Tuesday, September 06, 2016

2 Iraajaakka'l 1 | 2 இராஜாக்கள் 1 | 2 Kings 1

ஆகாப்  மரணமடைந்தபின்,  மோவாபியர்  இஸ்ரவேலுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணிப்  பிரிந்துபோனார்கள்.  (2இராஜாக்கள்  1:1)

aagaab  mara'namadainthapin,  moavaabiyar  isravealukku  viroathamaayk  kalagampa'n'nip  pirinthupoanaarga'l.  (2iraajaakka’l  1:1)

அகசியா  சமாரியாவிலிருக்கிற  தன்  மேல்வீட்டிலிருந்து  கிராதியின்  வழியாய்  விழுந்து,  வியாதிப்பட்டு:  இந்த  வியாதி  நீங்கிப்  பிழைப்பேனா  என்று  எக்ரோனின்  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்  போய்  விசாரியுங்கள்  என்று  ஆட்களை  அனுப்பினான்.  (2இராஜாக்கள்  1:2)

agasiyaa  samaariyaavilirukki’ra  than  mealveettilirunthu  kiraathiyin  vazhiyaay  vizhunthu,  viyaathippattu:  intha  viyaathi  neenggip  pizhaippeanaa  en’ru  ekroanin  theavanaagiya  baagaalseaboobidaththil  poay  visaariyungga'l  en’ru  aadka'lai  anuppinaan.  (2iraajaakka’l  1:2)

கர்த்தருடைய  தூதன்  திஸ்பியனாகிய  எலியாவை  நோக்கி:  நீ  எழுந்து,  சமாரியாவுடைய  ராஜாவின்  ஆட்களுக்கு  எதிர்ப்படப்போய்:  இஸ்ரவேலிலே  தேவன்  இல்லையென்றா  நீங்கள்  எக்ரோனின்  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்  விசாரிக்கப்போகிறீர்கள்?  (2இராஜாக்கள்  1:3)

karththarudaiya  thoothan  thisbiyanaagiya  eliyaavai  noakki:  nee  ezhunthu,  samaariyaavudaiya  raajaavin  aadka'lukku  ethirppadappoay:  isravealilea  theavan  illaiyen’raa  neengga'l  ekroanin  theavanaagiya  baagaalseaboobidaththil  visaarikkappoagi’reerga'l?  (2iraajaakka’l  1:3)

இதினிமித்தம்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்,  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்பதை  அவர்களோடே  சொல்  என்றான்;  அப்படியே  எலியா  போய்ச்  சொன்னான்.  (2இராஜாக்கள்  1:4)

ithinimiththam  nee  ea’rina  kattililirunthu  i’ranggaamal,  saagavea  saavaay  en’ru  karththar  sollugi’raar  enbathai  avarga'loadea  sol  en’raan;  appadiyea  eliyaa  poaych  sonnaan.  (2iraajaakka’l  1:4)

அந்த  ஆட்கள்  அவனிடத்திற்குத்  திரும்பிவந்தபோது:  நீங்கள்  திரும்பி  வந்தது  என்ன  என்று  அவன்  அவர்களிடத்தில்  கேட்டான்.  (2இராஜாக்கள்  1:5)

antha  aadka'l  avanidaththi’rkuth  thirumbivanthapoathu:  neengga'l  thirumbi  vanthathu  enna  en’ru  avan  avarga'lidaththil  keattaan.  (2iraajaakka’l  1:5)

அதற்கு  அவர்கள்:  ஒரு  மனுஷன்  எங்களுக்கு  எதிர்ப்பட்டுவந்து:  நீங்கள்  உங்களை  அனுப்பின  ராஜாவினிடத்தில்  திரும்பிப்போய்,  இஸ்ரவேலிலே  தேவன்  இல்லையென்றா  நீ  எக்ரோனின்  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்  விசாரிக்கப்போகிறாய்;  இதினிமித்தம்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்பதை  அவனோடே  சொல்லுங்கள்  என்றான்  என்று  சொன்னார்கள்.  (2இராஜாக்கள்  1:6)

atha’rku  avarga'l:  oru  manushan  engga'lukku  ethirppattuvanthu:  neengga'l  ungga'lai  anuppina  raajaavinidaththil  thirumbippoay,  isravealilea  theavan  illaiyen’raa  nee  ekroanin  theavanaagiya  baagaalseaboobidaththil  visaarikkappoagi’raay;  ithinimiththam  nee  ea’rina  kattililirunthu  i’ranggaamal  saagavea  saavaay  en’ru  karththar  sollugi’raar  enbathai  avanoadea  sollungga'l  en’raan  en’ru  sonnaarga'l.  (2iraajaakka’l  1:6)

