Friday, September 09, 2016

2 Iraajaakka'l 18 | 2 இராஜாக்கள் 18 | 2 Kings 18

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஏலாவின்  குமாரன்  ஓசெயாவின்  மூன்றாம்  வருஷத்திலே  ஆகாஸ்  என்னும்  யூதாவுடைய  ராஜாவின்  குமாரனாகிய  எசேக்கியா  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  18:1)

isravealin  raajaavaagiya  ealaavin  kumaaran  oaseyaavin  moon’raam  varushaththilea  aagaas  ennum  yoothaavudaiya  raajaavin  kumaaranaagiya  eseakkiyaa  raajaavaanaan.  (2iraajaakka’l  18:1)

அவன்  ராஜாவாகிறபோது,  இருபத்தைந்து  வயதாயிருந்து,  எருசலேமிலே  இருபத்தொன்பது  வருஷம்  அரசாண்டான்;  சகரியாவின்  குமாரத்தியாகிய  அவன்  தாயின்பேர்  ஆபி.  (2இராஜாக்கள்  18:2)

avan  raajaavaagi’rapoathu,  irubaththainthu  vayathaayirunthu,  erusaleamilea  irubaththonbathu  varusham  arasaa'ndaan;  sagariyaavin  kumaaraththiyaagiya  avan  thaayinpear  aabi.  (2iraajaakka’l  18:2)

அவன்  தன்  தகப்பனாகிய  தாவீது  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  18:3)

avan  than  thagappanaagiya  thaaveethu  seythapadiyellaam  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seythaan.  (2iraajaakka’l  18:3)

அவன்  மேடைகளை  அகற்றி,  சிலைகளைத்  தகர்த்து,  விக்கிரகத்தோப்புகளை  வெட்டி,  மோசே  பண்ணியிருந்த  வெண்கலச்  சர்ப்பத்தை  உடைத்துப்போட்டான்;  அந்நாட்கள்மட்டும்  இஸ்ரவேல்  புத்திரர்  அதற்குத்  தூபங்காட்டி  வந்தார்கள்;  அதற்கு  நிகுஸ்தான்  என்று  பேரிட்டான்.  (2இராஜாக்கள்  18:4)

avan  meadaiga'lai  agat’ri,  silaiga'laith  thagarththu,  vikkiragaththoappuga'lai  vetti,  moasea  pa'n'niyiruntha  ve'ngalach  sarppaththai  udaiththuppoattaan;  annaadka'lmattum  israveal  puththirar  atha’rkuth  thoobangkaatti  vanthaarga'l;  atha’rku  nigusthaan  en’ru  pearittaan.  (2iraajaakka’l  18:4)

அவன்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரின்மேல்  வைத்த  நம்பிக்கையிலே,  அவனுக்குப்  பின்னும்  அவனுக்கு  முன்னும்  இருந்த  யூதாவின்  ராஜாக்களிலெல்லாம்  அவனைப்போல்  ஒருவனும்  இருந்ததில்லை.  (2இராஜாக்கள்  18:5)

avan  isravealin  theavanaagiya  karththarinmeal  vaiththa  nambikkaiyilea,  avanukkup  pinnum  avanukku  munnum  iruntha  yoothaavin  raajaakka'lilellaam  avanaippoal  oruvanum  irunthathillai.  (2iraajaakka’l  18:5)

அவன்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்காமல்  அவரைச்  சார்ந்திருந்து,  கர்த்தர்  மோசேக்குக்  கற்பித்த  அவருடைய  கற்பனைகளைக்  கைக்கொண்டு  நடந்தான்.  (2இராஜாக்கள்  18:6)

avan  karththarai  vittup  pinvaanggaamal  avaraich  saarnthirunthu,  karththar  moaseakkuk  ka’rpiththa  avarudaiya  ka’rpanaiga'laik  kaikko'ndu  nadanthaan.  (2iraajaakka’l  18:6)

