Thursday, September 01, 2016

1 Iraajaakka'l 10 | 1 இராஜாக்கள் 10 | 1 Kings 10

கர்த்தருடைய  நாமத்தைக்குறித்துச்  சாலொமோனுக்கு  உண்டாயிருந்த  கீர்த்தி  சேபாவின்  ராஜஸ்திரீக்குக்  கேள்வியானபோது,  அவள்  விடுகதைகளினால்  அவனைச்  சோதிக்கிறதற்காக,  (1இராஜாக்கள்  10:1)

karththarudaiya  naamaththaikku’riththuch  saalomoanukku  u'ndaayiruntha  keerththi  seabaavin  raajasthireekkuk  kea'lviyaanapoathu,  ava'l  vidukathaiga'linaal  avanaich  soathikki’ratha’rkaaga,  (1iraajaakka’l  10:1)

மிகுந்த  பரிவாரத்தோடும்,  கந்தவர்க்கங்களையும்,  மிகுதியான  பொன்னையும்  இரத்தினங்களையும்  சுமக்கிற  ஒட்டகங்களோடும்,  எருசலேமுக்கு  வந்தாள்;  அவள்  சாலொமோனிடத்தில்  வந்தபோது,  தன்  மனதில்  இருந்த  எல்லாவற்றையுங்குறித்து  அவனிடத்தில்  சம்பாஷித்தாள்.  (1இராஜாக்கள்  10:2)

miguntha  parivaaraththoadum,  kanthavarkkangga'laiyum,  miguthiyaana  ponnaiyum  iraththinangga'laiyum  sumakki’ra  ottagangga'loadum,  erusaleamukku  vanthaa'l;  ava'l  saalomoanidaththil  vanthapoathu,  than  manathil  iruntha  ellaavat’raiyungku’riththu  avanidaththil  sambaashiththaa'l.  (1iraajaakka’l  10:2)

அப்பொழுது  சாலொமோன்  அவள்  கேட்டவைகளையெல்லாம்  விடுவித்தான்,  அவளுக்கு  விடுவிக்கக்கூடாதபடிக்கு,  ஒன்றாகிலும்  ராஜாவுக்கு  மறைபொருளாயிருக்கவில்லை.  (1இராஜாக்கள்  10:3)

appozhuthu  saalomoan  ava'l  keattavaiga'laiyellaam  viduviththaan,  ava'lukku  viduvikkakkoodaathapadikku,  on’raagilum  raajaavukku  ma’raiporu'laayirukkavillai.  (1iraajaakka’l  10:3)

சேபாவின்  ராஜஸ்திரீ  சாலொமோனுடைய  சகல  ஞானத்தையும்,  அவன்  கட்டின  அரமனையையும்,  (1இராஜாக்கள்  10:4)

seabaavin  raajasthiree  saalomoanudaiya  sagala  gnaanaththaiyum,  avan  kattina  aramanaiyaiyum,  (1iraajaakka’l  10:4)

அவன்  பந்தியின்  போஜனபதார்த்தங்களையும்,  அவன்  ஊழியக்காரரின்  வீடுகளையும்,  அவன்  உத்தியோகஸ்தரின்  வரிசையையும்,  அவர்கள்  வஸ்திரங்களையும்,  அவனுடைய  பானபாத்திரக்காரரையும்,  அவன்  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்  நடைமண்டபத்தையும்  கண்டபோது  அவள்  ஆச்சரியத்தால்  பிரமைகொண்டு,  (1இராஜாக்கள்  10:5)

avan  panthiyin  poajanapathaarththangga'laiyum,  avan  oozhiyakkaararin  veeduga'laiyum,  avan  uththiyoagastharin  varisaiyaiyum,  avarga'l  vasthirangga'laiyum,  avanudaiya  baanapaaththirakkaararaiyum,  avan  karththarudaiya  aalayaththukku'l  piraveasikkum  nadaima'ndabaththaiyum  ka'ndapoathu  ava'l  aachchariyaththaal  piramaiko'ndu,  (1iraajaakka’l  10:5)

ராஜாவை  நோக்கி:  உம்முடைய  வர்த்தமானங்களையும்  உம்முடைய  ஞானத்தையும்  குறித்து  நான்  என்  தேசத்தில்  கேட்ட  செய்தி  மெய்யாயிற்று.  (1இராஜாக்கள்  10:6)

raajaavai  noakki:  ummudaiya  varththamaanangga'laiyum  ummudaiya  gnaanaththaiyum  ku’riththu  naan  en  theasaththil  keatta  seythi  meyyaayit’ru.  (1iraajaakka’l  10:6)

