Saturday, September 10, 2016

2 Iraajaakka'l 23 | 2 இராஜாக்கள் 23 | 2 Kings 23

அப்பொழுது  ராஜா  யூதாவிலும்  எருசலேமிலும்  இருந்த  மூப்பரையெல்லாம்  அழைப்பித்தான்;  அவர்கள்  அவனிடத்தில்  கூடினபோது,  (2இராஜாக்கள்  23:1)

appozhuthu  raajaa  yoothaavilum  erusaleamilum  iruntha  moopparaiyellaam  azhaippiththaan;  avarga'l  avanidaththil  koodinapoathu,  (2iraajaakka’l  23:1)

ராஜாவும்,  அவனோடு  யூதாவின்  மனுஷர்  யாவரும்  எருசலேமின்  குடிகள்  அனைவரும்,  ஆசாரியர்களும்,  தீர்க்கதரிசிகளும்,  சிறியோர்துவக்கிப்  பெரியோர்மட்டுமுள்ள  சகலரும்  கர்த்தரின்  ஆலயத்துக்குப்  போனார்கள்;  கர்த்தருடைய  ஆலயத்திலே  கண்டெடுக்கப்பட்ட  உடன்படிக்கை  புஸ்தகத்தின்  வார்த்தைகளையெல்லாம்  அவர்கள்  காதுகள்  கேட்க  வாசித்தான்.  (2இராஜாக்கள்  23:2)

raajaavum,  avanoadu  yoothaavin  manushar  yaavarum  erusaleamin  kudiga'l  anaivarum,  aasaariyarga'lum,  theerkkatharisiga'lum,  si’riyoarthuvakkip  periyoarmattumu'l'la  sagalarum  karththarin  aalayaththukkup  poanaarga'l;  karththarudaiya  aalayaththilea  ka'ndedukkappatta  udanpadikkai  pusthagaththin  vaarththaiga'laiyellaam  avarga'l  kaathuga'l  keadka  vaasiththaan.  (2iraajaakka’l  23:2)

அப்பொழுது  ராஜா,  தூண்  அருகே  நின்று,  கர்த்தரைப்  பின்பற்றி  நடக்கவும்,  அவருடைய  கற்பனைகளையும்  அவருடைய  சாட்சிகளையும்  அவருடைய  கட்டளைகளையும்  முழு  இருதயத்தோடும்  முழு  ஆத்துமாவோடும்  கைக்கொள்ளவும்,  அந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  அந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளை  நிறைவேற்றவும்  கர்த்தருடைய  சந்நிதியில்  உடன்படிக்கைபண்ணினான்;  ஜனங்கள்  எல்லாரும்  உடன்படிக்கைக்கு  உட்பட்டார்கள்.  (2இராஜாக்கள்  23:3)

appozhuthu  raajaa,  thoo'n  arugea  nin’ru,  karththaraip  pinpat’ri  nadakkavum,  avarudaiya  ka’rpanaiga'laiyum  avarudaiya  saadchiga'laiyum  avarudaiya  katta'laiga'laiyum  muzhu  iruthayaththoadum  muzhu  aaththumaavoadum  kaikko'l'lavum,  anthap  pusthagaththil  ezhuthiyirukki’ra  antha  udanpadikkaiyin  vaarththaiga'lai  ni’raiveat’ravum  karththarudaiya  sannithiyil  udanpadikkaipa'n'ninaan;  janangga'l  ellaarum  udanpadikkaikku  udpattaarga'l.  (2iraajaakka’l  23:3)

பின்பு  ராஜா:  பாகாலுக்கும்  விக்கிரகத்தோப்புக்கும்  வானத்தின்  சகல  சேனைகளுக்கும்  பண்ணப்பட்டிருந்த  சகல  பணிமுட்டுகளையும்  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  புறம்பாக்க,  பிரதான  ஆசாரியனாகிய  இல்க்கியாவுக்கும்  இரண்டாம்  வகுப்பிலுள்ள  ஆசாரியர்களுக்கும்  வாசல்  காக்கிறவர்களுக்கும்  கட்டளையிட்டு,  அவைகளை  எருசலேமுக்குப்  புறம்பாய்க்  கீதரோன்  வெளிகளில்  சுட்டெரித்து,  அவைகளின்  சாம்பலைப்  பெத்தேலுக்குக்  கொண்டுபோகப்பண்ணினான்.  (2இராஜாக்கள்  23:4)