ஆகையால்  கர்த்தர்  அவனோடிருந்தார்;  அவன்  போகிற  இடம்  எங்கும்  அவனுக்கு  அநுகூலமாயிற்று;  அவன்  அசீரியா  ராஜாவைச்  சேவிக்காமல்,  அவன்  அதிகாரத்தைத்  தள்ளிவிட்டான்.  (2இராஜாக்கள்  18:7)

aagaiyaal  karththar  avanoadirunthaar;  avan  poagi’ra  idam  enggum  avanukku  anugoolamaayit’ru;  avan  aseeriyaa  raajaavaich  seavikkaamal,  avan  athigaaraththaith  tha'l'livittaan.  (2iraajaakka’l  18:7)

அவன்  பெலிஸ்தரைக்  காசாமட்டும்  அதின்  எல்லைகள்  பரியந்தமும்,  காவலாளர்  காக்கிற  கோபுரங்கள்  தொடங்கி  அரணான  நகரங்கள்  பரியந்தமும்  முறிய  அடித்தான்.  (2இராஜாக்கள்  18:8)

avan  pelistharaik  kaasaamattum  athin  ellaiga'l  pariyanthamum,  kaavalaa'lar  kaakki’ra  koapurangga'l  thodanggi  ara'naana  nagarangga'l  pariyanthamum  mu’riya  adiththaan.  (2iraajaakka’l  18:8)

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஏலாவின்  குமாரன்  ஓசெயாவின்  ஏழாம்  வருஷத்திற்குச்  சரியான  எசேக்கியா  ராஜாவின்  நாலாம்  வருஷத்திலே  அசீரியா  ராஜாவாகிய  சல்மனாசார்  சமாரியாவுக்கு  விரோதமாய்  வந்து  அதை  முற்றிக்கைபோட்டான்.  (2இராஜாக்கள்  18:9)

isravealin  raajaavaagiya  ealaavin  kumaaran  oaseyaavin  eazhaam  varushaththi’rkuch  sariyaana  eseakkiyaa  raajaavin  naalaam  varushaththilea  aseeriyaa  raajaavaagiya  salmanaasaar  samaariyaavukku  viroathamaay  vanthu  athai  mut’rikkaipoattaan.  (2iraajaakka’l  18:9)

மூன்று  வருஷம்  சென்றபின்பு,  அவர்கள்  அதைப்  பிடித்தார்கள்;  எசேக்கியாவின்  ஆறாம்  வருஷத்திலும்,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  ஓசெயாவின்  ஒன்பதாம்  வருஷத்திலும்  சமாரியா  பிடிபட்டது.  (2இராஜாக்கள்  18:10)

moon’ru  varusham  sen’rapinbu,  avarga'l  athaip  pidiththaarga'l;  eseakkiyaavin  aa’raam  varushaththilum,  isravealin  raajaavaagiya  oaseyaavin  onbathaam  varushaththilum  samaariyaa  pidipattathu.  (2iraajaakka’l  18:10)

அசீரியா  ராஜா  இஸ்ரவேலை  அசீரியாவுக்குச்  சிறைபிடித்துக்கொண்டுபோய்,  கோசான்  நதியோரமான  ஆலாகிலும்  ஆபோரிலும்  மேதியரின்  பட்டணங்களிலும்  குடியேற்றினான்.  (2இராஜாக்கள்  18:11)

aseeriyaa  raajaa  isravealai  aseeriyaavukkuch  si’raipidiththukko'ndupoay,  koasaan  nathiyoaramaana  aalaakilum  aaboarilum  meathiyarin  patta'nangga'lilum  kudiyeat’rinaan.  (2iraajaakka’l  18:11)

அவர்கள்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்திற்குச்  செவிகொடாமல்,  அவருடைய  உடன்படிக்கையையும்  கர்த்தரின்  தாசனாகிய  மோசே  கற்பித்த  யாவற்றையும்  மீறி,  அதற்குச்  செவிகொடாமலும்  அதின்படி  செய்யாமலும்  போனார்கள்.  (2இராஜாக்கள்  18:12)

avarga'l  thangga'l  theavanaagiya  karththarudaiya  saththaththi’rkuch  sevikodaamal,  avarudaiya  udanpadikkaiyaiyum  karththarin  thaasanaagiya  moasea  ka’rpiththa  yaavat’raiyum  mee’ri,  atha’rkuch  sevikodaamalum  athinpadi  seyyaamalum  poanaarga'l.  (2iraajaakka’l  18:12)

யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவின்  பதினாலாம்  வருஷத்திலே  அசீரியா  ராஜாவாகிய  சனகெரிப்  யூதாவிலிருக்கிற  அரணான  சகல  பட்டணங்களுக்கும்  விரோதமாய்  வந்து  அவைகளைப்  பிடித்தான்.  (2இராஜாக்கள்  18:13)

yoothaavin  raajaavaagiya  eseakkiyaavin  pathinaalaam  varushaththilea  aseeriyaa  raajaavaagiya  sanakerib  yoothaavilirukki’ra  ara'naana  sagala  patta'nangga'lukkum  viroathamaay  vanthu  avaiga'laip  pidiththaan.  (2iraajaakka’l  18:13)

அப்பொழுது  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியா  லாகீசிலுள்ள  அசீரியா  ராஜாவுக்கு  ஆள்  அனுப்பி:  நான்  குற்றஞ்செய்தேன்;  என்னைவிட்டுத்  திரும்பிப்போம்;  நீர்  என்மேல்  சுமத்துவதைச்  சுமப்பேன்  என்று  சொன்னான்;  அப்படியே  அசீரியா  ராஜா  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியாவின்மேல்  முந்நூறு  தாலந்து  வெள்ளியையும்  முப்பது  தாலந்து  பொன்னையும்  சுமத்தினான்.  (2இராஜாக்கள்  18:14)

appozhuthu  yoothaavin  raajaavaagiya  eseakkiyaa  laageesilu'l'la  aseeriyaa  raajaavukku  aa'l  anuppi:  naan  kut’ragnseythean;  ennaivittuth  thirumbippoam;  neer  enmeal  sumaththuvathaich  sumappean  en’ru  sonnaan;  appadiyea  aseeriyaa  raajaa  yoothaavin  raajaavaagiya  eseakkiyaavinmeal  munnoo’ru  thaalanthu  ve'l'liyaiyum  muppathu  thaalanthu  ponnaiyum  sumaththinaan.  (2iraajaakka’l  18:14)

ஆதலால்  எசேக்கியா  கர்த்தரின்  ஆலயத்திலும்  ராஜாவுடைய  அரமனை  பொக்கிஷங்களிலும்  அகப்பட்ட  எல்லா  வெள்ளியையும்  கொடுத்தான்.  (2இராஜாக்கள்  18:15)

aathalaal  eseakkiyaa  karththarin  aalayaththilum  raajaavudaiya  aramanai  pokkishangga'lilum  agappatta  ellaa  ve'l'liyaiyum  koduththaan.  (2iraajaakka’l  18:15)

அக்காலத்திலே  யூதாவின்  ராஜாவாகிய  எசேக்கியா  கர்த்தருடைய  ஆலயக்கதவுகளிலும்  நிலைகளிலும்  தான்  அழுத்தியிருந்த  பொன்  தகடுகளைக்  கழற்றி  அவைகளை  அசீரியா  ராஜாவுக்குக்  கொடுத்தான்.  (2இராஜாக்கள்  18:16)

akkaalaththilea  yoothaavin  raajaavaagiya  eseakkiyaa  karththarudaiya  aalayakkathavuga'lilum  nilaiga'lilum  thaan  azhuththiyiruntha  pon  thagaduga'laik  kazhat’ri  avaiga'lai  aseeriyaa  raajaavukkuk  koduththaan.  (2iraajaakka’l  18:16)

ஆகிலும்  அசீரியா  ராஜா  லாகீசிலிருந்து  தர்தானையும்  ரப்சாரீசையும்  ரப்சாக்கேயையும்  பெரிய  சேனையோடே  எருசலேமுக்கு  எசேக்கியா  ராஜாவினிடத்தில்  அனுப்பினான்;  அவர்கள்  எருசலேமுக்கு  வந்து,  வண்ணார்  துறையின்  வழியிலுள்ள  மேல்குளத்துச்  சாலகத்தண்டையிலே  நின்று,  (2இராஜாக்கள்  18:17)

aagilum  aseeriyaa  raajaa  laageesilirunthu  tharthaanaiyum  rabsaareesaiyum  rabsaakkeayaiyum  periya  seanaiyoadea  erusaleamukku  eseakkiyaa  raajaavinidaththil  anuppinaan;  avarga'l  erusaleamukku  vanthu,  va'n'naar  thu’raiyin  vazhiyilu'l'la  mealku'laththuch  saalagaththa'ndaiyilea  nin’ru,  (2iraajaakka’l  18:17)

