Saturday, September 03, 2016

1 Iraajaakka'l 14 | 1 இராஜாக்கள் 14 | 1 Kings 14

அக்காலத்திலே  யெரொபெயாமின்  குமாரனாகிய  அபியா  வியாதியில்  விழுந்தான்.  (1இராஜாக்கள்  14:1)

akkaalaththilea  yerobeyaamin  kumaaranaagiya  abiyaa  viyaathiyil  vizhunthaan.  (1iraajaakka’l  14:1)

அப்பொழுது  யெரொபெயாம்  தன்  மனைவியைப்  பார்த்து:  நீ  எழுந்து,  நீ  யெரொபெயாமின்  மனைவியென்று  ஒருவரும்  அறியாதபடிக்கு  வேஷம்மாறி  சீலோவுக்குப்  போ;  இந்த  ஜனத்தின்மேல்  நான்  ராஜாவாவேன்  என்று  என்னோடே  சொன்ன  தீர்க்கதரிசியாகிய  அகியா  அங்கே  இருக்கிறான்.  (1இராஜாக்கள்  14:2)

appozhuthu  yerobeyaam  than  manaiviyaip  paarththu:  nee  ezhunthu,  nee  yerobeyaamin  manaiviyen’ru  oruvarum  a’riyaathapadikku  veashammaa’ri  seeloavukkup  poa;  intha  janaththinmeal  naan  raajaavaavean  en’ru  ennoadea  sonna  theerkkatharisiyaagiya  agiyaa  anggea  irukki’raan.  (1iraajaakka’l  14:2)

நீ  உன்  கையிலே  பத்து  அப்பங்களையும்,  பணியாரங்களையும்,  ஒரு  கலசம்  தேனையும்  எடுத்துக்கொண்டு  அவனிடத்துக்குப்  போ;  பிள்ளைக்குச்  சம்பவிக்கப்போகிறது  இன்னதென்று  அவன்  உனக்கு  அறிவிப்பான்  என்றான்.  (1இராஜாக்கள்  14:3)

nee  un  kaiyilea  paththu  appangga'laiyum,  pa'niyaarangga'laiyum,  oru  kalasam  theanaiyum  eduththukko'ndu  avanidaththukkup  poa;  pi'l'laikkuch  sambavikkappoagi’rathu  innathen’ru  avan  unakku  a’rivippaan  en’raan.  (1iraajaakka’l  14:3)

அப்படியே  யெரொபெயாமின்  மனைவி  செய்தாள்;  அவள்  எழுந்து  சீலோவுக்குப்  போய்,  அகியாவின்  வீட்டிற்குள்  பிரவேசித்தாள்;  அகியாவோ  முதிர்  வயதானதினால்  அவன்  கண்கள்  மங்கலடைந்து  பார்க்கக்கூடாதிருந்தான்.  (1இராஜாக்கள்  14:4)

appadiyea  yerobeyaamin  manaivi  seythaa'l;  ava'l  ezhunthu  seeloavukkup  poay,  agiyaavin  veetti’rku'l  piraveasiththaa'l;  agiyaavoa  muthir  vayathaanathinaal  avan  ka'nga'l  manggaladainthu  paarkkakkoodaathirunthaan.  (1iraajaakka’l  14:4)

கர்த்தர்  அகியாவினிடத்தில்:  இதோ,  யெரொபெயாமின்  மனைவி  வியாதியாயிருக்கிற  தன்  குமாரனுக்காக  உன்னை  ஒரு  விசேஷம்கேட்க  வருகிறாள்;  நீ  அவளுக்கு  இன்ன  இன்ன  பிரகாரமாகச்  சொல்லவேண்டும்;  அவள்  உட்பிரவேசிக்கிறபோது,  தன்னை  அந்நிய  ஸ்திரீயாகக்  காண்பிப்பாள்  என்றார்.  (1இராஜாக்கள்  14:5)

karththar  agiyaavinidaththil:  ithoa,  yerobeyaamin  manaivi  viyaathiyaayirukki’ra  than  kumaaranukkaaga  unnai  oru  viseashamkeadka  varugi’raa'l;  nee  ava'lukku  inna  inna  piragaaramaagach  sollavea'ndum;  ava'l  udpiraveasikki’rapoathu,  thannai  anniya  sthireeyaagak  kaa'nbippaa'l  en’raar.  (1iraajaakka’l  14:5)

