Friday, September 09, 2016

2 Iraajaakka'l 13 | 2 இராஜாக்கள் 13 | 2 Kings 13

அகசியா  என்னும்  யூதாவுடைய  ராஜாவின்  குமாரனாகிய  யோவாசுடைய  இருபத்துமூன்றாம்  வருஷத்தில்  யெகூவின்  குமாரனாகிய  யோவாகாஸ்  இஸ்ரவேலின்மேல்  சமாரியாவிலே  பதினேழுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  (2இராஜாக்கள்  13:1)

agasiyaa  ennum  yoothaavudaiya  raajaavin  kumaaranaagiya  yoavaasudaiya  irubaththumoon’raam  varushaththil  yegoovin  kumaaranaagiya  yoavaagaas  isravealinmeal  samaariyaavilea  pathineazhuvarusham  raajyabaarampa'n'ni,  (2iraajaakka’l  13:1)

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  பாவங்களைப்  பின்பற்றி  நடந்தான்;  அவைகளை  விட்டு  அவன்  விலகவில்லை.  (2இராஜாக்கள்  13:2)

karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  isravealaip  paavagnseyyappa'n'nina  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  paavangga'laip  pinpat’ri  nadanthaan;  avaiga'lai  vittu  avan  vilagavillai.  (2iraajaakka’l  13:2)

ஆகையால்  கர்த்தருக்கு  இஸ்ரவேலின்மேல்  கோபமூண்டு,  அவர்களைச்  சீரியாவின்  ராஜாவாகிய  ஆசகேலின்  கையிலும்  ஆசகேலின்  குமாரனாகிய  பெனாதாத்தின்  கையிலும்  அந்நாட்களிலெல்லாம்  ஒப்புக்கொடுத்தார்.  (2இராஜாக்கள்  13:3)

aagaiyaal  karththarukku  isravealinmeal  koabamoo'ndu,  avarga'laich  seeriyaavin  raajaavaagiya  aasakealin  kaiyilum  aasakealin  kumaaranaagiya  benaathaaththin  kaiyilum  annaadka'lilellaam  oppukkoduththaar.  (2iraajaakka’l  13:3)

யோவாகாஸ்  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கிப்  பிரார்த்தித்தான்;  சீரியாவின்  ராஜா  இஸ்ரவேலை  ஒடுக்குகிறதினால்  அவர்கள்  ஒடுங்கிப்போகிறதைப்  பார்த்து:  கர்த்தர்  அவனுக்குச்  செவிகொடுத்தார்.  (2இராஜாக்கள்  13:4)

yoavaagaas  karththarudaiya  samugaththai  noakkip  piraarththiththaan;  seeriyaavin  raajaa  isravealai  odukkugi’rathinaal  avarga'l  odunggippoagi’rathaip  paarththu:  karththar  avanukkuch  sevikoduththaar.  (2iraajaakka’l  13:4)

கர்த்தர்  இஸ்ரவேலுக்கு  ஒரு  ரட்சகனைக்  கொடுத்ததினால்,  அவர்கள்  சீரியருடைய  கையின்கீழிருந்து  நீங்கலானார்கள்;  ஆதலால்  இஸ்ரவேல்  புத்திரர்  முன்போல்  தங்கள்  கூடாரங்களிலே  குடியிருந்தார்கள்.  (2இராஜாக்கள்  13:5)

karththar  isravealukku  oru  radchaganaik  koduththathinaal,  avarga'l  seeriyarudaiya  kaiyinkeezhirunthu  neenggalaanaarga'l;  aathalaal  israveal  puththirar  munpoal  thangga'l  koodaarangga'lilea  kudiyirunthaarga'l.  (2iraajaakka’l  13:5)

ஆகிலும்  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  யெரொபெயாம்  வீட்டாரின்  பாவங்களை  அவர்கள்  விட்டு  விலகாமல்  அதிலே  நடந்தார்கள்;  சமாரியாவிலிருந்த  விக்கிரகத்தோப்பும்  நிலையாயிருந்தது.  (2இராஜாக்கள்  13:6)

aagilum  isravealaip  paavagnseyyappa'n'nina  yerobeyaam  veettaarin  paavangga'lai  avarga'l  vittu  vilagaamal  athilea  nadanthaarga'l;  samaariyaaviliruntha  vikkiragaththoappum  nilaiyaayirunthathu.  (2iraajaakka’l  13:6)