pinbu  raajaa:  baagaalukkum  vikkiragaththoappukkum  vaanaththin  sagala  seanaiga'lukkum  pa'n'nappattiruntha  sagala  pa'nimuttuga'laiyum  karththarudaiya  aalayaththilirunthu  pu’rambaakka,  pirathaana  aasaariyanaagiya  ilkkiyaavukkum  ira'ndaam  vaguppilu'l'la  aasaariyarga'lukkum  vaasal  kaakki’ravarga'lukkum  katta'laiyittu,  avaiga'lai  erusaleamukkup  pu’rambaayk  keetharoan  ve'liga'lil  sutteriththu,  avaiga'lin  saambalaip  beththealukkuk  ko'ndupoagappa'n'ninaan.  (2iraajaakka’l  23:4)

யூதாவின்  பட்டணங்களிலும்  எருசலேமைச்  சுற்றிலும்  மேடைகளின்மேல்  தூபங்காட்ட,  யூதாவின்  ராஜாக்கள்  வைத்த  பூஜாசாரிகளையும்,  பாகாலுக்கும்  சூரியனுக்கும்  சந்திரனுக்கும்  கிரகங்களுக்கும்  வானத்தின்  சகல  சேனைகளுக்கும்  தூபங்காட்டினவர்களையும்  அகற்றிவிட்டான்.  (2இராஜாக்கள்  23:5)

yoothaavin  patta'nangga'lilum  erusaleamaich  sut’rilum  meadaiga'linmeal  thoobangkaatta,  yoothaavin  raajaakka'l  vaiththa  poojaasaariga'laiyum,  baagaalukkum  sooriyanukkum  santhiranukkum  kiragangga'lukkum  vaanaththin  sagala  seanaiga'lukkum  thoobangkaattinavarga'laiyum  agat’rivittaan.  (2iraajaakka’l  23:5)

தோப்பு  விக்கிரகத்தைக்  கர்த்தரின்  ஆலயத்திலிருந்து  எருசலேமுக்குப்  புறம்பே  கீதரோன்  ஆற்றிற்குக்  கொண்டுபோய்,  அதைக்  கீதரோன்  ஆற்று  ஓரத்திலே  சுட்டெரித்து,  அதைத்  தூளாக்கி,  அந்தத்  தூளை  ஜனபுத்திரருடைய  பிரேதக்  குழிகளின்மேல்  போடுவித்தான்.  (2இராஜாக்கள்  23:6)

thoappu  vikkiragaththaik  karththarin  aalayaththilirunthu  erusaleamukkup  pu’rambea  keetharoan  aat’ri’rkuk  ko'ndupoay,  athaik  keetharoan  aat’ru  oaraththilea  sutteriththu,  athaith  thoo'laakki,  anthath  thoo'lai  janapuththirarudaiya  pireathak  kuzhiga'linmeal  poaduviththaan.  (2iraajaakka’l  23:6)

கர்த்தரின்  ஆலயத்திற்கு  அருகே  ஸ்திரீகள்  தோப்பு  விக்கிரகத்துக்குக்  கூடாரங்களை  நெய்த  இடத்திலுள்ள  இலச்சையான  புணர்ச்சிக்காரரின்  வீடுகளை  இடித்துப்போட்டான்.  (2இராஜாக்கள்  23:7)

karththarin  aalayaththi’rku  arugea  sthireega'l  thoappu  vikkiragaththukkuk  koodaarangga'lai  neytha  idaththilu'l'la  ilachchaiyaana  pu'narchchikkaararin  veeduga'lai  idiththuppoattaan.  (2iraajaakka’l  23:7)

