Saturday, September 10, 2016

2 Iraajaakka'l 21 | 2 இராஜாக்கள் 21 | 2 Kings 21

மனாசே  ராஜாவாகிறபோது  பன்னிரண்டு  வயதாயிருந்து,  ஐம்பத்தைந்து  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  அவன்  தாயின்பேர்  எப்சிபாள்.  (2இராஜாக்கள்  21:1)

manaasea  raajaavaagi’rapoathu  pannira'ndu  vayathaayirunthu,  aimbaththainthu  varusham  erusaleamil  arasaa'ndaan;  avan  thaayinpear  epsibaa'l.  (2iraajaakka’l  21:1)

கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியே,  அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  (2இராஜாக்கள்  21:2)

karththar  israveal  puththirarukku  munbaagath  thuraththina  jaathiga'ludaiya  aruvaruppuga'linpadiyea,  avan  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  (2iraajaakka’l  21:2)

தன்  தகப்பனாகிய  எசேக்கியா  இடித்துப்போட்ட  மேடைகளைத்  திரும்பவும்  கட்டி,  பாகாலுக்குப்  பலிபீடங்களை  எடுப்பித்து,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஆகாப்  செய்ததுபோல  விக்கிரகத்தோப்பை  உண்டாக்கி,  வானத்தின்  சேனைகளையெல்லாம்  பணிந்துகொண்டு  அவைகளைச்  சேவித்தான்.  (2இராஜாக்கள்  21:3)

than  thagappanaagiya  eseakkiyaa  idiththuppoatta  meadaiga'laith  thirumbavum  katti,  baagaalukkup  balipeedangga'lai  eduppiththu,  isravealin  raajaavaagiya  aagaab  seythathupoala  vikkiragaththoappai  u'ndaakki,  vaanaththin  seanaiga'laiyellaam  pa'ninthuko'ndu  avaiga'laich  seaviththaan.  (2iraajaakka’l  21:3)

எருசலேமிலே  என்  நாமத்தை  விளங்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லிக்  குறித்த  கர்த்தருடைய  ஆலயத்திலே  அவன்  பலிபீடங்களைக்  கட்டி,  (2இராஜாக்கள்  21:4)

erusaleamilea  en  naamaththai  vi'langgappa'n'nuvean  en’ru  karththar  sollik  ku’riththa  karththarudaiya  aalayaththilea  avan  balipeedangga'laik  katti,  (2iraajaakka’l  21:4)

கர்த்தருடைய  ஆலயத்தின்  இரண்டு  பிராகாரங்களிலும்  வானத்தின்  சேனைகளுக்கெல்லாம்  பலிபீடங்களைக்  கட்டி,  (2இராஜாக்கள்  21:5)

karththarudaiya  aalayaththin  ira'ndu  piraagaarangga'lilum  vaanaththin  seanaiga'lukkellaam  balipeedangga'laik  katti,  (2iraajaakka’l  21:5)

தன்  குமாரனைத்  தீமிதிக்கப்பண்ணி,  நாள்பார்க்கிறவனும்  நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து,  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  வைத்து,  கர்த்தருக்குக்  கோபமுண்டாக  அவர்  பார்வைக்குப்  பொல்லாப்பானதை  மிகுதியாய்ச்  செய்தான்.  (2இராஜாக்கள்  21:6)

than  kumaaranaith  theemithikkappa'n'ni,  naa'lpaarkki’ravanum  nimiththampaarkki’ravanumaayirunthu,  agnchanam  paarkki’ravarga'laiyum  ku’risollugi’ravarga'laiyum  vaiththu,  karththarukkuk  koabamu'ndaaga  avar  paarvaikkup  pollaappaanathai  miguthiyaaych  seythaan.  (2iraajaakka’l  21:6)

