Friday, September 23, 2016

1 Naa'laagamam 21 | 1 நாளாகமம் 21 | 1 Chronicles 21

சாத்தான்  இஸ்ரவேலுக்கு  விரோதமாய்  எழும்பி,  இஸ்ரவேலைத்  தொகையிடுகிறதற்குத்  தாவீதை  ஏவிவிட்டது.  (1நாளாகமம்  21:1)

saaththaan  isravealukku  viroathamaay  ezhumbi,  isravealaith  thogaiyidugi’ratha’rkuth  thaaveethai  eavivittathu.  (1naa’laagamam  21:1)

அப்படியே  தாவீது  யோவாபையும்,  ஜனத்தின்  சேர்வைக்காரரையும்  நோக்கி:  நீங்கள்  போய்,  பெயெர்செபாதொடங்கித்  தாண்மட்டும்  இருக்கிற  இஸ்ரவேலை  எண்ணி,  அவர்கள்  இலக்கத்தை  நான்  அறியும்படிக்கு,  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்.  (1நாளாகமம்  21:2)

appadiyea  thaaveethu  yoavaabaiyum,  janaththin  searvaikkaararaiyum  noakki:  neengga'l  poay,  beyersebaathodanggith  thaa'nmattum  irukki’ra  isravealai  e'n'ni,  avarga'l  ilakkaththai  naan  a’riyumpadikku,  ennidaththil  ko'nduvaarungga'l  en’raan.  (1naa’laagamam  21:2)

அப்பொழுது  யோவாப்:  கர்த்தருடைய  ஜனங்கள்  இப்போது  இருக்கிறதைப்பார்க்கிலும்  நூறத்தனையாய்  அவர்  வர்த்திக்கப்பண்ணுவாராக;  ஆனாலும்  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  அவர்களெல்லாரும்  என்  ஆண்டவனின்  சேவகரல்லவா?  என்  ஆண்டவன்  இதை  விசாரிப்பானேன்?  இஸ்ரவேலின்மேல்  குற்றமுண்டாக  இது  நடக்கவேண்டியது  என்ன  என்றான்.  (1நாளாகமம்  21:3)

appozhuthu  yoavaab:  karththarudaiya  janangga'l  ippoathu  irukki’rathaippaarkkilum  noo’raththanaiyaay  avar  varththikkappa'n'nuvaaraaga;  aanaalum  raajaavaagiya  en  aa'ndavanea,  avarga'lellaarum  en  aa'ndavanin  seavagarallavaa?  en  aa'ndavan  ithai  visaarippaanean?  isravealinmeal  kut’ramu'ndaaga  ithu  nadakkavea'ndiyathu  enna  en’raan.  (1naa’laagamam  21:3)

யோவாப்  அப்படிச்  சொல்லியும்,  ராஜாவின்  வார்த்தை  மேலிட்டபடியினால்,  யோவாப்  புறப்பட்டு,  இஸ்ரவேல்  எங்கும்  சுற்றித்திரிந்து  எருசலேமுக்கு  வந்து,  (1நாளாகமம்  21:4)

yoavaab  appadich  solliyum,  raajaavin  vaarththai  mealittapadiyinaal,  yoavaab  pu’rappattu,  israveal  enggum  sut’riththirinthu  erusaleamukku  vanthu,  (1naa’laagamam  21:4)

ஜனத்தை  இலக்கம்பார்த்து,  தொகையைத்  தாவீதிடத்தில்  கொடுத்தான்;  இஸ்ரவேலிலெல்லாம்  பட்டயம்  உருவத்தக்கவர்கள்  பதினொருலட்சம்பேரும்,  யூதாவில்  பட்டயம்  உருவத்தக்கவர்கள்  நாலுலட்சத்து  எழுபதினாயிரம்பேரும்  இருந்தார்கள்.  (1நாளாகமம்  21:5)

janaththai  ilakkampaarththu,  thogaiyaith  thaaveethidaththil  koduththaan;  isravealilellaam  pattayam  uruvaththakkavarga'l  pathinoruladchampearum,  yoothaavil  pattayam  uruvaththakkavarga'l  naaluladchaththu  ezhubathinaayirampearum  irunthaarga'l.  (1naa’laagamam  21:5)

