Saturday, September 10, 2016

2 Iraajaakka'l 24 | 2 இராஜாக்கள் 24 | 2 Kings 24

அவன்  நாட்களிலே  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  வந்தான்;  யோயாக்கீம்  மூன்று  வருஷம்  அவனைச்  சேவித்து,  பின்பு  அவனுக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணினான்.  (2இராஜாக்கள்  24:1)

avan  naadka'lilea  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  vanthaan;  yoayaakkeem  moon’ru  varusham  avanaich  seaviththu,  pinbu  avanukku  viroathamaagak  kalagampa'n'ninaan.  (2iraajaakka’l  24:1)

அப்பொழுது  கர்த்தர்  கல்தேயரின்  தண்டுகளையும்,  சீரியரின்  தண்டுகளையும்,  மோவாபியரின்  தண்டுகளையும்,  அம்மோன்  புத்திரரின்  தண்டுகளையும்  அவன்மேல்  வரவிட்டார்;  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரரைக்கொண்டு  கர்த்தர்  சொன்ன  வார்த்தையின்படியே  அவர்  அவைகளை  யூதாவை  அழிக்கும்படிக்கு  வரவிட்டார்.  (2இராஜாக்கள்  24:2)

appozhuthu  karththar  kaltheayarin  tha'nduga'laiyum,  seeriyarin  tha'nduga'laiyum,  moavaabiyarin  tha'nduga'laiyum,  ammoan  puththirarin  tha'nduga'laiyum  avanmeal  varavittaar;  theerkkatharisiga'laagiya  thammudaiya  oozhiyakkaararaikko'ndu  karththar  sonna  vaarththaiyinpadiyea  avar  avaiga'lai  yoothaavai  azhikkumpadikku  varavittaar.  (2iraajaakka’l  24:2)

மனாசே  தன்  எல்லாச்  செய்கைகளினாலும்  செய்த  பாவங்களினிமித்தம்  யூதாவைத்  தமது  சமுகத்தை  விட்டு  அகற்றும்படி  கர்த்தருடைய  கட்டளையினால்  அப்படி  நடந்தது.  (2இராஜாக்கள்  24:3)

manaasea  than  ellaach  seygaiga'linaalum  seytha  paavangga'linimiththam  yoothaavaith  thamathu  samugaththai  vittu  agat’rumpadi  karththarudaiya  katta'laiyinaal  appadi  nadanthathu.  (2iraajaakka’l  24:3)

அவன்  சிந்தின  குற்றமற்ற  இரத்தத்திற்காகவும்  எருசலேமைக்  குற்றமற்ற  இரத்தத்தால்  நிரப்பினதற்காகவும்  கர்த்தர்  மன்னிக்கச்  சித்தமில்லாதிருந்தார்.  (2இராஜாக்கள்  24:4)

avan  sinthina  kut’ramat’ra  iraththaththi’rkaagavum  erusaleamaik  kut’ramat’ra  iraththaththaal  nirappinatha’rkaagavum  karththar  mannikkach  siththamillaathirunthaar.  (2iraajaakka’l  24:4)

யோயாக்கீமின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  24:5)

yoayaakkeemin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  24:5)

யோயாக்கீம்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  யோயாக்கீன்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  24:6)

yoayaakkeem  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avan  kumaaranaagiya  yoayaakkeen  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  24:6)

எகிப்தின்  ராஜா  அப்புறம்  தன்  தேசத்திலிருந்து  புறப்பட்டு  வரவில்லை;  எகிப்தின்  நதிதுவக்கி  ஐபிராத்து  நதிமட்டும்  எகிப்தின்  ராஜாவுக்கு  இருந்த  யாவையும்  பாபிலோன்  ராஜா  பிடித்திருந்தான்.  (2இராஜாக்கள்  24:7)

egipthin  raajaa  appu’ram  than  theasaththilirunthu  pu’rappattu  varavillai;  egipthin  nathithuvakki  aipiraaththu  nathimattum  egipthin  raajaavukku  iruntha  yaavaiyum  baabiloan  raajaa  pidiththirunthaan.  (2iraajaakka’l  24:7)