ஆகையால்  வாசற்படிக்குள்  பிரவேசிக்கும்  அவளுடைய  நடையின்  சத்தத்தை  அகியா  கேட்டவுடனே,  அவன்:  யெரொபெயாமின்  மனைவியே,  உள்ளே  வா;  உன்னை  அந்நிய  ஸ்திரீயாகக்  காண்பிக்கிறதென்ன?  துக்கசெய்தியை  உனக்கு  அறிவிக்க  நான்  அனுப்பப்பட்டேன்.  (1இராஜாக்கள்  14:6)

aagaiyaal  vaasa’rpadikku'l  piraveasikkum  ava'ludaiya  nadaiyin  saththaththai  agiyaa  keattavudanea,  avan:  yerobeyaamin  manaiviyea,  u'l'lea  vaa;  unnai  anniya  sthireeyaagak  kaa'nbikki’rathenna?  thukkaseythiyai  unakku  a’rivikka  naan  anuppappattean.  (1iraajaakka’l  14:6)

நீ  போய்  யெரொபெயாமை  நோக்கி:  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  ஜனத்தினின்று  உன்னை  நான்  உயர்த்தி,  உன்னை  இஸ்ரவேல்  என்னும்  என்  ஜனத்தின்மேல்  அதிபதியாக  வைத்தேன்.  (1இராஜாக்கள்  14:7)

nee  poay  yerobeyaamai  noakki:  isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal:  janaththinin’ru  unnai  naan  uyarththi,  unnai  israveal  ennum  en  janaththinmeal  athibathiyaaga  vaiththean.  (1iraajaakka’l  14:7)

நான்  ராஜ்யபாரத்தைத்  தாவீது  வம்சத்தாரின்  கையிலிருந்து  பிடுங்கி  உனக்குக்  கொடுத்தேன்;  ஆனாலும்  என்  கற்பனைகளைக்  கைக்கொண்டு,  என்  பார்வைக்குச்  செம்மையானதையே  செய்ய,  தன்  முழு  இருதயத்தோடும்  என்னைப்  பின்பற்றின  என்  தாசனாகிய  தாவீதைப்போல  நீ  இராமல்,  (1இராஜாக்கள்  14:8)

naan  raajyabaaraththaith  thaaveethu  vamsaththaarin  kaiyilirunthu  pidunggi  unakkuk  koduththean;  aanaalum  en  ka’rpanaiga'laik  kaikko'ndu,  en  paarvaikkuch  semmaiyaanathaiyea  seyya,  than  muzhu  iruthayaththoadum  ennaip  pinpat’rina  en  thaasanaagiya  thaaveethaippoala  nee  iraamal,  (1iraajaakka’l  14:8)

உனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  பொல்லாப்புச்  செய்தாய்;  எனக்குக்  கோபம்  உண்டாக்க,  நீ  போய்  உனக்கு  அந்நிய  தேவர்களையும்  வார்க்கப்பட்ட  விக்கிரகங்களையும்  உண்டுபண்ணி,  உனக்குப்  புறம்பே  என்னைத்  தள்ளிவிட்டாய்.  (1இராஜாக்கள்  14:9)

unakku  munniruntha  ellaaraippaarkkilum  pollaappuch  seythaay;  enakkuk  koabam  u'ndaakka,  nee  poay  unakku  anniya  theavarga'laiyum  vaarkkappatta  vikkiragangga'laiyum  u'ndupa'n'ni,  unakkup  pu’rambea  ennaith  tha'l'livittaay.  (1iraajaakka’l  14:9)