அவன்  யூதாவின்  பட்டணங்களிலுள்ள  எல்லா  ஆசாரியரையும்  வரச்சொல்லி,  கேபாமுதல்  பெயெர்செபாமட்டும்  ஆசாரியர்கள்  தூபங்காட்டியிருந்த  மேடைகளைத்  தீட்டாக்கி,  ஒலிமுகவாசல்களின்  மேடைகளையும்,  பட்டணத்து  வாசலுக்குப்போகும்  வழிக்கு  இடதுபுறமாயிருக்கிற  பட்டணத்தலைவனாகிய  யோசுவாவின்  வாசற்படியில்  இருந்த  மேடையையும்  இடித்துப்போட்டான்.  (2இராஜாக்கள்  23:8)

avan  yoothaavin  patta'nangga'lilu'l'la  ellaa  aasaariyaraiyum  varachsolli,  keabaamuthal  beyersebaamattum  aasaariyarga'l  thoobangkaattiyiruntha  meadaiga'laith  theettaakki,  olimugavaasalga'lin  meadaiga'laiyum,  patta'naththu  vaasalukkuppoagum  vazhikku  idathupu’ramaayirukki’ra  patta'naththalaivanaagiya  yoasuvaavin  vaasa’rpadiyil  iruntha  meadaiyaiyum  idiththuppoattaan.  (2iraajaakka’l  23:8)

மேடைகளின்  ஆசாரியர்கள்  எருசலேமிலிருக்கிற  கர்த்தருடைய  பலிபீடத்தின்மேல்  பலியிடாமல்,  தங்கள்  சகோதரருக்குள்ளே  புளிப்பில்லாத  அப்பங்களைப்  புசிக்கிறதற்குமாத்திரம்  உத்தாரம்  பெற்றார்கள்.  (2இராஜாக்கள்  23:9)

meadaiga'lin  aasaariyarga'l  erusaleamilirukki’ra  karththarudaiya  balipeedaththinmeal  baliyidaamal,  thangga'l  sagoathararukku'l'lea  pu'lippillaatha  appangga'laip  pusikki’ratha’rkumaaththiram  uththaaram  pet’raarga'l.  (2iraajaakka’l  23:9)

ஒருவனும்  மோளேகுக்கென்று  தன்  குமாரனையாகிலும்  தன்  குமாரத்தியையாகிலும்  தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு,  இன்னோம்  புத்திரரின்  பள்ளத்தாக்கிலிருக்கிற  தோப்பேத்  என்னும்  ஸ்தலத்தையும்  அவன்  தீட்டாக்கி,  (2இராஜாக்கள்  23:10)

oruvanum  moa'leagukken’ru  than  kumaaranaiyaagilum  than  kumaaraththiyaiyaagilum  theekkadakkappa'n'naathapadikku,  innoam  puththirarin  pa'l'laththaakkilirukki’ra  thoappeath  ennum  sthalaththaiyum  avan  theettaakki,  (2iraajaakka’l  23:10)

கர்த்தரின்  ஆலயத்திற்குள்  போகிற  இடந்தொடங்கி,  பட்டணத்துக்குப்  புறம்பே  இருக்கிற  நாத்தான்மெலெக்  என்னும்  பிரதானியின்  அறைவீடுமட்டும்  யூதாவின்  ராஜாக்கள்  சூரியனுக்கென்று  வைத்திருந்த  குதிரைகளை  அகற்றி,  சூரியனின்  இரதங்களை  அக்கினியில்  சுட்டெரித்தான்.  (2இராஜாக்கள்  23:11)

karththarin  aalayaththi’rku'l  poagi’ra  idanthodanggi,  patta'naththukkup  pu’rambea  irukki’ra  naaththaanmelek  ennum  pirathaaniyin  a’raiveedumattum  yoothaavin  raajaakka'l  sooriyanukken’ru  vaiththiruntha  kuthiraiga'lai  agat’ri,  sooriyanin  irathangga'lai  akkiniyil  sutteriththaan.  (2iraajaakka’l  23:11)

