Saturday, September 24, 2016

1 Naa'laagamam 28 | 1 நாளாகமம் 28 | 1 Chronicles 28

கோத்திரங்களின்  தலைவரும்,  ராஜாவைச்  சேவிக்கிற  வகுப்புகளின்  தலைவரும்,  ஆயிரம்பேருக்கு  அதிபதிகளும்,  நூறுபேருக்கு  அதிபதிகளும்,  ராஜாவுக்கும்  ராஜகுமாரருக்கும்  உண்டான  எல்லா  ஆஸ்தியையும்  மிருகஜீவன்களையும்  விசாரிக்கிற  தலைவருமாகிய  இஸ்ரவேலின்  சகல  பிரபுக்களையும்,  பிரதானிகளையும்,  பலசாலிகளையும்,  சகல  பராக்கிரமசாலிகளையும்  தாவீது  எருசலேமிலே  கூடிவரச்செய்தான்.  (1நாளாகமம்  28:1)

koaththirangga'lin  thalaivarum,  raajaavaich  seavikki’ra  vaguppuga'lin  thalaivarum,  aayirampearukku  athibathiga'lum,  noo’rupearukku  athibathiga'lum,  raajaavukkum  raajakumaararukkum  u'ndaana  ellaa  aasthiyaiyum  mirugajeevanga'laiyum  visaarikki’ra  thalaivarumaagiya  isravealin  sagala  pirabukka'laiyum,  pirathaaniga'laiyum,  balasaaliga'laiyum,  sagala  baraakkiramasaaliga'laiyum  thaaveethu  erusaleamilea  koodivarachseythaan.  (1naa’laagamam  28:1)

அப்பொழுது  ராஜாவாகிய  தாவீது  எழுந்திருந்து  காலூன்றி  நின்று:  என்  சகோதரரே,  என்  ஜனமே,  நான்  சொல்வதைக்  கேளுங்கள்;  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியும்  நமது  தேவனுடைய  பாதபடியும்  தங்குவதற்கு  ஒரு  ஆலயத்தைக்  கட்ட  நான்  என்  மனதிலே  நினைத்து,  கட்டுகிறதற்கு  ஆயத்தமும்  பண்ணினேன்.  (1நாளாகமம்  28:2)

appozhuthu  raajaavaagiya  thaaveethu  ezhunthirunthu  kaaloon’ri  nin’ru:  en  sagoathararea,  en  janamea,  naan  solvathaik  kea'lungga'l;  karththarudaiya  udanpadikkaip  pettiyum  namathu  theavanudaiya  paathapadiyum  thangguvatha’rku  oru  aalayaththaik  katta  naan  en  manathilea  ninaiththu,  kattugi’ratha’rku  aayaththamum  pa'n'ninean.  (1naa’laagamam  28:2)

ஆனாலும்  தேவன்:  நீ  என்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டாம்;  நீ  யுத்த  மனுஷனாயிருந்து,  ரத்தத்தைச்  சிந்தினாய்  என்றார்.  (1நாளாகமம்  28:3)

aanaalum  theavan:  nee  en  naamaththi’rku  aalayaththaik  kattavea'ndaam;  nee  yuththa  manushanaayirunthu,  raththaththaich  sinthinaay  en’raar.  (1naa’laagamam  28:3)

இப்போதும்  இஸ்ரவேல்  அனைத்தின்மேலும்  என்றைக்கும்  ராஜாவாயிருக்க,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  என்  தகப்பனுடைய  வீட்டாரிலெல்லாம்  என்னைத்  தெரிந்துகொண்டார்;  அவர்  யூதாவையும்  யூதாவின்  வம்சத்தில்  என்  தகப்பன்  குடும்பத்தையும்  தலைமையாகத்  தெரிந்துகொண்டு,  என்னை  எல்லா  இஸ்ரவேலின்மேலும்  ராஜாவாக்க,  என்  தகப்பனுடைய  குமாரருக்குள்  என்மேல்  பிரியம்  வைத்தார்.  (1நாளாகமம்  28:4)

ippoathum  israveal  anaiththinmealum  en’raikkum  raajaavaayirukka,  isravealin  theavanaagiya  karththar  en  thagappanudaiya  veettaarilellaam  ennaith  therinthuko'ndaar;  avar  yoothaavaiyum  yoothaavin  vamsaththil  en  thagappan  kudumbaththaiyum  thalaimaiyaagath  therinthuko'ndu,  ennai  ellaa  isravealinmealum  raajaavaakka,  en  thagappanudaiya  kumaararukku'l  enmeal  piriyam  vaiththaar.  (1naa’laagamam  28:4)