ஆகையால்  இதோ,  நான்  யெரொபெயாமுடைய  வீட்டின்மேல்  பொல்லாப்பை  வரப்பண்ணி,  யெரொபெயாமுக்கு,  சுவர்மேல்  நீர்விடும்  ஒரு  நாய்  முதலாயிராதபடிக்கு,  இஸ்ரவேலிலே  அடைபட்டவனையும்  விடுபட்டவனையும்  சங்காரம்பண்ணி,  குப்பை  கழித்துப்போடப்படுகிறதுபோல  யெரொபெயாமின்  பின்னடியாரை  அவர்கள்  கட்டோடே  அற்றுப்போகுமட்டும்  கழித்துப்போடுவேன்  என்றார்.  (1இராஜாக்கள்  14:10)

aagaiyaal  ithoa,  naan  yerobeyaamudaiya  veettinmeal  pollaappai  varappa'n'ni,  yerobeyaamukku,  suvarmeal  neervidum  oru  naay  muthalaayiraathapadikku,  isravealilea  adaipattavanaiyum  vidupattavanaiyum  sanggaarampa'n'ni,  kuppai  kazhiththuppoadappadugi’rathupoala  yerobeyaamin  pinnadiyaarai  avarga'l  kattoadea  at’ruppoagumattum  kazhiththuppoaduvean  en’raar.  (1iraajaakka’l  14:10)

யெரொபெயாமின்  சந்ததியாரில்  பட்டணத்திலே  சாகிறவனை  நாய்கள்  தின்னும்;  வெளியிலே  சாகிறவனை  ஆகாயத்தின்  பறவைகள்  தின்னும்;  கர்த்தர்  இதை  உரைத்தார்.  (1இராஜாக்கள்  14:11)

yerobeyaamin  santhathiyaaril  patta'naththilea  saagi’ravanai  naayga'l  thinnum;  ve'liyilea  saagi’ravanai  aagaayaththin  pa’ravaiga'l  thinnum;  karththar  ithai  uraiththaar.  (1iraajaakka’l  14:11)

ஆகையால்  நீ  எழுந்து,  உன்  வீட்டுக்குப்  போ,  உன்  கால்கள்  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கையில்  பிள்ளையாண்டான்  செத்துப்போவான்.  (1இராஜாக்கள்  14:12)

aagaiyaal  nee  ezhunthu,  un  veettukkup  poa,  un  kaalga'l  patta'naththi’rku'l  piraveasikkaiyil  pi'l'laiyaa'ndaan  seththuppoavaan.  (1iraajaakka’l  14:12)

அவனுக்காக  இஸ்ரவேலரெல்லாரும்  துக்கங்கொண்டாடி  அவனை  அடக்கம்பண்ணுவார்கள்;  யெரொபெயாமின்  வீட்டாரில்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  அவனிடத்திலே  நல்ல  காரியம்  காணப்பட்டதினால்,  யெரொபெயாமின்  சந்ததியில்  அவன்  ஒருவனே  கல்லறைக்குட்படுவான்.  (1இராஜாக்கள்  14:13)

avanukkaaga  isravealarellaarum  thukkangko'ndaadi  avanai  adakkampa'n'nuvaarga'l;  yerobeyaamin  veettaaril  isravealin  theavanaagiya  karththarukku  munbaaga  avanidaththilea  nalla  kaariyam  kaa'nappattathinaal,  yerobeyaamin  santhathiyil  avan  oruvanea  kalla’raikkudpaduvaan.  (1iraajaakka’l  14:13)

