Sunday, September 25, 2016

2 Naa'laagamam 1 | 2 நாளாகமம் 1 | 2 Chronicles 1

தாவீதின்  குமாரனாகிய  சாலொமோன்  தன்  ராஜ்யத்திலே  பலப்பட்டான்;  அவனுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவனுடனே  இருந்து  அவனை  மிகவும்  பெரியவனாக்கினார்.  (2நாளாகமம்  1:1)

thaaveethin  kumaaranaagiya  saalomoan  than  raajyaththilea  balappattaan;  avanudaiya  theavanaagiya  karththar  avanudanea  irunthu  avanai  migavum  periyavanaakkinaar.  (2naa’laagamam  1:1)

சாலொமோன்  ஆயிரம்பேருக்கு  அதிபதிகளும்,  நூறுபேருக்கு  அதிபதிகளும்,  நியாயாதிபதிகளும்,  இஸ்ரவேல்  எங்குமிருக்கிற  வம்சங்களின்  தலைவராகிய  சகல  பிரபுக்களுமான  இஸ்ரவேல்  அனைவரோடும்  பேசி,  (2நாளாகமம்  1:2)

saalomoan  aayirampearukku  athibathiga'lum,  noo’rupearukku  athibathiga'lum,  niyaayaathibathiga'lum,  israveal  enggumirukki’ra  vamsangga'lin  thalaivaraagiya  sagala  pirabukka'lumaana  israveal  anaivaroadum  peasi,  (2naa’laagamam  1:2)

அவனும்  அவனோடேகூடச்  சபையார்  அனைவரும்,  கிபியோனிலிருக்கிற  மேடைக்குப்  போனார்கள்.  (2நாளாகமம்  1:3)

avanum  avanoadeakoodach  sabaiyaar  anaivarum,  kibiyoanilirukki’ra  meadaikkup  poanaarga'l.  (2naa’laagamam  1:3)

தாவீது  தேவனுடைய  பெட்டிக்கு  எருசலேமிலே  கூடாரம்போட்டு  ஆயத்தம்பண்ணின  ஸ்தலத்திற்குக்  கீரியாத்யாரீமிலிருந்து  அதைக்  கொண்டுவந்தான்;  கர்த்தரின்  தாசனாகிய  மோசே  வனாந்தரத்திலே  பண்ணின  தேவனுடைய  ஆசரிப்புக்  கூடாரம்  அங்கே  இருந்தது.  (2நாளாகமம்  1:4)

thaaveethu  theavanudaiya  pettikku  erusaleamilea  koodaarampoattu  aayaththampa'n'nina  sthalaththi’rkuk  keeriyaathyaareemilirunthu  athaik  ko'nduvanthaan;  karththarin  thaasanaagiya  moasea  vanaantharaththilea  pa'n'nina  theavanudaiya  aasarippuk  koodaaram  anggea  irunthathu.  (2naa’laagamam  1:4)

ஊரின்  புத்திரனாகிய  ஊரியின்  குமாரன்  பெசலெயேல்  உண்டுபண்ணின  வெண்கலப்  பலிபீடமும்  அங்கே  கர்த்தரின்  வாசஸ்தலத்திற்கு  முன்பாக  இருந்தது;  சாலொமோனும்  சபையாரும்  அதை  நாடிப்போனார்கள்.  (2நாளாகமம்  1:5)

oorin  puththiranaagiya  ooriyin  kumaaran  besaleyeal  u'ndupa'n'nina  ve'ngalap  balipeedamum  anggea  karththarin  vaasasthalaththi’rku  munbaaga  irunthathu;  saalomoanum  sabaiyaarum  athai  naadippoanaarga'l.  (2naa’laagamam  1:5)

அங்கே  சாலொமோன்  ஆசரிப்புக்  கூடாரத்திற்கு  முன்பாகக்  கர்த்தரின்  சந்நிதியிலிருக்கிற  வெண்கலப்  பலிபீடத்தின்மேல்  ஆயிரம்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்திப்  பலியிட்டான்.  (2நாளாகமம்  1:6)

anggea  saalomoan  aasarippuk  koodaaraththi’rku  munbaagak  karththarin  sannithiyilirukki’ra  ve'ngalap  balipeedaththinmeal  aayiram  sarvaangga  thaganabaliga'laich  seluththip  baliyittaan.  (2naa’laagamam  1:6)

