Thursday, September 22, 2016

1 Naa'laagamam 17 | 1 நாளாகமம் 17 | 1 Chronicles 17

தாவீது  தன்  வீட்டிலே  வாசமாயிருக்கிறபோது,  அவன்  தீர்க்கதரிசியாகிய  நாத்தானை  நோக்கி:  பாரும்,  நான்  கேதுருமரவீட்டிலே  வாசம்பண்ணுகிறேன்;  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியோ  திரைகளின்கீழ்  இருக்கிறது  என்றான்.  (1நாளாகமம்  17:1)

thaaveethu  than  veettilea  vaasamaayirukki’rapoathu,  avan  theerkkatharisiyaagiya  naaththaanai  noakki:  paarum,  naan  keathurumaraveettilea  vaasampa'n'nugi’rean;  karththarudaiya  udanpadikkaip  pettiyoa  thiraiga'linkeezh  irukki’rathu  en’raan.  (1naa’laagamam  17:1)

அப்பொழுது  நாத்தான்  தாவீதை  நோக்கி:  உம்முடைய  இருதயத்தில்  இருக்கிறதையெல்லாம்  செய்யும்;  தேவன்  உம்மோடு  இருக்கிறார்  என்றான்.  (1நாளாகமம்  17:2)

appozhuthu  naaththaan  thaaveethai  noakki:  ummudaiya  iruthayaththil  irukki’rathaiyellaam  seyyum;  theavan  ummoadu  irukki’raar  en’raan.  (1naa’laagamam  17:2)

அன்று  ராத்திரியிலே,  தேவனுடைய  வார்த்தை  நாத்தானுக்கு  உண்டாகி,  அவர்:  (1நாளாகமம்  17:3)

an’ru  raaththiriyilea,  theavanudaiya  vaarththai  naaththaanukku  u'ndaagi,  avar:  (1naa’laagamam  17:3)

நீ  போய்,  என்  தாசனாகிய  தாவீதை  நோக்கி:  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  வாசமாயிருக்க  நீ  எனக்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டாம்.  (1நாளாகமம்  17:4)

nee  poay,  en  thaasanaagiya  thaaveethai  noakki:  karththar  sollugi’rathu  ennaven’raal:  naan  vaasamaayirukka  nee  enakku  aalayaththaik  kattavea'ndaam.  (1naa’laagamam  17:4)

நான்  இஸ்ரவேலை  வரப்பண்ணின  நாள்முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்  நான்  ஒரு  ஆலயத்திலே  வாசம்பண்ணாமல்,  ஒரு  கூடாரத்திலிருந்து  மறு  கூடாரத்துக்கும்,  ஒரு  வாசஸ்தலத்திலிருந்து  மறு  வாசஸ்தலத்துக்கும்  போனேன்.  (1நாளாகமம்  17:5)

naan  isravealai  varappa'n'nina  naa'lmutha’rko'ndu  innaa'lvaraikkum  naan  oru  aalayaththilea  vaasampa'n'naamal,  oru  koodaaraththilirunthu  ma’ru  koodaaraththukkum,  oru  vaasasthalaththilirunthu  ma’ru  vaasasthalaththukkum  poanean.  (1naa’laagamam  17:5)

நான்  சகல  இஸ்ரவேலோடும்  உலாவி  வந்த  எவ்விடத்திலாகிலும்,  நான்  என்  ஜனத்தை  மேய்க்கக்  கற்பித்த  இஸ்ரவேலின்  நியாயாதிபதிகளில்  யாதொருவனை  நோக்கி:  நீங்கள்  எனக்குக்  கேதுருமரத்தால்  செய்யப்பட்ட  ஆலயத்தைக்  கட்டாதிருக்கிறது  என்ன  என்று  யாதொரு  வார்த்தை  சொன்னது  உண்டோ?  (1நாளாகமம்  17:6)

naan  sagala  isravealoadum  ulaavi  vantha  evvidaththilaagilum,  naan  en  janaththai  meaykkak  ka’rpiththa  isravealin  niyaayaathibathiga'lil  yaathoruvanai  noakki:  neengga'l  enakkuk  keathurumaraththaal  seyyappatta  aalayaththaik  kattaathirukki’rathu  enna  en’ru  yaathoru  vaarththai  sonnathu  u'ndoa?  (1naa’laagamam  17:6)

இப்போதும்,  நீ  என்  தாசனாகிய  தாவீதை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  அதிபதியாயிருக்கும்படி,  ஆடுகளின்  பின்னே  நடந்த  உன்னை  ஆட்டுமந்தையை  விட்டு  எடுத்து,  (1நாளாகமம்  17:7)

ippoathum,  nee  en  thaasanaagiya  thaaveethai  noakki:  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  nee  en  janamaagiya  isravealinmeal  athibathiyaayirukkumpadi,  aaduga'lin  pinnea  nadantha  unnai  aattumanthaiyai  vittu  eduththu,  (1naa’laagamam  17:7)