ஆனாலும்  கர்த்தர்  தமக்கு  இஸ்ரவேலின்மேல்  ஒரு  ராஜாவை  எழும்பப்பண்ணுவார்;  அவன்  அந்நாளிலே  யெரொபெயாமின்  வீட்டாரைச்  சங்கரிப்பான்;  இப்போதே  இது  நடந்தேறும்.  (1இராஜாக்கள்  14:14)

aanaalum  karththar  thamakku  isravealinmeal  oru  raajaavai  ezhumbappa'n'nuvaar;  avan  annaa'lilea  yerobeyaamin  veettaaraich  sanggarippaan;  ippoathea  ithu  nadanthea’rum.  (1iraajaakka’l  14:14)

தண்ணீரிலே  நாணல்  அசைகிறதுபோல,  கர்த்தர்  இஸ்ரவேலை  முறிந்தசையப்பண்ணி,  அவர்கள்  பிதாக்களுக்குத்  தாம்  கொடுத்த  இந்த  நல்ல  தேசத்திலிருந்து  இஸ்ரவேலை  வேரோடே  பிடுங்கி,  அவர்கள்  தங்களுக்கு  தோப்பு  விக்கிரகங்களை  வைத்து,  கர்த்தருக்குக்  கோபம்  உண்டாக்கினபடியினால்,  அவர்களை  நதிக்கப்பாலே  சிதறடித்து,  (1இராஜாக்கள்  14:15)

tha'n'neerilea  naa'nal  asaigi’rathupoala,  karththar  isravealai  mu’rinthasaiyappa'n'ni,  avarga'l  pithaakka'lukkuth  thaam  koduththa  intha  nalla  theasaththilirunthu  isravealai  vearoadea  pidunggi,  avarga'l  thangga'lukku  thoappu  vikkiragangga'lai  vaiththu,  karththarukkuk  koabam  u'ndaakkinapadiyinaal,  avarga'lai  nathikkappaalea  sitha’radiththu,  (1iraajaakka’l  14:15)

யெரொபெயாம்  செய்ததும்  இஸ்ரவேலைச்  செய்யப்பண்ணினதுமான  பாவத்தினிமித்தம்  இஸ்ரவேலை  ஒப்புக்கொடுத்துவிடுவார்  என்றான்.  (1இராஜாக்கள்  14:16)

yerobeyaam  seythathum  isravealaich  seyyappa'n'ninathumaana  paavaththinimiththam  isravealai  oppukkoduththuviduvaar  en’raan.  (1iraajaakka’l  14:16)

அப்பொழுது  யெரொபெயாமின்  மனைவி  எழுந்து  புறப்பட்டு  திர்சாவுக்கு  வந்தாள்;  அவள்  வாசற்படியிலே  வருகையில்  பிள்ளையாண்டான்  செத்துப்போனான்.  (1இராஜாக்கள்  14:17)

appozhuthu  yerobeyaamin  manaivi  ezhunthu  pu’rappattu  thirsaavukku  vanthaa'l;  ava'l  vaasa’rpadiyilea  varugaiyil  pi'l'laiyaa'ndaan  seththuppoanaan.  (1iraajaakka’l  14:17)

கர்த்தர்  தீர்க்கதரிசியாகிய  அகியா  என்னும்  தமது  ஊழியக்காரனைக்  கொண்டு  சொன்ன  வார்த்தையின்படியே,  அவர்கள்  அவனை  அடக்கம்பண்ணி,  இஸ்ரவேலர்  எல்லாரும்  அவனுக்காகத்  துக்கங்கொண்டாடினார்கள்.  (1இராஜாக்கள்  14:18)

karththar  theerkkatharisiyaagiya  agiyaa  ennum  thamathu  oozhiyakkaaranaik  ko'ndu  sonna  vaarththaiyinpadiyea,  avarga'l  avanai  adakkampa'n'ni,  isravealar  ellaarum  avanukkaagath  thukkangko'ndaadinaarga'l.  (1iraajaakka’l  14:18)

யெரொபெயாம்  யுத்தம்பண்ணினதும்  ஆண்டதுமான  அவனுடைய  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  14:19)

yerobeyaam  yuththampa'n'ninathum  aa'ndathumaana  avanudaiya  mat’ra  varththamaanangga'l  israveal  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  14:19)

