Saturday, September 03, 2016

1 Iraajaakka'l 16 | 1 இராஜாக்கள் 16 | 1 Kings 16

பாஷாவுக்கு  விரோதமாகக்  கர்த்தருடைய  வார்த்தை  ஆனானியின்  குமாரனாகிய  யெகூவுக்கு  உண்டாயிற்று,  அவர்:  (1இராஜாக்கள்  16:1)

baashaavukku  viroathamaagak  karththarudaiya  vaarththai  aanaaniyin  kumaaranaagiya  yegoovukku  u'ndaayit’ru,  avar:  (1iraajaakka’l  16:1)

நான்  உன்னைத்  தூளிலிருந்து  உயர்த்தி,  உன்னை  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்  தலைவனாக  வைத்திருக்கையில்,  நீ  யெரொபெயாமின்  வழியிலே  நடந்து,  என்  ஜனமாகிய  இஸ்ரவேல்  தங்கள்  பாவங்களால்  எனக்குக்  கோபமுண்டாக்கும்படி  அவர்களைப்  பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால்,  (1இராஜாக்கள்  16:2)

naan  unnaith  thoo'lilirunthu  uyarththi,  unnai  en  janamaagiya  isravealinmeal  thalaivanaaga  vaiththirukkaiyil,  nee  yerobeyaamin  vazhiyilea  nadanthu,  en  janamaagiya  israveal  thangga'l  paavangga'laal  enakkuk  koabamu'ndaakkumpadi  avarga'laip  paavagnseyyappa'n'nugi’rapadiyinaal,  (1iraajaakka’l  16:2)

இதோ,  நான்  பாஷாவின்  பின்னடியாரையும்  அவன்  வீட்டாரின்  பின்னடியாரையும்  அழித்துப்போட்டு,  உன்  வீட்டை  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  வீட்டைப்போல  ஆக்குவேன்.  (1இராஜாக்கள்  16:3)

ithoa,  naan  baashaavin  pinnadiyaaraiyum  avan  veettaarin  pinnadiyaaraiyum  azhiththuppoattu,  un  veettai  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  veettaippoala  aakkuvean.  (1iraajaakka’l  16:3)

பாஷாவின்  சந்ததியிலே  பட்டணத்தில்  சாகிறவனை  நாய்கள்  தின்னும்;  வெளியிலே  சாகிறவனை  ஆகாயத்துப்  பறவைகள்  தின்னும்  என்றார்.  (1இராஜாக்கள்  16:4)

baashaavin  santhathiyilea  patta'naththil  saagi’ravanai  naayga'l  thinnum;  ve'liyilea  saagi’ravanai  aagaayaththup  pa’ravaiga'l  thinnum  en’raar.  (1iraajaakka’l  16:4)

பாஷாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்ததும்,  அவனுடைய  வல்லமையும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  16:5)

baashaavin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythathum,  avanudaiya  vallamaiyum,  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  16:5)

பாஷா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து  திர்சாவில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ஏலா  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (1இராஜாக்கள்  16:6)

baashaa  than  pithaakka'loadea  niththiraiyadainthu  thirsaavil  adakkampa'n'nappattaan;  avan  kumaaranaagiya  ealaa  avan  sthaanaththil  raajaavaanaan.  (1iraajaakka’l  16:6)

பாஷா  தன்  கைகளின்  செய்கையால்  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கி,  அவர்  பார்வைக்குச்  செய்த  எல்லாப்  பொல்லாப்பினிமித்தமும்,  அவன்  யெரொபெயாமின்  வீட்டாரை  வெட்டிப்போட்டதினிமித்தமும்,  இவர்களைப்போல்  ஆவான்  என்று  அவனுக்கும்  அவன்  வீட்டுக்கும்  விரோதமாக  ஆனானியின்  குமாரனாகிய  யெகூ  என்னும்  தீர்க்கதரிசியினால்  கர்த்தருடைய  வார்த்தை  பின்னும்  உண்டாயிற்று.  (1இராஜாக்கள்  16:7)

baashaa  than  kaiga'lin  seygaiyaal  karththarukkuk  koabamu'ndaakki,  avar  paarvaikkuch  seytha  ellaap  pollaappinimiththamum,  avan  yerobeyaamin  veettaarai  vettippoattathinimiththamum,  ivarga'laippoal  aavaan  en’ru  avanukkum  avan  veettukkum  viroathamaaga  aanaaniyin  kumaaranaagiya  yegoo  ennum  theerkkatharisiyinaal  karththarudaiya  vaarththai  pinnum  u'ndaayit’ru.  (1iraajaakka’l  16:7)

