Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 12 | 1 இராஜாக்கள் 12 | 1 Kings 12

ரெகொபெயாமை  ராஜாவாக்கும்படி,  இஸ்ரவேலர்  எல்லாரும்  சீகேமுக்கு  வந்திருந்தபடியால்,  அவனும்  சீகேமுக்குப்  போனான்.  (1இராஜாக்கள்  12:1)

regobeyaamai  raajaavaakkumpadi,  isravealar  ellaarum  seekeamukku  vanthirunthapadiyaal,  avanum  seekeamukkup  poanaan.  (1iraajaakka’l  12:1)

ராஜாவாகிய  சாலொமோனை  விட்டு  ஓடிப்போய்,  எகிப்திலே  குடியிருந்த  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமோ,  எகிப்தில்  இருக்கையில்  இதைக்  கேள்விப்பட்டான்.  (1இராஜாக்கள்  12:2)

raajaavaagiya  saalomoanai  vittu  oadippoay,  egipthilea  kudiyiruntha  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamoa,  egipthil  irukkaiyil  ithaik  kea'lvippattaan.  (1iraajaakka’l  12:2)

அவர்கள்  யெரொபெயாமுக்கு  ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பித்தார்கள்;  அவனும்  இஸ்ரவேல்  சபை  அனைத்தும்  வந்து,  ரெகொபெயாமை  நோக்கி:  (1இராஜாக்கள்  12:3)

avarga'l  yerobeyaamukku  aa'l  anuppi  avanai  azhaippiththaarga'l;  avanum  israveal  sabai  anaiththum  vanthu,  regobeyaamai  noakki:  (1iraajaakka’l  12:3)

உம்முடைய  தகப்பன்  பாரமான  நுகத்தை  எங்கள்மேல்  வைத்தார்;  இப்போதும்  நீர்  உம்முடைய  தகப்பன்  சுமத்தின  கடினமான  வேலையையும்,  அவர்  எங்கள்மேல்  வைத்த  பாரமான  நுகத்தையும்  லகுவாக்கும்;  அப்பொழுது  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  (1இராஜாக்கள்  12:4)

ummudaiya  thagappan  baaramaana  nugaththai  engga'lmeal  vaiththaar;  ippoathum  neer  ummudaiya  thagappan  sumaththina  kadinamaana  vealaiyaiyum,  avar  engga'lmeal  vaiththa  baaramaana  nugaththaiyum  laguvaakkum;  appozhuthu  ummaich  seavippoam  en’raarga'l.  (1iraajaakka’l  12:4)

அதற்கு  அவன்:  நீங்கள்  போய்,  மூன்றுநாள்  பொறுத்து  என்னிடத்தில்  திரும்பிவாருங்கள்  என்றான்;  அப்படியே  ஜனங்கள்  போயிருந்தார்கள்.  (1இராஜாக்கள்  12:5)

atha’rku  avan:  neengga'l  poay,  moon’runaa'l  po’ruththu  ennidaththil  thirumbivaarungga'l  en’raan;  appadiyea  janangga'l  poayirunthaarga'l.  (1iraajaakka’l  12:5)

அப்பொழுது  ராஜாவாகிய  ரெகொபெயாம்  தன்  தகப்பனாகிய  சாலொமோன்  உயிரோடிருக்கையில்  அவன்  சமுகத்தில்  நின்ற  முதியோரோடே  ஆலோசனைபண்ணி,  இந்த  ஜனங்களுக்கு  மறுஉத்தரவு  கொடுக்க,  நீங்கள்  என்ன  யோசனை  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  (1இராஜாக்கள்  12:6)

appozhuthu  raajaavaagiya  regobeyaam  than  thagappanaagiya  saalomoan  uyiroadirukkaiyil  avan  samugaththil  nin’ra  muthiyoaroadea  aaloasanaipa'n'ni,  intha  janangga'lukku  ma’ruuththaravu  kodukka,  neengga'l  enna  yoasanai  sollugi’reerga'l  en’ru  keattaan.  (1iraajaakka’l  12:6)

