Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 6 | 1 இராஜாக்கள் 6 | 1 Kings 6

இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்பட்ட  நானூற்று  எண்பதாம்  வருஷத்திலும்,  சாலொமோன்  இஸ்ரவேலின்மேல்  ராஜாவான  நாலாம்  வருஷம்  சீப்மாதமாகிய  இரண்டாம்  மாதத்திலும்,  அவன்  கர்த்தரின்  ஆலயத்தைக்  கட்டத்தொடங்கினான்.  (1இராஜாக்கள்  6:1)

israveal  puththirar  egipthu  theasaththilirunthu  pu’rappatta  naanoot’ru  e'nbathaam  varushaththilum,  saalomoan  isravealinmeal  raajaavaana  naalaam  varusham  seebmaathamaagiya  ira'ndaam  maathaththilum,  avan  karththarin  aalayaththaik  kattaththodangginaan.  (1iraajaakka’l  6:1)

சாலொமோன்  ராஜா  கர்த்தருக்குக்  கட்டின  ஆலயம்  அறுபது  முழ  நீளமும்,  இருபது  முழ  அகலமும்,  முப்பது  முழ  உயரமுமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:2)

saalomoan  raajaa  karththarukkuk  kattina  aalayam  a’rubathu  muzha  nee'lamum,  irubathu  muzha  agalamum,  muppathu  muzha  uyaramumaayirunthathu.  (1iraajaakka’l  6:2)

ஆலயமாகிய  அந்த  மாளிகையின்  முகப்பிலே  அவன்  கட்டின  மண்டபம்  ஆலயத்தின்  அகலத்திற்குச்  சரியாய்  இருபது  முழ  நீளமும்,  ஆலயத்துக்கு  முன்னே  பத்துமுழ  அகலமுமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:3)

aalayamaagiya  antha  maa'ligaiyin  mugappilea  avan  kattina  ma'ndabam  aalayaththin  agalaththi’rkuch  sariyaay  irubathu  muzha  nee'lamum,  aalayaththukku  munnea  paththumuzha  agalamumaayirunthathu.  (1iraajaakka’l  6:3)

பார்வைக்குக்  குறுகிப்போகிற  ஒடுக்கமான  ஜன்னல்களை  ஆலயத்திற்குச்  செய்வித்தான்.  (1இராஜாக்கள்  6:4)

paarvaikkuk  ku’rugippoagi’ra  odukkamaana  jannalga'lai  aalayaththi’rkuch  seyviththaan.  (1iraajaakka’l  6:4)

அவன்  தேவாலயத்தின்  சுவரும்  சந்நிதி  ஸ்தானச்சுவருமாகிய  ஆலயத்தின்  சுவர்களுக்கு  அடுத்ததாய்ச்  சுற்றுக்கட்டுகளைக்  கட்டி,  அவைகளில்  அறைகளைச்  சுற்றிலும்  உண்டாக்கினான்.  (1இராஜாக்கள்  6:5)

avan  theavaalayaththin  suvarum  sannithi  sthaanachsuvarumaagiya  aalayaththin  suvarga'lukku  aduththathaaych  sut’rukkattuga'laik  katti,  avaiga'lil  a’raiga'laich  sut’rilum  u'ndaakkinaan.  (1iraajaakka’l  6:5)

கீழே  இருக்கிற  சுற்றுக்கட்டு  ஐந்து  முழ  அகலமும்,  நடுவே  இருக்கிறது  ஆறு  முழ  அகலமும்,  மூன்றாவதாயிருக்கிறது  ஏழுமுழ  அகலமுமாயிருந்தது;  அவைகள்  ஆலயத்தினுடைய  சுவர்களிலே  தாங்காதபடிக்கு  ஆலயத்தைச்  சுற்றிலும்  புறம்பே  ஒட்டுச்சுவர்களைக்  கட்டுவித்தான்.  (1இராஜாக்கள்  6:6)

keezhea  irukki’ra  sut’rukkattu  ainthu  muzha  agalamum,  naduvea  irukki’rathu  aa’ru  muzha  agalamum,  moon’raavathaayirukki’rathu  eazhumuzha  agalamumaayirunthathu;  avaiga'l  aalayaththinudaiya  suvarga'lilea  thaanggaathapadikku  aalayaththaich  sut’rilum  pu’rambea  ottuchsuvarga'laik  kattuviththaan.  (1iraajaakka’l  6:6)

