Thursday, September 22, 2016

1 Naa'laagamam 20 | 1 நாளாகமம் 20 | 1 Chronicles 20

மறுவருஷம்,  ராஜாக்கள்  யுத்தத்திற்குப்  புறப்படும்  காலம்  வந்தபோது,  யோவாப்  இராணுவபலத்தைக்  கூட்டிக்கொண்டுபோய்,  அம்மோன்  புத்திரரின்  தேசத்தைப்  பாழ்க்கடித்து  ரப்பாவுக்கு  வந்து  அதை  முற்றிக்கைபோட்டான்;  தாவீதோ  எருசலேமில்  இருந்துவிட்டான்;  யோவாப்  ரப்பாவை  அடித்துச்  சங்கரித்தான்.  (1நாளாகமம்  20:1)

ma’ruvarusham,  raajaakka'l  yuththaththi’rkup  pu’rappadum  kaalam  vanthapoathu,  yoavaab  iraa'nuvabalaththaik  koottikko'ndupoay,  ammoan  puththirarin  theasaththaip  paazhkkadiththu  rabbaavukku  vanthu  athai  mut’rikkaipoattaan;  thaaveethoa  erusaleamil  irunthuvittaan;  yoavaab  rabbaavai  adiththuch  sanggariththaan.  (1naa’laagamam  20:1)

தாவீது  வந்து,  அவர்கள்  ராஜாவுடைய  தலையின்மேல்  இருந்த  கிரீடத்தை  எடுத்துக்கொண்டான்;  அது  ஒரு  தாலந்து  பொன்நிறையும்  ரத்தினங்கள்  பதித்ததுமாயிருந்தது;  அது  தாவீதின்  தலையில்  வைக்கப்பட்டது;  பட்டணத்திலிருந்து  ஏராளமான  கொள்ளையையும்  கொண்டுபோனான்.  (1நாளாகமம்  20:2)

thaaveethu  vanthu,  avarga'l  raajaavudaiya  thalaiyinmeal  iruntha  kireedaththai  eduththukko'ndaan;  athu  oru  thaalanthu  ponni’raiyum  raththinangga'l  pathiththathumaayirunthathu;  athu  thaaveethin  thalaiyil  vaikkappattathu;  patta'naththilirunthu  earaa'lamaana  ko'l'laiyaiyum  ko'ndupoanaan.  (1naa’laagamam  20:2)

பின்பு  அதிலிருந்த  ஜனங்களை  அவன்  வெளியே  கொண்டுபோய்,  அவர்களை  வாள்களுக்கும்,  இருப்புப்பாரைகளுக்கும்,  கோடரிகளுக்கும்  உட்படுத்தி;  இப்படி  அம்மோன்  புத்திரரின்  பட்டணங்களுக்கெல்லாம்  தாவீது  செய்து,  எல்லா  ஜனத்தோடுங்கூட  எருசலேமுக்குத்  திரும்பினான்.  (1நாளாகமம்  20:3)

pinbu  athiliruntha  janangga'lai  avan  ve'liyea  ko'ndupoay,  avarga'lai  vaa'lga'lukkum,  iruppuppaaraiga'lukkum,  koadariga'lukkum  udpaduththi;  ippadi  ammoan  puththirarin  patta'nangga'lukkellaam  thaaveethu  seythu,  ellaa  janaththoadungkooda  erusaleamukkuth  thirumbinaan.  (1naa’laagamam  20:3)

அதற்குப்பின்பு  கேசேரிலே  பெலிஸ்தரோடு  யுத்தம்  உண்டாயிற்று;  அப்பொழுது  ஊசாத்தியனாகிய  சிபெக்காய்  இராட்சத  புத்திரரில்  ஒருவனான  சிப்பாயி  என்பவனைக்  கொன்றான்;  அதினால்  அவர்கள்  வசப்படுத்தப்பட்டார்கள்.  (1நாளாகமம்  20:4)

atha’rkuppinbu  keasearilea  pelistharoadu  yuththam  u'ndaayit’ru;  appozhuthu  oosaaththiyanaagiya  sibekkaay  iraadchatha  puththiraril  oruvanaana  sippaayi  enbavanaik  kon’raan;  athinaal  avarga'l  vasappaduththappattaarga'l.  (1naa’laagamam  20:4)

திரும்பப்  பெலிஸ்தரோடு  யுத்தம்  உண்டாகிறபோது,  யாவீரின்  குமாரனாகிய  எல்க்கானான்  காத்தூரானாகிய  கோலியாத்தின்  சகோதரனான  லாகேமியைக்  கொன்றான்;  அவன்  ஈட்டித்  தாங்கு  நெய்கிறவர்களின்  படைமரம்  அவ்வளவு  பெரிதாயிருந்தது.  (1நாளாகமம்  20:5)

thirumbap  pelistharoadu  yuththam  u'ndaagi’rapoathu,  yaaveerin  kumaaranaagiya  elkkaanaan  kaaththooraanaagiya  koaliyaaththin  sagoatharanaana  laageamiyaik  kon’raan;  avan  eettith  thaanggu  neygi’ravarga'lin  padaimaram  avva'lavu  perithaayirunthathu.  (1naa’laagamam  20:5)

மறுபடியும்  ஒரு  யுத்தம்  காத்திலே  நடந்தபோது,  அங்கே  நெட்டையனான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவனுக்கு  அவ்வாறு  விரலாக  இருபத்துநாலு  விரல்கள்  இருந்தது,  அவனும்  இராட்சத  சந்ததியாயிருந்து,  (1நாளாகமம்  20:6)

ma’rupadiyum  oru  yuththam  kaaththilea  nadanthapoathu,  anggea  nettaiyanaana  oru  manushan  irunthaan;  avanukku  avvaa’ru  viralaaga  irubaththunaalu  viralga'l  irunthathu,  avanum  iraadchatha  santhathiyaayirunthu,  (1naa’laagamam  20:6)

இஸ்ரவேலை  நிந்தித்தான்;  தாவீதின்  சகோதரனாகிய  சிமேயாவின்  குமாரன்  யோனத்தான்  அவனைக்  கொன்றான்.  (1நாளாகமம்  20:7)

isravealai  ninthiththaan;  thaaveethin  sagoatharanaagiya  simeayaavin  kumaaran  yoanaththaan  avanaik  kon’raan.  (1naa’laagamam  20:7)

காத்தூரிலிருந்த  இராட்சதனுக்குப்  பிறந்த  இவர்கள்  தாவீதின்  கையினாலும்  அவன்  சேவகரின்  கையினாலும்  மடிந்தார்கள்.  (1நாளாகமம்  20:8)

kaaththooriliruntha  iraadchathanukkup  pi’rantha  ivarga'l  thaaveethin  kaiyinaalum  avan  seavagarin  kaiyinaalum  madinthaarga'l.  (1naa’laagamam  20:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!