Saturday, September 03, 2016

1 Iraajaakka'l 19 | 1 இராஜாக்கள் 19 | 1 Kings 19

எலியா  செய்த  எல்லாவற்றையும்,  அவன்  தீர்க்கதரிசிகளெல்லாரையும்  பட்டயத்தாலே  கொன்றுபோட்ட  செய்தி  அனைத்தையும்,  ஆகாப்  யேசபேலுக்கு  அறிவித்தான்.  (1இராஜாக்கள்  19:1)

eliyaa  seytha  ellaavat’raiyum,  avan  theerkkatharisiga'lellaaraiyum  pattayaththaalea  kon’rupoatta  seythi  anaiththaiyum,  aagaab  yeasabealukku  a’riviththaan.  (1iraajaakka’l  19:1)

அப்பொழுது  யேசபேல்  எலியாவினிடத்தில்  ஆள்  அனுப்பி:  அவர்களில்  ஒவ்வொருவனுடைய  பிராணனுக்குச்  செய்யப்பட்டதுபோல,  நான்  நாளை  இந்நேரத்தில்  உன்  பிராணனுக்குச்  செய்யாதேபோனால்,  தேவர்கள்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்கள்  என்று  சொல்லச்சொன்னாள்.  (1இராஜாக்கள்  19:2)

appozhuthu  yeasabeal  eliyaavinidaththil  aa'l  anuppi:  avarga'lil  ovvoruvanudaiya  piraa'nanukkuch  seyyappattathupoala,  naan  naa'lai  innearaththil  un  piraa'nanukkuch  seyyaatheapoanaal,  theavarga'l  atha’rkuch  sariyaagavum  atha’rku  athigamaagavum  enakkuch  seyyakkadavarga'l  en’ru  sollachsonnaa'l.  (1iraajaakka’l  19:2)

அவனுக்கு  அது  தெரிந்தபோது  எழுந்து,  தன்  பிராணனைக்  காக்க  யூதாவைச்சேர்ந்த  பெயெர்செபாவுக்குப்  புறப்பட்டுப்போய்,  தன்  வேலைக்காரனை  அங்கே  நிறுத்திவிட்டான்.  (1இராஜாக்கள்  19:3)

avanukku  athu  therinthapoathu  ezhunthu,  than  piraa'nanaik  kaakka  yoothaavaichsearntha  beyersebaavukkup  pu’rappattuppoay,  than  vealaikkaaranai  anggea  ni’ruththivittaan.  (1iraajaakka’l  19:3)

அவன்  வனாந்தரத்தில்  ஒருநாள்  பிரயாணம்  போய்,  ஒரு  சூரைச்செடியின்  கீழ்  உட்கார்ந்து,  தான்  சாகவேண்டும்  என்று  கோரி:  போதும்  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  எடுத்துக்கொள்ளும்;  நான்  என்  பிதாக்களைப்பார்க்கிலும்  நல்லவன்  அல்ல  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  19:4)

avan  vanaantharaththil  orunaa'l  pirayaa'nam  poay,  oru  sooraichsediyin  keezh  udkaarnthu,  thaan  saagavea'ndum  en’ru  koari:  poathum  karththaavea,  en  aaththumaavai  eduththukko'l'lum;  naan  en  pithaakka'laippaarkkilum  nallavan  alla  en’ru  solli,  (1iraajaakka’l  19:4)

ஒரு  சூரைச்செடியின்கீழ்ப்  படுத்துக்கொண்டு  நித்திரைபண்ணினான்;  அப்பொழுது  ஒரு  தூதன்  அவனைத்  தட்டியெழுப்பி:  எழுந்திருந்து  போஜனம்பண்ணு  என்றான்.  (1இராஜாக்கள்  19:5)

oru  sooraichsediyinkeezhp  paduththukko'ndu  niththiraipa'n'ninaan;  appozhuthu  oru  thoothan  avanaith  thattiyezhuppi:  ezhunthirunthu  poajanampa'n'nu  en’raan.  (1iraajaakka’l  19:5)

அவன்  விழித்துப்  பார்க்கிறபோது,  இதோ,  தழலில்  சுடப்பட்ட  அடையும்,  ஒரு  பாத்திரத்தில்  தண்ணீரும்  அவன்  தலைமாட்டில்  இருந்தது;  அப்பொழுது  அவன்,  புசித்துக்  குடித்துத்  திரும்பப்  படுத்துக்கொண்டான்.  (1இராஜாக்கள்  19:6)

avan  vizhiththup  paarkki’rapoathu,  ithoa,  thazhalil  sudappatta  adaiyum,  oru  paaththiraththil  tha'n'neerum  avan  thalaimaattil  irunthathu;  appozhuthu  avan,  pusiththuk  kudiththuth  thirumbap  paduththukko'ndaan.  (1iraajaakka’l  19:6)