ஆலயம்  கட்டப்படுகையில்,  அது  பணிதீர்ந்து  கொண்டுவரப்பட்ட  கற்களாலே  கட்டப்பட்டது;  ஆகையால்  அது  கட்டப்படுகிறபோது,  சுத்திகள்  வாச்சிகள்  முதலான  எந்த  இருப்பு  ஆயுதங்களின்  சத்தமும்  அதிலே  கேட்கப்படவில்லை.  (1இராஜாக்கள்  6:7)

aalayam  kattappadugaiyil,  athu  pa'nitheernthu  ko'nduvarappatta  ka’rka'laalea  kattappattathu;  aagaiyaal  athu  kattappadugi’rapoathu,  suththiga'l  vaachchiga'l  muthalaana  entha  iruppu  aayuthangga'lin  saththamum  athilea  keadkappadavillai.  (1iraajaakka’l  6:7)

நடு  அறைகளுக்குப்  போகிற  வாசற்படி  ஆலயத்தின்  வலதுபுறத்தில்  இருந்தது;  சுழற்படிகளால்  நடு  அறைகளுக்கும்,  நடு  அறைகளிலிருந்து  மூன்றாவது  அறைகளுக்கும்  ஏறுவார்கள்.  (1இராஜாக்கள்  6:8)

nadu  a’raiga'lukkup  poagi’ra  vaasa’rpadi  aalayaththin  valathupu’raththil  irunthathu;  suzha’rpadiga'laal  nadu  a’raiga'lukkum,  nadu  a’raiga'lilirunthu  moon’raavathu  a’raiga'lukkum  ea’ruvaarga'l.  (1iraajaakka’l  6:8)

இவ்விதமாய்  அவன்  ஆலயத்தைக்  கட்டி,  கேதுருமர  உத்திரங்களாலும்  பலகைகளாலும்  ஆலயத்தை  மச்சுப்பாவி  முடித்தான்.  (1இராஜாக்கள்  6:9)

ivvithamaay  avan  aalayaththaik  katti,  keathurumara  uththirangga'laalum  palagaiga'laalum  aalayaththai  machchuppaavi  mudiththaan.  (1iraajaakka’l  6:9)

அவன்  ஐந்துமுழ  உயரமான  சுற்றுக்கட்டுகளை  ஆலயத்தின்மேலெங்கும்  கட்டுவித்தான்;  அவைகள்  கேதுருமரங்களால்  ஆலயத்தோடே  இணைக்கப்பட்டிருந்தது.  (1இராஜாக்கள்  6:10)

avan  ainthumuzha  uyaramaana  sut’rukkattuga'lai  aalayaththinmealenggum  kattuviththaan;  avaiga'l  keathurumarangga'laal  aalayaththoadea  i'naikkappattirunthathu.  (1iraajaakka’l  6:10)

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  சாலொமோனுக்கு  உண்டாயிற்று;  அவர்:  (1இராஜாக்கள்  6:11)

appozhuthu  karththarudaiya  vaarththai  saalomoanukku  u'ndaayit’ru;  avar:  (1iraajaakka’l  6:11)

