Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 3 | 1 இராஜாக்கள் 3 | 1 Kings 3

சாலொமோன்  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனோடே  சம்பந்தங்கலந்து,  பார்வோனின்  குமாரத்தியை  விவாகம்பண்ணி,  தன்னுடைய  அரமனையையும்  கர்த்தருடைய  ஆலயத்தையும்  எருசலேமின்  சுற்றுமதிலையும்  கட்டித்  தீருமட்டும்  அவன்  அவளைத்  தாவீதின்  நகரத்தில்  கொண்டுவந்து  வைத்தான்.  (1இராஜாக்கள்  3:1)

saalomoan  egipthin  raajaavaagiya  paarvoanoadea  sambanthangkalanthu,  paarvoanin  kumaaraththiyai  vivaagampa'n'ni,  thannudaiya  aramanaiyaiyum  karththarudaiya  aalayaththaiyum  erusaleamin  sut’rumathilaiyum  kattith  theerumattum  avan  ava'laith  thaaveethin  nagaraththil  ko'nduvanthu  vaiththaan.  (1iraajaakka’l  3:1)

அந்நாட்கள்மட்டும்  கர்த்தருடைய  நாமத்திற்கு  ஒரு  ஆலயம்  கட்டப்படாதிருந்ததினால்,  ஜனங்கள்  மேடைகளிலே  பலியிட்டுவந்தார்கள்.  (1இராஜாக்கள்  3:2)

annaadka'lmattum  karththarudaiya  naamaththi’rku  oru  aalayam  kattappadaathirunthathinaal,  janangga'l  meadaiga'lilea  baliyittuvanthaarga'l.  (1iraajaakka’l  3:2)

சாலொமோன்  கர்த்தரிடத்தில்  அன்புகூர்ந்து,  தன்  தகப்பனாகிய  தாவீதின்  கட்டளைகளில்  நடந்தான்;  ஆனாலும்  அவன்  மேடைகளிலே  பலியிட்டுத்  தூபங்காட்டி  வந்தான்.  (1இராஜாக்கள்  3:3)

saalomoan  karththaridaththil  anbukoornthu,  than  thagappanaagiya  thaaveethin  katta'laiga'lil  nadanthaan;  aanaalum  avan  meadaiga'lilea  baliyittuth  thoobangkaatti  vanthaan.  (1iraajaakka’l  3:3)

அப்படியே  ராஜா  பலியிட  கிபியோனுக்குப்  போனான்;  அது  பெரிய  மேடையாயிருந்தது;  அந்தப்  பலிபீடத்தின்மேல்  சாலொமோன்  ஆயிரம்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தினான்.  (1இராஜாக்கள்  3:4)

appadiyea  raajaa  baliyida  kibiyoanukkup  poanaan;  athu  periya  meadaiyaayirunthathu;  anthap  balipeedaththinmeal  saalomoan  aayiram  sarvaangga  thaganabaliga'laich  seluththinaan.  (1iraajaakka’l  3:4)

கிபியோனிலே  கர்த்தர்  சாலொமோனுக்கு  இராத்திரியில்  சொப்பனத்திலே  தரிசனமாகி:  நீ  விரும்புகிறதை  என்னிடத்தில்  கேள்  என்று  தேவன்  சொன்னார்.  (1இராஜாக்கள்  3:5)

kibiyoanilea  karththar  saalomoanukku  iraaththiriyil  soppanaththilea  tharisanamaagi:  nee  virumbugi’rathai  ennidaththil  kea'l  en’ru  theavan  sonnaar.  (1iraajaakka’l  3:5)

அதற்குச்  சாலொமோன்:  என்  தகப்பனாகிய  தாவீது  என்னும்  உமது  அடியான்  உம்மைப்பற்றி  உண்மையும்  நீதியும்  மன  நேர்மையுமாய்  உமக்கு  முன்பாக  நடந்தபடியே  தேவரீர்  அவருக்குப்  பெரிய  கிருபைசெய்து,  அந்தப்  பெரிய  கிருபையை  அவருக்குக்  காத்து,  இந்நாளில்  இருக்கிறபடியே  அவருடைய  சிங்காசனத்தில்  வீற்றிருக்கிற  ஒரு  குமாரனை  அவருக்குத்  தந்தீர்.  (1இராஜாக்கள்  3:6)

atha’rkuch  saalomoan:  en  thagappanaagiya  thaaveethu  ennum  umathu  adiyaan  ummaippat’ri  u'nmaiyum  neethiyum  mana  nearmaiyumaay  umakku  munbaaga  nadanthapadiyea  theavareer  avarukkup  periya  kirubaiseythu,  anthap  periya  kirubaiyai  avarukkuk  kaaththu,  innaa'lil  irukki’rapadiyea  avarudaiya  singgaasanaththil  veet’rirukki’ra  oru  kumaaranai  avarukkuth  thantheer.  (1iraajaakka’l  3:6)

