Wednesday, September 21, 2016

1 Naa'laagamam 14 | 1 நாளாகமம் 14 | 1 Chronicles 14

தீருவின்  ராஜாவாகிய  ஈராம்  தாவீதினிடத்தில்  ஸ்தானாபதிகளையும்,  அவனுக்கு  ஒரு  வீட்டைக்  கட்டுகிறதற்குக்  கேதுருமரங்களையும்,  தச்சரையும்,  கல்தச்சரையும்  அனுப்பினான்.  (1நாளாகமம்  14:1)

theeruvin  raajaavaagiya  eeraam  thaaveethinidaththil  sthaanaabathiga'laiyum,  avanukku  oru  veettaik  kattugi’ratha’rkuk  keathurumarangga'laiyum,  thachcharaiyum,  kalthachcharaiyum  anuppinaan.  (1naa’laagamam  14:1)

கர்த்தர்  தன்னை  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாகத்  திடப்படுத்தி,  இஸ்ரவேல்  என்னும்  தம்முடைய  ஜனத்தினிமித்தம்  தன்னுடைய  ராஜ்யத்தை  மிகவும்  உயர்த்தினார்  என்று  தாவீது  அறிந்துகொண்டான்.  (1நாளாகமம்  14:2)

karththar  thannai  isravealinmeal  raajaavaagath  thidappaduththi,  israveal  ennum  thammudaiya  janaththinimiththam  thannudaiya  raajyaththai  migavum  uyarththinaar  en’ru  thaaveethu  a’rinthuko'ndaan.  (1naa’laagamam  14:2)

எருசலேமிலே  தாவீது  பின்னும்  அநேக  ஸ்திரீகளை  விவாகம்பண்ணி,  பின்னும்  குமாரரையும்  குமாரத்திகளையும்  பெற்றான்.  (1நாளாகமம்  14:3)

erusaleamilea  thaaveethu  pinnum  aneaga  sthireega'lai  vivaagampa'n'ni,  pinnum  kumaararaiyum  kumaaraththiga'laiyum  pet’raan.  (1naa’laagamam  14:3)

எருசலேமிலே  அவனுக்குப்  பிறந்த  குமாரரின்  நாமங்களாவன:  சம்முவா,  சோபாப்,  நாத்தான்,  சாலொமோன்,  (1நாளாகமம்  14:4)

erusaleamilea  avanukkup  pi’rantha  kumaararin  naamangga'laavana:  sammuvaa,  soabaab,  naaththaan,  saalomoan,  (1naa’laagamam  14:4)

இப்கார்,  எலிசூவா,  எல்பெலேத்,  (1நாளாகமம்  14:5)

ibkaar,  elisoovaa,  elpeleath,  (1naa’laagamam  14:5)

நோகா,  நெப்பேக்,  யப்பியா,  (1நாளாகமம்  14:6)

noagaa,  neppeak,  yappiyaa,  (1naa’laagamam  14:6)

எலிஷாமா,  பெலியாதா,  எலிப்பெலேத்  என்பவைகள்.  (1நாளாகமம்  14:7)

elishaamaa,  beliyaathaa,  elippeleath  enbavaiga'l.  (1naa’laagamam  14:7)

தாவீது  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணப்பட்டதைப்  பெலிஸ்தர்  கேள்விப்பட்டபோது,  பெலிஸ்தர்  எல்லாரும்  தாவீதைத்  தேடும்படி  வந்தார்கள்;  அதைத்  தாவீது  கேட்டபோது  அவர்களுக்கு  விரோதமாகப்  புறப்பட்டான்.  (1நாளாகமம்  14:8)

thaaveethu  samastha  isravealinmealum  raajaavaaga  abisheagampa'n'nappattathaip  pelisthar  kea'lvippattapoathu,  pelisthar  ellaarum  thaaveethaith  theadumpadi  vanthaarga'l;  athaith  thaaveethu  keattapoathu  avarga'lukku  viroathamaagap  pu’rappattaan.  (1naa’laagamam  14:8)

பெலிஸ்தர்  வந்து  ரெப்பாயீம்  பள்ளத்தாக்கிலே  பரவியிருந்தார்கள்.  (1நாளாகமம்  14:9)

pelisthar  vanthu  reppaayeem  pa'l'laththaakkilea  paraviyirunthaarga'l.  (1naa’laagamam  14:9)

பெலிஸ்தருக்கு  விரோதமாகப்  போகலாமா,  அவர்களை  என்  கையில்  ஒப்புக்கொடுப்பீரா  என்று  தாவீது  தேவனைக்  கேட்டபோது,  கர்த்தர்:  போ,  அவர்களை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றார்.  (1நாளாகமம்  14:10)

pelistharukku  viroathamaagap  poagalaamaa,  avarga'lai  en  kaiyil  oppukkoduppeeraa  en’ru  thaaveethu  theavanaik  keattapoathu,  karththar:  poa,  avarga'lai  un  kaiyil  oppukkoduppean  en’raar.  (1naa’laagamam  14:10)