கர்த்தருடைய  தூதன்  திரும்ப  இரண்டாந்தரம்  வந்து  அவனைத்  தட்டியெழுப்பி:  எழுந்திருந்து  போஜனம்பண்ணு;  நீ  பண்ணவேண்டிய  பிரயாணம்  வெகுதூரம்  என்றான்.  (1இராஜாக்கள்  19:7)

karththarudaiya  thoothan  thirumba  ira'ndaantharam  vanthu  avanaith  thattiyezhuppi:  ezhunthirunthu  poajanampa'n'nu;  nee  pa'n'navea'ndiya  pirayaa'nam  veguthooram  en’raan.  (1iraajaakka’l  19:7)

அப்பொழுது  அவன்  எழுந்திருந்து  புசித்துக்  குடித்து,  அந்தப்  போஜனத்தின்  பலத்தினால்  நாற்பதுநாள்  இரவுபகல்  ஓரேப்  என்னும்  தேவனுடைய  பர்வதமட்டும்  நடந்துபோனான்.  (1இராஜாக்கள்  19:8)

appozhuthu  avan  ezhunthirunthu  pusiththuk  kudiththu,  anthap  poajanaththin  balaththinaal  naa’rpathunaa'l  iravupagal  oareab  ennum  theavanudaiya  parvathamattum  nadanthupoanaan.  (1iraajaakka’l  19:8)

அங்கே  அவன்  ஒரு  கெபிக்குள்  போய்த்  தங்கினான்;  இதோ,  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாகி,  அவர்:  எலியாவே,  இங்கே  உனக்கு  என்ன  காரியம்  என்றார்.  (1இராஜாக்கள்  19:9)

anggea  avan  oru  kebikku'l  poayth  thangginaan;  ithoa,  karththarudaiya  vaarththai  avanukku  u'ndaagi,  avar:  eliyaavea,  inggea  unakku  enna  kaariyam  en’raar.  (1iraajaakka’l  19:9)

அதற்கு  அவன்:  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தருக்காக  வெகு  பக்திவைராக்கியமாயிருந்தேன்;  இஸ்ரவேல்  புத்திரர்  உமது  உடன்படிக்கையைத்  தள்ளிவிட்டார்கள்;  உம்முடைய  பலிபீடங்களை  இடித்து,  உம்முடைய  தீர்க்கதரிசிகளைப்  பட்டயத்தினால்  கொன்றுபோட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  மீதியாயிருக்கிறேன்;  என்  பிராணனையும்  வாங்கத்  தேடுகிறார்கள்  என்றான்.  (1இராஜாக்கள்  19:10)

atha’rku  avan:  seanaiga'lin  theavanaagiya  karththarukkaaga  vegu  bakthivairaakkiyamaayirunthean;  israveal  puththirar  umathu  udanpadikkaiyaith  tha'l'livittaarga'l;  ummudaiya  balipeedangga'lai  idiththu,  ummudaiya  theerkkatharisiga'laip  pattayaththinaal  kon’rupoattaarga'l;  naan  oruvanmaaththiram  meethiyaayirukki’rean;  en  piraa'nanaiyum  vaanggath  theadugi’raarga'l  en’raan.  (1iraajaakka’l  19:10)

அப்பொழுது  அவர்:  நீ  வெளியே  வந்து  கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதத்தில்  நில்  என்றார்;  அப்பொழுது,  இதோ,  கர்த்தர்  கடந்துபோனார்;  கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதங்களைப்  பிளக்கிறதும்  கன்மலைகளை  உடைக்கிறதுமான  பலத்த  பெருங்காற்று  உண்டாயிற்று;  ஆனாலும்  அந்தக்  காற்றிலே  கர்த்தர்  இருக்கவில்லை;  காற்றிற்குப்பின்  பூமி  அதிர்ச்சி  உண்டாயிற்று;  பூமி  அதிர்ச்சியிலும்  கர்த்தர்  இருக்கவில்லை.  (1இராஜாக்கள்  19:11)

appozhuthu  avar:  nee  ve'liyea  vanthu  karththarukku  munbaagap  parvathaththil  nil  en’raar;  appozhuthu,  ithoa,  karththar  kadanthupoanaar;  karththarukku  munbaagap  parvathangga'laip  pi'lakki’rathum  kanmalaiga'lai  udaikki’rathumaana  balaththa  perungkaat’ru  u'ndaayit’ru;  aanaalum  anthak  kaat’rilea  karththar  irukkavillai;  kaat’ri’rkuppin  boomi  athirchchi  u'ndaayit’ru;  boomi  athirchchiyilum  karththar  irukkavillai.  (1iraajaakka’l  19:11)

