Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 5 | 1 இராஜாக்கள் 5 | 1 Kings 5

சாலொமோனை  அவனுடைய  பிதாவின்  ஸ்தானத்தில்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்  என்று  தீருவின்  ராஜாவாகிய  ஈராம்  கேள்விப்பட்டு,  தன்  ஊழியக்காரரை  அவனிடத்தில்  அனுப்பினான்;  ஈராம்  தாவீதுக்குச்  சகலநாளும்  சிநேகிதனாயிருந்தான்.  (1இராஜாக்கள்  5:1)

saalomoanai  avanudaiya  pithaavin  sthaanaththil  raajaavaaga  abisheagampa'n'ninaarga'l  en’ru  theeruvin  raajaavaagiya  eeraam  kea'lvippattu,  than  oozhiyakkaararai  avanidaththil  anuppinaan;  eeraam  thaaveethukkuch  sagalanaa'lum  sineagithanaayirunthaan.  (1iraajaakka’l  5:1)

அப்பொழுது  சாலொமோன்  ஈராமினிடத்தில்  ஆட்களை  அனுப்பி:  (1இராஜாக்கள்  5:2)

appozhuthu  saalomoan  eeraaminidaththil  aadka'lai  anuppi:  (1iraajaakka’l  5:2)

என்  தகப்பனாகிய  தாவீதின்  சத்துருக்களைக்  கர்த்தர்  அவருடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்திவிடுமளவும்,  அவர்கள்  தம்மைச்  சுற்றிலும்  செய்கிற  யுத்தத்தினால்,  அவர்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்ட,  அவருக்குக்  கூடாதிருந்தது  என்று  நீர்  அறிந்திருக்கிறீர்.  (1இராஜாக்கள்  5:3)

en  thagappanaagiya  thaaveethin  saththurukka'laik  karththar  avarudaiya  paathangga'lukkuk  keezhppaduththividuma'lavum,  avarga'l  thammaich  sut’rilum  seygi’ra  yuththaththinaal,  avar  thammudaiya  theavanaagiya  karththarudaiya  naamaththi’rku  aalayaththaik  katta,  avarukkuk  koodaathirunthathu  en’ru  neer  a’rinthirukki’reer.  (1iraajaakka’l  5:3)

ஆனாலும்  இப்பொழுதோ  என்  தேவனாகிய  கர்த்தர்  எங்கும்  எனக்கு  இளைப்பாறுதலைத்  தந்தார்;  விரோதியும்  இல்லை,  இடையூறும்  இல்லை.  (1இராஜாக்கள்  5:4)

aanaalum  ippozhuthoa  en  theavanaagiya  karththar  enggum  enakku  i'laippaa’ruthalaith  thanthaar;  viroathiyum  illai,  idaiyoo’rum  illai.  (1iraajaakka’l  5:4)

ஆகையால்:  நான்  உன்  ஸ்தானத்தில்  உன்  சிங்காசனத்தின்மேல்  வைக்கும்  உன்  குமாரனே  என்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டுவான்  என்று  கர்த்தர்  என்  தகப்பனாகிய  தாவீதினிடத்தில்  சொன்னபடியே,  என்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்று  இருக்கிறேன்.  (1இராஜாக்கள்  5:5)

aagaiyaal:  naan  un  sthaanaththil  un  singgaasanaththinmeal  vaikkum  un  kumaaranea  en  naamaththi’rku  aalayaththaik  kattuvaan  en’ru  karththar  en  thagappanaagiya  thaaveethinidaththil  sonnapadiyea,  en  theavanaagiya  karththarin  naamaththi’rku  aalayaththaik  kattavea'ndum  en’ru  irukki’rean.  (1iraajaakka’l  5:5)

ஆதலால்  லீபனோனில்  எனக்காக  கேதுருமரங்களை  வெட்டக்  கட்டளையிடும்;  சீதோனியரைப்போல  மரவெட்டு  வேலை  அறிந்தவர்கள்  எங்களுக்குள்ளே  ஒருவருமில்லை  என்பது  உமக்குத்  தெரியும்;  அதற்காக  என்  வேலைக்காரர்  உம்முடைய  வேலைக்காரரோடே  இருப்பார்கள்;  நீர்  சொல்வதின்படியெல்லாம்  உம்முடைய  வேலைக்காரரின்  சம்பளத்தை  உமக்குக்  கொடுப்பேன்  என்று  சொல்லச்சொன்னான்.  (1இராஜாக்கள்  5:6)

aathalaal  leebanoanil  enakkaaga  keathurumarangga'lai  vettak  katta'laiyidum;  seethoaniyaraippoala  maravettu  vealai  a’rinthavarga'l  engga'lukku'l'lea  oruvarumillai  enbathu  umakkuth  theriyum;  atha’rkaaga  en  vealaikkaarar  ummudaiya  vealaikkaararoadea  iruppaarga'l;  neer  solvathinpadiyellaam  ummudaiya  vealaikkaararin  samba'laththai  umakkuk  koduppean  en’ru  sollachsonnaan.  (1iraajaakka’l  5:6)