நான்  வந்து  அதை  என்  கண்களால்  காணுமட்டும்  அந்த  வார்த்தைகளை  நான்  நம்பவில்லை;  இவைகளில்  பாதியாகிலும்  எனக்கு  அறிவிக்கப்படவில்லை  என்று  காண்கிறேன்;  நான்  கேள்விப்பட்ட  பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்,  உம்முடைய  ஞானமும்  செல்வமும்  அதிகமாயிருக்கிறது.  (1இராஜாக்கள்  10:7)

naan  vanthu  athai  en  ka'nga'laal  kaa'numattum  antha  vaarththaiga'lai  naan  nambavillai;  ivaiga'lil  paathiyaagilum  enakku  a’rivikkappadavillai  en’ru  kaa'ngi’rean;  naan  kea'lvippatta  pirasthaabaththaippaarkkilum,  ummudaiya  gnaanamum  selvamum  athigamaayirukki’rathu.  (1iraajaakka’l  10:7)

உம்முடைய  ஜனங்கள்  பாக்கியவான்கள்;  எப்போதும்  உமக்கு  முன்பாக  நின்று,  உம்முடைய  ஞானத்தைக்  கேட்கிற  உம்முடைய  ஊழியக்காரரும்  பாக்கியவான்கள்.  (1இராஜாக்கள்  10:8)

ummudaiya  janangga'l  baakkiyavaanga'l;  eppoathum  umakku  munbaaga  nin’ru,  ummudaiya  gnaanaththaik  keadki’ra  ummudaiya  oozhiyakkaararum  baakkiyavaanga'l.  (1iraajaakka’l  10:8)

உம்மை  இஸ்ரவேலின்  சிங்காசனத்தின்மேல்  வைக்க,  உம்மேல்  பிரியங்கொண்ட  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஸ்தோத்திரிக்கப்படுவாராக:  கர்த்தர்  இஸ்ரவேலை  என்றைக்கும்  சிநேகிக்கிறபடியினால்,  நியாயமும்  நீதியும்  செய்கிறதற்கு  உம்மை  ராஜாவாக  ஏற்படுத்தினார்  என்றாள்.  (1இராஜாக்கள்  10:9)

ummai  isravealin  singgaasanaththinmeal  vaikka,  ummeal  piriyangko'nda  ummudaiya  theavanaagiya  karththar  sthoaththirikkappaduvaaraaga:  karththar  isravealai  en’raikkum  sineagikki’rapadiyinaal,  niyaayamum  neethiyum  seygi’ratha’rku  ummai  raajaavaaga  ea’rpaduththinaar  en’raa'l.  (1iraajaakka’l  10:9)

அவள்  ராஜாவுக்கு  நூற்றிருபது  தாலந்து  பொன்னையும்,  மிகுதியான  கந்தவர்க்கங்களையும்,  இரத்தினங்களையும்  கொடுத்தாள்;  சேபாவின்  ராஜஸ்திரீ  ராஜாவாகிய  சாலொமோனுக்குக்  கொடுத்த  அவ்வளவு  கந்தவர்க்கங்கள்  பிற்பாடு  ஒருக்காலும்  வரவில்லை.  (1இராஜாக்கள்  10:10)

ava'l  raajaavukku  noot’rirubathu  thaalanthu  ponnaiyum,  miguthiyaana  kanthavarkkangga'laiyum,  iraththinangga'laiyum  koduththaa'l;  seabaavin  raajasthiree  raajaavaagiya  saalomoanukkuk  koduththa  avva'lavu  kanthavarkkangga'l  pi’rpaadu  orukkaalum  varavillai.  (1iraajaakka’l  10:10)

ஓப்பீரிலிருந்து  பொன்னைக்  கொண்டுவருகிற  ஈராமின்  கப்பல்களும்,  ஓப்பீரிலிருந்து  மிகுந்த  வாசனைமரங்களையும்  இரத்தினங்களையும்  கொண்டுவந்தது.  (1இராஜாக்கள்  10:11)

oappeerilirunthu  ponnaik  ko'nduvarugi’ra  eeraamin  kappalga'lum,  oappeerilirunthu  miguntha  vaasanaimarangga'laiyum  iraththinangga'laiyum  ko'nduvanthathu.  (1iraajaakka’l  10:11)