இப்போதும்  என்  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீர்  உமது  அடியேனை  என்  தகப்பனாகிய  தாவீதின்  ஸ்தானத்திலே  ராஜாவாக்கினீரே,  நானோவென்றால்  போக்கு  வரவு  அறியாத  சிறுபிள்ளையாயிருக்கிறேன்.  (1இராஜாக்கள்  3:7)

ippoathum  en  theavanaagiya  karththaavea,  theavareer  umathu  adiyeanai  en  thagappanaagiya  thaaveethin  sthaanaththilea  raajaavaakkineerea,  naanoaven’raal  poakku  varavu  a’riyaatha  si’rupi'l'laiyaayirukki’rean.  (1iraajaakka’l  3:7)

நீர்  தெரிந்துகொண்டதும்  ஏராளத்தினால்  எண்ணிக்கைக்கு  அடங்காததும்  இலக்கத்திற்கு  உட்படாததுமான  திரளான  ஜனங்களாகிய  உமது  ஜனத்தின்  நடுவில்  அடியேன்  இருக்கிறேன்.  (1இராஜாக்கள்  3:8)

neer  therinthuko'ndathum  earaa'laththinaal  e'n'nikkaikku  adanggaathathum  ilakkaththi’rku  udpadaathathumaana  thira'laana  janangga'laagiya  umathu  janaththin  naduvil  adiyean  irukki’rean.  (1iraajaakka’l  3:8)

ஆகையால்  உமது  ஜனங்களை  நியாயம்  விசாரிக்கவும்,  நன்மைதீமை  இன்னதென்று  வகையறுக்கவும்,  அடியேனுக்கு  ஞானமுள்ள  இருதயத்தைத்  தந்தருளும்;  ஏராளமாயிருக்கிற  இந்த  உமது  ஜனங்களை  நியாயம்  விசாரிக்க  யாராலே  ஆகும்  என்றான்.  (1இராஜாக்கள்  3:9)

aagaiyaal  umathu  janangga'lai  niyaayam  visaarikkavum,  nanmaitheemai  innathen’ru  vagaiya’rukkavum,  adiyeanukku  gnaanamu'l'la  iruthayaththaith  thantharu'lum;  earaa'lamaayirukki’ra  intha  umathu  janangga'lai  niyaayam  visaarikka  yaaraalea  aagum  en’raan.  (1iraajaakka’l  3:9)

சாலொமோன்  இந்தக்  காரியத்தைக்  கேட்டது  ஆண்டவருடைய  பார்வைக்கு  உகந்த  விண்ணப்பமாயிருந்தது.  (1இராஜாக்கள்  3:10)

saalomoan  inthak  kaariyaththaik  keattathu  aa'ndavarudaiya  paarvaikku  ugantha  vi'n'nappamaayirunthathu.  (1iraajaakka’l  3:10)

ஆகையினால்  தேவன்  அவனை  நோக்கி:  நீ  உனக்கு  நீடித்த  நாட்களைக்  கேளாமலும்,  ஐசுவரியத்தைக்  கேளாமலும்,  உன்  சத்துருக்களின்  பிராணனைக்  கேளாமலும்,  நீ  இந்தக்  காரியத்தையே  கேட்டு,  நியாயம்  விசாரிக்கிறதற்கு  ஏற்ற  ஞானத்தை  உனக்கு  வேண்டிக்கொண்டபடியினால்,  (1இராஜாக்கள்  3:11)

aagaiyinaal  theavan  avanai  noakki:  nee  unakku  neediththa  naadka'laik  kea'laamalum,  aisuvariyaththaik  kea'laamalum,  un  saththurukka'lin  piraa'nanaik  kea'laamalum,  nee  inthak  kaariyaththaiyea  keattu,  niyaayam  visaarikki’ratha’rku  eat’ra  gnaanaththai  unakku  vea'ndikko'ndapadiyinaal,  (1iraajaakka’l  3:11)

