Tuesday, September 06, 2016

2 Iraajaakka'l 5 | 2 இராஜாக்கள் 5 | 2 Kings 5

சீரிய  ராஜாவின்  படைத்தலைவனாகிய  நாகமான்  என்பவன்  தன்  ஆண்டவனிடத்தில்  பெரிய  மனுஷனும்  எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்;  அவனைக்  கொண்டு  கர்த்தர்  சீரியாவுக்கு  இரட்சிப்பைக்  கட்டளையிட்டார்;  மகா  பராக்கிரமசாலியாகிய  அவனோ  குஷ்டரோகியாயிருந்தான்.  (2இராஜாக்கள்  5:1)

seeriya  raajaavin  padaiththalaivanaagiya  naagamaan  enbavan  than  aa'ndavanidaththil  periya  manushanum  e'n'nikkaiyu'l'lavanumaayirunthaan;  avanaik  ko'ndu  karththar  seeriyaavukku  iradchippaik  katta'laiyittaar;  mahaa  baraakkiramasaaliyaagiya  avanoa  kushdaroagiyaayirunthaan.  (2iraajaakka’l  5:1)

சீரியாவிலிருந்து  தண்டுகள்  புறப்பட்டு,  இஸ்ரவேல்  தேசத்திலிருந்து  ஒரு  சிறு  பெண்ணைச்  சிறைபிடித்துக்கொண்டு  வந்திருந்தார்கள்;  அவள்  நாகமானின்  மனைவிக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தாள்.  (2இராஜாக்கள்  5:2)

seeriyaavilirunthu  tha'nduga'l  pu’rappattu,  israveal  theasaththilirunthu  oru  si’ru  pe'n'naich  si’raipidiththukko'ndu  vanthirunthaarga'l;  ava'l  naagamaanin  manaivikkup  pa'nividai  seythuko'ndirunthaa'l.  (2iraajaakka’l  5:2)

அவள்  தன்  நாச்சியாரைப்  பார்த்து:  என்  ஆண்டவன்  சமாரியாவிலிருக்கிற  தீர்க்கதரிசியினிடத்தில்  போவாரானால்  நலமாயிருக்கும்;  அவர்  இவருடைய  குஷ்டரோகத்தை  நீக்கிவிடுவார்  என்றாள்.  (2இராஜாக்கள்  5:3)

ava'l  than  naachchiyaaraip  paarththu:  en  aa'ndavan  samaariyaavilirukki’ra  theerkkatharisiyinidaththil  poavaaraanaal  nalamaayirukkum;  avar  ivarudaiya  kushdaroagaththai  neekkividuvaar  en’raa'l.  (2iraajaakka’l  5:3)

அப்பொழுது  அவன்  போய்,  இஸ்ரவேல்  தேசத்துப்  பெண்  இன்ன  இன்ன  பிரகாரமாய்ச்  சொல்லுகிறாள்  என்று  தன்  ஆண்டவனிடத்தில்  அறிவித்தான்.  (2இராஜாக்கள்  5:4)

appozhuthu  avan  poay,  israveal  theasaththup  pe'n  inna  inna  piragaaramaaych  sollugi’raa'l  en’ru  than  aa'ndavanidaththil  a’riviththaan.  (2iraajaakka’l  5:4)

அப்பொழுது  சீரியாவின்  ராஜா:  நல்லது  போகலாம்,  இஸ்ரவேலின்  ராஜாவுக்கு  நிருபம்  தருகிறேன்  என்றான்;  அப்படியே  அவன்  தன்  கையிலே  பத்துத்  தாலந்து  வெள்ளியையும்,  ஆறாயிரம்  சேக்கல்  நிறைபொன்னையும்,  பத்து  மாற்றுவஸ்திரங்களையும்  எடுத்துக்கொண்டுபோய்,  (2இராஜாக்கள்  5:5)

appozhuthu  seeriyaavin  raajaa:  nallathu  poagalaam,  isravealin  raajaavukku  nirubam  tharugi’rean  en’raan;  appadiyea  avan  than  kaiyilea  paththuth  thaalanthu  ve'l'liyaiyum,  aa’raayiram  seakkal  ni’raiponnaiyum,  paththu  maat’ruvasthirangga'laiyum  eduththukko'ndupoay,  (2iraajaakka’l  5:5)