அந்த  வாசனைமரங்களால்  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்திற்கும்  ராஜ  அரமனைக்கும்  ஊன்றுகால்களையும்,  சங்கீதக்காரருக்குச்  சுரமண்டலங்களையும்  தம்புருகளையும்  உண்டாக்கினான்;  அப்படிப்பட்ட  வாசனைமரங்கள்  பிற்பாடு  வந்ததுமில்லை,  இந்நாள்வரைக்கும்  காணப்படவுமில்லை.  (1இராஜாக்கள்  10:12)

antha  vaasanaimarangga'laal  raajaa  karththarudaiya  aalayaththi’rkum  raaja  aramanaikkum  oon’rukaalga'laiyum,  sanggeethakkaararukkuch  surama'ndalangga'laiyum  thamburuga'laiyum  u'ndaakkinaan;  appadippatta  vaasanaimarangga'l  pi’rpaadu  vanthathumillai,  innaa'lvaraikkum  kaa'nappadavumillai.  (1iraajaakka’l  10:12)

ராஜாவாகிய  சாலொமோன்தானே  சந்தோஷமாய்ச்  சேபாவின்  ராஜஸ்திரீக்கு  வெகுமதிகள்  கொடுத்ததும்  அல்லாமல்,  அவள்  விருப்பப்பட்டுக்  கேட்டது  எல்லாவற்றையும்  அவளுக்குக்  கொடுத்தான்;  பின்பு  அவள்  தன்  பரிவாரத்தோடே  தன்  தேசத்திற்குத்  திரும்பிப்  போனாள்.  (1இராஜாக்கள்  10:13)

raajaavaagiya  saalomoanthaanea  santhoashamaaych  seabaavin  raajasthireekku  vegumathiga'l  koduththathum  allaamal,  ava'l  viruppappattuk  keattathu  ellaavat’raiyum  ava'lukkuk  koduththaan;  pinbu  ava'l  than  parivaaraththoadea  than  theasaththi’rkuth  thirumbip  poanaa'l.  (1iraajaakka’l  10:13)

சாலொமோனுக்கு  வியாபாரிகளாலும்,  சுகந்த  திரவிய  வர்த்தகராலும்,  அரபிதேசத்து  சகல  ராஜாக்களாலும்,  மாகாணங்களின்  அதிபதிகளாலும்  வந்த  பொன்னையல்லாமல்,  (1இராஜாக்கள்  10:14)

saalomoanukku  viyaabaariga'laalum,  sugantha  thiraviya  varththagaraalum,  arabitheasaththu  sagala  raajaakka'laalum,  maagaa'nangga'lin  athibathiga'laalum  vantha  ponnaiyallaamal,  (1iraajaakka’l  10:14)

ஒவ்வொரு  வருஷத்தில்  அவனுக்கு  வந்த  பொன்  அறுநூற்று  அறுபத்தாறு  தாலந்து  நிறையாயிருந்தது.  (1இராஜாக்கள்  10:15)

ovvoru  varushaththil  avanukku  vantha  pon  a’runoot’ru  a’rubaththaa’ru  thaalanthu  ni’raiyaayirunthathu.  (1iraajaakka’l  10:15)

சாலொமோன்  ராஜா,  அடித்த  பொன்தகட்டால்  இருநூறு  பரிசைகளைச்  செய்வித்தான்;  ஒவ்வொரு  பரிசைக்கு  அறுநூறு  சேக்கல்  நிறைபொன்  சென்றது.  (1இராஜாக்கள்  10:16)

saalomoan  raajaa,  adiththa  ponthagattaal  irunoo’ru  parisaiga'laich  seyviththaan;  ovvoru  parisaikku  a’runoo’ru  seakkal  ni’raipon  sen’rathu.  (1iraajaakka’l  10:16)

அடித்த  பொன்தகட்டால்  முந்நூறு  கேடகங்களையும்  செய்வித்தான்;  ஒவ்வொரு  கேடகத்திற்கும்  மூன்று  இராத்தல்  பொன்  சென்றது;  அவைகளை  ராஜா  லீபனோன்  வனம்  என்னும்  மாளிகையிலே  வைத்தான்.  (1இராஜாக்கள்  10:17)

adiththa  ponthagattaal  munnoo’ru  keadagangga'laiyum  seyviththaan;  ovvoru  keadagaththi’rkum  moon’ru  iraaththal  pon  sen’rathu;  avaiga'lai  raajaa  leebanoan  vanam  ennum  maa'ligaiyilea  vaiththaan.  (1iraajaakka’l  10:17)