உன்  வார்த்தைகளின்படி  செய்தேன்;  ஞானமும்  உணர்வுமுள்ள  இருதயத்தை  உனக்குத்  தந்தேன்;  இதிலே  உனக்குச்  சரியானவன்  உனக்குமுன்  இருந்ததுமில்லை,  உனக்குச்  சரியானவன்  உனக்குப்பின்  எழும்புவதுமில்லை.  (1இராஜாக்கள்  3:12)

un  vaarththaiga'linpadi  seythean;  gnaanamum  u'narvumu'l'la  iruthayaththai  unakkuth  thanthean;  ithilea  unakkuch  sariyaanavan  unakkumun  irunthathumillai,  unakkuch  sariyaanavan  unakkuppin  ezhumbuvathumillai.  (1iraajaakka’l  3:12)

இதுவுமன்றி,  நீ  கேளாத  ஐசுவரியத்தையும்  மகிமையையும்  உனக்குத்  தந்தேன்;  உன்  நாட்களில்  இருக்கிற  ராஜாக்களில்  ஒருவனும்  உனக்குச்  சரியானவன்  இருப்பதில்லை.  (1இராஜாக்கள்  3:13)

ithuvuman’ri,  nee  kea'laatha  aisuvariyaththaiyum  magimaiyaiyum  unakkuth  thanthean;  un  naadka'lil  irukki’ra  raajaakka'lil  oruvanum  unakkuch  sariyaanavan  iruppathillai.  (1iraajaakka’l  3:13)

உன்  தகப்பனாகிய  தாவீது  நடந்ததுபோல,  நீயும்  என்  கட்டளைகளையும்  என்  நியமங்களையும்  கைக்கொண்டு,  என்  வழிகளில்  நடப்பாயாகில்,  உன்  நாட்களையும்  நீடித்திருக்கப்பண்ணுவேன்  என்றார்.  (1இராஜாக்கள்  3:14)

un  thagappanaagiya  thaaveethu  nadanthathupoala,  neeyum  en  katta'laiga'laiyum  en  niyamangga'laiyum  kaikko'ndu,  en  vazhiga'lil  nadappaayaagil,  un  naadka'laiyum  neediththirukkappa'n'nuvean  en’raar.  (1iraajaakka’l  3:14)

சாலொமோனுக்கு  நித்திரை  தெளிந்தபோது,  அது  சொப்பனம்  என்று  அறிந்தான்;  அவன்  எருசலேமுக்கு  வந்து,  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டிக்கு  முன்பாக  நின்று,  சர்வாங்க  தகனபலிகளையிட்டு,  சமாதானபலிகளைச்  செலுத்தி,  தன்  ஊழியக்காரர்  எல்லாருக்கும்  விருந்துசெய்தான்.  (1இராஜாக்கள்  3:15)

saalomoanukku  niththirai  the'linthapoathu,  athu  soppanam  en’ru  a’rinthaan;  avan  erusaleamukku  vanthu,  karththarudaiya  udanpadikkaip  pettikku  munbaaga  nin’ru,  sarvaangga  thaganabaliga'laiyittu,  samaathaanabaliga'laich  seluththi,  than  oozhiyakkaarar  ellaarukkum  virunthuseythaan.  (1iraajaakka’l  3:15)

அப்பொழுது  வேசிகளான  இரண்டு  ஸ்திரீகள்  ராஜாவினிடத்தில்  வந்து,  அவனுக்கு  முன்பாக  நின்றார்கள்.  (1இராஜாக்கள்  3:16)

appozhuthu  veasiga'laana  ira'ndu  sthireega'l  raajaavinidaththil  vanthu,  avanukku  munbaaga  nin’raarga'l.  (1iraajaakka’l  3:16)