அதற்கு  அவர்கள்:  நீர்  இன்று  இந்த  ஜனங்களுக்கு  சேவகனாகி,  அவர்களுக்கு  இணங்கி,  அவர்கள்  சொற்படி  செய்து,  மறுமொழியாக  நல்வார்த்தைகளைச்  சொல்வீரானால்,  எந்நாளும்  அவர்கள்  உமக்கு  ஊழியக்காரராயிருப்பார்கள்  என்றார்கள்.  (1இராஜாக்கள்  12:7)

atha’rku  avarga'l:  neer  in’ru  intha  janangga'lukku  seavaganaagi,  avarga'lukku  i'nanggi,  avarga'l  so’rpadi  seythu,  ma’rumozhiyaaga  nalvaarththaiga'laich  solveeraanaal,  ennaa'lum  avarga'l  umakku  oozhiyakkaararaayiruppaarga'l  en’raarga'l.  (1iraajaakka’l  12:7)

முதியோர்  தனக்குச்  சொன்ன  ஆலோசனையை  அவன்  தள்ளிவிட்டு,  தன்னோடே  வளர்ந்து  தன்  சமுகத்தில்  நிற்கிற  வாலிபரோடே  ஆலோசனைபண்ணி,  (1இராஜாக்கள்  12:8)

muthiyoar  thanakkuch  sonna  aaloasanaiyai  avan  tha'l'livittu,  thannoadea  va'larnthu  than  samugaththil  ni’rki’ra  vaalibaroadea  aaloasanaipa'n'ni,  (1iraajaakka’l  12:8)

அவர்களை  நோக்கி:  உம்முடைய  தகப்பன்  எங்கள்மேல்  வைத்த  நுகத்தை  லகுவாக்கும்  என்று  என்னிடத்தில்  சொன்ன  இந்த  ஜனங்களுக்கு  மறுமொழி  கொடுக்க,  நீங்கள்  என்ன  யோசனை  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  (1இராஜாக்கள்  12:9)

avarga'lai  noakki:  ummudaiya  thagappan  engga'lmeal  vaiththa  nugaththai  laguvaakkum  en’ru  ennidaththil  sonna  intha  janangga'lukku  ma’rumozhi  kodukka,  neengga'l  enna  yoasanai  sollugi’reerga'l  en’ru  keattaan.  (1iraajaakka’l  12:9)

அப்பொழுது  அவனோடே  வளர்ந்த  வாலிபர்  அவனை  நோக்கி:  உம்முடைய  தகப்பன்  எங்கள்  நுகத்தைப்  பாரமாக்கினார்,  நீர்  அதை  எங்களுக்கு  லகுவாக்கும்  என்று  உம்மிடத்தில்  சொன்ன  இந்த  ஜனத்திற்கு  நீர்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  என்  சுண்டுவிரல்  என்  தகப்பனாருடைய  இடுப்பைப்பார்க்கிலும்  பருமனாயிருக்கும்.  (1இராஜாக்கள்  12:10)

appozhuthu  avanoadea  va'larntha  vaalibar  avanai  noakki:  ummudaiya  thagappan  engga'l  nugaththaip  baaramaakkinaar,  neer  athai  engga'lukku  laguvaakkum  en’ru  ummidaththil  sonna  intha  janaththi’rku  neer  sollavea'ndiyathu  ennaven’raal:  en  su'nduviral  en  thagappanaarudaiya  iduppaippaarkkilum  parumanaayirukkum.  (1iraajaakka’l  12:10)

இப்போதும்  என்  தகப்பன்  பாரமான  நுகத்தை  உங்கள்மேல்  வைத்தார்,  நான்  உங்கள்  நுகத்தை  அதிக  பாரமாக்குவேன்;  என்  தகப்பன்  உங்களைச்  சவுக்குகளினாலே  தண்டித்தார்,  நான்  உங்களைத்  தேள்களினாலே  தண்டிப்பேன்  என்று  நீர்  அவர்களோடே  சொல்லவேண்டும்  என்றார்கள்.  (1இராஜாக்கள்  12:11)

ippoathum  en  thagappan  baaramaana  nugaththai  ungga'lmeal  vaiththaar,  naan  ungga'l  nugaththai  athiga  baaramaakkuvean;  en  thagappan  ungga'laich  savukkuga'linaalea  tha'ndiththaar,  naan  ungga'laith  thea'lga'linaalea  tha'ndippean  en’ru  neer  avarga'loadea  sollavea'ndum  en’raarga'l.  (1iraajaakka’l  12:11)

