Saturday, September 10, 2016

2 Iraajaakka'l 20 | 2 இராஜாக்கள் 20 | 2 Kings 20

அந்நாட்களில்  எசேக்கியா  வியாதிப்பட்டு  மரணத்துக்கு  ஏதுவாயிருந்தான்;  அப்பொழுது  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  என்னும்  தீர்க்கதரிசி  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  உமது  வீட்டுக்காரியத்தை  ஒழுங்குப்படுத்தும்;  நீர்  பிழைக்கமாட்டீர்,  மரித்துப்போவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (2இராஜாக்கள்  20:1)

annaadka'lil  eseakkiyaa  viyaathippattu  mara'naththukku  eathuvaayirunthaan;  appozhuthu  aamoathsin  kumaaranaagiya  easaayaa  ennum  theerkkatharisi  avanidaththil  vanthu,  avanai  noakki:  neer  umathu  veettukkaariyaththai  ozhungguppaduththum;  neer  pizhaikkamaatteer,  mariththuppoaveer  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (2iraajaakka’l  20:1)

அப்பொழுது  எசேக்கியா  தன்  முகத்தைச்  சுவர்ப்புறமாகத்  திருப்பிக்கொண்டு,  கர்த்தரை  நோக்கி:  (2இராஜாக்கள்  20:2)

appozhuthu  eseakkiyaa  than  mugaththaich  suvarppu’ramaagath  thiruppikko'ndu,  karththarai  noakki:  (2iraajaakka’l  20:2)

  கர்த்தாவே,  நான்  உமக்கு  முன்பாக  உண்மையும்  மன  உத்தமமுமாய்  நடந்து,  உமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்தேன்  என்பதை  நினைத்தருளும்  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  எசேக்கியா  மிகவும்  அழுதான்.  (2இராஜாக்கள்  20:3)

aa  karththaavea,  naan  umakku  munbaaga  u'nmaiyum  mana  uththamamumaay  nadanthu,  umathu  paarvaikku  nalamaanathaich  seythean  enbathai  ninaiththaru'lum  en’ru  vi'n'nappampa'n'ninaan.  eseakkiyaa  migavum  azhuthaan.  (2iraajaakka’l  20:3)

ஏசாயா  பாதி  முற்றத்தைவிட்டு  அப்புறம்  போகிறதற்குமுன்னே,  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாகி,  அவர்  சொன்னது:  (2இராஜாக்கள்  20:4)

easaayaa  paathi  mut’raththaivittu  appu’ram  poagi’ratha’rkumunnea,  karththarudaiya  vaarththai  avanukku  u'ndaagi,  avar  sonnathu:  (2iraajaakka’l  20:4)

நீ  திரும்பிப்போய்,  என்  ஜனத்தின்  அதிபதியாகிய  எசேக்கியாவை  நோக்கி:  உன்  தகப்பனாகிய  தாவீதின்  தேவனாயிருக்கிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டேன்,  உன்  கண்ணீரைக்  கண்டேன்;  இதோ,  நான்  உன்னைக்  குணமாக்குவேன்;  மூன்றாம்  நாளிலே  நீ  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போவாய்.  (2இராஜாக்கள்  20:5)

nee  thirumbippoay,  en  janaththin  athibathiyaagiya  eseakkiyaavai  noakki:  un  thagappanaagiya  thaaveethin  theavanaayirukki’ra  karththar  sollugi’rathu  ennaven’raal:  un  vi'n'nappaththaik  keattean,  un  ka'n'neeraik  ka'ndean;  ithoa,  naan  unnaik  ku'namaakkuvean;  moon’raam  naa'lilea  nee  karththarudaiya  aalayaththukkup  poavaay.  (2iraajaakka’l  20:5)

உன்  நாட்களோடே  பதினைந்து  வருஷங்களைக்  கூட்டுவேன்;  உன்னையும்  இந்த  நகரத்தையும்  அசீரியா  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்து,  என்  நிமித்தமும்  என்  தாசனாகிய  தாவீதின்  நிமித்தமும்  இந்த  நகரத்துக்கு  ஆதரவாய்  இருப்பேன்  என்று  சொல்  என்றார்.  (2இராஜாக்கள்  20:6)

un  naadka'loadea  pathinainthu  varushangga'laik  koottuvean;  unnaiyum  intha  nagaraththaiyum  aseeriyaa  raajaavin  kaikkuth  thappuviththu,  en  nimiththamum  en  thaasanaagiya  thaaveethin  nimiththamum  intha  nagaraththukku  aatharavaay  iruppean  en’ru  sol  en’raar.  (2iraajaakka’l  20:6)

பின்பு  ஏசாயா:  அத்திப்பழத்து  அடையைக்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அதை  அவர்கள்  கொண்டுவந்து,  பிளவையின்மேல்  பற்றுப்போட்டபோது  அவன்  பிழைத்தான்.  (2இராஜாக்கள்  20:7)

pinbu  easaayaa:  aththippazhaththu  adaiyaik  ko'nduvaarungga'l  en’raan;  athai  avarga'l  ko'nduvanthu,  pi'lavaiyinmeal  pat’ruppoattapoathu  avan  pizhaiththaan.  (2iraajaakka’l  20:7)

