Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 8 | 1 இராஜாக்கள் 8 | 1 Kings 8

அப்பொழுது  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியைச்  சீயோன்  என்னும்  தாவீதின்  நகரத்திலிருந்து  கொண்டுவரும்படி  சாலொமோன்  இஸ்ரவேலின்  மூப்பரையும்,  கோத்திரப்  பிரபுக்களாகிய  இஸ்ரவேல்  புத்திரரிலுள்ள  பிதாக்களின்  தலைவர்  அனைவரையும்,  எருசலேமில்  ராஜாவாகிய  சாலொமோன்  தன்னிடத்திலே  கூடிவரச்செய்தான்.  (1இராஜாக்கள்  8:1)

appozhuthu  karththarudaiya  udanpadikkaip  pettiyaich  seeyoan  ennum  thaaveethin  nagaraththilirunthu  ko'nduvarumpadi  saalomoan  isravealin  moopparaiyum,  koaththirap  pirabukka'laagiya  israveal  puththirarilu'l'la  pithaakka'lin  thalaivar  anaivaraiyum,  erusaleamil  raajaavaagiya  saalomoan  thannidaththilea  koodivarachseythaan.  (1iraajaakka’l  8:1)

இஸ்ரவேல்  மனுஷரெல்லாரும்  ஏழாம்  மாதமாகிய  ஏத்தானீம்மாதத்துப்  பண்டிகையிலே,  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்  கூடிவந்தார்கள்.  (1இராஜாக்கள்  8:2)

israveal  manusharellaarum  eazhaam  maathamaagiya  eaththaaneemmaathaththup  pa'ndigaiyilea,  raajaavaagiya  saalomoanidaththil  koodivanthaarga'l.  (1iraajaakka’l  8:2)

இஸ்ரவேலின்  மூப்பர்  அனைவரும்  வந்திருக்கையில்,  ஆசாரியர்  கர்த்தருடைய  பெட்டியை  எடுத்து,  (1இராஜாக்கள்  8:3)

isravealin  mooppar  anaivarum  vanthirukkaiyil,  aasaariyar  karththarudaiya  pettiyai  eduththu,  (1iraajaakka’l  8:3)

பெட்டியையும்,  ஆசரிப்புக்  கூடாரத்தையும்,  கூடாரத்திலிருந்த  பரிசுத்த  பணிமுட்டுகள்  அனைத்தையும்  சுமந்து  கொண்டுவந்தார்கள்;  ஆசாரியரும்,  லேவியரும்,  அவைகளைச்  சுமந்தார்கள்.  (1இராஜாக்கள்  8:4)

pettiyaiyum,  aasarippuk  koodaaraththaiyum,  koodaaraththiliruntha  parisuththa  pa'nimuttuga'l  anaiththaiyum  sumanthu  ko'nduvanthaarga'l;  aasaariyarum,  leaviyarum,  avaiga'laich  sumanthaarga'l.  (1iraajaakka’l  8:4)

ராஜாவாகிய  சாலொமோனும்  அவனோடேகூடின  இஸ்ரவேல்  சபையனைத்தும்  பெட்டிக்கு  முன்பாக  நடந்து,  எண்ணிக்கையும்  கணக்குமில்லாத  திரளான  ஆடுகளையும்  மாடுகளையும்  பலியிட்டார்கள்.  (1இராஜாக்கள்  8:5)

raajaavaagiya  saalomoanum  avanoadeakoodina  israveal  sabaiyanaiththum  pettikku  munbaaga  nadanthu,  e'n'nikkaiyum  ka'nakkumillaatha  thira'laana  aaduga'laiyum  maaduga'laiyum  baliyittaarga'l.  (1iraajaakka’l  8:5)

அப்படியே  ஆசாரியர்கள்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியை  ஆலயத்தின்  சந்நிதி  ஸ்தானமாகிய  மகாபரிசுத்த  ஸ்தானத்திலே  கேருபீன்களுடைய  செட்டைகளின்கீழே  கொண்டுவந்து  வைத்தார்கள்.  (1இராஜாக்கள்  8:6)

appadiyea  aasaariyarga'l  karththarudaiya  udanpadikkaippettiyai  aalayaththin  sannithi  sthaanamaagiya  mahaaparisuththa  sthaanaththilea  kearubeenga'ludaiya  settaiga'linkeezhea  ko'nduvanthu  vaiththaarga'l.  (1iraajaakka’l  8:6)

கேருபீன்கள்  பெட்டியிருக்கும்  ஸ்தானத்திலே  தங்கள்  இரண்டு  செட்டைகளையும்  விரித்து,  உயர  இருந்து  பெட்டியையும்  அதின்  தண்டுகளையும்  மூடிக்கொண்டிருந்தது.  (1இராஜாக்கள்  8:7)

kearubeenga'l  pettiyirukkum  sthaanaththilea  thangga'l  ira'ndu  settaiga'laiyum  viriththu,  uyara  irunthu  pettiyaiyum  athin  tha'nduga'laiyum  moodikko'ndirunthathu.  (1iraajaakka’l  8:7)

தண்டுகளின்  முனைகள்  சந்நிதி  ஸ்தானத்திற்கு  முன்னான  பரிசுத்த  ஸ்தலத்திலே  காணப்படத்தக்கதாய்  அந்தத்  தண்டுகளை  முன்னுக்கு  இழுத்தார்கள்;  ஆகிலும்  வெளியே  அவைகள்  காணப்படவில்லை;  அவைகள்  இந்நாள்வரைக்கும்  அங்கேதான்  இருக்கிறது.  (1இராஜாக்கள்  8:8)

tha'nduga'lin  munaiga'l  sannithi  sthaanaththi’rku  munnaana  parisuththa  sthalaththilea  kaa'nappadaththakkathaay  anthath  tha'nduga'lai  munnukku  izhuththaarga'l;  aagilum  ve'liyea  avaiga'l  kaa'nappadavillai;  avaiga'l  innaa'lvaraikkum  anggeathaan  irukki’rathu.  (1iraajaakka’l  8:8)

இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்டபின்  கர்த்தர்  அவர்களோடே  உடன்படிக்கை  பண்ணுகிறபோது,  மோசே  ஓரேபிலே  அந்தப்  பெட்டியில்  வைத்த  இரண்டு  கற்பலகைகளே  அல்லாமல்  அதிலே  வேறொன்றும்  இருந்ததில்லை.  (1இராஜாக்கள்  8:9)

israveal  puththirar  egipthutheasaththilirunthu  pu’rappattapin  karththar  avarga'loadea  udanpadikkai  pa'n'nugi’rapoathu,  moasea  oareabilea  anthap  pettiyil  vaiththa  ira'ndu  ka’rpalagaiga'lea  allaamal  athilea  vea’ron’rum  irunthathillai.  (1iraajaakka’l  8:9)