ராஜாவை  அழைப்பித்தார்கள்;  அப்பொழுது  இல்க்கியாவின்  குமாரனாகிய  எலியாக்கீம்  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்  குமாரனாகிய  யோவாக்  என்னும்  கணக்கனும்  அவர்களிடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்கள்.  (2இராஜாக்கள்  18:18)

raajaavai  azhaippiththaarga'l;  appozhuthu  ilkkiyaavin  kumaaranaagiya  eliyaakkeem  ennum  aramanai  visaarippukkaaranum,  sebnaa  ennum  sambirathiyum,  aasaappin  kumaaranaagiya  yoavaak  ennum  ka'nakkanum  avarga'lidaththi’rkup  pu’rappattuppoanaarga'l.  (2iraajaakka’l  18:18)

ரப்சாக்கே  அவர்களை  நோக்கி:  அசீரியா  ராஜாவாகிய  மகாராஜாவானவர்  உரைக்கிறதும்,  நீங்கள்  எசேக்கியாவுக்குச்  சொல்லவேண்டியதும்  என்னவென்றால்:  நீ  நம்பியிருக்கிற  இந்த  நம்பிக்கை  என்ன?  (2இராஜாக்கள்  18:19)

rabsaakkea  avarga'lai  noakki:  aseeriyaa  raajaavaagiya  mahaaraajaavaanavar  uraikki’rathum,  neengga'l  eseakkiyaavukkuch  sollavea'ndiyathum  ennaven’raal:  nee  nambiyirukki’ra  intha  nambikkai  enna?  (2iraajaakka’l  18:19)

யுத்தத்திற்கு  மந்திராலோசனையும்  வல்லமையும்  உண்டென்று  நீ  சொல்லுகிறாயே,  அது  வாய்ப்பேச்சேயன்றி  வேறல்ல;  நீ  என்னை  விரோதிக்கும்படி  யார்மேல்  நம்பிக்கைவைத்திருக்கிறாய்?  (2இராஜாக்கள்  18:20)

yuththaththi’rku  manthiraaloasanaiyum  vallamaiyum  u'nden’ru  nee  sollugi’raayea,  athu  vaayppeachcheayan’ri  vea’ralla;  nee  ennai  viroathikkumpadi  yaarmeal  nambikkaivaiththirukki’raay?  (2iraajaakka’l  18:20)

இதோ,  நெரிந்த  நாணல்கோலாகிய  அந்த  எகிப்தை  நம்புகிறாய்;  அதின்மேல்  ஒருவன்  சாய்ந்தால்,  அது  அவன்  உள்ளங்கையில்  பட்டு  உருவிப்போம்;  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோன்  தன்னை  நம்புகிற  யாவருக்கும்  இப்படியே  இருப்பான்.  (2இராஜாக்கள்  18:21)

ithoa,  nerintha  naa'nalkoalaagiya  antha  egipthai  nambugi’raay;  athinmeal  oruvan  saaynthaal,  athu  avan  u'l'langkaiyil  pattu  uruvippoam;  egipthin  raajaavaagiya  paarvoan  thannai  nambugi’ra  yaavarukkum  ippadiyea  iruppaan.  (2iraajaakka’l  18:21)

நீங்கள்  என்னிடத்தில்:  எங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நம்புகிறோம்  என்று  சொல்லுவீர்களாகில்,  அவருடைய  மேடைகளையும்  அவருடைய  பலிபீடங்களையும்  அல்லவோ  எசேக்கியா  அகற்றி,  யூதாவையும்  எருசலேமையும்  நோக்கி:  எருசலேமிலிருக்கிற  இந்தப்  பலிபீடத்தின்முன்  பணியுங்கள்  என்றானே.  (2இராஜாக்கள்  18:22)

neengga'l  ennidaththil:  engga'l  theavanaagiya  karththarai  nambugi’roam  en’ru  solluveerga'laagil,  avarudaiya  meadaiga'laiyum  avarudaiya  balipeedangga'laiyum  allavoa  eseakkiyaa  agat’ri,  yoothaavaiyum  erusaleamaiyum  noakki:  erusaleamilirukki’ra  inthap  balipeedaththinmun  pa'niyungga'l  en’raanea.  (2iraajaakka’l  18:22)

