Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 2 | 1 இராஜாக்கள் 2 | 1 Kings 2

தாவீது  மரணமடையும்  காலம்  சமீபித்தபோது,  அவன்  தன்  குமாரனாகிய  சாலொமோனுக்குக்  கட்டளையிட்டுச்  சொன்னது:  (1இராஜாக்கள்  2:1)

thaaveethu  mara'namadaiyum  kaalam  sameebiththapoathu,  avan  than  kumaaranaagiya  saalomoanukkuk  katta'laiyittuch  sonnathu:  (1iraajaakka’l  2:1)

நான்  பூலோகத்தார்  யாவரும்  போகிற  வழியே  போகிறேன்;  நீ  திடன்கொண்டு  புருஷனாயிரு.  (1இராஜாக்கள்  2:2)

naan  booloagaththaar  yaavarum  poagi’ra  vazhiyea  poagi’rean;  nee  thidanko'ndu  purushanaayiru.  (1iraajaakka’l  2:2)

நீ  என்ன  செய்தாலும்,  நீ  எங்கே  போனாலும்,  எல்லாவற்றிலும்  புத்திமானாயிருக்கிறதற்கும்,  கர்த்தர்  என்னைக்குறித்து:  உன்  பிள்ளைகள்  தங்கள்  முழு  இருதயத்தோடும்  தங்கள்  முழு  ஆத்துமாவோடும்  எனக்கு  முன்பாக  உண்மையாய்  நடக்கும்படிக்குத்  தங்கள்  வழியைக்  காத்துக்கொண்டால்,  இஸ்ரவேலின்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கத்தக்க  புருஷன்  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  சொன்ன  தம்முடைய  வார்த்தையைத்  திடப்படுத்துகிறதற்கும்,  (1இராஜாக்கள்  2:3)

nee  enna  seythaalum,  nee  enggea  poanaalum,  ellaavat’rilum  buththimaanaayirukki’ratha’rkum,  karththar  ennaikku’riththu:  un  pi'l'laiga'l  thangga'l  muzhu  iruthayaththoadum  thangga'l  muzhu  aaththumaavoadum  enakku  munbaaga  u'nmaiyaay  nadakkumpadikkuth  thangga'l  vazhiyaik  kaaththukko'ndaal,  isravealin  singgaasanaththinmeal  veet’rirukkaththakka  purushan  unakku  illaama’rpoavathillai  en’ru  sonna  thammudaiya  vaarththaiyaith  thidappaduththugi’ratha’rkum,  (1iraajaakka’l  2:3)

மோசேயின்  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடி,  நீ  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  கட்டளைகளையும்,  கற்பனைகளையும்,  நியாயங்களையும்,  சாட்சிகளையும்  கைக்கொள்ள,  அவர்  வழிகளில்  நடக்கும்படிக்கு  அவருடைய  காவலைக்  காப்பாயாக.  (1இராஜாக்கள்  2:4)

moaseayin  niyaayappiramaa'naththil  ezhuthiyirukki’rapadi,  nee  un  theavanaagiya  karththarudaiya  katta'laiga'laiyum,  ka’rpanaiga'laiyum,  niyaayangga'laiyum,  saadchiga'laiyum  kaikko'l'la,  avar  vazhiga'lil  nadakkumpadikku  avarudaiya  kaavalaik  kaappaayaaga.  (1iraajaakka’l  2:4)

செருயாவின்  குமாரனாகிய  யோவாப்,  இஸ்ரவேலின்  இரண்டு  சேனாபதிகளாகிய  நேரின்  குமாரன்  அப்னேருக்கும்,  ஏத்தேரின்  குமாரன்  அமாசாவுக்கும்  செய்த  காரியத்தினால்  எனக்குச்  செய்த  குற்றத்தை  நீ  அறிந்திருக்கிறாயே;  அவன்  அவர்களைக்  கொன்று,  சமாதானகாலத்திலே  யுத்தகாலத்து  இரத்தத்தைச்  சிந்தி,  யுத்தகாலத்து  இரத்தத்தைத்  தன்  அரையிலுள்ள  கச்சையிலும்  தன்  கால்களில்  இருந்த  பாதரட்சையிலும்  வடியவிட்டானே.  (1இராஜாக்கள்  2:5)

seruyaavin  kumaaranaagiya  yoavaab,  isravealin  ira'ndu  seanaabathiga'laagiya  nearin  kumaaran  abnearukkum,  eaththearin  kumaaran  amaasaavukkum  seytha  kaariyaththinaal  enakkuch  seytha  kut’raththai  nee  a’rinthirukki’raayea;  avan  avarga'laik  kon’ru,  samaathaanakaalaththilea  yuththakaalaththu  iraththaththaich  sinthi,  yuththakaalaththu  iraththaththaith  than  araiyilu'l'la  kachchaiyilum  than  kaalga'lil  iruntha  paatharadchaiyilum  vadiyavittaanea.  (1iraajaakka’l  2:5)