அப்பொழுது  ஆசாரியர்கள்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  புறப்படுகையில்,  மேகமானது  கர்த்தருடைய  ஆலயத்தை  நிரப்பிற்று.  (1இராஜாக்கள்  8:10)

appozhuthu  aasaariyarga'l  parisuththa  sthalaththilirunthu  pu’rappadugaiyil,  meagamaanathu  karththarudaiya  aalayaththai  nirappit’ru.  (1iraajaakka’l  8:10)

மேகத்தினிமித்தம்  ஆசாரியர்கள்  ஊழியஞ்செய்கிறதற்கு  நிற்கக்கூடாமற்  போயிற்று;  கர்த்தருடைய  மகிமை  கர்த்தருடைய  ஆலயத்தை  நிரப்பிற்று.  (1இராஜாக்கள்  8:11)

meagaththinimiththam  aasaariyarga'l  oozhiyagnseygi’ratha’rku  ni’rkakkoodaama’r  poayit’ru;  karththarudaiya  magimai  karththarudaiya  aalayaththai  nirappit’ru.  (1iraajaakka’l  8:11)

அப்பொழுது  சாலொமோன்:  காரிருளிலே  வாசம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொன்னார்  என்றும்,  (1இராஜாக்கள்  8:12)

appozhuthu  saalomoan:  kaariru'lilea  vaasampa'n'nuvean  en’ru  karththar  sonnaar  en’rum,  (1iraajaakka’l  8:12)

தேவரீர்  வாசம்பண்ணத்தக்க  வீடும்,  நீர்  என்றைக்கும்  தங்கத்தக்க  நிலையான  ஸ்தானமுமாகிய  ஆலயத்தை  உமக்குக்  கட்டினேன்  என்றும்  சொல்லி,  (1இராஜாக்கள்  8:13)

theavareer  vaasampa'n'naththakka  veedum,  neer  en’raikkum  thanggaththakka  nilaiyaana  sthaanamumaagiya  aalayaththai  umakkuk  kattinean  en’rum  solli,  (1iraajaakka’l  8:13)

ராஜா  முகம்  திரும்பி,  இஸ்ரவேல்  சபையையெல்லாம்  ஆசீர்வதித்தான்;  இஸ்ரவேல்  சபையாரெல்லாரும்  நின்றார்கள்.  (1இராஜாக்கள்  8:14)

raajaa  mugam  thirumbi,  israveal  sabaiyaiyellaam  aaseervathiththaan;  israveal  sabaiyaarellaarum  nin’raarga'l.  (1iraajaakka’l  8:14)

அவன்  சொன்னது:  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  என்  தகப்பனாகிய  தாவீதுக்குத்  தம்முடைய  வாக்கினால்  சொன்னதைத்  தம்முடைய  கரத்தினால்  நிறைவேற்றினார்.  (1இராஜாக்கள்  8:15)

avan  sonnathu:  isravealin  theavanaagiya  karththarukku  sthoaththiram;  avar  en  thagappanaagiya  thaaveethukkuth  thammudaiya  vaakkinaal  sonnathaith  thammudaiya  karaththinaal  ni’raiveat’rinaar.  (1iraajaakka’l  8:15)

அவர்  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணின  நாள்முதற்கொண்டு,  என்  நாமம்  விளங்கும்படி,  ஒரு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்று  நான்  இஸ்ரவேலுடைய  எல்லாக்  கோத்திரங்களிலுமுள்ள  ஒரு  பட்டணத்தையும்  தெரிந்துகொள்ளாமல்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  அதிகாரியாயிருக்கும்படி  தாவீதையே  தெரிந்துகொண்டேன்  என்றார்.  (1இராஜாக்கள்  8:16)

avar  naan  en  janamaagiya  isravealai  egipthilirunthu  pu’rappadappa'n'nina  naa'lmutha’rko'ndu,  en  naamam  vi'langgumpadi,  oru  aalayaththaik  kattavea'ndum  en’ru  naan  isravealudaiya  ellaak  koaththirangga'lilumu'l'la  oru  patta'naththaiyum  therinthuko'l'laamal  en  janamaagiya  isravealinmeal  athigaariyaayirukkumpadi  thaaveethaiyea  therinthuko'ndean  en’raar.  (1iraajaakka’l  8:16)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்கிற  விருப்பம்  என்  தகப்பனாகிய  தாவீதின்  இருதயத்தில்  இருந்தது.  (1இராஜாக்கள்  8:17)

isravealin  theavanaagiya  karththarin  naamaththi’rku  aalayaththaik  kattavea'ndum  engi’ra  viruppam  en  thagappanaagiya  thaaveethin  iruthayaththil  irunthathu.  (1iraajaakka’l  8:17)

ஆனாலும்  கர்த்தர்  என்  தகப்பனாகிய  தாவீதை  நோக்கி:  என்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்கிற  விருப்பம்  உன்  மனதிலே  இருந்தது  நல்லகாரியந்தான்.  (1இராஜாக்கள்  8:18)

aanaalum  karththar  en  thagappanaagiya  thaaveethai  noakki:  en  naamaththi’rku  aalayaththaik  kattavea'ndum  engi’ra  viruppam  un  manathilea  irunthathu  nallakaariyanthaan.  (1iraajaakka’l  8:18)

ஆகிலும்  நீ  அந்த  ஆலயத்தைக்  கட்டமாட்டாய்,  உன்  கர்ப்பப்பிறப்பாகிய  உன்  குமாரனே  என்  நாமத்திற்கு  அந்த  ஆலயத்தைக்  கட்டுவான்  என்றார்.  (1இராஜாக்கள்  8:19)

aagilum  nee  antha  aalayaththaik  kattamaattaay,  un  karppappi’rappaagiya  un  kumaaranea  en  naamaththi’rku  antha  aalayaththaik  kattuvaan  en’raar.  (1iraajaakka’l  8:19)