நான்  உனக்கு  இரண்டாயிரம்  குதிரைகளைக்  கொடுப்பேன்;  நீ  அவைகள்மேல்  ஏறத்தக்கவர்களைச்  சம்பாதிக்கக்கூடுமானால்  அசீரியா  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  சபதங்கூறு.  (2இராஜாக்கள்  18:23)

naan  unakku  ira'ndaayiram  kuthiraiga'laik  koduppean;  nee  avaiga'lmeal  ea’raththakkavarga'laich  sambaathikkakkoodumaanaal  aseeriyaa  raajaavaagiya  en  aa'ndavanoadea  sabathangkoo’ru.  (2iraajaakka’l  18:23)

கூறாதேபோனால்,  நீ  என்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரில்  ஒரே  ஒரு  சிறிய  தலைவனின்  முகத்தை  எப்படித்  திருப்புவாய்?  இரதங்களோடு  குதிரைவீரரும்  வருவார்கள்  என்று  எகிப்தையா  நம்புகிறாய்?  (2இராஜாக்கள்  18:24)

koo’raatheapoanaal,  nee  en  aa'ndavanudaiya  oozhiyakkaararil  orea  oru  si’riya  thalaivanin  mugaththai  eppadith  thiruppuvaay?  irathangga'loadu  kuthiraiveerarum  varuvaarga'l  en’ru  egipthaiyaa  nambugi’raay?  (2iraajaakka’l  18:24)

இப்போதும்  கர்த்தருடைய  கட்டளையில்லாமல்  இந்த  ஸ்தலத்தை  அழிக்கவந்தேனோ?  இந்தத்  தேசத்திற்கு  விரோதமாய்ப்  போய்  அதை  அழித்துப்போடு  என்று  கர்த்தர்  என்னோடே  சொன்னாரே  என்றான்.  (2இராஜாக்கள்  18:25)

ippoathum  karththarudaiya  katta'laiyillaamal  intha  sthalaththai  azhikkavantheanoa?  inthath  theasaththi’rku  viroathamaayp  poay  athai  azhiththuppoadu  en’ru  karththar  ennoadea  sonnaarea  en’raan.  (2iraajaakka’l  18:25)

அப்பொழுது  இல்க்கியாவின்  குமாரன்  எலியாக்கீமும்  செப்னாவும்  யோவாகும்  ரப்சாக்கேயைப்  பார்த்து:  உமது  அடியாரோடே  சீரியபாஷையிலே  பேசும்;  அது  எங்களுக்குத்  தெரியும்;  அலங்கத்திலிருக்கிற  ஜனத்தின்  செவிகள்  கேட்க  எங்களோடே  யூதபாஷையிலே  பேசவேண்டாம்  என்றார்கள்.  (2இராஜாக்கள்  18:26)

appozhuthu  ilkkiyaavin  kumaaran  eliyaakkeemum  sebnaavum  yoavaakum  rabsaakkeayaip  paarththu:  umathu  adiyaaroadea  seeriyabaashaiyilea  peasum;  athu  engga'lukkuth  theriyum;  alanggaththilirukki’ra  janaththin  seviga'l  keadka  engga'loadea  yoothabaashaiyilea  peasavea'ndaam  en’raarga'l.  (2iraajaakka’l  18:26)

அதற்கு  ரப்சாக்கே:  உங்களோடுங்கூடத்  தங்கள்  மலத்தைத்  தின்னவும்  தங்கள்  நீரைக்  குடிக்கவும்  அலங்கத்திலே  தங்கியிருக்கிற  மனுஷரண்டைக்கே  அல்லாமல்,  உன்  ஆண்டவனண்டைக்கும்  உன்னண்டைக்குமா  என்  ஆண்டவன்  இந்த  வார்த்தைகளைப்  பேச  என்னை  அனுப்பினார்  என்று  சொல்லி,  (2இராஜாக்கள்  18:27)

atha’rku  rabsaakkea:  ungga'loadungkoodath  thangga'l  malaththaith  thinnavum  thangga'l  neeraik  kudikkavum  alanggaththilea  thanggiyirukki’ra  manushara'ndaikkea  allaamal,  un  aa'ndavana'ndaikkum  unna'ndaikkumaa  en  aa'ndavan  intha  vaarththaiga'laip  peasa  ennai  anuppinaar  en’ru  solli,  (2iraajaakka’l  18:27)

