Friday, September 09, 2016

2 Iraajaakka'l 12 | 2 இராஜாக்கள் 12 | 2 Kings 12

யெகூவின்  ஏழாம்  வருஷத்தில்  யோவாஸ்  ராஜாவாகி,  எருசலேமிலே  நாற்பதுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  பெயெர்செபா  ஊராளாகிய  அவனுடைய  தாயின்  பேர்  சிபியாள்.  (2இராஜாக்கள்  12:1)

yegoovin  eazhaam  varushaththil  yoavaas  raajaavaagi,  erusaleamilea  naa’rpathuvarusham  raajyabaarampa'n'ninaan;  beyersebaa  ooraa'laagiya  avanudaiya  thaayin  pear  sibiyaa'l.  (2iraajaakka’l  12:1)

ஆசாரியனாகிய  யோய்தா  யோவாசைப்  போதகம்பண்ணின  நாளெல்லாம்  அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  (2இராஜாக்கள்  12:2)

aasaariyanaagiya  yoaythaa  yoavaasaip  poathagampa'n'nina  naa'lellaam  avan  karththarin  paarvaikkuch  semmaiyaanathaich  seythaan.  (2iraajaakka’l  12:2)

மேடைகளைமாத்திரம்  அகற்றவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகள்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  (2இராஜாக்கள்  12:3)

meadaiga'laimaaththiram  agat’ravillai;  janangga'l  innum  meadaiga'lmeal  baliyittuth  thoobangkaattivanthaarga'l.  (2iraajaakka’l  12:3)

யோவாஸ்  ஆசாரியரை  நோக்கி:  பிரதிஷ்டையாக்கப்பட்ட  பொருள்களாகிய  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரப்படுகிற  எல்லாப்  பணங்களையும்,  இலக்கத்திற்குட்படுகிறவர்களின்  பணத்தையும்,  மீட்புக்காக  மதிக்கப்படுகிற  ஆட்களின்  பணத்தையும்,  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரும்படி,  அவரவர்  தம்தம்  மனதிலே  நியமித்திருக்கும்  எல்லாப்  பணத்தையும்,  (2இராஜாக்கள்  12:4)

yoavaas  aasaariyarai  noakki:  pirathishdaiyaakkappatta  poru'lga'laagiya  karththarudaiya  aalayaththukkuk  ko'nduvarappadugi’ra  ellaap  pa'nangga'laiyum,  ilakkaththi’rkudpadugi’ravarga'lin  pa'naththaiyum,  meedpukkaaga  mathikkappadugi’ra  aadka'lin  pa'naththaiyum,  karththarudaiya  aalayaththukkuk  ko'nduvarumpadi,  avaravar  thamtham  manathilea  niyamiththirukkum  ellaap  pa'naththaiyum,  (2iraajaakka’l  12:4)

ஆசாரியர்கள்  அவரவர்  தங்களுக்கு  அறிமுகமானவர்கள்  கையில்  வாங்கிக்கொண்டு,  ஆலயத்தில்  எங்கெங்கே  பழுதுகாண்கிறதோ,  அங்கேயெல்லாம்  ஆலயத்தைப்  பழுதுபார்க்கவேண்டும்  என்றான்.  (2இராஜாக்கள்  12:5)

aasaariyarga'l  avaravar  thangga'lukku  a’rimugamaanavarga'l  kaiyil  vaanggikko'ndu,  aalayaththil  enggenggea  pazhuthukaa'ngi’rathoa,  anggeayellaam  aalayaththaip  pazhuthupaarkkavea'ndum  en’raan.  (2iraajaakka’l  12:5)

ஆனாலும்  ராஜாவாகிய  யோவாசின்  இருபத்துமூன்றாம்  வருஷமட்டும்  ஆசாரியர்கள்  ஆலயத்தைப்  பழுதுபாராதே  போனபடியினால்,  (2இராஜாக்கள்  12:6)

aanaalum  raajaavaagiya  yoavaasin  irubaththumoon’raam  varushamattum  aasaariyarga'l  aalayaththaip  pazhuthupaaraathea  poanapadiyinaal,  (2iraajaakka’l  12:6)