அப்பொழுது  அவன்  அவர்களை  நோக்கி:  உங்களுக்கு  எதிர்ப்பட்டு  வந்து,  இந்த  வார்த்தைகளை  உங்களிடத்தில்  சொன்ன  மனுஷன்  எப்படிப்பட்டவன்  என்று  கேட்டான்.  (2இராஜாக்கள்  1:7)

appozhuthu  avan  avarga'lai  noakki:  ungga'lukku  ethirppattu  vanthu,  intha  vaarththaiga'lai  ungga'lidaththil  sonna  manushan  eppadippattavan  en’ru  keattaan.  (2iraajaakka’l  1:7)

அதற்கு  அவர்கள்:  அவன்  மயிர்  உடையைத்  தரித்து,  வார்க்கச்சையைத்  தன்  அரையிலே  கட்டிக்கொண்டிருந்தான்  என்றார்கள்;  அப்பொழுது  அவன்:  திஸ்பியனாகிய  எலியாதான்  என்று  சொல்லி;  (2இராஜாக்கள்  1:8)

atha’rku  avarga'l:  avan  mayir  udaiyaith  thariththu,  vaarkkachchaiyaith  than  araiyilea  kattikko'ndirunthaan  en’raarga'l;  appozhuthu  avan:  thisbiyanaagiya  eliyaathaan  en’ru  solli;  (2iraajaakka’l  1:8)

அவனிடத்திற்கு  ஒரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்;  மலையின்  உச்சியில்  உட்கார்ந்திருக்கிற  அவனிடத்தில்  இவன்  ஏறிப்போய்:  தேவனுடைய  மனுஷனே,  ராஜா  உன்னை  வரச்சொல்லுகிறார்  என்றான்.  (2இராஜாக்கள்  1:9)

avanidaththi’rku  oru  thalaivanaiyum,  avanudaiya  aimbathu  seavagaraiyum  anuppinaan;  malaiyin  uchchiyil  udkaarnthirukki’ra  avanidaththil  ivan  ea’rippoay:  theavanudaiya  manushanea,  raajaa  unnai  varachsollugi’raar  en’raan.  (2iraajaakka’l  1:9)

அப்பொழுது  எலியா,  அந்த  ஐம்பதுபேரின்  தலைவனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவனுடைய  மனுஷனானால்,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  உன்னையும்  உன்  ஐம்பதுபேரையும்  பட்சிக்கக்கடவது  என்றான்;  உடனே  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  அவனையும்  அவன்  ஐம்பதுபேரையும்  பட்சித்தது.  (2இராஜாக்கள்  1:10)

appozhuthu  eliyaa,  antha  aimbathupearin  thalaivanukkup  pirathiyuththaramaaga:  naan  theavanudaiya  manushanaanaal,  akkini  vaanaththilirunthu  i’ranggi,  unnaiyum  un  aimbathupearaiyum  padchikkakkadavathu  en’raan;  udanea  akkini  vaanaththilirunthu  i’ranggi,  avanaiyum  avan  aimbathupearaiyum  padchiththathu.  (2iraajaakka’l  1:10)

மறுபடியும்  அவனிடத்திற்கு  வேறொரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்.  இவன்  அவனை  நோக்கி:  தேவனுடைய  மனுஷனே,  ராஜா  உன்னைச்  சீக்கிரமாய்  வரச்சொல்லுகிறார்  என்றான்.  (2இராஜாக்கள்  1:11)

ma’rupadiyum  avanidaththi’rku  vea’roru  thalaivanaiyum,  avanudaiya  aimbathu  seavagaraiyum  anuppinaan.  ivan  avanai  noakki:  theavanudaiya  manushanea,  raajaa  unnaich  seekkiramaay  varachsollugi’raar  en’raan.  (2iraajaakka’l  1:11)

எலியா  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவனுடைய  மனுஷனானால்,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  உன்னையும்  உன்  ஐம்பதுபேரையும்  பட்சிக்கக்கடவது  என்றான்;  உடனே  தேவனுடைய  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  அவனையும்  அவன்  ஐம்பதுபேரையும்  பட்சித்தது.  (2இராஜாக்கள்  1:12)

eliyaa  avarga'lukkup  pirathiyuththaramaaga:  naan  theavanudaiya  manushanaanaal,  akkini  vaanaththilirunthu  i’ranggi,  unnaiyum  un  aimbathupearaiyum  padchikkakkadavathu  en’raan;  udanea  theavanudaiya  akkini  vaanaththilirunthu  i’ranggi,  avanaiyum  avan  aimbathupearaiyum  padchiththathu.  (2iraajaakka’l  1:12)