ராஜா  தந்தத்தினால்  பெரிய  ஒரு  சிங்காசனத்தையும்  செய்வித்து,  அதைப்  பசும்பொன்தகட்டால்  மூடினான்.  (1இராஜாக்கள்  10:18)

raajaa  thanthaththinaal  periya  oru  singgaasanaththaiyum  seyviththu,  athaip  pasumponthagattaal  moodinaan.  (1iraajaakka’l  10:18)

அந்தச்  சிங்காசனத்திற்கு  ஆறு  படிகள்  இருந்தது;  சிங்காசனத்தின்  தலைப்பு  பின்னாக  வளைவாயிருந்தது;  உட்காரும்  இடத்திற்கு  இருபுறமும்  கைச்  சாய்மானங்கள்  இருந்தது;  இரண்டு  சிங்கங்கள்  கைச்சாய்மானங்கள்  அருகே  நின்றது.  (1இராஜாக்கள்  10:19)

anthach  singgaasanaththi’rku  aa’ru  padiga'l  irunthathu;  singgaasanaththin  thalaippu  pinnaaga  va'laivaayirunthathu;  udkaarum  idaththi’rku  irupu’ramum  kaich  saaymaanangga'l  irunthathu;  ira'ndu  singgangga'l  kaichsaaymaanangga'l  arugea  nin’rathu.  (1iraajaakka’l  10:19)

ஆறு  படிகளின்மேலும்,  இரண்டு  பக்கத்திலும்,  பன்னிரண்டு  சிங்கங்கள்  நின்றது;  எந்த  ராஜ்யத்திலும்  இப்படிப்  பண்ணப்படவில்லை.  (1இராஜாக்கள்  10:20)

aa’ru  padiga'linmealum,  ira'ndu  pakkaththilum,  pannira'ndu  singgangga'l  nin’rathu;  entha  raajyaththilum  ippadip  pa'n'nappadavillai.  (1iraajaakka’l  10:20)

ராஜாவாகிய  சாலொமோனுக்கு  இருந்த  பானபாத்திரங்களெல்லாம்  பொன்னும்,  லீபனோன்  வனம்  என்கிற  மாளிகையின்  பணிமுட்டுகளெல்லாம்  பசும்பொன்னுமாயிருந்தது;  ஒன்றும்  வெள்ளியினால்  செய்யப்படவில்லை;  சாலொமோனின்  நாட்களில்  வெள்ளி  ஒரு  பொருளாய்  எண்ணப்படவில்லை.  (1இராஜாக்கள்  10:21)

raajaavaagiya  saalomoanukku  iruntha  baanapaaththirangga'lellaam  ponnum,  leebanoan  vanam  engi’ra  maa'ligaiyin  pa'nimuttuga'lellaam  pasumponnumaayirunthathu;  on’rum  ve'l'liyinaal  seyyappadavillai;  saalomoanin  naadka'lil  ve'l'li  oru  poru'laay  e'n'nappadavillai.  (1iraajaakka’l  10:21)

ராஜாவுக்குச்  சமுத்திரத்திலே  ஈராமின்  கப்பல்களோடேகூடத்  தர்ஷீசின்  கப்பல்களும்  இருந்தது;  தர்ஷீசின்  கப்பல்கள்  மூன்று  வருஷத்துக்கு  ஒருதரம்  பொன்னையும்,  வெள்ளியையும்,  யானைத்  தந்தங்களையும்,  குரங்குகளையும்,  மயில்களையும்  கொண்டுவரும்.  (1இராஜாக்கள்  10:22)

raajaavukkuch  samuththiraththilea  eeraamin  kappalga'loadeakoodath  tharsheesin  kappalga'lum  irunthathu;  tharsheesin  kappalga'l  moon’ru  varushaththukku  orutharam  ponnaiyum,  ve'l'liyaiyum,  yaanaith  thanthangga'laiyum,  kurangguga'laiyum,  mayilga'laiyum  ko'nduvarum.  (1iraajaakka’l  10:22)

பூமியின்  சகல  ராஜாக்களைப்பார்க்கிலும்,  ராஜாவாகிய  சாலொமோன்  ஐசுவரியத்திலும்  ஞானத்திலும்  சிறந்தவனாயிருந்தான்.  (1இராஜாக்கள்  10:23)

boomiyin  sagala  raajaakka'laippaarkkilum,  raajaavaagiya  saalomoan  aisuvariyaththilum  gnaanaththilum  si’ranthavanaayirunthaan.  (1iraajaakka’l  10:23)