ஆகையால்  உன்  யுக்தியின்படியே  நீ  செய்து,  அவனுடைய  நரைமயிர்  சமாதானமாய்ப்  பாதாளத்தில்  இறங்கவொட்டாதிரு.  (1இராஜாக்கள்  2:6)

aagaiyaal  un  yukthiyinpadiyea  nee  seythu,  avanudaiya  naraimayir  samaathaanamaayp  paathaa'laththil  i’ranggavottaathiru.  (1iraajaakka’l  2:6)

கீலேயாத்தியனான  பர்சிலாயின்  குமாரருக்குத்  தயைசெய்வாயாக;  அவர்கள்  உன்  பந்தியிலே  சாப்பிடுகிறவர்களுடன்  இருப்பார்களாக;  உன்  சகோதரனாகிய  அப்சலோமுக்கு  முன்பாக  நான்  ஓடிப்போகையில்,  அவர்கள்  என்னை  ஆதரித்தார்கள்.  (1இராஜாக்கள்  2:7)

keeleayaaththiyanaana  barsilaayin  kumaararukkuth  thayaiseyvaayaaga;  avarga'l  un  panthiyilea  saappidugi’ravarga'ludan  iruppaarga'laaga;  un  sagoatharanaagiya  absaloamukku  munbaaga  naan  oadippoagaiyil,  avarga'l  ennai  aathariththaarga'l.  (1iraajaakka’l  2:7)

மேலும்  பகூரிம்  ஊரானான  பென்யமீனனாகிய  கேராவின்  மகன்  சீமேயி  உன்னிடத்தில்  இருக்கிறான்;  நான்  மக்னாயீமுக்குப்  போகிற  நாளிலே,  அவன்  என்னைக்  கொடிய  தூஷணமாய்த்  தூஷித்தான்;  ஆனாலும்  அவன்  யோர்தானிலே  எனக்கு  எதிர்கொண்டுவந்தபடியினால்:  நான்  உன்னைப்  பட்டயத்தாலே  கொன்றுபோடுவதில்லை  என்று  கர்த்தர்மேல்  அவனுக்கு  ஆணையிட்டுக்கொடுத்தேன்.  (1இராஜாக்கள்  2:8)

mealum  bagoorim  ooraanaana  benyameenanaagiya  kearaavin  magan  seemeayi  unnidaththil  irukki’raan;  naan  maknaayeemukkup  poagi’ra  naa'lilea,  avan  ennaik  kodiya  thoosha'namaayth  thooshiththaan;  aanaalum  avan  yoarthaanilea  enakku  ethirko'nduvanthapadiyinaal:  naan  unnaip  pattayaththaalea  kon’rupoaduvathillai  en’ru  karththarmeal  avanukku  aa'naiyittukkoduththean.  (1iraajaakka’l  2:8)

ஆகிலும்  நீ  அவனைக்  குற்றமற்றவன்  என்று  எண்ணாதே;  நீ  புத்திமான்;  அவனுடைய  நரைமயிரை  இரத்தத்துடன்  பாதாளத்தில்  இறங்கப்பண்ண,  நீ  அவனுக்குச்  செய்யவேண்டியதை  அறிவாய்  என்றான்.  (1இராஜாக்கள்  2:9)

aagilum  nee  avanaik  kut’ramat’ravan  en’ru  e'n'naathea;  nee  buththimaan;  avanudaiya  naraimayirai  iraththaththudan  paathaa'laththil  i’ranggappa'n'na,  nee  avanukkuch  seyyavea'ndiyathai  a’rivaay  en’raan.  (1iraajaakka’l  2:9)

பின்பு  தாவீது  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தாவீதின்  நகரத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  (1இராஜாக்கள்  2:10)

pinbu  thaaveethu  than  pithaakka'loadea  niththiraiyadainthu,  thaaveethin  nagaraththil  adakkampa'n'nappattaan.  (1iraajaakka’l  2:10)

தாவீது  இஸ்ரவேலை  அரசாண்ட  நாட்கள்  நாற்பது  வருஷம்;  அவன்  எப்ரோனில்  ஏழு  வருஷமும்,  எருசலேமில்  முப்பத்துமூன்று  வருஷமும்  அரசாண்டான்.  (1இராஜாக்கள்  2:11)

thaaveethu  isravealai  arasaa'nda  naadka'l  naa’rpathu  varusham;  avan  ebroanil  eazhu  varushamum,  erusaleamil  muppaththumoon’ru  varushamum  arasaa'ndaan.  (1iraajaakka’l  2:11)