யோயாக்கீன்  ராஜாவாகிறபோது  பதினெட்டு  வயதாயிருந்து,  எருசலேமிலே  மூன்றுமாதம்  அரசாண்டான்;  எருசலேம்  ஊரானாகிய  எல்நாத்தானின்  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  நெகுஸ்தாள்.  (2இராஜாக்கள்  24:8)

yoayaakkeen  raajaavaagi’rapoathu  pathinettu  vayathaayirunthu,  erusaleamilea  moon’rumaatham  arasaa'ndaan;  erusaleam  ooraanaagiya  elnaaththaanin  kumaaraththiyaana  avan  thaayinpear  negusthaa'l.  (2iraajaakka’l  24:8)

அவன்  தன்  தகப்பன்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  24:9)

avan  than  thagappan  seythapadiyellaam  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2iraajaakka’l  24:9)

அக்காலத்திலே  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரின்  சேவகர்  எருசலேமுக்கு  வந்தார்கள்;  நகரம்  முற்றிக்கை  போடப்பட்டது.  (2இராஜாக்கள்  24:10)

akkaalaththilea  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarin  seavagar  erusaleamukku  vanthaarga'l;  nagaram  mut’rikkai  poadappattathu.  (2iraajaakka’l  24:10)

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருடைய  சேவகர்  நகரத்தை  முற்றிக்கை  போடுகையில்  அவன்  தானும்  அதற்கு  விரோதமாய்  வந்தான்.  (2இராஜாக்கள்  24:11)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarudaiya  seavagar  nagaraththai  mut’rikkai  poadugaiyil  avan  thaanum  atha’rku  viroathamaay  vanthaan.  (2iraajaakka’l  24:11)

அப்பொழுது  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீனும்,  அவன்  தாயும்,  அவன்  ஊழியக்காரரும்,  அவன்  பிரபுக்களும்,  பிரதானிகளும்  பாபிலோன்  ராஜாவினிடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்கள்;  அவனைப்  பாபிலோன்  ராஜா  தன்  ஆளுகையின்  எட்டாம்  வருஷத்திலே  பிடித்துக்கொண்டான்.  (2இராஜாக்கள்  24:12)

appozhuthu  yoothaavin  raajaavaagiya  yoayaakkeenum,  avan  thaayum,  avan  oozhiyakkaararum,  avan  pirabukka'lum,  pirathaaniga'lum  baabiloan  raajaavinidaththi’rkup  pu’rappattuppoanaarga'l;  avanaip  baabiloan  raajaa  than  aa'lugaiyin  ettaam  varushaththilea  pidiththukko'ndaan.  (2iraajaakka’l  24:12)

அங்கேயிருந்து  கர்த்தருடைய  ஆலயத்தின்  சகல  பொக்கிஷங்களையும்,  ராஜாவுடைய  அரமனையின்  பொக்கிஷங்களையும்  எடுத்துக்கொண்டு,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  சாலொமோன்  கர்த்தருடைய  ஆலயத்தில்  உண்டாக்கியிருந்த  பொன்  பணிமுட்டுகளையெல்லாம்,  கர்த்தர்  சொல்லியிருந்தபடியே  உடைத்துப்போட்டு,  (2இராஜாக்கள்  24:13)

anggeayirunthu  karththarudaiya  aalayaththin  sagala  pokkishangga'laiyum,  raajaavudaiya  aramanaiyin  pokkishangga'laiyum  eduththukko'ndu,  isravealin  raajaavaagiya  saalomoan  karththarudaiya  aalayaththil  u'ndaakkiyiruntha  pon  pa'nimuttuga'laiyellaam,  karththar  solliyirunthapadiyea  udaiththuppoattu,  (2iraajaakka’l  24:13)

எருசலேமியர்  அனைவரும்  சகல  பிரபுக்களும்  சகல  பராக்கிரமசாலிகளுமாகிய  பதினாயிரம்பேரையும்,  சகல  தச்சரையும்  கொல்லரையும்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்;  தேசத்தில்  ஏழை  ஜனங்களே  அல்லாமல்  வேறொருவரும்  மீதியாயிருக்கவில்லை.  (2இராஜாக்கள்  24:14)

erusaleamiyar  anaivarum  sagala  pirabukka'lum  sagala  baraakkiramasaaliga'lumaagiya  pathinaayirampearaiyum,  sagala  thachcharaiyum  kollaraiyum  si’raipidiththukko'ndupoanaan;  theasaththil  eazhai  janangga'lea  allaamal  vea’roruvarum  meethiyaayirukkavillai.  (2iraajaakka’l  24:14)