ஆனாலும்  ராஜாவின்  வார்த்தை  யோவாபுக்கு  அருவருப்பாயிருந்தபடியினால்,  லேவி  பென்யமீன்  கோத்திரங்களில்  உள்ளவர்களை  அவர்களுடைய  இலக்கத்திற்குட்பட  எண்ணாதேபோனான்.  (1நாளாகமம்  21:6)

aanaalum  raajaavin  vaarththai  yoavaabukku  aruvaruppaayirunthapadiyinaal,  leavi  benyameen  koaththirangga'lil  u'l'lavarga'lai  avarga'ludaiya  ilakkaththi’rkudpada  e'n'naatheapoanaan.  (1naa’laagamam  21:6)

இந்தக்  காரியம்  தேவனுடைய  பார்வைக்கு  ஆகாததானபடியினால்  அவர்  இஸ்ரவேலை  வாதித்தார்.  (1நாளாகமம்  21:7)

inthak  kaariyam  theavanudaiya  paarvaikku  aagaathathaanapadiyinaal  avar  isravealai  vaathiththaar.  (1naa’laagamam  21:7)

தாவீது  தேவனை  நோக்கி:  நான்  இந்தக்  காரியத்தைச்  செய்ததினால்  மிகவும்  பாவஞ்செய்தேன்;  இப்போதும்  உம்முடைய  அடியேனின்  அக்கிரமத்தை  நீக்கிவிடும்;  வெகு  புத்தியீனமாய்ச்  செய்தேன்  என்றான்.  (1நாளாகமம்  21:8)

thaaveethu  theavanai  noakki:  naan  inthak  kaariyaththaich  seythathinaal  migavum  paavagnseythean;  ippoathum  ummudaiya  adiyeanin  akkiramaththai  neekkividum;  vegu  buththiyeenamaaych  seythean  en’raan.  (1naa’laagamam  21:8)

அப்பொழுது  கர்த்தர்,  தாவீதின்  ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத்துடனே  பேசி,  (1நாளாகமம்  21:9)

appozhuthu  karththar,  thaaveethin  gnaanathirushdikkaaranaagiya  kaaththudanea  peasi,  (1naa’laagamam  21:9)

நீ  தாவீதினிடத்தில்  போய்:  மூன்று  காரியங்களை  உனக்கு  முன்பாக  வைக்கிறேன்;  அவைகளில்  ஒரு  காரியத்தைத்  தெரிந்துகொள்;  அதை  நான்  உனக்குச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (1நாளாகமம்  21:10)

nee  thaaveethinidaththil  poay:  moon’ru  kaariyangga'lai  unakku  munbaaga  vaikki’rean;  avaiga'lil  oru  kaariyaththaith  therinthuko'l;  athai  naan  unakkuch  seyvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (1naa’laagamam  21:10)

அப்படியே  காத்  தாவீதினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  (1நாளாகமம்  21:11)

appadiyea  kaath  thaaveethinidaththil  vanthu,  avanai  noakki:  (1naa’laagamam  21:11)

மூன்று  வருஷத்துப்  பஞ்சமோ?  அல்லது  உன்  பகைஞரின்  பட்டயம்  உன்னைப்  பின்தொடர  நீ  உன்  சத்துருக்களுக்கு  முன்பாக  முறிந்தோடிப்போகச்  செய்யும்  மூன்றுமாதச்  சங்காரமோ?  அல்லது  மூன்றுநாள்  கர்த்தருடைய  தூதன்  இஸ்ரவேலுடைய  எல்லையெங்கும்  சங்காரம்  உண்டாகும்படி  தேசத்தில்  நிற்கும்  கர்த்தருடைய  பட்டயமாகிய  கொள்ளை  நோயோ?  இவைகளில்  ஒன்றைத்  தெரிந்துகொள்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  இப்போதும்  என்னை  அனுப்பினவருக்கு  நான்  என்ன  மறுஉத்தரவு  கொண்டுபோகவேண்டும்  என்பதை  யோசித்துப்பாரும்  என்றான்.  (1நாளாகமம்  21:12)

moon’ru  varushaththup  pagnchamoa?  allathu  un  pagaignarin  pattayam  unnaip  pinthodara  nee  un  saththurukka'lukku  munbaaga  mu’rinthoadippoagach  seyyum  moon’rumaathach  sanggaaramoa?  allathu  moon’runaa'l  karththarudaiya  thoothan  isravealudaiya  ellaiyenggum  sanggaaram  u'ndaagumpadi  theasaththil  ni’rkum  karththarudaiya  pattayamaagiya  ko'l'lai  noayoa?  ivaiga'lil  on’raith  therinthuko'l  en’ru  karththar  uraikki’raar.  ippoathum  ennai  anuppinavarukku  naan  enna  ma’ruuththaravu  ko'ndupoagavea'ndum  enbathai  yoasiththuppaarum  en’raan.  (1naa’laagamam  21:12)

