Wednesday, September 28, 2016

2 Naa'laagamam 19 | 2 நாளாகமம் 19 | 2 Chronicles 19

யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்,  எருசலேமிலுள்ள  தன்  வீட்டிற்குச்  சமாதானத்தோடே  திரும்பிவந்தான்.  (2நாளாகமம்  19:1)

yoothaavin  raajaavaagiya  yoasapaath,  erusaleamilu'l'la  than  veetti’rkuch  samaathaanaththoadea  thirumbivanthaan.  (2naa’laagamam  19:1)

அப்பொழுது  அனானியின்  குமாரனாகிய  யெகூ  என்னும்  ஞானதிருஷ்டிக்காரன்  புறப்பட்டு,  அவனைச்  சந்தித்து,  ராஜாவாகிய  யோசபாத்தை  நோக்கி:  துன்மார்க்கனுக்குத்  துணைநின்று,  கர்த்தரைப்  பகைக்கிறவர்களை  நீர்  சிநேகிக்கலாமா?  இதினிமித்தம்  கர்த்தருடைய  கடுங்கோபம்  உம்மேல்  வர  இருந்தது.  (2நாளாகமம்  19:2)

appozhuthu  anaaniyin  kumaaranaagiya  yegoo  ennum  gnaanathirushdikkaaran  pu’rappattu,  avanaich  santhiththu,  raajaavaagiya  yoasapaaththai  noakki:  thunmaarkkanukkuth  thu'nainin’ru,  karththaraip  pagaikki’ravarga'lai  neer  sineagikkalaamaa?  ithinimiththam  karththarudaiya  kadungkoabam  ummeal  vara  irunthathu.  (2naa’laagamam  19:2)

ஆகிலும்  நீர்  விக்கிரகத்தோப்புகளை  தேசத்தை  விட்டகற்றி,  தேவனைத்  தேட  உம்முடைய  இருதயத்தை  நேராக்கின  விஷயத்தில்  நன்மையான  காரியங்கள்  உம்மிடத்திலே  காணப்பட்டது  உண்டு  என்றான்.  (2நாளாகமம்  19:3)

aagilum  neer  vikkiragaththoappuga'lai  theasaththai  vittagat’ri,  theavanaith  theada  ummudaiya  iruthayaththai  nearaakkina  vishayaththil  nanmaiyaana  kaariyangga'l  ummidaththilea  kaa'nappattathu  u'ndu  en’raan.  (2naa’laagamam  19:3)

யோசபாத்  எருசலேமிலே  வாசமாயிருந்து,  திரும்பப்  பெயெர்செபாதொடங்கி,  எப்பிராயீம்  மலைத்தேசமட்டுமுள்ள  ஜனத்திற்குள்ளே  பிரயாணமாய்ப்  போய்,  அவர்களைத்  தங்கள்  பிதாக்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  இடத்திற்குத்  திரும்பப்பண்ணினான்.  (2நாளாகமம்  19:4)

yoasapaath  erusaleamilea  vaasamaayirunthu,  thirumbap  beyersebaathodanggi,  eppiraayeem  malaiththeasamattumu'l'la  janaththi’rku'l'lea  pirayaa'namaayp  poay,  avarga'laith  thangga'l  pithaakka'ludaiya  theavanaagiya  karththar  idaththi’rkuth  thirumbappa'n'ninaan.  (2naa’laagamam  19:4)

அவன்  யூதாவின்  அரணான  பட்டணங்களாகிய  ஒவ்வொரு  பட்டணத்திலும்  நியாயாதிபதிகளை  வைத்து,  (2நாளாகமம்  19:5)

avan  yoothaavin  ara'naana  patta'nangga'laagiya  ovvoru  patta'naththilum  niyaayaathibathiga'lai  vaiththu,  (2naa’laagamam  19:5)

அந்த  நியாயாதிபதிகளை  நோக்கி:  நீங்கள்  செய்கிற  காரியத்தைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  நீங்கள்  மனுஷனுடைய  கட்டளையினால்  அல்ல,  கர்த்தருடைய  கட்டளையினால்  நியாயம்  விசாரிக்கிறீர்கள்;  நியாயம்  விசாரிக்கிற  விஷயத்திலே  அவர்  உங்களுடனே  இருக்கிறார்.  (2நாளாகமம்  19:6)

antha  niyaayaathibathiga'lai  noakki:  neengga'l  seygi’ra  kaariyaththaikku’riththu  echcharikkaiyaayirungga'l;  neengga'l  manushanudaiya  katta'laiyinaal  alla,  karththarudaiya  katta'laiyinaal  niyaayam  visaarikki’reerga'l;  niyaayam  visaarikki’ra  vishayaththilea  avar  ungga'ludanea  irukki’raar.  (2naa’laagamam  19:6)