ஈராம்  சாலொமோனின்  வார்த்தைகளைக்  கேட்டபோது,  மிகவும்  சந்தோஷப்பட்டு:  அந்த  ஏராளமான  ஜனங்களை  ஆளும்படி,  தாவீதுக்கு  ஒரு  ஞானமுள்ள  குமாரனைக்  கொடுத்த  கர்த்தர்  இன்று  ஸ்தோத்திரிக்கப்படுவாராக  என்று  சொல்லி;  (1இராஜாக்கள்  5:7)

eeraam  saalomoanin  vaarththaiga'laik  keattapoathu,  migavum  santhoashappattu:  antha  earaa'lamaana  janangga'lai  aa'lumpadi,  thaaveethukku  oru  gnaanamu'l'la  kumaaranaik  koduththa  karththar  in’ru  sthoaththirikkappaduvaaraaga  en’ru  solli;  (1iraajaakka’l  5:7)

ஈராம்  சாலொமோனிடத்தில்  மனுஷரை  அனுப்பி:  நீர்  எனக்குச்  சொல்லியனுப்பின  காரியத்தை  நான்  கேட்டேன்;  கேதுருமரங்களுக்காகவும்,  தேவதாரி  விருட்சங்களுக்காகவும்,  உம்முடைய  விருப்பத்தின்படியெல்லாம்  நான்  செய்வேன்.  (1இராஜாக்கள்  5:8)

eeraam  saalomoanidaththil  manusharai  anuppi:  neer  enakkuch  solliyanuppina  kaariyaththai  naan  keattean;  keathurumarangga'lukkaagavum,  theavathaari  virudchangga'lukkaagavum,  ummudaiya  viruppaththinpadiyellaam  naan  seyvean.  (1iraajaakka’l  5:8)

என்  வேலைக்காரர்  லீபனோனில்  இருந்து  அவைகளை  இறக்கிக்  கடலிலே  கொண்டுவருவார்கள்;  அங்கே  நான்  அவைகளைத்  தெப்பங்களாகக்  கட்டி,  நீர்  நியமிக்கும்  இடத்துக்குக்  கடல்வழியாய்  அனுப்பி,  அவைகளை  அவிழ்த்து  ஒப்பிப்பேன்;  அங்கே  நீர்  அவைகளை  ஒப்புக்கொண்டு  என்  ஜனங்களுக்கு  ஆகாரங்கொடுத்து,  என்  விருப்பத்தின்படி  செய்யவேண்டும்  என்று  சொல்லச்சொன்னான்.  (1இராஜாக்கள்  5:9)

en  vealaikkaarar  leebanoanil  irunthu  avaiga'lai  i’rakkik  kadalilea  ko'nduvaruvaarga'l;  anggea  naan  avaiga'laith  theppangga'laagak  katti,  neer  niyamikkum  idaththukkuk  kadalvazhiyaay  anuppi,  avaiga'lai  avizhththu  oppippean;  anggea  neer  avaiga'lai  oppukko'ndu  en  janangga'lukku  aagaarangkoduththu,  en  viruppaththinpadi  seyyavea'ndum  en’ru  sollachsonnaan.  (1iraajaakka’l  5:9)

அப்படியே  ஈராம்  சாலொமோனுக்கு  வேண்டியமட்டும்  கேதுருமரங்களையும்  தேவதாரி  விருட்சங்களையும்  கொடுத்துக்கொண்டுவந்தான்.  (1இராஜாக்கள்  5:10)

appadiyea  eeraam  saalomoanukku  vea'ndiyamattum  keathurumarangga'laiyum  theavathaari  virudchangga'laiyum  koduththukko'nduvanthaan.  (1iraajaakka’l  5:10)

சாலொமோன்  ஈராமின்  அரமனைக்குப்  போஜனத்திற்காக  இருபதினாயிரக்கலம்  கோதுமையையும்,  இடித்துப்பிழிந்த  ஒலிவமரங்களின்  இருபதுகல  எண்ணெயையும்  கொடுத்தான்;  இப்படிச்  சாலொமோன்  ஈராமுக்கு  வருஷாந்தரம்  கொடுத்துவந்தான்.  (1இராஜாக்கள்  5:11)

saalomoan  eeraamin  aramanaikkup  poajanaththi’rkaaga  irubathinaayirakkalam  koathumaiyaiyum,  idiththuppizhintha  olivamarangga'lin  irubathukala  e'n'neyaiyum  koduththaan;  ippadich  saalomoan  eeraamukku  varushaantharam  koduththuvanthaan.  (1iraajaakka’l  5:11)

