Tuesday, September 27, 2016

2 Naa'laagamam 14 | 2 நாளாகமம் 14 | 2 Chronicles 14

அபியா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைத்  தாவீதின்  நகரத்தில்  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  ஆசா  ராஜாவானான்;  இவனுடைய  நாட்களில்  தேசம்  பத்து  வருஷமட்டும்  அமரிக்கையாயிருந்தது.  (2நாளாகமம்  14:1)

abiyaa  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avanaith  thaaveethin  nagaraththil  adakkampa'n'ninaarga'l;  avan  sthaanaththilea  avan  kumaaranaagiya  aasaa  raajaavaanaan;  ivanudaiya  naadka'lil  theasam  paththu  varushamattum  amarikkaiyaayirunthathu.  (2naa’laagamam  14:1)

ஆசா  தன்  தேவனாகிய  கர்த்தரின்  பார்வைக்கு  நன்மையும்  செம்மையுமானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  14:2)

aasaa  than  theavanaagiya  karththarin  paarvaikku  nanmaiyum  semmaiyumaanathaich  seythaan.  (2naa’laagamam  14:2)

அந்நிய  தேவர்களின்  பலிபீடங்களையும்  மேடைகளையும்  அகற்றி,  சிலைகளை  உடைத்து,  விக்கிரகத்தோப்புகளை  வெட்டி,  (2நாளாகமம்  14:3)

anniya  theavarga'lin  balipeedangga'laiyum  meadaiga'laiyum  agat’ri,  silaiga'lai  udaiththu,  vikkiragaththoappuga'lai  vetti,  (2naa’laagamam  14:3)

தங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரைத்  தேடவும்,  நியாயப்பிரமாணத்தின்படியும்  கற்பனையின்படியும்  செய்யவும்  யூதாவுக்குக்  கற்பித்து,  (2நாளாகமம்  14:4)

thangga'l  pithaakka'lin  theavanaagiya  karththaraith  theadavum,  niyaayappiramaa'naththinpadiyum  ka’rpanaiyinpadiyum  seyyavum  yoothaavukkuk  ka’rpiththu,  (2naa’laagamam  14:4)

யூதாவுடைய  எல்லாப்  பட்டணங்களிலுமிருந்து  மேடைகளையும்  விக்கிரகங்களையும்  அகற்றினான்;  அவனுக்கு  முன்பாக  ராஜ்யம்  அமரிக்கையாயிருந்தது.  (2நாளாகமம்  14:5)

yoothaavudaiya  ellaap  patta'nangga'lilumirunthu  meadaiga'laiyum  vikkiragangga'laiyum  agat’rinaan;  avanukku  munbaaga  raajyam  amarikkaiyaayirunthathu.  (2naa’laagamam  14:5)

கர்த்தர்  அவனுக்கு  இளைப்பாறுதலைக்  கட்டளையிட்டதினால்,  அந்த  வருஷங்களில்  அவனுக்கு  விரோதமான  யுத்தம்  இல்லாதிருந்தது;  தேசம்  அமரிக்கையாயிருந்தபடியினால்  யூதாவிலே  அரணான  பட்டணங்களைக்  கட்டினான்.  (2நாளாகமம்  14:6)

karththar  avanukku  i'laippaa’ruthalaik  katta'laiyittathinaal,  antha  varushangga'lil  avanukku  viroathamaana  yuththam  illaathirunthathu;  theasam  amarikkaiyaayirunthapadiyinaal  yoothaavilea  ara'naana  patta'nangga'laik  kattinaan.  (2naa’laagamam  14:6)