ஆதலால்  கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயம்  உங்களிடத்தில்  இருக்கக்கடவது,  எச்சரிக்கையாயிருந்து  காரியத்தை  நடத்துங்கள்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தரிடத்திலே  அநியாயமும்  முகதாட்சிணியமும்  இல்லை,  பரிதானமும்  அவரிடத்திலே  செல்லாது  என்றான்.  (2நாளாகமம்  19:7)

aathalaal  karththarukkup  bayappadugi’ra  bayam  ungga'lidaththil  irukkakkadavathu,  echcharikkaiyaayirunthu  kaariyaththai  nadaththungga'l;  ungga'l  theavanaagiya  karththaridaththilea  aniyaayamum  mugathaadchi'niyamum  illai,  parithaanamum  avaridaththilea  sellaathu  en’raan.  (2naa’laagamam  19:7)

அவர்கள்  எருசலேமில்  வந்திருக்கும்போது,  யோசபாத்  லேவியரிலும்,  ஆசாரியரிலும்,  இஸ்ரவேலுடைய  வம்சத்தலைவரிலும்,  சிலரைக்  கர்த்தருடைய  நியாயங்களைக்குறித்தும்  விவாதவிஷயங்களைக்  குறித்தும்  விசாரிக்கும்படி  எருசலேமிலே  நியமித்து,  (2நாளாகமம்  19:8)

avarga'l  erusaleamil  vanthirukkumpoathu,  yoasapaath  leaviyarilum,  aasaariyarilum,  isravealudaiya  vamsaththalaivarilum,  silaraik  karththarudaiya  niyaayangga'laikku’riththum  vivaathavishayangga'laik  ku’riththum  visaarikkumpadi  erusaleamilea  niyamiththu,  (2naa’laagamam  19:8)

அவர்களுக்குக்  கட்டளையிட்டதாவது:  நீங்கள்  கர்த்தருக்குப்  பயந்து,  உண்மையோடும்  உத்தம  இருதயத்தோடும்  நடந்து  செய்யவேண்டியது  என்னவென்றால்,  (2நாளாகமம்  19:9)

avarga'lukkuk  katta'laiyittathaavathu:  neengga'l  karththarukkup  bayanthu,  u'nmaiyoadum  uththama  iruthayaththoadum  nadanthu  seyyavea'ndiyathu  ennaven’raal,  (2naa’laagamam  19:9)

நானாவித  இரத்தப்பழிச்  சங்கதிகளும்,  பிரமாணத்திற்கும்,  கற்பனைக்கும்,  கட்டளைகளுக்கும்,  நியாயங்களுக்கும்  அடுத்த  நானாவித  வழக்குச்  சங்கதிகளும்,  தங்கள்  பட்டணங்களிலே  குடியிருக்கிற  உங்கள்  சகோதரரிடத்திலிருந்து  உங்களிடத்தில்  வரும்போது,  அவர்கள்  கர்த்தருக்கு  நேரஸ்தராகாதபடிக்கும்,  உங்கள்மேலும்  உங்கள்  சகோதரர்மேலும்  கடுங்கோபம்  வராதபடிக்கும்,  நீங்கள்  அவர்களை  எச்சரியுங்கள்;  நீங்கள்  இப்படிச்  செய்தால்  நேரஸ்தராகமாட்டீர்கள்.  (2நாளாகமம்  19:10)

naanaavitha  iraththappazhich  sanggathiga'lum,  piramaa'naththi’rkum,  ka’rpanaikkum,  katta'laiga'lukkum,  niyaayangga'lukkum  aduththa  naanaavitha  vazhakkuch  sanggathiga'lum,  thangga'l  patta'nangga'lilea  kudiyirukki’ra  ungga'l  sagoathararidaththilirunthu  ungga'lidaththil  varumpoathu,  avarga'l  karththarukku  nearastharaagaathapadikkum,  ungga'lmealum  ungga'l  sagoathararmealum  kadungkoabam  varaathapadikkum,  neengga'l  avarga'lai  echchariyungga'l;  neengga'l  ippadich  seythaal  nearastharaagamaatteerga'l.  (2naa’laagamam  19:10)

இதோ,  ஆசாரியனாகிய  அமரியா  கர்த்தருக்கடுத்த  எல்லா  நியாயத்திலும்,  இஸ்மவேலின்  குமாரனாகிய  செபதியா  என்னும்  யூதா  வம்சத்தின்  தலைவன்  ராஜாவுக்கடுத்த  எல்லா  நியாயத்திலும்  உங்களுக்கு  மேலான  நியாயாதிபதிகள்;  லேவியரும்  உங்கள்  கைக்குள்  உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்;  நீங்கள்  திடமனதாயிருந்து  காரியங்களை  நடத்துங்கள்,  உத்தமனுக்குக்  கர்த்தர்  துணை  என்றான்.  (2நாளாகமம்  19:11)

ithoa,  aasaariyanaagiya  amariyaa  karththarukkaduththa  ellaa  niyaayaththilum,  ismavealin  kumaaranaagiya  sebathiyaa  ennum  yoothaa  vamsaththin  thalaivan  raajaavukkaduththa  ellaa  niyaayaththilum  ungga'lukku  mealaana  niyaayaathibathiga'l;  leaviyarum  ungga'l  kaikku'l  uththiyoagastharaayirukki’raarga'l;  neengga'l  thidamanathaayirunthu  kaariyangga'lai  nadaththungga'l,  uththamanukkuk  karththar  thu'nai  en’raan.  (2naa’laagamam  19:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!