Wednesday, September 28, 2016

2 Naa'laagamam 20 | 2 நாளாகமம் 20 | 2 Chronicles 20

இதற்குப்பின்பு  மோவாப்  புத்திரரும்,  அம்மோன்  புத்திரரும்,  அவர்களோடே  அம்மோனியருக்கு  அப்புறத்திலுள்ள  மனுஷருங்கூட  யோசபாத்திற்கு  விரோதமாய்  யுத்தம்பண்ண  வந்தார்கள்.  (2நாளாகமம்  20:1)

itha’rkuppinbu  moavaab  puththirarum,  ammoan  puththirarum,  avarga'loadea  ammoaniyarukku  appu’raththilu'l'la  manusharungkooda  yoasapaaththi’rku  viroathamaay  yuththampa'n'na  vanthaarga'l.  (2naa’laagamam  20:1)

சிலர்  வந்து,  யோசபாத்தை  நோக்கி:  உமக்கு  விரோதமாய்  ஏராளமான  ஜனங்கள்  கடலுக்கு  அக்கரையிலிருக்கிற  சீரியாவிலிருந்து  வருகிறார்கள்;  இதோ,  அவர்கள்  எங்கேதியாகிய  ஆசாசோன்தாமாரில்  இருக்கிறார்கள்  என்று  அறிவித்தார்கள்.  (2நாளாகமம்  20:2)

silar  vanthu,  yoasapaaththai  noakki:  umakku  viroathamaay  earaa'lamaana  janangga'l  kadalukku  akkaraiyilirukki’ra  seeriyaavilirunthu  varugi’raarga'l;  ithoa,  avarga'l  enggeathiyaagiya  aasaasoanthaamaaril  irukki’raarga'l  en’ru  a’riviththaarga'l.  (2naa’laagamam  20:2)

அப்பொழுது  யோசபாத்  பயந்து,  கர்த்தரைத்  தேடுகிறதற்கு  ஒருமுகப்பட்டு,  யூதாவெங்கும்  உபவாசத்தைக்  கூறுவித்தான்.  (2நாளாகமம்  20:3)

appozhuthu  yoasapaath  bayanthu,  karththaraith  theadugi’ratha’rku  orumugappattu,  yoothaavenggum  ubavaasaththaik  koo’ruviththaan.  (2naa’laagamam  20:3)

அப்படியே  யூதா  ஜனங்கள்  கர்த்தரிடத்திலே  சகாயந்தேடக்  கூடினார்கள்;  யூதாவிலுள்ள  எல்லாப்  பட்டணங்களிலும்  இருந்து  அவர்கள்  கர்த்தரைத்  தேடவந்தார்கள்.  (2நாளாகமம்  20:4)

appadiyea  yoothaa  janangga'l  karththaridaththilea  sagaayantheadak  koodinaarga'l;  yoothaavilu'l'la  ellaap  patta'nangga'lilum  irunthu  avarga'l  karththaraith  theadavanthaarga'l.  (2naa’laagamam  20:4)

அப்பொழுது  யோசபாத்  கர்த்தருடைய  ஆலயத்திலே  புதுப்பிராகாரத்து  முகப்பிலே,  யூதா  ஜனங்களும்  எருசலேமியரும்  கூடின  சபையிலே  நின்று:  (2நாளாகமம்  20:5)

appozhuthu  yoasapaath  karththarudaiya  aalayaththilea  puthuppiraagaaraththu  mugappilea,  yoothaa  janangga'lum  erusaleamiyarum  koodina  sabaiyilea  nin’ru:  (2naa’laagamam  20:5)

எங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தாவே,  பரலோகத்திலிருக்கிற  நீர்  அல்லவோ  தேவன்;  தேவரீர்  ஜாதிகளுடைய  ராஜ்யங்களையெல்லாம்  ஆளுகிறவர்;  உம்முடைய  கரத்திலே  வல்லமையும்  பராக்கிரமமும்  இருக்கிறது,  ஒருவரும்  உம்மோடு  எதிர்த்து  நிற்கக்கூடாது.  (2நாளாகமம்  20:6)

engga'l  pithaakka'lin  theavanaagiya  karththaavea,  paraloagaththilirukki’ra  neer  allavoa  theavan;  theavareer  jaathiga'ludaiya  raajyangga'laiyellaam  aa'lugi’ravar;  ummudaiya  karaththilea  vallamaiyum  baraakkiramamum  irukki’rathu,  oruvarum  ummoadu  ethirththu  ni’rkakkoodaathu.  (2naa’laagamam  20:6)