சாலொமோன்  தன்  தகப்பனாகிய  தாவீதுடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தான்;  அவன்  ராஜ்யபாரம்  மிகவும்  ஸ்திரப்பட்டது.  (1இராஜாக்கள்  2:12)

saalomoan  than  thagappanaagiya  thaaveethudaiya  singgaasanaththinmeal  veet’rirunthaan;  avan  raajyabaaram  migavum  sthirappattathu.  (1iraajaakka’l  2:12)

ஆகீத்தின்  குமாரனாகிய  அதோனியா  சாலொமோனின்  தாயாகிய  பத்சேபாளிடத்தில்  வந்தான்.  நீ  சமாதானமாய்  வருகிறாயா  என்று  அவள்  கேட்டதற்கு:  சமாதானமாய்த்தான்  வருகிறேன்  என்றான்.  (1இராஜாக்கள்  2:13)

aakeeththin  kumaaranaagiya  athoaniyaa  saalomoanin  thaayaagiya  bathseabaa'lidaththil  vanthaan.  nee  samaathaanamaay  varugi’raayaa  en’ru  ava'l  keattatha’rku:  samaathaanamaayththaan  varugi’rean  en’raan.  (1iraajaakka’l  2:13)

பின்பு  அவன்:  உம்மோடே  நான்  பேசவேண்டிய  ஒரு  காரியம்  இருக்கிறது  என்றான்.  அதற்கு  அவள்:  சொல்  என்றாள்.  (1இராஜாக்கள்  2:14)

pinbu  avan:  ummoadea  naan  peasavea'ndiya  oru  kaariyam  irukki’rathu  en’raan.  atha’rku  ava'l:  sol  en’raa'l.  (1iraajaakka’l  2:14)

அப்பொழுது  அவன்:  ராஜ்யம்  என்னுடையதாயிருந்தது  என்றும்,  நான்  அரசாளுகிறதற்கு  இஸ்ரவேலரெல்லாரும்  என்மேல்  நோக்கமாய்  இருந்தார்கள்  என்றும்  நீர்  அறிவீர்;  ஆனாலும்  ராஜ்யபாரம்  என்னைவிட்டுத்  தாண்டி,  என்  சகோதரனுக்கு  ஆயிற்று;  கர்த்தரால்  அது  அவருக்குக்  கிடைத்தது.  (1இராஜாக்கள்  2:15)

appozhuthu  avan:  raajyam  ennudaiyathaayirunthathu  en’rum,  naan  arasaa'lugi’ratha’rku  isravealarellaarum  enmeal  noakkamaay  irunthaarga'l  en’rum  neer  a’riveer;  aanaalum  raajyabaaram  ennaivittuth  thaa'ndi,  en  sagoatharanukku  aayit’ru;  karththaraal  athu  avarukkuk  kidaiththathu.  (1iraajaakka’l  2:15)

இப்பொழுது  நான்  உம்மிடத்தில்  ஒரு  மன்றாட்டைக்  கேட்கிறேன்;  அதை  எனக்கு  மறுக்கவேண்டாம்  என்றான்.  அவள்:  சொல்  என்றாள்.  (1இராஜாக்கள்  2:16)

ippozhuthu  naan  ummidaththil  oru  man’raattaik  keadki’rean;  athai  enakku  ma’rukkavea'ndaam  en’raan.  ava'l:  sol  en’raa'l.  (1iraajaakka’l  2:16)

அப்பொழுது  அவன்:  ராஜாவாகிய  சாலொமோன்  உம்முடைய  சொல்லை  மறுப்பதில்லை;  சூனேம்  ஊராளாகிய  அபிஷாகை  எனக்கு  அவர்  விவாகம்பண்ணிக்கொடுக்க,  அவரோடே  பேசும்படி  வேண்டுகிறேன்  என்றான்.  (1இராஜாக்கள்  2:17)

appozhuthu  avan:  raajaavaagiya  saalomoan  ummudaiya  sollai  ma’ruppathillai;  sooneam  ooraa'laagiya  abishaakai  enakku  avar  vivaagampa'n'nikkodukka,  avaroadea  peasumpadi  vea'ndugi’rean  en’raan.  (1iraajaakka’l  2:17)

அதற்குப்  பத்சேபாள்:  நல்லது,  நான்  உனக்காக  ராஜாவிடத்தில்  பேசுவேன்  என்றாள்.  (1இராஜாக்கள்  2:18)

atha’rkup  bathseabaa'l:  nallathu,  naan  unakkaaga  raajaavidaththil  peasuvean  en’raa'l.  (1iraajaakka’l  2:18)

