Tuesday, September 27, 2016

2 Naa'laagamam 12 | 2 நாளாகமம் 12 | 2 Chronicles 12

ரெகொபெயாம்  ராஜ்யத்தைத்  திடப்படுத்தித்  தன்னைப்  பலப்படுத்திக்கொண்டபின்,  அவனும்  அவனோடே  இஸ்ரவேலர்  அனைவரும்  கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தை  விட்டுவிட்டார்கள்.  (2நாளாகமம்  12:1)

regobeyaam  raajyaththaith  thidappaduththith  thannaip  balappaduththikko'ndapin,  avanum  avanoadea  isravealar  anaivarum  karththarudaiya  niyaayappiramaa'naththai  vittuvittaarga'l.  (2naa’laagamam  12:1)

அவர்கள்  கர்த்தருக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினபடியினால்,  ராஜாவாகிய  ரெகொபெயாமின்  ஐந்தாம்  வருஷத்தில்  எகிப்தின்  ராஜாவாகிய  சீஷாக்  ஆயிரத்து  இருநூறு  இரதங்களோடும்,  அறுபதினாயிரம்  குதிரைவீரரோடும்  எருசலேமுக்கு  விரோதமாய்  வந்தான்.  (2நாளாகமம்  12:2)

avarga'l  karththarukku  viroathamaayth  thuroagampa'n'ninapadiyinaal,  raajaavaagiya  regobeyaamin  ainthaam  varushaththil  egipthin  raajaavaagiya  seeshaak  aayiraththu  irunoo’ru  irathangga'loadum,  a’rubathinaayiram  kuthiraiveeraroadum  erusaleamukku  viroathamaay  vanthaan.  (2naa’laagamam  12:2)

அவனோடேகூட  எகிப்திலிருந்து  வந்த  லூபியர்,  சூக்கியர்,  எத்தியோப்பியரான  ஜனங்கள்  எண்ணிக்கைக்கு  அடங்காதவர்களாயிருந்தார்கள்.  (2நாளாகமம்  12:3)

avanoadeakooda  egipthilirunthu  vantha  loobiyar,  sookkiyar,  eththiyoappiyaraana  janangga'l  e'n'nikkaikku  adanggaathavarga'laayirunthaarga'l.  (2naa’laagamam  12:3)

அவன்  யூதாவுக்கு  அடுத்த  அரணான  பட்டணங்களைப்  பிடித்து,  எருசலேம்மட்டும்  வந்தான்.  (2நாளாகமம்  12:4)

avan  yoothaavukku  aduththa  ara'naana  patta'nangga'laip  pidiththu,  erusaleammattum  vanthaan.  (2naa’laagamam  12:4)

அப்பொழுது  செமாயா  தீர்க்கதரிசி  ரெகொபெயாமிடத்துக்கும்,  சீஷாக்கினிமித்தம்  எருசலேமிலே  வந்து  கூடியிருக்கிற  யூதாவின்  பிரபுக்களிடத்துக்கும்  வந்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  என்னை  விட்டுவிட்டீர்கள்,  ஆகையால்  நான்  உங்களையும்  சீஷாக்கின்  கையிலே  விழும்படி  விட்டுவிட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (2நாளாகமம்  12:5)

appozhuthu  semaayaa  theerkkatharisi  regobeyaamidaththukkum,  seeshaakkinimiththam  erusaleamilea  vanthu  koodiyirukki’ra  yoothaavin  pirabukka'lidaththukkum  vanthu,  avarga'lai  noakki:  neengga'l  ennai  vittuvitteerga'l,  aagaiyaal  naan  ungga'laiyum  seeshaakkin  kaiyilea  vizhumpadi  vittuvittean  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (2naa’laagamam  12:5)

அப்பொழுது  இஸ்ரவேலின்  பிரபுக்களும்  ராஜாவும்  தங்களைத்  தாழ்த்திக்  கர்த்தர்  நீதியுள்ளவர்  என்றார்கள்.  (2நாளாகமம்  12:6)

appozhuthu  isravealin  pirabukka'lum  raajaavum  thangga'laith  thaazhththik  karththar  neethiyu'l'lavar  en’raarga'l.  (2naa’laagamam  12:6)