யோவாகாசுக்குச்  சீரியாவின்  ராஜா,  ஐம்பது  குதிரைவீரரையும்,  பத்து  இரதங்களையும்,  பதினாயிரம்  காலாட்களையுமே  அல்லாமல்,  ஜனங்களில்  வேறொன்றும்  மீதியாக  வைக்கவில்லை;  அவன்  அவர்களை  அழித்துப்  போரடிக்கும்  இடத்துத்  தூளைப்போல  ஆக்கிப்போட்டான்.  (2இராஜாக்கள்  13:7)

yoavaagaasukkuch  seeriyaavin  raajaa,  aimbathu  kuthiraiveeraraiyum,  paththu  irathangga'laiyum,  pathinaayiram  kaalaadka'laiyumea  allaamal,  janangga'lil  vea’ron’rum  meethiyaaga  vaikkavillai;  avan  avarga'lai  azhiththup  poaradikkum  idaththuth  thoo'laippoala  aakkippoattaan.  (2iraajaakka’l  13:7)

யோவாகாசின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவனுடைய  வல்லமையும்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  13:8)

yoavaagaasin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  avanudaiya  vallamaiyum  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  13:8)

யோவாகாஸ்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைச்  சமாரியாவிலே  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  யோவாஸ்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  13:9)

yoavaagaas  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avanaich  samaariyaavilea  adakkampa'n'ninaarga'l;  avan  kumaaranaagiya  yoavaas  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  13:9)

யூதாவின்  ராஜாவாகிய  யோவாசுடைய  முப்பத்தேழாம்  வருஷத்தில்  யோவாகாசின்  குமாரனாகிய  யோவாஸ்,  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாகிய  சமாரியாவிலே  பதினாறுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  (2இராஜாக்கள்  13:10)

yoothaavin  raajaavaagiya  yoavaasudaiya  muppaththeazhaam  varushaththil  yoavaagaasin  kumaaranaagiya  yoavaas,  isravealinmeal  raajaavaagiya  samaariyaavilea  pathinaa’ruvarusham  raajyabaarampa'n'ni,  (2iraajaakka’l  13:10)

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  பாவங்களை  விட்டு  விலகாமல்  அவைகளிலெல்லாம்  நடந்தான்.  (2இராஜாக்கள்  13:11)

karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  isravealaip  paavagnseyyappa'n'nina  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  paavangga'lai  vittu  vilagaamal  avaiga'lilellaam  nadanthaan.  (2iraajaakka’l  13:11)

யோவாசின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  யூதாவின்  ராஜாவாகிய  அமத்சியாவோடு  அவன்  யுத்தம்பண்ணின  வல்லமையும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  13:12)

yoavaasin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  avan  yoothaavin  raajaavaagiya  amathsiyaavoadu  avan  yuththampa'n'nina  vallamaiyum,  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  13:12)

யோவாஸ்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  யெரொபெயாம்  அவன்  சிங்காசனத்தில்  வீற்றிருந்தான்;  யோவாஸ்  சமாரியாவில்  இஸ்ரவேலின்  ராஜாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (2இராஜாக்கள்  13:13)

yoavaas  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  yerobeyaam  avan  singgaasanaththil  veet’rirunthaan;  yoavaas  samaariyaavil  isravealin  raajaakka'la'ndaiyilea  adakkampa'n'nappattaan.  (2iraajaakka’l  13:13)

அவன்  நாட்களில்  எலிசா  மரணத்துக்கு  ஏதுவான  வியாதியாய்க்  கிடந்தான்;  அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜாவாகிய  யோவாஸ்  அவனிடத்துக்குப்  போய்,  அவன்மேல்  விழுந்து,  அழுது:  என்  தகப்பனே,  என்  தகப்பனே,  இஸ்ரவேலுக்கு  இரதமும்  குதிரைவீரருமாயிருந்தவரே  என்றான்.  (2இராஜாக்கள்  13:14)

avan  naadka'lil  elisaa  mara'naththukku  eathuvaana  viyaathiyaayk  kidanthaan;  appozhuthu  isravealin  raajaavaagiya  yoavaas  avanidaththukkup  poay,  avanmeal  vizhunthu,  azhuthu:  en  thagappanea,  en  thagappanea,  isravealukku  irathamum  kuthiraiveerarumaayirunthavarea  en’raan.  (2iraajaakka’l  13:14)

