Thursday, September 22, 2016

1 Naa'laagamam 16 | 1 நாளாகமம் 16 | 1 Chronicles 16



அவர்கள்  தேவனுடைய  பெட்டியை  உள்ளே  கொண்டுவந்தபோது,  தாவீது  அதற்குப்  போட்ட  கூடாரத்தின்  நடுவே  அவர்கள்  அதை  வைத்து,  தேவனுடைய  சந்நிதியில்  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தினார்கள்.  (1நாளாகமம்  16:1)

avarga'l  theavanudaiya  pettiyai  u'l'lea  ko'nduvanthapoathu,  thaaveethu  atha’rkup  poatta  koodaaraththin  naduvea  avarga'l  athai  vaiththu,  theavanudaiya  sannithiyil  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  seluththinaarga'l.  (1naa’laagamam  16:1)

தாவீது  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தித்  தீர்ந்தபின்பு,  அவன்  ஜனத்தைக்  கர்த்தருடைய  நாமத்திலே  ஆசீர்வதித்து,  (1நாளாகமம்  16:2)

thaaveethu  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaanabaliga'laiyum  seluththith  theernthapinbu,  avan  janaththaik  karththarudaiya  naamaththilea  aaseervathiththu,  (1naa’laagamam  16:2)

புருஷர்  தொடங்கி  ஸ்திரீகள்மட்டும்,  இஸ்ரவேலராகிய  அனைவருக்கும்  அவரவருக்கு  ஒவ்வொரு  அப்பத்தையும்,  ஒவ்வொரு  இறைச்சித்  துண்டையும்,  ஒவ்வொருபடி  திராட்சரசத்தையும்  பங்கிட்டுக்  கொடுத்தான்.  (1நாளாகமம்  16:3)

purushar  thodanggi  sthireega'lmattum,  isravealaraagiya  anaivarukkum  avaravarukku  ovvoru  appaththaiyum,  ovvoru  i’raichchith  thu'ndaiyum,  ovvorupadi  thiraadcharasaththaiyum  panggittuk  koduththaan.  (1naa’laagamam  16:3)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரைப்  பிரஸ்தாபம்பண்ணித்  துதித்துப்  புகழுகிறதற்கு  கர்த்தருடைய  பெட்டிக்கு  முன்பாகச்  சேவிக்கத்தக்க  லேவியரில்  சிலரை  நியமித்தான்.  (1நாளாகமம்  16:4)

isravealin  theavanaagiya  karththaraip  pirasthaabampa'n'nith  thuthiththup  pugazhugi’ratha’rku  karththarudaiya  pettikku  munbaagach  seavikkaththakka  leaviyaril  silarai  niyamiththaan.  (1naa’laagamam  16:4)

அவர்களில்  ஆசாப்  தலைவனும்,  சகரியா  அவனுக்கு  இரண்டாவதுமாயிருந்தான்;  ஏயெல்,  செமிரமோத்,  யெகியேல்,  மத்தித்தியா,  எலியாப்,  பெனாயா,  ஓபேத்ஏதோம்,  ஏயெல்  என்பவர்கள்  தம்புரு  சுரமண்டலம்  என்னும்  கீதவாத்தியங்களை  வாசிக்கவும்,  ஆசாப்  கைத்தாளங்களைக்  கொட்டவும்,  (1நாளாகமம்  16:5)

avarga'lil  aasaap  thalaivanum,  sagariyaa  avanukku  ira'ndaavathumaayirunthaan;  eayel,  semiramoath,  yegiyeal,  maththiththiyaa,  eliyaab,  benaayaa,  oabeatheathoam,  eayel  enbavarga'l  thamburu  surama'ndalam  ennum  keethavaaththiyangga'lai  vaasikkavum,  aasaap  kaiththaa'langga'laik  kottavum,  (1naa’laagamam  16:5)

