இஸ்ரவேலின்
ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம்
வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய
அமத்சியாவின் குமாரன் அசரியா
ராஜாவானான். (2இராஜாக்கள் 15:1)
isravealin raajaavaagiya yerobeyaamin irubaththeazhaam varushaththil, yoothaavin
raajaavaagiya amathsiyaavin kumaaran
asariyaa
raajaavaanaan. (2iraajaakka’l 15:1)
அவன் ராஜாவாகிறபோது பதினாறு
வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம்
எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம்
நகரத்தாளான அவன் தாயின்
பேர் எக்கோலியாள். (2இராஜாக்கள்
15:2)
avan raajaavaagi’rapoathu pathinaa’ru vayathaayirunthu, aimbaththira'ndu varusham
erusaleamilea arasaa'ndaan; erusaleam nagaraththaa'laana avan thaayin pear ekkoaliyaa'l. (2iraajaakka’l 15:2)
அவன் தன் தகப்பனாகிய
அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின்
பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
(2இராஜாக்கள் 15:3)
avan than thagappanaagiya amathsiyaa seythapadiyellaam karththarin
paarvaikkuch
semmaiyaanathaich seythaan. (2iraajaakka’l 15:3)
மேடைகள்
மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள்
இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத்
தூபங்காட்டிவந்தார்கள். (2இராஜாக்கள் 15:4)
meadaiga'l maaththiram agat’rappadavillai; janangga'l innum meadaiga'lmeal baliyittuth thoobangkaattivanthaarga'l. (2iraajaakka’l 15:4)
கர்த்தர்
இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து
ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின்
குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின்
ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
(2இராஜாக்கள் 15:5)
karththar intha raajaavai vaathiththathinaal, avan than mara'nanaa'lmattum kushdaroagiyaayirunthu, thaniththu
oru veettilea vaasampa'n'ninaan; raajaavin
kumaaranaagiya yoathaam
aramanai visaarippukkaaranaayirunthu, theasaththin janangga'lai niyaayam
visaariththaan. (2iraajaakka’l 15:5)
அசரியாவின்
மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும்,
யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப்
புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:6)
asariyaavin mat’ra varththamaanangga'lum, avan seythavai yaavum,
yoothaavudaiya raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa
ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:6)
அசரியா
தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத்
தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம்
அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(2இராஜாக்கள் 15:7)
asariyaa than pithaakka'loadea niththiraiyadainthapin, avanaith
thaaveethin nagaraththilea avan pithaakka'la'ndaiyilea adakkampa'n'ninaarga'l; avan kumaaranaagiya yoathaam avan sthaanaththil raajaavaanaan. (2iraajaakka’l 15:7)
யூதாவின்
ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே
யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா
இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம்
ராஜ்யபாரம்பண்ணி, (2இராஜாக்கள் 15:8)
yoothaavin raajaavaagiya asariyaavin muppaththettaam varushaththilea yerobeyaamin kumaaranaagiya sagariyaa isravealinmeal samaariyaavilea aa’rumaatham raajyabaarampa'n'ni, (2iraajaakka’l 15:8)
தன் பிதாக்கள் செய்ததுபோல,
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்;
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின்
குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை
அவன் விட்டு விலகவில்லை.