அவர்கள்  பாகால்பிராசீமுக்கு  வந்தபோது,  தாவீது  அங்கே  அவர்களை  முறிய  அடித்து:  தண்ணீர்கள்  உடைந்தோடுகிறதுபோல,  தேவன்  என்  கையினால்  என்  சத்துருக்களை  உடைந்தோடப்பண்ணினார்  என்றான்;  அதினிமித்தம்  அந்த  ஸ்தலத்திற்குப்  பாகால்பிராசீம்  என்னும்  பேரிட்டார்கள்.  (1நாளாகமம்  14:11)

avarga'l  baagaalpiraaseemukku  vanthapoathu,  thaaveethu  anggea  avarga'lai  mu’riya  adiththu:  tha'n'neerga'l  udainthoadugi’rathupoala,  theavan  en  kaiyinaal  en  saththurukka'lai  udainthoadappa'n'ninaar  en’raan;  athinimiththam  antha  sthalaththi’rkup  baagaalpiraaseem  ennum  pearittaarga'l.  (1naa’laagamam  14:11)

அங்கே  அவர்கள்  தங்கள்  தெய்வங்களைவிட்டு  ஓடிப்போனார்கள்;  தாவீது  கற்பித்தபடி  அவைகள்  அக்கினியாலே  சுட்டெரிக்கப்பட்டன.  (1நாளாகமம்  14:12)

anggea  avarga'l  thangga'l  theyvangga'laivittu  oadippoanaarga'l;  thaaveethu  ka’rpiththapadi  avaiga'l  akkiniyaalea  sutterikkappattana.  (1naa’laagamam  14:12)

பெலிஸ்தர்  மறுபடியும்  வந்து  அந்தப்  பள்ளத்தாக்கிலே  இறங்கினார்கள்.  (1நாளாகமம்  14:13)

pelisthar  ma’rupadiyum  vanthu  anthap  pa'l'laththaakkilea  i’rangginaarga'l.  (1naa’laagamam  14:13)

அப்பொழுது  தாவீது  திரும்பத்  தேவனிடத்தில்  விசாரித்ததற்கு,  தேவன்  நீ  அவர்களுக்குப்  பின்னாலே  போகாமல்,  அவர்களுக்குப்  பக்கமாய்ச்  சுற்றி,  முசுக்கட்டைச்  செடிகளுக்கு  எதிரேயிருந்து,  அவர்கள்மேல்  பாய்ந்து,  (1நாளாகமம்  14:14)

appozhuthu  thaaveethu  thirumbath  theavanidaththil  visaariththatha’rku,  theavan  nee  avarga'lukkup  pinnaalea  poagaamal,  avarga'lukkup  pakkamaaych  sut’ri,  musukkattaich  sediga'lukku  ethireayirunthu,  avarga'lmeal  paaynthu,  (1naa’laagamam  14:14)

முசுக்கட்டைச்  செடிகளின்  நுனிகளிலே  செல்லுகிற  இரைச்சலை  நீ  கேட்கும்போது,  யுத்தத்திற்குப்  புறப்படு;  பெலிஸ்தரின்  பாளயத்தை  முறிய  அடிக்க,  தேவன்  உனக்கு  முன்னே  புறப்பட்டிருப்பார்  என்றார்.  (1நாளாகமம்  14:15)

musukkattaich  sediga'lin  nuniga'lilea  sellugi’ra  iraichchalai  nee  keadkumpoathu,  yuththaththi’rkup  pu’rappadu;  pelistharin  paa'layaththai  mu’riya  adikka,  theavan  unakku  munnea  pu’rappattiruppaar  en’raar.  (1naa’laagamam  14:15)

தேவன்  தனக்குக்  கற்பித்தபடியே  தாவீது  செய்தபோது,  பெலிஸ்தரின்  இராணுவத்தைக்  கிபியோன்  துவக்கிக்  காசேர்மட்டும்  முறிய  அடித்தார்கள்.  (1நாளாகமம்  14:16)

theavan  thanakkuk  ka’rpiththapadiyea  thaaveethu  seythapoathu,  pelistharin  iraa'nuvaththaik  kibiyoan  thuvakkik  kaasearmattum  mu’riya  adiththaarga'l.  (1naa’laagamam  14:16)

அப்படியே  தாவீதின்  கீர்த்தி  சகல  தேசங்களிலும்  பிரசித்தமாகி,  அவனுக்குப்  பயப்படுகிற  பயத்தைக்  கர்த்தர்  சகல  ஜாதிகளின்மேலும்  வரப்பண்ணினார்.  (1நாளாகமம்  14:17)

appadiyea  thaaveethin  keerththi  sagala  theasangga'lilum  pirasiththamaagi,  avanukkup  bayappadugi’ra  bayaththaik  karththar  sagala  jaathiga'linmealum  varappa'n'ninaar.  (1naa’laagamam  14:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!