அன்று  ராத்திரியிலே  தேவன்  சாலொமோனுக்குத்  தரிசனமாகி:  நீ  விரும்புகிறதை  என்னிடத்தில்  கேள்  என்றார்.  (2நாளாகமம்  1:7)

an’ru  raaththiriyilea  theavan  saalomoanukkuth  tharisanamaagi:  nee  virumbugi’rathai  ennidaththil  kea'l  en’raar.  (2naa’laagamam  1:7)

சாலொமோன்  தேவனை  நோக்கி:  தேவரீர்  என்  தகப்பனாகிய  தாவீதுக்குப்  பெரிய  கிருபை  செய்து,  என்னை  அவன்  ஸ்தானத்திலே  ராஜாவாக்கினீர்.  (2நாளாகமம்  1:8)

saalomoan  theavanai  noakki:  theavareer  en  thagappanaagiya  thaaveethukkup  periya  kirubai  seythu,  ennai  avan  sthaanaththilea  raajaavaakkineer.  (2naa’laagamam  1:8)

இப்போதும்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  என்  தகப்பனாகிய  தாவீதுக்கு  அருளின  உமது  வாக்குத்தத்தம்  உறுதிப்படுவதாக;  தேவரீர்  பூமியின்  தூளத்தனை  ஏராளமான  ஜனத்தின்மேல்  என்னை  ராஜாவாக்கினீர்.  (2நாளாகமம்  1:9)

ippoathum  theavanaagiya  karththaavea,  neer  en  thagappanaagiya  thaaveethukku  aru'lina  umathu  vaakkuththaththam  u’ruthippaduvathaaga;  theavareer  boomiyin  thoo'laththanai  earaa'lamaana  janaththinmeal  ennai  raajaavaakkineer.  (2naa’laagamam  1:9)

இப்போதும்  நான்  இந்த  ஜனத்திற்கு  முன்பாகப்  போக்கும்  வரத்துமாயிருக்கத்தக்க  ஞானத்தையும்  அறிவையும்  எனக்குத்  தந்தருளும்;  ஏராளமாயிருக்கிற  இந்த  உம்முடைய  ஜனத்தை  நியாயம்  விசாரிக்கத்தக்கவன்  யார்  என்றான்.  (2நாளாகமம்  1:10)

ippoathum  naan  intha  janaththi’rku  munbaagap  poakkum  varaththumaayirukkaththakka  gnaanaththaiyum  a’rivaiyum  enakkuth  thantharu'lum;  earaa'lamaayirukki’ra  intha  ummudaiya  janaththai  niyaayam  visaarikkaththakkavan  yaar  en’raan.  (2naa’laagamam  1:10)

அப்பொழுது  தேவன்  சாலொமோனை  நோக்கி:  இந்த  விருப்பம்  உன்  இருதயத்தில்  இருந்தபடியாலும்,  நீ  ஐசுவரியத்தையும்  சம்பத்தையும்  கனத்தையும்,  உன்  பகைஞரின்  பிராணனையும்,  நீடித்த  ஆயுசையும்  கேளாமல்,  நான்  உன்னை  அரசாளப்பண்ணின  என்  ஜனத்தை  நியாயம்  விசாரிக்கத்தக்க  ஞானத்தையும்  விவேகத்தையும்  நீ  கேட்டபடியினாலும்,  (2நாளாகமம்  1:11)

appozhuthu  theavan  saalomoanai  noakki:  intha  viruppam  un  iruthayaththil  irunthapadiyaalum,  nee  aisuvariyaththaiyum  sambaththaiyum  kanaththaiyum,  un  pagaignarin  piraa'nanaiyum,  neediththa  aayusaiyum  kea'laamal,  naan  unnai  arasaa'lappa'n'nina  en  janaththai  niyaayam  visaarikkaththakka  gnaanaththaiyum  viveagaththaiyum  nee  keattapadiyinaalum,  (2naa’laagamam  1:11)

ஞானமும்  விவேகமும்  தந்திருக்கிறதுமல்லாமல்,  உனக்குமுன்  இருந்த  ராஜாக்களுக்காகிலும்  உனக்குப்பின்  இருக்கும்  ராஜாக்களுக்காகிலும்  இல்லாத  ஐசுவரியத்தையும்  சம்பத்தையும்  கனத்தையும்  உனக்குத்  தருவேன்  என்றார்.  (2நாளாகமம்  1:12)

gnaanamum  viveagamum  thanthirukki’rathumallaamal,  unakkumun  iruntha  raajaakka'lukkaagilum  unakkuppin  irukkum  raajaakka'lukkaagilum  illaatha  aisuvariyaththaiyum  sambaththaiyum  kanaththaiyum  unakkuth  tharuvean  en’raar.  (2naa’laagamam  1:12)