யூதாவின்  ராஜாக்கள்  உண்டாக்கினதும்,  ஆகாசுடைய  மேல்வீட்டில்  இருந்ததுமான  பலிபீடங்களையும்,  மனாசே  கர்த்தருடைய  ஆலயத்தின்  இரண்டு  பிராகாரங்களிலும்  உண்டாக்கின  பலிபீடங்களையும்  ராஜா  இடித்து,  அவைகளின்  தூளை  அங்கேயிருந்து  எடுத்துக்  கீதரோன்  ஆற்றில்  கொட்டினான்.  (2இராஜாக்கள்  23:12)

yoothaavin  raajaakka'l  u'ndaakkinathum,  aagaasudaiya  mealveettil  irunthathumaana  balipeedangga'laiyum,  manaasea  karththarudaiya  aalayaththin  ira'ndu  piraagaarangga'lilum  u'ndaakkina  balipeedangga'laiyum  raajaa  idiththu,  avaiga'lin  thoo'lai  anggeayirunthu  eduththuk  keetharoan  aat’ril  kottinaan.  (2iraajaakka’l  23:12)

எருசலேமுக்கு  எதிரே  இருக்கிற  நாசமலையின்  வலதுபுறத்தில்  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  சாலொமோன்  சீதோனியரின்  அருவருப்பாகிய  அஸ்தரோத்திற்கும்,  மோவாபியரின்  அருவருப்பாகிய  காமோசுக்கும்,  அம்மோன்  புத்திரரின்  அருவருப்பாகிய  மில்கோமுக்கும்  கட்டியிருந்த  மேடைகளையும்  ராஜா  தீட்டாக்கி,  (2இராஜாக்கள்  23:13)

erusaleamukku  ethirea  irukki’ra  naasamalaiyin  valathupu’raththil  isravealin  raajaavaagiya  saalomoan  seethoaniyarin  aruvaruppaagiya  astharoaththi’rkum,  moavaabiyarin  aruvaruppaagiya  kaamoasukkum,  ammoan  puththirarin  aruvaruppaagiya  milkoamukkum  kattiyiruntha  meadaiga'laiyum  raajaa  theettaakki,  (2iraajaakka’l  23:13)

சிலைகளை  உடைத்து,  விக்கிரகத்  தோப்புகளை  நிர்மூலமாக்கி,  அவைகளின்  ஸ்தலத்தை  மனுஷரின்  எலும்புகளால்  நிரப்பினான்.  (2இராஜாக்கள்  23:14)

silaiga'lai  udaiththu,  vikkiragath  thoappuga'lai  nirmoolamaakki,  avaiga'lin  sthalaththai  manusharin  elumbuga'laal  nirappinaan.  (2iraajaakka’l  23:14)

இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாம்  பெத்தேலில்  உண்டாக்கியிருந்த  பலிபீடமும்  மேடையும்  ஆகிய  அவ்விரண்டையும்  அவன்  இடித்து,  அந்த  மேடையைச்  சுட்டெரித்துத்  தூளாக்கி,  விக்கிரகத்தோப்பையும்  சுட்டெரித்தான்.  (2இராஜாக்கள்  23:15)

isravealaip  paavagnseyyappa'n'nina  neabaaththin  kumaaranaagiya  yerobeyaam  beththealil  u'ndaakkiyiruntha  balipeedamum  meadaiyum  aagiya  avvira'ndaiyum  avan  idiththu,  antha  meadaiyaich  sutteriththuth  thoo'laakki,  vikkiragaththoappaiyum  sutteriththaan.  (2iraajaakka’l  23:15)

யோசியா  திரும்பிப்பார்க்கிறபோது  அங்கே  அந்த  மலையிலிருக்கிற  கல்லறைகளைக்  கண்டு,  ஆட்களை  அனுப்பி,  அந்தக்  கல்லறைகளிலுள்ள  எலும்புகளை  எடுத்துவரச்செய்து,  இப்படி  நடக்கும்  என்று  தேவனுடைய  மனுஷன்  கூறின  கர்த்தருடைய  வார்த்தையின்படியே,  அவைகளை  அந்தப்  பலிபீடத்தின்மேல்  சுட்டெரித்து  அதைத்  தீட்டாக்கினான்.  (2இராஜாக்கள்  23:16)

yoasiyaa  thirumbippaarkki’rapoathu  anggea  antha  malaiyilirukki’ra  kalla’raiga'laik  ka'ndu,  aadka'lai  anuppi,  anthak  kalla’raiga'lilu'l'la  elumbuga'lai  eduththuvarachseythu,  ippadi  nadakkum  en’ru  theavanudaiya  manushan  koo’rina  karththarudaiya  vaarththaiyinpadiyea,  avaiga'lai  anthap  balipeedaththinmeal  sutteriththu  athaith  theettaakkinaan.  (2iraajaakka’l  23:16)