அவர்களில்  ஒருத்தி:  என்  ஆண்டவனே,  நானும்  இந்த  ஸ்திரீயும்  ஒரே  வீட்டிலே  குடியிருக்கிறோம்;  நான்  இவளோடே  வீட்டிலிருக்கையில்  ஆண்பிள்ளை  பெற்றேன்.  (1இராஜாக்கள்  3:17)

avarga'lil  oruththi:  en  aa'ndavanea,  naanum  intha  sthireeyum  orea  veettilea  kudiyirukki’roam;  naan  iva'loadea  veettilirukkaiyil  aa'npi'l'lai  pet’rean.  (1iraajaakka’l  3:17)

நான்  பிள்ளைபெற்ற  மூன்றாம்  நாளிலே,  இந்த  ஸ்திரீயும்  ஆண்பிள்ளை  பெற்றாள்;  நாங்கள்  ஒருமித்திருந்தோம்,  எங்கள்  இருவரையும்  தவிர,  வீட்டுக்குள்ளே  வேறொருவரும்  இல்லை.  (1இராஜாக்கள்  3:18)

naan  pi'l'laipet’ra  moon’raam  naa'lilea,  intha  sthireeyum  aa'npi'l'lai  pet’raa'l;  naangga'l  orumiththirunthoam,  engga'l  iruvaraiyum  thavira,  veettukku'l'lea  vea’roruvarum  illai.  (1iraajaakka’l  3:18)

இராத்திரி  தூக்கத்திலே  இந்த  ஸ்திரீ  தன்  பிள்ளையின்மேல்  புரண்டுபடுத்ததினால்  அது  செத்துப்போயிற்று.  (1இராஜாக்கள்  3:19)

iraaththiri  thookkaththilea  intha  sthiree  than  pi'l'laiyinmeal  pura'ndupaduththathinaal  athu  seththuppoayit’ru.  (1iraajaakka’l  3:19)

அப்பொழுது,  உமது  அடியாள்  நித்திரைபண்ணுகையில்,  இவள்  நடுஜாமத்தில்  எழுந்து,  என்  பக்கத்திலே  கிடக்கிற  என்  பிள்ளையை  எடுத்து,  தன்  மார்பிலே  கிடத்திக்கொண்டு,  செத்த  தன்  பிள்ளையை  எடுத்து,  என்  மார்பிலே  கிடத்திவிட்டாள்.  (1இராஜாக்கள்  3:20)

appozhuthu,  umathu  adiyaa'l  niththiraipa'n'nugaiyil,  iva'l  nadujaamaththil  ezhunthu,  en  pakkaththilea  kidakki’ra  en  pi'l'laiyai  eduththu,  than  maarbilea  kidaththikko'ndu,  seththa  than  pi'l'laiyai  eduththu,  en  maarbilea  kidaththivittaa'l.  (1iraajaakka’l  3:20)

என்  பிள்ளைக்குப்  பால்கொடுக்கக்  காலமே  நான்  எழுந்திருந்தபோது,  அது  செத்துக்கிடந்தது;  பொழுது  விடிந்தபின்  நான்  அதை  உற்றுப்பார்க்கும்போது,  அது  நான்  பெற்ற  பிள்ளை  அல்லவென்று  கண்டேன்  என்றாள்.  (1இராஜாக்கள்  3:21)

en  pi'l'laikkup  paalkodukkak  kaalamea  naan  ezhunthirunthapoathu,  athu  seththukkidanthathu;  pozhuthu  vidinthapin  naan  athai  ut’ruppaarkkumpoathu,  athu  naan  pet’ra  pi'l'lai  allaven’ru  ka'ndean  en’raa'l.  (1iraajaakka’l  3:21)

அதற்கு  மற்ற  ஸ்திரீ:  அப்படியல்ல,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை,  செத்தது  உன்  பிள்ளை  என்றாள்.  இவளோ:  இல்லை,  செத்தது  உன்  பிள்ளை,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை  என்றாள்;  இப்படி  ராஜாவுக்கு  முன்பாக  வாதாடினார்கள்.  (1இராஜாக்கள்  3:22)

atha’rku  mat’ra  sthiree:  appadiyalla,  uyiroadirukki’rathu  en  pi'l'lai,  seththathu  un  pi'l'lai  en’raa'l.  iva'loa:  illai,  seththathu  un  pi'l'lai,  uyiroadirukki’rathu  en  pi'l'lai  en’raa'l;  ippadi  raajaavukku  munbaaga  vaathaadinaarga'l.  (1iraajaakka’l  3:22)

