Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 4 | 1 இராஜாக்கள் 4 | 1 Kings 4

ராஜாவாகிய  சாலொமோன்  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்  ராஜாவாயிருந்தான்.  (1இராஜாக்கள்  4:1)

raajaavaagiya  saalomoan  samastha  isravealinmealum  raajaavaayirunthaan.  (1iraajaakka’l  4:1)

அவனுக்கு  இருந்த  பிரபுக்கள்:  சாதோக்கின்  குமாரனாகிய  அசரியா  பிரதான  மந்திரியாயிருந்தான்.  (1இராஜாக்கள்  4:2)

avanukku  iruntha  pirabukka'l:  saathoakkin  kumaaranaagiya  asariyaa  pirathaana  manthiriyaayirunthaan.  (1iraajaakka’l  4:2)

சீசாவின்  குமாரராகிய  ஏலிகோரேப்பும்  அகியாவும்  சம்பிரதிகளாயிருந்தார்கள்;  அகிலூதின்  குமாரன்  யோசபாத்  மந்திரியாயிருந்தான்.  (1இராஜாக்கள்  4:3)

seesaavin  kumaararaagiya  ealigoareappum  agiyaavum  sambirathiga'laayirunthaarga'l;  agiloothin  kumaaran  yoasapaath  manthiriyaayirunthaan.  (1iraajaakka’l  4:3)

யோய்தாவின்  குமாரன்  பெனாயா  படைத்தலைவனும்,  சாதோக்கும்  அபியத்தாரும்  ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:4)

yoaythaavin  kumaaran  benaayaa  padaiththalaivanum,  saathoakkum  abiyaththaarum  aasaariyarga'lumaayirunthaarga'l.  (1iraajaakka’l  4:4)

நாத்தானின்  குமாரன்  அசரியா  மணியக்காரரின்  தலைவனாயிருந்தான்;  நாத்தானின்  குமாரன்  சாபூத்  ராஜாவின்  பிரதானியும்  இஷ்டனுமாயிருந்தான்.  (1இராஜாக்கள்  4:5)

naaththaanin  kumaaran  asariyaa  ma'niyakkaararin  thalaivanaayirunthaan;  naaththaanin  kumaaran  saabooth  raajaavin  pirathaaniyum  ishdanumaayirunthaan.  (1iraajaakka’l  4:5)

அகீஷார்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  அப்தாவின்  குமாரன்  அதோனீராம்  பகுதி  விசாரிப்புக்காரனுமாய்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:6)

ageeshaar  aramanai  visaarippukkaaranum,  abthaavin  kumaaran  athoaneeraam  paguthi  visaarippukkaaranumaay  irunthaan.  (1iraajaakka’l  4:6)

ராஜாவுக்கும்  அவன்  அரமனைக்கும்  வேண்டிய  உணவுப்பொருள்களைச்  சேகரிக்கிற  பன்னிரண்டு  மணியக்காரர்  சாலொமோனுக்கு  இஸ்ரவேல்  தேசமெங்கும்  வைக்கப்பட்டிருந்தார்கள்;  அவர்கள்  மாதத்துக்கு  ஒவ்வொருவராக  வருஷமுழுவதும்  பராமரித்துவந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:7)

raajaavukkum  avan  aramanaikkum  vea'ndiya  u'navupporu'lga'laich  seagarikki’ra  pannira'ndu  ma'niyakkaarar  saalomoanukku  israveal  theasamenggum  vaikkappattirunthaarga'l;  avarga'l  maathaththukku  ovvoruvaraaga  varushamuzhuvathum  paraamariththuvanthaarga'l.  (1iraajaakka’l  4:7)

அவர்கள்  நாமங்களாவன:  ஊரின்  குமாரன்,  இவன்  எப்பிராயீம்  மலைத்தேசத்தில்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:8)

avarga'l  naamangga'laavana:  oorin  kumaaran,  ivan  eppiraayeem  malaiththeasaththil  irunthaan.  (1iraajaakka’l  4:8)