அவர்கள்  தங்களைத்  தாழ்த்தினதைக்  கர்த்தர்  கண்டபோது,  கர்த்தருடைய  வார்த்தை  செமாயாவுக்கு  உண்டாகி,  அவர்  சொன்னது:  அவர்கள்  தங்களைத்  தாழ்த்தினார்கள்,  ஆகையால்  அவர்களை  அழிக்கமாட்டேன்;  என்  உக்கிரம்  சீஷாக்கைக்கொண்டு  எருசலேமின்மேல்  ஊற்றப்படாதபடிக்கு,  அவர்களுக்குக்  கொஞ்சம்  சகாயத்தைக்  கட்டளையிடுவேன்.  (2நாளாகமம்  12:7)

avarga'l  thangga'laith  thaazhththinathaik  karththar  ka'ndapoathu,  karththarudaiya  vaarththai  semaayaavukku  u'ndaagi,  avar  sonnathu:  avarga'l  thangga'laith  thaazhththinaarga'l,  aagaiyaal  avarga'lai  azhikkamaattean;  en  ukkiram  seeshaakkaikko'ndu  erusaleaminmeal  oot’rappadaathapadikku,  avarga'lukkuk  kogncham  sagaayaththaik  katta'laiyiduvean.  (2naa’laagamam  12:7)

ஆனாலும்  என்னைச்  சேவிக்கிறதற்கும்,  அந்நிய  தேசங்களின்  ராஜ்யங்களைச்  சேவிக்கிறதற்கும்  இருக்கிற  வித்தியாசத்தை  அவர்கள்  அறியும்படிக்கு  அவனைச்  சேவிக்கிறவர்களாவார்கள்  என்றார்.  (2நாளாகமம்  12:8)

aanaalum  ennaich  seavikki’ratha’rkum,  anniya  theasangga'lin  raajyangga'laich  seavikki’ratha’rkum  irukki’ra  viththiyaasaththai  avarga'l  a’riyumpadikku  avanaich  seavikki’ravarga'laavaarga'l  en’raar.  (2naa’laagamam  12:8)

அப்படியே  எகிப்தின்  ராஜாவாகிய  சீஷாக்  எருசலேமுக்கு  விரோதமாய்  வந்து,  கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களையும்,  ராஜாவுடைய  அரமனைப்  பொக்கிஷங்களையும்,  சாலொமோன்  செய்வித்த  பொன்பரிசைகள்  ஆகிய  சகலத்தையும்  எடுத்துக்கொண்டு  போய்விட்டான்.  (2நாளாகமம்  12:9)

appadiyea  egipthin  raajaavaagiya  seeshaak  erusaleamukku  viroathamaay  vanthu,  karththarudaiya  aalayaththin  pokkishangga'laiyum,  raajaavudaiya  aramanaip  pokkishangga'laiyum,  saalomoan  seyviththa  ponparisaiga'l  aagiya  sagalaththaiyum  eduththukko'ndu  poayvittaan.  (2naa’laagamam  12:9)

அவைகளுக்குப்  பதிலாக  ராஜாவாகிய  ரெகொபெயாம்  வெண்கலப்  பரிசைகளைச்  செய்வித்து,  அவைகளை  ராஜாவின்  வாசற்படியைக்  காக்கிற  சேவகருடைய  தலைவரின்  கையில்  ஒப்புவித்தான்.  (2நாளாகமம்  12:10)

avaiga'lukkup  bathilaaga  raajaavaagiya  regobeyaam  ve'ngalap  parisaiga'laich  seyviththu,  avaiga'lai  raajaavin  vaasa’rpadiyaik  kaakki’ra  seavagarudaiya  thalaivarin  kaiyil  oppuviththaan.  (2naa’laagamam  12:10)