யூதாவின்  ராஜாவான  ஆசாவின்  இருபத்தாறாம்  வருஷத்திலே  பாஷாவின்  குமாரனாகிய  ஏலா  இஸ்ரவேலின்மேல்  திர்சாவிலே  ராஜாவாகி  இரண்டு  வருஷம்  அரசாண்டான்.  (1இராஜாக்கள்  16:8)

yoothaavin  raajaavaana  aasaavin  irubaththaa’raam  varushaththilea  baashaavin  kumaaranaagiya  ealaa  isravealinmeal  thirsaavilea  raajaavaagi  ira'ndu  varusham  arasaa'ndaan.  (1iraajaakka’l  16:8)

இரதங்களில்  பாதிபங்குக்குத்  தலைவனாகிய  சிம்ரி  என்னும்  அவன்  ஊழியக்காரன்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  அவன்  திர்சாவிலே  அவ்விடத்து  அரமனை  உக்கிராணக்காரனாகிய  அர்சாவின்  வீட்டிலே  குடித்து  வெறி  கொண்டிருக்கையில்,  (1இராஜாக்கள்  16:9)

irathangga'lil  paathipanggukkuth  thalaivanaagiya  simri  ennum  avan  oozhiyakkaaran  avanukku  viroathamaayk  kattuppaadupa'n'ni,  avan  thirsaavilea  avvidaththu  aramanai  ukkiraa'nakkaaranaagiya  arsaavin  veettilea  kudiththu  ve’ri  ko'ndirukkaiyil,  (1iraajaakka’l  16:9)

சிம்ரி  உள்ளே  புகுந்து,  யூதாவின்  ராஜாவாகிய  ஆசாவின்  இருபத்தேழாம்  வருஷத்தில்  அவனை  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (1இராஜாக்கள்  16:10)

simri  u'l'lea  pugunthu,  yoothaavin  raajaavaagiya  aasaavin  irubaththeazhaam  varushaththil  avanai  vettik  kon’rupoattu,  avan  sthaanaththil  raajaavaanaan.  (1iraajaakka’l  16:10)

அவன்  ராஜாவாகி,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்தபோது,  அவன்  பாஷாவின்  வீட்டாரையெல்லாம்  வெட்டிப்போட்டான்;  அவன்  இனத்தாரையாகிலும்,  அவன்  சிநேகிதரையாகிலும்,  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாயையாகிலும்,  அவன்  உயிரோடே  வைக்கவில்லை.  (1இராஜாக்கள்  16:11)

avan  raajaavaagi,  singgaasanaththinmeal  udkaarnthapoathu,  avan  baashaavin  veettaaraiyellaam  vettippoattaan;  avan  inaththaaraiyaagilum,  avan  sineagitharaiyaagilum,  suvaril  neervidum  oru  naayaiyaagilum,  avan  uyiroadea  vaikkavillai.  (1iraajaakka’l  16:11)

அப்படியே  பாஷாவும்,  அவன்  குமாரனாகிய  ஏலாவும்,  தங்கள்  வீணான  விக்கிரகங்களினாலே  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கிச்  செய்ததும்  இஸ்ரவேலைச்  செய்யப்பண்ணினதுமான  அவர்களுடைய  எல்லாப்  பாவங்களினிமித்தமும்,  (1இராஜாக்கள்  16:12)

appadiyea  baashaavum,  avan  kumaaranaagiya  ealaavum,  thangga'l  vee'naana  vikkiragangga'linaalea  isravealin  theavanaagiya  karththarukkuk  koabamu'ndaakkich  seythathum  isravealaich  seyyappa'n'ninathumaana  avarga'ludaiya  ellaap  paavangga'linimiththamum,  (1iraajaakka’l  16:12)

கர்த்தர்  தீர்க்கதரிசியாகிய  யெகூவினால்  பாஷாவைக்குறித்துச்  சொல்லியிருந்த  அவருடைய  வார்த்தையின்படியே,  சிம்ரி  பாஷாவின்  வீட்டாரையெல்லாம்  அழித்துப்போட்டான்.  (1இராஜாக்கள்  16:13)

karththar  theerkkatharisiyaagiya  yegoovinaal  baashaavaikku’riththuch  solliyiruntha  avarudaiya  vaarththaiyinpadiyea,  simri  baashaavin  veettaaraiyellaam  azhiththuppoattaan.  (1iraajaakka’l  16:13)

