Saturday, September 10, 2016

2 Iraajaakka'l 19 | 2 இராஜாக்கள் 19 | 2 Kings 19

ராஜாவாகிய  எசேக்கியா  அதைக்  கேட்டபோது,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  இரட்டு  உடுத்திக்கொண்டு,  கர்த்தருடைய  ஆலயத்தில்  பிரவேசித்து,  (2இராஜாக்கள்  19:1)

raajaavaagiya  eseakkiyaa  athaik  keattapoathu,  than  vasthirangga'laik  kizhiththu,  irattu  uduththikko'ndu,  karththarudaiya  aalayaththil  piraveasiththu,  (2iraajaakka’l  19:1)

அரமனை  விசாரிப்புக்காரனாகிய  எலியாக்கீமையும்,  சம்பிரதியாகிய  செப்னாவையும்,  ஆசாரியர்களின்  மூப்பரையும்,  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  என்னும்  தீர்க்கதரிசியினிடத்துக்கு  இரட்டு  உடுத்திக்கொண்டவர்களாக  அனுப்பினான்.  (2இராஜாக்கள்  19:2)

aramanai  visaarippukkaaranaagiya  eliyaakkeemaiyum,  sambirathiyaagiya  sebnaavaiyum,  aasaariyarga'lin  moopparaiyum,  aamoathsin  kumaaranaagiya  easaayaa  ennum  theerkkatharisiyinidaththukku  irattu  uduththikko'ndavarga'laaga  anuppinaan.  (2iraajaakka’l  19:2)

இவர்கள்  அவனை  நோக்கி:  இந்த  நாள்  நெருக்கமும்  கண்டிதமும்  தூஷணமும்  அநுபவிக்கிற  நாள்;  பிள்ளைபேறு  நோக்கியிருக்கிறது,  பெறவோ  பெலனில்லை.  (2இராஜாக்கள்  19:3)

ivarga'l  avanai  noakki:  intha  naa'l  nerukkamum  ka'ndithamum  thoosha'namum  anubavikki’ra  naa'l;  pi'l'laipea’ru  noakkiyirukki’rathu,  pe’ravoa  belanillai.  (2iraajaakka’l  19:3)

ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படி  அசீரியா  ராஜாவாகிய  தன்  ஆண்டவனால்  அனுப்பப்பட்ட  ரப்சாக்கே  சொன்ன  வார்த்தைகளையெல்லாம்  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிறார்;  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிற  வார்த்தைகளினிமித்தம்  தண்டனைசெய்வார்;  ஆகையால்  இன்னும்  மீதியாயிருக்கிறவர்களுக்காக  விண்ணப்பஞ்செய்வீராக  என்று  எசேக்கியா  சொல்லச்சொன்னார்  என்றார்கள்.  (2இராஜாக்கள்  19:4)

jeevanu'l'la  theavanai  ninthikkumpadi  aseeriyaa  raajaavaagiya  than  aa'ndavanaal  anuppappatta  rabsaakkea  sonna  vaarththaiga'laiyellaam  umathu  theavanaagiya  karththar  keattirukki’raar;  umathu  theavanaagiya  karththar  keattirukki’ra  vaarththaiga'linimiththam  tha'ndanaiseyvaar;  aagaiyaal  innum  meethiyaayirukki’ravarga'lukkaaga  vi'n'nappagnseyveeraaga  en’ru  eseakkiyaa  sollachsonnaar  en’raarga'l.  (2iraajaakka’l  19:4)

இவ்விதமாய்  எசேக்கியா  ராஜாவின்  ஊழியக்காரர்  ஏசாயாவினிடத்தில்  வந்து  சொன்னார்கள்.  (2இராஜாக்கள்  19:5)

ivvithamaay  eseakkiyaa  raajaavin  oozhiyakkaarar  easaayaavinidaththil  vanthu  sonnaarga'l.  (2iraajaakka’l  19:5)

