Wednesday, September 28, 2016

2 Naa'laagamam 18 | 2 நாளாகமம் 18 | 2 Chronicles 18


யோசபாத்துக்கு  மிகுந்த  ஐசுவரியமும்  கனமும்  உண்டாயிருந்தது;  அவன்  ஆகாபோடே  சம்பந்தங்கலந்து,  (2நாளாகமம்  18:1)

yoasapaaththukku  miguntha  aisuvariyamum  kanamum  u'ndaayirunthathu;  avan  aagaaboadea  sambanthangkalanthu,  (2naa’laagamam  18:1)

சில  வருஷங்கள்  சென்றபின்பு,  சமாரியாவிலிருக்கிற  ஆகாபிடத்துக்குப்  போனான்;  அப்பொழுது  ஆகாப்  அவனுக்கும்  அவனோடிருக்கிற  ஜனத்திற்கும்  அநேகம்  ஆடுமாடுகளை  அடிப்பித்து,  கீலேயாத்திலுள்ள  ராமோத்திற்கு  வரும்படி  அவனை  ஏவினான்.  (2நாளாகமம்  18:2)

sila  varushangga'l  sen’rapinbu,  samaariyaavilirukki’ra  aagaabidaththukkup  poanaan;  appozhuthu  aagaab  avanukkum  avanoadirukki’ra  janaththi’rkum  aneagam  aadumaaduga'lai  adippiththu,  keeleayaaththilu'l'la  raamoaththi’rku  varumpadi  avanai  eavinaan.  (2naa’laagamam  18:2)

எப்படியெனில்,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஆகாப்  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தை  நோக்கி:  கீலேயாத்திலுள்ள  ராமோத்துக்கு  என்னோடே  வருகிறீரா  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்தான்  நீர்,  என்னுடைய  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்கள்,  உம்மோடேகூட  யுத்தத்திற்கு  வருகிறேன்  என்றான்.  (2நாளாகமம்  18:3)

eppadiyenil,  isravealin  raajaavaagiya  aagaab  yoothaavin  raajaavaagiya  yoasapaaththai  noakki:  keeleayaaththilu'l'la  raamoaththukku  ennoadea  varugi’reeraa  en’ru  keattatha’rku,  avan:  naanthaan  neer,  ennudaiya  janangga'l  ummudaiya  janangga'l,  ummoadeakooda  yuththaththi’rku  varugi’rean  en’raan.  (2naa’laagamam  18:3)

பின்னும்  யோசபாத்  இஸ்ரவேலின்  ராஜாவைப்  பார்த்து:  கர்த்தருடைய  வார்த்தையை  இன்றைக்கு  விசாரித்து  அறியும்  என்றான்.  (2நாளாகமம்  18:4)

pinnum  yoasapaath  isravealin  raajaavaip  paarththu:  karththarudaiya  vaarththaiyai  in’raikku  visaariththu  a’riyum  en’raan.  (2naa’laagamam  18:4)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா  நானூறு  தீர்க்கதரிசிகளைக்  கூடிவரச்செய்து:  நாங்கள்  கீலேயாத்திலுள்ள  ராமோத்தின்மேல்  யுத்தம்பண்ணப்  போகலாமா,  போகலாகாதா  என்று  அவர்களைக்  கேட்டான்.  அதற்கு  அவர்கள்:  போம்,  தேவன்  ராஜாவின்  கையில்  அதை  ஒப்புக்கொடுப்பார்  என்றார்கள்.  (2நாளாகமம்  18:5)

appozhuthu  isravealin  raajaa  naanoo’ru  theerkkatharisiga'laik  koodivarachseythu:  naangga'l  keeleayaaththilu'l'la  raamoaththinmeal  yuththampa'n'nap  poagalaamaa,  poagalaagaathaa  en’ru  avarga'laik  keattaan.  atha’rku  avarga'l:  poam,  theavan  raajaavin  kaiyil  athai  oppukkoduppaar  en’raarga'l.  (2naa’laagamam  18:5)