யெரொபெயாம்  ராஜ்யபாரம்பண்ணின  காலம்  இருபத்திரண்டு  வருஷம்;  அவன்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  நாதாப்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (1இராஜாக்கள்  14:20)

yerobeyaam  raajyabaarampa'n'nina  kaalam  irubaththira'ndu  varusham;  avan  than  pithaakka'loadea  niththiraiyadainthapin,  avan  kumaaranaagiya  naathaab  avan  sthaanaththil  raajaavaanaan.  (1iraajaakka’l  14:20)

சாலொமோனின்  குமாரனாகிய  ரெகொபெயாம்  யூதாவிலே  ராஜ்யபாரம்  பண்ணினான்;  ரெகொபெயாம்  ராஜாவாகிறபோது  நாற்பத்தொரு  வயதாயிருந்து,  கர்த்தர்  தம்முடைய  நாமம்  விளங்கும்படி  இஸ்ரவேல்  கோத்திரங்களிலெல்லாம்  தெரிந்துகொண்ட  நகரமாகிய  எருசலேமிலே  பதினேழுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அம்மோன்  ஜாதியான  அவனுடைய  தாயின்பேர்  நாமாள்.  (1இராஜாக்கள்  14:21)

saalomoanin  kumaaranaagiya  regobeyaam  yoothaavilea  raajyabaaram  pa'n'ninaan;  regobeyaam  raajaavaagi’rapoathu  naa’rpaththoru  vayathaayirunthu,  karththar  thammudaiya  naamam  vi'langgumpadi  israveal  koaththirangga'lilellaam  therinthuko'nda  nagaramaagiya  erusaleamilea  pathineazhuvarusham  raajyabaarampa'n'ninaan;  ammoan  jaathiyaana  avanudaiya  thaayinpear  naamaa'l.  (1iraajaakka’l  14:21)

யூதாஜனங்கள்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தாங்கள்  செய்துவருகிற  தங்களுடைய  பாவங்களினால்  தங்கள்  பிதாக்கள்  செய்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  அவருக்கு  அதிக  எரிச்சலை  மூட்டினார்கள்.  (1இராஜாக்கள்  14:22)

yoothaajanangga'l  karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythu,  thaangga'l  seythuvarugi’ra  thangga'ludaiya  paavangga'linaal  thangga'l  pithaakka'l  seytha  ellaavat’raippaarkkilum  avarukku  athiga  erichchalai  moottinaarga'l.  (1iraajaakka’l  14:22)

அவர்களும்  உயர்ந்த  சகல  மேட்டின்மேலும்,  பச்சையான  சகல  மரத்தின்கீழும்,  மேடைகளையும்  சிலைகளையும்  தோப்பு  விக்கிரகங்களையும்  தங்களுக்கு  உண்டாக்கினார்கள்.  (1இராஜாக்கள்  14:23)

avarga'lum  uyarntha  sagala  meattinmealum,  pachchaiyaana  sagala  maraththinkeezhum,  meadaiga'laiyum  silaiga'laiyum  thoappu  vikkiragangga'laiyum  thangga'lukku  u'ndaakkinaarga'l.  (1iraajaakka’l  14:23)

தேசத்திலே  இலச்சையான  புணர்ச்சிக்காரரும்  இருந்தார்கள்;  கர்த்தர்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்திவிட்ட  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியெல்லாம்  செய்தார்கள்.  (1இராஜாக்கள்  14:24)

theasaththilea  ilachchaiyaana  pu'narchchikkaararum  irunthaarga'l;  karththar  israveal  puththirarukku  munbaagath  thuraththivitta  jaathiga'ludaiya  aruvaruppuga'linpadiyellaam  seythaarga'l.  (1iraajaakka’l  14:24)