ரப்சாக்கே  நின்றுகொண்டு  யூதபாஷையிலே  உரத்தசத்தமாய்:  அசீரியா  ராஜாவாகிய  மகாராஜாவுடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (2இராஜாக்கள்  18:28)

rabsaakkea  nin’ruko'ndu  yoothabaashaiyilea  uraththasaththamaay:  aseeriyaa  raajaavaagiya  mahaaraajaavudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (2iraajaakka’l  18:28)

எசேக்கியா  உங்களை  வஞ்சியாதபடி  பாருங்கள்;  அவன்  உங்களை  என்  கையிலிருந்து  தப்புவிக்கமாட்டான்.  (2இராஜாக்கள்  18:29)

eseakkiyaa  ungga'lai  vagnchiyaathapadi  paarungga'l;  avan  ungga'lai  en  kaiyilirunthu  thappuvikkamaattaan.  (2iraajaakka’l  18:29)

கர்த்தர்  நம்மை  நிச்சயமாய்த்  தப்புவிப்பார்;  இந்த  நகரம்  அசீரியா  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை  என்று  சொல்லி,  எசேக்கியா  உங்களைக்  கர்த்தரை  நம்பப்பண்ணுவான்;  அதற்கு  இடங்கொடாதிருங்கள்  என்று  ராஜா  சொல்லுகிறார்.  (2இராஜாக்கள்  18:30)

karththar  nammai  nichchayamaayth  thappuvippaar;  intha  nagaram  aseeriyaa  raajaavin  kaiyil  oppukkodukkappaduvathillai  en’ru  solli,  eseakkiyaa  ungga'laik  karththarai  nambappa'n'nuvaan;  atha’rku  idangkodaathirungga'l  en’ru  raajaa  sollugi’raar.  (2iraajaakka’l  18:30)

எசேக்கியாவின்  சொல்லைக்  கேளாதிருங்கள்;  அசீரியா  ராஜா  சொல்லுகிறதாவது:  நீங்கள்  என்னோடே  ராசியாகி,  காணிக்கையோடே  என்னிடத்தில்  வாருங்கள்;  நான்  வந்து,  உங்களை  உங்கள்  தேசத்துக்கு  ஒப்பான  தானியமும்  திராட்சத்தோட்டமுமுள்ள  தேசமும்,  அப்பமும்  திராட்சரசமுமுள்ள  தேசமும்,  ஒலிவ  எண்ணெயும்  தேனுமுள்ள  தேசமுமாகிய  சீமைக்கு  அழைத்துக்கொண்டுபோகுமளவும்,  (2இராஜாக்கள்  18:31)

eseakkiyaavin  sollaik  kea'laathirungga'l;  aseeriyaa  raajaa  sollugi’rathaavathu:  neengga'l  ennoadea  raasiyaagi,  kaa'nikkaiyoadea  ennidaththil  vaarungga'l;  naan  vanthu,  ungga'lai  ungga'l  theasaththukku  oppaana  thaaniyamum  thiraadchaththoattamumu'l'la  theasamum,  appamum  thiraadcharasamumu'l'la  theasamum,  oliva  e'n'neyum  theanumu'l'la  theasamumaagiya  seemaikku  azhaiththukko'ndupoaguma'lavum,  (2iraajaakka’l  18:31)