எசேக்கியா  ஏசாயாவை  நோக்கி:  கர்த்தர்  என்னைக்  குணமாக்குவதற்கும்,  மூன்றாம்  நாளிலே  நான்  கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போவதற்கும்  அடையாளம்  என்ன  என்றான்.  (2இராஜாக்கள்  20:8)

eseakkiyaa  easaayaavai  noakki:  karththar  ennaik  ku'namaakkuvatha’rkum,  moon’raam  naa'lilea  naan  karththarudaiya  aalayaththi’rkup  poavatha’rkum  adaiyaa'lam  enna  en’raan.  (2iraajaakka’l  20:8)

அதற்கு  ஏசாயா:  கர்த்தர்  தாம்  சொன்ன  வார்த்தையின்படியே  செய்வாரென்பதற்கு,  கர்த்தரால்  உனக்கு  உண்டாகும்  அடையாளமாகச்  சாயை  பத்துப்பாகை  முன்னிட்டுப்  போகவேண்டுமோ,  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்ப  வேண்டுமோ  என்று  கேட்டான்.  (2இராஜாக்கள்  20:9)

atha’rku  easaayaa:  karththar  thaam  sonna  vaarththaiyinpadiyea  seyvaarenbatha’rku,  karththaraal  unakku  u'ndaagum  adaiyaa'lamaagach  saayai  paththuppaagai  munnittup  poagavea'ndumoa,  paththuppaagai  pinnittuth  thirumba  vea'ndumoa  en’ru  keattaan.  (2iraajaakka’l  20:9)

அதற்கு  எசேக்கியா:  சாயை  பத்துப்பாகை  முன்னிட்டுப்போகிறது  லேசான  காரியம்;  அப்படி  வேண்டாம்;  சாயை  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்பவேண்டும்  என்றான்.  (2இராஜாக்கள்  20:10)

atha’rku  eseakkiyaa:  saayai  paththuppaagai  munnittuppoagi’rathu  leasaana  kaariyam;  appadi  vea'ndaam;  saayai  paththuppaagai  pinnittuth  thirumbavea'ndum  en’raan.  (2iraajaakka’l  20:10)

அப்பொழுது  ஏசாயா  தீர்க்கதரிசி  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகையில்,  அவர்  ஆகாசுடைய  சூரிய  கடியாரத்தில்  பாகைக்குப்  பாகை  முன்போன  சாயை  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்பும்படி  செய்தார்.  (2இராஜாக்கள்  20:11)

appozhuthu  easaayaa  theerkkatharisi  karththarai  noakkik  kooppidugaiyil,  avar  aagaasudaiya  sooriya  kadiyaaraththil  paagaikkup  paagai  munpoana  saayai  paththuppaagai  pinnittuth  thirumbumpadi  seythaar.  (2iraajaakka’l  20:11)

அக்காலத்திலே  பலாதானின்  குமாரனாகிய  பெரோதாக்பலாதான்  என்னும்  பாபிலோனின்  ராஜா  எசேக்கியா  வியாதிப்பட்டிருக்கிறதைக்  கேட்டு,  அவனிடத்துக்கு  நிருபங்களையும்  வெகுமானத்தையும்  அனுப்பினான்.  (2இராஜாக்கள்  20:12)

akkaalaththilea  balaathaanin  kumaaranaagiya  beroathaakbalaathaan  ennum  baabiloanin  raajaa  eseakkiyaa  viyaathippattirukki’rathaik  keattu,  avanidaththukku  nirubangga'laiyum  vegumaanaththaiyum  anuppinaan.  (2iraajaakka’l  20:12)

எசேக்கியா  அவர்களை  அங்கிகரித்து,  பின்பு  அவர்களுக்குத்  தன்  பொக்கிஷசாலை  அனைத்தையும்,  வெள்ளியையும்,  பொன்னையும்,  கந்தவர்க்கங்களையும்,  நல்ல  பரிமளதைலத்தையும்,  தன்  ஆயுதசாலை  அனைத்தையும்  தன்  பொக்கிஷசாலைகளிலுள்ள  எல்லாவற்றையும்  காண்பித்தான்;  தன்  அரமனையிலும்  தன்  ராஜ்யத்தில்  எங்கும்  எசேக்கியா  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை.  (2இராஜாக்கள்  20:13)

eseakkiyaa  avarga'lai  anggigariththu,  pinbu  avarga'lukkuth  than  pokkishasaalai  anaiththaiyum,  ve'l'liyaiyum,  ponnaiyum,  kanthavarkkangga'laiyum,  nalla  parima'lathailaththaiyum,  than  aayuthasaalai  anaiththaiyum  than  pokkishasaalaiga'lilu'l'la  ellaavat’raiyum  kaa'nbiththaan;  than  aramanaiyilum  than  raajyaththil  enggum  eseakkiyaa  avarga'lukkuk  kaa'nbiyaatha  poru'l  on’rum  illai.  (2iraajaakka’l  20:13)

