Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 9 | 1 இராஜாக்கள் 9 | 1 Kings 9

சாலொமோன்  கர்த்தருடைய  ஆலயத்தையும்  ராஜ  அரமனையையும்,  தான்  செய்யவேண்டும்  என்று  விரும்பின  எல்லாவற்றையும்  கட்டி  முடித்தபின்பு,  (1இராஜாக்கள்  9:1)

saalomoan  karththarudaiya  aalayaththaiyum  raaja  aramanaiyaiyum,  thaan  seyyavea'ndum  en’ru  virumbina  ellaavat’raiyum  katti  mudiththapinbu,  (1iraajaakka’l  9:1)

கர்த்தர்  கிபியோனிலே  சாலொமோனுக்குத்  தரிசனமானதுபோல,  இரண்டாந்தரமும்  அவனுக்குத்  தரிசனமானார்.  (1இராஜாக்கள்  9:2)

karththar  kibiyoanilea  saalomoanukkuth  tharisanamaanathupoala,  ira'ndaantharamum  avanukkuth  tharisanamaanaar.  (1iraajaakka’l  9:2)

கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  என்  சமுகத்தில்  செய்த  உன்  விண்ணப்பத்தையும்  உன்  வேண்டுதலையும்  கேட்டேன்;  நீ  கட்டின  இந்த  ஆலயத்தில்  என்  நாமம்  என்றைக்கும்  விளங்கத்தக்கதாக,  அதைப்  பரிசுத்தமாக்கினேன்;  என்  கண்களும்  என்  இருதயமும்  எந்நாளும்  அங்கேயிருக்கும்.  (1இராஜாக்கள்  9:3)

karththar  avanai  noakki:  nee  en  samugaththil  seytha  un  vi'n'nappaththaiyum  un  vea'nduthalaiyum  keattean;  nee  kattina  intha  aalayaththil  en  naamam  en’raikkum  vi'langgaththakkathaaga,  athaip  parisuththamaakkinean;  en  ka'nga'lum  en  iruthayamum  ennaa'lum  anggeayirukkum.  (1iraajaakka’l  9:3)

நான்  உனக்குக்  கட்டளையிட்ட  எல்லாவற்றையும்  நீ  செய்து,  என்  கட்டளைகளையும்  என்  நியாயங்களையும்  கைக்கொள்ளும்படிக்கு,  என்  சமுகத்தில்  மன  உத்தமமும்  செம்மையுமாய்  உன்  தகப்பனாகிய  தாவீது  நடந்ததுபோல  நடப்பாயானால்,  (1இராஜாக்கள்  9:4)

naan  unakkuk  katta'laiyitta  ellaavat’raiyum  nee  seythu,  en  katta'laiga'laiyum  en  niyaayangga'laiyum  kaikko'l'lumpadikku,  en  samugaththil  mana  uththamamum  semmaiyumaay  un  thagappanaagiya  thaaveethu  nadanthathupoala  nadappaayaanaal,  (1iraajaakka’l  9:4)

இஸ்ரவேலின்  சிங்காசனத்தின்மேல்  உட்காரும்  புருஷன்  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  உன்  தகப்பனாகிய  தாவீதோடே  நான்  சொன்னபடியே,  இஸ்ரவேலின்மேலுள்ள  உன்  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தை  என்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்.  (1இராஜாக்கள்  9:5)

isravealin  singgaasanaththinmeal  udkaarum  purushan  unakku  illaama’rpoavathillai  en’ru  un  thagappanaagiya  thaaveethoadea  naan  sonnapadiyea,  isravealinmealu'l'la  un  raajyabaaraththin  singgaasanaththai  en’raikkum  nilaikkappa'n'nuvean.  (1iraajaakka’l  9:5)