மூன்றாம்  நாள்  என்னிடத்தில்  வாருங்கள்  என்று  ராஜா  சொல்லியிருந்தபடியே,  யெரொபெயாமும்  சகல  ஜனங்களும்  மூன்றாம்  நாளிலே  ரெகொபெயாமிடத்தில்  வந்தார்கள்.  (1இராஜாக்கள்  12:12)

moon’raam  naa'l  ennidaththil  vaarungga'l  en’ru  raajaa  solliyirunthapadiyea,  yerobeyaamum  sagala  janangga'lum  moon’raam  naa'lilea  regobeyaamidaththil  vanthaarga'l.  (1iraajaakka’l  12:12)

ராஜா  முதியோர்  தனக்குச்  சொன்ன  ஆலோசனையைத்  தள்ளிவிட்டு,  வாலிபருடைய  ஆலோசனையின்படியே  அவர்களோடே  பேசி:  (1இராஜாக்கள்  12:13)

raajaa  muthiyoar  thanakkuch  sonna  aaloasanaiyaith  tha'l'livittu,  vaalibarudaiya  aaloasanaiyinpadiyea  avarga'loadea  peasi:  (1iraajaakka’l  12:13)

என்  தகப்பன்  உங்கள்  நுகத்தைப்  பாரமாக்கினார்,  நான்  உங்கள்  நுகத்தை  அதிக  பாரமாக்குவேன்;  என்  தகப்பன்  உங்களைச்  சவுக்குகளினாலே  தண்டித்தார்,  நான்  உங்களைத்  தேள்களினாலே  தண்டிப்பேன்  என்று  ஜனங்களுக்குக்  கடினமான  உத்தரவு  கொடுத்தான்.  (1இராஜாக்கள்  12:14)

en  thagappan  ungga'l  nugaththaip  baaramaakkinaar,  naan  ungga'l  nugaththai  athiga  baaramaakkuvean;  en  thagappan  ungga'laich  savukkuga'linaalea  tha'ndiththaar,  naan  ungga'laith  thea'lga'linaalea  tha'ndippean  en’ru  janangga'lukkuk  kadinamaana  uththaravu  koduththaan.  (1iraajaakka’l  12:14)

ராஜா  ஜனங்களுக்குச்  செவிகொடாமற்போனான்;  கர்த்தர்  சீலோனியனான  அகியாவைக்கொண்டு  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமுக்குச்  சொன்ன  தம்முடைய  வார்த்தையை  உறுதிப்படுத்தும்படி  கர்த்தரால்  இப்படி  நடந்தது.  (1இராஜாக்கள்  12:15)

raajaa  janangga'lukkuch  sevikodaama’rpoanaan;  karththar  seeloaniyanaana  agiyaavaikko'ndu  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamukkuch  sonna  thammudaiya  vaarththaiyai  u’ruthippaduththumpadi  karththaraal  ippadi  nadanthathu.  (1iraajaakka’l  12:15)

ராஜா  தங்களுக்குச்  செவிகொடாததை  இஸ்ரவேலர்  எல்லாரும்  கண்டபோது,  ஜனங்கள்  ராஜாவுக்கு  மறுஉத்தரவாக:  தாவீதோடே  எங்களுக்குப்  பங்கேது?  ஈசாயின்  குமாரனிடத்தில்  எங்களுக்குச்  சுதந்தரம்  இல்லை;  இஸ்ரவேலே,  உன்  கூடாரங்களுக்குப்  போய்விடு;  இப்போது  தாவீதே,  உன்  சொந்த  வீட்டைப்  பார்த்துக்கொள்  என்று  சொல்லி,  இஸ்ரவேலர்  தங்கள்  கூடாரங்களுக்குப்  போய்விட்டார்கள்.  (1இராஜாக்கள்  12:16)

raajaa  thangga'lukkuch  sevikodaathathai  isravealar  ellaarum  ka'ndapoathu,  janangga'l  raajaavukku  ma’ruuththaravaaga:  thaaveethoadea  engga'lukkup  panggeathu?  eesaayin  kumaaranidaththil  engga'lukkuch  suthantharam  illai;  isravealea,  un  koodaarangga'lukkup  poayvidu;  ippoathu  thaaveethea,  un  sontha  veettaip  paarththukko'l  en’ru  solli,  isravealar  thangga'l  koodaarangga'lukkup  poayvittaarga'l.  (1iraajaakka’l  12:16)