நீ  என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  நீதிநியாயங்களை  நிறைவேற்றி,  என்  கற்பனைகளின்படியெல்லாம்  நடந்துகொள்ளும்படிக்கு,  அவைகளைக்  கைக்கொண்டால்,  நீ  கட்டுகிற  இந்த  ஆலயத்தைக்குறித்து  நான்  உன்  தகப்பனாகிய  தாவீதோடே  சொன்ன  என்  வார்த்தையை  உன்னிடத்தில்  நிறைவேற்றி,  (1இராஜாக்கள்  6:12)

nee  en  katta'laiga'linpadi  nadanthu,  en  neethiniyaayangga'lai  ni’raiveat’ri,  en  ka’rpanaiga'linpadiyellaam  nadanthuko'l'lumpadikku,  avaiga'laik  kaikko'ndaal,  nee  kattugi’ra  intha  aalayaththaikku’riththu  naan  un  thagappanaagiya  thaaveethoadea  sonna  en  vaarththaiyai  unnidaththil  ni’raiveat’ri,  (1iraajaakka’l  6:12)

இஸ்ரவேல்  புத்திரர்  நடுவிலே  வாசம்பண்ணி,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலைக்  கைவிடாதிருப்பேன்  என்றார்.  (1இராஜாக்கள்  6:13)

israveal  puththirar  naduvilea  vaasampa'n'ni,  en  janamaagiya  isravealaik  kaividaathiruppean  en’raar.  (1iraajaakka’l  6:13)

அப்படியே  சாலொமோன்  ஆலயத்தைக்  கட்டி  முடித்தான்.  (1இராஜாக்கள்  6:14)

appadiyea  saalomoan  aalayaththaik  katti  mudiththaan.  (1iraajaakka’l  6:14)

ஆலயத்துச்  சுவர்களின்  உட்புறத்தை,  தளம்தொடங்கிச்  சுவர்களின்  மேல்மச்சுமட்டும்,  கேதுருப்பலகைகளால்  மூடி,  இப்படி  உட்புறத்தை  மரவேலையாக்கி,  ஆலயத்தின்  தளத்தை  தேவதாரி  விருட்சங்களின்  பலகைகளால்  தளவரிசைப்படுத்தினான்.  (1இராஜாக்கள்  6:15)

aalayaththuch  suvarga'lin  udpu’raththai,  tha'lamthodanggich  suvarga'lin  mealmachchumattum,  keathuruppalagaiga'laal  moodi,  ippadi  udpu’raththai  maravealaiyaakki,  aalayaththin  tha'laththai  theavathaari  virudchangga'lin  palagaiga'laal  tha'lavarisaippaduththinaan.  (1iraajaakka’l  6:15)

தளவரிசை  தொடங்கிச்  சுவர்களின்  உயரமட்டும்  ஆலயத்தின்  பக்கங்களைத்  தொடர்ந்திருக்கிற  இருபதுமுழ  நீளமான  மறைப்பையும்  கேதுருப்பலகைகளால்  உண்டாக்கி,  உட்புறத்தை  மகா  பரிசுத்தமான  சந்நிதி  ஸ்தானமாகக்  கட்டினான்.  (1இராஜாக்கள்  6:16)

tha'lavarisai  thodanggich  suvarga'lin  uyaramattum  aalayaththin  pakkangga'laith  thodarnthirukki’ra  irubathumuzha  nee'lamaana  ma’raippaiyum  keathuruppalagaiga'laal  u'ndaakki,  udpu’raththai  mahaa  parisuththamaana  sannithi  sthaanamaagak  kattinaan.  (1iraajaakka’l  6:16)

அதின்  முன்னிருக்கிற  தேவாலயமாகிய  மாளிகை  நாற்பதுமுழ  நீளமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:17)

athin  munnirukki’ra  theavaalayamaagiya  maa'ligai  naa’rpathumuzha  nee'lamaayirunthathu.  (1iraajaakka’l  6:17)

ஆலயத்திற்குள்  இருக்கிற  கேதுருமரங்களில்  மொக்குகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரவேலை  செய்திருந்தது;  பார்வைக்கு  ஒரு  கல்லாகிலும்  காணப்படாமல்  எல்லாம்  கேதுருமரமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:18)

aalayaththi’rku'l  irukki’ra  keathurumarangga'lil  mokkuga'lum  malarntha  pookka'lumaana  siththiravealai  seythirunthathu;  paarvaikku  oru  kallaagilum  kaa'nappadaamal  ellaam  keathurumaramaayirunthathu.  (1iraajaakka’l  6:18)

கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியை  வைக்கிறதற்கு  ஆலயத்துக்குள்ளே  சந்நிதி  ஸ்தானத்தை  ஆயத்தப்படுத்தினான்.  (1இராஜாக்கள்  6:19)

karththarudaiya  udanpadikkaip  pettiyai  vaikki’ratha’rku  aalayaththukku'l'lea  sannithi  sthaanaththai  aayaththappaduththinaan.  (1iraajaakka’l  6:19)

சந்நிதி  ஸ்தானம்  முன்புறமட்டும்  இருபதுமுழ  நீளமும்,  இருபதுமுழ  அகலமும்,  இருபதுமுழ  உயரமுமாயிருந்தது;  அதைப்  பசும்பொன்  தகட்டால்  மூடினான்;  கேதுருமரப்  பலிபீடத்தையும்  அப்படியே  மூடினான்.  (1இராஜாக்கள்  6:20)

sannithi  sthaanam  munpu’ramattum  irubathumuzha  nee'lamum,  irubathumuzha  agalamum,  irubathumuzha  uyaramumaayirunthathu;  athaip  pasumpon  thagattaal  moodinaan;  keathurumarap  balipeedaththaiyum  appadiyea  moodinaan.  (1iraajaakka’l  6:20)

ஆலயத்தின்  உட்புறத்தைச்  சாலொமோன்  பசும்பொன்தகட்டால்  மூடி,  சந்நிதி  ஸ்தானத்தின்  மறைப்புக்கும்  பொன்  சங்கிலிகளைக்  குறுக்கே  போட்டு,  அதைப்  பொன்  தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  6:21)

aalayaththin  udpu’raththaich  saalomoan  pasumponthagattaal  moodi,  sannithi  sthaanaththin  ma’raippukkum  pon  sanggiliga'laik  ku’rukkea  poattu,  athaip  pon  thagattaal  moodinaan.  (1iraajaakka’l  6:21)

இப்படி  ஆலயம்  முழுவதும்  கட்டித்தீருமட்டும்,  அவன்  ஆலயம்  முழுவதையும்  பொன்தகட்டால்  மூடி,  சந்நிதி  ஸ்தானத்திற்கு  முன்பாக  இருக்கிற  பலிபீடத்தை  முழுவதும்  பொன்தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  6:22)

ippadi  aalayam  muzhuvathum  kattiththeerumattum,  avan  aalayam  muzhuvathaiyum  ponthagattaal  moodi,  sannithi  sthaanaththi’rku  munbaaga  irukki’ra  balipeedaththai  muzhuvathum  ponthagattaal  moodinaan.  (1iraajaakka’l  6:22)

சந்நிதி  ஸ்தானத்தில்  ஒலிவமரங்களால்  இரண்டு  கேருபீன்களைச்  செய்து  வைத்தான்;  ஒவ்வொன்றும்  பத்துமுழ  உயரமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:23)

sannithi  sthaanaththil  olivamarangga'laal  ira'ndu  kearubeenga'laich  seythu  vaiththaan;  ovvon’rum  paththumuzha  uyaramaayirunthathu.  (1iraajaakka’l  6:23)

கேருபீனுக்கு  இருக்கிற  ஒரு  செட்டை  ஐந்து  முழமும்  கேருபீனின்  மற்றச்  செட்டை  ஐந்து  முழமுமாய்,  இப்படி  ஒரு  செட்டையின்  கடைசிமுனைதொடங்கி  மற்றச்  செட்டையின்  கடைசிமுனைமட்டும்  பத்து  முழமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:24)

kearubeenukku  irukki’ra  oru  settai  ainthu  muzhamum  kearubeenin  mat’rach  settai  ainthu  muzhamumaay,  ippadi  oru  settaiyin  kadaisimunaithodanggi  mat’rach  settaiyin  kadaisimunaimattum  paththu  muzhamaayirunthathu.  (1iraajaakka’l  6:24)