நீங்களும்  உங்கள்  பிள்ளைகளும்  என்னைவிட்டுப்  பின்வாங்கி,  நான்  உங்களுக்கு  முன்வைத்த  என்  கற்பனைகளையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொள்ளாமற்போய்,  வேறே  தேவர்களைச்  சேவித்து,  அவைகளைப்  பணிந்துகொள்வீர்களாகில்,  (1இராஜாக்கள்  9:6)

neengga'lum  ungga'l  pi'l'laiga'lum  ennaivittup  pinvaanggi,  naan  ungga'lukku  munvaiththa  en  ka’rpanaiga'laiyum  en  katta'laiga'laiyum  kaikko'l'laama’rpoay,  vea’rea  theavarga'laich  seaviththu,  avaiga'laip  pa'ninthuko'lveerga'laagil,  (1iraajaakka’l  9:6)

நான்  இஸ்ரவேலுக்குக்  கொடுத்த  தேசத்திலே  அவர்களை  வைக்காதபடிக்கு  நிர்மூலமாக்கி,  என்  நாமம்  விளங்க  நான்  பரிசுத்தமாக்கின  இந்த  ஆலயத்தை  என்  சமுகத்தைவிட்டுத்  தள்ளுவேன்;  அப்பொழுது  இஸ்ரவேல்  சகல  ஜனங்களுக்குள்ளும்  பழமொழியாகவும்  வசைச்சொல்லாகவும்  இருப்பார்கள்.  (1இராஜாக்கள்  9:7)

naan  isravealukkuk  koduththa  theasaththilea  avarga'lai  vaikkaathapadikku  nirmoolamaakki,  en  naamam  vi'langga  naan  parisuththamaakkina  intha  aalayaththai  en  samugaththaivittuth  tha'l'luvean;  appozhuthu  israveal  sagala  janangga'lukku'l'lum  pazhamozhiyaagavum  vasaichsollaagavum  iruppaarga'l.  (1iraajaakka’l  9:7)

அப்பொழுது  உன்னதமாயிருக்கிற  இந்த  ஆலயத்தைக்  கடந்துபோகிறவன்  எவனும்  பிரமித்து,  பகிடியாய்  ஈசலிட்டு:  கர்த்தர்  இந்த  தேசத்துக்கும்  இந்த  ஆலயத்துக்கும்  இப்படிச்  செய்தது  என்ன?  என்று  கேட்பார்கள்.  (1இராஜாக்கள்  9:8)

appozhuthu  unnathamaayirukki’ra  intha  aalayaththaik  kadanthupoagi’ravan  evanum  piramiththu,  pagidiyaay  eesalittu:  karththar  intha  theasaththukkum  intha  aalayaththukkum  ippadich  seythathu  enna?  en’ru  keadpaarga'l.  (1iraajaakka’l  9:8)

அதற்கு  அவர்கள்:  தங்கள்  பிதாக்களை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  தங்கள்  தேவனாகிய  கர்த்தரைவிட்டு,  வேறே  தேவர்களைப்  பற்றிக்கொண்டு,  அவர்களை  நமஸ்கரித்துச்  சேவித்தபடியினால்,  கர்த்தர்  இந்தத்  தீங்கையெல்லாம்  அவர்கள்மேல்  வரப்பண்ணினார்  என்று  சொல்லுவார்கள்  என்றார்.  (1இராஜாக்கள்  9:9)

atha’rku  avarga'l:  thangga'l  pithaakka'lai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'nina  thangga'l  theavanaagiya  karththaraivittu,  vea’rea  theavarga'laip  pat’rikko'ndu,  avarga'lai  namaskariththuch  seaviththapadiyinaal,  karththar  inthath  theenggaiyellaam  avarga'lmeal  varappa'n'ninaar  en’ru  solluvaarga'l  en’raar.  (1iraajaakka’l  9:9)

சாலொமோன்  கர்த்தருடைய  ஆலயமும்  ராஜ  அரமனையுமாகிய  இரண்டு  மாளிகைகளையும்  கட்டி  நிறைவேற்றுகிற  இருபதாம்  வருஷம்  முடிவிலே,  (1இராஜாக்கள்  9:10)

saalomoan  karththarudaiya  aalayamum  raaja  aramanaiyumaagiya  ira'ndu  maa'ligaiga'laiyum  katti  ni’raiveat’rugi’ra  irubathaam  varusham  mudivilea,  (1iraajaakka’l  9:10)