பின்பு  யோசபாத்:  நாம்  விசாரித்து  அறிகிறதற்கு  இவர்களையல்லாமல்  கர்த்தருடைய  தீர்க்கதரிசி  வேறே  யாராகிலும்  இங்கே  இல்லையா  என்று  கேட்டான்.  (2நாளாகமம்  18:6)

pinbu  yoasapaath:  naam  visaariththu  a’rigi’ratha’rku  ivarga'laiyallaamal  karththarudaiya  theerkkatharisi  vea’rea  yaaraagilum  inggea  illaiyaa  en’ru  keattaan.  (2naa’laagamam  18:6)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா  யோசபாத்தை  நோக்கி:  கர்த்தரிடத்தில்  விசாரித்து  அறிகிறதற்கு  இம்லாவின்  குமாரனாகிய  மிகாயா  என்னும்  மற்றொருவன்  இருக்கிறான்;  ஆனாலும்  நான்  அவனைப்  பகைக்கிறேன்;  அவன்  என்னைக்குறித்து  நன்மையாக  அல்ல,  தீமையாகவே  எப்பொழுதும்  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறவன்  என்றான்.  அதற்கு  யோசபாத்:  ராஜாவே,  அப்படிச்  சொல்லவேண்டாம்  என்றான்.  (2நாளாகமம்  18:7)

appozhuthu  isravealin  raajaa  yoasapaaththai  noakki:  karththaridaththil  visaariththu  a’rigi’ratha’rku  imlaavin  kumaaranaagiya  mikaayaa  ennum  mat’roruvan  irukki’raan;  aanaalum  naan  avanaip  pagaikki’rean;  avan  ennaikku’riththu  nanmaiyaaga  alla,  theemaiyaagavea  eppozhuthum  theerkkatharisanam  sollugi’ravan  en’raan.  atha’rku  yoasapaath:  raajaavea,  appadich  sollavea'ndaam  en’raan.  (2naa’laagamam  18:7)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா  பிரதானிகளில்  ஒருவனைக்  கூப்பிட்டு:  இம்லாவின்  குமாரனாகிய  மிகாயாவைச்  சீக்கிரமாய்  அழைத்துவா  என்றான்.  (2நாளாகமம்  18:8)

appozhuthu  isravealin  raajaa  pirathaaniga'lil  oruvanaik  kooppittu:  imlaavin  kumaaranaagiya  mikaayaavaich  seekkiramaay  azhaiththuvaa  en’raan.  (2naa’laagamam  18:8)

இஸ்ரவேலின்  ராஜாவும்  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தும்,  சமாரியாவின்  ஒலிமுக  வாசலுக்கு  முன்னிருக்கும்  விசாலமான  இடத்திலே  ராஜவஸ்திரம்  தரித்துக்கொண்டவர்களாய்,  அவரவர்  தம்தம்  சிங்காசனத்திலே  உட்கார்ந்திருந்தார்கள்;  சகல  தீர்க்கதரிசிகளும்  அவர்களுக்கு  முன்பாகத்  தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.  (2நாளாகமம்  18:9)

isravealin  raajaavum  yoothaavin  raajaavaagiya  yoasapaaththum,  samaariyaavin  olimuga  vaasalukku  munnirukkum  visaalamaana  idaththilea  raajavasthiram  thariththukko'ndavarga'laay,  avaravar  thamtham  singgaasanaththilea  udkaarnthirunthaarga'l;  sagala  theerkkatharisiga'lum  avarga'lukku  munbaagath  theerkkatharisanagnsonnaarga'l.  (2naa’laagamam  18:9)

கெனானாவின்  குமாரனாகிய  சிதேக்கியா  தனக்கு  இருப்புக்கொம்புகளை  உண்டாக்கி,  இவைகளால்  நீர்  சீரியரை  முட்டி  நிர்மூலமாக்கிப்போடுவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (2நாளாகமம்  18:10)

kenaanaavin  kumaaranaagiya  sitheakkiyaa  thanakku  iruppukkombuga'lai  u'ndaakki,  ivaiga'laal  neer  seeriyarai  mutti  nirmoolamaakkippoaduveer  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (2naa’laagamam  18:10)

சகல  தீர்க்கதரிசிகளும்  அதற்கு  இசைவாகத்  தீர்க்கதரிசனஞ்சொல்லி,  கீலேயாத்திலுள்ள  ராமோத்திற்குப்போம்,  உமக்கு  வாய்க்கும்,  கர்த்தர்  அதை  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றார்கள்.  (2நாளாகமம்  18:11)

sagala  theerkkatharisiga'lum  atha’rku  isaivaagath  theerkkatharisanagnsolli,  keeleayaaththilu'l'la  raamoaththi’rkuppoam,  umakku  vaaykkum,  karththar  athai  raajaavin  kaiyil  oppukkoduppaar  en’raarga'l.  (2naa’laagamam  18:11)