ஏலாவின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  16:14)

ealaavin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  16:14)

யூதாவின்  ராஜாவாகிய  ஆசாவின்  இருபத்தேழாம்  வருஷத்திலே  சிம்ரி  திர்சாவிலே  ஏழுநாள்  ராஜாவாயிருந்தான்;  ஜனங்கள்  அப்பொழுது  பெலிஸ்தருக்கு  இருக்கிற  கிபெத்தோனுக்கு  எதிராகப்  பாளயமிறங்கியிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  16:15)

yoothaavin  raajaavaagiya  aasaavin  irubaththeazhaam  varushaththilea  simri  thirsaavilea  eazhunaa'l  raajaavaayirunthaan;  janangga'l  appozhuthu  pelistharukku  irukki’ra  kibeththoanukku  ethiraagap  paa'layami’ranggiyirunthaarga'l.  (1iraajaakka’l  16:15)

சிம்ரி  கட்டுப்பாடுபண்ணி,  ராஜாவைக்  கொன்றுபோட்டான்  என்பதை  அங்கே  பாளயமிறங்கின  ஜனங்கள்  கேட்டபோது,  இஸ்ரவேலரெல்லாம்  அந்நாளிலேதானே  பாளயத்திலே  படைத்தலைவனாகிய  உம்ரியை  இஸ்ரவேல்மேல்  ராஜாவாக்கினார்கள்.  (1இராஜாக்கள்  16:16)

simri  kattuppaadupa'n'ni,  raajaavaik  kon’rupoattaan  enbathai  anggea  paa'layami’ranggina  janangga'l  keattapoathu,  isravealarellaam  annaa'lileathaanea  paa'layaththilea  padaiththalaivanaagiya  umriyai  isravealmeal  raajaavaakkinaarga'l.  (1iraajaakka’l  16:16)

அப்பொழுது  உம்ரியும்  அவனோடேகூட  இஸ்ரவேல்  அனைத்தும்  கிபெத்தோனிலிருந்து  வந்து,  திர்சாவை  முற்றிக்கை  போட்டார்கள்.  (1இராஜாக்கள்  16:17)

appozhuthu  umriyum  avanoadeakooda  israveal  anaiththum  kibeththoanilirunthu  vanthu,  thirsaavai  mut’rikkai  poattaarga'l.  (1iraajaakka’l  16:17)

பட்டணம்  பிடிபட்டதைச்  சிம்ரி  கண்டபோது,  அவன்  ராஜாவின்  வீடாகிய  அரமனைக்குள்  பிரவேசித்து,  தான்  இருக்கிற  ராஜ  அரமனையைத்  தீக்கொளுத்தி,  அதிலே  செத்தான்.  (1இராஜாக்கள்  16:18)

patta'nam  pidipattathaich  simri  ka'ndapoathu,  avan  raajaavin  veedaagiya  aramanaikku'l  piraveasiththu,  thaan  irukki’ra  raaja  aramanaiyaith  theekko'luththi,  athilea  seththaan.  (1iraajaakka’l  16:18)

அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  யெரொபெயாமின்  வழியிலும்  அவன்  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  அவன்  பாவத்திலும்  நடந்ததினால்,  கட்டிக்கொண்ட  அவனுடைய  பாவங்களினிமித்தம்  அப்படி  நடந்தது.  (1இராஜாக்கள்  16:19)

avan  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  yerobeyaamin  vazhiyilum  avan  isravealaip  paavagnseyyappa'n'nina  avan  paavaththilum  nadanthathinaal,  kattikko'nda  avanudaiya  paavangga'linimiththam  appadi  nadanthathu.  (1iraajaakka’l  16:19)

சிம்ரியின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  பண்ணின  அவனுடைய  கட்டுப்பாடும்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  16:20)

simriyin  mat’ra  varththamaanangga'lum,  avan  pa'n'nina  avanudaiya  kattuppaadum  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  16:20)