தேக்கேரின்  குமாரன்,  இவன்  மாக்காத்சிலும்,  சால்பீமிலும்,  பெத்ஷிமேசிலும்,  ஏலோன்பெத்தானானிலும்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:9)

theakkearin  kumaaran,  ivan  maakkaathsilum,  saalbeemilum,  bethshimeasilum,  ealoanbeththaanaanilum  irunthaan.  (1iraajaakka’l  4:9)

ஏசேதின்  குமாரன்,  இவன்  அறுபோத்தில்  இருந்தான்;  சோகோவும்  எப்பேர்  சீமையனைத்தும்  இவன்  விசாரிப்பில்  இருந்தது.  (1இராஜாக்கள்  4:10)

easeathin  kumaaran,  ivan  a’ruboaththil  irunthaan;  soakoavum  eppear  seemaiyanaiththum  ivan  visaarippil  irunthathu.  (1iraajaakka’l  4:10)

அபினதாபின்  குமாரன்,  இவன்  தோரின்  நாட்டுப்புறமனைத்திற்கும்  விசாரிப்புக்காரனாயிருந்தான்;  சாலொமோனின்  குமாரத்தியாகிய  தாபாத்  இவனுக்கு  மனைவியாயிருந்தாள்.  (1இராஜாக்கள்  4:11)

abinathaabin  kumaaran,  ivan  thoarin  naattuppu’ramanaiththi’rkum  visaarippukkaaranaayirunthaan;  saalomoanin  kumaaraththiyaagiya  thaapaath  ivanukku  manaiviyaayirunthaa'l.  (1iraajaakka’l  4:11)

அகிலூதின்  குமாரனாகிய  பானா,  இவன்  விசாரிப்பில்,  தானாகும்,  மெகிதோவும்,  சர்த்தனாவுக்குப்  பக்கமாகவும்  யெஸ்ரயேலுக்குக்  கீழாகவும்  பெத்செயான்  தொடங்கி  ஆபேல்  மெகொல்லாமட்டும்  யக்மெயாமுக்கு  அப்புறத்துமட்டும்  இருக்கிற  பெத்செயான்  அனைத்தும்  இருந்தது.  (1இராஜாக்கள்  4:12)

agiloothin  kumaaranaagiya  baanaa,  ivan  visaarippil,  thaanaakum,  megithoavum,  sarththanaavukkup  pakkamaagavum  yesrayealukkuk  keezhaagavum  bethseyaan  thodanggi  aabeal  megollaamattum  yakmeyaamukku  appu’raththumattum  irukki’ra  bethseyaan  anaiththum  irunthathu.  (1iraajaakka’l  4:12)

கேபேரின்  குமாரன்,  இவன்  கீலேயாத்திலுள்ள  ராமோத்தில்  இருந்தான்;  கீலேயாத்திலுள்ள  மனாசேயின்  குமாரனாகிய  யாவீரின்  கிராமங்களும்  மதில்களும்  வெண்கலத்  தாழ்ப்பாள்களுமுள்ள  பாசான்தேசத்தினுடைய  அறுபது  பெரிய  பட்டணங்களுள்ள  அர்கோப்  சீமையும்  இவன்  விசாரிப்பில்  இருந்தது.  (1இராஜாக்கள்  4:13)

keabearin  kumaaran,  ivan  keeleayaaththilu'l'la  raamoaththil  irunthaan;  keeleayaaththilu'l'la  manaaseayin  kumaaranaagiya  yaaveerin  kiraamangga'lum  mathilga'lum  ve'ngalath  thaazhppaa'lga'lumu'l'la  baasaantheasaththinudaiya  a’rubathu  periya  patta'nangga'lu'l'la  arkoab  seemaiyum  ivan  visaarippil  irunthathu.  (1iraajaakka’l  4:13)

இத்தோவின்  குமாரன்  அகினதாப்,  இவன்  மக்னாயீமில்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:14)

iththoavin  kumaaran  aginathaab,  ivan  maknaayeemil  irunthaan.  (1iraajaakka’l  4:14)