தன்னுடைய  விருப்பத்தின்படியெல்லாம்  தனக்குக்  கேதுருமரங்களையும்,  தேவதாரி  விருட்சங்களையும்,  பொன்னையும்  கொடுத்துவந்த  தீருவின்  ராஜாவாகிய  ஈராமுக்கு,  ராஜாவாகிய  சாலொமோன்  கலிலேயா  நாட்டிலுள்ள  இருபது  பட்டணங்களைக்  கொடுத்தான்.  (1இராஜாக்கள்  9:11)

thannudaiya  viruppaththinpadiyellaam  thanakkuk  keathurumarangga'laiyum,  theavathaari  virudchangga'laiyum,  ponnaiyum  koduththuvantha  theeruvin  raajaavaagiya  eeraamukku,  raajaavaagiya  saalomoan  kalileayaa  naattilu'l'la  irubathu  patta'nangga'laik  koduththaan.  (1iraajaakka’l  9:11)

ஈராம்  தனக்குச்  சாலொமோன்  கொடுத்த  பட்டணங்களைப்  பார்க்கிறதற்குத்  தீருவிலிருந்து  புறப்பட்டுவந்தான்;  அவைகளில்  அவன்  பிரியப்படவில்லை.  (1இராஜாக்கள்  9:12)

eeraam  thanakkuch  saalomoan  koduththa  patta'nangga'laip  paarkki’ratha’rkuth  theeruvilirunthu  pu’rappattuvanthaan;  avaiga'lil  avan  piriyappadavillai.  (1iraajaakka’l  9:12)

அதனாலே  அவன்:  என்  சகோதரனே,  நீர்  எனக்குக்  கொடுத்த  இந்தப்  பட்டணங்கள்  என்ன  பட்டணங்கள்?  என்றான்.  அவைகளுக்கு  இந்நாள்மட்டும்  வழங்கி  வருகிறபடி  காபூல்  நாடு  என்று  பேரிட்டான்.  (1இராஜாக்கள்  9:13)

athanaalea  avan:  en  sagoatharanea,  neer  enakkuk  koduththa  inthap  patta'nangga'l  enna  patta'nangga'l?  en’raan.  avaiga'lukku  innaa'lmattum  vazhanggi  varugi’rapadi  kaabool  naadu  en’ru  pearittaan.  (1iraajaakka’l  9:13)

ஈராம்  ராஜாவுக்கு  நூற்றிருபது  தாலந்து  பொன்  அனுப்பியிருந்தான்.  (1இராஜாக்கள்  9:14)

eeraam  raajaavukku  noot’rirubathu  thaalanthu  pon  anuppiyirunthaan.  (1iraajaakka’l  9:14)

பிடித்த  அமஞ்சி  ஆட்களைக்கொண்டு  சாலொமோன்  ராஜா  தான்  கர்த்தருடைய  ஆலயத்தையும்,  தன்  அரமனையையும்,  மில்லோவையும்,  எருசலேமின்  மதிலையும்,  ஆத்சோரையும்,  மெகிதோவையும்,  கேசேரையும்  கட்டினான்.  (1இராஜாக்கள்  9:15)

pidiththa  amagnchi  aadka'laikko'ndu  saalomoan  raajaa  thaan  karththarudaiya  aalayaththaiyum,  than  aramanaiyaiyum,  milloavaiyum,  erusaleamin  mathilaiyum,  aathsoaraiyum,  megithoavaiyum,  keasearaiyum  kattinaan.  (1iraajaakka’l  9:15)

கேசேரை  ஏன்  கட்டினான்  என்றால்,  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோன்  புறப்பட்டுவந்து,  அந்தக்  கேசேர்பட்டணத்தைப்  பிடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரித்து,  அதிலே  குடியிருந்த  கானானியரைக்  கொன்றுபோட்டு,  அதைச்  சாலொமோனின்  மனைவியாகிய  தன்  குமாரத்திக்குச்  சீதனமாகக்  கொடுத்திருந்தான்.  (1இராஜாக்கள்  9:16)

keasearai  ean  kattinaan  en’raal,  egipthin  raajaavaagiya  paarvoan  pu’rappattuvanthu,  anthak  keasearpatta'naththaip  pidiththu,  athai  akkiniyaal  sutteriththu,  athilea  kudiyiruntha  kaanaaniyaraik  kon’rupoattu,  athaich  saalomoanin  manaiviyaagiya  than  kumaaraththikkuch  seethanamaagak  koduththirunthaan.  (1iraajaakka’l  9:16)

