Friday, September 09, 2016

2 Iraajaakka'l 14 | 2 இராஜாக்கள் 14 | 2 Kings 14

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாகாசின்  குமாரன்  யோவாசுடைய  இரண்டாம்  வருஷத்திலே  யூதாவின்  ராஜாவாகிய  யோவாசின்  குமாரன்  அமத்சியா  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  14:1)

isravealin  raajaavaagiya  yoavaagaasin  kumaaran  yoavaasudaiya  ira'ndaam  varushaththilea  yoothaavin  raajaavaagiya  yoavaasin  kumaaran  amathsiyaa  raajaavaanaan.  (2iraajaakka’l  14:1)

அவன்  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  எருசலேமிலே  இருபத்தொன்பது  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  எருசலேம்  நகரத்தாளான  அவன்  தாயின்பேர்  யொவதானாள்.  (2இராஜாக்கள்  14:2)

avan  raajaavaagi’rapoathu  irubaththainthu  vayathaayirunthu,  erusaleamilea  irubaththonbathu  varusham  raajyabaarampa'n'ninaan;  erusaleam  nagaraththaa'laana  avan  thaayinpear  yovathaanaa'l.  (2iraajaakka’l  14:2)

அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்;  ஆனாலும்  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போலல்ல;  தன்  தகப்பனாகிய  யோவாஸ்  செய்தபடியெல்லாம்  செய்தான்.  (2இராஜாக்கள்  14:3)

avan  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seythaan;  aanaalum  than  thagappanaagiya  thaaveethaippoalalla;  than  thagappanaagiya  yoavaas  seythapadiyellaam  seythaan.  (2iraajaakka’l  14:3)

மேடைகள்மாத்திரம்  அகற்றப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகளின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  (2இராஜாக்கள்  14:4)

meadaiga'lmaaththiram  agat’rappadavillai;  janangga'l  innum  meadaiga'linmeal  baliyittuth  thoobangkaattivanthaarga'l.  (2iraajaakka’l  14:4)

ராஜ்யபாரம்  அவன்  கையிலே  ஸ்திரப்பட்டபோது,  அவனுடைய  தகப்பனாகிய  ராஜாவைக்  கொன்றுபோட்ட  தன்  ஊழியக்காரரைக்  கொன்றுபோட்டான்.  (2இராஜாக்கள்  14:5)

raajyabaaram  avan  kaiyilea  sthirappattapoathu,  avanudaiya  thagappanaagiya  raajaavaik  kon’rupoatta  than  oozhiyakkaararaik  kon’rupoattaan.  (2iraajaakka’l  14:5)

ஆனாலும்  பிள்ளைகளினிமித்தம்  பிதாக்கள்  கொலைசெய்யப்படாமலும்  பிதாக்களினிமித்தம்  பிள்ளைகள்  கொலைசெய்யப்படாமலும்,  அவனவன்  செய்த  பாவத்தினிமித்தம்  அவனவன்  கொலைசெய்யப்படவேண்டும்  என்று  மோசேயின்  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடி,  கர்த்தர்  கட்டளையிட்டபிரகாரம்  கொலைசெய்தவர்களின்  பிள்ளைகளை  அவன்  கொல்லாதிருந்தான்.  (2இராஜாக்கள்  14:6)

aanaalum  pi'l'laiga'linimiththam  pithaakka'l  kolaiseyyappadaamalum  pithaakka'linimiththam  pi'l'laiga'l  kolaiseyyappadaamalum,  avanavan  seytha  paavaththinimiththam  avanavan  kolaiseyyappadavea'ndum  en’ru  moaseayin  niyaayappiramaa'na  pusthagaththil  ezhuthiyirukki’rapadi,  karththar  katta'laiyittapiragaaram  kolaiseythavarga'lin  pi'l'laiga'lai  avan  kollaathirunthaan.  (2iraajaakka’l  14:6)

அவன்  உப்புப்பள்ளத்தாக்கிலே  ஏதோமியரில்  பதினாயிரம்பேரை  மடங்கடித்து,  யுத்தஞ்செய்து  சேலாவைப்  பிடித்து,  அதற்கு  இந்நாள்வரைக்கும்  இருக்கிற  யொக்தியேல்  என்னும்  பேரைத்  தரித்தான்.  (2இராஜாக்கள்  14:7)

avan  uppuppa'l'laththaakkilea  eathoamiyaril  pathinaayirampearai  madanggadiththu,  yuththagnseythu  sealaavaip  pidiththu,  atha’rku  innaa'lvaraikkum  irukki’ra  yokthiyeal  ennum  pearaith  thariththaan.  (2iraajaakka’l  14:7)