ராஜாவாகிய  யோவாஸ்  ஆசாரியனாகிய  யோய்தாவையும்  மற்ற  ஆசாரியர்களையும்  அழைப்பித்து:  நீங்கள்  ஆலயத்தைப்  பழுதுபாராதேபோனதென்ன?  இனி  நீங்கள்  உங்களுக்கு  அறிமுகமானவர்கள்  கையிலே  பணத்தை  வாங்காமல்,  அதை  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிறதற்காக  விட்டுவிடுங்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  12:7)

raajaavaagiya  yoavaas  aasaariyanaagiya  yoaythaavaiyum  mat’ra  aasaariyarga'laiyum  azhaippiththu:  neengga'l  aalayaththaip  pazhuthupaaraatheapoanathenna?  ini  neengga'l  ungga'lukku  a’rimugamaanavarga'l  kaiyilea  pa'naththai  vaanggaamal,  athai  aalayaththaip  pazhuthupaarkki’ratha’rkaaga  vittuvidungga'l  en’raan.  (2iraajaakka’l  12:7)

அப்பொழுது  ஆசாரியர்கள்  ஜனத்தின்  கையிலே  பணத்தை  வாங்கிக்கொள்ளாமலும்,  ஆலயத்தைப்  பழுதுபாராமலும்  இருக்கிறதற்குச்  சம்மதித்தார்கள்.  (2இராஜாக்கள்  12:8)

appozhuthu  aasaariyarga'l  janaththin  kaiyilea  pa'naththai  vaanggikko'l'laamalum,  aalayaththaip  pazhuthupaaraamalum  irukki’ratha’rkuch  sammathiththaarga'l.  (2iraajaakka’l  12:8)

ஆசாரியனாகிய  யோய்தா  ஒரு  பெட்டியை  எடுத்து,  அதின்  மூடியிலே  ஒரு  துவாரமிட்டு,  அதைப்  பலிபீடத்தண்டையிலே  கர்த்தருடைய  ஆலயத்தில்  ஜனங்கள்  உட்பிரவேசிக்கும்  வலதுபக்கத்தில்  வைத்தான்;  வாசற்படியைக்  காக்கிற  ஆசாரியர்கள்  கர்த்தருடைய  ஆலயத்திற்குக்  கொண்டுவரப்பட்ட  பணத்தையெல்லாம்  அதிலே  போட்டார்கள்.  (2இராஜாக்கள்  12:9)

aasaariyanaagiya  yoaythaa  oru  pettiyai  eduththu,  athin  moodiyilea  oru  thuvaaramittu,  athaip  balipeedaththa'ndaiyilea  karththarudaiya  aalayaththil  janangga'l  udpiraveasikkum  valathupakkaththil  vaiththaan;  vaasa’rpadiyaik  kaakki’ra  aasaariyarga'l  karththarudaiya  aalayaththi’rkuk  ko'nduvarappatta  pa'naththaiyellaam  athilea  poattaarga'l.  (2iraajaakka’l  12:9)

பெட்டியிலே  மிகுந்த  பணம்  உண்டென்று  அவர்கள்  காணும்போது,  ராஜாவின்  சம்பிரதியும்  பிரதான  ஆசாரியனும்  வந்து:  கர்த்தருடைய  ஆலயத்திலே  சேகரிக்கப்பட்ட  பணத்தை  எண்ணி  முடிப்புக்கட்டி,  (2இராஜாக்கள்  12:10)

pettiyilea  miguntha  pa'nam  u'nden’ru  avarga'l  kaa'numpoathu,  raajaavin  sambirathiyum  pirathaana  aasaariyanum  vanthu:  karththarudaiya  aalayaththilea  seagarikkappatta  pa'naththai  e'n'ni  mudippukkatti,  (2iraajaakka’l  12:10)