அப்பொழுது  ஏசாயா  அவர்களை  நோக்கி:  அசீரியா  ராஜாவின்  ஊழியக்காரர்  என்னைத்  தூஷித்ததும்  நீர்  கேட்டதுமான  வார்த்தைகளினாலே  பயப்படாதேயும்.  (2இராஜாக்கள்  19:6)

appozhuthu  easaayaa  avarga'lai  noakki:  aseeriyaa  raajaavin  oozhiyakkaarar  ennaith  thooshiththathum  neer  keattathumaana  vaarththaiga'linaalea  bayappadaatheayum.  (2iraajaakka’l  19:6)

இதோ,  அவன்  ஒரு  செய்தியைக்  கேட்டு,  தன்  தேசத்துக்குத்  திரும்புவதற்கான  ஆவியை  நான்  அவனுக்குள்  அனுப்பி,  அவனை  அவன்  தேசத்திலே  பட்டயத்தால்  விழப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்பதை  உங்கள்  ஆண்டவனிடத்தில்  சொல்லுங்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  19:7)

ithoa,  avan  oru  seythiyaik  keattu,  than  theasaththukkuth  thirumbuvatha’rkaana  aaviyai  naan  avanukku'l  anuppi,  avanai  avan  theasaththilea  pattayaththaal  vizhappa'n'nuvean  en’ru  karththar  uraikki’raar  enbathai  ungga'l  aa'ndavanidaththil  sollungga'l  en’raan.  (2iraajaakka’l  19:7)

அசீரியா  ராஜா  லாகீசைவிட்டுப்  புறப்பட்டான்  என்று  கேள்விப்பட்டு,  ரப்சாக்கே  திரும்பிப்போய்,  அவன்  லிப்னாவின்மேல்  யுத்தம்பண்ணுகிறதைக்  கண்டான்.  (2இராஜாக்கள்  19:8)

aseeriyaa  raajaa  laageesaivittup  pu’rappattaan  en’ru  kea'lvippattu,  rabsaakkea  thirumbippoay,  avan  libnaavinmeal  yuththampa'n'nugi’rathaik  ka'ndaan.  (2iraajaakka’l  19:8)

இதோ,  எத்தியோப்பியா  ராஜாவாகிய  தீராக்கா  உம்மோடு  யுத்தம்பண்ணப்  புறப்பட்டான்  என்று  சொல்லக்  கேள்விப்பட்டான்;  அப்பொழுது  அவன்  திரும்ப  எசேக்கியாவினிடத்துக்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  (2இராஜாக்கள்  19:9)

ithoa,  eththiyoappiyaa  raajaavaagiya  theeraakkaa  ummoadu  yuththampa'n'nap  pu’rappattaan  en’ru  sollak  kea'lvippattaan;  appozhuthu  avan  thirumba  eseakkiyaavinidaththukku  sthaanaabathiga'lai  anuppi:  (2iraajaakka’l  19:9)

நீங்கள்  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவுக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  எருசலேம்  அசீரியா  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று  நீ  நம்பியிருக்கிற  உன்  தேவன்  உன்னை  எத்த  ஒட்டாதே.  (2இராஜாக்கள்  19:10)

neengga'l  yoothaavin  raajaavaagiya  eseakkiyaavukkuch  sollavea'ndiyathu  ennaven’raal,  erusaleam  aseeriyaa  raajaavin  kaiyil  oppukkodukkappaduvathillaiyen’ru  nee  nambiyirukki’ra  un  theavan  unnai  eththa  ottaathea.  (2iraajaakka’l  19:10)

இதோ,  அசீரியா  ராஜாக்கள்  சகல  தேசங்களையும்  சங்கரித்த  செய்தியை  நீ  கேட்டிருக்கிறாயே,  நீ  தப்புவாயோ?  (2இராஜாக்கள்  19:11)

ithoa,  aseeriyaa  raajaakka'l  sagala  theasangga'laiyum  sanggariththa  seythiyai  nee  keattirukki’raayea,  nee  thappuvaayoa?  (2iraajaakka’l  19:11)