கர்த்தர்  எனக்கு  அநேகம்  குமாரரைத்  தந்தருளினார்;  ஆனாலும்  இஸ்ரவேலை  ஆளும்  கர்த்தருடைய  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தின்மேல்  உட்காருகிறதற்கு,  அவர்  என்னுடைய  எல்லாக்  குமாரரிலும்  என்  குமாரனாகிய  சாலொமோனைத்  தெரிந்துகொண்டு,  (1நாளாகமம்  28:5)

karththar  enakku  aneagam  kumaararaith  thantharu'linaar;  aanaalum  isravealai  aa'lum  karththarudaiya  raajyabaaraththin  singgaasanaththinmeal  udkaarugi’ratha’rku,  avar  ennudaiya  ellaak  kumaararilum  en  kumaaranaagiya  saalomoanaith  therinthuko'ndu,  (1naa’laagamam  28:5)

அவர்  என்னை  நோக்கி:  உன்  குமாரனாகிய  சாலொமோனே  என்  ஆலயத்தையும்  என்  பிராகாரங்களையும்  கட்டக்கடவன்;  அவனை  எனக்குக்  குமாரனாகத்  தெரிந்துகொண்டேன்;  நான்  அவனுக்குப்  பிதாவாயிருப்பேன்.  (1நாளாகமம்  28:6)

avar  ennai  noakki:  un  kumaaranaagiya  saalomoanea  en  aalayaththaiyum  en  piraagaarangga'laiyum  kattakkadavan;  avanai  enakkuk  kumaaranaagath  therinthuko'ndean;  naan  avanukkup  pithaavaayiruppean.  (1naa’laagamam  28:6)

இந்நாளில்  நடக்கிறபடியே  அவன்  என்  கற்பனைகளின்படியும்  என்  நியாயங்களின்படியும்  செய்ய  உறுதியாயிருப்பானானால்,  அவன்  ராஜ்யபாரத்தை  என்றென்றைக்கும்  திடப்படுத்துவேன்  என்றார்.  (1நாளாகமம்  28:7)

innaa'lil  nadakki’rapadiyea  avan  en  ka’rpanaiga'linpadiyum  en  niyaayangga'linpadiyum  seyya  u’ruthiyaayiruppaanaanaal,  avan  raajyabaaraththai  en’ren’raikkum  thidappaduththuvean  en’raar.  (1naa’laagamam  28:7)

இப்போதும்  நீங்கள்  என்றென்றைக்கும்  இந்த  நல்ல  தேசத்தைச்  சுதந்தரமாய்  அநுபவித்து,  உங்களுக்குப்பிறகு  அதை  உங்கள்  பிள்ளைகளுக்குச்  சுதந்தரமாய்ப்  பின்வைக்கும்பொருட்டாக,  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  கற்பனைகளையெல்லாம்  கைக்கொண்டு  விசாரியுங்கள்  என்று  கர்த்தரின்  சபையாகிய  இஸ்ரவேல்  அனைத்தின்  கண்களுக்குமுன்பாகவும்,  நமது  தேவனுடைய  செவிகேட்கவும்  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  (1நாளாகமம்  28:8)

ippoathum  neengga'l  en’ren’raikkum  intha  nalla  theasaththaich  suthantharamaay  anubaviththu,  ungga'lukkuppi’ragu  athai  ungga'l  pi'l'laiga'lukkuch  suthantharamaayp  pinvaikkumporuttaaga,  neengga'l  ungga'l  theavanaagiya  karththarin  ka’rpanaiga'laiyellaam  kaikko'ndu  visaariyungga'l  en’ru  karththarin  sabaiyaagiya  israveal  anaiththin  ka'nga'lukkumunbaagavum,  namathu  theavanudaiya  sevikeadkavum  ungga'lukkup  buththisollugi’rean.  (1naa’laagamam  28:8)