அவன்  யோயாக்கீனையும்,  ராஜாவின்  தாயையும்,  ராஜாவின்  ஸ்திரீகளையும்,  அவன்  பிரதானிகளையும்,  தேசத்தின்  பராக்கிரமசாலிகளையும்  எருசலேமிலிருந்து  பாபிலோனுக்குச்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  (2இராஜாக்கள்  24:15)

avan  yoayaakkeenaiyum,  raajaavin  thaayaiyum,  raajaavin  sthireega'laiyum,  avan  pirathaaniga'laiyum,  theasaththin  baraakkiramasaaliga'laiyum  erusaleamilirunthu  baabiloanukkuch  si’raipidiththukko'ndupoanaan.  (2iraajaakka’l  24:15)

இப்படியே  பாபிலோன்  ராஜா  பராக்கிரமசாலிகளான  மனுஷராகிய  ஏழாயிரம்பேரையும்,  தச்சரும்  கொல்லருமாகிய  ஆயிரம்பேரையும்,  யுத்தம்பண்ணத்தக்க  பலசாலிகளையும்  பாபிலோனுக்குச்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  (2இராஜாக்கள்  24:16)

ippadiyea  baabiloan  raajaa  baraakkiramasaaliga'laana  manusharaagiya  eazhaayirampearaiyum,  thachcharum  kollarumaagiya  aayirampearaiyum,  yuththampa'n'naththakka  balasaaliga'laiyum  baabiloanukkuch  si’raipidiththukko'ndupoanaan.  (2iraajaakka’l  24:16)

அவனுக்குப்  பதிலாகப்  பாபிலோன்  ராஜா  அவன்  சிறியதகப்பனாகிய  மத்தனியாவை  ராஜாவாக  வைத்து,  அவனுக்குச்  சிதேக்கியா  என்று  மறுபேரிட்டான்.  (2இராஜாக்கள்  24:17)

avanukkup  bathilaagap  baabiloan  raajaa  avan  si’riyathagappanaagiya  maththaniyaavai  raajaavaaga  vaiththu,  avanukkuch  sitheakkiyaa  en’ru  ma’rupearittaan.  (2iraajaakka’l  24:17)

சிதேக்கியா  ராஜாவாகிறபோது  இருபத்தொரு  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமிலே  அரசாண்டான்;  லிப்னா  ஊரானாகிய  எரேமியாவின்  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  அமுத்தாள்.  (2இராஜாக்கள்  24:18)

sitheakkiyaa  raajaavaagi’rapoathu  irubaththoru  vayathaayirunthu,  pathinoru  varusham  erusaleamilea  arasaa'ndaan;  libnaa  ooraanaagiya  ereamiyaavin  kumaaraththiyaana  avan  thaayinpear  amuththaa'l.  (2iraajaakka’l  24:18)

யோயாக்கீம்  செய்தபடியெல்லாம்  அவனும்  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  24:19)

yoayaakkeem  seythapadiyellaam  avanum  karththarudaiya  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2iraajaakka’l  24:19)

எருசலேமையும்  யூதாவையும்  கர்த்தர்  தம்முடைய  சமுகத்தைவிட்டு  அகற்றித்  தீருமளவும்,  அவைகளின்மேலுள்ள  அவருடைய  கோபத்தினால்  இப்படி  நடந்ததும்  அல்லாமல்,  சிதேக்கியா  பாபிலோனிலே  ராஜாவுக்கு  விரோதமாகக்  கலகமும்பண்ணினான்.  (2இராஜாக்கள்  24:20)

erusaleamaiyum  yoothaavaiyum  karththar  thammudaiya  samugaththaivittu  agat’rith  theeruma'lavum,  avaiga'linmealu'l'la  avarudaiya  koabaththinaal  ippadi  nadanthathum  allaamal,  sitheakkiyaa  baabiloanilea  raajaavukku  viroathamaagak  kalagamumpa'n'ninaan.  (2iraajaakka’l  24:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!