அவனவன்  தன்தன்  திராட்சச்செடியின்  கனியையும்  தன்தன்  அத்திமரத்தின்  கனியையும்  புசித்து,  அவனவன்  தன்  தன்  கிணற்றின்  தண்ணீரைக்  குடியுங்கள்;  இவ்விதமாய்  நீங்கள்  சாகாமல்  பிழைப்பீர்கள்;  கர்த்தர்  நம்மைத்  தப்புவிப்பார்  என்று  உங்களைப்  போதனைசெய்ய  எசேக்கியாவுக்குச்  செவிகொடாதிருங்கள்.  (2இராஜாக்கள்  18:32)

avanavan  thanthan  thiraadchachsediyin  kaniyaiyum  thanthan  aththimaraththin  kaniyaiyum  pusiththu,  avanavan  than  than  ki'nat’rin  tha'n'neeraik  kudiyungga'l;  ivvithamaay  neengga'l  saagaamal  pizhaippeerga'l;  karththar  nammaith  thappuvippaar  en’ru  ungga'laip  poathanaiseyya  eseakkiyaavukkuch  sevikodaathirungga'l.  (2iraajaakka’l  18:32)

ஜாதிகளுடைய  தேவர்களில்  யாராவது  தங்கள்  தேசத்தை  அசீரியா  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  (2இராஜாக்கள்  18:33)

jaathiga'ludaiya  theavarga'lil  yaaraavathu  thangga'l  theasaththai  aseeriyaa  raajaavin  kaikkuth  thappuviththathu'ndoa?  (2iraajaakka’l  18:33)

ஆமாத்,  அர்பாத்  பட்டணங்களின்  தேவர்கள்  எங்கே?  செப்பர்வாயிம்,  ஏனா,  ஈவாப்  பட்டணங்களின்  தேவர்கள்  எங்கே?  அவர்கள்  சமாரியாவை  என்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  (2இராஜாக்கள்  18:34)

aamaath,  arpaath  patta'nangga'lin  theavarga'l  enggea?  sepparvaayim,  eanaa,  eevaap  patta'nangga'lin  theavarga'l  enggea?  avarga'l  samaariyaavai  en  kaikkuth  thappuviththathu'ndoa?  (2iraajaakka’l  18:34)

கர்த்தர்  எருசலேமை  என்  கைக்குத்  தப்புவிப்பார்  என்பதற்கு,  அந்தத்  தேசங்களுடைய  எல்லா  தேவர்களுக்குள்ளும்  தங்கள்  தேசத்தை  என்  கைக்குத்  தப்புவித்தவர்  யார்  என்கிறார்  என்று  சொன்னான்.  (2இராஜாக்கள்  18:35)

karththar  erusaleamai  en  kaikkuth  thappuvippaar  enbatha’rku,  anthath  theasangga'ludaiya  ellaa  theavarga'lukku'l'lum  thangga'l  theasaththai  en  kaikkuth  thappuviththavar  yaar  engi’raar  en’ru  sonnaan.  (2iraajaakka’l  18:35)

ஆனாலும்  ஜனங்கள்  அவனுக்கு  ஒரு  வார்த்தையும்  பிரதியுத்தரமாகச்  சொல்லாமல்  மவுனமாயிருந்தார்கள்;  அவனுக்கு  மறுஉத்தரவு  சொல்லவேண்டாம்  என்று  ராஜா  கட்டளையிட்டிருந்தான்.  (2இராஜாக்கள்  18:36)

aanaalum  janangga'l  avanukku  oru  vaarththaiyum  pirathiyuththaramaagach  sollaamal  mavunamaayirunthaarga'l;  avanukku  ma’ruuththaravu  sollavea'ndaam  en’ru  raajaa  katta'laiyittirunthaan.  (2iraajaakka’l  18:36)

அப்பொழுது  இல்க்கியாவின்  குமாரனாகிய  எலியாக்கீம்  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்  குமாரன்  யோவாக்  என்னும்  கணக்கனும்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  எசேக்கியாவினிடத்தில்  வந்து,  ரப்சாக்கேயின்  வார்த்தைகளை  அவனுக்குத்  தெரிவித்தார்கள்.  (2இராஜாக்கள்  18:37)

appozhuthu  ilkkiyaavin  kumaaranaagiya  eliyaakkeem  ennum  aramanai  visaarippukkaaranum,  sebnaa  ennum  sambirathiyum,  aasaappin  kumaaran  yoavaak  ennum  ka'nakkanum  vasthirangga'laik  kizhiththukko'ndu,  eseakkiyaavinidaththil  vanthu,  rabsaakkeayin  vaarththaiga'lai  avanukkuth  theriviththaarga'l.  (2iraajaakka’l  18:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!