என்  குமாரனாகிய  சாலொமோனே,  நீ  உன்  பிதாவின்  தேவனை  அறிந்து,  அவரை  உத்தம  இருதயத்தோடும்  உற்சாக  மனதோடும்  சேவி;  கர்த்தர்  எல்லா  இருதயங்களையும்  ஆராய்ந்து,  நினைவுகளின்  தோற்றங்களையெல்லாம்  அறிகிறார்;  நீ  அவரைத்  தேடினால்  உனக்குத்  தென்படுவார்;  நீ  அவரை  விட்டுவிட்டால்  அவர்  உன்னை  என்றைக்கும்  கைவிடுவார்.  (1நாளாகமம்  28:9)

en  kumaaranaagiya  saalomoanea,  nee  un  pithaavin  theavanai  a’rinthu,  avarai  uththama  iruthayaththoadum  u’rchaaga  manathoadum  seavi;  karththar  ellaa  iruthayangga'laiyum  aaraaynthu,  ninaivuga'lin  thoat’rangga'laiyellaam  a’rigi’raar;  nee  avaraith  theadinaal  unakkuth  thenpaduvaar;  nee  avarai  vittuvittaal  avar  unnai  en’raikkum  kaividuvaar.  (1naa’laagamam  28:9)

இப்போதும்  எச்சரிக்கையாயிரு;  பரிசுத்த  ஸ்தலமாக  ஒரு  ஆலயத்தைக்கட்டுவதற்குக்  கர்த்தர்  உன்னைத்  தெரிந்துகொண்டார்;  நீ  திடன்கொண்டு  அதை  நடப்பி  என்று  சொன்னான்.  (1நாளாகமம்  28:10)

ippoathum  echcharikkaiyaayiru;  parisuththa  sthalamaaga  oru  aalayaththaikkattuvatha’rkuk  karththar  unnaith  therinthuko'ndaar;  nee  thidanko'ndu  athai  nadappi  en’ru  sonnaan.  (1naa’laagamam  28:10)

தாவீது  தன்  குமாரனாகிய  சாலொமோனுக்கு  மண்டபமும்,  அதின்  அறைகளும்,  அதின்  பொக்கிஷசாலைகளும்,  அதின்  மேல்வீடுகளும்,  அதின்  உள்ளறைகளும்,  கிருபாசன  ஸ்தானமும்  இருக்கவேண்டிய  மாதிரியையும்,  (1நாளாகமம்  28:11)

thaaveethu  than  kumaaranaagiya  saalomoanukku  ma'ndabamum,  athin  a’raiga'lum,  athin  pokkishasaalaiga'lum,  athin  mealveeduga'lum,  athin  u'l'la’raiga'lum,  kirubaasana  sthaanamum  irukkavea'ndiya  maathiriyaiyum,  (1naa’laagamam  28:11)

ஆவியினால்  தனக்குக்  கட்டளையிடப்பட்டபடியெல்லாம்  அவன்  செய்யவேண்டிய  கர்த்தருடைய  ஆலயப்பிராகாரங்களும்,  தேவனுடைய  ஆலயத்துப்  பொக்கிஷங்களையும்,  பரிசுத்தமாக  நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின்  பொக்கிஷங்களையும்  வைக்கும்  சகல  சுற்றறைகளும்  இருக்கவேண்டிய  மாதிரியையும்,  (1நாளாகமம்  28:12)

aaviyinaal  thanakkuk  katta'laiyidappattapadiyellaam  avan  seyyavea'ndiya  karththarudaiya  aalayappiraagaarangga'lum,  theavanudaiya  aalayaththup  pokkishangga'laiyum,  parisuththamaaga  nearnthuko'l'lappattavaiga'lin  pokkishangga'laiyum  vaikkum  sagala  sut’ra’raiga'lum  irukkavea'ndiya  maathiriyaiyum,  (1naa’laagamam  28:12)