பூமி  அதிர்ச்சிக்குப்பின்  அக்கினி  உண்டாயிற்று;  அக்கினியிலும்  கர்த்தர்  இருக்கவில்லை;  அக்கினிக்குப்பின்  அமர்ந்த  மெல்லியசத்தம்  உண்டாயிற்று.  (1இராஜாக்கள்  19:12)

boomi  athirchchikkuppin  akkini  u'ndaayit’ru;  akkiniyilum  karththar  irukkavillai;  akkinikkuppin  amarntha  melliyasaththam  u'ndaayit’ru.  (1iraajaakka’l  19:12)

அதை  எலியா  கேட்டபோது,  தன்  சால்வையினால்  தன்  முகத்தை  மூடிக்கொண்டு  வெளியே  வந்து,  கெபியின்  வாசலில்  நின்றான்.  அப்பொழுது,  இதோ,  எலியாவே,  இங்கே  உனக்கு  என்ன  காரியம்  என்கிற  சத்தம்  அவனுக்கு  உண்டாயிற்று.  (1இராஜாக்கள்  19:13)

athai  eliyaa  keattapoathu,  than  saalvaiyinaal  than  mugaththai  moodikko'ndu  ve'liyea  vanthu,  kebiyin  vaasalil  nin’raan.  appozhuthu,  ithoa,  eliyaavea,  inggea  unakku  enna  kaariyam  engi’ra  saththam  avanukku  u'ndaayit’ru.  (1iraajaakka’l  19:13)

அதற்கு  அவன்:  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தருக்காக  வெகு  பக்திவைராக்கியமாயிருந்தேன்;  இஸ்ரவேல்  புத்திரர்  உமது  உடன்படிக்கையைத்  தள்ளிவிட்டார்கள்;  உம்முடைய  பலிபீடங்களை  இடித்து,  உம்முடைய  தீர்க்கதரிசிகளைப்  பட்டயத்தினால்  கொன்றுபோட்டார்கள்,  நான்  ஒருவன்மாத்திரம்  மீதியாயிருக்கிறேன்;  என்  பிராணனையும்  வாங்கத்  தேடுகிறார்கள்  என்றான்.  (1இராஜாக்கள்  19:14)

atha’rku  avan:  seanaiga'lin  theavanaagiya  karththarukkaaga  vegu  bakthivairaakkiyamaayirunthean;  israveal  puththirar  umathu  udanpadikkaiyaith  tha'l'livittaarga'l;  ummudaiya  balipeedangga'lai  idiththu,  ummudaiya  theerkkatharisiga'laip  pattayaththinaal  kon’rupoattaarga'l,  naan  oruvanmaaththiram  meethiyaayirukki’rean;  en  piraa'nanaiyum  vaanggath  theadugi’raarga'l  en’raan.  (1iraajaakka’l  19:14)

அப்பொழுது  கர்த்தர்  அவனைப்  பார்த்து:  நீ  தமஸ்குவின்  வழியாய்  வனாந்தரத்திற்குத்  திரும்பிப்போய்,  ஆசகேலைச்  சீரியாவின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  (1இராஜாக்கள்  19:15)

appozhuthu  karththar  avanaip  paarththu:  nee  thamaskuvin  vazhiyaay  vanaantharaththi’rkuth  thirumbippoay,  aasakealaich  seeriyaavinmeal  raajaavaaga  abisheagampa'n'ni,  (1iraajaakka’l  19:15)

பின்பு  நிம்சியின்  குமாரனாகிய  யெகூவை  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  ஆபேல்மேகொலா  ஊரானான  சாப்பாத்தின்  குமாரனாகிய  எலிசாவை  உன்  ஸ்தானத்திலே  தீர்க்கதரிசியாக  அபிஷேகம்பண்ணு.  (1இராஜாக்கள்  19:16)

pinbu  nimsiyin  kumaaranaagiya  yegoovai  isravealinmeal  raajaavaaga  abisheagampa'n'ni,  aabealmeagolaa  ooraanaana  saappaaththin  kumaaranaagiya  elisaavai  un  sthaanaththilea  theerkkatharisiyaaga  abisheagampa'n'nu.  (1iraajaakka’l  19:16)