மிகாயாவை  அழைக்கப்போன  ஆள்  அவனுடனே  பேசி:  இதோ,  தீர்க்கதரிசிகளின்  வார்த்தைகள்  ஏகவாக்காய்  ராஜாவுக்கு  நன்மையாயிருக்கிறது;  உம்முடைய  வார்த்தையும்  அவர்களில்  ஒருவர்  வார்த்தையைப்போல  இருக்கும்படிக்கு  நன்மையாகச்  சொல்லும்  என்றான்.  (2நாளாகமம்  18:12)

mikaayaavai  azhaikkappoana  aa'l  avanudanea  peasi:  ithoa,  theerkkatharisiga'lin  vaarththaiga'l  eagavaakkaay  raajaavukku  nanmaiyaayirukki’rathu;  ummudaiya  vaarththaiyum  avarga'lil  oruvar  vaarththaiyaippoala  irukkumpadikku  nanmaiyaagach  sollum  en’raan.  (2naa’laagamam  18:12)

அதற்கு  மிகாயா:  என்  தேவன்  சொல்வதையே  சொல்வேன்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  (2நாளாகமம்  18:13)

atha’rku  mikaayaa:  en  theavan  solvathaiyea  solvean  en’ru  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan.  (2naa’laagamam  18:13)

அவன்  ராஜாவினிடத்தில்  வந்தபோது,  ராஜா  அவனைப்  பார்த்து:  மிகாயாவே,  நாங்கள்  கீலேயாத்திலுள்ள  ராமோத்தின்மேல்  யுத்தம்பண்ணப்  போகலாமா,  போகலாகாதா  என்று  கேட்டான்.  அதற்கு  அவன்:  போங்கள்;  உங்களுக்கு  வாய்க்கும்;  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்  என்றான்.  (2நாளாகமம்  18:14)

avan  raajaavinidaththil  vanthapoathu,  raajaa  avanaip  paarththu:  mikaayaavea,  naangga'l  keeleayaaththilu'l'la  raamoaththinmeal  yuththampa'n'nap  poagalaamaa,  poagalaagaathaa  en’ru  keattaan.  atha’rku  avan:  poangga'l;  ungga'lukku  vaaykkum;  ungga'l  kaiyil  oppukkodukkappaduvaarga'l  en’raan.  (2naa’laagamam  18:14)

ராஜா  அவனைப்  பார்த்து:  நீ  கர்த்தருடைய  நாமத்திலே  உண்மையை  அல்லாமல்  வேறொன்றையும்  என்னிடத்தில்  சொல்லாதபடிக்கு,  நான்  எத்தனைதரம்  உன்னை  ஆணையிடுவிக்கவேண்டும்  என்று  சொன்னான்.  (2நாளாகமம்  18:15)

raajaa  avanaip  paarththu:  nee  karththarudaiya  naamaththilea  u'nmaiyai  allaamal  vea’ron’raiyum  ennidaththil  sollaathapadikku,  naan  eththanaitharam  unnai  aa'naiyiduvikkavea'ndum  en’ru  sonnaan.  (2naa’laagamam  18:15)

அப்பொழுது  அவன்:  இஸ்ரவேலர்  எல்லாரும்  மேய்ப்பனில்லாத  ஆடுகளைப்போல  மலைகளில்  சிதறப்பட்டதைக்  கண்டேன்;  அப்பொழுது  கர்த்தர்:  இவர்களுக்கு  எஜமான்  இல்லை;  அவரவர்  தம்தம்  வீட்டிற்குச்  சமாதானத்தோடே  திரும்பக்கடவர்கள்  என்றார்  என்று  சொன்னான்.  (2நாளாகமம்  18:16)

appozhuthu  avan:  isravealar  ellaarum  meayppanillaatha  aaduga'laippoala  malaiga'lil  sitha’rappattathaik  ka'ndean;  appozhuthu  karththar:  ivarga'lukku  ejamaan  illai;  avaravar  thamtham  veetti’rkuch  samaathaanaththoadea  thirumbakkadavarga'l  en’raar  en’ru  sonnaan.  (2naa’laagamam  18:16)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா  யோசபாத்தை  நோக்கி:  இவன்  என்னைக்குறித்து  நன்மையாக  அல்ல,  தீமையாகவே  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன்  என்று  நான்  உம்மோடே  சொல்லவில்லையா  என்றான்.  (2நாளாகமம்  18:17)

appozhuthu  isravealin  raajaa  yoasapaaththai  noakki:  ivan  ennaikku’riththu  nanmaiyaaga  alla,  theemaiyaagavea  theerkkatharisanagnsollugi’ravan  en’ru  naan  ummoadea  sollavillaiyaa  en’raan.  (2naa’laagamam  18:17)