ராஜா  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  அரமனைச்  சேவகர்  வந்து,  அவைகளை  எடுத்துக்கொண்டுபோய்,  திரும்பத்  தங்கள்  அறையிலே  வைப்பார்கள்.  (2நாளாகமம்  12:11)

raajaa  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkumpoathu,  aramanaich  seavagar  vanthu,  avaiga'lai  eduththukko'ndupoay,  thirumbath  thangga'l  a’raiyilea  vaippaarga'l.  (2naa’laagamam  12:11)

அவன்  தன்னைத்  தாழ்த்தினபடியினால்,  கர்த்தர்  அவனை  முழுதும்  அழிக்காதபடிக்கு  அவருடைய  கோபம்  அவனைவிட்டுத்  திரும்பிற்று;  யூதாவிலே  இன்னும்  சில  காரியங்கள்  சீராயிருந்தது.  (2நாளாகமம்  12:12)

avan  thannaith  thaazhththinapadiyinaal,  karththar  avanai  muzhuthum  azhikkaathapadikku  avarudaiya  koabam  avanaivittuth  thirumbit’ru;  yoothaavilea  innum  sila  kaariyangga'l  seeraayirunthathu.  (2naa’laagamam  12:12)

அப்படியே  ராஜாவாகிய  ரெகொபெயாம்  எருசலேமிலே  தன்னைத்  திடப்படுத்திக்கொண்டு  அரசாண்டான்;  ரெகொபெயாம்  ராஜாவாகிறபோது  நாற்பத்தொரு  வயதாயிருந்து,  கர்த்தர்  தம்முடைய  நாமம்  விளங்கும்படி  இஸ்ரவேல்  கோத்திரங்களிலெல்லாம்  தெரிந்துகொண்ட  நகரமாகிய  எருசலேமிலே  பதினேழு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அம்மோன்  ஜாதியான  அவனுடைய  தாயின்பேர்  நாமாள்.  (2நாளாகமம்  12:13)

appadiyea  raajaavaagiya  regobeyaam  erusaleamilea  thannaith  thidappaduththikko'ndu  arasaa'ndaan;  regobeyaam  raajaavaagi’rapoathu  naa’rpaththoru  vayathaayirunthu,  karththar  thammudaiya  naamam  vi'langgumpadi  israveal  koaththirangga'lilellaam  therinthuko'nda  nagaramaagiya  erusaleamilea  pathineazhu  varusham  raajyabaarampa'n'ninaan;  ammoan  jaathiyaana  avanudaiya  thaayinpear  naamaa'l.  (2naa’laagamam  12:13)

அவன்  கர்த்தரைத்  தேடுகிறதற்குத்  தன்  இருதயத்தை  நேராக்காமல்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2நாளாகமம்  12:14)

avan  karththaraith  theadugi’ratha’rkuth  than  iruthayaththai  nearaakkaamal  pollaappaanathaich  seythaan.  (2naa’laagamam  12:14)

ரெகொபெயாமின்  ஆதியோடந்தமான  நடபடிகள்  செமாயாவின்  புஸ்தகத்திலும்,  ஞானதிருஷ்டிக்காரனாகிய  இத்தோவின்  வம்ச  அட்டவணையிலும்  அல்லவோ  எழுதியிருக்கிறது;  ரெகொபெயாமுக்கும்  யெரொபெயாமுக்கும்  சகல  நாளும்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  (2நாளாகமம்  12:15)

regobeyaamin  aathiyoadanthamaana  nadapadiga'l  semaayaavin  pusthagaththilum,  gnaanathirushdikkaaranaagiya  iththoavin  vamsa  attava'naiyilum  allavoa  ezhuthiyirukki’rathu;  regobeyaamukkum  yerobeyaamukkum  sagala  naa'lum  yuththam  nadanthuko'ndirunthathu.  (2naa’laagamam  12:15)

ரெகொபெயாம்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்  தாவீதின்  நகரத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  அபியா  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2நாளாகமம்  12:16)

regobeyaam  than  pithaakka'loadea  niththiraiyadainthapin  thaaveethin  nagaraththil  adakkampa'n'nappattaan;  avan  kumaaranaagiya  abiyaa  avan  sthaanaththil  raajaavaanaan.  (2naa’laagamam  12:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!