இஸ்ரவேலின்  ராஜாவிடத்தில்  அந்த  நிருபத்தைக்  கொடுத்தான்.  அதிலே:  இந்த  நிருபத்தை  உம்மிடத்தில்  என்  ஊழியக்காரனாகிய  நாகமான்  கொண்டுவருவான்;  நீர்  அவன்  குஷ்டரோகத்தை  நீக்கி  விட  அவனை  உம்மிடத்தில்  அனுப்பியிருக்கிறேன்  என்று  எழுதியிருந்தது.  (2இராஜாக்கள்  5:6)

isravealin  raajaavidaththil  antha  nirubaththaik  koduththaan.  athilea:  intha  nirubaththai  ummidaththil  en  oozhiyakkaaranaagiya  naagamaan  ko'nduvaruvaan;  neer  avan  kushdaroagaththai  neekki  vida  avanai  ummidaththil  anuppiyirukki’rean  en’ru  ezhuthiyirunthathu.  (2iraajaakka’l  5:6)

இஸ்ரவேலின்  ராஜா  அந்த  நிருபத்தை  வாசித்தபோது,  அவன்  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  ஒரு  மனுஷனை  அவன்  குஷ்டரோகத்தினின்று  நீக்கி  விடவேண்டும்  என்று,  அவன்  என்னிடத்தில்  நிருபம்  அனுப்புகிறதற்கு,  கொல்லவும்  உயிர்ப்பிக்கவும்  நான்  தேவனா?  இவன்  என்னை  விரோதிக்கச்  சமயம்  தேடுகிறான்  என்பதைச்  சிந்தித்துப்பாருங்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  5:7)

isravealin  raajaa  antha  nirubaththai  vaasiththapoathu,  avan  than  vasthirangga'laik  kizhiththukko'ndu:  oru  manushanai  avan  kushdaroagaththinin’ru  neekki  vidavea'ndum  en’ru,  avan  ennidaththil  nirubam  anuppugi’ratha’rku,  kollavum  uyirppikkavum  naan  theavanaa?  ivan  ennai  viroathikkach  samayam  theadugi’raan  enbathaich  sinthiththuppaarungga'l  en’raan.  (2iraajaakka’l  5:7)

இஸ்ரவேலின்  ராஜா  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்ட  செய்தியைத்  தேவனுடைய  மனுஷனாகிய  எலிசா  கேட்டபோது,  அவன்:  நீர்  உம்முடைய  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொள்வானேன்?  அவன்  என்னிடத்தில்  வந்து,  இஸ்ரவேலிலே  தீர்க்கதரிசி  உண்டென்பதை  அறிந்துகொள்ளட்டும்  என்று  ராஜாவுக்குச்  சொல்லியனுப்பினான்.  (2இராஜாக்கள்  5:8)

isravealin  raajaa  than  vasthirangga'laik  kizhiththukko'nda  seythiyaith  theavanudaiya  manushanaagiya  elisaa  keattapoathu,  avan:  neer  ummudaiya  vasthirangga'laik  kizhiththukko'lvaanean?  avan  ennidaththil  vanthu,  isravealilea  theerkkatharisi  u'ndenbathai  a’rinthuko'l'lattum  en’ru  raajaavukkuch  solliyanuppinaan.  (2iraajaakka’l  5:8)

அப்படியே  நாகமான்  தன்  குதிரைகளோடும்  தன்  இரதத்தோடும்  வந்து  எலிசாவின்  வாசற்படியிலே  நின்றான்.  (2இராஜாக்கள்  5:9)

appadiyea  naagamaan  than  kuthiraiga'loadum  than  irathaththoadum  vanthu  elisaavin  vaasa’rpadiyilea  nin’raan.  (2iraajaakka’l  5:9)