பத்சேபாள்  அதோனியாவுக்காக  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்  பேசும்படி  போனாள்;  அப்பொழுது  ராஜா  எழுந்திருந்து,  அவளுக்கு  எதிர்கொண்டுவந்து  அவளை  வணங்கி,  தன்  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  ராஜாவின்  தாயார்  தன்  வலதுபுறமாக  உட்கார,  அவளுக்கு  ஒரு  ஆசனத்தை  வைத்தான்.  (1இராஜாக்கள்  2:19)

bathseabaa'l  athoaniyaavukkaaga  raajaavaagiya  saalomoanidaththil  peasumpadi  poanaa'l;  appozhuthu  raajaa  ezhunthirunthu,  ava'lukku  ethirko'nduvanthu  ava'lai  va'nanggi,  than  singgaasanaththinmeal  udkaarnthu,  raajaavin  thaayaar  than  valathupu’ramaaga  udkaara,  ava'lukku  oru  aasanaththai  vaiththaan.  (1iraajaakka’l  2:19)

அப்பொழுது  அவள்:  நான்  உம்மை  ஒரு  சிறிய  மன்றாட்டைக்  கேட்க  விரும்புகிறேன்;  எனக்கு  அதை  மறுக்கவேண்டாம்  என்றாள்.  அதற்கு  ராஜா:  என்  தாயாரே,  கேளும்;  நான்  உமக்கு  மறுப்பதில்லை  என்றான்.  (1இராஜாக்கள்  2:20)

appozhuthu  ava'l:  naan  ummai  oru  si’riya  man’raattaik  keadka  virumbugi’rean;  enakku  athai  ma’rukkavea'ndaam  en’raa'l.  atha’rku  raajaa:  en  thaayaarea,  kea'lum;  naan  umakku  ma’ruppathillai  en’raan.  (1iraajaakka’l  2:20)

அப்பொழுது  அவள்:  சூனேம்  ஊராளாகிய  அபிஷாகை  உம்முடைய  சகோதரனாகிய  அதோனியாவுக்கு  விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும்  என்றாள்.  (1இராஜாக்கள்  2:21)

appozhuthu  ava'l:  sooneam  ooraa'laagiya  abishaakai  ummudaiya  sagoatharanaagiya  athoaniyaavukku  vivaagampa'n'nikkodukkavea'ndum  en’raa'l.  (1iraajaakka’l  2:21)

ராஜாவாகிய  சாலொமோன்  தன்  தாயாருக்குப்  பிரதியுத்தரமாக:  நீர்  சூனேம்  ஊராளாகிய  அபிஷாகை  அதோனியாவுக்குக்  கேட்பானேன்?  அப்படியானால்  ராஜ்யபாரத்தையும்  அவனுக்குக்  கேளும்;  அவன்  எனக்கு  மூத்த  சகோதரன்;  அவனுக்கும்  ஆசாரியனாகிய  அபியத்தாருக்கும்  செருயாவின்  குமாரன்  யோவாபுக்குமே  அதைக்  கேளும்  என்றான்.  (1இராஜாக்கள்  2:22)

raajaavaagiya  saalomoan  than  thaayaarukkup  pirathiyuththaramaaga:  neer  sooneam  ooraa'laagiya  abishaakai  athoaniyaavukkuk  keadpaanean?  appadiyaanaal  raajyabaaraththaiyum  avanukkuk  kea'lum;  avan  enakku  mooththa  sagoatharan;  avanukkum  aasaariyanaagiya  abiyaththaarukkum  seruyaavin  kumaaran  yoavaabukkumea  athaik  kea'lum  en’raan.  (1iraajaakka’l  2:22)

பின்பு  சாலொமோன்  ராஜா:  அதோனியா  இந்த  வார்த்தையைத்  தன்  பிராணனுக்குச்  சேதமாகச்  சொல்லாதிருந்தால்,  தேவன்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்று  கர்த்தர்மேல்  ஆணையிட்டு,  (1இராஜாக்கள்  2:23)

pinbu  saalomoan  raajaa:  athoaniyaa  intha  vaarththaiyaith  than  piraa'nanukkuch  seathamaagach  sollaathirunthaal,  theavan  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  enakkuch  seyyakkadavar  en’ru  karththarmeal  aa'naiyittu,  (1iraajaakka’l  2:23)

இப்போதும்  இன்றைக்கு  அதோனியா  கொலையுண்பான்  என்று  என்னைத்  திடப்படுத்தினவரும்,  என்னை  என்  தகப்பனாகிய  தாவீதின்  சிங்காசனத்தில்  வீற்றிருக்கப்பண்ணி,  தாம்  சொன்னபடி  எனக்கு  வீட்டைக்  கட்டுவித்தவருமாகிய  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  2:24)

ippoathum  in’raikku  athoaniyaa  kolaiyu'nbaan  en’ru  ennaith  thidappaduththinavarum,  ennai  en  thagappanaagiya  thaaveethin  singgaasanaththil  veet’rirukkappa'n'ni,  thaam  sonnapadi  enakku  veettaik  kattuviththavarumaagiya  karththarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  solli,  (1iraajaakka’l  2:24)