அப்பொழுது  இஸ்ரவேல்  ஜனங்கள்  இரண்டு  வகுப்பாய்ப்  பிரிந்து,  பாதி  ஜனங்கள்  கீனாத்தின்  குமாரனாகிய  திப்னியை  ராஜாவாக்க,  அவனைப்  பின்பற்றினார்கள்;  பாதி  ஜனங்கள்  உம்ரியைப்  பின்பற்றினார்கள்.  (1இராஜாக்கள்  16:21)

appozhuthu  israveal  janangga'l  ira'ndu  vaguppaayp  pirinthu,  paathi  janangga'l  keenaaththin  kumaaranaagiya  thibniyai  raajaavaakka,  avanaip  pinpat’rinaarga'l;  paathi  janangga'l  umriyaip  pinpat’rinaarga'l.  (1iraajaakka’l  16:21)

ஆனாலும்  கீனாத்தின்  குமாரனாகிய  திப்னியைப்  பின்பற்றின  ஜனங்களைப்பார்க்கிலும்,  உம்ரியைப்  பின்பற்றின  ஜனங்கள்  பலத்துப்போனார்கள்;  திப்னி  செத்துப்போனான்;  உம்ரி  அரசாண்டான்.  (1இராஜாக்கள்  16:22)

aanaalum  keenaaththin  kumaaranaagiya  thibniyaip  pinpat’rina  janangga'laippaarkkilum,  umriyaip  pinpat’rina  janangga'l  balaththuppoanaarga'l;  thibni  seththuppoanaan;  umri  arasaa'ndaan.  (1iraajaakka’l  16:22)

யூதாவின்  ராஜாவாகிய  ஆசாவின்  முப்பத்தோராம்  வருஷத்தில்,  உம்ரி  இஸ்ரவேல்மேல்  ராஜாவாகி,  பன்னிரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அவன்  திர்சாவிலே  ஆறுவருஷம்  அரசாண்டு,  (1இராஜாக்கள்  16:23)

yoothaavin  raajaavaagiya  aasaavin  muppaththoaraam  varushaththil,  umri  isravealmeal  raajaavaagi,  pannira'ndu  varusham  raajyabaarampa'n'ninaan;  avan  thirsaavilea  aa’ruvarusham  arasaa'ndu,  (1iraajaakka’l  16:23)

பின்பு  சேமேரின்  கையிலிருந்து  சமாரியா  மலையை  இரண்டு  தாலந்து  வெள்ளிக்கு  வாங்கி,  அந்த  மலையின்மேல்  ஒரு  பட்டணத்தைக்  கட்டி,  அதற்கு  மலையினுடைய  எஜமானாயிருந்த  சேமேருடைய  பேரின்படியே  சமாரியா  என்னும்  பேரைத்  தரித்தான்.  (1இராஜாக்கள்  16:24)

pinbu  seamearin  kaiyilirunthu  samaariyaa  malaiyai  ira'ndu  thaalanthu  ve'l'likku  vaanggi,  antha  malaiyinmeal  oru  patta'naththaik  katti,  atha’rku  malaiyinudaiya  ejamaanaayiruntha  seamearudaiya  pearinpadiyea  samaariyaa  ennum  pearaith  thariththaan.  (1iraajaakka’l  16:24)

உம்ரி  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்து,  (1இராஜாக்கள்  16:25)

umri  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  thanakku  munniruntha  ellaaraippaarkkilum  keadaay  nadanthu,  (1iraajaakka’l  16:25)

நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  சகல  வழியிலும்,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குத்  தங்கள்  வீணான  விக்கிரகங்களாலே  கோபம்  மூட்டும்படியாய்  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  அவனுடைய  பாவங்களிலும்  நடந்தான்.  (1இராஜாக்கள்  16:26)

neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  sagala  vazhiyilum,  isravealin  theavanaagiya  karththarukkuth  thangga'l  vee'naana  vikkiragangga'laalea  koabam  moottumpadiyaay  isravealaip  paavagnseyyappa'n'nina  avanudaiya  paavangga'lilum  nadanthaan.  (1iraajaakka’l  16:26)

உம்ரி  செய்த  அவனுடைய  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  காண்பித்த  வல்லமையும்,  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  16:27)

umri  seytha  avanudaiya  mat’ra  varththamaanangga'lum,  avan  kaa'nbiththa  vallamaiyum,  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  16:27)

உம்ரி  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  சமாரியாவிலே  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ஆகாப்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (1இராஜாக்கள்  16:28)

umri  than  pithaakka'loadea  niththiraiyadainthu,  samaariyaavilea  adakkampa'n'nappattaan;  avan  kumaaranaagiya  aagaab  avan  sthaanaththil  raajaavaanaan.  (1iraajaakka’l  16:28)