எங்கள்  தேவனாகிய  நீர்  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  முன்பாக  இந்தத்  தேசத்துக்  குடிகளைத்  துரத்திவிட்டு  இதை  உம்முடைய  சிநேகிதனாகிய  ஆபிரகாமுடைய  சந்ததிக்கு  என்றைக்குமென்று  கொடுக்கவில்லையா?  (2நாளாகமம்  20:7)

engga'l  theavanaagiya  neer  ummudaiya  janamaagiya  isravealukku  munbaaga  inthath  theasaththuk  kudiga'laith  thuraththivittu  ithai  ummudaiya  sineagithanaagiya  aabirahaamudaiya  santhathikku  en’raikkumen’ru  kodukkavillaiyaa?  (2naa’laagamam  20:7)

ஆதலால்  அவர்கள்  இங்கே  குடியிருந்து,  இதிலே  உம்முடைய  நாமத்திற்கென்று  ஒரு  பரிசுத்த  ஸ்தலத்தைக்  கட்டினார்கள்.  (2நாளாகமம்  20:8)

aathalaal  avarga'l  inggea  kudiyirunthu,  ithilea  ummudaiya  naamaththi’rken’ru  oru  parisuththa  sthalaththaik  kattinaarga'l.  (2naa’laagamam  20:8)

எங்கள்மேல்  பட்டயம்,  நியாயதண்டனை,  கொள்ளைநோய்,  பஞ்சம்  முதலான  தீமைகள்  வந்தால்,  அப்பொழுது  உம்முடைய  நாமம்  இந்த  ஆலயத்தில்  விளங்குகிறபடியால்,  நாங்கள்  இந்த  ஆலயத்திலும்  உமது  சந்நிதியிலும்  வந்து  நின்று,  எங்கள்  இடுக்கணில்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகையில்,  தேவரீர்  கேட்டு  இரட்சிப்பீர்  என்று  சொல்லியிருக்கிறார்கள்.  (2நாளாகமம்  20:9)

engga'lmeal  pattayam,  niyaayatha'ndanai,  ko'l'lainoay,  pagncham  muthalaana  theemaiga'l  vanthaal,  appozhuthu  ummudaiya  naamam  intha  aalayaththil  vi'langgugi’rapadiyaal,  naangga'l  intha  aalayaththilum  umathu  sannithiyilum  vanthu  nin’ru,  engga'l  idukka'nil  ummai  noakkik  kooppidugaiyil,  theavareer  keattu  iradchippeer  en’ru  solliyirukki’raarga'l.  (2naa’laagamam  20:9)

இப்போதும்,  இதோ,  இஸ்ரவேலர்  எகிப்துதேசத்திலிருந்து  வருகிறபோது,  அம்மோன்  புத்திரர்,  மோவாபியர்,  சேயீர்  மலைத்தேசத்தாருடைய  சீமைகள்  வழியாய்ப்  போக  நீர்  உத்தரவு  கொடுக்கவில்லை;  ஆகையால்  அவர்களை  விட்டு  விலகி,  அவர்களை  நாசப்படுத்தாதிருந்தார்கள்.  (2நாளாகமம்  20:10)

ippoathum,  ithoa,  isravealar  egipthutheasaththilirunthu  varugi’rapoathu,  ammoan  puththirar,  moavaabiyar,  seayeer  malaiththeasaththaarudaiya  seemaiga'l  vazhiyaayp  poaga  neer  uththaravu  kodukkavillai;  aagaiyaal  avarga'lai  vittu  vilagi,  avarga'lai  naasappaduththaathirunthaarga'l.  (2naa’laagamam  20:10)

இப்போதும்,  இதோ,  அவர்கள்  எங்களுக்கு  நன்மைக்குத்  தீமையைச்  சரிக்கட்டி,  தேவரீர்  எங்களைச்  சுதந்தரிக்கப்பண்ணின  உம்முடைய  சுதந்தரத்திலிருந்து  எங்களைத்  துரத்திவிட  வருகிறார்கள்.  (2நாளாகமம்  20:11)

ippoathum,  ithoa,  avarga'l  engga'lukku  nanmaikkuth  theemaiyaich  sarikkatti,  theavareer  engga'laich  suthantharikkappa'n'nina  ummudaiya  suthantharaththilirunthu  engga'laith  thuraththivida  varugi’raarga'l.  (2naa’laagamam  20:11)