அகிமாஸ்,  இவன்  நப்தலியில்  இருந்தான்;  இவன்  சாலொமோனுக்கு  இருந்த  ஒரு  குமாரத்தியாகிய  பஸ்மாத்  என்பவளை  விவாகம்பண்ணினான்.  (1இராஜாக்கள்  4:15)

agimaas,  ivan  napthaliyil  irunthaan;  ivan  saalomoanukku  iruntha  oru  kumaaraththiyaagiya  basmaath  enbava'lai  vivaagampa'n'ninaan.  (1iraajaakka’l  4:15)

ஊசாயின்  குமாரன்  பானா,  இவன்  ஆசேரிலும்  ஆலோத்திலும்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:16)

oosaayin  kumaaran  baanaa,  ivan  aasearilum  aaloaththilum  irunthaan.  (1iraajaakka’l  4:16)

பருவாவின்  குமாரன்  யோசபாத்,  இவன்  இசக்காரில்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:17)

paruvaavin  kumaaran  yoasapaath,  ivan  isakkaaril  irunthaan.  (1iraajaakka’l  4:17)

ஏலாவின்  குமாரன்  சீமேயி,  இவன்  பென்யமீனில்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:18)

ealaavin  kumaaran  seemeayi,  ivan  benyameenil  irunthaan.  (1iraajaakka’l  4:18)

ஊரியின்  குமாரன்  கேபேர்,  இவன்  எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனுக்கும்  பாசானின்  ராஜாவாகிய  ஓகுக்கும்  இருந்த  தேசமாகிய  கீலேயாத்தேசத்தில்  இருந்தான்;  இவன்மாத்திரம்  அத்தேசத்தில்  அதிபதியாய்  இருந்தான்.  (1இராஜாக்கள்  4:19)

ooriyin  kumaaran  keabear,  ivan  emoariyarin  raajaavaagiya  seegoanukkum  baasaanin  raajaavaagiya  oakukkum  iruntha  theasamaagiya  keeleayaaththeasaththil  irunthaan;  ivanmaaththiram  aththeasaththil  athibathiyaay  irunthaan.  (1iraajaakka’l  4:19)

யூதாவும்  இஸ்ரவேலும்  கடற்கரை  மணலத்தனை  ஏராளமாயிருந்து,  புசித்துக்  குடித்து  மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:20)

yoothaavum  isravealum  kada’rkarai  ma'nalaththanai  earaa'lamaayirunthu,  pusiththuk  kudiththu  magizhnthuko'ndirunthaarga'l.  (1iraajaakka’l  4:20)

நதிதொடங்கி,  பெலிஸ்தர்  தேசவழியாய்  எகிப்தின்  எல்லைமட்டும்  இருக்கிற  சகல  ராஜ்யங்களையும்  சாலொமோன்  ஆண்டுகொண்டிருந்தான்;  அவர்கள்  சாலொமோனுக்குக்  காணிக்கைகளைக்  கொண்டுவந்து,  அவன்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  அவனைச்  சேவித்தார்கள்.  (1இராஜாக்கள்  4:21)

nathithodanggi,  pelisthar  theasavazhiyaay  egipthin  ellaimattum  irukki’ra  sagala  raajyangga'laiyum  saalomoan  aa'nduko'ndirunthaan;  avarga'l  saalomoanukkuk  kaa'nikkaiga'laik  ko'nduvanthu,  avan  uyiroadiruntha  naa'lellaam  avanaich  seaviththaarga'l.  (1iraajaakka’l  4:21)

நாள்  ஒன்றிற்குச்  சாலொமோனுக்குச்  செல்லும்  சாப்பாட்டுச்  செலவு,  முப்பது  மரக்கால்  மெல்லிய  மாவும்,  அறுபது  மரக்கால்  மாவும்,  (1இராஜாக்கள்  4:22)

naa'l  on’ri’rkuch  saalomoanukkuch  sellum  saappaattuch  selavu,  muppathu  marakkaal  melliya  maavum,  a’rubathu  marakkaal  maavum,  (1iraajaakka’l  4:22)