எலிசா  அவனைப்  பார்த்து:  வில்லையும்  அம்புகளையும்  பிடியும்  என்றான்;  அப்படியே  வில்லையும்  அம்புகளையும்  பிடித்துக்கொண்டான்.  (2இராஜாக்கள்  13:15)

elisaa  avanaip  paarththu:  villaiyum  ambuga'laiyum  pidiyum  en’raan;  appadiyea  villaiyum  ambuga'laiyum  pidiththukko'ndaan.  (2iraajaakka’l  13:15)

அப்பொழுது  அவன்  இஸ்ரவேலின்  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  கையை  வில்லின்மேல்  வையும்  என்றான்;  அவன்  தன்  கையை  வைத்தபோது,  எலிசா  தன்  கைகளை  ராஜாவுடைய  கைகள்மேல்  வைத்து:  (2இராஜாக்கள்  13:16)

appozhuthu  avan  isravealin  raajaavai  noakki:  ummudaiya  kaiyai  villinmeal  vaiyum  en’raan;  avan  than  kaiyai  vaiththapoathu,  elisaa  than  kaiga'lai  raajaavudaiya  kaiga'lmeal  vaiththu:  (2iraajaakka’l  13:16)

கிழக்கே  இருக்கிற  ஜன்னலைத்  திறவும்  என்றான்;  அவன்  அதைத்  திறந்தபோது,  எலிசா:  எய்யும்  என்றான்;  இவன்  எய்தபோது,  அவன்:  அது  கர்த்தருடைய  ரட்சிப்பின்  அம்பும்,  சீரியரினின்று  விடுதலையாக்கும்  ரட்சிப்பின்  அம்புமானது;  நீர்  ஆப்பெக்கிலே  சீரியரைத்  தீர  முறிய  அடிப்பீர்  என்றான்.  (2இராஜாக்கள்  13:17)

kizhakkea  irukki’ra  jannalaith  thi’ravum  en’raan;  avan  athaith  thi’ranthapoathu,  elisaa:  eyyum  en’raan;  ivan  eythapoathu,  avan:  athu  karththarudaiya  radchippin  ambum,  seeriyarinin’ru  viduthalaiyaakkum  radchippin  ambumaanathu;  neer  aappekkilea  seeriyaraith  theera  mu’riya  adippeer  en’raan.  (2iraajaakka’l  13:17)

பின்பு  அம்புகளைப்  பிடியும்  என்றான்;  அவைகளைப்  பிடித்தான்.  அப்பொழுது  அவன்  இஸ்ரவேலின்  ராஜாவை  நோக்கி:  தரையிலே  அடியும்  என்றான்;  அவன்  மூன்றுதரம்  அடித்து  நின்றான்.  (2இராஜாக்கள்  13:18)

pinbu  ambuga'laip  pidiyum  en’raan;  avaiga'laip  pidiththaan.  appozhuthu  avan  isravealin  raajaavai  noakki:  tharaiyilea  adiyum  en’raan;  avan  moon’rutharam  adiththu  nin’raan.  (2iraajaakka’l  13:18)

அப்பொழுது  தேவனுடைய  மனுஷன்  அவன்மேல்  கோபமாகி:  நீர்  ஐந்து  ஆறுவிசை  அடித்தீரானால்,  அப்பொழுது  சீரியரைத்  தீர  முறிய  அடிப்பீர்;  இப்பொழுதோ  சீரியரை  மூன்றுவிசைமாத்திரம்  முறிய  அடிப்பீர்  என்றான்.  (2இராஜாக்கள்  13:19)

appozhuthu  theavanudaiya  manushan  avanmeal  koabamaagi:  neer  ainthu  aa’ruvisai  adiththeeraanaal,  appozhuthu  seeriyaraith  theera  mu’riya  adippeer;  ippozhuthoa  seeriyarai  moon’ruvisaimaaththiram  mu’riya  adippeer  en’raan.  (2iraajaakka’l  13:19)

எலிசா  மரணமடைந்தான்;  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  மறுவருஷத்திலே  மோவாபியரின்  தண்டுகள்  தேசத்திலே  வந்தது.  (2இராஜாக்கள்  13:20)

elisaa  mara'namadainthaan;  avanai  adakkampa'n'ninaarga'l;  ma’ruvarushaththilea  moavaabiyarin  tha'nduga'l  theasaththilea  vanthathu.  (2iraajaakka’l  13:20)