ரெகொபெயாம்  ராஜ்யபாரம்பண்ணும்  ஐந்தாம்  வருஷத்திலே,  எகிப்தின்  ராஜாவாகிய  சீஷாக்  எருசலேமுக்கு  விரோதமாய்  வந்து,  (1இராஜாக்கள்  14:25)

regobeyaam  raajyabaarampa'n'num  ainthaam  varushaththilea,  egipthin  raajaavaagiya  seeshaak  erusaleamukku  viroathamaay  vanthu,  (1iraajaakka’l  14:25)

கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களையும்,  ராஜாவுடைய  அரமனையின்  பொக்கிஷங்களையும்,  சாலொமோன்  செய்வித்த  பொன்  பரிசைகள்  ஆகிய  சகலத்தையும்  எடுத்துக்கொண்டு  போய்விட்டான்.  (1இராஜாக்கள்  14:26)

karththarudaiya  aalayaththin  pokkishangga'laiyum,  raajaavudaiya  aramanaiyin  pokkishangga'laiyum,  saalomoan  seyviththa  pon  parisaiga'l  aagiya  sagalaththaiyum  eduththukko'ndu  poayvittaan.  (1iraajaakka’l  14:26)

அவைகளுக்குப்  பதிலாக  ராஜாவாகிய  ரெகொபெயாம்  வெண்கலப்  பரிசைகளைச்  செய்வித்து,  அவைகளை  ராஜாவின்  வாசற்படியைக்  காக்கிற  சேவகருடைய  தலைவரின்  கையில்  ஒப்பித்தான்.  (1இராஜாக்கள்  14:27)

avaiga'lukkup  bathilaaga  raajaavaagiya  regobeyaam  ve'ngalap  parisaiga'laich  seyviththu,  avaiga'lai  raajaavin  vaasa’rpadiyaik  kaakki’ra  seavagarudaiya  thalaivarin  kaiyil  oppiththaan.  (1iraajaakka’l  14:27)

ராஜா  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  அரமனைச்  சேவகர்  அவைகளைப்  பிடித்துக்கொண்டு  போய்,  திரும்பத்  தங்கள்  அறையிலே  வைப்பார்கள்.  (1இராஜாக்கள்  14:28)

raajaa  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkumpoathu,  aramanaich  seavagar  avaiga'laip  pidiththukko'ndu  poay,  thirumbath  thangga'l  a’raiyilea  vaippaarga'l.  (1iraajaakka’l  14:28)

ரெகொபெயாமின்  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  (1இராஜாக்கள்  14:29)

regobeyaamin  mat’ra  varththamaanangga'lum,  avan  seythavai  yaavum,  yoothaavudaiya  raajaakka'lin  naa'laagamap  pusthagaththil  allavoa  ezhuthiyirukki’rathu.  (1iraajaakka’l  14:29)

ரெகொபெயாமுக்கும்  யெரொபெயாமுக்கும்  அவர்கள்  இருந்த  நாட்களிலெல்லாம்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  (1இராஜாக்கள்  14:30)

regobeyaamukkum  yerobeyaamukkum  avarga'l  iruntha  naadka'lilellaam  yuththam  nadanthuko'ndirunthathu.  (1iraajaakka’l  14:30)

ரெகொபெயாம்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தாவீதின்  நகரத்தில்  தன்  பிதாக்களண்டையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அம்மோன்  ஜாதியான  அவன்  தாய்க்கு  நாமாள்  என்று  பேர்;  அவன்  குமாரனாகிய  அபியாம்  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  (1இராஜாக்கள்  14:31)

regobeyaam  than  pithaakka'loadea  niththiraiyadainthu,  thaaveethin  nagaraththil  than  pithaakka'la'ndaiyil  adakkampa'n'nappattaan;  ammoan  jaathiyaana  avan  thaaykku  naamaa'l  en’ru  pear;  avan  kumaaranaagiya  abiyaam  avan  sthaanaththil  raajaavaanaan.  (1iraajaakka’l  14:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!