சாலொமோன்  அந்தக்  கேசேர்பட்டணத்தையும்,  கீழ்ப்பெத்தொரோனையும்,  (1இராஜாக்கள்  9:17)

saalomoan  anthak  keasearpatta'naththaiyum,  keezhpbeththoroanaiyum,  (1iraajaakka’l  9:17)

பாலாத்தையும்,  வனாந்தரவெளியிலுள்ள  தத்மோரையும்,  (1இராஜாக்கள்  9:18)

baalaaththaiyum,  vanaantharave'liyilu'l'la  thathmoaraiyum,  (1iraajaakka’l  9:18)

தனக்கு  இருக்கிற  ரஸ்துக்களை  வைக்கும்  சகல  பட்டணங்களையும்,  இரதங்கள்  இருக்கும்  பட்டணங்களையும்,  குதிரை  வீரர்  இருக்கும்  பட்டணங்களையும்,  எருசலேமிலும்  லீபனோனிலும்,  தான்  அரசாண்ட  தேசமெங்கும்  தனக்கு  இஷ்டமானதையெல்லாம்  கட்டினான்.  (1இராஜாக்கள்  9:19)

thanakku  irukki’ra  rasthukka'lai  vaikkum  sagala  patta'nangga'laiyum,  irathangga'l  irukkum  patta'nangga'laiyum,  kuthirai  veerar  irukkum  patta'nangga'laiyum,  erusaleamilum  leebanoanilum,  thaan  arasaa'nda  theasamenggum  thanakku  ishdamaanathaiyellaam  kattinaan.  (1iraajaakka’l  9:19)

இஸ்ரவேல்  புத்திரர்  சங்காரம்  பண்ணக்கூடாமல்  மீந்திருந்த  இஸ்ரவேல்  புத்திரரின்  ஜாதியல்லாத  எமோரியர்,  ஏத்தியர்,  பெரிசியர்,  ஏவியர்,  எபூசியருமான  சகல  ஜனத்திலும்,  (1இராஜாக்கள்  9:20)

israveal  puththirar  sanggaaram  pa'n'nakkoodaamal  meenthiruntha  israveal  puththirarin  jaathiyallaatha  emoariyar,  eaththiyar,  perisiyar,  eaviyar,  eboosiyarumaana  sagala  janaththilum,  (1iraajaakka’l  9:20)

அவர்களுக்குப்  பிறகு  தேசத்தில்  மீந்திருந்த  சகல  ஜனங்களுடைய  பிள்ளைகளையும்,  சாலொமோன்  இந்நாள்வரைக்கும்  நடக்கிறதுபோல,  அமஞ்சிவேலை  செய்ய  அடிமைப்படுத்திக்கொண்டான்.  (1இராஜாக்கள்  9:21)

avarga'lukkup  pi’ragu  theasaththil  meenthiruntha  sagala  janangga'ludaiya  pi'l'laiga'laiyum,  saalomoan  innaa'lvaraikkum  nadakki’rathupoala,  amagnchivealai  seyya  adimaippaduththikko'ndaan.  (1iraajaakka’l  9:21)

இஸ்ரவேல்  புத்திரரில்  ஒருவரையும்  சாலொமோன்  அடிமைப்படுத்தவில்லை;  அவர்கள்  யுத்தமனுஷரும்,  அவனுக்குப்  பணிவிடைக்காரரும்,  பிரபுக்களும்,  சேர்வைக்காரரும்,  இரதவீரரும்,  குதிரைவீரருமாயிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  9:22)

israveal  puththiraril  oruvaraiyum  saalomoan  adimaippaduththavillai;  avarga'l  yuththamanusharum,  avanukkup  pa'nividaikkaararum,  pirabukka'lum,  searvaikkaararum,  irathaveerarum,  kuthiraiveerarumaayirunthaarga'l.  (1iraajaakka’l  9:22)