அப்பொழுது  தாவீது  காத்தை  நோக்கி:  கொடிய  இடுக்கணில்  அகப்பட்டிருக்கிறேன்;  இப்போது  நான்  கர்த்தருடைய  கையிலே  விழுவேனாக;  அவருடைய  இரக்கங்கள்  மகா  பெரியது;  மனுஷர்  கையிலே  விழாதிருப்பேனாக  என்றான்.  (1நாளாகமம்  21:13)

appozhuthu  thaaveethu  kaaththai  noakki:  kodiya  idukka'nil  agappattirukki’rean;  ippoathu  naan  karththarudaiya  kaiyilea  vizhuveanaaga;  avarudaiya  irakkangga'l  mahaa  periyathu;  manushar  kaiyilea  vizhaathiruppeanaaga  en’raan.  (1naa’laagamam  21:13)

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலிலே  கொள்ளைநோயை  வரப்பண்ணினார்;  அதினால்  இஸ்ரவேலில்  எழுபதினாயிரம்பேர்  மடிந்தார்கள்.  (1நாளாகமம்  21:14)

aagaiyaal  karththar  isravealilea  ko'l'lainoayai  varappa'n'ninaar;  athinaal  isravealil  ezhubathinaayirampear  madinthaarga'l.  (1naa’laagamam  21:14)

எருசலேமையும்  அழிக்கத்  தேவன்  ஒரு  தூதனை  அனுப்பினார்;  ஆனாலும்  அவன்  அழிக்கையில்  கர்த்தர்  பார்த்து,  அந்தத்  தீங்குக்கு  மனஸ்தாபப்பட்டு,  சங்கரிக்கிற  தூதனை  நோக்கி:  போதும்;  இப்போது  உன்  கையை  நிறுத்து  என்றார்;  கர்த்தருடைய  தூதன்  எபூசியனாகிய  ஒர்னானின்  களத்தண்டையிலே  நின்றான்.  (1நாளாகமம்  21:15)

erusaleamaiyum  azhikkath  theavan  oru  thoothanai  anuppinaar;  aanaalum  avan  azhikkaiyil  karththar  paarththu,  anthath  theenggukku  manasthaabappattu,  sanggarikki’ra  thoothanai  noakki:  poathum;  ippoathu  un  kaiyai  ni’ruththu  en’raar;  karththarudaiya  thoothan  eboosiyanaagiya  ornaanin  ka'laththa'ndaiyilea  nin’raan.  (1naa’laagamam  21:15)

தாவீது  தன்  கண்களை  ஏறெடுத்து,  பூமிக்கும்  வானத்திற்கும்  நடுவே  நிற்கிற  கர்த்தருடைய  தூதன்  உருவின  பட்டயத்தைத்  தன்  கையில்  பிடித்து,  அதை  எருசலேமின்மேல்  நீட்டியிருக்கக்  கண்டான்;  அப்பொழுது  தாவீதும்  மூப்பர்களும்  இரட்டுப்  போர்த்துக்கொண்டு  முகங்குப்புற  விழுந்தார்கள்.  (1நாளாகமம்  21:16)

thaaveethu  than  ka'nga'lai  ea’reduththu,  boomikkum  vaanaththi’rkum  naduvea  ni’rki’ra  karththarudaiya  thoothan  uruvina  pattayaththaith  than  kaiyil  pidiththu,  athai  erusaleaminmeal  neettiyirukkak  ka'ndaan;  appozhuthu  thaaveethum  moopparga'lum  irattup  poarththukko'ndu  mugangkuppu’ra  vizhunthaarga'l.  (1naa’laagamam  21:16)

தாவீது  தேவனை  நோக்கி:  ஜனத்தை  எண்ணச்சொன்னவன்  நான்  அல்லவோ?  நான்தான்  பாவஞ்செய்தேன்;  பொல்லாப்பு  நடப்பித்தேன்;  இந்த  ஆடுகள்  என்னசெய்தது?  என்  தேவனாகிய  கர்த்தாவே,  வாதிக்கும்படி  உம்முடைய  கரம்  உம்முடைய  ஜனத்திற்கு  விரோதமாயிராமல்,  எனக்கும்  என்  தகப்பன்  வீட்டிற்கும்  விரோதமாயிருப்பதாக  என்றான்.  (1நாளாகமம்  21:17)

thaaveethu  theavanai  noakki:  janaththai  e'n'nachsonnavan  naan  allavoa?  naanthaan  paavagnseythean;  pollaappu  nadappiththean;  intha  aaduga'l  ennaseythathu?  en  theavanaagiya  karththaavea,  vaathikkumpadi  ummudaiya  karam  ummudaiya  janaththi’rku  viroathamaayiraamal,  enakkum  en  thagappan  veetti’rkum  viroathamaayiruppathaaga  en’raan.  (1naa’laagamam  21:17)