(2இராஜாக்கள் 15:9)
than pithaakka'l seythathupoala, karththarin
paarvaikkup pollaappaanathaich seythaan; isravealaip
paavagnseyyappa'n'nina neabaaththin kumaaranaagiya yerobeyaamin paavangga'lai avan vittu vilagavillai. (2iraajaakka’l 15:9)
யாபேசின்
குமாரனாகிய சல்லூம் அவனுக்கு
விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின்
முன்பாக அவனை வெட்டிக்
கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில்
ராஜாவானான். (2இராஜாக்கள் 15:10)
yaabeasin kumaaranaagiya salloom avanukku
viroathamaagak kattuppaadupa'n'ni, janaththin
munbaaga
avanai vettik kon’rupoattu, avan sthaanaththil
raajaavaanaan. (2iraajaakka’l 15:10)
சகரியாவின்
மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல்
ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில்
அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:11)
sagariyaavin mat’ra varththamaanangga'l israveal
raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:11)
உன் குமாரர் நாலாம்
தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே
சொன்ன வார்த்தை இதுதான்;
அப்படியே ஆயிற்று. (2இராஜாக்கள்
15:12)
un kumaarar
naalaam thalaimu’raimattum isravealudaiya singgaasanaththinmeal veet’riruppaarga'l en’ru karththar yegoovoadea sonna vaarththai
ithuthaan; appadiyea aayit’ru. (2iraajaakka’l 15:12)
யூதாவின்
ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில்
யாபேசின் குமாரனாகிய சல்லூம்
ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
(2இராஜாக்கள் 15:13)
yoothaavin raajaavaagiya usiyaavin muppaththonbathaam varushaththil
yaabeasin
kumaaranaagiya salloom raajaavaagi, samaariyaavil oru maatham arasaa'ndaan. (2iraajaakka’l 15:13)
காதியின்
குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு
வந்து, யாபேசின் குமாரனாகிய
சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக்
கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில்
ராஜாவானான். (2இராஜாக்கள் 15:14)
kaathiyin kumaaranaagiya menaageam thirsaavilirunthu samaariyaavukku vanthu,
yaabeasin
kumaaranaagiya salloomaich samaariyaavilea vettik kon’rupoattu, avan sthaanaththil
raajaavaanaan. (2iraajaakka’l 15:14)
சல்லூமின்
மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல்
ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில்
அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:15)
salloomin mat’ra varththamaanangga'lum, avan seytha
kattuppaadum, israveal
raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:15)
அப்பொழுது
மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள
யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள்
தனக்கு வாசலைத் திறக்கவில்லை
என்று அவர்களை வெட்டி,
அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான். (2இராஜாக்கள்
15:16)
appozhuthu menaageam thipsaa patta'naththaiyum, athilu'l'la
yaavaiyum, thirsaathodanggi athin ellaiga'laiyum mu’riya adiththaan; avarga'l thanakku
vaasalaith thi’rakkavillai en’ru avarga'lai vetti, avarga'ludaiya karppavathiga'laiyellaam kee’rippoattaan. (2iraajaakka’l 15:16)
யூதாவின்
ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில்,
காதியின் குமாரனாகிய மெனாகேம்
இஸ்ரவேல்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே
பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
(2இராஜாக்கள் 15:17)
yoothaavin raajaavaagiya asariyaavin muppaththonbathaam varushaththil, kaathiyin
kumaaranaagiya menaageam isravealmeal
raajaavaagich
samaariyaavilea paththuvarusham raajyabaarampa'n'ni, avan than naadka'lilellaam karththarin
paarvaikkup pollaappaanathaich seythaan. (2iraajaakka’l 15:17)
இஸ்ரவேலைப்
பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய
யெரொபெயாமின் பாவங்களை விட்டு
விலகாதிருந்தான். (2இராஜாக்கள் 15:18)
isravealaip paavagnseyyappa'n'nina neabaaththin kumaaranaagiya yerobeyaamin paavangga'lai vittu vilagaathirunthaan. (2iraajaakka’l 15:18)
அசீரியாவின்
ராஜாவாகிய பூல், தேசத்திற்கு
விரோதமாய் வந்தான்; அப்பொழுது
மெனாகேம் பூலின் உதவியினால்
ராஜ்யபாரத்தைத் தன் கையில்
பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம்
தாலந்து வெள்ளி கொடுத்தான்.
(2இராஜாக்கள் 15:19)
aseeriyaavin raajaavaagiya pool, theasaththi’rku viroathamaay vanthaan;
appozhuthu menaageam poolin uthaviyinaal
raajyabaaraththaith than kaiyil balappaduththumporuttu, avanukku aayiram
thaalanthu ve'l'li koduththaan.