ஆனாலும்  யூதாவின்  பட்டணங்களிலே  குடியிருந்த  இஸ்ரவேல்  புத்திரர்மேல்  ரெகொபெயாம்  ராஜாவாயிருந்தான்.  (1இராஜாக்கள்  12:17)

aanaalum  yoothaavin  patta'nangga'lilea  kudiyiruntha  israveal  puththirarmeal  regobeyaam  raajaavaayirunthaan.  (1iraajaakka’l  12:17)

பின்பு  ராஜாவாகிய  ரெகொபெயாம்  பகுதிவிசாரிப்புக்காரனாகிய  அதோராமை  அனுப்பினான்;  இஸ்ரவேலர்  எல்லாரும்  அவனைக்  கல்லெறிந்து  கொன்றார்கள்;  அப்பொழுது  ராஜாவாகிய  ரெகொபெயாம்  தீவிரமாய்  இரதத்தின்மேல்  ஏறி,  எருசலேமுக்கு  ஓடிப்போனான்.  (1இராஜாக்கள்  12:18)

pinbu  raajaavaagiya  regobeyaam  paguthivisaarippukkaaranaagiya  athoaraamai  anuppinaan;  isravealar  ellaarum  avanaik  kalle’rinthu  kon’raarga'l;  appozhuthu  raajaavaagiya  regobeyaam  theeviramaay  irathaththinmeal  ea’ri,  erusaleamukku  oadippoanaan.  (1iraajaakka’l  12:18)

அப்படியே  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  இஸ்ரவேலர்  தாவீதின்  வம்சத்தை  விட்டு  கலகம்பண்ணிப்  பிரிந்து  போயிருக்கிறார்கள்.  (1இராஜாக்கள்  12:19)

appadiyea  innaa'lvaraikkum  irukki’rapadi  isravealar  thaaveethin  vamsaththai  vittu  kalagampa'n'nip  pirinthu  poayirukki’raarga'l.  (1iraajaakka’l  12:19)

யெரொபெயாம்  திரும்பிவந்தான்  என்று  இஸ்ரவேலருக்கெல்லாம்  கேள்வியானபோது,  அவனைச்  சபையினிடத்தில்  அழைத்தனுப்பி,  அவனைச்  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்  ராஜாவாக்கினார்கள்;  யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி  வேறொருவரும்  தாவீதின்  வம்சத்தைப்  பின்பற்றவில்லை.  (1இராஜாக்கள்  12:20)

yerobeyaam  thirumbivanthaan  en’ru  isravealarukkellaam  kea'lviyaanapoathu,  avanaich  sabaiyinidaththil  azhaiththanuppi,  avanaich  samastha  isravealinmealum  raajaavaakkinaarga'l;  yoothaakoaththirammaaththirameayan’ri  vea’roruvarum  thaaveethin  vamsaththaip  pinpat’ravillai.  (1iraajaakka’l  12:20)

ரெகொபெயாம்  எருசலேமுக்கு  வந்தபோது,  இஸ்ரவேல்  வம்சத்தாரோடே  யுத்தம்பண்ணவும்,  ராஜ்யத்தைச்  சாலொமோனின்  குமாரனாகிய  தன்னிடமாகத்  திருப்பிக்கொள்ளவும்,  யூதா  வம்சத்தார்  பென்யமீன்  கோத்திரத்தார்  அனைவருமாகிய  தெரிந்துகொள்ளப்பட்ட  யுத்தவீரர்  லட்சத்து  எண்பதினாயிரம்பேரைக்  கூட்டினான்.  (1இராஜாக்கள்  12:21)

regobeyaam  erusaleamukku  vanthapoathu,  israveal  vamsaththaaroadea  yuththampa'n'navum,  raajyaththaich  saalomoanin  kumaaranaagiya  thannidamaagath  thiruppikko'l'lavum,  yoothaa  vamsaththaar  benyameen  koaththiraththaar  anaivarumaagiya  therinthuko'l'lappatta  yuththaveerar  ladchaththu  e'nbathinaayirampearaik  koottinaan.  (1iraajaakka’l  12:21)

தேவனுடைய  மனுஷனாகிய  சேமாயாவுக்கு  தேவனுடைய  வார்த்தையுண்டாகி,  அவர்  சொன்னது:  (1இராஜாக்கள்  12:22)

theavanudaiya  manushanaagiya  seamaayaavukku  theavanudaiya  vaarththaiyu'ndaagi,  avar  sonnathu:  (1iraajaakka’l  12:22)