எங்கள்  தேவனே,  அவர்களை  நீர்  நியாயந்தீர்க்கமாட்டீரோ?  எங்களுக்கு  விரோதமாக  வந்த  இந்த  ஏராளமான  கூட்டத்திற்கு  முன்பாக  நிற்க  எங்களுக்குப்  பெலனில்லை;  நாங்கள்  செய்யவேண்டியது  இன்னதென்று  எங்களுக்குத்  தெரியவில்லை;  ஆகையால்  எங்கள்  கண்கள்  உம்மையே  நோக்கிக்கொண்டிருக்கிறது  என்றான்.  (2நாளாகமம்  20:12)

engga'l  theavanea,  avarga'lai  neer  niyaayantheerkkamaatteeroa?  engga'lukku  viroathamaaga  vantha  intha  earaa'lamaana  koottaththi’rku  munbaaga  ni’rka  engga'lukkup  belanillai;  naangga'l  seyyavea'ndiyathu  innathen’ru  engga'lukkuth  theriyavillai;  aagaiyaal  engga'l  ka'nga'l  ummaiyea  noakkikko'ndirukki’rathu  en’raan.  (2naa’laagamam  20:12)

யூதா  கோத்திரத்தார்  அனைவரும்,  அவர்கள்  குழந்தைகளும்,  அவர்கள்  பெண்ஜாதிகளும்,  அவர்கள்  குமாரருங்கூடக்  கர்த்தருக்கு  முன்பாக  நின்றார்கள்.  (2நாளாகமம்  20:13)

yoothaa  koaththiraththaar  anaivarum,  avarga'l  kuzhanthaiga'lum,  avarga'l  pe'njaathiga'lum,  avarga'l  kumaararungkoodak  karththarukku  munbaaga  nin’raarga'l.  (2naa’laagamam  20:13)

அப்பொழுது  சபையின்  நடுவிலிருக்கிற  மத்தனியாவின்  குமாரனாகிய  ஏயெலின்  மகனான  பெனாயாவுக்குப்  பிறந்த  சகரியாவின்  புத்திரன்  யகாசியேல்  என்னும்  ஆசாப்பின்  புத்திரரில்  ஒருவனான  லேவியன்மேல்  கர்த்தருடைய  ஆவி  இறங்கினதினால்  அவன்  சொன்னது:  (2நாளாகமம்  20:14)

appozhuthu  sabaiyin  naduvilirukki’ra  maththaniyaavin  kumaaranaagiya  eayelin  maganaana  benaayaavukkup  pi’rantha  sagariyaavin  puththiran  yagaasiyeal  ennum  aasaappin  puththiraril  oruvanaana  leaviyanmeal  karththarudaiya  aavi  i’rangginathinaal  avan  sonnathu:  (2naa’laagamam  20:14)

சகல  யூதா  கோத்திரத்தாரே,  எருசலேமின்  குடிகளே,  ராஜாவாகிய  யோசபாத்தே,  கேளுங்கள்;  நீங்கள்  அந்த  ஏராளமான  கூட்டத்திற்குப்  பயப்படாமலும்  கலங்காமலும்  இருங்கள்  என்று  கர்த்தர்  உங்களுக்குச்  சொல்லுகிறார்;  இந்த  யுத்தம்  உங்களுடையதல்ல,  தேவனுடையது.  (2நாளாகமம்  20:15)

sagala  yoothaa  koaththiraththaarea,  erusaleamin  kudiga'lea,  raajaavaagiya  yoasapaaththea,  kea'lungga'l;  neengga'l  antha  earaa'lamaana  koottaththi’rkup  bayappadaamalum  kalanggaamalum  irungga'l  en’ru  karththar  ungga'lukkuch  sollugi’raar;  intha  yuththam  ungga'ludaiyathalla,  theavanudaiyathu.  (2naa’laagamam  20:15)