அப்பொழுது  எலிசா:  அவனிடத்தில்  ஆள்  அனுப்பி,  நீ  போய்,  யோர்தானில்  ஏழுதரம்  ஸ்நானம்பண்ணு;  அப்பொழுது  உன்  மாம்சம்  மாறி,  நீ  சுத்தமாவாய்  என்று  சொல்லச்சொன்னான்.  (2இராஜாக்கள்  5:10)

appozhuthu  elisaa:  avanidaththil  aa'l  anuppi,  nee  poay,  yoarthaanil  eazhutharam  snaanampa'n'nu;  appozhuthu  un  maamsam  maa’ri,  nee  suththamaavaay  en’ru  sollachsonnaan.  (2iraajaakka’l  5:10)

அதற்கு  நாகமான்  கடுங்கோபங்கொண்டு,  புறப்பட்டுப்போய்:  அவன்  வெளியே  வந்து  நின்று,  தன்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுது,  தன்  கையினால்  அந்த  இடத்தைத்  தடவி,  இவ்விதமாய்க்  குஷ்டரோகத்தை  நீக்கிவிடுவான்  என்று  எனக்குள்  நினைத்திருந்தேன்.  (2இராஜாக்கள்  5:11)

atha’rku  naagamaan  kadungkoabangko'ndu,  pu’rappattuppoay:  avan  ve'liyea  vanthu  nin’ru,  than  theavanaagiya  karththarudaiya  naamaththaith  thozhuthu,  than  kaiyinaal  antha  idaththaith  thadavi,  ivvithamaayk  kushdaroagaththai  neekkividuvaan  en’ru  enakku'l  ninaiththirunthean.  (2iraajaakka’l  5:11)

நான்  ஸ்நானம்பண்ணிச்  சுத்தமாகிறதற்கு  இஸ்ரவேலின்  தண்ணீர்கள்  எல்லாவற்றைப்பார்க்கிலும்  தமஸ்குவின்  நதிகளாகிய  ஆப்னாவும்  பர்பாரும்  நல்லதல்லவோ  என்று  சொல்லி,  உக்கிரத்தோடே  திரும்பிப்போனான்.  (2இராஜாக்கள்  5:12)

naan  snaanampa'n'nich  suththamaagi’ratha’rku  isravealin  tha'n'neerga'l  ellaavat’raippaarkkilum  thamaskuvin  nathiga'laagiya  aabnaavum  parpaarum  nallathallavoa  en’ru  solli,  ukkiraththoadea  thirumbippoanaan.  (2iraajaakka’l  5:12)

அவன்  ஊழியக்காரர்  சமீபத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  தகப்பனே,  அந்தத்  தீர்க்கதரிசி  ஒரு  பெரிய  காரியத்தைச்  செய்ய  உமக்குச்  சொல்லியிருந்தால்  அதை  நீர்  செய்வீர்  அல்லவா?  ஸ்நானம்பண்ணும்,  அப்பொழுது  சுத்தமாவீர்  என்று  அவர்  உம்மோடே  சொல்லும்போது,  அதைச்  செய்யவேண்டியது  எத்தனை  அதிகம்  என்று  சொன்னார்கள்.  (2இராஜாக்கள்  5:13)

avan  oozhiyakkaarar  sameebaththil  vanthu,  avanai  noakki:  thagappanea,  anthath  theerkkatharisi  oru  periya  kaariyaththaich  seyya  umakkuch  solliyirunthaal  athai  neer  seyveer  allavaa?  snaanampa'n'num,  appozhuthu  suththamaaveer  en’ru  avar  ummoadea  sollumpoathu,  athaich  seyyavea'ndiyathu  eththanai  athigam  en’ru  sonnaarga'l.  (2iraajaakka’l  5:13)

அப்பொழுது  அவன்  இறங்கி,  தேவனுடைய  மனுஷன்  வார்த்தையின்படியே  யோர்தானில்  ஏழுதரம்  முழுகினபோது,  அவன்  மாம்சம்  ஒரு  சிறுபிள்ளையின்  மாம்சத்தைப்போல  மாறி,  அவன்  சுத்தமானான்.  (2இராஜாக்கள்  5:14)

appozhuthu  avan  i’ranggi,  theavanudaiya  manushan  vaarththaiyinpadiyea  yoarthaanil  eazhutharam  muzhuginapoathu,  avan  maamsam  oru  si’rupi'l'laiyin  maamsaththaippoala  maa’ri,  avan  suththamaanaan.  (2iraajaakka’l  5:14)