அப்பொழுது  ராஜா:  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை,  செத்தது  உன்  பிள்ளை  என்று  இவள்  சொல்லுகிறாள்;  அப்படியல்ல,  செத்தது  உன்  பிள்ளை,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை  என்று  அவள்  சொல்லுகிறாள்  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  3:23)

appozhuthu  raajaa:  uyiroadirukki’rathu  en  pi'l'lai,  seththathu  un  pi'l'lai  en’ru  iva'l  sollugi’raa'l;  appadiyalla,  seththathu  un  pi'l'lai,  uyiroadirukki’rathu  en  pi'l'lai  en’ru  ava'l  sollugi’raa'l  en’ru  solli,  (1iraajaakka’l  3:23)

ஒரு  பட்டயத்தைக்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அவர்கள்  ஒரு  பட்டயத்தை  ராஜாவினிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  (1இராஜாக்கள்  3:24)

oru  pattayaththaik  ko'nduvaarungga'l  en’raan;  avarga'l  oru  pattayaththai  raajaavinidaththil  ko'nduvanthaarga'l.  (1iraajaakka’l  3:24)

ராஜா  உயிரோடிருக்கிற  பிள்ளையை  இரண்டாகப்  பிளந்து,  பாதியை  இவளுக்கும்  பாதியை  அவளுக்கும்  கொடுங்கள்  என்றான்.  (1இராஜாக்கள்  3:25)

raajaa  uyiroadirukki’ra  pi'l'laiyai  ira'ndaagap  pi'lanthu,  paathiyai  iva'lukkum  paathiyai  ava'lukkum  kodungga'l  en’raan.  (1iraajaakka’l  3:25)

அப்பொழுது  உயிரோடிருக்கிற  பிள்ளையின்  தாய்,  தன்  பிள்ளைக்காக  அவள்  குடல்  துடித்ததினால்,  ராஜாவை  நோக்கி:  ஐயோ,  என்  ஆண்டவனே,  உயிரோடிருக்கிற  பிள்ளையைக்  கொல்லவேண்டாம்;  அதை  அவளுக்கே  கொடுத்துவிடும்  என்றாள்;  மற்றவள்  அது  எனக்கும்  வேண்டாம்,  உனக்கும்  வேண்டாம்,  பிளந்து  போடுங்கள்  என்றாள்.  (1இராஜாக்கள்  3:26)

appozhuthu  uyiroadirukki’ra  pi'l'laiyin  thaay,  than  pi'l'laikkaaga  ava'l  kudal  thudiththathinaal,  raajaavai  noakki:  aiyoa,  en  aa'ndavanea,  uyiroadirukki’ra  pi'l'laiyaik  kollavea'ndaam;  athai  ava'lukkea  koduththuvidum  en’raa'l;  mat’rava'l  athu  enakkum  vea'ndaam,  unakkum  vea'ndaam,  pi'lanthu  poadungga'l  en’raa'l.  (1iraajaakka’l  3:26)

அப்பொழுது  ராஜா  உயிரோடிருக்கிற  பிள்ளையைக்  கொல்லாமல்,  அவளுக்குக்  கொடுத்துவிடுங்கள்;  அவளே  அதின்  தாய்  என்றான்.  (1இராஜாக்கள்  3:27)

appozhuthu  raajaa  uyiroadirukki’ra  pi'l'laiyaik  kollaamal,  ava'lukkuk  koduththuvidungga'l;  ava'lea  athin  thaay  en’raan.  (1iraajaakka’l  3:27)

ராஜா  தீர்த்த  இந்த  நியாயத்தை  இஸ்ரவேலர்  எல்லாரும்  கேள்விப்பட்டு,  நியாயம்  விசாரிக்கிறதற்கு  தேவன்  அருளின  ஞானம்  ராஜாவுக்கு  உண்டென்று  கண்டு,  அவனுக்குப்  பயந்தார்கள்.  (1இராஜாக்கள்  3:28)

raajaa  theerththa  intha  niyaayaththai  isravealar  ellaarum  kea'lvippattu,  niyaayam  visaarikki’ratha’rku  theavan  aru'lina  gnaanam  raajaavukku  u'nden’ru  ka'ndu,  avanukkup  bayanthaarga'l.  (1iraajaakka’l  3:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!