என்  பிதாக்கள்  அழித்துவிட்ட  கோசானையும்  ஆரானையும்  ரேத்சேப்பையும்,  தெலாசாரிலிருந்த  ஏதேனின்  புத்திரரையும்  அவர்களுடைய  தேவர்கள்  தப்புவித்ததுண்டோ?  (2இராஜாக்கள்  19:12)

en  pithaakka'l  azhiththuvitta  koasaanaiyum  aaraanaiyum  reathseappaiyum,  thelaasaariliruntha  eatheanin  puththiraraiyum  avarga'ludaiya  theavarga'l  thappuviththathu'ndoa?  (2iraajaakka’l  19:12)

ஆமாத்தின்  ராஜாவும்,  அர்பாத்தின்  ராஜாவும்,  செப்பர்வாயிம்  ஏனா  ஈவா  பட்டணங்களின்  ராஜாவும்  எங்கே?  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  19:13)

aamaaththin  raajaavum,  arpaaththin  raajaavum,  sepparvaayim  eanaa  eevaa  patta'nangga'lin  raajaavum  enggea?  en’ru  sollungga'l  en’raan.  (2iraajaakka’l  19:13)

எசேக்கியா  ஸ்தானாபதிகளின்  கையிலிருந்து  நிருபத்தை  வாங்கி  வாசித்த  பின்பு,  அவன்  கர்த்தரின்  ஆலயத்திற்குப்  போய்,  அதைக்  கர்த்தருக்கு  முன்பாக  விரித்து,  (2இராஜாக்கள்  19:14)

eseakkiyaa  sthaanaabathiga'lin  kaiyilirunthu  nirubaththai  vaanggi  vaasiththa  pinbu,  avan  karththarin  aalayaththi’rkup  poay,  athaik  karththarukku  munbaaga  viriththu,  (2iraajaakka’l  19:14)

கர்த்தரை  நோக்கி:  கேருபீன்களின்  மத்தியில்  வாசம்பண்ணுகிற  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  பூமியின்  ராஜ்யங்களுக்கெல்லாம்  தேவனானவர்;  நீர்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கினீர்.  (2இராஜாக்கள்  19:15)

karththarai  noakki:  kearubeenga'lin  maththiyil  vaasampa'n'nugi’ra  isravealin  theavanaagiya  karththaavea,  neer  oruvarea  boomiyin  raajyangga'lukkellaam  theavanaanavar;  neer  vaanaththaiyum  boomiyaiyum  u'ndaakkineer.  (2iraajaakka’l  19:15)

கர்த்தாவே,  உமது  செவியைச்  சாய்த்துக்  கேளும்;  கர்த்தாவே,  நீர்  உமது  கண்களைத்  திறந்துபாரும்;  சனகெரிப்  ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படிக்குச்  சொல்லியனுப்பின  வார்த்தைகளைக்  கேளும்.  (2இராஜாக்கள்  19:16)

karththaavea,  umathu  seviyaich  saayththuk  kea'lum;  karththaavea,  neer  umathu  ka'nga'laith  thi’ranthupaarum;  sanakerib  jeevanu'l'la  theavanai  ninthikkumpadikkuch  solliyanuppina  vaarththaiga'laik  kea'lum.  (2iraajaakka’l  19:16)

கர்த்தாவே,  அசீரியா  ராஜாக்கள்  அந்த  ஜாதிகளையும்  அவர்கள்  தேசத்தையும்  நாசமாக்கி,  (2இராஜாக்கள்  19:17)

karththaavea,  aseeriyaa  raajaakka'l  antha  jaathiga'laiyum  avarga'l  theasaththaiyum  naasamaakki,  (2iraajaakka’l  19:17)