இப்போதும்  கர்த்தர்  சொல்லிய  தம்முடைய  வார்த்தையை  நிறைவேற்றினார்;  கர்த்தர்  சொன்னபடியே,  நான்  என்  தகப்பனாகிய  தாவீதின்  ஸ்தானத்தில்  எழும்பி,  இஸ்ரவேலின்  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டினேன்.  (1இராஜாக்கள்  8:20)

ippoathum  karththar  solliya  thammudaiya  vaarththaiyai  ni’raiveat’rinaar;  karththar  sonnapadiyea,  naan  en  thagappanaagiya  thaaveethin  sthaanaththil  ezhumbi,  isravealin  singgaasanaththinmeal  udkaarnthu,  isravealin  theavanaagiya  karththarin  naamaththi’rku  aalayaththaik  kattinean.  (1iraajaakka’l  8:20)

கர்த்தர்  நம்முடைய  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினபோது,  அவர்களோடே  பண்ணின  உடன்படிக்கை  இருக்கிற  பெட்டிக்காக  அதிலே  ஒரு  ஸ்தானத்தை  உண்டாக்கினேன்  என்றான்.  (1இராஜாக்கள்  8:21)

karththar  nammudaiya  pithaakka'lai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'ninapoathu,  avarga'loadea  pa'n'nina  udanpadikkai  irukki’ra  pettikkaaga  athilea  oru  sthaanaththai  u'ndaakkinean  en’raan.  (1iraajaakka’l  8:21)

பின்பு  சாலொமோன்:  கர்த்தருடைய  பலிபீடத்திற்குமுன்னே  இஸ்ரவேல்  சபையாரெல்லாருக்கும்  எதிராக  நின்று,  வானத்திற்கு  நேராய்த்  தன்  கைகளை  விரித்து:  (1இராஜாக்கள்  8:22)

pinbu  saalomoan:  karththarudaiya  balipeedaththi’rkumunnea  israveal  sabaiyaarellaarukkum  ethiraaga  nin’ru,  vaanaththi’rku  nearaayth  than  kaiga'lai  viriththu:  (1iraajaakka’l  8:22)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தாவே,  மேலே  வானத்திலும்  கீழே  பூமியிலும்  உமக்கு  ஒப்பான  தேவன்  இல்லை;  தங்கள்  முழு  இருதயத்தோடும்  உமக்கு  முன்பாக  நடக்கிற  உமது  அடியாருக்கு  உடன்படிக்கையையும்  கிருபையையும்  காத்துவருகிறீர்.  (1இராஜாக்கள்  8:23)

isravealin  theavanaagiya  karththaavea,  mealea  vaanaththilum  keezhea  boomiyilum  umakku  oppaana  theavan  illai;  thangga'l  muzhu  iruthayaththoadum  umakku  munbaaga  nadakki’ra  umathu  adiyaarukku  udanpadikkaiyaiyum  kirubaiyaiyum  kaaththuvarugi’reer.  (1iraajaakka’l  8:23)

தேவரீர்  என்  தகப்பனாகிய  தாவீது  என்னும்  உம்முடைய  தாசனுக்குச்  செய்த  வாக்குத்தத்தத்தைக்  காத்தருளினீர்;  அதை  உம்முடைய  வாக்கினால்  சொன்னீர்;  இந்நாளில்  இருக்கிறபடி,  உம்முடைய  கரத்தினால்  அதை  நிறைவேற்றினீர்.  (1இராஜாக்கள்  8:24)

theavareer  en  thagappanaagiya  thaaveethu  ennum  ummudaiya  thaasanukkuch  seytha  vaakkuththaththaththaik  kaaththaru'lineer;  athai  ummudaiya  vaakkinaal  sonneer;  innaa'lil  irukki’rapadi,  ummudaiya  karaththinaal  athai  ni’raiveat’rineer.  (1iraajaakka’l  8:24)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீர்  என்  தகப்பனாகிய  தாவீது  என்னும்  உம்முடைய  தாசனை  நோக்கி:  நீ  எனக்கு  முன்பாக  நடந்ததுபோல,  உன்  குமாரரும்  எனக்கு  முன்பாக  நடக்கும்படி  தங்கள்  வழியைக்  காப்பார்களேயானால்,  இஸ்ரவேலின்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  புருஷன்  எனக்கு  முன்பாக  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  சொன்னதை  இப்பொழுது  அவனுக்கு  நிறைவேற்றும்.  (1இராஜாக்கள்  8:25)

isravealin  theavanaagiya  karththaavea,  theavareer  en  thagappanaagiya  thaaveethu  ennum  ummudaiya  thaasanai  noakki:  nee  enakku  munbaaga  nadanthathupoala,  un  kumaararum  enakku  munbaaga  nadakkumpadi  thangga'l  vazhiyaik  kaappaarga'leayaanaal,  isravealin  singgaasanaththinmeal  veet’rirukkum  purushan  enakku  munbaaga  unakku  illaama’rpoavathillai  en’ru  sonnathai  ippozhuthu  avanukku  ni’raiveat’rum.  (1iraajaakka’l  8:25)

இஸ்ரவேலின்  தேவனே,  என்  தகப்பனாகிய  தாவீது  என்னும்  உம்முடைய  தாசனுக்குச்  சொன்ன  உம்முடைய  வார்த்தை  மெய்யென்று  விளங்குவதாக.  (1இராஜாக்கள்  8:26)

isravealin  theavanea,  en  thagappanaagiya  thaaveethu  ennum  ummudaiya  thaasanukkuch  sonna  ummudaiya  vaarththai  meyyen’ru  vi'langguvathaaga.  (1iraajaakka’l  8:26)

தேவன்  மெய்யாக  பூமியிலே  வாசம்பண்ணுவாரோ?  இதோ,  வானங்களும்  வானாதி  வானங்களும்  உம்மைக்  கொள்ளாதே;  நான்  கட்டின  இந்த  ஆலயம்  எம்மாத்திரம்?  (1இராஜாக்கள்  8:27)

theavan  meyyaaga  boomiyilea  vaasampa'n'nuvaaroa?  ithoa,  vaanangga'lum  vaanaathi  vaanangga'lum  ummaik  ko'l'laathea;  naan  kattina  intha  aalayam  emmaaththiram?  (1iraajaakka’l  8:27)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உமது  அடியேன்  இன்று  உமது  சந்நிதியில்  செய்கிற  விண்ணப்பத்தையும்  மன்றாட்டையும்  கேட்டு,  உமது  அடியேனுடைய  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  திருவுளத்தில்  கொண்டருளும்.  (1இராஜாக்கள்  8:28)

en  theavanaagiya  karththaavea,  umathu  adiyean  in’ru  umathu  sannithiyil  seygi’ra  vi'n'nappaththaiyum  man’raattaiyum  keattu,  umathu  adiyeanudaiya  vi'n'nappaththaiyum  vea'nduthalaiyum  thiruvu'laththil  ko'ndaru'lum.  (1iraajaakka’l  8:28)