அப்பொழுது  அவன்  சொன்னது:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  கர்த்தர்  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறதையும்,  பரம  சேனையெல்லாம்  அவர்  வலதுபக்கத்திலும்  அவர்  இடதுபக்கத்திலும்  நிற்கிறதையும்  கண்டேன்.  (2நாளாகமம்  18:18)

appozhuthu  avan  sonnathu:  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l;  karththar  thammudaiya  singgaasanaththinmeal  veet’rirukki’rathaiyum,  parama  seanaiyellaam  avar  valathupakkaththilum  avar  idathupakkaththilum  ni’rki’rathaiyum  ka'ndean.  (2naa’laagamam  18:18)

அப்பொழுது  கர்த்தர்:  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஆகாப்  கீலேயாத்திலுள்ள  ராமோத்தில்  போய்  விழும்படிக்கு,  அவனுக்குப்  போதனைசெய்கிறவன்  யார்  என்று  கேட்டதற்கு,  ஒருவன்  இப்படியும்  ஒருவன்  அப்படியும்  சொன்னார்கள்.  (2நாளாகமம்  18:19)

appozhuthu  karththar:  isravealin  raajaavaagiya  aagaab  keeleayaaththilu'l'la  raamoaththil  poay  vizhumpadikku,  avanukkup  poathanaiseygi’ravan  yaar  en’ru  keattatha’rku,  oruvan  ippadiyum  oruvan  appadiyum  sonnaarga'l.  (2naa’laagamam  18:19)

அப்பொழுது  ஒரு  ஆவி  புறப்பட்டுவந்து,  கர்த்தருக்கு  முன்பாக  நின்று:  நான்  அவனுக்குப்  போதனைசெய்வேன்  என்றது;  எதினால்  என்று  கர்த்தர்  அதைக்  கேட்டார்.  (2நாளாகமம்  18:20)

appozhuthu  oru  aavi  pu’rappattuvanthu,  karththarukku  munbaaga  nin’ru:  naan  avanukkup  poathanaiseyvean  en’rathu;  ethinaal  en’ru  karththar  athaik  keattaar.  (2naa’laagamam  18:20)

அப்பொழுது  அது:  நான்  போய்,  அவனுடைய  தீர்க்கதரிசிகள்  எல்லாரின்  வாயிலும்  பொய்யின்  ஆவியாய்  இருப்பேன்  என்றது.  அதற்கு  அவர்:  நீ  அவனுக்குப்  போதனைசெய்து  அப்படி  நடக்கப்பண்ணுவாய்;  போய்  அப்படியே  செய்  என்றார்.  (2நாளாகமம்  18:21)

appozhuthu  athu:  naan  poay,  avanudaiya  theerkkatharisiga'l  ellaarin  vaayilum  poyyin  aaviyaay  iruppean  en’rathu.  atha’rku  avar:  nee  avanukkup  poathanaiseythu  appadi  nadakkappa'n'nuvaay;  poay  appadiyea  sey  en’raar.  (2naa’laagamam  18:21)

ஆனதினால்  கர்த்தர்  பொய்யின்  ஆவியை  இந்த  உம்முடைய  தீர்க்கதரிசிகளின்  வாயிலே  கட்டளையிட்டார்;  கர்த்தர்  உம்மைக்குறித்துத்  தீமையாகச்  சொன்னார்  என்றான்.  (2நாளாகமம்  18:22)

aanathinaal  karththar  poyyin  aaviyai  intha  ummudaiya  theerkkatharisiga'lin  vaayilea  katta'laiyittaar;  karththar  ummaikku’riththuth  theemaiyaagach  sonnaar  en’raan.  (2naa’laagamam  18:22)