அவர்களுடைய  தேவர்களை  நெருப்பிலே  போட்டுவிட்டது  மெய்தான்;  அவைகள்  தேவர்கள்  அல்லவே,  மனுஷர்  கைவேலையான  மரமும்  கல்லும்தானே;  ஆகையால்  அவைகளை  நிர்த்தூளியாக்கினார்கள்.  (2இராஜாக்கள்  19:18)

avarga'ludaiya  theavarga'lai  neruppilea  poattuvittathu  meythaan;  avaiga'l  theavarga'l  allavea,  manushar  kaivealaiyaana  maramum  kallumthaanea;  aagaiyaal  avaiga'lai  nirththoo'liyaakkinaarga'l.  (2iraajaakka’l  19:18)

இப்போதும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  தேவனாகிய  கர்த்தர்  என்று  பூமியின்  ராஜ்யங்கள்  எல்லாம்  அறியும்படிக்கு,  எங்களை  அவன்  கைக்கு  நீங்கலாக்கி  இரட்சியும்  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  (2இராஜாக்கள்  19:19)

ippoathum  engga'l  theavanaagiya  karththaavea,  neer  oruvarea  theavanaagiya  karththar  en’ru  boomiyin  raajyangga'l  ellaam  a’riyumpadikku,  engga'lai  avan  kaikku  neenggalaakki  iradchiyum  en’ru  vi'n'nappampa'n'ninaan.  (2iraajaakka’l  19:19)

அப்பொழுது  ஆமோத்சின்  குமாரனாகிய  ஏசாயா  எசேக்கியாவுக்குச்  சொல்லியனுப்பினது:  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அசீரியா  ராஜாவாகிய  சனகெரிபின்நிமித்தம்  நீ  என்னை  நோக்கிப்  பண்ணின  விண்ணப்பத்தைக்  கேட்டேன்.  (2இராஜாக்கள்  19:20)

appozhuthu  aamoathsin  kumaaranaagiya  easaayaa  eseakkiyaavukkuch  solliyanuppinathu:  isravealin  theavanaagiya  karththar  uraikki’rathu  ennaven’raal,  aseeriyaa  raajaavaagiya  sanakeribinnimiththam  nee  ennai  noakkip  pa'n'nina  vi'n'nappaththaik  keattean.  (2iraajaakka’l  19:20)

அவனைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிற  வசனமாவது:  சீயோன்  குமாரத்தியாகிய  கன்னியாஸ்திரீ  உன்னை  இகழ்ந்து,  உன்னைப்  பரிகாசம்பண்ணுகிறாள்;  எருசலேம்  குமாரத்தி  உன்  பின்னாலே  தலையைத்  துலுக்குகிறாள்.  (2இராஜாக்கள்  19:21)

avanaikku’riththuk  karththar  sollugi’ra  vasanamaavathu:  seeyoan  kumaaraththiyaagiya  kanniyaasthiree  unnai  igazhnthu,  unnaip  parigaasampa'n'nugi’raa'l;  erusaleam  kumaaraththi  un  pinnaalea  thalaiyaith  thulukkugi’raa'l.  (2iraajaakka’l  19:21)

யாரை  நிந்தித்துத்  தூஷித்தாய்?  யாருக்கு  விரோதமாய்  உன்  சத்தத்தை  உயர்த்தினாய்?  நீ  இஸ்ரவேலின்  பரிசுத்தருக்கு  விரோதமாயல்லவோ  உன்  கண்களை  மேட்டிமையாக  ஏறெடுத்தாய்?  (2இராஜாக்கள்  19:22)

yaarai  ninthiththuth  thooshiththaay?  yaarukku  viroathamaay  un  saththaththai  uyarththinaay?  nee  isravealin  parisuththarukku  viroathamaayallavoa  un  ka'nga'lai  meattimaiyaaga  ea’reduththaay?  (2iraajaakka’l  19:22)