யூதாவின்  ராஜாவாகிய  ஆசாவின்  முப்பத்தெட்டாம்  வருஷத்தில்  உம்ரியின்  குமாரனாகிய  ஆகாப்  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாகி,  சமாரியாவில்  இஸ்ரவேலின்மேல்  இருபத்திரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்.  (1இராஜாக்கள்  16:29)

yoothaavin  raajaavaagiya  aasaavin  muppaththettaam  varushaththil  umriyin  kumaaranaagiya  aagaab  isravealinmeal  raajaavaagi,  samaariyaavil  isravealinmeal  irubaththira'ndu  varusham  raajyabaarampa'n'ninaan.  (1iraajaakka’l  16:29)

உம்ரியின்  குமாரனாகிய  ஆகாப்,  தனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  (1இராஜாக்கள்  16:30)

umriyin  kumaaranaagiya  aagaab,  thanakku  munniruntha  ellaaraippaarkkilum  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan.  (1iraajaakka’l  16:30)

நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  பாவங்களில்  நடப்பது  அவனுக்குக்  கொஞ்சக்காரியமென்று  நினைத்தாற்போல்  அவன்  சீதோனியரின்  ராஜாவாகிய  ஏத்பாகாலின்  குமாரத்தி  யேசபேலை  விவாகம்பண்ணினதுமல்லாமல்,  அவன்  போய்  பாகாலையும்  சேவித்து  அதைப்  பணிந்துகொண்டு,  (1இராஜாக்கள்  16:31)

neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  paavangga'lil  nadappathu  avanukkuk  kognchakkaariyamen’ru  ninaiththaa’rpoal  avan  seethoaniyarin  raajaavaagiya  eathbaagaalin  kumaaraththi  yeasabealai  vivaagampa'n'ninathumallaamal,  avan  poay  baagaalaiyum  seaviththu  athaip  pa'ninthuko'ndu,  (1iraajaakka’l  16:31)

தான்  சமாரியாவிலே  கட்டின  பாகாலின்  கோவிலில்  பாகாலுக்குப்  பலிபீடத்தை  எடுப்பித்தான்.  (1இராஜாக்கள்  16:32)

thaan  samaariyaavilea  kattina  baagaalin  koavilil  baagaalukkup  balipeedaththai  eduppiththaan.  (1iraajaakka’l  16:32)

ஆகாப்  ஒரு  விக்கிரகத்தோப்பையும்  வைத்து,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபம்  உண்டாக்கும்படிக்கு  தனக்கு  முன்னிருந்த  இஸ்ரவேலின்  ராஜாக்களெல்லாம்  செய்ததைப்பார்க்கிலும்  அதிகமாய்ச்  செய்துவந்தான்.  (1இராஜாக்கள்  16:33)

aagaab  oru  vikkiragaththoappaiyum  vaiththu,  isravealin  theavanaagiya  karththarukkuk  koabam  u'ndaakkumpadikku  thanakku  munniruntha  isravealin  raajaakka'lellaam  seythathaippaarkkilum  athigamaaych  seythuvanthaan.  (1iraajaakka’l  16:33)

அவன்  நாட்களிலே  பெத்தேல்  ஊரானாகிய  ஈயேல்  எரிகோவைக்  கட்டினான்;  கர்த்தர்  நூனின்  குமாரனாகிய  யோசுவாவைக்கொண்டு  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  அவன்  அதின்  அஸ்திபாரத்தைப்  போடுகிறபோது,  அபிராம்  என்னும்  தன்  மூத்த  குமாரனையும்,  அதின்  வாசல்களை  வைக்கிறபோது  செகூப்  என்னும்  தன்  இளையகுமாரனையும்  சாகக்கொடுத்தான்.  (1இராஜாக்கள்  16:34)

avan  naadka'lilea  beththeal  ooraanaagiya  eeyeal  erigoavaik  kattinaan;  karththar  noonin  kumaaranaagiya  yoasuvaavaikko'ndu  solliyiruntha  vaarththaiyinpadiyea,  avan  athin  asthibaaraththaip  poadugi’rapoathu,  abiraam  ennum  than  mooththa  kumaaranaiyum,  athin  vaasalga'lai  vaikki’rapoathu  segoob  ennum  than  i'laiyakumaaranaiyum  saagakkoduththaan.  (1iraajaakka’l  16:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!