ஆசாரியரையும்  லேவியரையும்  வரிசைகளாக  வகுக்கிறதற்கும்,  கர்த்தருடைய  ஆலயப்பணிவிடை  வேலை  அனைத்திற்கும்,  கர்த்தருடைய  ஆலயத்து  வேலையின்  பணிமுட்டுகள்  அனைத்திற்குமுரிய  கட்டளையையும்  கொடுத்தான்.  (1நாளாகமம்  28:13)

aasaariyaraiyum  leaviyaraiyum  varisaiga'laaga  vagukki’ratha’rkum,  karththarudaiya  aalayappa'nividai  vealai  anaiththi’rkum,  karththarudaiya  aalayaththu  vealaiyin  pa'nimuttuga'l  anaiththi’rkumuriya  katta'laiyaiyum  koduththaan.  (1naa’laagamam  28:13)

அவன்  பற்பல  வேலைக்கு  வேண்டிய  சகல  பொற்பாத்திரங்களுக்காக  நிறையின்படி  பொன்னையும்,  பற்பல  வேலைக்கு  வேண்டிய  சகல  வெள்ளிப்பாத்திரங்களுக்காக  நிறையின்படி  வெள்ளியையும்,  (1நாளாகமம்  28:14)

avan  pa’rpala  vealaikku  vea'ndiya  sagala  po’rpaaththirangga'lukkaaga  ni’raiyinpadi  ponnaiyum,  pa’rpala  vealaikku  vea'ndiya  sagala  ve'l'lippaaththirangga'lukkaaga  ni’raiyinpadi  ve'l'liyaiyum,  (1naa’laagamam  28:14)

பொன்  விளக்குத்தண்டுகளுக்கும்  அவைகளின்  பொன்  விளக்குகளுக்கும்,  ஒவ்வொரு  விளக்குத்தண்டுக்கும்  அதின்  விளக்குகளுக்கும்  நிறையின்படி  வேண்டிய  பொன்னையும்,  வெள்ளி  விளக்குத்தண்டுகளில்  ஒவ்வொரு  விளக்குத்தண்டுக்கும்  அதின்  விளக்குகளுக்கும்  நிறையின்படி  வேண்டிய  வெள்ளியையும்,  (1நாளாகமம்  28:15)

pon  vi'lakkuththa'nduga'lukkum  avaiga'lin  pon  vi'lakkuga'lukkum,  ovvoru  vi'lakkuththa'ndukkum  athin  vi'lakkuga'lukkum  ni’raiyinpadi  vea'ndiya  ponnaiyum,  ve'l'li  vi'lakkuththa'nduga'lil  ovvoru  vi'lakkuththa'ndukkum  athin  vi'lakkuga'lukkum  ni’raiyinpadi  vea'ndiya  ve'l'liyaiyum,  (1naa’laagamam  28:15)

சமுகத்தப்பங்களை  வைக்கும்  ஒவ்வொரு  மேஜைக்கும்  நிறையின்படி  வேண்டிய  பொன்னையும்,  வெள்ளி  மேஜைகளுக்கு  வேண்டிய  வெள்ளியையும்,  (1நாளாகமம்  28:16)

samugaththappangga'lai  vaikkum  ovvoru  meajaikkum  ni’raiyinpadi  vea'ndiya  ponnaiyum,  ve'l'li  meajaiga'lukku  vea'ndiya  ve'l'liyaiyum,  (1naa’laagamam  28:16)

முள்குறடுகளுக்கும்  கலங்களுக்கும்  தட்டுகளுக்கும்  வேண்டிய  பசும்பொன்னையும்,  பொன்  கிண்ணிகளில்  ஒவ்வொரு  கிண்ணிக்கும்  நிறையின்படி  வேண்டியதையும்,  வெள்ளிக்கிண்ணிகளில்  ஒவ்வொரு  கிண்ணிக்கும்  நிறையின்படி  வேண்டியதையும்,  (1நாளாகமம்  28:17)

mu'lku’raduga'lukkum  kalangga'lukkum  thattuga'lukkum  vea'ndiya  pasumponnaiyum,  pon  ki'n'niga'lil  ovvoru  ki'n'nikkum  ni’raiyinpadi  vea'ndiyathaiyum,  ve'l'likki'n'niga'lil  ovvoru  ki'n'nikkum  ni’raiyinpadi  vea'ndiyathaiyum,  (1naa’laagamam  28:17)