பெனாயா,  யாகாசியேல்  என்னும்  ஆசாரியர்  எப்போதும்  தேவனுடைய  உடன்படிக்கைப்  பெட்டிக்கு  முன்பாகப்  பூரிகைகளை  ஊதவும்  நியமிக்கப்பட்டார்கள்.  (1நாளாகமம்  16:6)

benaayaa,  yaagaasiyeal  ennum  aasaariyar  eppoathum  theavanudaiya  udanpadikkaip  pettikku  munbaagap  poorigaiga'lai  oothavum  niyamikkappattaarga'l.  (1naa’laagamam  16:6)

அப்படி  ஆரம்பித்த  அந்நாளிலேதானே  கர்த்தருக்குத்  துதியாகப்  பாடும்படி  தாவீது  ஆசாப்பிடத்திலும்  அவன்  சகோதரரிடத்திலும்  கொடுத்த  சங்கீதமாவது:  (1நாளாகமம்  16:7)

appadi  aarambiththa  annaa'lileathaanea  karththarukkuth  thuthiyaagap  paadumpadi  thaaveethu  aasaappidaththilum  avan  sagoathararidaththilum  koduththa  sanggeethamaavathu:  (1naa’laagamam  16:7)

கர்த்தரைத்  துதித்து,  அவருடைய  நாமத்தைப்  பிரஸ்தாபமாக்குங்கள்;  அவருடைய  செய்கைகளை  ஜனங்களுக்குள்ளே  பிரசித்தப்படுத்துங்கள்.  (1நாளாகமம்  16:8)

karththaraith  thuthiththu,  avarudaiya  naamaththaip  pirasthaabamaakkungga'l;  avarudaiya  seygaiga'lai  janangga'lukku'l'lea  pirasiththappaduththungga'l.  (1naa’laagamam  16:8)

அவரைப்  பாடி,  அவரைக்  கீர்த்தனம்பண்ணி,  அவருடைய  அதிசயங்களையெல்லாம்  தியானித்துப்  பேசுங்கள்.  (1நாளாகமம்  16:9)

avaraip  paadi,  avaraik  keerththanampa'n'ni,  avarudaiya  athisayangga'laiyellaam  thiyaaniththup  peasungga'l.  (1naa’laagamam  16:9)

அவருடைய  பரிசுத்த  நாமத்தைக்குறித்து  மேன்மைபாராட்டுங்கள்;  கர்த்தரைத்  தேடுகிறவர்களின்  இருதயம்  மகிழ்வதாக.  (1நாளாகமம்  16:10)

avarudaiya  parisuththa  naamaththaikku’riththu  meanmaipaaraattungga'l;  karththaraith  theadugi’ravarga'lin  iruthayam  magizhvathaaga.  (1naa’laagamam  16:10)

கர்த்தரையும்  அவர்  வல்லமையையும்  நாடுங்கள்;  அவர்  சமுகத்தை  நித்தமும்  தேடுங்கள்.  (1நாளாகமம்  16:11)

karththaraiyum  avar  vallamaiyaiyum  naadungga'l;  avar  samugaththai  niththamum  theadungga'l.  (1naa’laagamam  16:11)

அவருடைய  தாசனாகிய  இஸ்ரவேலின்  சந்ததியே!  அவரால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய  யாக்கோபின்  புத்திரரே!  (1நாளாகமம்  16:12)

avarudaiya  thaasanaagiya  isravealin  santhathiyea!  avaraal  therinthuko'l'lappattavarga'laagiya  yaakkoabin  puththirarea!  (1naa’laagamam  16:12)

அவர்  செய்த  அதிசயங்களையும்  அவருடைய  அற்புதங்களையும்,  அவர்  வாக்கின்  நியாயத்தீர்ப்புகளையும்  நினைவுகூருங்கள்.  (1நாளாகமம்  16:13)

avar  seytha  athisayangga'laiyum  avarudaiya  a’rputhangga'laiyum,  avar  vaakkin  niyaayaththeerppuga'laiyum  ninaivukoorungga'l.  (1naa’laagamam  16:13)

அவரே  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்;  அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  பூமியெங்கும்  விளங்கும்.  (1நாளாகமம்  16:14)

avarea  nammudaiya  theavanaagiya  karththar;  avarudaiya  niyaayaththeerppuga'l  boomiyenggum  vi'langgum.  (1naa’laagamam  16:14)