உன்  ஸ்தானாபதிகளைக்கொண்டு  நீ  ஆண்டவரை  நிந்தித்து:  என்  இரதங்களின்  திரளினாலே  நான்  மலைகளின்  கொடுமுடிகளுக்கும்  லீபனோனின்  சிகரங்களுக்கும்  வந்து  ஏறினேன்;  அதின்  உயரமான  கேதுருமரங்களையும்,  உச்சிதமான  தேவதாரி  விருட்சங்களையும்  நான்  வெட்டி,  அதின்  கடையாந்தரத்  தாபரமட்டும்,  அதின்  செழுமையான  வனமட்டும்  வருவேன்  என்றும்,  (2இராஜாக்கள்  19:23)

un  sthaanaabathiga'laikko'ndu  nee  aa'ndavarai  ninthiththu:  en  irathangga'lin  thira'linaalea  naan  malaiga'lin  kodumudiga'lukkum  leebanoanin  sigarangga'lukkum  vanthu  ea’rinean;  athin  uyaramaana  keathurumarangga'laiyum,  uchchithamaana  theavathaari  virudchangga'laiyum  naan  vetti,  athin  kadaiyaantharath  thaabaramattum,  athin  sezhumaiyaana  vanamattum  varuvean  en’rum,  (2iraajaakka’l  19:23)

நான்  அந்நியதேசங்களில்  கிணறு  வெட்டித்  தண்ணீர்  குடித்தேன்;  என்  உள்ளங்கால்களினால்  அரணிப்பான  இடங்களின்  அகழிகளையெல்லாம்  வறளவும்  பண்ணினேன்  என்றும்  சொன்னாய்.  (2இராஜாக்கள்  19:24)

naan  anniyatheasangga'lil  ki'na’ru  vettith  tha'n'neer  kudiththean;  en  u'l'langkaalga'linaal  ara'nippaana  idangga'lin  agazhiga'laiyellaam  va’ra'lavum  pa'n'ninean  en’rum  sonnaay.  (2iraajaakka’l  19:24)

நான்  வெகுகாலத்திற்குமுன்  அதை  நியமித்து,  பூர்வநாட்கள்முதல்  அதைத்  திட்டம்பண்ணினேன்  என்பதை  நீ  கேட்டதில்லையோ?  இப்பொழுது  நீ  அரணான  பட்டணங்களைப்  பாழான  மண்மேடுகள்  ஆக்கும்படிக்கு  நானே  அதைச்  சம்பவிக்கப்பண்ணினேன்.  (2இராஜாக்கள்  19:25)

naan  vegukaalaththi’rkumun  athai  niyamiththu,  poorvanaadka'lmuthal  athaith  thittampa'n'ninean  enbathai  nee  keattathillaiyoa?  ippozhuthu  nee  ara'naana  patta'nangga'laip  paazhaana  ma'nmeaduga'l  aakkumpadikku  naanea  athaich  sambavikkappa'n'ninean.  (2iraajaakka’l  19:25)

அதினாலே  அவைகளின்  குடிகள்  கையிளைத்தவர்களாகி,  கலங்கி  வெட்கப்பட்டு,  வெளியின்  பூண்டுக்கும்,  பச்சிலைக்கும்,  வீடுகளின்மேல்  முளைக்கும்  புல்லுக்கும்,  ஓங்கிவளருமுன்  தீய்ந்துபோம்  பயிருக்கும்  சமானமானார்கள்.  (2இராஜாக்கள்  19:26)

athinaalea  avaiga'lin  kudiga'l  kaiyi'laiththavarga'laagi,  kalanggi  vedkappattu,  ve'liyin  poo'ndukkum,  pachchilaikkum,  veeduga'linmeal  mu'laikkum  pullukkum,  oanggiva'larumun  theeynthupoam  payirukkum  samaanamaanaarga'l.  (2iraajaakka’l  19:26)