இந்த  ஆலயத்திலும்,  நான்  இஸ்ரவேலின்  சகல  கோத்திரங்களிலுமிருந்து  தெரிந்துகொண்ட  எருசலேமிலும்,  என்  நாமத்தை  என்றைக்கும்  விளங்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  தாவீதோடும்  அவன்  குமாரனாகிய  சாலொமோனோடும்  சொல்லிக்  குறித்த  ஆலயத்திலே  அவன்  பண்ணின  தோப்புவிக்கிரகத்தை  வைத்தான்.  (2இராஜாக்கள்  21:7)

intha  aalayaththilum,  naan  isravealin  sagala  koaththirangga'lilumirunthu  therinthuko'nda  erusaleamilum,  en  naamaththai  en’raikkum  vi'langgappa'n'nuvean  en’ru  karththar  thaaveethoadum  avan  kumaaranaagiya  saalomoanoadum  sollik  ku’riththa  aalayaththilea  avan  pa'n'nina  thoappuvikkiragaththai  vaiththaan.  (2iraajaakka’l  21:7)

நான்  அவர்களுக்குக்  கற்பித்த  எல்லாவற்றின்படியேயும்,  என்  தாசனாகிய  மோசே  அவர்களுக்குக்  கற்பித்த  எல்லா  நியாயப்பிரமாணத்தின்படியேயும்  செய்ய  ஜாக்கிரதையாய்  இருந்தார்களேயானால்,  நான்  இனி  இஸ்ரவேலின்  காலை  அவர்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தேசத்தைவிட்டு  அலையப்பண்ணுவதில்லை  என்று  சொல்லியிருந்தார்.  (2இராஜாக்கள்  21:8)

naan  avarga'lukkuk  ka’rpiththa  ellaavat’rinpadiyeayum,  en  thaasanaagiya  moasea  avarga'lukkuk  ka’rpiththa  ellaa  niyaayappiramaa'naththinpadiyeayum  seyya  jaakkirathaiyaay  irunthaarga'leayaanaal,  naan  ini  isravealin  kaalai  avarga'l  pithaakka'lukkuk  koduththa  theasaththaivittu  alaiyappa'n'nuvathillai  en’ru  solliyirunthaar.  (2iraajaakka’l  21:8)

ஆனாலும்  அவர்கள்  கேளாதேபோனார்கள்;  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாக  அழித்த  ஜாதிகள்  செய்த  பொல்லாப்பைப்பார்க்கிலும்  அதிகமாய்ச்  செய்ய  மனாசே  அவர்களை  ஏவிவிட்டான்.  (2இராஜாக்கள்  21:9)

aanaalum  avarga'l  kea'laatheapoanaarga'l;  karththar  israveal  puththirarukku  munbaaga  azhiththa  jaathiga'l  seytha  pollaappaippaarkkilum  athigamaaych  seyya  manaasea  avarga'lai  eavivittaan.  (2iraajaakka’l  21:9)

ஆகையால்  கர்த்தர்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரரைக்கொண்டு  உரைத்தது:  (2இராஜாக்கள்  21:10)

aagaiyaal  karththar  theerkkatharisiga'laagiya  thammudaiya  oozhiyakkaararaikko'ndu  uraiththathu:  (2iraajaakka’l  21:10)

யூதாவின்  ராஜாவாகிய  மனாசே  தனக்கு  முன்னிருந்த  எமோரியர்  செய்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  கேடாக  இந்த  அருவருப்புகளைச்  செய்து,  தன்  நரகலான  விக்கிரகங்களால்  யூதாவையும்  பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,  (2இராஜாக்கள்  21:11)

yoothaavin  raajaavaagiya  manaasea  thanakku  munniruntha  emoariyar  seytha  ellaavat’raippaarkkilum  keadaaga  intha  aruvaruppuga'laich  seythu,  than  naragalaana  vikkiragangga'laal  yoothaavaiyum  paavagnseyyappa'n'ninapadiyinaal,  (2iraajaakka’l  21:11)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  கேட்கப்போகிற  யாவருடைய  இரண்டு  காதுகளிலும்  அது  தொனித்துக்கொண்டிருக்கும்படியான  பொல்லாப்பை  நான்  எருசலேமின்மேலும்  யூதாவின்மேலும்  வரப்பண்ணி,  (2இராஜாக்கள்  21:12)

isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  keadkappoagi’ra  yaavarudaiya  ira'ndu  kaathuga'lilum  athu  thoniththukko'ndirukkumpadiyaana  pollaappai  naan  erusaleaminmealum  yoothaavinmealum  varappa'n'ni,  (2iraajaakka’l  21:12)

எருசலேமின்மேல்  சமாரியாவின்  மட்டநூலையும்  ஆகாப்  வீட்டின்  தூக்குநூலையும்  பிடிப்பேன்;  ஒருவன்  ஒரு  தாலத்தைத்  துடைத்துப்  பின்பு  அதைக்  கவிழ்த்துவைக்கிறதுபோல  எருசலேமைத்  துடைத்துவிடுவேன்.  (2இராஜாக்கள்  21:13)

erusaleaminmeal  samaariyaavin  mattanoolaiyum  aagaab  veettin  thookkunoolaiyum  pidippean;  oruvan  oru  thaalaththaith  thudaiththup  pinbu  athaik  kavizhththuvaikki’rathupoala  erusaleamaith  thudaiththuviduvean.  (2iraajaakka’l  21:13)

அவர்கள்  தங்கள்  பிதாக்கள்  எகிப்திலிருந்து  புறப்பட்ட  நாள்முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  எனக்குக்  கோபம்  மூட்டிவந்தபடியினால்,  என்  சுதந்தரத்தில்  மீதியானதைக்  கைவிட்டு,  அவர்கள்  பகைஞரின்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுப்பேன்.  (2இராஜாக்கள்  21:14)

avarga'l  thangga'l  pithaakka'l  egipthilirunthu  pu’rappatta  naa'lmutha’rko'ndu  innaa'lvaraikkum  en  paarvaikkup  pollaappaanathaich  seythu,  enakkuk  koabam  moottivanthapadiyinaal,  en  suthantharaththil  meethiyaanathaik  kaivittu,  avarga'l  pagaignarin  kaiyil  avarga'lai  oppukkoduppean.  (2iraajaakka’l  21:14)

தங்கள்  பகைஞருக்கெல்லாம்  கொள்ளையும்  சூறையுமாய்ப்  போவார்கள்  என்றார்.  (2இராஜாக்கள்  21:15)

thangga'l  pagaignarukkellaam  ko'l'laiyum  soo’raiyumaayp  poavaarga'l  en’raar.  (2iraajaakka’l  21:15)

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்யும்படியாக,  மனாசே  யூதாவைப்  பாவஞ்செய்யப்பண்ணின  அந்தப்  பாவமும்  தவிர,  அவன்  எருசலேமை  நாலு  மூலைவரையும்  இரத்தப்பழிகளால்  நிரப்பத்தக்கதாய்,  குற்றமில்லாத  இரத்தத்தையும்  மிகுதியாகச்  சிந்தினான்.  (2இராஜாக்கள்  21:16)

karththarin  paarvaikkup  pollaappaanathaich  seyyumpadiyaaga,  manaasea  yoothaavaip  paavagnseyyappa'n'nina  anthap  paavamum  thavira,  avan  erusaleamai  naalu  moolaivaraiyum  iraththappazhiga'laal  nirappaththakkathaay,  kut’ramillaatha  iraththaththaiyum  miguthiyaagach  sinthinaan.  (2iraajaakka’l  21:16)

மனாசேயின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  செய்த  பாவமும்  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  21:17)

manaaseayin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  avan  seytha  paavamum  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  21:17)