நாளைக்கு  நீங்கள்  அவர்களுக்கு  விரோதமாய்ப்  போங்கள்;  இதோ,  அவர்கள்  சிஸ்  என்னும்  மேட்டுவழியாய்  வருகிறார்கள்;  நீங்கள்  அவர்களை  யெருவேல்  வனாந்தரத்திற்கு  எதிரான  பள்ளத்தாக்கின்  கடையாந்தரத்திலே  கண்டு  சந்திப்பீர்கள்.  (2நாளாகமம்  20:16)

naa'laikku  neengga'l  avarga'lukku  viroathamaayp  poangga'l;  ithoa,  avarga'l  sis  ennum  meattuvazhiyaay  varugi’raarga'l;  neengga'l  avarga'lai  yeruveal  vanaantharaththi’rku  ethiraana  pa'l'laththaakkin  kadaiyaantharaththilea  ka'ndu  santhippeerga'l.  (2naa’laagamam  20:16)

இந்த  யுத்தத்தைப்  பண்ணுகிறவர்கள்  நீங்கள்  அல்ல;  யூதா  மனுஷரே,  எருசலேம்  ஜனங்களே,  நீங்கள்  தரித்துநின்று  கர்த்தர்  உங்களுக்குச்  செய்யும்  இரட்சிப்பைப்  பாருங்கள்;  பயப்படாமலும்  கலங்காமலும்  இருங்கள்;  நாளைக்கு  அவர்களுக்கு  எதிராகப்  புறப்படுங்கள்;  கர்த்தர்  உங்களோடே  இருக்கிறார்  என்றான்.  (2நாளாகமம்  20:17)

intha  yuththaththaip  pa'n'nugi’ravarga'l  neengga'l  alla;  yoothaa  manusharea,  erusaleam  janangga'lea,  neengga'l  thariththunin’ru  karththar  ungga'lukkuch  seyyum  iradchippaip  paarungga'l;  bayappadaamalum  kalanggaamalum  irungga'l;  naa'laikku  avarga'lukku  ethiraagap  pu’rappadungga'l;  karththar  ungga'loadea  irukki’raar  en’raan.  (2naa’laagamam  20:17)

அப்பொழுது  யோசபாத்  தரைமட்டும்  முகங்குனிந்தான்;  சகல  யூதா  கோத்திரத்தாரும்  எருசலேமின்  குடிகளும்  கர்த்தரைப்  பணிந்துகொள்ளக்  கர்த்தருக்கு  முன்பாகத்  தாழவிழுந்தார்கள்.  (2நாளாகமம்  20:18)

appozhuthu  yoasapaath  tharaimattum  mugangkuninthaan;  sagala  yoothaa  koaththiraththaarum  erusaleamin  kudiga'lum  karththaraip  pa'ninthuko'l'lak  karththarukku  munbaagath  thaazhavizhunthaarga'l.  (2naa’laagamam  20:18)

கோகாத்தியரின்  புத்திரரிலும்  கோராகியரின்  புத்திரரிலும்  இருந்த  லேவியர்  எழுந்திருந்து,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரை  மகா  சத்தத்தோடே  கெம்பீரமாய்த்  துதித்தார்கள்.  (2நாளாகமம்  20:19)

koagaaththiyarin  puththirarilum  koaraagiyarin  puththirarilum  iruntha  leaviyar  ezhunthirunthu,  isravealin  theavanaagiya  karththarai  mahaa  saththaththoadea  kembeeramaayth  thuthiththaarga'l.  (2naa’laagamam  20:19)

அவர்கள்  அதிகாலமே  எழுந்திருந்து,  தெக்கொவாவின்  வனாந்தரத்திற்குப்  போகப்  புறப்பட்டார்கள்;  புறப்படுகையில்  யோசபாத்  நின்று:  யூதாவே,  எருசலேமின்  குடிகளே,  கேளுங்கள்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நம்புங்கள்,  அப்பொழுது  நிலைப்படுவீர்கள்;  அவருடைய  தீர்க்கதரிசிகளை  நம்புங்கள்,  அப்பொழுது  சித்திபெறுவீர்கள்  என்றான்.  (2நாளாகமம்  20:20)

avarga'l  athikaalamea  ezhunthirunthu,  thekkovaavin  vanaantharaththi’rkup  poagap  pu’rappattaarga'l;  pu’rappadugaiyil  yoasapaath  nin’ru:  yoothaavea,  erusaleamin  kudiga'lea,  kea'lungga'l;  ungga'l  theavanaagiya  karththarai  nambungga'l,  appozhuthu  nilaippaduveerga'l;  avarudaiya  theerkkatharisiga'lai  nambungga'l,  appozhuthu  siththipe’ruveerga'l  en’raan.  (2naa’laagamam  20:20)