மற்றக்  கேருபீனும்  பத்து  முழமாயிருந்தது;  இரண்டு  கேருபீன்களும்  ஒரே  அளவும்  ஒரே  திட்டமுமாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:25)

mat’rak  kearubeenum  paththu  muzhamaayirunthathu;  ira'ndu  kearubeenga'lum  orea  a'lavum  orea  thittamumaayirunthathu.  (1iraajaakka’l  6:25)

ஒரு  கேருபீன்  பத்துமுழ  உயரமாயிருந்தது;  மற்றக்  கேருபீனும்  அப்படியே  இருந்தது.  (1இராஜாக்கள்  6:26)

oru  kearubeen  paththumuzha  uyaramaayirunthathu;  mat’rak  kearubeenum  appadiyea  irunthathu.  (1iraajaakka’l  6:26)

அந்தக்  கேருபீன்களை  உள்  ஆலயத்திலே  வைத்தான்;  கேருபீன்களின்  செட்டைகள்  விரித்திருந்ததினால்,  ஒரு  கேருபீனின்  செட்டை  ஒருபக்கத்ததுச்  சுவரிலும்,  மற்றக்  கேருபீனின்  செட்டை  மறுபக்கத்துச்  சுவரிலும்  தொடத்தக்கதாயிருந்தது;  ஆலயத்தின்  நடுமையத்தில்,  அவைகளின்  செட்டைகள்  ஒன்றோடொன்று  தொடத்தக்கதாயிருந்தது.  (1இராஜாக்கள்  6:27)

anthak  kearubeenga'lai  u'l  aalayaththilea  vaiththaan;  kearubeenga'lin  settaiga'l  viriththirunthathinaal,  oru  kearubeenin  settai  orupakkaththathuch  suvarilum,  mat’rak  kearubeenin  settai  ma’rupakkaththuch  suvarilum  thodaththakkathaayirunthathu;  aalayaththin  nadumaiyaththil,  avaiga'lin  settaiga'l  on’roadon’ru  thodaththakkathaayirunthathu.  (1iraajaakka’l  6:27)

அந்தக்  கேருபீன்களைப்  பொன்தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  6:28)

anthak  kearubeenga'laip  ponthagattaal  moodinaan.  (1iraajaakka’l  6:28)

ஆலயத்தின்  சுவர்களையெல்லாம்  அவன்  சுற்றிலும்  உள்ளும்  புறம்புமாகக்  கேருபீன்களும்  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரங்களும்  கொத்து  வேலைகளுமாக்கினான்.  (1இராஜாக்கள்  6:29)

aalayaththin  suvarga'laiyellaam  avan  sut’rilum  u'l'lum  pu’rambumaagak  kearubeenga'lum  peareenthuga'lum  malarntha  pookka'lumaana  siththirangga'lum  koththu  vealaiga'lumaakkinaan.  (1iraajaakka’l  6:29)

உள்ளும்  புறம்புமாயிருக்கிற  ஆலயத்துத்  தளவரிசையையும்  பொன்தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  6:30)

u'l'lum  pu’rambumaayirukki’ra  aalayaththuth  tha'lavarisaiyaiyum  ponthagattaal  moodinaan.  (1iraajaakka’l  6:30)

சந்நிதி  ஸ்தானத்தின்  வாசலுக்கு  ஒலிவமரங்களால்  இரட்டைக்  கதவுகளைச்  செய்தான்;  மேல்சட்டமும்  நிலைகளும்  மறைப்பின்  அளவில்  ஐந்தில்  ஒரு  பங்காயிருந்தது.  (1இராஜாக்கள்  6:31)

sannithi  sthaanaththin  vaasalukku  olivamarangga'laal  irattaik  kathavuga'laich  seythaan;  mealsattamum  nilaiga'lum  ma’raippin  a'lavil  ainthil  oru  panggaayirunthathu.  (1iraajaakka’l  6:31)