திரும்பவும்  மூன்றாந்தரம்  ஒரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்;  இந்த  மூன்றாந்தலைவன்  ஏறிவந்தபோது,  எலியாவுக்கு  முன்பாக  முழங்காற்படியிட்டு,  அவனை  வேண்டிக்கொண்டு:  தேவனுடைய  மனுஷனே,  என்னுடைய  பிராணனும்,  உமது  அடியாராகிய  இந்த  ஐம்பதுபேரின்  பிராணனும்  உமது  பார்வைக்கு  அருமையாயிருப்பதாக.  (2இராஜாக்கள்  1:13)

thirumbavum  moon’raantharam  oru  thalaivanaiyum,  avanudaiya  aimbathu  seavagaraiyum  anuppinaan;  intha  moon’raanthalaivan  ea’rivanthapoathu,  eliyaavukku  munbaaga  muzhanggaa’rpadiyittu,  avanai  vea'ndikko'ndu:  theavanudaiya  manushanea,  ennudaiya  piraa'nanum,  umathu  adiyaaraagiya  intha  aimbathupearin  piraa'nanum  umathu  paarvaikku  arumaiyaayiruppathaaga.  (2iraajaakka’l  1:13)

இதோ,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  முந்தின  இரண்டு  தலைவரையும்,  அவரவருடைய  ஐம்பது  சேவகரையும்  பட்சித்தது;  இப்போதும்  என்னுடைய  பிராணன்  உமது  பார்வைக்கு  அருமையாயிருப்பதாக  என்றான்.  (2இராஜாக்கள்  1:14)

ithoa,  akkini  vaanaththilirunthu  i’ranggi,  munthina  ira'ndu  thalaivaraiyum,  avaravarudaiya  aimbathu  seavagaraiyum  padchiththathu;  ippoathum  ennudaiya  piraa'nan  umathu  paarvaikku  arumaiyaayiruppathaaga  en’raan.  (2iraajaakka’l  1:14)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  எலியாவை  நோக்கி:  அவனோடேகூட  இறங்கிப்போ,  அவனுக்குப்  பயப்படாதே  என்றான்;  அப்படியே  அவன்  எழுந்து  அவனோடேகூட  ராஜாவினிடத்திற்கு  இறங்கிப்போய்,  (2இராஜாக்கள்  1:15)

appozhuthu  karththarudaiya  thoothan  eliyaavai  noakki:  avanoadeakooda  i’ranggippoa,  avanukkup  bayappadaathea  en’raan;  appadiyea  avan  ezhunthu  avanoadeakooda  raajaavinidaththi’rku  i’ranggippoay,  (2iraajaakka’l  1:15)

அவனைப்  பார்த்து:  இஸ்ரவேலிலே  தேவன்  இல்லையென்றா  நீ  எக்ரோனின்  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்  விசாரிக்க  ஆட்களை  அனுப்பினாய்;  ஆதலால்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  (2இராஜாக்கள்  1:16)

avanaip  paarththu:  isravealilea  theavan  illaiyen’raa  nee  ekroanin  theavanaagiya  baagaalseaboobidaththil  visaarikka  aadka'lai  anuppinaay;  aathalaal  nee  ea’rina  kattililirunthu  i’ranggaamal  saagavea  saavaay  en’ru  karththar  sollugi’raar  en’raan.  (2iraajaakka’l  1:16)

எலியா  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  அவன்  இறந்துபோனான்;  அவனுக்குக்  குமாரன்  இல்லாதபடியினால்,  அவன்  ஸ்தானத்திலே  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்துடைய  குமாரனான  யோராமின்  இரண்டாம்  வருஷத்தில்  யோராம்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (2இராஜாக்கள்  1:17)

eliyaa  sonna  karththarudaiya  vaarththaiyinpadiyea  avan  i’ranthupoanaan;  avanukkuk  kumaaran  illaathapadiyinaal,  avan  sthaanaththilea  yoothaavin  raajaavaagiya  yoasapaaththudaiya  kumaaranaana  yoaraamin  ira'ndaam  varushaththil  yoaraam  avan  sthaanaththil  raajaavaanaan.  (2iraajaakka’l  1:17)

அகசியாவின்  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (2இராஜாக்கள்  1:18)

agasiyaavin  mat’ra  varththamaanangga'l  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (2iraajaakka’l  1:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!