அவன்  யூதாவை  நோக்கி:  தேசம்  நமக்கு  முன்பாக  அமர்ந்திருக்கையில்,  நாம்  இந்தப்  பட்டணங்களைக்  கட்டி,  அவைகளுக்கு  அலங்கங்கள்,  கோபுரங்கள்,  வாசல்கள்  உண்டுபண்ணி,  தாழ்ப்பாள்  போட்டுப்  பலப்படுத்துவோமாக;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரைத்  தேடினோம்,  தேடினபோது,  சுற்றிலும்  நமக்கு  இளைப்பாறுதலைக்  கட்டளையிட்டார்  என்றான்;  அப்படியே  கட்டினார்கள்;  அவர்களுக்குக்  காரியம்  வாய்த்தது.  (2நாளாகமம்  14:7)

avan  yoothaavai  noakki:  theasam  namakku  munbaaga  amarnthirukkaiyil,  naam  inthap  patta'nangga'laik  katti,  avaiga'lukku  alanggangga'l,  koapurangga'l,  vaasalga'l  u'ndupa'n'ni,  thaazhppaa'l  poattup  balappaduththuvoamaaga;  nammudaiya  theavanaagiya  karththaraith  theadinoam,  theadinapoathu,  sut’rilum  namakku  i'laippaa’ruthalaik  katta'laiyittaar  en’raan;  appadiyea  kattinaarga'l;  avarga'lukkuk  kaariyam  vaayththathu.  (2naa’laagamam  14:7)

யூதாவிலே  பரிசையும்  ஈட்டியும்  பிடிக்கிற  மூன்றுலட்சம்பேரும்,  பென்யமீனிலே  கேடகம்  பிடித்து  வில்லை  நாணேற்றுகிற  இரண்டுலட்சத்து  எண்பதினாயிரம்பேருமான  சேனை  ஆசாவுக்கு  இருந்தது,  இவர்களெல்லாரும்  பராக்கிரமசாலிகள்.  (2நாளாகமம்  14:8)

yoothaavilea  parisaiyum  eettiyum  pidikki’ra  moon’ruladchampearum,  benyameenilea  keadagam  pidiththu  villai  naa'neat’rugi’ra  ira'nduladchaththu  e'nbathinaayirampearumaana  seanai  aasaavukku  irunthathu,  ivarga'lellaarum  baraakkiramasaaliga'l.  (2naa’laagamam  14:8)

அவர்களுக்கு  விரோதமாக  எத்தியோப்பியனாகிய  சேரா  பத்துலட்சம்பேர்கள்  சேர்ந்த  சேனையோடும்  முந்நூறு  இரதங்களோடும்  புறப்பட்டு  மரேசாமட்டும்  வந்தான்.  (2நாளாகமம்  14:9)

avarga'lukku  viroathamaaga  eththiyoappiyanaagiya  searaa  paththuladchampearga'l  searntha  seanaiyoadum  munnoo’ru  irathangga'loadum  pu’rappattu  mareasaamattum  vanthaan.  (2naa’laagamam  14:9)

அப்பொழுது  ஆசா  அவனுக்கு  எதிராகப்  புறப்பட்டான்;  மரேசாவுக்கு  அடுத்த  செப்பத்தா  என்னும்  பள்ளத்தாக்கில்  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நின்றார்கள்.  (2நாளாகமம்  14:10)

appozhuthu  aasaa  avanukku  ethiraagap  pu’rappattaan;  mareasaavukku  aduththa  seppaththaa  ennum  pa'l'laththaakkil  yuththaththi’rku  a'nivaguththu  nin’raarga'l.  (2naa’laagamam  14:10)

ஆசா  தன்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:  கர்த்தாவே,  பலமுள்ளவனுக்காகிலும்  பலனற்றவனுக்காகிலும்  உதவிசெய்கிறது  உமக்கு  லேசான  காரியம்;  எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  எங்களுக்குத்  துணைநில்லும்;  உம்மைச்  சார்ந்து  உம்முடைய  நாமத்தில்  ஏராளமான  இந்தக்  கூட்டத்திற்கு  எதிராக  வந்தோம்;  கர்த்தாவே,  நீர்  எங்கள்  தேவன்;  மனுஷன்  உம்மை  மேற்கொள்ளவிடாதேயும்  என்றான்.  (2நாளாகமம்  14:11)