ஆயிரந்தலைமுறைக்கென்று  அவர்  கட்டளையிட்ட  வாக்கையும்,  ஆபிரகாமோடே  அவர்  பண்ணின  உடன்படிக்கையையும்,  (1நாளாகமம்  16:15)

aayiranthalaimu’raikken’ru  avar  katta'laiyitta  vaakkaiyum,  aabirahaamoadea  avar  pa'n'nina  udanpadikkaiyaiyum,  (1naa’laagamam  16:15)

அவர்  ஈசாக்குக்கு  இட்ட  ஆணையையும்  என்றென்றைக்கும்  நினைத்திருங்கள்.  (1நாளாகமம்  16:16)

avar  eesaakkukku  itta  aa'naiyaiyum  en’ren’raikkum  ninaiththirungga'l.  (1naa’laagamam  16:16)

அதை  யாக்கோபுக்குப்  பிரமாணமாகவும்,  இஸ்ரவேலுக்கு  நித்திய  உடன்படிக்கையாகவும்  உறுதிப்படுத்தி:  (1நாளாகமம்  16:17)

athai  yaakkoabukkup  piramaa'namaagavum,  isravealukku  niththiya  udanpadikkaiyaagavum  u’ruthippaduththi:  (1naa’laagamam  16:17)

உங்கள்  சுதந்தரபாகமாக  கானான்  தேசத்தை  உனக்குத்  தருவேன்  என்றார்.  (1நாளாகமம்  16:18)

ungga'l  suthantharapaagamaaga  kaanaan  theasaththai  unakkuth  tharuvean  en’raar.  (1naa’laagamam  16:18)

அக்காலத்தில்  அவர்கள்  கொஞ்சத்தொகைக்குட்பட்ட  சொற்பஜனங்களும்  பரதேசிகளுமாயிருந்தார்கள்.  (1நாளாகமம்  16:19)

akkaalaththil  avarga'l  kognchaththogaikkudpatta  so’rpajanangga'lum  paratheasiga'lumaayirunthaarga'l.  (1naa’laagamam  16:19)

அவர்கள்  ஒரு  ஜனத்தை  விட்டு  மறு  ஜனத்தண்டைக்கும்,  ஒரு  ராஜ்யத்தைவிட்டு  மறு  தேசத்தாரண்டைக்கும்  போனார்கள்.  (1நாளாகமம்  16:20)

avarga'l  oru  janaththai  vittu  ma’ru  janaththa'ndaikkum,  oru  raajyaththaivittu  ma’ru  theasaththaara'ndaikkum  poanaarga'l.  (1naa’laagamam  16:20)

அவர்களை  யொடுக்கும்படி  ஒருவருக்கும்  இடங்கொடாமல்,  அவர்கள்  நிமித்தம்  ராஜாக்களைக்  கடிந்துகொண்டு:  (1நாளாகமம்  16:21)

avarga'lai  yodukkumpadi  oruvarukkum  idangkodaamal,  avarga'l  nimiththam  raajaakka'laik  kadinthuko'ndu:  (1naa’laagamam  16:21)

நான்  அபிஷேகம்பண்ணினவர்களை  நீங்கள்  தொடாமலும்,  என்னுடைய  தீர்க்கதரிசிகளுக்குத்  தீங்குசெய்யாமலும்  இருங்கள்  என்றார்.  (1நாளாகமம்  16:22)

naan  abisheagampa'n'ninavarga'lai  neengga'l  thodaamalum,  ennudaiya  theerkkatharisiga'lukkuth  theengguseyyaamalum  irungga'l  en’raar.  (1naa’laagamam  16:22)

பூமியின்  சகல  குடிகளே,  கர்த்தரைப்  பாடி,  நாளுக்குநாள்  அவருடைய  ரட்சிப்பைச்  சுவிசேஷமாய்  அறிவியுங்கள்.  (1நாளாகமம்  16:23)

boomiyin  sagala  kudiga'lea,  karththaraip  paadi,  naa'lukkunaa'l  avarudaiya  radchippaich  suviseashamaay  a’riviyungga'l.  (1naa’laagamam  16:23)