உமது  அடியேன்  இவ்விடத்திலே  செய்யும்  விண்ணப்பத்தைக்  கேட்கும்படி  என்னுடைய  நாமம்  விளங்குமென்று  நீர்  சொன்ன  ஸ்தலமாகிய  இந்த  ஆலயத்தின்மேல்  உம்முடைய  கண்கள்  இரவும்  பகலும்  திறந்திருப்பதாக.  (1இராஜாக்கள்  8:29)

umathu  adiyean  ivvidaththilea  seyyum  vi'n'nappaththaik  keadkumpadi  ennudaiya  naamam  vi'langgumen’ru  neer  sonna  sthalamaagiya  intha  aalayaththinmeal  ummudaiya  ka'nga'l  iravum  pagalum  thi’ranthiruppathaaga.  (1iraajaakka’l  8:29)

உமது  அடியானும்,  இந்த  ஸ்தலத்திலே  விண்ணப்பஞ்  செய்யப்போகிற  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலும்  பண்ணும்  ஜெபத்தைக்  கேட்டருளும்;  பரலோகமாகிய  உம்முடைய  வாசஸ்தலத்திலே  அதை  நீர்  கேட்பீராக,  கேட்டு  மன்னிப்பீராக.  (1இராஜாக்கள்  8:30)

umathu  adiyaanum,  intha  sthalaththilea  vi'n'nappagn  seyyappoagi’ra  umathu  janamaagiya  isravealum  pa'n'num  jebaththaik  keattaru'lum;  paraloagamaagiya  ummudaiya  vaasasthalaththilea  athai  neer  keadpeeraaga,  keattu  mannippeeraaga.  (1iraajaakka’l  8:30)

ஒருவன்  தன்  அயலானுக்குக்  குற்றஞ்செய்திருக்கையில்,  இவன்  அவனை  ஆணையிடச்சொல்லும்போது,  அந்த  ஆணை  இந்த  ஆலயத்திலே  உம்முடைய  பலிபீடத்திற்கு  முன்  வந்தால்,  (1இராஜாக்கள்  8:31)

oruvan  than  ayalaanukkuk  kut’ragnseythirukkaiyil,  ivan  avanai  aa'naiyidachsollumpoathu,  antha  aa'nai  intha  aalayaththilea  ummudaiya  balipeedaththi’rku  mun  vanthaal,  (1iraajaakka’l  8:31)

அப்பொழுது  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  துன்மார்க்கனுடைய  நடக்கையை  அவன்  தலையின்மேல்  சுமரப்பண்ணி,  அவனைக்  குற்றவாளியாகத்  தீர்க்கவும்,  நீதிமானுக்கு  அவனுடைய  நீதிக்குத்தக்கதாய்ச்  செய்து  அவனை  நீதிமானாக்கவும்  தக்கதாய்  உமது  அடியாரை  நியாயந்தீர்ப்பீராக.  (1இராஜாக்கள்  8:32)

appozhuthu  paraloagaththil  irukki’ra  theavareer  keattu,  thunmaarkkanudaiya  nadakkaiyai  avan  thalaiyinmeal  sumarappa'n'ni,  avanaik  kut’ravaa'liyaagath  theerkkavum,  neethimaanukku  avanudaiya  neethikkuththakkathaaych  seythu  avanai  neethimaanaakkavum  thakkathaay  umathu  adiyaarai  niyaayantheerppeeraaga.  (1iraajaakka’l  8:32)

உம்முடைய  ஜனங்களாகிய  இஸ்ரவேலர்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்ததினிமித்தம்  சத்துருவுக்கு  முன்பாக  முறிந்துபோய்,  உம்மிடத்திற்குத்  திரும்பி,  உம்முடைய  நாமத்தை  அறிக்கைபண்ணி,  இந்த  ஆலயத்துக்கு  நேராக  உம்மை  நோக்கி  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  செய்தால்,  (1இராஜாக்கள்  8:33)

ummudaiya  janangga'laagiya  isravealar  umakku  viroathamaayp  paavagnseythathinimiththam  saththuruvukku  munbaaga  mu’rinthupoay,  ummidaththi’rkuth  thirumbi,  ummudaiya  naamaththai  a’rikkaipa'n'ni,  intha  aalayaththukku  nearaaga  ummai  noakki  vi'n'nappaththaiyum  vea'nduthalaiyum  seythaal,  (1iraajaakka’l  8:33)

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலின்  பாவத்தை  மன்னித்து,  அவர்கள்  பிதாக்களுக்கு  நீர்  கொடுத்த  தேசத்துக்கு  அவர்களைத்  திரும்பிவரப்பண்ணுவீராக.  (1இராஜாக்கள்  8:34)

paraloagaththil  irukki’ra  theavareer  keattu,  ummudaiya  janamaagiya  isravealin  paavaththai  manniththu,  avarga'l  pithaakka'lukku  neer  koduththa  theasaththukku  avarga'laith  thirumbivarappa'n'nuveeraaga.  (1iraajaakka’l  8:34)

அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்ததினால்  வானம்  அடைபட்டு  மழைபெய்யாதிருக்கும்போது,  அவர்கள்  இந்த  ஸ்தலத்திற்கு  நேராக  விண்ணப்பஞ்செய்து,  உம்முடைய  நாமத்தை  அறிக்கைபண்ணி,  தங்களை  தேவரீர்  கிலேசப்படுத்துகையில்  தங்கள்  பாவங்களை  விட்டுத்  திரும்பினால்,  (1இராஜாக்கள்  8:35)

avarga'l  umakku  viroathamaayp  paavagnseythathinaal  vaanam  adaipattu  mazhaipeyyaathirukkumpoathu,  avarga'l  intha  sthalaththi’rku  nearaaga  vi'n'nappagnseythu,  ummudaiya  naamaththai  a’rikkaipa'n'ni,  thangga'lai  theavareer  kileasappaduththugaiyil  thangga'l  paavangga'lai  vittuth  thirumbinaal,  (1iraajaakka’l  8:35)

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  உமது  அடியாரும்  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலும்  செய்த  பாவத்தை  மன்னித்து,  அவர்கள்  நடக்கவேண்டிய  நல்வழியை  அவர்களுக்குப்  போதித்து,  தேவரீர்  உமது  ஜனத்திற்குச்  சுதந்தரமாகக்  கொடுத்த  உமது  தேசத்தில்  மழைபெய்யக்  கட்டளையிடுவீராக.  (1இராஜாக்கள்  8:36)

paraloagaththil  irukki’ra  theavareer  keattu,  umathu  adiyaarum  umathu  janamaagiya  isravealum  seytha  paavaththai  manniththu,  avarga'l  nadakkavea'ndiya  nalvazhiyai  avarga'lukkup  poathiththu,  theavareer  umathu  janaththi’rkuch  suthantharamaagak  koduththa  umathu  theasaththil  mazhaipeyyak  katta'laiyiduveeraaga.  (1iraajaakka’l  8:36)