ராஜாவாகிய  சாலொமோன்  யோய்தாவின்  குமாரன்  பெனாயாவுக்குக்  கட்டளைகொடுத்து  அவனை  அனுப்பினான்;  இவன்  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்.  (1இராஜாக்கள்  2:25)

raajaavaagiya  saalomoan  yoaythaavin  kumaaran  benaayaavukkuk  katta'laikoduththu  avanai  anuppinaan;  ivan  avanmeal  vizhunthu  avanaik  kon’rupoattaan.  (1iraajaakka’l  2:25)

ராஜா:  ஆசாரியனாகிய  அபியத்தாரை  நோக்கி:  நீ  உன்  நிலங்கள்  இருக்கிற  ஆனதோத்திற்குப்  போய்விடு;  நீ  மரணத்திற்குப்  பாத்திரவானாயிருந்தும்,  நீ  என்  தகப்பனாகிய  தாவீதுக்கு  முன்பாகக்  கர்த்தராகிய  ஆண்டவருடைய  பெட்டியைச்  சுமந்தபடியினாலும்,  என்  தகப்பன்  அநுபவித்த  உபத்திரவத்தையெல்லாம்  நீ  கூட  அநுபவித்தபடியினாலும்,  இன்றையதினம்  நான்  உன்னைக்  கொலைசெய்யமாட்டேன்  என்றான்.  (1இராஜாக்கள்  2:26)

raajaa:  aasaariyanaagiya  abiyaththaarai  noakki:  nee  un  nilangga'l  irukki’ra  aanathoaththi’rkup  poayvidu;  nee  mara'naththi’rkup  paaththiravaanaayirunthum,  nee  en  thagappanaagiya  thaaveethukku  munbaagak  karththaraagiya  aa'ndavarudaiya  pettiyaich  sumanthapadiyinaalum,  en  thagappan  anubaviththa  ubaththiravaththaiyellaam  nee  kooda  anubaviththapadiyinaalum,  in’raiyathinam  naan  unnaik  kolaiseyyamaattean  en’raan.  (1iraajaakka’l  2:26)

அப்படியே  கர்த்தர்  சீலோவிலே  ஏலியின்  வீட்டாரைக்குறித்துச்  சொன்ன  வார்த்தையை  நிறைவேற்றும்படியாக,  சாலொமோன்  அபியத்தாரைக்  கர்த்தருடைய  ஆசாரியனாயிராதபடிக்குத்  தள்ளிப்போட்டான்.  (1இராஜாக்கள்  2:27)

appadiyea  karththar  seeloavilea  ealiyin  veettaaraikku’riththuch  sonna  vaarththaiyai  ni’raiveat’rumpadiyaaga,  saalomoan  abiyaththaaraik  karththarudaiya  aasaariyanaayiraathapadikkuth  tha'l'lippoattaan.  (1iraajaakka’l  2:27)

நடந்த  இந்தச்  செய்தி  யோவாபுக்கு  வந்தபோது,  அவன்  கர்த்தருடைய  கூடாரத்திற்கு  ஓடிப்போய்,  பலிபீடத்தின்  கொம்புகளைப்  பிடித்துக்கொண்டான்;  யோவாப்  அப்சலோமின்  பட்சம்  சாயாதவனாயிருந்தும்,  அதோனியாவின்  பட்சம்  சாய்ந்திருந்தான்.  (1இராஜாக்கள்  2:28)

nadantha  inthach  seythi  yoavaabukku  vanthapoathu,  avan  karththarudaiya  koodaaraththi’rku  oadippoay,  balipeedaththin  kombuga'laip  pidiththukko'ndaan;  yoavaab  absaloamin  padcham  saayaathavanaayirunthum,  athoaniyaavin  padcham  saaynthirunthaan.  (1iraajaakka’l  2:28)

யோவாப்  கர்த்தரின்  கூடாரத்திற்கு  ஓடிப்போனான்  என்றும்,  இதோ,  பலிபீடத்தண்டையில்  நிற்கிறான்  என்றும்,  ராஜாவாகிய  சாலொமோனுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  சாலொமோன்  யோய்தாவின்  குமாரனாகிய  பெனாயாவை  அனுப்பி,  நீ  போய்  அவன்மேல்  விழு  என்றான்.  (1இராஜாக்கள்  2:29)

yoavaab  karththarin  koodaaraththi’rku  oadippoanaan  en’rum,  ithoa,  balipeedaththa'ndaiyil  ni’rki’raan  en’rum,  raajaavaagiya  saalomoanukku  a’rivikkappattapoathu,  saalomoan  yoaythaavin  kumaaranaagiya  benaayaavai  anuppi,  nee  poay  avanmeal  vizhu  en’raan.  (1iraajaakka’l  2:29)