ஜாதிகளுக்குள்  அவருடைய  மகிமையையும்,  சகல  ஜனங்களுக்குள்ளும்  அவருடைய  அதிசயங்களையும்  விவரித்துச்  சொல்லுங்கள்.  (1நாளாகமம்  16:24)

jaathiga'lukku'l  avarudaiya  magimaiyaiyum,  sagala  janangga'lukku'l'lum  avarudaiya  athisayangga'laiyum  vivariththuch  sollungga'l.  (1naa’laagamam  16:24)

கர்த்தர்  பெரியவரும்  மிகவும்  துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்;  எல்லா  தேவர்களிலும்  பயப்படத்தக்கவர்  அவரே.  (1நாளாகமம்  16:25)

karththar  periyavarum  migavum  thuthikkappadaththakkavarumaayirukki’raar;  ellaa  theavarga'lilum  bayappadaththakkavar  avarea.  (1naa’laagamam  16:25)

சகல  ஜனங்களுடைய  தேவர்களும்  விக்கிரகங்கள்தானே;  கர்த்தரோ  வானங்களை  உண்டாக்கினவர்.  (1நாளாகமம்  16:26)

sagala  janangga'ludaiya  theavarga'lum  vikkiragangga'lthaanea;  karththaroa  vaanangga'lai  u'ndaakkinavar.  (1naa’laagamam  16:26)

மகிமையும்  கனமும்  அவர்  சமுகத்தில்  இருக்கிறது;  வல்லமையும்  மகிழ்ச்சியும்  அவர்  ஸ்தலத்தில்  இருக்கிறது.  (1நாளாகமம்  16:27)

magimaiyum  kanamum  avar  samugaththil  irukki’rathu;  vallamaiyum  magizhchchiyum  avar  sthalaththil  irukki’rathu.  (1naa’laagamam  16:27)

ஜனங்களின்  வம்சங்களே,  கர்த்தருக்கு  மகிமையையும்  வல்லமையையும்  செலுத்துங்கள்;  கர்த்தருக்கே  அதைச்  செலுத்துங்கள்.  (1நாளாகமம்  16:28)

janangga'lin  vamsangga'lea,  karththarukku  magimaiyaiyum  vallamaiyaiyum  seluththungga'l;  karththarukkea  athaich  seluththungga'l.  (1naa’laagamam  16:28)

கர்த்தருக்கு  அவருடைய  நாமத்திற்குரிய  மகிமையைச்  செலுத்தி,  காணிக்கைகளைக்  கொண்டுவந்து,  அவருடைய  சந்நிதியில்  பிரவேசியுங்கள்;  பரிசுத்த  அலங்காரத்துடனே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுங்கள்.  (1நாளாகமம்  16:29)

karththarukku  avarudaiya  naamaththi’rkuriya  magimaiyaich  seluththi,  kaa'nikkaiga'laik  ko'nduvanthu,  avarudaiya  sannithiyil  piraveasiyungga'l;  parisuththa  alanggaaraththudanea  karththaraith  thozhuthuko'l'lungga'l.  (1naa’laagamam  16:29)

பூலோகத்தாரே,  நீங்கள்  யாவரும்  அவருக்கு  முன்பாக  நடுங்குங்கள்;  அவர்  பூச்சக்கரத்தை  அசையாதபடிக்கு  உறுதிப்படுத்துகிறவர்.  (1நாளாகமம்  16:30)

booloagaththaarea,  neengga'l  yaavarum  avarukku  munbaaga  nadunggungga'l;  avar  poochchakkaraththai  asaiyaathapadikku  u’ruthippaduththugi’ravar.  (1naa’laagamam  16:30)