நீ  போன  இடமெல்லாம்  உன்னோடே  இருந்து,  உன்  சத்துருக்களையெல்லாம்  உனக்கு  முன்பாக  நிர்மூலமாக்கி,  பூமியிலிருக்கிற  பெரியோர்களின்  நாமத்திற்கு  ஒத்த  நாமத்தை  உனக்கு  உண்டாக்கினேன்.  (1நாளாகமம்  17:8)

nee  poana  idamellaam  unnoadea  irunthu,  un  saththurukka'laiyellaam  unakku  munbaaga  nirmoolamaakki,  boomiyilirukki’ra  periyoarga'lin  naamaththi’rku  oththa  naamaththai  unakku  u'ndaakkinean.  (1naa’laagamam  17:8)

நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  ஒரு  இடத்தையும்  ஏற்படுத்தி,  அவர்கள்  தங்கள்  ஸ்தானத்திலே  குடியிருக்கவும்,  இனி  அவர்கள்  அலையாமலும்,  முன்போலும்,  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  நியாயாதிபதிகளைக்  கட்டளையிட்ட  நாள்முதல்  நடந்ததுபோலும்,  நியாயக்கேட்டின்  மக்களால்  இனிச்  சிறுமைப்படாமலும்  இருக்கவும்  அவர்களை  நாட்டினேன்.  (1நாளாகமம்  17:9)

naan  en  janamaagiya  isravealukku  oru  idaththaiyum  ea’rpaduththi,  avarga'l  thangga'l  sthaanaththilea  kudiyirukkavum,  ini  avarga'l  alaiyaamalum,  munpoalum,  naan  en  janamaagiya  isravealinmeal  niyaayaathibathiga'laik  katta'laiyitta  naa'lmuthal  nadanthathupoalum,  niyaayakkeattin  makka'laal  inich  si’rumaippadaamalum  irukkavum  avarga'lai  naattinean.  (1naa’laagamam  17:9)

உன்  சத்துருக்களையெல்லாம்  கீழ்ப்படுத்தினேன்.  இப்போதும்  கர்த்தர்  உனக்கு  ஒரு  வீட்டைக்  கட்டுவார்  என்பதை  உனக்கு  அறிவிக்கிறேன்.  (1நாளாகமம்  17:10)

un  saththurukka'laiyellaam  keezhppaduththinean.  ippoathum  karththar  unakku  oru  veettaik  kattuvaar  enbathai  unakku  a’rivikki’rean.  (1naa’laagamam  17:10)

நீ  உன்  பிதாக்களிடத்திலே  போக,  உன்  நாட்கள்  நிறைவேறும்போது,  நான்  உனக்குப்பின்பு  உன்  புத்திரரில்  ஒருவனாகிய  உன்  சந்ததியை  எழும்பப்பண்ணி,  அவன்  ராஜ்யத்தை  நிலைப்படுத்துவேன்.  (1நாளாகமம்  17:11)

nee  un  pithaakka'lidaththilea  poaga,  un  naadka'l  ni’raivea’rumpoathu,  naan  unakkuppinbu  un  puththiraril  oruvanaagiya  un  santhathiyai  ezhumbappa'n'ni,  avan  raajyaththai  nilaippaduththuvean.  (1naa’laagamam  17:11)

அவன்  எனக்கு  ஒரு  ஆலயத்தைக்  கட்டுவான்;  அவன்  சிங்காசனத்தை  என்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்.  (1நாளாகமம்  17:12)

avan  enakku  oru  aalayaththaik  kattuvaan;  avan  singgaasanaththai  en’raikkum  nilaikkappa'n'nuvean.  (1naa’laagamam  17:12)

நான்  அவனுக்குப்  பிதாவாயிருப்பேன்,  அவன்  எனக்குக்  குமாரனாயிருப்பான்;  உனக்கு  முன்னிருந்தவனை  விட்டு  என்  கிருபையை  நான்  விலகப்பண்ணினதுபோல,  அவனை  விட்டு  விலகப்பண்ணாமல்,  (1நாளாகமம்  17:13)

naan  avanukkup  pithaavaayiruppean,  avan  enakkuk  kumaaranaayiruppaan;  unakku  munnirunthavanai  vittu  en  kirubaiyai  naan  vilagappa'n'ninathupoala,  avanai  vittu  vilagappa'n'naamal,  (1naa’laagamam  17:13)