அப்பொழுது  அவன்  தன்  கூட்டத்தோடெல்லாம்  தேவனுடைய  மனுஷனிடத்துக்குத்  திரும்பிவந்து,  அவனுக்கு  முன்பாக  நின்று:  இதோ,  இஸ்ரவேலிலிருக்கிற  தேவனைத்தவிரப்  பூமியெங்கும்  வேறே  தேவன்  இல்லை  என்பதை  அறிந்தேன்;  இப்போதும்  உமது  அடியேன்  கையில்  ஒரு  காணிக்கை  வாங்கிக்கொள்ளவேண்டும்  என்றான்.  (2இராஜாக்கள்  5:15)

appozhuthu  avan  than  koottaththoadellaam  theavanudaiya  manushanidaththukkuth  thirumbivanthu,  avanukku  munbaaga  nin’ru:  ithoa,  isravealilirukki’ra  theavanaiththavirap  boomiyenggum  vea’rea  theavan  illai  enbathai  a’rinthean;  ippoathum  umathu  adiyean  kaiyil  oru  kaa'nikkai  vaanggikko'l'lavea'ndum  en’raan.  (2iraajaakka’l  5:15)

அதற்கு  அவன்:  நான்  வாங்குகிறதில்லை  என்று  கர்த்தருக்கு  முன்பாக  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  வாங்கவேண்டும்  என்று  அவனை  வருந்தினாலும்  தட்டுதல்  பண்ணிவிட்டான்.  (2இராஜாக்கள்  5:16)

atha’rku  avan:  naan  vaanggugi’rathillai  en’ru  karththarukku  munbaaga  avarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan;  vaanggavea'ndum  en’ru  avanai  varunthinaalum  thattuthal  pa'n'nivittaan.  (2iraajaakka’l  5:16)

அப்பொழுது  நாகமான்:  ஆனாலும்  இரண்டு  கோவேறு  கழுதைகள்  சுமக்கத்தக்க  இரண்டு  பொதி  மண்  உமது  அடியேனுக்குக்  கட்டளையிடவேண்டும்;  உமது  அடியேன்  இனிக்  கர்த்தருக்கே  அல்லாமல்,  அந்நிய  தேவர்களுக்குச்  சர்வாங்க  தகனத்தையும்  பலியையும்  செலுத்துவதில்லை.  (2இராஜாக்கள்  5:17)

appozhuthu  naagamaan:  aanaalum  ira'ndu  koavea’ru  kazhuthaiga'l  sumakkaththakka  ira'ndu  pothi  ma'n  umathu  adiyeanukkuk  katta'laiyidavea'ndum;  umathu  adiyean  inik  karththarukkea  allaamal,  anniya  theavarga'lukkuch  sarvaangga  thaganaththaiyum  baliyaiyum  seluththuvathillai.  (2iraajaakka’l  5:17)

ஒரு  காரியத்தையே  கர்த்தர்  உமது  அடியேனுக்கு  மன்னிப்பாராக;  என்  ஆண்டவன்  பணிந்துகொள்ள  ரிம்மோன்  கோவிலுக்குள்  பிரவேசிக்கும்போது,  நான்  அவருக்குக்  கைலாகு  கொடுத்து  ரிம்மோன்  கோவிலிலே  பணியவேண்டியதாகும்;  இப்படி  ரிம்மோன்  கோவிலில்  நான்  பணியவேண்டிய  இந்தக்  காரியத்தைக்  கர்த்தர்  உமது  அடியேனுக்கு  மன்னிப்பாராக  என்றான்.  (2இராஜாக்கள்  5:18)

oru  kaariyaththaiyea  karththar  umathu  adiyeanukku  mannippaaraaga;  en  aa'ndavan  pa'ninthuko'l'la  rimmoan  koavilukku'l  piraveasikkumpoathu,  naan  avarukkuk  kailaagu  koduththu  rimmoan  koavililea  pa'niyavea'ndiyathaagum;  ippadi  rimmoan  koavilil  naan  pa'niyavea'ndiya  inthak  kaariyaththaik  karththar  umathu  adiyeanukku  mannippaaraaga  en’raan.  (2iraajaakka’l  5:18)