அப்பொழுது  கெனானாவின்  குமாரனாகிய  சிதேக்கியா  கிட்டே  வந்து:  மிகாயாவைக்  கன்னத்தில்  அடித்து,  கர்த்தருடைய  ஆவி  எந்தவழியாய்  என்னைவிட்டு  உன்னோடே  பேசும்படி  வந்தது  என்றான்.  (2நாளாகமம்  18:23)

appozhuthu  kenaanaavin  kumaaranaagiya  sitheakkiyaa  kittea  vanthu:  mikaayaavaik  kannaththil  adiththu,  karththarudaiya  aavi  enthavazhiyaay  ennaivittu  unnoadea  peasumpadi  vanthathu  en’raan.  (2naa’laagamam  18:23)

அதற்கு  மிகாயா:  நீ  ஒளித்துக்கொள்ள  உள்ளறையிலே  பதுங்கும்  அந்நாளிலே  அதைக்  காண்பாய்  என்றான்.  (2நாளாகமம்  18:24)

atha’rku  mikaayaa:  nee  o'liththukko'l'la  u'l'la’raiyilea  pathunggum  annaa'lilea  athaik  kaa'nbaay  en’raan.  (2naa’laagamam  18:24)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா:  நீங்கள்  மிகாயாவைப்  பிடித்து,  அவனைப்  பட்டணத்துத்  தலைவனாகிய  ஆமோனிடத்துக்கும்,  ராஜகுமாரனாகிய  யோவாசிடத்துக்கும்  திரும்பக்  கொண்டுபோய்,  (2நாளாகமம்  18:25)

appozhuthu  isravealin  raajaa:  neengga'l  mikaayaavaip  pidiththu,  avanaip  patta'naththuth  thalaivanaagiya  aamoanidaththukkum,  raajakumaaranaagiya  yoavaasidaththukkum  thirumbak  ko'ndupoay,  (2naa’laagamam  18:25)

அவனைச்  சிறைச்சாலையிலே  வைத்து,  நான்  சமாதானத்தோடே  திரும்பிவருமளவும்,  அவனுக்கு  இடுக்கத்தின்  அப்பத்தையும்  இடுக்கத்தின்  தண்ணீரையும்  சாப்பிடக்  கொடுங்கள்  என்று  ராஜா  சொன்னார்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (2நாளாகமம்  18:26)

avanaich  si’raichsaalaiyilea  vaiththu,  naan  samaathaanaththoadea  thirumbivaruma'lavum,  avanukku  idukkaththin  appaththaiyum  idukkaththin  tha'n'neeraiyum  saappidak  kodungga'l  en’ru  raajaa  sonnaar  en’ru  sollungga'l  en’raan.  (2naa’laagamam  18:26)

அப்பொழுது  மிகாயா:  நீர்  சமாதானத்தோடே  திரும்பிவந்தால்,  கர்த்தர்  என்னைக்கொண்டு  பேசினதில்லை  என்று  சொல்லி;  ஜனங்களே,  நீங்கள்  எல்லாரும்  கேளுங்கள்  என்றான்.  (2நாளாகமம்  18:27)

appozhuthu  mikaayaa:  neer  samaathaanaththoadea  thirumbivanthaal,  karththar  ennaikko'ndu  peasinathillai  en’ru  solli;  janangga'lea,  neengga'l  ellaarum  kea'lungga'l  en’raan.  (2naa’laagamam  18:27)

பின்பு  இஸ்ரவேலின்  ராஜாவும்,  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தும்  கீலேயாத்திலுள்ள  ராமோத்துக்குப்  போனார்கள்.  (2நாளாகமம்  18:28)

pinbu  isravealin  raajaavum,  yoothaavin  raajaavaagiya  yoasapaaththum  keeleayaaththilu'l'la  raamoaththukkup  poanaarga'l.  (2naa’laagamam  18:28)

இஸ்ரவேலின்  ராஜா  யோசபாத்தைப்  பார்த்து:  நான்  வேஷமாறி  யுத்தத்தில்  பிரவேசிப்பேன்;  நீரோ  ராஜவஸ்திரம்  தரித்திரும்  என்று  சொல்லி,  இஸ்ரவேலின்  ராஜா  வேஷமாறி  யுத்தத்தில்  பிரவேசித்தான்.  (2நாளாகமம்  18:29)

isravealin  raajaa  yoasapaaththaip  paarththu:  naan  veashamaa’ri  yuththaththil  piraveasippean;  neeroa  raajavasthiram  thariththirum  en’ru  solli,  isravealin  raajaa  veashamaa’ri  yuththaththil  piraveasiththaan.  (2naa’laagamam  18:29)