தேசத்திலே  பஞ்சம்  உண்டாகிறபோதும்,  கொள்ளைநோய்  உண்டாகிறபோதும்,  வறட்சி,  சாவி,  வெட்டுக்கிளி,  பச்சைக்கிளி  உண்டாகிறபோதும்,  அவர்கள்  சத்துருக்கள்  தேசத்திலுள்ள  பட்டணங்களை  முற்றிக்கைபோடுகிறபோதும்,  யாதொரு  வாதையாகிலும்  யாதொரு  வியாதியாகிலும்  வருகிறபோதும்,  (1இராஜாக்கள்  8:37)

theasaththilea  pagncham  u'ndaagi’rapoathum,  ko'l'lainoay  u'ndaagi’rapoathum,  va’radchi,  saavi,  vettukki'li,  pachchaikki'li  u'ndaagi’rapoathum,  avarga'l  saththurukka'l  theasaththilu'l'la  patta'nangga'lai  mut’rikkaipoadugi’rapoathum,  yaathoru  vaathaiyaagilum  yaathoru  viyaathiyaagilum  varugi’rapoathum,  (1iraajaakka’l  8:37)

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேல்  அனைவரிலும்  எந்த  மனுஷனானாலும்  தன்  இருதயத்தின்  வாதையை  உணர்ந்து,  இந்த  ஆலயத்துக்கு  நேராகத்  தன்  கைகளை  விரித்துச்  செய்யும்  சகல  விண்ணப்பத்தையும்,  சகல  வேண்டுதலையும்,  (1இராஜாக்கள்  8:38)

ummudaiya  janamaagiya  israveal  anaivarilum  entha  manushanaanaalum  than  iruthayaththin  vaathaiyai  u'narnthu,  intha  aalayaththukku  nearaagath  than  kaiga'lai  viriththuch  seyyum  sagala  vi'n'nappaththaiyum,  sagala  vea'nduthalaiyum,  (1iraajaakka’l  8:38)

உம்முடைய  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு  மன்னித்து,  (1இராஜாக்கள்  8:39)

ummudaiya  vaasasthalamaagiya  paraloagaththil  irukki’ra  theavareer  keattu  manniththu,  (1iraajaakka’l  8:39)

தேவரீர்  எங்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தேசத்தில்  அவர்கள்  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  உமக்குப்  பயப்படும்படிக்கு  தேவரீர்  ஒருவரே  எல்லா  மனுபுத்திரரின்  இருதயத்தையும்  அறிந்தவராதலால்,  நீர்  அவனவன்  இருதயத்தை  அறிந்திருக்கிறபடியே,  அவனவனுடைய  வழிகளுக்குத்தக்கதாகச்  செய்து,  அவனவனுக்குப்  பலன்  அளிப்பீராக.  (1இராஜாக்கள்  8:40)

theavareer  engga'l  pithaakka'lukkuk  koduththa  theasaththil  avarga'l  uyiroadirukkum  naa'lellaam  umakkup  bayappadumpadikku  theavareer  oruvarea  ellaa  manupuththirarin  iruthayaththaiyum  a’rinthavaraathalaal,  neer  avanavan  iruthayaththai  a’rinthirukki’rapadiyea,  avanavanudaiya  vazhiga'lukkuththakkathaagach  seythu,  avanavanukkup  palan  a'lippeeraaga.  (1iraajaakka’l  8:40)

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேல்  ஜாதியல்லாத  அந்நிய  ஜாதியார்  உமது  மகத்துவமான  நாமத்தையும்,  உமது  பலத்த  கரத்தையும்,  உமது  ஓங்கிய  புயத்தையும்  கேள்விப்படுவார்களே.  (1இராஜாக்கள்  8:41)

ummudaiya  janamaagiya  israveal  jaathiyallaatha  anniya  jaathiyaar  umathu  magaththuvamaana  naamaththaiyum,  umathu  balaththa  karaththaiyum,  umathu  oanggiya  puyaththaiyum  kea'lvippaduvaarga'lea.  (1iraajaakka’l  8:41)

அப்படிக்கொத்த  அந்நிய  ஜாதியானும்,  உமது  நாமத்தினிமித்தம்  தூரதேசத்திலிருந்து  வந்து,  இந்த  ஆலயத்துக்கு  நேராக  விண்ணப்பம்பண்ணினால்,  (1இராஜாக்கள்  8:42)

appadikkoththa  anniya  jaathiyaanum,  umathu  naamaththinimiththam  thooratheasaththilirunthu  vanthu,  intha  aalayaththukku  nearaaga  vi'n'nappampa'n'ninaal,  (1iraajaakka’l  8:42)

உமது  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அதைக்  கேட்டு,  பூமியின்  ஜனங்களெல்லாரும்  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலைப்போல  உமக்குப்  பயப்படும்படிக்கும்,  நான்  கட்டின  இந்த  ஆலயத்துக்கு  உம்முடைய  நாமம்  தரிக்கப்பட்டதென்று  அறியும்படிக்கும்,  உம்முடைய  நாமத்தை  அறியத்தக்கதாக,  அந்த  அந்நிய  ஜாதியான்  உம்மை  நோக்கி  வேண்டிக்கொள்வதின்படியெல்லாம்  தேவரீர்  செய்வீராக.  (1இராஜாக்கள்  8:43)

umathu  vaasasthalamaagiya  paraloagaththil  irukki’ra  theavareer  athaik  keattu,  boomiyin  janangga'lellaarum  ummudaiya  janamaagiya  isravealaippoala  umakkup  bayappadumpadikkum,  naan  kattina  intha  aalayaththukku  ummudaiya  naamam  tharikkappattathen’ru  a’riyumpadikkum,  ummudaiya  naamaththai  a’riyaththakkathaaga,  antha  anniya  jaathiyaan  ummai  noakki  vea'ndikko'lvathinpadiyellaam  theavareer  seyveeraaga.  (1iraajaakka’l  8:43)