அப்பொழுது  அமத்சியா  யெகூவின்  குமாரனாகிய  யோவாகாசின்  குமாரன்  யோவாஸ்  என்னும்  இஸ்ரவேலின்  ராஜாவிடத்தில்  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நம்முடைய  சாமர்த்தியத்தைப்  பார்ப்போம்  வா  என்று  சொல்லச்சொன்னான்.  (2இராஜாக்கள்  14:8)

appozhuthu  amathsiyaa  yegoovin  kumaaranaagiya  yoavaagaasin  kumaaran  yoavaas  ennum  isravealin  raajaavidaththil  sthaanaabathiga'lai  anuppi:  nammudaiya  saamarththiyaththaip  paarppoam  vaa  en’ru  sollachsonnaan.  (2iraajaakka’l  14:8)

அதற்கு  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாஸ்  யூதாவின்  ராஜாவாகிய  அமத்சியாவுக்கு  ஆள்  அனுப்பி:  லீபனோனிலுள்ள  முட்செடியானது,  லீபனோனிலுள்ள  கேதுருமரத்தை  நோக்கி,  நீ  உன்  மகளை  என்  மகனுக்கு  மனைவியாக  விவாகஞ்செய்துகொடு  என்று  சொல்லச்சொல்லிற்று;  ஆனாலும்  லீபனோனிலுள்ள  ஒரு  காட்டுமிருகம்  அந்த  வழி  போகையில்  ஓடி  அந்த  முட்செடியை  மிதித்துப்போட்டது.  (2இராஜாக்கள்  14:9)

atha’rku  isravealin  raajaavaagiya  yoavaas  yoothaavin  raajaavaagiya  amathsiyaavukku  aa'l  anuppi:  leebanoanilu'l'la  mudchediyaanathu,  leebanoanilu'l'la  keathurumaraththai  noakki,  nee  un  maga'lai  en  maganukku  manaiviyaaga  vivaagagnseythukodu  en’ru  sollachsollit’ru;  aanaalum  leebanoanilu'l'la  oru  kaattumirugam  antha  vazhi  poagaiyil  oadi  antha  mudchediyai  mithiththuppoattathu.  (2iraajaakka’l  14:9)

நீ  ஏதோமியரை  முறிய  அடித்ததினால்  உன்  இருதயம்  உன்னைக்  கர்வங்கொள்ளப்பண்ணினது;  நீ  பெருமைபாராட்டிக்கொண்டு  உன்  வீட்டிலே  இரு;  நீயும்  உன்னோடேகூட  யூதாவும்  விழும்படிக்கு,  பொல்லாப்பைத்  தேடிக்கொள்வானேன்  என்று  சொல்லச்சொன்னான்.  (2இராஜாக்கள்  14:10)

nee  eathoamiyarai  mu’riya  adiththathinaal  un  iruthayam  unnaik  karvangko'l'lappa'n'ninathu;  nee  perumaipaaraattikko'ndu  un  veettilea  iru;  neeyum  unnoadeakooda  yoothaavum  vizhumpadikku,  pollaappaith  theadikko'lvaanean  en’ru  sollachsonnaan.  (2iraajaakka’l  14:10)

ஆனாலும்  அமத்சியா  செவிகொடாதேபோனான்;  ஆகையால்  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாஸ்  வந்தான்;  யூதாவிலுள்ள  பெத்ஷிமேசிலே  அவனும்,  யூதாவின்  ராஜா  அமத்சியாவும்,  தங்கள்  சாமர்த்தியத்தைப்  பார்க்கிறபோது,  (2இராஜாக்கள்  14:11)

aanaalum  amathsiyaa  sevikodaatheapoanaan;  aagaiyaal  isravealin  raajaavaagiya  yoavaas  vanthaan;  yoothaavilu'l'la  bethshimeasilea  avanum,  yoothaavin  raajaa  amathsiyaavum,  thangga'l  saamarththiyaththaip  paarkki’rapoathu,  (2iraajaakka’l  14:11)

யூதா  ஜனங்கள்  இஸ்ரவேலருக்கு  முன்பாக  முறிந்து  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  (2இராஜாக்கள்  14:12)

yoothaa  janangga'l  isravealarukku  munbaaga  mu’rinthu  avaravar  thangga'l  koodaarangga'lukku  oadippoanaarga'l.  (2iraajaakka’l  14:12)

அகசியாவின்  குமாரனாகிய  யோவாசின்  குமாரன்  அமத்சியா  என்னும்  யூதாவின்  ராஜாவையோ,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாஸ்  பெத்ஷிமேசிலே  பிடித்து,  எருசலேமுக்கு  வந்து,  எருசலேமின்  அலங்கத்திலே  எப்பிராயீம்  வாசல்  தொடங்கி  மூலைவாசல்மட்டும்  நானூறு  முழ  நீளம்  இடித்துப்போட்டு,  (2இராஜாக்கள்  14:13)

agasiyaavin  kumaaranaagiya  yoavaasin  kumaaran  amathsiyaa  ennum  yoothaavin  raajaavaiyoa,  isravealin  raajaavaagiya  yoavaas  bethshimeasilea  pidiththu,  erusaleamukku  vanthu,  erusaleamin  alanggaththilea  eppiraayeem  vaasal  thodanggi  moolaivaasalmattum  naanoo’ru  muzha  nee'lam  idiththuppoattu,  (2iraajaakka’l  14:13)