அப்பொழுது  அவன்:  நான்  காண்கிற  அந்தக்  குறிப்படையாளம்  என்ன  என்று  கேட்டதற்கு,  அந்தப்  பட்டணத்து  மனுஷர்:  அது  யூதாவிலிருந்து  வந்து,  நீர்  செய்த  இந்தக்  கிரியைகளைப்  பெத்தேலின்  பலிபீடத்திற்கு  விரோதமாய்க்  கூறி,  அறிவித்த  தேவனுடைய  மனுஷனின்  கல்லறை  என்றார்கள்.  (2இராஜாக்கள்  23:17)

appozhuthu  avan:  naan  kaa'ngi’ra  anthak  ku’rippadaiyaa'lam  enna  en’ru  keattatha’rku,  anthap  patta'naththu  manushar:  athu  yoothaavilirunthu  vanthu,  neer  seytha  inthak  kiriyaiga'laip  beththealin  balipeedaththi’rku  viroathamaayk  koo’ri,  a’riviththa  theavanudaiya  manushanin  kalla’rai  en’raarga'l.  (2iraajaakka’l  23:17)

அதற்கு  அவன்:  இருக்கட்டும்,  ஒருவனும்  அவன்  எலும்புகளைத்  தொடவேண்டாம்  என்றான்;  அப்படியே  அவன்  எலும்புகளைச்  சமாரியாவிலிருந்து  வந்த  தீர்க்கதரிசியின்  எலும்புகளோடு  விட்டுவிட்டார்கள்.  (2இராஜாக்கள்  23:18)

atha’rku  avan:  irukkattum,  oruvanum  avan  elumbuga'laith  thodavea'ndaam  en’raan;  appadiyea  avan  elumbuga'laich  samaariyaavilirunthu  vantha  theerkkatharisiyin  elumbuga'loadu  vittuvittaarga'l.  (2iraajaakka’l  23:18)

கர்த்தருக்குக்  கோபமுண்டாக்க  இஸ்ரவேலின்  ராஜாக்கள்  சமாரியாவின்  பட்டணங்களில்  உண்டாக்கியிருந்த  மேடைகளின்  கோவில்களையெல்லாம்  யோசியா  தகர்த்து,  பெத்தேலிலே  தான்  செய்த  செய்கைகளின்படியே  அவைகளுக்குச்  செய்து,  (2இராஜாக்கள்  23:19)

karththarukkuk  koabamu'ndaakka  isravealin  raajaakka'l  samaariyaavin  patta'nangga'lil  u'ndaakkiyiruntha  meadaiga'lin  koavilga'laiyellaam  yoasiyaa  thagarththu,  beththealilea  thaan  seytha  seygaiga'linpadiyea  avaiga'lukkuch  seythu,  (2iraajaakka’l  23:19)

அவ்விடங்களில்  இருக்கிற  மேடைகளின்  ஆசாரியர்களையெல்லாம்  பலிபீடங்களின்மேல்  கொன்றுபோட்டு,  அவைகளின்மேல்  மனுஷரின்  எலும்புகளைச்  சுட்டெரித்து,  எருசலேமுக்குத்  திரும்பினான்.  (2இராஜாக்கள்  23:20)

avvidangga'lil  irukki’ra  meadaiga'lin  aasaariyarga'laiyellaam  balipeedangga'linmeal  kon’rupoattu,  avaiga'linmeal  manusharin  elumbuga'laich  sutteriththu,  erusaleamukkuth  thirumbinaan.  (2iraajaakka’l  23:20)

பின்பு  ராஜா:  இந்த  உடன்படிக்கையின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடியே  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரியுங்கள்  என்று  சகல  ஜனங்களுக்கும்  கட்டளையிட்டான்.  (2இராஜாக்கள்  23:21)

pinbu  raajaa:  intha  udanpadikkaiyin  pusthagaththil  ezhuthiyirukki’rapadiyea  ungga'l  theavanaagiya  karththarukkup  paskaavai  aasariyungga'l  en’ru  sagala  janangga'lukkum  katta'laiyittaan.  (2iraajaakka’l  23:21)