வானங்கள்  மகிழ்ந்து,  பூமி  பூரிப்பதாக;  கர்த்தர்  ராஜரிகம்பண்ணுகிறார்  என்று  ஜாதிகளுக்குள்ளே  சொல்லப்படுவதாக.  (1நாளாகமம்  16:31)

vaanangga'l  magizhnthu,  boomi  poorippathaaga;  karththar  raajarigampa'n'nugi’raar  en’ru  jaathiga'lukku'l'lea  sollappaduvathaaga.  (1naa’laagamam  16:31)

சமுத்திரமும்  அதின்  நிறைவும்  முழங்கி,  நாடும்  அதிலுள்ள  யாவும்  களிகூருவதாக.  (1நாளாகமம்  16:32)

samuththiramum  athin  ni’raivum  muzhanggi,  naadum  athilu'l'la  yaavum  ka'likooruvathaaga.  (1naa’laagamam  16:32)

அப்பொழுது  கர்த்தருக்கு  முன்பாகக்  காட்டுவிருட்சங்களும்  கெம்பீரிக்கும்;  அவர்  பூமியை  நியாயந்தீர்க்க  வருகிறார்.  (1நாளாகமம்  16:33)

appozhuthu  karththarukku  munbaagak  kaattuvirudchangga'lum  kembeerikkum;  avar  boomiyai  niyaayantheerkka  varugi’raar.  (1naa’laagamam  16:33)

கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  (1நாளாகமம்  16:34)

karththaraith  thuthiyungga'l,  avar  nallavar,  avar  kirubai  en’rumu'l'lathu.  (1naa’laagamam  16:34)

எங்கள்  ரட்சிப்பின்  தேவனே,  நாங்கள்  உமது  பரிசுத்த  நாமத்தைப்  போற்றி,  உம்மைத்  துதிக்கிறதினால்  மேன்மைபாராட்டும்படிக்கு,  எங்களை  ரட்சித்து,  எங்களைச்  சேர்த்துக்கொண்டு,  ஜாதிகளுக்கு  எங்களை  நீங்கலாக்கியருளும்  என்று  சொல்லுங்கள்.  (1நாளாகமம்  16:35)

engga'l  radchippin  theavanea,  naangga'l  umathu  parisuththa  naamaththaip  poat’ri,  ummaith  thuthikki’rathinaal  meanmaipaaraattumpadikku,  engga'lai  radchiththu,  engga'laich  searththukko'ndu,  jaathiga'lukku  engga'lai  neenggalaakkiyaru'lum  en’ru  sollungga'l.  (1naa’laagamam  16:35)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குச்  சதாகாலங்களிலும்  ஸ்தோத்திரம்  உண்டாவதாக;  அதற்கு  ஜனங்களெல்லாரும்  ஆமென்  என்று  சொல்லிக்  கர்த்தரைத்  துதித்தார்கள்.  (1நாளாகமம்  16:36)

isravealin  theavanaagiya  karththarukkuch  sathaakaalangga'lilum  sthoaththiram  u'ndaavathaaga;  atha’rku  janangga'lellaarum  aamen  en’ru  sollik  karththaraith  thuthiththaarga'l.  (1naa’laagamam  16:36)

பின்பு  பெட்டிக்கு  முன்பாக  நித்தம்  அன்றாடக  முறையாய்ச்  சேவிக்கும்படி,  அவன்  அங்கே  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டிக்கு  முன்பாக  ஆசாப்பையும்,  அவன்  சகோதரரையும்,  ஓபேத்ஏதோமையும்,  அவர்களுடைய  சகோதரராகிய  அறுபத்தெட்டுப்பேரையும்  வைத்து,  (1நாளாகமம்  16:37)

pinbu  pettikku  munbaaga  niththam  an’raadaga  mu’raiyaaych  seavikkumpadi,  avan  anggea  karththarudaiya  udanpadikkaip  pettikku  munbaaga  aasaappaiyum,  avan  sagoathararaiyum,  oabeatheathoamaiyum,  avarga'ludaiya  sagoathararaagiya  a’rubaththettuppearaiyum  vaiththu,  (1naa’laagamam  16:37)