பின்பு  அவன்  ஜனத்தோடே  ஆலோசனைபண்ணி,  பரிசுத்தமுள்ள  மகத்துவத்தைத்  துதிக்கவும்,  ஆயுதம்  அணிந்தவர்களுக்கு  முன்னாக  நடந்துபோய்,  கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  கிருபை  என்றும்  உள்ளதென்று  கர்த்தரைப்  பாடவும்,  பாடகரை  நிறுத்தினான்.  (2நாளாகமம்  20:21)

pinbu  avan  janaththoadea  aaloasanaipa'n'ni,  parisuththamu'l'la  magaththuvaththaith  thuthikkavum,  aayutham  a'ninthavarga'lukku  munnaaga  nadanthupoay,  karththaraith  thuthiyungga'l,  avar  kirubai  en’rum  u'l'lathen’ru  karththaraip  paadavum,  paadagarai  ni’ruththinaan.  (2naa’laagamam  20:21)

அவர்கள்  பாடித்  துதிசெய்யத்  தொடங்கினபோது,  யூதாவுக்கு  விரோதமாய்  வந்து  பதிவிருந்த  அம்மோன்  புத்திரரையும்,  மோவாபியரையும்,  சேயீர்  மலைத்தேசத்தாரையும்,  ஒருவருக்கு  விரோதமாய்  ஒருவரைக்  கர்த்தர்  எழும்பப்பண்ணினதினால்  அவர்கள்  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  (2நாளாகமம்  20:22)

avarga'l  paadith  thuthiseyyath  thodangginapoathu,  yoothaavukku  viroathamaay  vanthu  pathiviruntha  ammoan  puththiraraiyum,  moavaabiyaraiyum,  seayeer  malaiththeasaththaaraiyum,  oruvarukku  viroathamaay  oruvaraik  karththar  ezhumbappa'n'ninathinaal  avarga'l  vettu'ndu  vizhunthaarga'l.  (2naa’laagamam  20:22)

எப்படியெனில்,  அம்மோன்  புத்திரரும்  மோவாபியரும்,  சேயீர்  மலைத்தேசக்  குடிகளைச்  சங்கரிக்கவும்  அழிக்கவும்  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்பினார்கள்;  சேயீர்  குடிகளை  அழித்துத்  தீர்ந்தபோது,  தாங்களும்  தங்களில்  ஒருவரையொருவர்  அழிக்கத்தக்கவிதமாய்க்  கைகலந்தார்கள்.  (2நாளாகமம்  20:23)

eppadiyenil,  ammoan  puththirarum  moavaabiyarum,  seayeer  malaiththeasak  kudiga'laich  sanggarikkavum  azhikkavum  avarga'lukku  viroathamaay  ezhumbinaarga'l;  seayeer  kudiga'lai  azhiththuth  theernthapoathu,  thaangga'lum  thangga'lil  oruvaraiyoruvar  azhikkaththakkavithamaayk  kaikalanthaarga'l.  (2naa’laagamam  20:23)

யூதா  மனுஷர்  வனாந்தரத்திலுள்ள  சாமக்கூட்டண்டையிலே  வந்து,  அந்த  ஏராளமான  கூட்டமிருக்கும்  திக்கை  நோக்குகிறபோது,  இதோ,  அவர்கள்  தரையிலே  விழுந்துகிடக்கிற  பிரேதங்களாகக்  கண்டார்கள்;  ஒருவரும்  தப்பவில்லை.  (2நாளாகமம்  20:24)

yoothaa  manushar  vanaantharaththilu'l'la  saamakkootta'ndaiyilea  vanthu,  antha  earaa'lamaana  koottamirukkum  thikkai  noakkugi’rapoathu,  ithoa,  avarga'l  tharaiyilea  vizhunthukidakki’ra  pireathangga'laagak  ka'ndaarga'l;  oruvarum  thappavillai.  (2naa’laagamam  20:24)