aasaa  than  theavanaagiya  karththarai  noakkik  kooppittu:  karththaavea,  balamu'l'lavanukkaagilum  balanat’ravanukkaagilum  uthaviseygi’rathu  umakku  leasaana  kaariyam;  engga'l  theavanaagiya  karththaavea,  engga'lukkuth  thu'nainillum;  ummaich  saarnthu  ummudaiya  naamaththil  earaa'lamaana  inthak  koottaththi’rku  ethiraaga  vanthoam;  karththaavea,  neer  engga'l  theavan;  manushan  ummai  mea’rko'l'lavidaatheayum  en’raan.  (2naa’laagamam  14:11)

அப்பொழுது  கர்த்தர்  அந்த  எத்தியோப்பியரை  ஆசாவுக்கும்  யூதாவுக்கும்  முன்பாக  முறிய  அடித்ததினால்  எத்தியோப்பியர்  ஓடிப்போனார்கள்.  (2நாளாகமம்  14:12)

appozhuthu  karththar  antha  eththiyoappiyarai  aasaavukkum  yoothaavukkum  munbaaga  mu’riya  adiththathinaal  eththiyoappiyar  oadippoanaarga'l.  (2naa’laagamam  14:12)

அவர்களை  ஆசாவும்  அவனோடிருந்த  ஜனங்களும்  கேரார்மட்டும்  துரத்தினார்கள்;  எத்தியோப்பியர்  திரும்பப்  பலங்கொள்ளாதபடிக்கு  முறிந்து  விழுந்தார்கள்;  கர்த்தருக்கும்  அவருடைய  சேனைக்கும்  முன்பாக  நொறுங்கிப்போனார்கள்;  அவர்கள்  மிகுதியாகக்  கொள்ளை  அடித்து,  (2நாளாகமம்  14:13)

avarga'lai  aasaavum  avanoadiruntha  janangga'lum  kearaarmattum  thuraththinaarga'l;  eththiyoappiyar  thirumbap  balangko'l'laathapadikku  mu’rinthu  vizhunthaarga'l;  karththarukkum  avarudaiya  seanaikkum  munbaaga  no’runggippoanaarga'l;  avarga'l  miguthiyaagak  ko'l'lai  adiththu,  (2naa’laagamam  14:13)

கேராரின்  சுற்றுப்பட்டணங்களையெல்லாம்  முறிய  அடித்தார்கள்;  கர்த்தரால்  அவர்களுக்குப்  பயங்கரம்  உண்டாயிற்று;  அந்தப்  பட்டணங்களையெல்லாம்  கொள்ளையிட்டார்கள்,  அவைகளில்  கொள்ளை  மிகுதியாய்  அகப்பட்டது.  (2நாளாகமம்  14:14)

kearaarin  sut’ruppatta'nangga'laiyellaam  mu’riya  adiththaarga'l;  karththaraal  avarga'lukkup  bayanggaram  u'ndaayit’ru;  anthap  patta'nangga'laiyellaam  ko'l'laiyittaarga'l,  avaiga'lil  ko'l'lai  miguthiyaay  agappattathu.  (2naa’laagamam  14:14)

மிருகஜீவன்கள்  இருந்த  கொட்டாரங்களையும்  அவர்கள்  இடித்துப்போட்டு,  திரளான  ஆடுகளையும்  ஒட்டகங்களையும்  சாய்த்துக்கொண்டு  எருசலேமுக்குத்  திரும்பினார்கள்.  (2நாளாகமம்  14:15)

mirugajeevanga'l  iruntha  kottaarangga'laiyum  avarga'l  idiththuppoattu,  thira'laana  aaduga'laiyum  ottagangga'laiyum  saayththukko'ndu  erusaleamukkuth  thirumbinaarga'l.  (2naa’laagamam  14:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!