கர்த்தருடைய  ஆலயத்திலும்  ராஜாவுடைய  அரமனைப்  பொக்கிஷங்களிலும்  அகப்பட்ட  பொன்  வெள்ளி  யாவையும்,  சகல  பணிமுட்டுகளையும்,  கிரியிருப்பவர்களையும்  பிடித்துக்கொண்டு  சமாரியாவுக்குத்  திரும்பிப்போனான்.  (2இராஜாக்கள்  14:14)

karththarudaiya  aalayaththilum  raajaavudaiya  aramanaip  pokkishangga'lilum  agappatta  pon  ve'l'li  yaavaiyum,  sagala  pa'nimuttuga'laiyum,  kiriyiruppavarga'laiyum  pidiththukko'ndu  samaariyaavukkuth  thirumbippoanaan.  (2iraajaakka’l  14:14)

யோவாஸ்  செய்த  மற்ற  வர்த்தமானங்களும்,  அவனுடைய  வல்லமையும்,  அவன்  யூதாவின்  ராஜாவாகிய  அமத்சியாவோடு  யுத்தம்பண்ணின  விதமும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  14:15)

yoavaas  seytha  mat’ra  varththamaanangga'lum,  avanudaiya  vallamaiyum,  avan  yoothaavin  raajaavaagiya  amathsiyaavoadu  yuththampa'n'nina  vithamum,  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  14:15)

யோவாஸ்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  சமாரியாவில்  இஸ்ரவேலின்  ராஜாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  யெரொபெயாம்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  14:16)

yoavaas  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  samaariyaavil  isravealin  raajaakka'la'ndaiyilea  adakkampa'n'nappattaan;  avan  kumaaranaagiya  yerobeyaam  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  14:16)

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாகாசின்  குமாரன்  யோவாஸ்  மரணமடைந்தபின்,  யூதாவின்  ராஜாவாகிய  யோவாசின்  குமாரன்  அமத்சியா  பதினைந்துவருஷம்  உயிரோடிருந்தான்.  (2இராஜாக்கள்  14:17)

isravealin  raajaavaagiya  yoavaagaasin  kumaaran  yoavaas  mara'namadainthapin,  yoothaavin  raajaavaagiya  yoavaasin  kumaaran  amathsiyaa  pathinainthuvarusham  uyiroadirunthaan.  (2iraajaakka’l  14:17)

அமத்சியாவின்  மற்ற  வர்த்தமானங்கள்  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  14:18)

amathsiyaavin  mat’ra  varththamaanangga'l  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  14:18)

எருசலேமிலே  அவனுக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணினார்கள்;  அப்பொழுது  லாகீசுக்கு  ஓடிப்போனான்;  ஆனாலும்  அவர்கள்  அவன்  பிறகே  லாகீசுக்கு  மனுஷரை  அனுப்பி,  அங்கே  அவனைக்  கொன்றுபோட்டு,  (2இராஜாக்கள்  14:19)

erusaleamilea  avanukku  viroathamaagak  kattuppaadu  pa'n'ninaarga'l;  appozhuthu  laageesukku  oadippoanaan;  aanaalum  avarga'l  avan  pi’ragea  laageesukku  manusharai  anuppi,  anggea  avanaik  kon’rupoattu,  (2iraajaakka’l  14:19)

குதிரைகள்மேல்  அவனை  எடுத்துக்கொண்டுவந்தார்கள்;  அவன்  எருசலேமில்  இருக்கிற  தாவீதின்  நகரத்திலே  தன்  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (2இராஜாக்கள்  14:20)

kuthiraiga'lmeal  avanai  eduththukko'nduvanthaarga'l;  avan  erusaleamil  irukki’ra  thaaveethin  nagaraththilea  than  pithaakka'la'ndaiyilea  adakkampa'n'nappattaan.  (2iraajaakka’l  14:20)

யூதா  ஜனங்கள்  யாவரும்  பதினாறு  வயதுள்ள  அசரியாவை  அழைத்துவந்து  அவனை  அவன்  தகப்பனாகிய  அமத்சியாவின்  ஸ்தானத்தில்  ராஜாவாக்கினார்கள்.  (2இராஜாக்கள்  14:21)

yoothaa  janangga'l  yaavarum  pathinaa’ru  vayathu'l'la  asariyaavai  azhaiththuvanthu  avanai  avan  thagappanaagiya  amathsiyaavin  sthaanaththil  raajaavaakkinaarga'l.  (2iraajaakka’l  14:21)