சீரியாவின்  ராஜா  தனக்கு  இருக்கிற  இரதங்களின்  தலைவரை  நோக்கி:  நீங்கள்  சிறியவரோடும்  பெரியவரோடும்  யுத்தம்பண்ணாமல்,  இஸ்ரவேலின்  ராஜா  ஒருவனோடேமாத்திரம்  யுத்தம்பண்ணுங்கள்  என்று  கட்டளையிட்டிருந்தான்.  (2நாளாகமம்  18:30)

seeriyaavin  raajaa  thanakku  irukki’ra  irathangga'lin  thalaivarai  noakki:  neengga'l  si’riyavaroadum  periyavaroadum  yuththampa'n'naamal,  isravealin  raajaa  oruvanoadeamaaththiram  yuththampa'n'nungga'l  en’ru  katta'laiyittirunthaan.  (2naa’laagamam  18:30)

ஆதலால்  இரதங்களின்  தலைவர்  யோசபாத்தைக்  காண்கையில்,  இவன்தான்  இஸ்ரவேலின்  ராஜா  என்று  சொல்லி  யுத்தம்பண்ண  அவனைச்  சூழ்ந்துகொண்டார்கள்;  அப்பொழுது  யோசபாத்  கூக்குரல்  இட்டான்;  கர்த்தர்  அவனுக்கு  அநுசாரியாயிருந்தார்;  அவர்கள்  அவனை  விட்டு  விலகும்படி  தேவன்  செய்தார்.  (2நாளாகமம்  18:31)

aathalaal  irathangga'lin  thalaivar  yoasapaaththaik  kaa'ngaiyil,  ivanthaan  isravealin  raajaa  en’ru  solli  yuththampa'n'na  avanaich  soozhnthuko'ndaarga'l;  appozhuthu  yoasapaath  kookkural  ittaan;  karththar  avanukku  anusaariyaayirunthaar;  avarga'l  avanai  vittu  vilagumpadi  theavan  seythaar.  (2naa’laagamam  18:31)

இவன்  இஸ்ரவேலின்  ராஜா  அல்ல  என்று  இரதங்களின்  தலைவர்  கண்டபோது  அவனைவிட்டுத்  திரும்பினார்கள்.  (2நாளாகமம்  18:32)

ivan  isravealin  raajaa  alla  en’ru  irathangga'lin  thalaivar  ka'ndapoathu  avanaivittuth  thirumbinaarga'l.  (2naa’laagamam  18:32)

ஒருவன்  நினையாமல்  வில்லை  நாணேற்றி  எய்தான்,  அது  இஸ்ரவேலின்  ராஜாவினுடைய  கவசத்தின்  சந்துக்கிடையிலே  பட்டது;  அப்பொழுது  அவன்  தன்  சாரதியைப்  பார்த்து:  நீ  திருப்பி  என்னை  இராணுவத்துக்கப்பால்  கொண்டுபோ,  எனக்குக்  காயம்பட்டது  என்றான்.  (2நாளாகமம்  18:33)

oruvan  ninaiyaamal  villai  naa'neat’ri  eythaan,  athu  isravealin  raajaavinudaiya  kavasaththin  santhukkidaiyilea  pattathu;  appozhuthu  avan  than  saarathiyaip  paarththu:  nee  thiruppi  ennai  iraa'nuvaththukkappaal  ko'ndupoa,  enakkuk  kaayampattathu  en’raan.  (2naa’laagamam  18:33)

அன்றையதினம்  யுத்தம்  அதிகரித்தது;  இஸ்ரவேலின்  ராஜா  சீரியருக்கு  எதிராக  இரதத்தில்  சாயங்காலமட்டும்  நின்றிருந்து,  சூரியன்  அஸ்தமிக்கும்போது  இறந்துபோனான்.  (2நாளாகமம்  18:34)

an’raiyathinam  yuththam  athigariththathu;  isravealin  raajaa  seeriyarukku  ethiraaga  irathaththil  saayanggaalamattum  nin’rirunthu,  sooriyan  asthamikkumpoathu  i’ranthupoanaan.  (2naa’laagamam  18:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!