இஸ்ரவேலை  நியாயம்  விசாரித்த  நியாயாதிபதிகளின்  நாட்கள்  தொடங்கி,  இஸ்ரவேலின்  ராஜாக்கள்  யூதாவின்  ராஜாக்கள்  ஆகிய  அவர்களுடைய  சகல  நாட்களிலும்  இந்தப்  பஸ்காவைப்போல்  பஸ்கா  ஆசரிக்கப்படவில்லை.  (2இராஜாக்கள்  23:22)

isravealai  niyaayam  visaariththa  niyaayaathibathiga'lin  naadka'l  thodanggi,  isravealin  raajaakka'l  yoothaavin  raajaakka'l  aagiya  avarga'ludaiya  sagala  naadka'lilum  inthap  paskaavaippoal  paskaa  aasarikkappadavillai.  (2iraajaakka’l  23:22)

ராஜாவாகிய  யோசியாவின்  பதினெட்டாம்  வருஷத்திலே  கர்த்தருக்கு  இந்தப்  பஸ்கா  எருசலேமிலே  ஆசரிக்கப்பட்டது.  (2இராஜாக்கள்  23:23)

raajaavaagiya  yoasiyaavin  pathinettaam  varushaththilea  karththarukku  inthap  paskaa  erusaleamilea  aasarikkappattathu.  (2iraajaakka’l  23:23)

ஆசாரியனாகிய  இல்க்கியா  கர்த்தருடைய  ஆலயத்தில்  கண்டெடுத்த  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  நியாயப்பிரமாணத்தின்  வார்த்தைகளை  நிறைவேற்றும்படிக்கு,  யோசியா  அஞ்சனக்காரரையும்,  குறிசொல்லுகிறவர்களையும்,  சுரூபங்களையும்  நரகலான  விக்கிரகங்களையும்,  யூதாதேசத்திலும்  எருசலேமிலும்  காணப்பட்ட  எல்லா  அருவருப்புகளையும்  நிர்மூலமாக்கினான்.  (2இராஜாக்கள்  23:24)

aasaariyanaagiya  ilkkiyaa  karththarudaiya  aalayaththil  ka'ndeduththa  pusthagaththil  ezhuthiyirukki’ra  niyaayappiramaa'naththin  vaarththaiga'lai  ni’raiveat’rumpadikku,  yoasiyaa  agnchanakkaararaiyum,  ku’risollugi’ravarga'laiyum,  suroobangga'laiyum  naragalaana  vikkiragangga'laiyum,  yoothaatheasaththilum  erusaleamilum  kaa'nappatta  ellaa  aruvaruppuga'laiyum  nirmoolamaakkinaan.  (2iraajaakka’l  23:24)

கர்த்தரிடத்துக்குத்  தன்  முழு  இருதயத்தோடும்  தன்  முழு  ஆத்துமாவோடும்  தன்  முழு  பலத்தோடும்  மோசேயின்  நியாயப்பிரமாணத்திற்கு  ஏற்றபடியெல்லாம்  செய்ய  மனதைச்  சாய்த்தான்;  அவனைப்  போலொத்த  ராஜா  அவனுக்குமுன்  இருந்ததுமில்லை,  அவனுக்குப்பின்  எழும்பினதுமில்லை.  (2இராஜாக்கள்  23:25)

karththaridaththukkuth  than  muzhu  iruthayaththoadum  than  muzhu  aaththumaavoadum  than  muzhu  balaththoadum  moaseayin  niyaayappiramaa'naththi’rku  eat’rapadiyellaam  seyya  manathaich  saayththaan;  avanaip  poaloththa  raajaa  avanukkumun  irunthathumillai,  avanukkuppin  ezhumbinathumillai.  (2iraajaakka’l  23:25)