உன்  இருப்பையும்,  உன்  போக்கையும்,  உன்  வரவையும்,  நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளிக்கிறதையும்  அறிவேன்.  (2இராஜாக்கள்  19:27)

un  iruppaiyum,  un  poakkaiyum,  un  varavaiyum,  nee  enakku  viroathamaayk  kontha'likki’rathaiyum  a’rivean.  (2iraajaakka’l  19:27)

நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளித்து,  வீரியம்  பேசினது  என்  செவிகளில்  ஏறினபடியினால்,  நான்  என்  துறட்டை  உன்  மூக்கிலும்  என்  கடிவாளத்தை  உன்  வாயிலும்  போட்டு,  நீ  வந்தவழியே  உன்னைத்  திருப்பிக்கொண்டுபோவேன்  என்று  அவனைக்குறித்துச்  சொல்லுகிறார்.  (2இராஜாக்கள்  19:28)

nee  enakku  viroathamaayk  kontha'liththu,  veeriyam  peasinathu  en  seviga'lil  ea’rinapadiyinaal,  naan  en  thu’rattai  un  mookkilum  en  kadivaa'laththai  un  vaayilum  poattu,  nee  vanthavazhiyea  unnaith  thiruppikko'ndupoavean  en’ru  avanaikku’riththuch  sollugi’raar.  (2iraajaakka’l  19:28)

உனக்கு  அடையாளமாயிருப்பது  என்னவென்றால்:  இந்த  வருஷத்திலே  தப்பிப்  பயிராகிறதையும்,  இரண்டாம்  வருஷத்திலே  தானாய்  விளைகிறதையும்  சாப்பிடுவீர்கள்;  மூன்றாம்  வருஷத்திலோ  விதைத்து  அறுத்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனிகளைப்  புசிப்பீர்கள்.  (2இராஜாக்கள்  19:29)

unakku  adaiyaa'lamaayiruppathu  ennaven’raal:  intha  varushaththilea  thappip  payiraagi’rathaiyum,  ira'ndaam  varushaththilea  thaanaay  vi'laigi’rathaiyum  saappiduveerga'l;  moon’raam  varushaththiloa  vithaiththu  a’ruththu,  thiraadchaththoattangga'lai  naatti,  avaiga'lin  kaniga'laip  pusippeerga'l.  (2iraajaakka’l  19:29)

யூதா  வம்சத்தாரில்  தப்பி  மீந்திருக்கிறவர்கள்  மறுபடியும்  கீழே  வேர்பற்றி  மேலே  கனிகொடுப்பார்கள்.  (2இராஜாக்கள்  19:30)

yoothaa  vamsaththaaril  thappi  meenthirukki’ravarga'l  ma’rupadiyum  keezhea  vearpat’ri  mealea  kanikoduppaarga'l.  (2iraajaakka’l  19:30)

மீதியாயிருக்கிறவர்கள்  எருசலேமிலும்,  தப்பினவர்கள்  சீயோன்  மலையிலும்  இருந்து  புறப்படுவார்கள்;  சேனைகளுடைய  கர்த்தரின்  வைராக்கியம்  இதைச்  செய்யும்.  (2இராஜாக்கள்  19:31)

meethiyaayirukki’ravarga'l  erusaleamilum,  thappinavarga'l  seeyoan  malaiyilum  irunthu  pu’rappaduvaarga'l;  seanaiga'ludaiya  karththarin  vairaakkiyam  ithaich  seyyum.  (2iraajaakka’l  19:31)

ஆகையால்  கர்த்தர்  அசீரியா  ராஜாவைக்குறித்து:  அவன்  இந்த  நகரத்திற்குள்  பிரவேசிப்பதில்லை;  இதின்மேல்  அம்பு  எய்வதுமில்லை;  இதற்குமுன்  கேடகத்தோடே  வருவதுமில்லை;  இதற்கு  எதிராகக்  கொத்தளம்  போடுவதுமில்லை.  (2இராஜாக்கள்  19:32)

aagaiyaal  karththar  aseeriyaa  raajaavaikku’riththu:  avan  intha  nagaraththi’rku'l  piraveasippathillai;  ithinmeal  ambu  eyvathumillai;  itha’rkumun  keadagaththoadea  varuvathumillai;  itha’rku  ethiraagak  koththa'lam  poaduvathumillai.  (2iraajaakka’l  19:32)