அப்பொழுது  ஏசாயா  தீர்க்கதரிசி  எசேக்கியா  ராஜாவினிடத்தில்  வந்து:  அந்த  மனுஷர்  என்ன  சொன்னார்கள்,  எங்கேயிருந்து  உம்மிடத்தில்  வந்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா:  பாபிலோன்  என்னும்  தூரதேசத்திலிருந்து  வந்தார்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  20:14)

appozhuthu  easaayaa  theerkkatharisi  eseakkiyaa  raajaavinidaththil  vanthu:  antha  manushar  enna  sonnaarga'l,  enggeayirunthu  ummidaththil  vanthaarga'l  en’ru  keattaan.  atha’rku  eseakkiyaa:  baabiloan  ennum  thooratheasaththilirunthu  vanthaarga'l  en’raan.  (2iraajaakka’l  20:14)

அப்பொழுது  அவன்:  உம்முடைய  வீட்டில்  என்னத்தைப்  பார்த்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா:  என்  வீட்டிலுள்ள  எல்லாவற்றையும்  பார்த்தார்கள்;  என்  பொக்கிஷங்களில்  நான்  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை  என்றான்.  (2இராஜாக்கள்  20:15)

appozhuthu  avan:  ummudaiya  veettil  ennaththaip  paarththaarga'l  en’ru  keattaan.  atha’rku  eseakkiyaa:  en  veettilu'l'la  ellaavat’raiyum  paarththaarga'l;  en  pokkishangga'lil  naan  avarga'lukkuk  kaa'nbiyaatha  poru'l  on’rum  illai  en’raan.  (2iraajaakka’l  20:15)

அப்பொழுது  ஏசாயா  எசேக்கியாவை  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளும்.  (2இராஜாக்கள்  20:16)

appozhuthu  easaayaa  eseakkiyaavai  noakki:  karththarudaiya  vaarththaiyaik  kea'lum.  (2iraajaakka’l  20:16)

இதோ,  நாட்கள்  வரும்;  அப்பொழுது  உமது  வீட்டில்  உள்ளதிலும்,  உமது  பிதாக்கள்  இந்நாள்வரைக்கும்  சேர்த்ததிலும்  ஒன்றும்  மீதியாக  வைக்கப்படாமல்  எல்லாம்  பாபிலோனுக்குக்  கொண்டுபோகப்படும்.  (2இராஜாக்கள்  20:17)

ithoa,  naadka'l  varum;  appozhuthu  umathu  veettil  u'l'lathilum,  umathu  pithaakka'l  innaa'lvaraikkum  searththathilum  on’rum  meethiyaaga  vaikkappadaamal  ellaam  baabiloanukkuk  ko'ndupoagappadum.  (2iraajaakka’l  20:17)

நீர்  பெறப்போகிற  உமது  சந்தானமாகிய  உமது  குமாரர்களிலும்  சிலர்  பாபிலோன்  ராஜாவின்  அரமனையிலே  அரமனை  வேலைக்காரராயிருப்பார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (2இராஜாக்கள்  20:18)

neer  pe’rappoagi’ra  umathu  santhaanamaagiya  umathu  kumaararga'lilum  silar  baabiloan  raajaavin  aramanaiyilea  aramanai  vealaikkaararaayiruppaarga'l  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (2iraajaakka’l  20:18)

அப்பொழுது  எசேக்கியா  ஏசாயாவை  நோக்கி:  நீர்  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தை  நல்லதுதான்  என்று  சொல்லி,  என்  நாட்களிலாவது  சமாதானமும்  உண்மையும்  இருக்குமே  என்றான்.  (2இராஜாக்கள்  20:19)

appozhuthu  eseakkiyaa  easaayaavai  noakki:  neer  sonna  karththarudaiya  vaarththai  nallathuthaan  en’ru  solli,  en  naadka'lilaavathu  samaathaanamum  u'nmaiyum  irukkumea  en’raan.  (2iraajaakka’l  20:19)

எசேக்கியாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவனுடைய  எல்லா  வல்லமையும்,  அவன்  ஒரு  குளத்தையும்  சாலகத்தையும்  உண்டாக்கினதினாலே  தண்ணீரை  நகரத்திற்குள்ளே  வரப்பண்ணினதும்,  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  20:20)

eseakkiyaavin  mat’ra  varththamaanangga'lum,  avanudaiya  ellaa  vallamaiyum,  avan  oru  ku'laththaiyum  saalagaththaiyum  u'ndaakkinathinaalea  tha'n'neerai  nagaraththi’rku'l'lea  varappa'n'ninathum,  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  20:20)

எசேக்கியா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  மனாசே  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  20:21)

eseakkiyaa  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avan  kumaaranaagiya  manaasea  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  20:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!