ஆகிலும்,  மனாசே  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கின  சகல  காரியங்களினிமித்தமும்  அவர்  யூதாவின்மேல்  கொண்ட  தம்முடைய  மகா  கோபத்தின்  உக்கிரத்தை  விட்டுத்  திரும்பாமல்:  (2இராஜாக்கள்  23:26)

aagilum,  manaasea  karththarukkuk  koabamu'ndaakkina  sagala  kaariyangga'linimiththamum  avar  yoothaavinmeal  ko'nda  thammudaiya  mahaa  koabaththin  ukkiraththai  vittuth  thirumbaamal:  (2iraajaakka’l  23:26)

நான்  இஸ்ரவேலைத்  தள்ளிவிட்டதுபோல  யூதாவையும்  என்  முகத்தை  விட்டுத்  தள்ளி,  நான்  தெரிந்துகொண்ட  இந்த  எருசலேம்  நகரத்தையும்,  என்  நாமம்  விளங்கும்  என்று  நான்  சொன்ன  ஆலயத்தையும்  வெறுத்துவிடுவேன்  என்று  கர்த்தர்  சொன்னார்.  (2இராஜாக்கள்  23:27)

naan  isravealaith  tha'l'livittathupoala  yoothaavaiyum  en  mugaththai  vittuth  tha'l'li,  naan  therinthuko'nda  intha  erusaleam  nagaraththaiyum,  en  naamam  vi'langgum  en’ru  naan  sonna  aalayaththaiyum  ve’ruththuviduvean  en’ru  karththar  sonnaar.  (2iraajaakka’l  23:27)

யோசியாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  23:28)

yoasiyaavin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  23:28)

அவன்  நாட்களில்  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோன்நேகோ  அசீரியா  ராஜாவுக்கு  விரோதமாய்  ஐபிராத்து  நதிக்குப்  போகிறபோது  ராஜாவாகிய  யோசியா  அவனுக்கு  எதிராகப்  புறப்பட்டான்;  பார்வோன்நேகோ  அவனை  மெகிதோவிலே  கண்டபோது,  அவனைக்  கொன்றுபோட்டான்.  (2இராஜாக்கள்  23:29)

avan  naadka'lil  egipthin  raajaavaagiya  paarvoanneakoa  aseeriyaa  raajaavukku  viroathamaay  aipiraaththu  nathikkup  poagi’rapoathu  raajaavaagiya  yoasiyaa  avanukku  ethiraagap  pu’rappattaan;  paarvoanneakoa  avanai  megithoavilea  ka'ndapoathu,  avanaik  kon’rupoattaan.  (2iraajaakka’l  23:29)

மரணமடைந்த  அவனை  அவனுடைய  ஊழியக்காரர்  ரதத்தின்மேல்  ஏற்றி,  மெகிதோவிலிருந்து  எருசலேமுக்குக்  கொண்டுவந்து,  அவனை  அவன்  கல்லறையில்  அடக்கம்பண்ணினார்கள்;  அப்பொழுது  தேசத்தின்  ஜனங்கள்  யோசியாவின்  குமாரனாகிய  யோவாகாசை  அழைத்து,  அவனை  அபிஷேகம்பண்ணி,  அவன்  தகப்பன்  ஸ்தானத்தில்  அவனை  ராஜாவாக்கினார்கள்.  (2இராஜாக்கள்  23:30)

mara'namadaintha  avanai  avanudaiya  oozhiyakkaarar  rathaththinmeal  eat’ri,  megithoavilirunthu  erusaleamukkuk  ko'nduvanthu,  avanai  avan  kalla’raiyil  adakkampa'n'ninaarga'l;  appozhuthu  theasaththin  janangga'l  yoasiyaavin  kumaaranaagiya  yoavaagaasai  azhaiththu,  avanai  abisheagampa'n'ni,  avan  thagappan  sthaanaththil  avanai  raajaavaakkinaarga'l.  (2iraajaakka’l  23:30)

யோவாகாஸ்  ராஜாவாகிறபோது  இருபத்துமூன்று  வயதாயிருந்து,  மூன்றுமாதம்  எருசலேமில்  அரசாண்டான்;  லிப்னா  ஊரானாகிய  எரேமியாவின்  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  அமுத்தாள்.  (2இராஜாக்கள்  23:31)

yoavaagaas  raajaavaagi’rapoathu  irubaththumoon’ru  vayathaayirunthu,  moon’rumaatham  erusaleamil  arasaa'ndaan;  libnaa  ooraanaagiya  ereamiyaavin  kumaaraththiyaana  avan  thaayinpear  amuththaa'l.  (2iraajaakka’l  23:31)