பெனாயா  கர்த்தரின்  கூடாரத்திற்குப்  போய்,  அவனைப்  பார்த்து:  வெளியே  வா  என்று  ராஜா  சொல்லுகிறார்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  வரமாட்டேன்;  இங்கேயே  சாவேன்  என்றான்;  ஆகையால்  பெனாயா  ராஜாவினிடத்தில்  போய்,  யோவாப்  இன்னபடி  சொல்லி,  இன்னபடி  எனக்கு  மறுஉத்தரவு  கொடுத்தான்  என்று  மறுசெய்தி  சொன்னான்.  (1இராஜாக்கள்  2:30)

benaayaa  karththarin  koodaaraththi’rkup  poay,  avanaip  paarththu:  ve'liyea  vaa  en’ru  raajaa  sollugi’raar  en’raan.  atha’rku  avan:  naan  varamaattean;  inggeayea  saavean  en’raan;  aagaiyaal  benaayaa  raajaavinidaththil  poay,  yoavaab  innapadi  solli,  innapadi  enakku  ma’ruuththaravu  koduththaan  en’ru  ma’ruseythi  sonnaan.  (1iraajaakka’l  2:30)

அப்பொழுது  ராஜா  அவனை  நோக்கி:  அவன்  சொன்னபடியே  நீ  செய்து,  அவனைக்  கொன்று,  அடக்கம்பண்ணி,  இவ்விதமாய்  யோவாப்  முகாந்தரமில்லாமல்  சிந்தின  இரத்தத்தை  என்னைவிட்டும்  என்  பிதாவின்  வீட்டைவிட்டும்  விலக்கிப்போடு.  (1இராஜாக்கள்  2:31)

appozhuthu  raajaa  avanai  noakki:  avan  sonnapadiyea  nee  seythu,  avanaik  kon’ru,  adakkampa'n'ni,  ivvithamaay  yoavaab  mugaantharamillaamal  sinthina  iraththaththai  ennaivittum  en  pithaavin  veettaivittum  vilakkippoadu.  (1iraajaakka’l  2:31)

அவன்  தன்னைப்பார்க்கிலும்  நீதியும்  நற்குணமுமுள்ள  இரண்டுபேராகிய  நேரின்  குமாரன்  அப்னேர்  என்னும்  இஸ்ரவேலின்  படைத்தலைவன்மேலும்,  ஏதேரின்  குமாரன்  அமாசா  என்னும்  யூதாவின்  படைத்தலைவன்மேலும்  விழுந்து,  என்  தகப்பனாகிய  தாவீதுக்குத்  தெரியாமல்  அவர்களைப்  பட்டயத்தால்  கொன்ற  அவனுடைய  இரத்தப்பழியைக்  கர்த்தர்  அவனுடைய  தலையின்மேல்  திரும்பப்பண்ணுவாராக.  (1இராஜாக்கள்  2:32)

avan  thannaippaarkkilum  neethiyum  na’rku'namumu'l'la  ira'ndupearaagiya  nearin  kumaaran  abnear  ennum  isravealin  padaiththalaivanmealum,  eathearin  kumaaran  amaasaa  ennum  yoothaavin  padaiththalaivanmealum  vizhunthu,  en  thagappanaagiya  thaaveethukkuth  theriyaamal  avarga'laip  pattayaththaal  kon’ra  avanudaiya  iraththappazhiyaik  karththar  avanudaiya  thalaiyinmeal  thirumbappa'n'nuvaaraaga.  (1iraajaakka’l  2:32)

இப்படியே  அவர்களுடைய  இரத்தப்பழி  என்றும்  யோவாபுடைய  தலையின்  மேலும்,  அவன்  சந்ததியாரின்  தலையின்  மேலும்  திரும்பவும்,  தாவீதுக்கும்  அவர்  சந்ததியாருக்கும்  அவர்  வீட்டாருக்கும்  அவர்  சிங்காசனத்திற்கும்  என்றென்றைக்கும்  கர்த்தராலே  சமாதானம்  உண்டாயிருக்கவும்  கடவது  என்றான்.  (1இராஜாக்கள்  2:33)

ippadiyea  avarga'ludaiya  iraththappazhi  en’rum  yoavaabudaiya  thalaiyin  mealum,  avan  santhathiyaarin  thalaiyin  mealum  thirumbavum,  thaaveethukkum  avar  santhathiyaarukkum  avar  veettaarukkum  avar  singgaasanaththi’rkum  en’ren’raikkum  karththaraalea  samaathaanam  u'ndaayirukkavum  kadavathu  en’raan.  (1iraajaakka’l  2:33)