நீர்  உம்முடைய  ஜனங்களை  அனுப்பும்  வழியிலே  அவர்கள்  தங்கள்  சத்துருக்களோடு  யுத்தம்பண்ணப்  புறப்படும்போது,  நீர்  தெரிந்துகொண்ட  இந்த  நகரத்துக்கும்,  உம்முடைய  நாமத்துக்கு  நான்  கட்டின  இந்த  ஆலயத்துக்கும்  நேராகக்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினால்,  (1இராஜாக்கள்  8:44)

neer  ummudaiya  janangga'lai  anuppum  vazhiyilea  avarga'l  thangga'l  saththurukka'loadu  yuththampa'n'nap  pu’rappadumpoathu,  neer  therinthuko'nda  intha  nagaraththukkum,  ummudaiya  naamaththukku  naan  kattina  intha  aalayaththukkum  nearaagak  karththarai  noakki  vi'n'nappampa'n'ninaal,  (1iraajaakka’l  8:44)

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அவர்கள்  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  கேட்டு,  அவர்கள்  நியாயத்தை  விசாரிப்பீராக.  (1இராஜாக்கள்  8:45)

paraloagaththil  irukki’ra  theavareer  avarga'l  vi'n'nappaththaiyum  vea'nduthalaiyum  keattu,  avarga'l  niyaayaththai  visaarippeeraaga.  (1iraajaakka’l  8:45)

பாவஞ்செய்யாத  மனுஷன்  இல்லையே;  ஆகையால்,  அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  தேவரீர்  அவர்கள்மேல்  கோபங்கொண்டு,  அவர்கள்  சத்துருக்கள்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்து,  அந்தச்  சத்துருக்கள்  அவர்களைத்  தூரத்திலாகிலும்  சமீபத்திலாகிலும்  இருக்கிற  தங்கள்  தேசத்திற்குச்  சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது,  (1இராஜாக்கள்  8:46)

paavagnseyyaatha  manushan  illaiyea;  aagaiyaal,  avarga'l  umakku  viroathamaayp  paavagnseythu,  theavareer  avarga'lmeal  koabangko'ndu,  avarga'l  saththurukka'l  kaiyil  avarga'lai  oppukkoduththu,  anthach  saththurukka'l  avarga'laith  thooraththilaagilum  sameebaththilaagilum  irukki’ra  thangga'l  theasaththi’rkuch  si’raipidiththukko'ndupoagumpoathu,  (1iraajaakka’l  8:46)

அவர்கள்  சிறைப்பட்டுப்  போயிருக்கிற  தேசத்திலே  தங்களில்  உணர்வடைந்து,  மனந்திரும்பி:  நாங்கள்  பாவஞ்செய்து,  அக்கிரமம்பண்ணி,  துன்மார்க்கமாய்  நடந்தோம்  என்று  தங்கள்  சிறையிருப்பான  தேசத்திலே  உம்மை  நோக்கி  வேண்டுதல்  செய்து,  (1இராஜாக்கள்  8:47)

avarga'l  si’raippattup  poayirukki’ra  theasaththilea  thangga'lil  u'narvadainthu,  mananthirumbi:  naangga'l  paavagnseythu,  akkiramampa'n'ni,  thunmaarkkamaay  nadanthoam  en’ru  thangga'l  si’raiyiruppaana  theasaththilea  ummai  noakki  vea'nduthal  seythu,  (1iraajaakka’l  8:47)

தங்களைச்  சிறைபிடித்துக்கொண்ட  தங்கள்  சத்துருக்களின்  தேசத்திலே  தங்கள்  முழு  இருதயத்தோடும்  தங்கள்  முழு  ஆத்துமாவோடும்  உம்மிடத்தில்  திரும்பி,  தேவரீர்  தங்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தங்கள்  தேசத்திற்கும்,  தேவரீர்  தெரிந்துகொண்ட  இந்த  நகரத்திற்கும்,  உம்முடைய  நாமத்திற்கு  நான்  கட்டின  இந்த  ஆலயத்திற்கும்  நேராக  உம்மை  நோக்கி  விண்ணப்பம்பண்ணும்போது,  (1இராஜாக்கள்  8:48)

thangga'laich  si’raipidiththukko'nda  thangga'l  saththurukka'lin  theasaththilea  thangga'l  muzhu  iruthayaththoadum  thangga'l  muzhu  aaththumaavoadum  ummidaththil  thirumbi,  theavareer  thangga'l  pithaakka'lukkuk  koduththa  thangga'l  theasaththi’rkum,  theavareer  therinthuko'nda  intha  nagaraththi’rkum,  ummudaiya  naamaththi’rku  naan  kattina  intha  aalayaththi’rkum  nearaaga  ummai  noakki  vi'n'nappampa'n'numpoathu,  (1iraajaakka’l  8:48)

உமது  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அவர்கள்  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  கேட்டு,  அவர்கள்  நியாயத்தை  விசாரித்து,  (1இராஜாக்கள்  8:49)

umathu  vaasasthalamaagiya  paraloagaththil  irukki’ra  theavareer  avarga'l  vi'n'nappaththaiyum  vea'nduthalaiyum  keattu,  avarga'l  niyaayaththai  visaariththu,  (1iraajaakka’l  8:49)

உம்முடைய  ஜனங்கள்  உமக்கு  விரோதமாய்ச்  செய்த  பாவத்தையும்,  அவர்கள்  உம்முடைய  கட்டளையை  மீறிய  அவர்கள்  துரோகங்களையும்  எல்லாம்  மன்னித்து,  அவர்களைச்  சிறைபிடித்துக்  கொண்டுபோகிறவர்கள்  அவர்களுக்கு  இரங்கத்தக்கதான  இரக்கத்தை  அவர்களுக்குக்  கிடைக்கப்பண்ணுவீராக.  (1இராஜாக்கள்  8:50)

ummudaiya  janangga'l  umakku  viroathamaaych  seytha  paavaththaiyum,  avarga'l  ummudaiya  katta'laiyai  mee’riya  avarga'l  thuroagangga'laiyum  ellaam  manniththu,  avarga'laich  si’raipidiththuk  ko'ndupoagi’ravarga'l  avarga'lukku  iranggaththakkathaana  irakkaththai  avarga'lukkuk  kidaikkappa'n'nuveeraaga.  (1iraajaakka’l  8:50)

அவர்கள்  எகிப்தென்கிற  இருப்புக்  காளவாயின்  நடுவிலிருந்து  தேவரீர்  புறப்படப்பண்ணின  உம்முடைய  ஜனமும்  உம்முடைய  சுதந்தரமுமாய்  இருக்கிறார்களே.  (1இராஜாக்கள்  8:51)

avarga'l  egipthengi’ra  iruppuk  kaa'lavaayin  naduvilirunthu  theavareer  pu’rappadappa'n'nina  ummudaiya  janamum  ummudaiya  suthantharamumaay  irukki’raarga'lea.  (1iraajaakka’l  8:51)