நீ  யூதாவின்  ராஜாவாகிய  ரெகொபெயாம்  என்னும்  சாலொமோனின்  குமாரனையும்  யூதா  வம்சத்தார்  அனைவரையும்,  பென்யமீனரையும்,  மற்ற  ஜனங்களையும்  நோக்கி:  (1இராஜாக்கள்  12:23)

nee  yoothaavin  raajaavaagiya  regobeyaam  ennum  saalomoanin  kumaaranaiyum  yoothaa  vamsaththaar  anaivaraiyum,  benyameenaraiyum,  mat’ra  janangga'laiyum  noakki:  (1iraajaakka’l  12:23)

நீங்கள்  போகாமலும்,  இஸ்ரவேல்  புத்திரரான  உங்கள்  சகோதரரோடு  யுத்தம்பண்ணாமலும்,  அவரவர்  தம்தம்  வீட்டிற்குத்  திரும்புங்கள்;  என்னாலே  இந்தக்  காரியம்  நடந்தது  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்;  அப்பொழுது  அவர்கள்:  கர்த்தருடைய  சொல்லைக்  கேட்டு,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  திரும்பிப்  போய்விட்டார்கள்.  (1இராஜாக்கள்  12:24)

neengga'l  poagaamalum,  israveal  puththiraraana  ungga'l  sagoathararoadu  yuththampa'n'naamalum,  avaravar  thamtham  veetti’rkuth  thirumbungga'l;  ennaalea  inthak  kaariyam  nadanthathu  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar;  appozhuthu  avarga'l:  karththarudaiya  sollaik  keattu,  karththarudaiya  vaarththaiyinpadiyea  thirumbip  poayvittaarga'l.  (1iraajaakka’l  12:24)

யெரொபெயாம்  எப்பிராயீம்  மலைத்தேசத்தில்  சீகேமைக்  கட்டி,  அதிலே  வாசம்பண்ணி,  அங்கிருந்து  போய்ப்  பெனூவேலைக்  கட்டினான்.  (1இராஜாக்கள்  12:25)

yerobeyaam  eppiraayeem  malaiththeasaththil  seekeamaik  katti,  athilea  vaasampa'n'ni,  anggirunthu  poayp  penoovealaik  kattinaan.  (1iraajaakka’l  12:25)

யெரொபெயாம்:  இப்போது  ராஜ்யபாரம்  தாவீது  வம்சவசமாய்த்  திரும்புகிறதாயிருக்கும்.  (1இராஜாக்கள்  12:26)

yerobeyaam:  ippoathu  raajyabaaram  thaaveethu  vamsavasamaayth  thirumbugi’rathaayirukkum.  (1iraajaakka’l  12:26)

இந்த  ஜனங்கள்  எருசலேமிலுள்ள  கர்த்தருடைய  ஆலயத்திலே  பலிகளைச்  செலுத்தப்போனால்,  இந்த  ஜனங்களின்  இருதயம்  யூதாவின்  ராஜாவாகிய  ரெகொபெயாம்  என்னும்  தங்கள்  ஆண்டவன்  வசமாய்த்  திரும்பி,  அவர்கள்  என்னைக்  கொன்றுபோட்டு,  யூதாவின்  ராஜாவாகிய  ரெகொபெயாமின்  பாரிசமாய்ப்  போய்விடுவார்கள்  என்று  தன்  மனதிலே  சிந்தித்துக்கொண்டிருந்தான்.  (1இராஜாக்கள்  12:27)

intha  janangga'l  erusaleamilu'l'la  karththarudaiya  aalayaththilea  baliga'laich  seluththappoanaal,  intha  janangga'lin  iruthayam  yoothaavin  raajaavaagiya  regobeyaam  ennum  thangga'l  aa'ndavan  vasamaayth  thirumbi,  avarga'l  ennaik  kon’rupoattu,  yoothaavin  raajaavaagiya  regobeyaamin  paarisamaayp  poayviduvaarga'l  en’ru  than  manathilea  sinthiththukko'ndirunthaan.  (1iraajaakka’l  12:27)