ராஜா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்பு,  இவன்  ஏலாதைக்  கட்டி,  அதைத்  திரும்ப  யூதாவின்  வசமாக்கிக்கொண்டான்.  (2இராஜாக்கள்  14:22)

raajaa  than  pithaakka'loadea  niththiraiyadainthapinbu,  ivan  ealaathaik  katti,  athaith  thirumba  yoothaavin  vasamaakkikko'ndaan.  (2iraajaakka’l  14:22)

யூதாவின்  ராஜாவாகிய  யோவாசின்  குமாரன்  அமத்சியாவின்  பதினைந்தாம்  வருஷத்தில்,  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாசின்  குமாரன்  யெரொபெயாம்  ராஜாவாகி  சமாரியாவில்  நாற்பத்தொரு  வருஷம்  அரசாண்டு,  (2இராஜாக்கள்  14:23)

yoothaavin  raajaavaagiya  yoavaasin  kumaaran  amathsiyaavin  pathinainthaam  varushaththil,  isravealin  raajaavaagiya  yoavaasin  kumaaran  yerobeyaam  raajaavaagi  samaariyaavil  naa’rpaththoru  varusham  arasaa'ndu,  (2iraajaakka’l  14:23)

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  பாவங்கள்  ஒன்றையும்  அவன்  விட்டு  விலகவில்லை.  (2இராஜாக்கள்  14:24)

karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  isravealaip  paavagnseyyappa'n'nina  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  paavangga'l  on’raiyum  avan  vittu  vilagavillai.  (2iraajaakka’l  14:24)

காத்தேப்பேர்  ஊரானாகிய  அமித்தாய்  என்னும்  தீர்க்கதரிசியின்  குமாரன்  யோனா  என்னும்  தம்முடைய  ஊழியக்காரனைக்கொண்டு  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  அவன்  ஆமாத்தின்  எல்லை  முதற்கொண்டு  சமபூமியின்  கடல்மட்டுமுள்ள  இஸ்ரவேலின்  எல்லைகளைத்  திரும்பச்  சேர்த்துக்கொண்டான்.  (2இராஜாக்கள்  14:25)

kaaththeappear  ooraanaagiya  amiththaay  ennum  theerkkatharisiyin  kumaaran  yoanaa  ennum  thammudaiya  oozhiyakkaaranaikko'ndu  isravealin  theavanaagiya  karththar  solliyiruntha  vaarththaiyinpadiyea,  avan  aamaaththin  ellai  mutha’rko'ndu  samaboomiyin  kadalmattumu'l'la  isravealin  ellaiga'laith  thirumbach  searththukko'ndaan.  (2iraajaakka’l  14:25)

இஸ்ரவேலின்  உபத்திரவம்  மிகவும்  கொடிது  என்றும்,  அடைபட்டவனுமில்லை,  விடுபட்டவனுமில்லை,  இஸ்ரவேலுக்கு  ஒத்தாசை  செய்கிறவனுமில்லை  என்றும்  கர்த்தர்  பார்த்தார்.  (2இராஜாக்கள்  14:26)

isravealin  ubaththiravam  migavum  kodithu  en’rum,  adaipattavanumillai,  vidupattavanumillai,  isravealukku  oththaasai  seygi’ravanumillai  en’rum  karththar  paarththaar.  (2iraajaakka’l  14:26)

இஸ்ரவேலின்  பேரை  வானத்தின்  கீழிருந்து  குலைத்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லாமல்,  யோவாசின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  கையால்  அவர்களை  ரட்சித்தார்.  (2இராஜாக்கள்  14:27)

isravealin  pearai  vaanaththin  keezhirunthu  kulaiththuppoaduvean  en’ru  karththar  sollaamal,  yoavaasin  kumaaranaagiya  yerobeyaamin  kaiyaal  avarga'lai  radchiththaar.  (2iraajaakka’l  14:27)

யெரொபெயாமின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  யுத்தம்பண்ணி,  யூதாவுக்கு  இருந்த  தமஸ்குவையும்  ஆமாத்தையும்  இஸ்ரவேலுக்காகத்  திரும்பச்  சேர்த்துக்கொண்ட  அவனுடைய  வல்லமையும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  14:28)

yerobeyaamin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  avan  yuththampa'n'ni,  yoothaavukku  iruntha  thamaskuvaiyum  aamaaththaiyum  isravealukkaagath  thirumbach  searththukko'nda  avanudaiya  vallamaiyum,  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  14:28)

யெரொபெயாம்  இஸ்ரவேலின்  ராஜாக்களாகிய  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  சகரியா  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  14:29)

yerobeyaam  isravealin  raajaakka'laagiya  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avan  kumaaranaagiya  sagariyaa  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  14:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!