அப்படியே  யோய்தாவின்  குமாரன்  பெனாயா  போய்,  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்;  அவன்  வனாந்தரத்திலிருக்கிற  தன்னுடைய  வீட்டிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  (1இராஜாக்கள்  2:34)

appadiyea  yoaythaavin  kumaaran  benaayaa  poay,  avanmeal  vizhunthu  avanaik  kon’rupoattaan;  avan  vanaantharaththilirukki’ra  thannudaiya  veettilea  adakkampa'n'nappattaan.  (1iraajaakka’l  2:34)

அவனுக்குப்  பதிலாக  ராஜா  யோய்தாவின்  குமாரன்  பெனாயாவை  இராணுவத்தின்மேலும்,  ஆசாரியனாகிய  சாதோக்கை  அபியத்தாரின்  ஸ்தானத்திலும்  வைத்தான்.  (1இராஜாக்கள்  2:35)

avanukkup  bathilaaga  raajaa  yoaythaavin  kumaaran  benaayaavai  iraa'nuvaththinmealum,  aasaariyanaagiya  saathoakkai  abiyaththaarin  sthaanaththilum  vaiththaan.  (1iraajaakka’l  2:35)

பின்பு  ராஜா  சீமேயியை  அழைப்பித்து,  அவனை  நோக்கி:  நீ  எருசலேமிலே  உனக்கு  ஒரு  வீட்டைக்  கட்டி,  அங்கேயிருந்து  எங்கேயாவது  வெளியே  போகாமல்,  அங்கேதானே  குடியிரு.  (1இராஜாக்கள்  2:36)

pinbu  raajaa  seemeayiyai  azhaippiththu,  avanai  noakki:  nee  erusaleamilea  unakku  oru  veettaik  katti,  anggeayirunthu  enggeayaavathu  ve'liyea  poagaamal,  anggeathaanea  kudiyiru.  (1iraajaakka’l  2:36)

நீ  வெளியே  போய்க்  கீதரோன்  ஆற்றைக்  கடக்கும்  நாளில்,  நீ  சாகவே  சாவாய்;  அப்பொழுது  உன்  இரத்தப்பழி  உன்  தலையின்மேல்  இருக்கும்  என்பதை  நீ  நிச்சயமாய்  அறிந்துகொள்  என்றான்.  (1இராஜாக்கள்  2:37)

nee  ve'liyea  poayk  keetharoan  aat’raik  kadakkum  naa'lil,  nee  saagavea  saavaay;  appozhuthu  un  iraththappazhi  un  thalaiyinmeal  irukkum  enbathai  nee  nichchayamaay  a’rinthuko'l  en’raan.  (1iraajaakka’l  2:37)

சீமேயி  ராஜாவைப்  பார்த்து:  அது  நல்ல  வார்த்தை;  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சொன்னபடியே,  உமது  அடியானாகிய  நான்  செய்வேன்  என்று  சொல்லி,  சீமேயி  அநேகநாள்  எருசலேமிலே  குடியிருந்தான்.  (1இராஜாக்கள்  2:38)

seemeayi  raajaavaip  paarththu:  athu  nalla  vaarththai;  raajaavaagiya  en  aa'ndavan  sonnapadiyea,  umathu  adiyaanaagiya  naan  seyvean  en’ru  solli,  seemeayi  aneaganaa'l  erusaleamilea  kudiyirunthaan.  (1iraajaakka’l  2:38)

மூன்று  வருஷம்  சென்றபோது,  சீமேயியின்  வேலைக்காரர்  இரண்டுபேர்  மாக்காவின்  குமாரனாகிய  ஆகீஸ்  என்னும்  காத்தின்  ராஜாவினிடத்துக்கு  ஓடிப்போனார்கள்;  உன்  வேலைக்காரர்  காத்  ஊரில்  இருக்கிறார்கள்  என்று  சீமேயிக்கு  அறிவித்தார்கள்.  (1இராஜாக்கள்  2:39)

moon’ru  varusham  sen’rapoathu,  seemeayiyin  vealaikkaarar  ira'ndupear  maakkaavin  kumaaranaagiya  aakees  ennum  kaaththin  raajaavinidaththukku  oadippoanaarga'l;  un  vealaikkaarar  kaath  ooril  irukki’raarga'l  en’ru  seemeayikku  a’riviththaarga'l.  (1iraajaakka’l  2:39)