அதற்கு  அவன்:  சமாதானத்தோடே  போ  என்றான்;  இவன்  புறப்பட்டுக்  கொஞ்சதூரம்  போனபோது,  (2இராஜாக்கள்  5:19)

atha’rku  avan:  samaathaanaththoadea  poa  en’raan;  ivan  pu’rappattuk  kognchathooram  poanapoathu,  (2iraajaakka’l  5:19)

தேவனுடைய  மனுஷனாகிய  எலிசாவின்  வேலைக்காரன்  கேயாசி  என்பவன்,  அந்தச்  சீரியனாகிய  நாகமான்  கொண்டுவந்ததை  என்  ஆண்டவன்  அவன்  கையிலே  வாங்காமல்  அவனை  விட்டுவிட்டார்;  நான்  அவன்  பிறகே  ஓடி,  அவன்  கையிலே  ஏதாகிலும்  வாங்குவேன்  என்று  கர்த்தருடைய  ஜீவன்மேல்  ஆணையிட்டு,  (2இராஜாக்கள்  5:20)

theavanudaiya  manushanaagiya  elisaavin  vealaikkaaran  keayaasi  enbavan,  anthach  seeriyanaagiya  naagamaan  ko'nduvanthathai  en  aa'ndavan  avan  kaiyilea  vaanggaamal  avanai  vittuvittaar;  naan  avan  pi’ragea  oadi,  avan  kaiyilea  eathaagilum  vaangguvean  en’ru  karththarudaiya  jeevanmeal  aa'naiyittu,  (2iraajaakka’l  5:20)

நாகமானைப்  பின்தொடர்ந்தான்;  அவன்  தன்  பிறகே  ஓடிவருகிறதை  நாகமான்  கண்டபோது,  அவனுக்கு  எதிர்கொண்டுபோக  இரதத்திலிருந்து  குதித்து:  சுகசெய்தியா  என்று  கேட்டான்.  (2இராஜாக்கள்  5:21)

naagamaanaip  pinthodarnthaan;  avan  than  pi’ragea  oadivarugi’rathai  naagamaan  ka'ndapoathu,  avanukku  ethirko'ndupoaga  irathaththilirunthu  kuthiththu:  sugaseythiyaa  en’ru  keattaan.  (2iraajaakka’l  5:21)

அதற்கு  அவன்:  சுகசெய்திதான்;  தீர்க்கதரிசிகளின்  புத்திரரில்  இரண்டு  வாலிபர்  இப்பொழுதுதான்  எப்பிராயீம்  மலைத்தேசத்திலிருந்து  என்னிடத்தில்  வந்தார்கள்;  அவர்களுக்கு  ஒரு  தாலந்து  வெள்ளியையும்,  இரண்டு  மாற்றுவஸ்திரங்களையும்  தரவேண்டும்  என்று  கேட்க,  என்  எஜமான்  என்னை  அனுப்பினார்  என்றான்.  (2இராஜாக்கள்  5:22)

atha’rku  avan:  sugaseythithaan;  theerkkatharisiga'lin  puththiraril  ira'ndu  vaalibar  ippozhuthuthaan  eppiraayeem  malaiththeasaththilirunthu  ennidaththil  vanthaarga'l;  avarga'lukku  oru  thaalanthu  ve'l'liyaiyum,  ira'ndu  maat’ruvasthirangga'laiyum  tharavea'ndum  en’ru  keadka,  en  ejamaan  ennai  anuppinaar  en’raan.  (2iraajaakka’l  5:22)