அவன்  இந்த  நகரத்திற்குள்  பிரவேசியாமல்,  தான்  வந்தவழியே  திரும்பிப்போவான்.  (2இராஜாக்கள்  19:33)

avan  intha  nagaraththi’rku'l  piraveasiyaamal,  thaan  vanthavazhiyea  thirumbippoavaan.  (2iraajaakka’l  19:33)

என்  நிமித்தமும்  என்  தாசனாகிய  தாவீதின்  நிமித்தமும்  நான்  இந்த  நகரத்தை  இரட்சிக்கும்படிக்கு,  இதற்கு  ஆதரவாயிருப்பேன்  என்பதைக்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்லியனுப்பினான்.  (2இராஜாக்கள்  19:34)

en  nimiththamum  en  thaasanaagiya  thaaveethin  nimiththamum  naan  intha  nagaraththai  iradchikkumpadikku,  itha’rku  aatharavaayiruppean  enbathaik  karththar  uraikki’raar  en’ru  solliyanuppinaan.  (2iraajaakka’l  19:34)

அன்று  இராத்திரியில்  சம்பவித்தது  என்னவென்றால்:  கர்த்தருடைய  தூதன்  புறப்பட்டு,  அசீரியரின்  பாளயத்தில்  லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச்  சங்கரித்தான்;  அதிகாலமே  எழுந்திருக்கும்போது,  இதோ,  அவர்கள்  எல்லாரும்  செத்த  பிரேதங்களாய்க்  கிடந்தார்கள்.  (2இராஜாக்கள்  19:35)

an’ru  iraaththiriyil  sambaviththathu  ennaven’raal:  karththarudaiya  thoothan  pu’rappattu,  aseeriyarin  paa'layaththil  ladchaththe'nbaththaiyaayirampearaich  sanggariththaan;  athikaalamea  ezhunthirukkumpoathu,  ithoa,  avarga'l  ellaarum  seththa  pireathangga'laayk  kidanthaarga'l.  (2iraajaakka’l  19:35)

அப்பொழுது  அசீரியா  ராஜாவாகிய  சனகெரிப்  பிரயாணப்பட்டு,  திரும்பிப்போய்  நினிவேயில்  இருந்துவிட்டான்.  (2இராஜாக்கள்  19:36)

appozhuthu  aseeriyaa  raajaavaagiya  sanakerib  pirayaa'nappattu,  thirumbippoay  niniveayil  irunthuvittaan.  (2iraajaakka’l  19:36)

அவன்  தன்  தேவனாகிய  நிஸ்ரோகின்  கோவிலிலே  பணிந்துகொள்ளுகிறபோது,  அவன்  குமாரராகிய  அத்ரமலேக்கும்  சரேத்சேரும்  அவனைப்  பட்டயத்தினால்  வெட்டிப்போட்டு,  ஆரராத்  தேசத்திற்குத்  தப்பி  ஓடிப்போனார்கள்;  அவன்  குமாரனாகிய  எசரத்தோன்  அவன்  பட்டத்திற்கு  வந்து  அரசாண்டான்.  (2இராஜாக்கள்  19:37)

avan  than  theavanaagiya  nisroakin  koavililea  pa'ninthuko'l'lugi’rapoathu,  avan  kumaararaagiya  athramaleakkum  sareathsearum  avanaip  pattayaththinaal  vettippoattu,  aararaath  theasaththi’rkuth  thappi  oadippoanaarga'l;  avan  kumaaranaagiya  esaraththoan  avan  pattaththi’rku  vanthu  arasaa'ndaan.  (2iraajaakka’l  19:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!