சம்பவிப்பதாவது:  ஆசகேலின்  பட்டயத்திற்குத்  தப்பினவனை  யெகூ  கொன்றுபோடுவான்;  யெகூவின்  பட்டயத்திற்குத்  தப்பினவனை  எலிசா  கொன்றுபோடுவான்.  (1இராஜாக்கள்  19:17)

sambavippathaavathu:  aasakealin  pattayaththi’rkuth  thappinavanai  yegoo  kon’rupoaduvaan;  yegoovin  pattayaththi’rkuth  thappinavanai  elisaa  kon’rupoaduvaan.  (1iraajaakka’l  19:17)

ஆனாலும்  பாகாலுக்கு  முடங்காதிருக்கிற  முழங்கால்களையும்,  அவனை  முத்தஞ்செய்யாதிருக்கிற  வாய்களையுமுடைய  ஏழாயிரம்பேரை  இஸ்ரவேலிலே  மீதியாக  வைத்திருக்கிறேன்  என்றார்.  (1இராஜாக்கள்  19:18)

aanaalum  baagaalukku  mudanggaathirukki’ra  muzhangkaalga'laiyum,  avanai  muththagnseyyaathirukki’ra  vaayga'laiyumudaiya  eazhaayirampearai  isravealilea  meethiyaaga  vaiththirukki’rean  en’raar.  (1iraajaakka’l  19:18)

அப்படியே  அவன்  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  பன்னிரண்டு  ஏர்  பூட்டி  உழுத  சாப்பாத்தின்  குமாரனாகிய  எலிசாவைக்  கண்டான்;  அவன்  பன்னிரண்டாம்  ஏரை  ஓட்டிக்கொண்டிருந்தான்;  எலியா  அவன்  இருக்கும்  இடமட்டும்  போய்,  அவன்மேல்  தன்  சால்வையைப்  போட்டான்.  (1இராஜாக்கள்  19:19)

appadiyea  avan  avvidam  vittup  pu’rappattuppoay,  pannira'ndu  ear  pootti  uzhutha  saappaaththin  kumaaranaagiya  elisaavaik  ka'ndaan;  avan  pannira'ndaam  earai  oattikko'ndirunthaan;  eliyaa  avan  irukkum  idamattum  poay,  avanmeal  than  saalvaiyaip  poattaan.  (1iraajaakka’l  19:19)

அப்பொழுது  அவன்  மாடுகளைவிட்டு,  எலியாவின்  பிறகே  ஓடி:  நான்  என்  தகப்பனையும்  என்  தாயையும்  முத்தஞ்செய்ய  உத்தரவுகொடும்,  அதற்குப்பின்  உம்மைப்  பின்தொடர்வேன்  என்றான்.  அதற்கு  அவன்:  போய்த்  திரும்பிவா;  நான்  உனக்குச்  செய்ததை  நினைத்துக்கொள்  என்றான்.  (1இராஜாக்கள்  19:20)

appozhuthu  avan  maaduga'laivittu,  eliyaavin  pi’ragea  oadi:  naan  en  thagappanaiyum  en  thaayaiyum  muththagnseyya  uththaravukodum,  atha’rkuppin  ummaip  pinthodarvean  en’raan.  atha’rku  avan:  poayth  thirumbivaa;  naan  unakkuch  seythathai  ninaiththukko'l  en’raan.  (1iraajaakka’l  19:20)

அப்பொழுது  அவன்  இவனை  விட்டுப்  போய்,  ஓர்  ஏர்மாடுகளைப்  பிடித்து  அடித்து,  ஏரின்  மரமுட்டுகளால்  அவைகளின்  இறைச்சியைச்  சமைத்து  ஜனங்களுக்குக்  கொடுத்தான்;  அவர்கள்  சாப்பிட்டபிற்பாடு,  அவன்  எழுந்து,  எலியாவுக்குப்  பின்சென்று  அவனுக்கு  ஊழியஞ்செய்தான்.  (1இராஜாக்கள்  19:21)

appozhuthu  avan  ivanai  vittup  poay,  oar  earmaaduga'laip  pidiththu  adiththu,  earin  maramuttuga'laal  avaiga'lin  i’raichchiyaich  samaiththu  janangga'lukkuk  koduththaan;  avarga'l  saappittapi’rpaadu,  avan  ezhunthu,  eliyaavukkup  pinsen’ru  avanukku  oozhiyagnseythaan.  (1iraajaakka’l  19:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!