அவன்  தன்  பிதாக்கள்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  23:32)

avan  than  pithaakka'l  seythapadiyellaam  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2iraajaakka’l  23:32)

அவன்  எருசலேமில்  அரசாளாதபடிக்கு,  பார்வோன்நேகோ  அவனை  ஆமாத்  தேசமான  ரிப்லாவிலே  பிடித்துக்  கட்டுவித்து,  தேசத்தின்மேல்  நூறு  தாலந்து  வெள்ளியையும்  ஒரு  தாலந்து  பொன்னையும்  அபராதமாகச்  சுமத்தி,  (2இராஜாக்கள்  23:33)

avan  erusaleamil  arasaa'laathapadikku,  paarvoanneakoa  avanai  aamaath  theasamaana  riblaavilea  pidiththuk  kattuviththu,  theasaththinmeal  noo’ru  thaalanthu  ve'l'liyaiyum  oru  thaalanthu  ponnaiyum  abaraathamaagach  sumaththi,  (2iraajaakka’l  23:33)

யோசியாவின்  குமாரனாகிய  எலியாக்கீமை  அவன்  தகப்பனாகிய  யோசியாவின்  ஸ்தானத்தில்  ராஜாவாக  வைத்து,  அவன்  பேரை  யோயாக்கீம்  என்று  மாற்றி,  யோவாகாசைக்  கொண்டுபோய்விட்டான்;  இவன்  எகிப்திலே  போய்  அங்கே  மரணமடைந்தான்.  (2இராஜாக்கள்  23:34)

yoasiyaavin  kumaaranaagiya  eliyaakkeemai  avan  thagappanaagiya  yoasiyaavin  sthaanaththil  raajaavaaga  vaiththu,  avan  pearai  yoayaakkeem  en’ru  maat’ri,  yoavaagaasaik  ko'ndupoayvittaan;  ivan  egipthilea  poay  anggea  mara'namadainthaan.  (2iraajaakka’l  23:34)

அந்த  வெள்ளியையும்  பொன்னையும்  யோயாக்கீம்  பார்வோனுக்குக்  கொடுத்தான்;  ஆனாலும்  பார்வோனுடைய  கட்டளையின்படி  அந்தப்  பணத்தைக்  கொடுக்கும்படி  அவன்  தேசத்தை  மதிப்பிட்டு,  அவரவர்  மதிப்பின்படி  அந்த  வெள்ளியையும்  பொன்னையும்  பார்வோன்  நேகோவுக்குக்  கொடுக்கத்தக்கதாகத்  தேசத்து  ஜனங்களின்  கையிலே  தண்டினான்.  (2இராஜாக்கள்  23:35)

antha  ve'l'liyaiyum  ponnaiyum  yoayaakkeem  paarvoanukkuk  koduththaan;  aanaalum  paarvoanudaiya  katta'laiyinpadi  anthap  pa'naththaik  kodukkumpadi  avan  theasaththai  mathippittu,  avaravar  mathippinpadi  antha  ve'l'liyaiyum  ponnaiyum  paarvoan  neakoavukkuk  kodukkaththakkathaagath  theasaththu  janangga'lin  kaiyilea  tha'ndinaan.  (2iraajaakka’l  23:35)

யோயாக்கீம்  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  ரூமா  ஊரானாகிய  பெதாயாமின்  குமாரத்தியாகிய  அவன்  தாயின்பேர்  செபுதாள்.  (2இராஜாக்கள்  23:36)

yoayaakkeem  raajaavaagi’rapoathu  irubaththainthu  vayathaayirunthu,  pathinoru  varusham  erusaleamil  arasaa'ndaan;  roomaa  ooraanaagiya  pethaayaamin  kumaaraththiyaagiya  avan  thaayinpear  sebuthaa'l.  (2iraajaakka’l  23:36)

அவன்  தன்  பிதாக்கள்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  23:37)

avan  than  pithaakka'l  seythapadiyellaam  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (2iraajaakka’l  23:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!