தூபங்காட்டும்  பீடத்திற்கு  நிறையின்படி  வேண்டிய  புடமிடப்பட்ட  பொன்னையும்  கொடுத்து,  செட்டைகளை  விரித்துக்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியை  மூடும்  பொன்  கேருபீன்களான  வாகனத்தின்  மாதிரியையும்  கொடுத்து,  (1நாளாகமம்  28:18)

thoobangkaattum  peedaththi’rku  ni’raiyinpadi  vea'ndiya  pudamidappatta  ponnaiyum  koduththu,  settaiga'lai  viriththuk  karththarudaiya  udanpadikkaippettiyai  moodum  pon  kearubeenga'laana  vaaganaththin  maathiriyaiyum  koduththu,  (1naa’laagamam  28:18)

இந்த  மாதிரியின்படி  சகல  வேலைகளும்  எனக்குத்  தெரியப்படுத்த,  இவையெல்லாம்  கர்த்தருடைய  கரத்தினால்  எனக்கு  எழுதிக்கொடுக்கப்பட்டது  என்றான்.  (1நாளாகமம்  28:19)

intha  maathiriyinpadi  sagala  vealaiga'lum  enakkuth  theriyappaduththa,  ivaiyellaam  karththarudaiya  karaththinaal  enakku  ezhuthikkodukkappattathu  en’raan.  (1naa’laagamam  28:19)

தாவீது  தன்  குமாரனாகிய  சாலொமோனை  நோக்கி:  நீ  பலங்கொண்டு  தைரியமாயிருந்து,  இதை  நடப்பி;  நீ  பயப்படாமலும்  கலங்காமலும்  இரு;  தேவனாகிய  கர்த்தர்  என்னும்  என்  தேவன்  உன்னோடே  இருப்பார்;  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுகிறதற்கடுத்த  சகல  கிரியைகளையும்  நீ  முடித்துத்  தீருமட்டும்,  அவர்  உன்னைவிட்டு  விலகவுமாட்டார்,  உன்னைக்  கைவிடவுமாட்டார்.  (1நாளாகமம்  28:20)

thaaveethu  than  kumaaranaagiya  saalomoanai  noakki:  nee  balangko'ndu  thairiyamaayirunthu,  ithai  nadappi;  nee  bayappadaamalum  kalanggaamalum  iru;  theavanaagiya  karththar  ennum  en  theavan  unnoadea  iruppaar;  karththarudaiya  aalayaththaik  kattugi’ratha’rkaduththa  sagala  kiriyaiga'laiyum  nee  mudiththuth  theerumattum,  avar  unnaivittu  vilagavumaattaar,  unnaik  kaividavumaattaar.  (1naa’laagamam  28:20)

இதோ,  தேவனுடைய  ஆலயத்துவேலைக்கெல்லாம்  ஆசாரியர்  லேவியருடைய  வகுப்புகள்  இருக்கிறது;  அந்த  எல்லாக்  கிரியைக்கும்  சகலவித  வேலையிலும்  நிபுணரான  மனப்பூர்வமுள்ள  சகல  மனுஷரும்,  உன்  சொற்படியெல்லாம்  கேட்கும்  பிரபுக்களும்,  சகல  ஜனங்களும்  உன்னிடத்தில்  இருக்கிறார்கள்  என்றான்.  (1நாளாகமம்  28:21)

ithoa,  theavanudaiya  aalayaththuvealaikkellaam  aasaariyar  leaviyarudaiya  vaguppuga'l  irukki’rathu;  antha  ellaak  kiriyaikkum  sagalavitha  vealaiyilum  nibu'naraana  manappoorvamu'l'la  sagala  manusharum,  un  so’rpadiyellaam  keadkum  pirabukka'lum,  sagala  janangga'lum  unnidaththil  irukki’raarga'l  en’raan.  (1naa’laagamam  28:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!