எண்ணின  பணத்தைக்  கர்த்தருடைய  ஆலயத்திலே  விசாரிப்புக்காரர்  கையிலே  கொடுப்பார்கள்;  அதை  அவர்கள்  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிற  தச்சருக்கும்,  சிற்பாசாரிகளுக்கும்,  (2இராஜாக்கள்  12:11)

e'n'nina  pa'naththaik  karththarudaiya  aalayaththilea  visaarippukkaarar  kaiyilea  koduppaarga'l;  athai  avarga'l  karththarudaiya  aalayaththaip  pazhuthupaarkki’ra  thachcharukkum,  si’rpaasaariga'lukkum,  (2iraajaakka’l  12:11)

கொற்றருக்கும்,  கல்தச்சருக்கும்,  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கத்  தேவையான  மரங்களையும்  வெட்டின  கற்களையும்  கொள்ளுகிறதற்கும்,  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிறதற்குச்  செல்லும்  எல்லாச்  செலவுக்கும்  கொடுப்பார்கள்.  (2இராஜாக்கள்  12:12)

kot’rarukkum,  kalthachcharukkum,  karththarudaiya  aalayaththaip  pazhuthupaarkkath  theavaiyaana  marangga'laiyum  vettina  ka’rka'laiyum  ko'l'lugi’ratha’rkum,  aalayaththaip  pazhuthupaarkki’ratha’rkuch  sellum  ellaach  selavukkum  koduppaarga'l.  (2iraajaakka’l  12:12)

கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரப்பட்ட  பணத்தினாலே  வெள்ளிக்கிண்ணங்களும்,  கீதவாத்தியங்களும்,  கலங்களும்,  எக்காளங்களும்,  பொற்பாத்திரங்களும்,  வெள்ளிப்  பாத்திரங்களும்  பண்ணப்படாமல்,  (2இராஜாக்கள்  12:13)

karththarudaiya  aalayaththukkuk  ko'nduvarappatta  pa'naththinaalea  ve'l'likki'n'nangga'lum,  keethavaaththiyangga'lum,  kalangga'lum,  ekkaa'langga'lum,  po’rpaaththirangga'lum,  ve'l'lip  paaththirangga'lum  pa'n'nappadaamal,  (2iraajaakka’l  12:13)

கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கும்படிக்கு  வேலைசெய்கிறவர்களுக்கே  அதைக்  கொடுத்தார்கள்.  (2இராஜாக்கள்  12:14)

karththarudaiya  aalayaththaip  pazhuthupaarkkumpadikku  vealaiseygi’ravarga'lukkea  athaik  koduththaarga'l.  (2iraajaakka’l  12:14)

வேலைசெய்கிறவர்களுக்குக்  கொடுக்கும்படிக்கு,  பணத்தை  வரப்பற்றிக்கொண்ட  மனுஷர்  கையிலே  கணக்குக்  கேளாதிருந்தார்கள்;  அவர்கள்  உண்மையாய்  அதை  நடப்பித்தார்கள்.  (2இராஜாக்கள்  12:15)

vealaiseygi’ravarga'lukkuk  kodukkumpadikku,  pa'naththai  varappat’rikko'nda  manushar  kaiyilea  ka'nakkuk  kea'laathirunthaarga'l;  avarga'l  u'nmaiyaay  athai  nadappiththaarga'l.  (2iraajaakka’l  12:15)

குற்றப்பிராயச்சித்தப்  பணமும்  பாவப்பிராயச்சித்தப்  பணமும்  கர்த்தருடைய  ஆலயத்திற்காகக்  கொண்டுவரப்படவில்லை;  அது  ஆசாரியரைச்  சேர்ந்தது.  (2இராஜாக்கள்  12:16)

kut’rappiraayachchiththap  pa'namum  paavappiraayachchiththap  pa'namum  karththarudaiya  aalayaththi’rkaagak  ko'nduvarappadavillai;  athu  aasaariyaraich  searnthathu.  (2iraajaakka’l  12:16)