கர்த்தர்  சாலொமோனுக்குச்  சொல்லியிருந்தபடியே  அவனுக்கு  ஞானத்தைத்  தந்தருளினார்;  ஈராமுக்கும்  சாலொமோனுக்கும்  சமாதானம்  உண்டாயிருந்து,  இருவரும்  உடன்படிக்கை  பண்ணிக்கொண்டார்கள்.  (1இராஜாக்கள்  5:12)

karththar  saalomoanukkuch  solliyirunthapadiyea  avanukku  gnaanaththaith  thantharu'linaar;  eeraamukkum  saalomoanukkum  samaathaanam  u'ndaayirunthu,  iruvarum  udanpadikkai  pa'n'nikko'ndaarga'l.  (1iraajaakka’l  5:12)

ராஜாவாகிய  சாலொமோன்  இஸ்ரவேலரெல்லாரிலும்  ஊழியத்துக்கு  முப்பதினாயிரம்  அமஞ்சி  ஆட்களைப்  பிடித்தான்.  (1இராஜாக்கள்  5:13)

raajaavaagiya  saalomoan  isravealarellaarilum  oozhiyaththukku  muppathinaayiram  amagnchi  aadka'laip  pidiththaan.  (1iraajaakka’l  5:13)

அவர்களில்  ஒவ்வொரு  மாதத்திற்குப்  பதினாயிரம்பேரை  மாற்றி  மாற்றி,  லீபனோனுக்கு  அனுப்பினான்;  அவர்கள்  ஒரு  மாதம்  லீபனோனிலும்,  இரண்டு  மாதம்  தங்கள்  வீடுகளிலும்  இருப்பார்கள்;  அதோனீராம்  அந்த  அமஞ்சி  ஆட்களின்மேல்  விசாரிப்புக்காரனாயிருந்தான்.  (1இராஜாக்கள்  5:14)

avarga'lil  ovvoru  maathaththi’rkup  pathinaayirampearai  maat’ri  maat’ri,  leebanoanukku  anuppinaan;  avarga'l  oru  maatham  leebanoanilum,  ira'ndu  maatham  thangga'l  veeduga'lilum  iruppaarga'l;  athoaneeraam  antha  amagnchi  aadka'linmeal  visaarippukkaaranaayirunthaan.  (1iraajaakka’l  5:14)

சாலொமோனிடத்தில்  சுமை  சுமக்கிறவர்கள்  எழுபதினாயிரம்பேரும்,  மலைகளில்  மரம்  வெட்டுகிறவர்கள்  எண்பதினாயிரம்பேரும்,  (1இராஜாக்கள்  5:15)

saalomoanidaththil  sumai  sumakki’ravarga'l  ezhubathinaayirampearum,  malaiga'lil  maram  vettugi’ravarga'l  e'nbathinaayirampearum,  (1iraajaakka’l  5:15)

இவர்களைத்தவிர  வேலையை  விசாரித்து  வேலையாட்களைக்  கண்காணிக்கிறதற்கு  தலைமையான  விசாரிப்புக்காரர்  மூவாயிரத்து  முந்நூறுபேரும்  இருந்தார்கள்.  (1இராஜாக்கள்  5:16)

ivarga'laiththavira  vealaiyai  visaariththu  vealaiyaadka'laik  ka'nkaa'nikki’ratha’rku  thalaimaiyaana  visaarippukkaarar  moovaayiraththu  munnoo’rupearum  irunthaarga'l.  (1iraajaakka’l  5:16)

வெட்டின  கல்லால்  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட,  பெரிதும்  விலையேறப்பெற்றதுமான  கற்களைக்  கொண்டுவர  ராஜா  கட்டளையிட்டான்.  (1இராஜாக்கள்  5:17)

vettina  kallaal  aalayaththukku  asthibaaram  poada,  perithum  vilaiyea’rappet’rathumaana  ka’rka'laik  ko'nduvara  raajaa  katta'laiyittaan.  (1iraajaakka’l  5:17)

ஆலயத்தைக்  கட்ட,  சாலொமோனின்  சிற்பாசாரிகளும்,  ஈராமின்  சிற்பாசாரிகளும்,  கிபலி  ஊராரும்,  அந்த  மரங்களையும்  கற்களையும்  வெட்டி  ஆயத்தப்படுத்தினார்கள்.  (1இராஜாக்கள்  5:18)

aalayaththaik  katta,  saalomoanin  si’rpaasaariga'lum,  eeraamin  si’rpaasaariga'lum,  kibali  ooraarum,  antha  marangga'laiyum  ka’rka'laiyum  vetti  aayaththappaduththinaarga'l.  (1iraajaakka’l  5:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!