(2iraajaakka’l 15:19)
இந்தப்
பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக்
கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில்
பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது
வெள்ளிச் சேக்கல் தண்டினான்;
அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல்
திரும்பிப்போனான். (2இராஜாக்கள் 15:20)
inthap pa'naththai
aseeriyaavin raajaavukkuk
kodukkumpadi, menaageam isravealil balaththa aisuvariyavaanga'lidaththil aa'l on’ri’rku aimbathu ve'l'lich seakkal tha'ndinaan;
appadiyea aseeriyaavin raajaa theasaththilea ni’rkaamal thirumbippoanaan. (2iraajaakka’l 15:20)
மெனாகேமின்
மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும்,
இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப்
புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:21)
menaageamin mat’ra varththamaanangga'lum, avan seythavai yaavum,
israveal raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa
ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:21)
மெனாகேம்
தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா
அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(2இராஜாக்கள் 15:22)
menaageam than pithaakka'loadu niththiraiyadainthapin, avan kumaaranaagiya pekkaagiyaa avan sthaanaththil
raajaavaanaan. (2iraajaakka’l 15:22)
யூதாவின்
ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம்
வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய
பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி
சமாரியாவிலே இரண்டு வருஷம்
ராஜ்யபாரம்பண்ணி, (2இராஜாக்கள் 15:23)
yoothaavin raajaavaagiya asariyaavin aimbathaam varushaththil, menaageamin kumaaranaagiya pekkaagiyaa isravealinmeal raajaavaagi samaariyaavilea ira'ndu
varusham raajyabaarampa'n'ni, (2iraajaakka’l 15:23)
கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்;
அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின்
குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை
விட்டு விலகவில்லை. (2இராஜாக்கள்
15:24)
karththarin paarvaikkup
pollaappaanathaich seythaan; avan isravealaip paavagnseyyappa'n'nina neabaaththin kumaaranaagiya yerobeyaamin paavangga'lai vittu vilagavillai. (2iraajaakka’l 15:24)
ஆனாலும்
ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா
என்னும் அவனுடைய சேர்வைக்காரன்
அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத்
புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும்
அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின்
வீடாகிய அரமனையிலே சமாரியாவில்
வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(2இராஜாக்கள் 15:25)
aanaalum remaliyaavin
kumaaranaagiya pekkaa
ennum avanudaiya searvaikkaaran avanukku
viroathamaayk kattuppaadupa'n'ni,
keeleayaath puththiraril aimbathupearaik koottikko'ndu, avanaiyum
arkoabaiyum aariyeayaiyum raajaavin
veedaagiya aramanaiyilea samaariyaavil vettik kon’rupoattu, avan sthaanaththil
raajaavaanaan. (2iraajaakka’l 15:25)
பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும்,
இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப்
புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:26)
pekkaagiyaavin mat’ra varththamaanangga'lum, avan seythavai yaavum,
israveal raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa
ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:26)
யூதாவின்
ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில்,
ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா
இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே
இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, (2இராஜாக்கள்
15:27)
yoothaavin raajaavaagiya asariyaavin aimbaththira'ndaam varushaththil, remaliyaavin
kumaaranaagiya pekkaa
isravealinmeal raajaavaagich samaariyaavilea irubathuvarusham raajyabaarampa'n'ni, (2iraajaakka’l 15:27)
கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்;
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின்
குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை
அவன் விட்டு விலகவில்லை.