ஒலிவமரமான  அந்த  இரட்டைக்  கதவுகளில்  அவன்  கேருபீன்களும்  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரங்களைச்  செய்து,  அந்தக்  கேருபீன்களிலும்  பேரீந்துகளிலும்  பொன்பதியத்தக்கதாய்ப்  பொன்தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  6:32)

olivamaramaana  antha  irattaik  kathavuga'lil  avan  kearubeenga'lum  peareenthuga'lum  malarntha  pookka'lumaana  siththirangga'laich  seythu,  anthak  kearubeenga'lilum  peareenthuga'lilum  ponpathiyaththakkathaayp  ponthagattaal  moodinaan.  (1iraajaakka’l  6:32)

இப்படி  தேவாலயத்தின்  வாசலுக்கும்  ஒலிவமர  நிலைகளைச்  செய்தான்;  அது  சுவர்  அளவில்  நாலத்தொரு  பங்காயிருந்தது.  (1இராஜாக்கள்  6:33)

ippadi  theavaalayaththin  vaasalukkum  olivamara  nilaiga'laich  seythaan;  athu  suvar  a'lavil  naalaththoru  panggaayirunthathu.  (1iraajaakka’l  6:33)

அதின்  இரண்டு  கதவுகளும்  தேவதாரிப்  பலகைகளால்  செய்யப்பட்டிருந்தது;  ஒரு  கதவுக்கு  இரண்டு  மடிப்புப்  பலகைகளும்,  மற்றக்  கதவுக்கு  இரண்டு  மடிப்புப்  பலகைகளும்  இருந்தது.  (1இராஜாக்கள்  6:34)

athin  ira'ndu  kathavuga'lum  theavathaarip  palagaiga'laal  seyyappattirunthathu;  oru  kathavukku  ira'ndu  madippup  palagaiga'lum,  mat’rak  kathavukku  ira'ndu  madippup  palagaiga'lum  irunthathu.  (1iraajaakka’l  6:34)

அவைகளில்  கேருபீன்களும்  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திர  வேலையைச்  செய்து,  சித்திரங்களுக்குச்  சரியாகச்  செய்யப்பட்ட  பொன்தகட்டால்  அவைகளை  மூடினான்.  (1இராஜாக்கள்  6:35)

avaiga'lil  kearubeenga'lum  peareenthuga'lum  malarntha  pookka'lumaana  siththira  vealaiyaich  seythu,  siththirangga'lukkuch  sariyaagach  seyyappatta  ponthagattaal  avaiga'lai  moodinaan.  (1iraajaakka’l  6:35)

அவன்  உட்பிராகாரத்தை  மூன்று  வரிசை  வெட்டின  கற்களாலும்,  ஒரு  வரிசை  கேதுருப்  பலகைகளாலும்  கட்டினான்.  (1இராஜாக்கள்  6:36)

avan  udpiraagaaraththai  moon’ru  varisai  vettina  ka’rka'laalum,  oru  varisai  keathurup  palagaiga'laalum  kattinaan.  (1iraajaakka’l  6:36)

நாலாம்  வருஷம்  சீப்மாதத்திலே  கர்த்தருடைய  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட்டு,  (1இராஜாக்கள்  6:37)

naalaam  varusham  seebmaathaththilea  karththarudaiya  aalayaththukku  asthibaaram  poattu,  (1iraajaakka’l  6:37)

பதினோராம்  வருஷம்  பூல்  என்னும்  எட்டாம்  மாதத்திலே,  அந்த  ஆலயமுழுதும்  சகல  சட்டதிட்டத்தின்படியே  ஒரு  பங்கும்  குறையாமல்  கட்டித்  தீர்ந்தது;  அவன்  அதைக்  கட்டிமுடிக்க  ஏழுவருஷம்  சென்றது.  (1இராஜாக்கள்  6:38)

pathinoaraam  varusham  bool  ennum  ettaam  maathaththilea,  antha  aalayamuzhuthum  sagala  sattathittaththinpadiyea  oru  panggum  ku’raiyaamal  kattith  theernthathu;  avan  athaik  kattimudikka  eazhuvarusham  sen’rathu.  (1iraajaakka’l  6:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!