அவனை  என்  ஆலயத்திலும்  என்  ராஜ்யத்திலும்  என்றென்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்;  அவனுடைய  ராஜாசனம்  என்றென்றைக்கும்  நிலைபெற்றிருக்கும்  என்று  சொல்  என்றார்.  (1நாளாகமம்  17:14)

avanai  en  aalayaththilum  en  raajyaththilum  en’ren’raikkum  nilaikkappa'n'nuvean;  avanudaiya  raajaasanam  en’ren’raikkum  nilaipet’rirukkum  en’ru  sol  en’raar.  (1naa’laagamam  17:14)

நாத்தான்  இந்த  எல்லா  வார்த்தைகளின்படியும்  இந்த  எல்லாத்  தரிசனத்தின்படியும்  தாவீதுக்குச்  சொன்னான்.  (1நாளாகமம்  17:15)

naaththaan  intha  ellaa  vaarththaiga'linpadiyum  intha  ellaath  tharisanaththinpadiyum  thaaveethukkuch  sonnaan.  (1naa’laagamam  17:15)

அப்பொழுது  தாவீதுராஜா  உட்பிரவேசித்து,  கர்த்தருடைய  சமுகத்திலிருந்து:  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீர்  என்னை  இதுவரைக்கும்  கொண்டுவந்ததற்கு  நான்  எம்மாத்திரம்?  என்  வீடும்  எம்மாத்திரம்?  (1நாளாகமம்  17:16)

appozhuthu  thaaveethuraajaa  udpiraveasiththu,  karththarudaiya  samugaththilirunthu:  theavanaagiya  karththaavea,  theavareer  ennai  ithuvaraikkum  ko'nduvanthatha’rku  naan  emmaaththiram?  en  veedum  emmaaththiram?  (1naa’laagamam  17:16)

தேவனே,  இது  இன்னும்  உம்முடைய  பார்வைக்குக்  கொஞ்சக்காரியமாயிருக்கிறது  என்று  தேவனான  கர்த்தராயிருக்கிற  நீர்  உமது  அடியானுடைய  வீட்டைக்குறித்து  வெகுதூரமாயிருக்கும்  காலத்துச்  செய்தியையும்  சொல்லி,  என்னை  மகா  மேன்மையான  சந்ததியின்  மனுஷனாகப்  பார்த்தீர்.  (1நாளாகமம்  17:17)

theavanea,  ithu  innum  ummudaiya  paarvaikkuk  kognchakkaariyamaayirukki’rathu  en’ru  theavanaana  karththaraayirukki’ra  neer  umathu  adiyaanudaiya  veettaikku’riththu  veguthooramaayirukkum  kaalaththuch  seythiyaiyum  solli,  ennai  mahaa  meanmaiyaana  santhathiyin  manushanaagap  paarththeer.  (1naa’laagamam  17:17)

உமது  அடியானுக்கு  உண்டாகும்  கனத்தைப்பற்றி,  தாவீது  அப்புறம்  உம்மோடே  சொல்வது  என்ன?  தேவரீர்  உமது  அடியானை  அறிவீர்.  (1நாளாகமம்  17:18)

umathu  adiyaanukku  u'ndaagum  kanaththaippat’ri,  thaaveethu  appu’ram  ummoadea  solvathu  enna?  theavareer  umathu  adiyaanai  a’riveer.  (1naa’laagamam  17:18)

கர்த்தாவே,  உமது  அடியானின்  நிமித்தமும்,  உமது  இருதயத்தின்படியும்,  இந்தப்  பெரிய  காரியங்களையெல்லாம்  அறியப்பண்ணும்படிக்கு,  இந்தப்  பெரிய  காரியத்தையெல்லாம்  செய்தீர்.  (1நாளாகமம்  17:19)

karththaavea,  umathu  adiyaanin  nimiththamum,  umathu  iruthayaththinpadiyum,  inthap  periya  kaariyangga'laiyellaam  a’riyappa'n'numpadikku,  inthap  periya  kaariyaththaiyellaam  seytheer.  (1naa’laagamam  17:19)

கர்த்தாவே,  நாங்கள்  எங்கள்  காதுகளால்  கேட்ட  எல்லாவற்றின்படியும்  தேவரீருக்கு  நிகரானவர்  இல்லை;  உம்மைத்தவிர  வேறே  தேவனும்  இல்லை.  (1நாளாகமம்  17:20)

karththaavea,  naangga'l  engga'l  kaathuga'laal  keatta  ellaavat’rinpadiyum  theavareerukku  nigaraanavar  illai;  ummaiththavira  vea’rea  theavanum  illai.  (1naa’laagamam  17:20)