கலைமான்களையும்  வெளிமான்களையும்  வரையாடுகளையும்  கொழுமையான  பறவைகளையும்  தவிர,  கொழுக்கப்பட்ட  பத்து  மாடுகளும்,  மேய்ச்சலிலிருந்து  வந்த  இருபது  மாடுகளும்  நூறு  ஆடுகளுமாம்.  (1இராஜாக்கள்  4:23)

kalaimaanga'laiyum  ve'limaanga'laiyum  varaiyaaduga'laiyum  kozhumaiyaana  pa’ravaiga'laiyum  thavira,  kozhukkappatta  paththu  maaduga'lum,  meaychchalilirunthu  vantha  irubathu  maaduga'lum  noo’ru  aaduga'lumaam.  (1iraajaakka’l  4:23)

நதிக்கு  இப்புறத்தில்  இருக்கிற  திப்சாமுதற்கொண்டு  ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும்,  நதிக்கு  இப்புறத்திலுள்ள  சகல  ராஜாக்களையும்  ஆண்டுவந்தான்;  அவனைச்  சுற்றி  எங்கும்  சமாதானமாயிருந்தது.  (1இராஜாக்கள்  4:24)

nathikku  ippu’raththil  irukki’ra  thipsaamutha’rko'ndu  aasaamattumu'l'lavaiyellaavat’raiyum,  nathikku  ippu’raththilu'l'la  sagala  raajaakka'laiyum  aa'nduvanthaan;  avanaich  sut’ri  enggum  samaathaanamaayirunthathu.  (1iraajaakka’l  4:24)

சாலொமோனுடைய  நாளெல்லாம்  தாண்  துவக்கிப்  பெயெர்செபாமட்டும்,  யூதாவும்  இஸ்ரவேலும்  அவரவர்  தங்கள்  தங்கள்  திராட்சச்செடியின்  நிழலிலும்,  தங்கள்  தங்கள்  அத்திமரத்தின்  நிழலிலும்  சுகமாய்க்  குடியிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:25)

saalomoanudaiya  naa'lellaam  thaa'n  thuvakkip  beyersebaamattum,  yoothaavum  isravealum  avaravar  thangga'l  thangga'l  thiraadchachsediyin  nizhalilum,  thangga'l  thangga'l  aththimaraththin  nizhalilum  sugamaayk  kudiyirunthaarga'l.  (1iraajaakka’l  4:25)

சாலொமோனுக்கு  நாலாயிரம்  இரதக்  குதிரைலாயங்களும்,  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:26)

saalomoanukku  naalaayiram  irathak  kuthirailaayangga'lum,  panneeraayiram  kuthiraiveerarum  irunthaarga'l.  (1iraajaakka’l  4:26)

மேற்சொல்லிய  மணியக்காரரில்  ஒவ்வொருவரும்  தன்தன்  மாதத்திலே  சாலொமோன்  ராஜாவுக்கும்,  ராஜாவின்  பந்திக்கு  வரும்  யாவருக்கும்  வேண்டியவைகளை  ஒரு  குறைவுமின்றி  பராமரித்து,  (1இராஜாக்கள்  4:27)

mea’rsolliya  ma'niyakkaararil  ovvoruvarum  thanthan  maathaththilea  saalomoan  raajaavukkum,  raajaavin  panthikku  varum  yaavarukkum  vea'ndiyavaiga'lai  oru  ku’raivumin’ri  paraamariththu,  (1iraajaakka’l  4:27)

குதிரைகளுக்கும்  ஒட்டகங்களுக்கும்  வேண்டிய  வாற்கோதுமையையும்,  வைக்கோலையும்,  அவரவர்  தங்களுக்கு  இடப்பட்ட  கட்டளையின்படி  அவைகள்  இருக்கும்  ஸ்தலத்திற்குக்  கொண்டுவருவார்கள்.  (1இராஜாக்கள்  4:28)

kuthiraiga'lukkum  ottagangga'lukkum  vea'ndiya  vaa’rkoathumaiyaiyum,  vaikkoalaiyum,  avaravar  thangga'lukku  idappatta  katta'laiyinpadi  avaiga'l  irukkum  sthalaththi’rkuk  ko'nduvaruvaarga'l.  (1iraajaakka’l  4:28)