யோசபாத்தும்  அவனுடைய  ஜனங்களும்  அவர்கள்  உடைமைகளைக்  கொள்ளையிட  வந்தபோது,  அவர்கள்  கண்ட  ஏராளமான  பொருள்களும்  பிரேதங்களிலிருந்து  உரிந்துபோட்ட  ஆடை  ஆபரணங்களும்,  தாங்கள்  எடுத்துக்கொண்டு  போகக்கூடாதிருந்தது;  மூன்றுநாளாய்க்  கொள்ளையிட்டார்கள்;  அது  அவ்வளவு  மிகுதியாயிருந்தது.  (2நாளாகமம்  20:25)

yoasapaaththum  avanudaiya  janangga'lum  avarga'l  udaimaiga'laik  ko'l'laiyida  vanthapoathu,  avarga'l  ka'nda  earaa'lamaana  poru'lga'lum  pireathangga'lilirunthu  urinthupoatta  aadai  aabara'nangga'lum,  thaangga'l  eduththukko'ndu  poagakkoodaathirunthathu;  moon’runaa'laayk  ko'l'laiyittaarga'l;  athu  avva'lavu  miguthiyaayirunthathu.  (2naa’laagamam  20:25)

நாலாம்  நாளில்  பெராக்காவிலே  கூடினார்கள்;  அங்கே  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  செலுத்தினார்கள்;  ஆதலால்  அவ்விடத்திற்கு  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  பெராக்கா  என்னும்  பேர்  தரித்தார்கள்.  (2நாளாகமம்  20:26)

naalaam  naa'lil  beraakkaavilea  koodinaarga'l;  anggea  karththarukku  sthoaththiram  seluththinaarga'l;  aathalaal  avvidaththi’rku  innaa'lvaraikkum  irukki’rapadi  beraakkaa  ennum  pear  thariththaarga'l.  (2naa’laagamam  20:26)

பின்பு  கர்த்தர்  அவர்களை  அவர்கள்  சத்துருக்கள்பேரில்  களிகூரச்  செய்தபடியால்  யூதா  மனுஷர்  யாவரும்  எருசலேம்  ஜனங்களும்,  அவர்களுக்கு  முன்னாலே  யோசபாத்தும்  மகிழ்ச்சியோடே  எருசலேமுக்குத்  திரும்பினார்கள்.  (2நாளாகமம்  20:27)

pinbu  karththar  avarga'lai  avarga'l  saththurukka'lpearil  ka'likoorach  seythapadiyaal  yoothaa  manushar  yaavarum  erusaleam  janangga'lum,  avarga'lukku  munnaalea  yoasapaaththum  magizhchchiyoadea  erusaleamukkuth  thirumbinaarga'l.  (2naa’laagamam  20:27)

அவர்கள்  தம்புருகளோடும்  சுரமண்டலங்களோடும்  பூரிகைகளோடும்  எருசலேமிலிருக்கிற  கர்த்தருடைய  ஆலயத்திற்கு  வந்தார்கள்.  (2நாளாகமம்  20:28)

avarga'l  thamburuga'loadum  surama'ndalangga'loadum  poorigaiga'loadum  erusaleamilirukki’ra  karththarudaiya  aalayaththi’rku  vanthaarga'l.  (2naa’laagamam  20:28)

கர்த்தர்  இஸ்ரவேலின்  சத்துருக்களோடு  யுத்தம்பண்ணினார்  என்று  கேள்விப்பட்ட  அந்தந்தத்  தேசத்து  ராஜ்யத்தார்மேல்  தேவனால்  உண்டான  பயங்கரம்  வந்தது.  (2நாளாகமம்  20:29)

karththar  isravealin  saththurukka'loadu  yuththampa'n'ninaar  en’ru  kea'lvippatta  anthanthath  theasaththu  raajyaththaarmeal  theavanaal  u'ndaana  bayanggaram  vanthathu.  (2naa’laagamam  20:29)

இவ்விதமாய்த்  தேவன்  சுற்றுப்புறத்தாரால்  யுத்தமில்லாத  இளைப்பாறுதலை  அவனுக்குக்  கட்டளையிட்டதினால்,  யோசபாத்தின்  ராஜ்யபாரம்  அமரிக்கையாயிருந்தது.  (2நாளாகமம்  20:30)

ivvithamaayth  theavan  sut’ruppu’raththaaraal  yuththamillaatha  i'laippaa’ruthalai  avanukkuk  katta'laiyittathinaal,  yoasapaaththin  raajyabaaram  amarikkaiyaayirunthathu.  (2naa’laagamam  20:30)