மனாசே  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  ஊசாவின்  தோட்டமாகிய  தன்  அரமனைத்  தோட்டத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  ஆமோன்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  21:18)

manaasea  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avan  oosaavin  thoattamaagiya  than  aramanaith  thoattaththil  adakkampa'n'nappattaan;  avan  sthaanaththilea  avan  kumaaranaagiya  aamoan  raajaavaanaan.  (2iraajaakka’l  21:18)

ஆமோன்  ராஜாவானபோது  இருபத்திரண்டு  வயதாயிருந்து,  இரண்டு  வருஷம்  எருசலேமில்  அரசாண்டான்;  யோத்பா  ஊரானாகிய  ஆரூத்சின்  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  மெசுல்லேமேத்.  (2இராஜாக்கள்  21:19)

aamoan  raajaavaanapoathu  irubaththira'ndu  vayathaayirunthu,  ira'ndu  varusham  erusaleamil  arasaa'ndaan;  yoathbaa  ooraanaagiya  aaroothsin  kumaaraththiyaana  avan  thaayinpear  mesulleameath.  (2iraajaakka’l  21:19)

அவன்  தன்  தகப்பனாகிய  மனாசே  செய்ததுபோல,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  (2இராஜாக்கள்  21:20)

avan  than  thagappanaagiya  manaasea  seythathupoala,  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  (2iraajaakka’l  21:20)

தன்  தகப்பன்  நடந்த  எல்லா  வழியிலும்  நடந்து,  தன்  தகப்பன்  சேவித்த  நரகலான  விக்கிரகங்களைச்  சேவித்து  அவைகளைப்  பணிந்துகொண்டு,  (2இராஜாக்கள்  21:21)

than  thagappan  nadantha  ellaa  vazhiyilum  nadanthu,  than  thagappan  seaviththa  naragalaana  vikkiragangga'laich  seaviththu  avaiga'laip  pa'ninthuko'ndu,  (2iraajaakka’l  21:21)

கர்த்தரின்  வழியிலே  நடவாமல்,  தன்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரை  விட்டுவிட்டான்.  (2இராஜாக்கள்  21:22)

karththarin  vazhiyilea  nadavaamal,  than  pithaakka'lin  theavanaagiya  karththarai  vittuvittaan.  (2iraajaakka’l  21:22)

ஆமோனின்  ஊழியக்காரர்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  ராஜாவை  அவன்  அரமனையிலே  கொன்றுபோட்டார்கள்.  (2இராஜாக்கள்  21:23)

aamoanin  oozhiyakkaarar  avanukku  viroathamaayk  kattuppaadupa'n'ni,  raajaavai  avan  aramanaiyilea  kon’rupoattaarga'l.  (2iraajaakka’l  21:23)

அதினால்  தேசத்து  ஜனங்கள்  ராஜாவாகிய  ஆமோனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம்  வெட்டிப்போட்டு,  அவன்  குமாரனாகிய  யோசியாவை  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவாக்கினார்கள்.  (2இராஜாக்கள்  21:24)

athinaal  theasaththu  janangga'l  raajaavaagiya  aamoanukku  viroathamaayk  kattuppaadupa'n'ninavarga'laiyellaam  vettippoattu,  avan  kumaaranaagiya  yoasiyaavai  avan  sthaanaththil  raajaavaakkinaarga'l.  (2iraajaakka’l  21:24)

ஆமோன்  செய்த  மற்ற  வர்த்தமானங்கள்  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  21:25)

aamoan  seytha  mat’ra  varththamaanangga'l  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  21:25)

அவன்  ஊசாவின்  தோட்டத்திலுள்ள  அவனுடைய  கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  யோசியா  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  21:26)

avan  oosaavin  thoattaththilu'l'la  avanudaiya  kalla’raiyil  adakkampa'n'nappattaan;  avan  sthaanaththilea  avan  kumaaranaagiya  yoasiyaa  raajaavaanaan.  (2iraajaakka’l  21:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!