ஐந்நூற்றைம்பதுபேர்  சாலொமோனின்  வேலையை  விசாரித்து,  வேலையாட்களைக்  கண்காணிக்கிறதற்குத்  தலைமையான  விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  9:23)

ainnoot’raimbathupear  saalomoanin  vealaiyai  visaariththu,  vealaiyaadka'laik  ka'nkaa'nikki’ratha’rkuth  thalaimaiyaana  visaarippukkaararaayirunthaarga'l.  (1iraajaakka’l  9:23)

பார்வோனின்  குமாரத்தி,  தாவீதின்  நகரத்திலிருந்து  சாலொமோன்  தனக்குக்  கட்டின  தன்  மாளிகையிலே  குடிவந்தாள்;  அப்பொழுது  மில்லோவைக்  கட்டினான்.  (1இராஜாக்கள்  9:24)

paarvoanin  kumaaraththi,  thaaveethin  nagaraththilirunthu  saalomoan  thanakkuk  kattina  than  maa'ligaiyilea  kudivanthaa'l;  appozhuthu  milloavaik  kattinaan.  (1iraajaakka’l  9:24)

சாலொமோன்  கர்த்தரின்  ஆலயத்தை  முடித்தபின்பு,  அவருக்குக்  கட்டின  பலிபீடத்தின்மேல்  வருஷத்தில்  மூன்றுமுறை  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதான  பலிகளையும்  இட்டு,  கர்த்தரின்  சந்நிதியில்  இருக்கிற  பலிபீடத்தின்மேல்  தூபங்காட்டிவந்தான்.  (1இராஜாக்கள்  9:25)

saalomoan  karththarin  aalayaththai  mudiththapinbu,  avarukkuk  kattina  balipeedaththinmeal  varushaththil  moon’rumu’rai  sarvaangga  thaganabaliga'laiyum  samaathaana  baliga'laiyum  ittu,  karththarin  sannithiyil  irukki’ra  balipeedaththinmeal  thoobangkaattivanthaan.  (1iraajaakka’l  9:25)

ராஜாவாகிய  சாலொமோன்  ஏதோம்  தேசத்தில்  சிவந்த  சமுத்திரக்கரையிலே  ஏலோத்துக்குச்  சமீபத்திலுள்ள  எசியோன்கேபேரிலே  கப்பல்களைச்  செய்வித்தான்.  (1இராஜாக்கள்  9:26)

raajaavaagiya  saalomoan  eathoam  theasaththil  sivantha  samuththirakkaraiyilea  ealoaththukkuch  sameebaththilu'l'la  esiyoankeabearilea  kappalga'laich  seyviththaan.  (1iraajaakka’l  9:26)

அந்தக்  கப்பல்களில்  ஈராம்  சமுத்திர  யாத்திரையில்  பழகின  கப்பலாட்களாகிய  தன்  வேலைக்காரரைச்  சாலொமோனுடைய  வேலைக்காரரோடேகூட  அனுப்பினான்.  (1இராஜாக்கள்  9:27)

anthak  kappalga'lil  eeraam  samuththira  yaaththiraiyil  pazhagina  kappalaadka'laagiya  than  vealaikkaararaich  saalomoanudaiya  vealaikkaararoadeakooda  anuppinaan.  (1iraajaakka’l  9:27)

அவர்கள்  ஓப்பீருக்குப்போய்,  அவ்விடத்திலிருந்து  நானூற்று  இருபது  தாலந்து  பொன்னை  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  (1இராஜாக்கள்  9:28)

avarga'l  oappeerukkuppoay,  avvidaththilirunthu  naanoot’ru  irubathu  thaalanthu  ponnai  raajaavaagiya  saalomoanidaththil  ko'nduvanthaarga'l.  (1iraajaakka’l  9:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!