யோசபாத்  யூதாவை  அரசாண்டான்;  அவன்  ராஜாவாகிறபோது,  முப்பத்தைந்து  வயதாயிருந்து,  இருபத்தைந்து  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  சில்கியின்  குமாரத்தியாகிய  அவனுடைய  தாயின்பேர்  அசுபாள்.  (2நாளாகமம்  20:31)

yoasapaath  yoothaavai  arasaa'ndaan;  avan  raajaavaagi’rapoathu,  muppaththainthu  vayathaayirunthu,  irubaththainthu  varusham  erusaleamil  arasaa'ndaan;  silkiyin  kumaaraththiyaagiya  avanudaiya  thaayinpear  asubaa'l.  (2naa’laagamam  20:31)

அவன்  தன்  தகப்பனாகிய  ஆசாவின்  வழியிலே  நடந்து,  அதைவிட்டு  விலகாதிருந்து,  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  20:32)

avan  than  thagappanaagiya  aasaavin  vazhiyilea  nadanthu,  athaivittu  vilagaathirunthu,  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seythaan.  (2naa’laagamam  20:32)

ஆனாலும்  மேடைகள்  தகர்க்கப்படவில்லை;  ஜனங்கள்  தங்கள்  இருதயத்தைத்  தங்கள்  பிதாக்களின்  தேவனுக்கு  இன்னும்  நேராக்காதிருந்தார்கள்.  (2நாளாகமம்  20:33)

aanaalum  meadaiga'l  thagarkkappadavillai;  janangga'l  thangga'l  iruthayaththaith  thangga'l  pithaakka'lin  theavanukku  innum  nearaakkaathirunthaarga'l.  (2naa’laagamam  20:33)

யோசபாத்தின்  ஆதியந்தமான  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  புஸ்தகத்தில்  கண்டிருக்கிற  ஆனானியின்  குமாரனாகிய  யெகூவின்  வசனங்களில்  எழுதியிருக்கிறது.  (2நாளாகமம்  20:34)

yoasapaaththin  aathiyanthamaana  mat’ra  varththamaanangga'l  israveal  raajaakka'lin  pusthagaththil  ka'ndirukki’ra  aanaaniyin  kumaaranaagiya  yegoovin  vasanangga'lil  ezhuthiyirukki’rathu.  (2naa’laagamam  20:34)

அதற்குப்பின்பு  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்  பொல்லாப்புச்  செய்கிறவனான  அகசியா  என்னும்  இஸ்ரவேலின்  ராஜாவோடே  தோழமைபண்ணினான்.  (2நாளாகமம்  20:35)

atha’rkuppinbu  yoothaavin  raajaavaagiya  yoasapaath  pollaappuch  seygi’ravanaana  agasiyaa  ennum  isravealin  raajaavoadea  thoazhamaipa'n'ninaan.  (2naa’laagamam  20:35)

தர்ஷீசுக்குப்  போகும்படிக்குக்  கப்பல்களைச்  செய்ய  அவனோடே  கூடிக்கொண்டான்;  அப்படியே  எசியோன்கேபேரிலே  கப்பல்களைச்  செய்தார்கள்.  (2நாளாகமம்  20:36)

tharsheesukkup  poagumpadikkuk  kappalga'laich  seyya  avanoadea  koodikko'ndaan;  appadiyea  esiyoankeabearilea  kappalga'laich  seythaarga'l.  (2naa’laagamam  20:36)

மரேசா  ஊரானாகிய  தொதாவாவின்  குமாரனான  எலியேசர்  யோசபாத்துக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லி:  நீர்  அகசியாவோடே  கூடிக்கொண்டபடியினால்,  கர்த்தர்  உம்முடைய  கிரியைகளை  முறித்துப்போட்டார்  என்றான்;  அந்தக்  கப்பல்கள்  உடைந்துபோயிற்று,  அவர்கள்  தர்ஷீசுக்குப்  போகக்கூடாமற்போயிற்று.  (2நாளாகமம்  20:37)

mareasaa  ooraanaagiya  thothaavaavin  kumaaranaana  eliyeasar  yoasapaaththukku  viroathamaagath  theerkkatharisanam  solli:  neer  agasiyaavoadea  koodikko'ndapadiyinaal,  karththar  ummudaiya  kiriyaiga'lai  mu’riththuppoattaar  en’raan;  anthak  kappalga'l  udainthupoayit’ru,  avarga'l  tharsheesukkup  poagakkoodaama’rpoayit’ru.  (2naa’laagamam  20:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!