அதற்கு  நாகமான்:  தயவுசெய்து,  இரண்டு  தாலந்தை  வாங்கிக்கொள்  என்று  சொல்லி,  அவனை  வருந்தி,  இரண்டு  தாலந்து  வெள்ளியை  இரண்டு  பைகளில்  இரண்டு  மாற்று  வஸ்திரங்களோடே  கட்டி,  அவனுக்கு  முன்பாகச்  சுமந்துபோக,  தன்  வேலைக்காரரான  இரண்டு  பேர்மேல்  வைத்தான்.  (2இராஜாக்கள்  5:23)

atha’rku  naagamaan:  thayavuseythu,  ira'ndu  thaalanthai  vaanggikko'l  en’ru  solli,  avanai  varunthi,  ira'ndu  thaalanthu  ve'l'liyai  ira'ndu  paiga'lil  ira'ndu  maat’ru  vasthirangga'loadea  katti,  avanukku  munbaagach  sumanthupoaga,  than  vealaikkaararaana  ira'ndu  pearmeal  vaiththaan.  (2iraajaakka’l  5:23)

அவன்  மேட்டண்டைக்கு  வந்தபோது,  அவன்  அதை  அவர்கள்  கையிலிருந்து  வாங்கி,  வீட்டிலே  வைத்து,  அந்த  மனுஷரை  அனுப்பிவிட்டான்;  அவர்கள்  போய்விட்டார்கள்.  (2இராஜாக்கள்  5:24)

avan  meatta'ndaikku  vanthapoathu,  avan  athai  avarga'l  kaiyilirunthu  vaanggi,  veettilea  vaiththu,  antha  manusharai  anuppivittaan;  avarga'l  poayvittaarga'l.  (2iraajaakka’l  5:24)

பின்பு  அவன்  உள்ளே  போய்த்  தன்  எஜமானுக்கு  முன்பாக  நின்றான்;  கேயாசியே,  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  எலிசா  அவனைக்  கேட்டதற்கு,  அவன்:  உமது  அடியான்  எங்கும்  போகவில்லை  என்றான்.  (2இராஜாக்கள்  5:25)

pinbu  avan  u'l'lea  poayth  than  ejamaanukku  munbaaga  nin’raan;  keayaasiyea,  enggeayirunthu  vanthaay  en’ru  elisaa  avanaik  keattatha’rku,  avan:  umathu  adiyaan  enggum  poagavillai  en’raan.  (2iraajaakka’l  5:25)

அப்பொழுது  அவன்  இவனைப்  பார்த்து:  அந்த  மனுஷன்  உனக்கு  எதிர்கொண்டுவரத்  தன்  இரதத்திலிருந்து  இறங்கித்  திரும்புகிறபோது  என்  மனம்  உன்னுடன்கூடச்  செல்லவில்லையா?  பணத்தை  வாங்குகிறதற்கும்,  வஸ்திரங்களையும்  ஒலிவத்தோப்புகளையும்  திராட்சத்தோட்டங்களையும்  ஆடுமாடுகளையும்  வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  வாங்குகிறதற்கும்  இது  காலமா?  (2இராஜாக்கள்  5:26)

appozhuthu  avan  ivanaip  paarththu:  antha  manushan  unakku  ethirko'nduvarath  than  irathaththilirunthu  i’ranggith  thirumbugi’rapoathu  en  manam  unnudankoodach  sellavillaiyaa?  pa'naththai  vaanggugi’ratha’rkum,  vasthirangga'laiyum  olivaththoappuga'laiyum  thiraadchaththoattangga'laiyum  aadumaaduga'laiyum  vealaikkaararaiyum  vealaikkaariga'laiyum  vaanggugi’ratha’rkum  ithu  kaalamaa?  (2iraajaakka’l  5:26)

ஆகையால்  நாகமானின்  குஷ்டரோகம்  உன்னையும்  உன்  சந்ததியாரையும்  என்றைக்கும்  பிடித்திருக்கும்  என்றான்;  உடனே  அவன்  உறைந்த  மழை  நிறமான  குஷ்டரோகியாகி,  அவன்  சமுகத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போனான்.  (2இராஜாக்கள்  5:27)

aagaiyaal  naagamaanin  kushdaroagam  unnaiyum  un  santhathiyaaraiyum  en’raikkum  pidiththirukkum  en’raan;  udanea  avan  u’raintha  mazhai  ni’ramaana  kushdaroagiyaagi,  avan  samugaththai  vittup  pu’rappattuppoanaan.  (2iraajaakka’l  5:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!