அதற்குப்பின்பு  சீரியாவின்  ராஜாவாகிய  ஆசகேல்  வந்து,  காத்தூரின்மேல்  யுத்தம்பண்ணி  அதைப்  பிடித்தான்;  அதின்பின்பு  எருசலேமுக்கு  விரோதமாய்ப்  போக  ஆசகேல்  தன்  முகத்தைத்  திருப்பினான்.  (2இராஜாக்கள்  12:17)

atha’rkuppinbu  seeriyaavin  raajaavaagiya  aasakeal  vanthu,  kaaththoorinmeal  yuththampa'n'ni  athaip  pidiththaan;  athinpinbu  erusaleamukku  viroathamaayp  poaga  aasakeal  than  mugaththaith  thiruppinaan.  (2iraajaakka’l  12:17)

அப்பொழுது  யூதாவின்  ராஜாவாகிய  யோவாஸ்,  தன்  பிதாக்களாகிய  யோசபாத்  யோராம்  அகசியா  என்னும்  யூதாவின்  ராஜாக்கள்  பரிசுத்தம்பண்ணிவைத்த  எல்லாவற்றையும்,  தான்  பரிசுத்தம்பண்ணிவைத்ததையும்,  கர்த்தருடைய  ஆலயத்திலும்  ராஜாவின்  அரமனையிலுமுள்ள  பொக்கிஷங்களில்  அகப்பட்ட  பொன்  யாவையும்  எடுத்துச்  சீரியாவின்  ராஜாவாகிய  ஆசகேலுக்கு  அனுப்பினான்;  அப்பொழுது  அவன்  எருசலேமை  விட்டுத்  திரும்பிப்போனான்.  (2இராஜாக்கள்  12:18)

appozhuthu  yoothaavin  raajaavaagiya  yoavaas,  than  pithaakka'laagiya  yoasapaath  yoaraam  agasiyaa  ennum  yoothaavin  raajaakka'l  parisuththampa'n'nivaiththa  ellaavat’raiyum,  thaan  parisuththampa'n'nivaiththathaiyum,  karththarudaiya  aalayaththilum  raajaavin  aramanaiyilumu'l'la  pokkishangga'lil  agappatta  pon  yaavaiyum  eduththuch  seeriyaavin  raajaavaagiya  aasakealukku  anuppinaan;  appozhuthu  avan  erusaleamai  vittuth  thirumbippoanaan.  (2iraajaakka’l  12:18)

யோவாசின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  12:19)

yoavaasin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  12:19)

யோவாசின்  ஊழியக்காரர்  எழும்பி  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டு,  சில்லாவுக்குப்  போகிற  வழியிலிருக்கிற  மில்லோ  வீட்டிலே  அவனைக்  கொன்றுபோட்டார்கள்.  (2இராஜாக்கள்  12:20)

yoavaasin  oozhiyakkaarar  ezhumbi  kattuppaadu  pa'n'nikko'ndu,  sillaavukkup  poagi’ra  vazhiyilirukki’ra  milloa  veettilea  avanaik  kon’rupoattaarga'l.  (2iraajaakka’l  12:20)

சிமியாதின்  குமாரன்,  யோசகார்  சோமேரின்  குமாரன்  யோசபாத்  என்னும்  அவனுடைய  ஊழியக்காரர்  அவனைக்  கொன்றார்கள்;  இறந்துபோன  அவனைத்  தாவீதின்  நகரத்தில்  அவனுடைய  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  அமத்சியா  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  12:21)

simiyaathin  kumaaran,  yoasakaar  soamearin  kumaaran  yoasabaath  ennum  avanudaiya  oozhiyakkaarar  avanaik  kon’raarga'l;  i’ranthupoana  avanaith  thaaveethin  nagaraththil  avanudaiya  pithaakka'la'ndaiyilea  adakkampa'n'ninaarga'l;  avan  kumaaranaagiya  amathsiyaa  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  12:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!