அப்பொழுது  எபூசியனாகிய  ஒர்னானின்  களத்திலே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கும்படி,  தாவீது  அங்கே  போகவேண்டுமென்று  தாவீதுக்குச்  சொல்  என்று  கர்த்தருடைய  தூதன்  காத்துக்குக்  கட்டளையிட்டான்.  (1நாளாகமம்  21:18)

appozhuthu  eboosiyanaagiya  ornaanin  ka'laththilea  karththarukku  oru  balipeedaththai  u'ndaakkumpadi,  thaaveethu  anggea  poagavea'ndumen’ru  thaaveethukkuch  sol  en’ru  karththarudaiya  thoothan  kaaththukkuk  katta'laiyittaan.  (1naa’laagamam  21:18)

அப்படியே  தாவீது  கர்த்தரின்  நாமத்திலே  காத்  சொன்ன  வார்த்தையின்படியே  போனான்.  (1நாளாகமம்  21:19)

appadiyea  thaaveethu  karththarin  naamaththilea  kaath  sonna  vaarththaiyinpadiyea  poanaan.  (1naa’laagamam  21:19)

ஒர்னான்  திரும்பிப்பார்த்தான்;  அவனும்  அவனோடிருக்கிற  அவனுடைய  நாலு  குமாரரும்  அந்த  தேவதூதனைக்  கண்டு  ஒளித்துக்கொண்டார்கள்;  ஒர்னானோ  போரடித்துக்கொண்டிருந்தான்.  (1நாளாகமம்  21:20)

ornaan  thirumbippaarththaan;  avanum  avanoadirukki’ra  avanudaiya  naalu  kumaararum  antha  theavathoothanaik  ka'ndu  o'liththukko'ndaarga'l;  ornaanoa  poaradiththukko'ndirunthaan.  (1naa’laagamam  21:20)

தாவீது  ஒர்னானிடத்தில்  வந்தபோது,  ஒர்னான்  கவனித்துத்  தாவீதைப்  பார்த்து,  அவன்  களத்திலிருந்து  புறப்பட்டுவந்து,  தரைமட்டும்  குனிந்து  தாவீதை  வணங்கினான்.  (1நாளாகமம்  21:21)

thaaveethu  ornaanidaththil  vanthapoathu,  ornaan  kavaniththuth  thaaveethaip  paarththu,  avan  ka'laththilirunthu  pu’rappattuvanthu,  tharaimattum  kuninthu  thaaveethai  va'nangginaan.  (1naa’laagamam  21:21)

அப்பொழுது  தாவீது  ஒர்னானை  நோக்கி:  இந்தக்  களத்தின்  நிலத்திலே  நான்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டும்படிக்கு  அதை  எனக்குக்  கொடு;  வாதை  ஜனத்தைவிட்டு  நிறுத்தப்பட,  எனக்கு  அதைப்  பெறும்  விலைக்குக்  கொடு  என்றான்.  (1நாளாகமம்  21:22)

appozhuthu  thaaveethu  ornaanai  noakki:  inthak  ka'laththin  nilaththilea  naan  karththarukku  oru  balipeedaththaik  kattumpadikku  athai  enakkuk  kodu;  vaathai  janaththaivittu  ni’ruththappada,  enakku  athaip  pe’rum  vilaikkuk  kodu  en’raan.  (1naa’laagamam  21:22)

ஒர்னான்  தாவீதை  நோக்கி:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  அதை  வாங்கிக்கொண்டு,  தம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  செய்வாராக;  இதோ,  சர்வாங்கதகனங்களுக்கு  மாடுகளும்,  விறகுக்குப்  போரடிக்கிற  உருளைகளும்,  போஜனபலிக்குக்  கோதுமையும்  ஆகிய  யாவையும்  கொடுக்கிறேன்  என்றான்.  (1நாளாகமம்  21:23)

ornaan  thaaveethai  noakki:  raajaavaagiya  en  aa'ndavan  athai  vaanggikko'ndu,  thammudaiya  paarvaikku  nalamaanapadi  seyvaaraaga;  ithoa,  sarvaanggathaganangga'lukku  maaduga'lum,  vi’ragukkup  poaradikki’ra  uru'laiga'lum,  poajanabalikkuk  koathumaiyum  aagiya  yaavaiyum  kodukki’rean  en’raan.  (1naa’laagamam  21:23)