அப்பொழுது  சீமேயி  எழுந்து,  தன்  கழுதையின்மேல்  சேணம்வைத்து,  தன்  வேலைக்காரரைத்  தேட,  காத்  ஊரிலிருக்கிற  ஆகீசிடத்துக்குப்  புறப்பட்டுப்போனான்;  இப்படிச்  சீமேயி  போய்,  தன்  வேலைக்காரரைக்  காத்  ஊரிலிருந்து  கொண்டுவந்தான்.  (1இராஜாக்கள்  2:40)

appozhuthu  seemeayi  ezhunthu,  than  kazhuthaiyinmeal  sea'namvaiththu,  than  vealaikkaararaith  theada,  kaath  oorilirukki’ra  aakeesidaththukkup  pu’rappattuppoanaan;  ippadich  seemeayi  poay,  than  vealaikkaararaik  kaath  oorilirunthu  ko'nduvanthaan.  (1iraajaakka’l  2:40)

சீமேயி  எருசலேமிலிருந்து  காத்  ஊருக்குப்  போய்,  திரும்பிவந்தான்  என்று  சாலொமோனுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  (1இராஜாக்கள்  2:41)

seemeayi  erusaleamilirunthu  kaath  oorukkup  poay,  thirumbivanthaan  en’ru  saalomoanukku  a’rivikkappattapoathu,  (1iraajaakka’l  2:41)

ராஜா  சீமேயியை  அழைப்பித்து:  நீ  வெளியே  புறப்பட்டு  எங்கேயாவது  போகிறநாளிலே  சாகவே  சாவாய்  என்பதை  நீ  நிச்சயமாய்  அறிந்துகொள்  என்று  நான்  உன்னைக்  கர்த்தர்மேல்  ஆணையிடச்  செய்து,  உனக்குத்  திடச்சாட்சியாகச்  சொல்லியிருக்க,  அதற்கு  நீ:  நான்  கேட்ட  வார்த்தை  நல்லதென்று  சொல்லவில்லையா?  (1இராஜாக்கள்  2:42)

raajaa  seemeayiyai  azhaippiththu:  nee  ve'liyea  pu’rappattu  enggeayaavathu  poagi’ranaa'lilea  saagavea  saavaay  enbathai  nee  nichchayamaay  a’rinthuko'l  en’ru  naan  unnaik  karththarmeal  aa'naiyidach  seythu,  unakkuth  thidachsaadchiyaagach  solliyirukka,  atha’rku  nee:  naan  keatta  vaarththai  nallathen’ru  sollavillaiyaa?  (1iraajaakka’l  2:42)

நீ  கர்த்தரின்  ஆணையையும்,  நான்  உனக்குக்  கற்பித்த  கட்டளையையும்  கைக்கொள்ளாதே  போனதென்ன?  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  2:43)

nee  karththarin  aa'naiyaiyum,  naan  unakkuk  ka’rpiththa  katta'laiyaiyum  kaikko'l'laathea  poanathenna?  en’ru  solli,  (1iraajaakka’l  2:43)

பின்னும்  ராஜா  சீமேயியைப்  பார்த்து:  நீ  என்  தகப்பனாகிய  தாவீதுக்குச்  செய்ததும்  உன்  மனதுக்குத்  தெரிந்திருக்கிறதுமான  எல்லாப்  பொல்லாப்பையும்  அறிந்திருக்கிறாய்;  ஆகையால்  கர்த்தர்  உன்  பொல்லாப்பை  உன்  தலையின்மேல்  திரும்பப்பண்ணுவார்.  (1இராஜாக்கள்  2:44)

pinnum  raajaa  seemeayiyaip  paarththu:  nee  en  thagappanaagiya  thaaveethukkuch  seythathum  un  manathukkuth  therinthirukki’rathumaana  ellaap  pollaappaiyum  a’rinthirukki’raay;  aagaiyaal  karththar  un  pollaappai  un  thalaiyinmeal  thirumbappa'n'nuvaar.  (1iraajaakka’l  2:44)

ராஜாவாகிய  சாலொமோனோ  ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்;  தாவீதின்  சிங்காசனம்  என்றைக்கும்  கர்த்தருக்கு  முன்பாக  உறுதியாயிருக்கும்  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  2:45)

raajaavaagiya  saalomoanoa  aaseervathikkappattavanaayiruppaan;  thaaveethin  singgaasanam  en’raikkum  karththarukku  munbaaga  u’ruthiyaayirukkum  en’ru  solli,  (1iraajaakka’l  2:45)

ராஜா  யோய்தாவின்  குமாரனாகிய  பெனாயாவுக்குக்  கட்டளைகொடுத்தான்;  அவன்  வெளியே  போய்,  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்.  ராஜ்யபாரம்  சாலொமோனின்  கையிலே  ஸ்திரப்பட்டது.  (1இராஜாக்கள்  2:46)

raajaa  yoaythaavin  kumaaranaagiya  benaayaavukkuk  katta'laikoduththaan;  avan  ve'liyea  poay,  avanmeal  vizhunthu  avanaik  kon’rupoattaan.  raajyabaaram  saalomoanin  kaiyilea  sthirappattathu.  (1iraajaakka’l  2:46)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!