(2இராஜாக்கள் 15:28)
karththarin paarvaikkup
pollaappaanathaich seythaan; isravealaip
paavagnseyyappa'n'nina neabaaththin kumaaranaagiya yerobeyaamin paavangga'lai avan vittu vilagavillai. (2iraajaakka’l 15:28)
இஸ்ரவேலின்
ராஜாவாகிய பெக்காவின் நாட்களில்
அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து,
ஈயோனையும், பெத்மாக்கா என்னும்
ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும்,
ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய
நப்தலி தேசமனைத்தையும் பிடித்து,
குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
(2இராஜாக்கள் 15:29)
isravealin raajaavaagiya pekkaavin
naadka'lil aseeriyaavin raajaavaagiya thigilaathpileasar vanthu,
eeyoanaiyum, bethmaakkaa ennum aabealaiyum, yanoavaakaiyum, keatheasaiyum, aathsoaraiyum, keeleayaaththaiyum, kalileayaavaagiya napthali
theasamanaiththaiyum pidiththu,
kudiga'laich si’raiyaaga aseeriyaavukkuk ko'ndupoanaan. (2iraajaakka’l 15:29)
ஏலாவின்
குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின்
குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க்
கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின்
குமாரனாகிய யோதாமின் இருபதாம்
வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு,
அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(2இராஜாக்கள் 15:30)
ealaavin kumaaranaagiya oaseyaa remaliyaavin
kumaaranaagiya pekkaavukku
viroathamaayk kattuppaadupa'n'ni,
avanai usiyaavin kumaaranaagiya yoathaamin
irubathaam varushaththil
vettik
kon’rupoattu, avan sthaanaththil raajaavaanaan. (2iraajaakka’l 15:30)
பெக்காவின்
மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும்,
இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப்
புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:31)
pekkaavin mat’ra varththamaanangga'lum, avan seythavai yaavum,
israveal raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa
ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:31)
இஸ்ரவேலின்
ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன்
பெக்காவின் இரண்டாம் வருஷத்தில்,
யூதாவின் ராஜாவாகிய உசியாவின்
குமாரன் யோதாம் ராஜாவானான்.
(2இராஜாக்கள் 15:32)
isravealin raajaavaagiya remaliyaavin
kumaaran pekkaavin ira'ndaam
varushaththil, yoothaavin raajaavaagiya usiyaavin kumaaran
yoathaam raajaavaanaan. (2iraajaakka’l 15:32)
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து
வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம்
அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள். (2இராஜாக்கள்
15:33)
avan raajaavaagi’rapoathu, irubaththainthu vayathaayirunthu, erusaleamilea pathinaa’ruvarusham arasaa'ndaan; saathoakkin kumaaraththiyaagiya avan thaayin pear erusaa'l. (2iraajaakka’l 15:33)
அவன் கர்த்தரின் பார்வைக்குச்
செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
(2இராஜாக்கள் 15:34)
avan karththarin
paarvaikkuch
semmaiyaanathaich seythaan; than thagappanaagiya usiyaa seythapadiyellaam seythaan. (2iraajaakka’l 15:34)
மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள்
இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத்
தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின்
உயர்ந்த வாசலைக் கட்டினான்.
(2இராஜாக்கள் 15:35)
meadaiga'lmaaththiram
agat’rappadavillai; janangga'l innum meadaiga'linmeal baliyittuth thoobangkaatti vanthaarga'l; ivan karththarudaiya aalayaththin
uyarntha vaasalaik kattinaan. (2iraajaakka’l 15:35)
யோதாமின்
மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும்,
யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப்
புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. (2இராஜாக்கள்
15:36)
yoathaamin mat’ra varththamaanangga'lum, avan seythavai yaavum,
yoothaavudaiya raajaakka'lin naa'laagamap pusthagaththil allavoa
ezhuthiyirukki’rathu. (2iraajaakka’l 15:36)
அந்நாட்களிலே
கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய
ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய
பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக
அனுப்பத்தொடங்கினார். (2இராஜாக்கள் 15:37)
annaadka'lilea karththar seeriyaavin raajaavaagiya reathseenaiyum, remaliyaavin
kumaaranaagiya pekkaavaiyum
yoothaavukku viroathamaaga anuppaththodangginaar. (2iraajaakka’l 15:37)
யோதாம்
தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின்
பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில்
ராஜாவானான். (2இராஜாக்கள் 15:38)
yoathaam than pithaakka'loadea niththiraiyadainthapin, than thagappanaagiya thaaveethin
patta'naththilea than pithaakka'la'ndaiyil adakkampa'n'nappattaan; avan kumaaranaagiya aagaas avan sthaanaththil
raajaavaanaan. (2iraajaakka’l 15:38)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!