எதித்தூனின்  குமாரனாகிய  இந்த  ஓபேத்ஏதோமையும்  ஓசாவையும்  வாசல்காக்கிறவர்களாக  வைத்தான்.  (1நாளாகமம்  16:38)

ethiththoonin  kumaaranaagiya  intha  oabeatheathoamaiyum  oasaavaiyum  vaasalkaakki’ravarga'laaga  vaiththaan.  (1naa’laagamam  16:38)

கிபியோனிலுள்ள  மேட்டின்மேலிருக்கிற  கர்த்தருடைய  வாசஸ்தலத்திற்கு  முன்பாக  இருக்கிற  சர்வாங்க  தகனபலிபீடத்தின்மேல்  சர்வாங்க  தகனங்களை  நித்தமும்,  அந்திசந்தியில்,  கர்த்தர்  இஸ்ரவேலுக்குக்  கற்பித்த  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடியெல்லாம்  கர்த்தருக்குச்  செலுத்துவதற்காக,  (1நாளாகமம்  16:39)

kibiyoanilu'l'la  meattinmealirukki’ra  karththarudaiya  vaasasthalaththi’rku  munbaaga  irukki’ra  sarvaangga  thaganabalipeedaththinmeal  sarvaangga  thaganangga'lai  niththamum,  anthisanthiyil,  karththar  isravealukkuk  ka’rpiththa  niyaayappiramaa'naththil  ezhuthiyirukki’rapadiyellaam  karththarukkuch  seluththuvatha’rkaaga,  (1naa’laagamam  16:39)

அங்கே  அவன்  ஆசாரியனாகிய  சாதோக்கையும்,  அவன்  சகோதரராகிய  ஆசாரியரையும்  வைத்து,  (1நாளாகமம்  16:40)

anggea  avan  aasaariyanaagiya  saathoakkaiyum,  avan  sagoathararaagiya  aasaariyaraiyum  vaiththu,  (1naa’laagamam  16:40)

இவர்களோடுங்கூட  ஏமானையும்,  எதித்தூனையும்,  பேர்பேராகக்  குறித்துத்  தெரிந்துகொள்ளப்பட்ட  மற்றச்  சிலரையும்:  கர்த்தருடைய  கிருபை  என்றுமுள்ளது  என்று  அவரைத்  துதிக்கவும்,  (1நாளாகமம்  16:41)

ivarga'loadungkooda  eamaanaiyum,  ethiththoonaiyum,  pearpearaagak  ku’riththuth  therinthuko'l'lappatta  mat’rach  silaraiyum:  karththarudaiya  kirubai  en’rumu'l'lathu  en’ru  avaraith  thuthikkavum,  (1naa’laagamam  16:41)

பூரிகைகளையும்  கைத்தாளங்களையும்  தேவனைப்  பாடுகிறதற்குரிய  கீதவாத்தியங்களையும்  தொனிக்கச்செய்யவும்  அவர்களுடன்  ஏமானையும்  எதித்தூனையும்  வைத்து,  எதித்தூனின்  குமாரரை  வாசல்காக்கிறவர்களாகக்  கட்டளையிட்டான்.  (1நாளாகமம்  16:42)

poorigaiga'laiyum  kaiththaa'langga'laiyum  theavanaip  paadugi’ratha’rkuriya  keethavaaththiyangga'laiyum  thonikkachseyyavum  avarga'ludan  eamaanaiyum  ethiththoonaiyum  vaiththu,  ethiththoonin  kumaararai  vaasalkaakki’ravarga'laagak  katta'laiyittaan.  (1naa’laagamam  16:42)

பின்பு  ஜனங்கள்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  வீட்டிற்குப்  போனார்கள்;  தாவீதும்  தன்  வீட்டாரை  ஆசீர்வதிக்கத்திரும்பினான்.  (1நாளாகமம்  16:43)

pinbu  janangga'l  ellaarum  avaravar  thangga'l  veetti’rkup  poanaarga'l;  thaaveethum  than  veettaarai  aaseervathikkaththirumbinaan.  (1naa’laagamam  16:43)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!