இப்படிச்  சாலொமோன்  கிபியோனிலிருக்கிற  மேட்டிற்குப்  போய்,  ஆசரிப்புக்  கூடாரத்தின்  சந்நிதியிலிருந்து  எருசலேமுக்கு  வந்து,  இஸ்ரவேலை  அரசாண்டான்.  (2நாளாகமம்  1:13)

ippadich  saalomoan  kibiyoanilirukki’ra  meatti’rkup  poay,  aasarippuk  koodaaraththin  sannithiyilirunthu  erusaleamukku  vanthu,  isravealai  arasaa'ndaan.  (2naa’laagamam  1:13)

சாலொமோன்  இரதங்களையும்  குதிரைவீரரையும்  சேர்த்தான்;  அவனுக்கு  ஆயிரத்து  நானூறு  இரதங்கள்  இருந்தது;  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்;  அவைகளை  இரதங்களின்  பட்டணங்களிலும்,  அவர்களை  ராஜாவாகிய  தன்னிடத்தில்  எருசலேமிலும்  வைத்திருந்தான்.  (2நாளாகமம்  1:14)

saalomoan  irathangga'laiyum  kuthiraiveeraraiyum  searththaan;  avanukku  aayiraththu  naanoo’ru  irathangga'l  irunthathu;  panneeraayiram  kuthiraiveerarum  irunthaarga'l;  avaiga'lai  irathangga'lin  patta'nangga'lilum,  avarga'lai  raajaavaagiya  thannidaththil  erusaleamilum  vaiththirunthaan.  (2naa’laagamam  1:14)

ராஜா  எருசலேமிலே  வெள்ளியையும்  பொன்னையும்  கற்கள்போலவும்,  கேதுருமரங்களைப்  பள்ளத்தாக்கில்  இருக்கிற  காட்டத்திமரங்கள்போலவும்  அதிகமாக்கினான்.  (2நாளாகமம்  1:15)

raajaa  erusaleamilea  ve'l'liyaiyum  ponnaiyum  ka’rka'lpoalavum,  keathurumarangga'laip  pa'l'laththaakkil  irukki’ra  kaattaththimarangga'lpoalavum  athigamaakkinaan.  (2naa’laagamam  1:15)

சாலொமோனுக்கு  இருந்த  குதிரைகளும்  புடவைகளும்  எகிப்திலிருந்து  கொண்டுவரப்பட்டது;  ராஜாவின்  வர்த்தகர்  புடவைகளை  ஒப்பந்த  விலைக்கிரயத்துக்கு  வாங்கினார்கள்.  (2நாளாகமம்  1:16)

saalomoanukku  iruntha  kuthiraiga'lum  pudavaiga'lum  egipthilirunthu  ko'nduvarappattathu;  raajaavin  varththagar  pudavaiga'lai  oppantha  vilaikkirayaththukku  vaangginaarga'l.  (2naa’laagamam  1:16)

அவர்கள்  எகிப்திலிருந்து  ஒரு  இரதத்தை  அறுநூறு  வெள்ளிக்காசுக்கும்,  ஒரு  குதிரையை  நூற்றைம்பது  வெள்ளிக்காசுக்கும்  கொண்டுவருவார்கள்;  அந்தப்படியே  ஏத்தியரின்  சகல  ராஜாக்களுக்கும்,  சீரியாவின்  ராஜாக்களுக்கும்  அவர்கள்  மூலமாய்க்  கொண்டுவரப்பட்டது.  (2நாளாகமம்  1:17)

avarga'l  egipthilirunthu  oru  irathaththai  a’runoo’ru  ve'l'likkaasukkum,  oru  kuthiraiyai  noot’raimbathu  ve'l'likkaasukkum  ko'nduvaruvaarga'l;  anthappadiyea  eaththiyarin  sagala  raajaakka'lukkum,  seeriyaavin  raajaakka'lukkum  avarga'l  moolamaayk  ko'nduvarappattathu.  (2naa’laagamam  1:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!