அவர்கள்  உம்மை  நோக்கி  வேண்டிக்கொள்வதின்படியெல்லாம்  தேவரீர்  அவர்களுக்குச்  செய்யும்படி,  உம்முடைய  கண்கள்  உமது  அடியானின்  வேண்டுதலுக்கும்,  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்  வேண்டுதலுக்கும்  திறந்திருப்பதாக.  (1இராஜாக்கள்  8:52)

avarga'l  ummai  noakki  vea'ndikko'lvathinpadiyellaam  theavareer  avarga'lukkuch  seyyumpadi,  ummudaiya  ka'nga'l  umathu  adiyaanin  vea'nduthalukkum,  umathu  janamaagiya  isravealin  vea'nduthalukkum  thi’ranthiruppathaaga.  (1iraajaakka’l  8:52)

கர்த்தராகிய  ஆண்டவரே,  நீர்  எங்கள்  பிதாக்களை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணும்போது,  உம்முடைய  தாசனாகிய  மோசேயைக்கொண்டு  சொன்னபடியே,  தேவரீர்  பூமியின்  சகல  ஜனங்களிலும்  அவர்களை  உமக்குச்  சுதந்தரமாகப்  பிரித்தெடுத்தீரே  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  (1இராஜாக்கள்  8:53)

karththaraagiya  aa'ndavarea,  neer  engga'l  pithaakka'lai  egipthilirunthu  pu’rappadappa'n'numpoathu,  ummudaiya  thaasanaagiya  moaseayaikko'ndu  sonnapadiyea,  theavareer  boomiyin  sagala  janangga'lilum  avarga'lai  umakkuch  suthantharamaagap  piriththeduththeerea  en’ru  vi'n'nappampa'n'ninaan.  (1iraajaakka’l  8:53)

சாலொமோன்  கர்த்தரை  நோக்கி,  இந்த  ஜெபத்தையும்  வேண்டுதலையும்  எல்லாம்  செய்து  முடித்தபின்பு,  அவன்  கர்த்தருடைய  பலிபீடத்திற்கு  முன்பாகத்  தன்  கைகளை  வானத்திற்கு  நேராக  விரித்து,  முழங்காற்படியிட்டிருந்ததை  விட்டெழுந்து,  (1இராஜாக்கள்  8:54)

saalomoan  karththarai  noakki,  intha  jebaththaiyum  vea'nduthalaiyum  ellaam  seythu  mudiththapinbu,  avan  karththarudaiya  balipeedaththi’rku  munbaagath  than  kaiga'lai  vaanaththi’rku  nearaaga  viriththu,  muzhanggaa’rpadiyittirunthathai  vittezhunthu,  (1iraajaakka’l  8:54)

நின்றுகொண்டு,  இஸ்ரவேல்  சபையையெல்லாம்  ஆசீர்வதித்து,  உரத்த  சத்தத்தோடே  சொன்னது:  (1இராஜாக்கள்  8:55)

nin’ruko'ndu,  israveal  sabaiyaiyellaam  aaseervathiththu,  uraththa  saththaththoadea  sonnathu:  (1iraajaakka’l  8:55)

தாம்  வாக்குத்தத்தம்  பண்ணினபடியெல்லாம்  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  இளைப்பாறுதலை  அருளின  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்,  அவர்  தம்முடைய  தாசனாகிய  மோசேயைக்கொண்டு  சொன்ன  அவருடைய  நல்வார்த்தைகளில்  எல்லாம்  ஒரு  வார்த்தையானாலும்  தவறிப்போகவில்லை.  (1இராஜாக்கள்  8:56)

thaam  vaakkuththaththam  pa'n'ninapadiyellaam  thammudaiya  janamaagiya  isravealukku  i'laippaa’ruthalai  aru'lina  karththarukku  sthoaththiram,  avar  thammudaiya  thaasanaagiya  moaseayaikko'ndu  sonna  avarudaiya  nalvaarththaiga'lil  ellaam  oru  vaarththaiyaanaalum  thava’rippoagavillai.  (1iraajaakka’l  8:56)

நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  நம்மைக்  கைவிடாமலும்,  நம்மை  நெகிழவிடாமலும்,  அவர்  நம்முடைய  பிதாக்களோடு  இருந்ததுபோல,  நம்மோடும்  இருந்து,  (1இராஜாக்கள்  8:57)

nammudaiya  theavanaagiya  karththar  nammaik  kaividaamalum,  nammai  negizhavidaamalum,  avar  nammudaiya  pithaakka'loadu  irunthathupoala,  nammoadum  irunthu,  (1iraajaakka’l  8:57)

நாம்  அவருடைய  வழிகளில்  எல்லாம்  நடக்கிறதற்கும்,  அவர்  நம்முடைய  பிதாக்களுக்குக்  கட்டளையிட்ட  அவருடைய  கற்பனைகளையும்,  அவருடைய  கட்டளைகளையும்,  அவருடைய  நியாயங்களையும்  கைக்கொள்ளுகிறதற்கும்,  நம்முடைய  இருதயத்தைத்  தம்மிடத்தில்  சாயப்பண்ணுவாராக.  (1இராஜாக்கள்  8:58)

naam  avarudaiya  vazhiga'lil  ellaam  nadakki’ratha’rkum,  avar  nammudaiya  pithaakka'lukkuk  katta'laiyitta  avarudaiya  ka’rpanaiga'laiyum,  avarudaiya  katta'laiga'laiyum,  avarudaiya  niyaayangga'laiyum  kaikko'l'lugi’ratha’rkum,  nammudaiya  iruthayaththaith  thammidaththil  saayappa'n'nuvaaraaga.  (1iraajaakka’l  8:58)

கர்த்தரே  தேவன்,  வேறொருவரும்  இல்லையென்பதைப்  பூமியின்  ஜனங்களெல்லாம்  அறியும்படியாக,  (1இராஜாக்கள்  8:59)

karththarea  theavan,  vea’roruvarum  illaiyenbathaip  boomiyin  janangga'lellaam  a’riyumpadiyaaga,  (1iraajaakka’l  8:59)

