyum mu’riya adiththaan.
(2naa’laagamam 21:9)
ஆகிலும்
யூதாவுடைய கையின் கீழிருந்த
ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப்
பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய
கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே
லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். (2நாளாகமம்
21:10)
aagilum yoothaavudaiya kaiyin
keezhiruntha eathoamiyar innaa'lvaraikkum irukki’rathupoala, kalagampa'n'nip pirinthaarga'l; avan than pithaakka'lin
theavanaagiya karththarai
vittapadiyinaal, akkaalaththilea leebnaa patta'naththaarum kalagampa'n'ninaarga'l. (2naa’laagamam 21:10)
அவன் யூதாவுடைய மலைகளின்மேல்
மேடைகளை உண்டாக்கி, எருசலேமின்
குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும்
அதற்கு ஏவிவிட்டான். (2நாளாகமம்
21:11)
avan yoothaavudaiya malaiga'linmeal meadaiga'lai u'ndaakki,
erusaleamin kudiga'laich soarampoagappa'n'ni, yoothaavaiyum atha’rku eavivittaan. (2naa’laagamam 21:11)
அப்பொழுது
தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின
ஒரு நிருபம் அவனிடத்திற்கு
வந்தது; அதில்: உம்முடைய
தகப்பனான தாவீதின் தேவனாகிய
கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
நீ உன் தகப்பனாகிய
யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின்
ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும்
நடவாமல், (2நாளாகமம் 21:12)
appozhuthu theerkkatharisiyaagiya eliyaa ezhuthina
oru nirubam avanidaththi’rku vanthathu;
athil: ummudaiya thagappanaana thaaveethin
theavanaagiya karththar
uraikki’rathu ennaven’raal, nee un thagappanaagiya yoasapaaththin vazhiga'lilum, yoothaavin
raajaavaagiya aasaavin vazhiga'lilum nadavaamal,
(2naa’laagamam 21:12)
இஸ்ரவேல்
ராஜாக்களின் வழியிலே நடந்து,
ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே
யூதாவையும் எருசலேமின் குடிகளையும்
சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான
உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால், (2நாளாகமம்
21:13)
israveal raajaakka'lin
vazhiyilea nadanthu, aagaabudaiya kudumbaththin soaramaarkkaththi’rku oththapadiyea yoothaavaiyum
erusaleamin kudiga'laiyum soarampoagappa'n'ni, unnaippaarkkilum nallavarga'laayiruntha un thagappan veettaaraana un sagoathararaiyum kon’rupoattapadiyinaal, (2naa’laagamam 21:13)
இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு
உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
(2நாளாகமம் 21:14)
ithoa, karththar
un janaththaiyum, un pi'l'laiga'laiyum, un manaiviga'laiyum, unakku
u'ndaana ellaavat’raiyum mahaa vaathaiyaaga vaathippaar. (2naa’laagamam 21:14)
நீயோ உனக்கு உண்டாகும்
குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்குநாள்
இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது. (2நாளாகமம்
21:15)
neeyoa unakku
u'ndaagum
kudal noayinaal un kudalga'l naa'lukkunaa'l it’ru vizhumattum kodiya
viyaathiyinaal vaathikkappaduvaay en’ru ezhuthiyirunthathu. (2naa’laagamam 21:15)
அப்படியே
கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும்,
எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின்
ஆவியையும் யோராமுக்கு விரோதமாக
எழுப்பினார். (2நாளாகமம் 21:16)
appadiyea karththar
pelistharin aaviyaiyum, eththiyoappiyaavukkaduththa theasaththaaraana arabiyarin aaviyaiyum
yoaraamukku viroathamaaga ezhuppinaar. (2naa’laagamam 21:16)
அவர்கள்
யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து,
ராஜாவின் அரமனையில் அகப்பட்ட
எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ்
என்னும் அவன் குமாரரில்
இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு
மீதியாக வைக்கப்படவில்லை. (2நாளாகமம்
21:17)
avarga'l yoothaavil vanthu,
balaathkaaramaayp pugunthu, raajaavin
aramanaiyil agappatta ellaap
poru'lga'laiyum, avan pi'l'laiga'laiyum, avan manaiviga'laiyum pidiththukko'ndupoanaarga'l; yoavaagaas ennum avan kumaararil i'laiyavanai
allaamal oru kumaaranum
avanukku meethiyaaga vaikkappadavillai. (2naa’laagamam 21:17)
இவைகள்
எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர்
அவன் குடல்களில் உண்டான
தீராத நோயினால் அவனை வாதித்தார். (2நாளாகமம்
21:18)
ivaiga'l ellaavat’ri’rkum pi’rpaadu karththar avan kudalga'lil u'ndaana theeraatha
noayinaal avanai vaathiththaar. (2naa’laagamam 21:18)
அப்படி
நாளுக்குநாள் இருந்து, இரண்டு
வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு
உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து
கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய
பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய
ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. (2நாளாகமம்
21:19)
appadi naa'lukkunaa'l irunthu,
ira'ndu varusham mudigi’rakaalaththil avanukku
u'ndaana noayinaal avan kudalga'l sarinthu kodiya
viyaathiyinaal
seththuppoanaan; avanudaiya pithaakka'lukkaagak kanthavarkkangga'laik ko'luththinathupoal, avanudaiya
janangga'l avanukkaagak ko'luththavillai. (2naa’laagamam 21:19)
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து,
எட்டு வருஷம் எருசலேமில்
அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்;
அவனைத் தாவீதின் நகரத்தில்
அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின்
கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
(2நாளாகமம் 21:20)
avan raajaavaagi’rapoathu muppaththira'ndu vayathaayirunthu, ettu varusham
erusaleamil arasaa'ndu, virumbuvaarillaamal i’ranthupoanaan; avanaith
thaaveethin nagaraththil adakkampa'n'ninaarga'l; aanaalum raajaakka'lin
kalla’raiga'lil avanai
vaikkavillai. (2naa’laagamam 21:20)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!