தேவன்  சாலொமோனுக்கு  மிகுதியான  ஞானத்தையும்  புத்தியையும்,  கடற்கரை  மணலத்தனையான  மனோவிருத்தியையும்  கொடுத்தார்.  (1இராஜாக்கள்  4:29)

theavan  saalomoanukku  miguthiyaana  gnaanaththaiyum  buththiyaiyum,  kada’rkarai  ma'nalaththanaiyaana  manoaviruththiyaiyum  koduththaar.  (1iraajaakka’l  4:29)

சகல  கிழக்கத்திப்  புத்திரரின்  ஞானத்தையும்  எகிப்தியரின்  சகல  ஞானத்தையும்  பார்க்கிலும்  சாலொமோனின்  ஞானம்  சிறந்ததாயிருந்தது.  (1இராஜாக்கள்  4:30)

sagala  kizhakkaththip  puththirarin  gnaanaththaiyum  egipthiyarin  sagala  gnaanaththaiyum  paarkkilum  saalomoanin  gnaanam  si’ranthathaayirunthathu.  (1iraajaakka’l  4:30)

அவன்  எஸ்ராகியனாகிய  ஏத்தானிலும்,  ஏமான்,  கல்கோல்,  தர்தா  என்னும்  மாகோலின்  குமாரரிலும்,  மற்ற  எல்லா  மனுஷரிலும்  ஞானவானாயிருந்தான்;  சுற்றிலும்  இருந்த  சகல  ஜாதிகளிலும்  அவன்  கீர்த்தி  பிரபலமாயிருந்தது.  (1இராஜாக்கள்  4:31)

avan  esraagiyanaagiya  eaththaanilum,  eamaan,  kalkoal,  tharthaa  ennum  maagoalin  kumaararilum,  mat’ra  ellaa  manusharilum  gnaanavaanaayirunthaan;  sut’rilum  iruntha  sagala  jaathiga'lilum  avan  keerththi  pirabalamaayirunthathu.  (1iraajaakka’l  4:31)

அவன்  மூவாயிரம்  நீதிமொழிகளைச்  சொன்னான்;  அவனுடைய  பாட்டுகள்  ஆயிரத்து  ஐந்து.  (1இராஜாக்கள்  4:32)

avan  moovaayiram  neethimozhiga'laich  sonnaan;  avanudaiya  paattuga'l  aayiraththu  ainthu.  (1iraajaakka’l  4:32)

லீபனோனில்  இருக்கிற  கேதுருமரங்கள்  முதற்கொண்டு  சுவரில்  முளைக்கிற  ஈசோப்புப்  பூண்டுவரைக்குமுள்ள  மரமுதலிய  தாபரங்களைக்குறித்தும்,  மிருகங்கள்  பறவைகள்  ஊரும்  பிராணிகள்  மச்சங்கள்  ஆகிய  இவைகளைக்குறித்தும்  வாக்கியங்களைச்  சொன்னான்.  (1இராஜாக்கள்  4:33)

leebanoanil  irukki’ra  keathurumarangga'l  mutha’rko'ndu  suvaril  mu'laikki’ra  eesoappup  poo'nduvaraikkumu'l'la  maramuthaliya  thaabarangga'laikku’riththum,  mirugangga'l  pa’ravaiga'l  oorum  piraa'niga'l  machchangga'l  aagiya  ivaiga'laikku’riththum  vaakkiyangga'laich  sonnaan.  (1iraajaakka’l  4:33)

சாலொமோனின்  ஞானத்தைக்  குறித்துக்  கேள்விப்பட்ட  பூமியின்  சகல  ராஜாக்களிடத்திலுமிருந்து  நானாஜாதியான  ஜனங்களும்  அவனுடைய  ஞானத்தைக்  கேட்கிறதற்கு  வந்தார்கள்.  (1இராஜாக்கள்  4:34)

saalomoanin  gnaanaththaik  ku’riththuk  kea'lvippatta  boomiyin  sagala  raajaakka'lidaththilumirunthu  naanaajaathiyaana  janangga'lum  avanudaiya  gnaanaththaik  keadki’ratha’rku  vanthaarga'l.  (1iraajaakka’l  4:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!