உமது  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  நிகரான  ஜனமும்  உண்டோ?  பூலோகத்தில்  இந்த  ஒரே  ஜாதியைத்  தேவனாகிய  நீர்  உமக்கு  ஜனமாக  மீட்கும்படி,  பயங்கரமான  பெரிய  காரியங்களினால்  உமக்குக்  கீர்த்தியை  உண்டாக்கி,  நீர்  எகிப்திற்கு  நீங்கலாக்கி  மீட்ட  உமது  ஜனத்திற்குமுன்பாக  ஜாதிகளைத்  துரத்தி,  (1நாளாகமம்  17:21)

umathu  janamaagiya  isravealukku  nigaraana  janamum  u'ndoa?  booloagaththil  intha  orea  jaathiyaith  theavanaagiya  neer  umakku  janamaaga  meedkumpadi,  bayanggaramaana  periya  kaariyangga'linaal  umakkuk  keerththiyai  u'ndaakki,  neer  egipthi’rku  neenggalaakki  meetta  umathu  janaththi’rkumunbaaga  jaathiga'laith  thuraththi,  (1naa’laagamam  17:21)

உமது  ஜனமாகிய  இஸ்ரவேலர்  என்றைக்கும்  உமது  ஜனமாயிருப்பதற்கு  அவர்களை  நிலைப்படுத்தி,  கர்த்தராகிய  நீர்தாமே  அவர்களுக்குத்  தேவனானீர்.  (1நாளாகமம்  17:22)

umathu  janamaagiya  isravealar  en’raikkum  umathu  janamaayiruppatha’rku  avarga'lai  nilaippaduththi,  karththaraagiya  neerthaamea  avarga'lukkuth  theavanaaneer.  (1naa’laagamam  17:22)

இப்போதும்  கர்த்தாவே,  தேவரீர்  அடியானையும்  அவன்  வீட்டையும்  குறித்துச்  சொன்ன  வார்த்தை  என்றென்றைக்கும்  நிலைவரப்பட்டிருப்பதாக;  தேவரீர்  சொன்னபடியே  செய்தருளும்.  (1நாளாகமம்  17:23)

ippoathum  karththaavea,  theavareer  adiyaanaiyum  avan  veettaiyum  ku’riththuch  sonna  vaarththai  en’ren’raikkum  nilaivarappattiruppathaaga;  theavareer  sonnapadiyea  seytharu'lum.  (1naa’laagamam  17:23)

ஆம்,  அது  நிலைவரப்பட்டிருக்கவும்,  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  இஸ்ரவேலுக்குத்  தேவன்  என்றும்,  உமது  அடியானாகிய  தாவீதின்  வீடு  உமக்கு  முன்பாகத்  திடமானதென்றும்  சொல்லப்படுவதினால்,  உமது  நாமம்  என்றைக்கும்  மகிமைப்படவும்கடவது.  (1நாளாகமம்  17:24)

aam,  athu  nilaivarappattirukkavum,  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  isravealukkuth  theavan  en’rum,  umathu  adiyaanaagiya  thaaveethin  veedu  umakku  munbaagath  thidamaanathen’rum  sollappaduvathinaal,  umathu  naamam  en’raikkum  magimaippadavumkadavathu.  (1naa’laagamam  17:24)

உனக்கு  வீடு  கட்டுவேன்  என்று  என்  தேவனாகிய  நீர்  உமது  அடியான்  செவிகேட்க  வெளிப்படுத்தினீர்;  ஆகையால்  உமக்கு  முன்பாக  விண்ணப்பம்பண்ண,  உமது  அடியானுக்கு  மனத்தைரியம்  கிடைத்தது.  (1நாளாகமம்  17:25)

unakku  veedu  kattuvean  en’ru  en  theavanaagiya  neer  umathu  adiyaan  sevikeadka  ve'lippaduththineer;  aagaiyaal  umakku  munbaaga  vi'n'nappampa'n'na,  umathu  adiyaanukku  manaththairiyam  kidaiththathu.  (1naa’laagamam  17:25)

இப்போதும்  கர்த்தாவே,  நீரே  தேவன்;  நீர்  உமது  அடியானைக்குறித்து  இந்த  நல்ல  விசேஷத்தைச்  சொன்னீர்.  (1நாளாகமம்  17:26)

ippoathum  karththaavea,  neerea  theavan;  neer  umathu  adiyaanaikku’riththu  intha  nalla  viseashaththaich  sonneer.  (1naa’laagamam  17:26)

இப்போதும்  உமது  அடியானின்  வீடு  என்றைக்கும்  உமக்கு  முன்பாக  இருக்கும்படிக்கு,  அதை  ஆசீர்வதித்தருளினீர்;  கர்த்தராகிய  தேவரீர்  அதை  ஆசீர்வதித்தபடியினால்,  அது  என்றைக்கும்  ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்  என்றான்.  (1நாளாகமம்  17:27)

ippoathum  umathu  adiyaanin  veedu  en’raikkum  umakku  munbaaga  irukkumpadikku,  athai  aaseervathiththaru'lineer;  karththaraagiya  theavareer  athai  aaseervathiththapadiyinaal,  athu  en’raikkum  aaseervathikkappattirukkum  en’raan.  (1naa’laagamam  17:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!