அதற்குத்  தாவீதுராஜா  ஒர்னானை  நோக்கி:  அப்படியல்ல,  நான்  உன்னுடையதை  இலவசமாய்  வாங்கி,  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனத்தைப்  பலியிடாமல்,  அதைப்  பெறும்  விலைக்கு  வாங்குவேன்  என்று  சொல்லி,  (1நாளாகமம்  21:24)

atha’rkuth  thaaveethuraajaa  ornaanai  noakki:  appadiyalla,  naan  unnudaiyathai  ilavasamaay  vaanggi,  karththarukkuch  sarvaangga  thaganaththaip  baliyidaamal,  athaip  pe’rum  vilaikku  vaangguvean  en’ru  solli,  (1naa’laagamam  21:24)

தாவீது  அந்த  நிலத்திற்கு  அறுநூறு  சேக்கல்  நிறைபொன்னை  ஒர்னானுக்குக்  கொடுத்து,  (1நாளாகமம்  21:25)

thaaveethu  antha  nilaththi’rku  a’runoo’ru  seakkal  ni’raiponnai  ornaanukkuk  koduththu,  (1naa’laagamam  21:25)

அங்கே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதான  பலிகளையும்  செலுத்தி,  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்;  அப்பொழுது  அவர்  வானத்திலிருந்து  சர்வாங்க  தகனபலிபீடத்தின்மேல்  இறங்கின  அக்கினியினால்  அவனுக்கு  மறுஉத்தரவு  கொடுத்ததுமல்லாமல்,  (1நாளாகமம்  21:26)

anggea  karththarukku  oru  balipeedaththaik  katti,  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaana  baliga'laiyum  seluththi,  karththarai  noakki  vi'n'nappampa'n'ninaan;  appozhuthu  avar  vaanaththilirunthu  sarvaangga  thaganabalipeedaththinmeal  i’ranggina  akkiniyinaal  avanukku  ma’ruuththaravu  koduththathumallaamal,  (1naa’laagamam  21:26)

தேவதூதன்  தன்னுடைய  பட்டயத்தை  உறையிலே  திரும்பப்  போடவேண்டும்  என்று  கர்த்தர்  அவனுக்குச்  சொன்னார்.  (1நாளாகமம்  21:27)

theavathoothan  thannudaiya  pattayaththai  u’raiyilea  thirumbap  poadavea'ndum  en’ru  karththar  avanukkuch  sonnaar.  (1naa’laagamam  21:27)

எபூசியனாகிய  ஒர்னானின்  களத்திலே  கர்த்தர்  தனக்கு  உத்தரவு  அருளினதைத்  தாவீது  அக்காலத்திலே  கண்டு  அங்கேதானே  பலியிட்டான்.  (1நாளாகமம்  21:28)

eboosiyanaagiya  ornaanin  ka'laththilea  karththar  thanakku  uththaravu  aru'linathaith  thaaveethu  akkaalaththilea  ka'ndu  anggeathaanea  baliyittaan.  (1naa’laagamam  21:28)

மோசே  வனாந்தரத்தில்  உண்டாக்கின  கர்த்தருடைய  வாசஸ்தலமும்  சர்வாங்க  தகனபலிபீடமும்  அக்காலத்திலே  கிபியோனின்  மேட்டில்  இருந்தது.  (1நாளாகமம்  21:29)

moasea  vanaantharaththil  u'ndaakkina  karththarudaiya  vaasasthalamum  sarvaangga  thaganabalipeedamum  akkaalaththilea  kibiyoanin  meattil  irunthathu.  (1naa’laagamam  21:29)

தாவீது  கர்த்தருடைய  தூதனின்  பட்டயத்திற்குப்  பயந்திருந்தபடியால்,  அவன்  தேவசந்நிதியில்  போய்  விசாரிக்கக்கூடாதிருந்தது.  (1நாளாகமம்  21:30)

thaaveethu  karththarudaiya  thoothanin  pattayaththi’rkup  bayanthirunthapadiyaal,  avan  theavasannithiyil  poay  visaarikkakkoodaathirunthathu.  (1naa’laagamam  21:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!