அப்பொழுது  அவர்கள்,  ஒரு  மனுஷனை  அடக்கம்பண்ணப்போகையில்,  அந்தத்  தண்டைக்  கண்டு,  அந்த  மனுஷனை  எலிசாவின்  கல்லறையில்  போட்டார்கள்;  அந்த  மனுஷனின்  பிரேதம்  அதிலே  விழுந்து  எலிசாவின்  எலும்புகளின்மேல்  பட்டபோது,  அந்த  மனுஷன்  உயிரடைந்து  தன்  கால்களை  ஊன்றி  எழுந்திருந்தான்.  (2இராஜாக்கள்  13:21)

appozhuthu  avarga'l,  oru  manushanai  adakkampa'n'nappoagaiyil,  anthath  tha'ndaik  ka'ndu,  antha  manushanai  elisaavin  kalla’raiyil  poattaarga'l;  antha  manushanin  pireatham  athilea  vizhunthu  elisaavin  elumbuga'linmeal  pattapoathu,  antha  manushan  uyiradainthu  than  kaalga'lai  oon’ri  ezhunthirunthaan.  (2iraajaakka’l  13:21)

யோவாகாசின்  நாட்களிலெல்லாம்  சீரியாவின்  ராஜாவாகிய  ஆசகேல்  இஸ்ரவேலை  ஒடுக்கினான்.  (2இராஜாக்கள்  13:22)

yoavaagaasin  naadka'lilellaam  seeriyaavin  raajaavaagiya  aasakeal  isravealai  odukkinaan.  (2iraajaakka’l  13:22)

ஆனாலும்  கர்த்தர்  அவர்களுக்கு  இரங்கி,  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களோடு  செய்த  தமது  உடன்படிக்கையினிமித்தம்  அவர்களை  அழிக்கச்  சித்தமாயிராமலும்,  அவர்களை  இன்னும்  தம்முடைய  முகத்தைவிட்டுத்  தள்ளாமலும்  அவர்கள்மேல்  மனதுருகி,  அவர்களை  நினைத்தருளினார்.  (2இராஜாக்கள்  13:23)

aanaalum  karththar  avarga'lukku  iranggi,  aabirahaam  eesaakku  yaakkoabu  enbavarga'loadu  seytha  thamathu  udanpadikkaiyinimiththam  avarga'lai  azhikkach  siththamaayiraamalum,  avarga'lai  innum  thammudaiya  mugaththaivittuth  tha'l'laamalum  avarga'lmeal  manathurugi,  avarga'lai  ninaiththaru'linaar.  (2iraajaakka’l  13:23)

சீரியாவின்  ராஜாவாகிய  ஆசகேல்  இறந்துபோய்,  அவன்  குமாரனாகிய  பெனாதாத்  அவன்  ஸ்தானத்திலே  ராஜாவான  பின்பு,  (2இராஜாக்கள்  13:24)

seeriyaavin  raajaavaagiya  aasakeal  i’ranthupoay,  avan  kumaaranaagiya  benaathaath  avan  sthaanaththilea  raajaavaana  pinbu,  (2iraajaakka’l  13:24)

யோவாகாசின்  குமாரனாகிய  யோவாஸ்,  ஆசகேலோடே  யுத்தம்பண்ணி,  தன்  தகப்பனாகிய  யோவாகாசின்  கையிலிருந்து  பிடித்துக்கொண்ட  பட்டணங்களை  அவன்  குமாரனாகிய  பெனாதாத்தின்  கையிலிருந்து  திரும்பப்  பிடித்துக்கொண்டான்;  மூன்றுவிசை  யோவாஸ்  அவனை  முறிய  அடித்து  இஸ்ரவேலின்  பட்டணங்களைத்  திரும்பக்  கட்டிக்கொண்டான்.  (2இராஜாக்கள்  13:25)

yoavaagaasin  kumaaranaagiya  yoavaas,  aasakealoadea  yuththampa'n'ni,  than  thagappanaagiya  yoavaagaasin  kaiyilirunthu  pidiththukko'nda  patta'nangga'lai  avan  kumaaranaagiya  benaathaaththin  kaiyilirunthu  thirumbap  pidiththukko'ndaan;  moon’ruvisai  yoavaas  avanai  mu’riya  adiththu  isravealin  patta'nangga'laith  thirumbak  kattikko'ndaan.  (2iraajaakka’l  13:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!