அவர்  தமது  அடியானுடைய  நியாயத்தையும்,  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்  நியாயத்தையும்,  அந்தந்த  நாளில்  நடக்கும்  காரியத்துக்குத்தக்கதாய்  விசாரிப்பதற்கு,  நான்  கர்த்தருக்கு  முன்பாக  விண்ணப்பம்பண்ணின  இந்த  என்னுடைய  வார்த்தைகள்  இரவும்பகலும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  இருப்பதாக.  (1இராஜாக்கள்  8:60)

avar  thamathu  adiyaanudaiya  niyaayaththaiyum,  thamathu  janamaagiya  isravealin  niyaayaththaiyum,  anthantha  naa'lil  nadakkum  kaariyaththukkuththakkathaay  visaarippatha’rku,  naan  karththarukku  munbaaga  vi'n'nappampa'n'nina  intha  ennudaiya  vaarththaiga'l  iravumpagalum  nammudaiya  theavanaagiya  karththarudaiya  sannithiyil  iruppathaaga.  (1iraajaakka’l  8:60)

ஆதலால்  இந்நாளில்  இருக்கிறதுபோல,  நீங்கள்  அவர்  கட்டளைகளில்  நடந்து,  அவர்  கற்பனைகளைக்  கைக்கொள்ள,  உங்கள்  இருதயம்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரோடு  உத்தமமாய்  இருக்கக்கடவது  என்றான்.  (1இராஜாக்கள்  8:61)

aathalaal  innaa'lil  irukki’rathupoala,  neengga'l  avar  katta'laiga'lil  nadanthu,  avar  ka’rpanaiga'laik  kaikko'l'la,  ungga'l  iruthayam  nammudaiya  theavanaagiya  karththaroadu  uththamamaay  irukkakkadavathu  en’raan.  (1iraajaakka’l  8:61)

பின்பு  ராஜாவும்  அவனோடே  இருந்த  இஸ்ரவேலர்  அனைவரும்,  கர்த்தருடைய  சந்நிதியில்  பலிகளைச்  செலுத்தினார்கள்.  (1இராஜாக்கள்  8:62)

pinbu  raajaavum  avanoadea  iruntha  isravealar  anaivarum,  karththarudaiya  sannithiyil  baliga'laich  seluththinaarga'l.  (1iraajaakka’l  8:62)

சாலொமோன்  கர்த்தருக்குச்  சமாதானபலிகளாக,  இருபத்தீராயிரம்  மாடுகளையும்,  இலட்சத்திருபதினாயிரம்  ஆடுகளையும்  பலியிட்டான்;  இவ்விதமாய்  ராஜாவும்  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவரும்  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பிரதிஷ்டைபண்ணினார்கள்.  (1இராஜாக்கள்  8:63)

saalomoan  karththarukkuch  samaathaanabaliga'laaga,  irubaththeeraayiram  maaduga'laiyum,  iladchaththirubathinaayiram  aaduga'laiyum  baliyittaan;  ivvithamaay  raajaavum  israveal  puththirar  anaivarum  karththarudaiya  aalayaththaip  pirathishdaipa'n'ninaarga'l.  (1iraajaakka’l  8:63)

கர்த்தருடைய  சந்நிதியில்  இருந்த  வெண்கலப்  பலிபீடம்  சர்வாங்க  தகனபலிகளையும்,  போஜனபலிகளையும்,  சமாதான  பலிகளின்  நிணத்தையும்  கொள்ளமாட்டாமல்  சிறிதாயிருந்தபடியினால்,  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்திற்குமுன்  இருக்கிற  பிராகாரத்தின்  நடுமையத்தைப்  பரிசுத்தப்படுத்தி,  அன்றையதினம்  அங்கே  சர்வாங்க  தகனபலிகளையும்,  போஜனபலிகளையும்,  சமாதான  பலிகளின்  நிணத்தையும்  செலுத்தினான்.  (1இராஜாக்கள்  8:64)

karththarudaiya  sannithiyil  iruntha  ve'ngalap  balipeedam  sarvaangga  thaganabaliga'laiyum,  poajanabaliga'laiyum,  samaathaana  baliga'lin  ni'naththaiyum  ko'l'lamaattaamal  si’rithaayirunthapadiyinaal,  raajaa  karththarudaiya  aalayaththi’rkumun  irukki’ra  piraagaaraththin  nadumaiyaththaip  parisuththappaduththi,  an’raiyathinam  anggea  sarvaangga  thaganabaliga'laiyum,  poajanabaliga'laiyum,  samaathaana  baliga'lin  ni'naththaiyum  seluththinaan.  (1iraajaakka’l  8:64)

அக்காலத்தில்தானே  சாலொமோனும்,  ஆமாத்தின்  எல்லைதொடங்கி  எகிப்தின்  நதிமட்டும்  இருந்துவந்து,  அவனோடே  இருந்த  பெரிய  கூட்டமாகிய  இஸ்ரவேல்  அனைத்தும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  ஏழுநாளும்,  அதற்குப்பின்பு  வேறே  ஏழுநாளும்,  ஆகப்  பதினாலு  நாள்வரைக்கும்  பண்டிகையை  ஆசரித்தார்கள்.  (1இராஜாக்கள்  8:65)

akkaalaththilthaanea  saalomoanum,  aamaaththin  ellaithodanggi  egipthin  nathimattum  irunthuvanthu,  avanoadea  iruntha  periya  koottamaagiya  israveal  anaiththum  nammudaiya  theavanaagiya  karththarudaiya  sannithiyil  eazhunaa'lum,  atha’rkuppinbu  vea’rea  eazhunaa'lum,  aagap  pathinaalu  naa'lvaraikkum  pa'ndigaiyai  aasariththaarga'l.  (1iraajaakka’l  8:65)

எட்டாம்நாளிலே  ஜனங்களுக்கு  விடைகொடுத்து  அனுப்பினான்;  அவர்கள்  ராஜாவை  வாழ்த்தி,  கர்த்தர்  தமது  தாசனாகிய  தாவீதுக்கும்  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கும்  செய்த  எல்லா  நன்மைக்காகவும்  சந்தோஷப்பட்டு  மனமகிழ்ச்சியோடே  தங்கள்  கூடாரங்களுக்குப்  போய்விட்டார்கள்.  (1இராஜாக்கள்  8:66)

ettaamnaa'lilea  janangga'lukku  vidaikoduththu  anuppinaan;  avarga'l  raajaavai  vaazhththi,  karththar  thamathu  thaasanaagiya  thaaveethukkum  thamathu  janamaagiya  isravealukkum  seytha  ellaa  nanmaikkaagavum  santhoashappattu  manamagizhchchiyoadea  thangga'l  koodaarangga'lukkup  poayvittaarga'l.  (1iraajaakka’l  8:66)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!