ஆகையால்  ராஜாவானவன்  யோசனைபண்ணி,  பொன்னினால்  இரண்டு  கன்றுக்குட்டிகளை  உண்டாக்கி,  ஜனங்களைப்  பார்த்து:  நீங்கள்  எருசலேமுக்குப்  போகிறது  உங்களுக்கு  வருத்தம்;  இஸ்ரவேலரே,  இதோ,  இவைகள்  உங்களை  எகிப்துதேசத்திலிருந்து  வரப்பண்ணின  உங்கள்  தேவர்கள்  என்று  சொல்லி,  (1இராஜாக்கள்  12:28)

aagaiyaal  raajaavaanavan  yoasanaipa'n'ni,  ponninaal  ira'ndu  kan’rukkuttiga'lai  u'ndaakki,  janangga'laip  paarththu:  neengga'l  erusaleamukkup  poagi’rathu  ungga'lukku  varuththam;  isravealarea,  ithoa,  ivaiga'l  ungga'lai  egipthutheasaththilirunthu  varappa'n'nina  ungga'l  theavarga'l  en’ru  solli,  (1iraajaakka’l  12:28)

ஒன்றைப்  பெத்தேலிலும்,  ஒன்றைத்  தாணிலும்  ஸ்தாபித்தான்.  (1இராஜாக்கள்  12:29)

on’raip  beththealilum,  on’raith  thaa'nilum  sthaabiththaan.  (1iraajaakka’l  12:29)

இந்தக்  காரியம்  பாவமாயிற்று;  ஜனங்கள்  இந்த  ஒரு  கன்றுக்குட்டிக்காகத்  தாண்மட்டும்  போவார்கள்.  (1இராஜாக்கள்  12:30)

inthak  kaariyam  paavamaayit’ru;  janangga'l  intha  oru  kan’rukkuttikkaagath  thaa'nmattum  poavaarga'l.  (1iraajaakka’l  12:30)

அவன்  மேடையாகிய  ஒரு  கோவிலையும்  கட்டி,  லேவியின்  புத்திரராயிராத  ஜனத்தில்  ஈனமானவர்களை  ஆசாரியராக்கினான்.  (1இராஜாக்கள்  12:31)

avan  meadaiyaagiya  oru  koavilaiyum  katti,  leaviyin  puththiraraayiraatha  janaththil  eenamaanavarga'lai  aasaariyaraakkinaan.  (1iraajaakka’l  12:31)

யூதாவில்  ஆசரிக்கப்படும்  பண்டிகைக்கொப்பாக  எட்டாம்  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே  யெரொபெயாம்  ஒரு  பண்டிகையையும்  கொண்டாடி,  பலிபீடத்தின்மேல்  பலியிட்டான்;  அப்படியே  பெத்தேலிலே  தான்  உண்டாக்கின  கன்றுக்குட்டிகளுக்குப்  பலியிட்டு,  தான்  உண்டுபண்ணின  மேடைகளின்  ஆசாரியர்களைப்  பெத்தேலிலே  ஸ்தாபித்து,  (1இராஜாக்கள்  12:32)

yoothaavil  aasarikkappadum  pa'ndigaikkoppaaga  ettaam  maatham  pathinainthaam  theathiyilea  yerobeyaam  oru  pa'ndigaiyaiyum  ko'ndaadi,  balipeedaththinmeal  baliyittaan;  appadiyea  beththealilea  thaan  u'ndaakkina  kan’rukkuttiga'lukkup  baliyittu,  thaan  u'ndupa'n'nina  meadaiga'lin  aasaariyarga'laip  beththealilea  sthaabiththu,  (1iraajaakka’l  12:32)

தன்  மனதிலே  தானே  நியமித்துக்கொண்ட  எட்டாம்  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே  பெத்தேலில்  தான்  உண்டாக்கின  பலிபீடத்தின்மேல்  பலியிட்டு,  இஸ்ரவேல்  புத்திரருக்குப்  பண்டிகையை  ஏற்படுத்தி,  பலிபீடத்தின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டினான்.  (1இராஜாக்கள்  12:33)

than  manathilea  thaanea  niyamiththukko'nda  ettaam  maatham  pathinainthaam  theathiyilea  beththealil  thaan  u'ndaakkina  balipeedaththinmeal  baliyittu,  israveal  puththirarukkup  pa'ndigaiyai  ea’rpaduththi,  balipeedaththinmeal  baliyittuth  thoobangkaattinaan.  (1iraajaakka’l  12:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!