சாலொமோனின்  இருதயத்திலே  தேவன்  அருளிய  ஞானத்தைக்  கேட்கிறதற்காக,  சகல  தேசத்தாரும்  அவன்  முகதரிசனத்தைத்  தேடினார்கள்.  (1இராஜாக்கள்  10:24)

saalomoanin  iruthayaththilea  theavan  aru'liya  gnaanaththaik  keadki’ratha’rkaaga,  sagala  theasaththaarum  avan  mugatharisanaththaith  theadinaarga'l.  (1iraajaakka’l  10:24)

வருஷாவருஷம்  அவரவர்  தங்கள்  காணிக்கையாகிய  வெள்ளிப்பாத்திரங்களையும்,  பொற்பாத்திரங்களையும்,  வஸ்திரங்களையும்,  ஆயுதங்களையும்,  கந்தவர்க்கங்களையும்,  குதிரைகளையும்,  கோவேறு  கழுதைகளையும்  கொண்டுவருவார்கள்.  (1இராஜாக்கள்  10:25)

varushaavarusham  avaravar  thangga'l  kaa'nikkaiyaagiya  ve'l'lippaaththirangga'laiyum,  po’rpaaththirangga'laiyum,  vasthirangga'laiyum,  aayuthangga'laiyum,  kanthavarkkangga'laiyum,  kuthiraiga'laiyum,  koavea’ru  kazhuthaiga'laiyum  ko'nduvaruvaarga'l.  (1iraajaakka’l  10:25)

சாலொமோன்  இரதங்களையும்  குதிரைவீரரையும்  சேர்த்தான்;  அவனுக்கு  ஆயிரத்து  நானூறு  இரதங்கள்  இருந்தது,  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்;  அவைகளை  இரதங்கள்  வைக்கும்  பட்டணங்களிலும்,  அவர்களை  எருசலேமில்  தன்னிடத்திலும்  வைத்திருந்தான்.  (1இராஜாக்கள்  10:26)

saalomoan  irathangga'laiyum  kuthiraiveeraraiyum  searththaan;  avanukku  aayiraththu  naanoo’ru  irathangga'l  irunthathu,  panneeraayiram  kuthiraiveerarum  irunthaarga'l;  avaiga'lai  irathangga'l  vaikkum  patta'nangga'lilum,  avarga'lai  erusaleamil  thannidaththilum  vaiththirunthaan.  (1iraajaakka’l  10:26)

எருசலேமிலே  ராஜா  வெள்ளியைக்  கற்கள்போலவும்,  கேதுருமரங்களைப்  பள்ளத்தாக்குகளில்  இருக்கும்  காட்டத்தி  மரங்கள்போலவும்  அதிகமாக்கினான்.  (1இராஜாக்கள்  10:27)

erusaleamilea  raajaa  ve'l'liyaik  ka’rka'lpoalavum,  keathurumarangga'laip  pa'l'laththaakkuga'lil  irukkum  kaattaththi  marangga'lpoalavum  athigamaakkinaan.  (1iraajaakka’l  10:27)

சாலொமோன்  தனக்குக்  குதிரைகளையும்  புடவைகளையும்  எகிப்திலிருந்து  அழைப்பித்தான்;  ராஜாவின்  வர்த்தகர்  புடவைகளை  ஒப்பந்த  விலைக்கிரயத்திற்கு  வாங்கினார்கள்.  (1இராஜாக்கள்  10:28)

saalomoan  thanakkuk  kuthiraiga'laiyum  pudavaiga'laiyum  egipthilirunthu  azhaippiththaan;  raajaavin  varththagar  pudavaiga'lai  oppantha  vilaikkirayaththi’rku  vaangginaarga'l.  (1iraajaakka’l  10:28)

எகிப்திலிருந்து  வந்த  ஒவ்வொரு  இரதத்தின்  விலை  அறுநூறு  வெள்ளிக்காசும்,  ஒவ்வொரு  குதிரையின்  விலை  நூற்றைம்பது  வெள்ளிக்காசுமாயிருந்தது;  இந்தப்பிரகாரம்  ஏத்தியரின்  ராஜாக்களெல்லாருக்கும்,  சீரியாவின்  ராஜாக்களுக்கும்,  அவர்கள்  மூலமாய்க்  கொண்டுவரப்பட்டது.  (1இராஜாக்கள்  10:29)

egipthilirunthu  vantha  ovvoru  irathaththin  vilai  a’runoo’ru  ve'l'likkaasum,  ovvoru  kuthiraiyin  vilai  noot’raimbathu  ve'l'likkaasumaayirunthathu;  inthappiragaaram  eaththiyarin  raajaakka'lellaarukkum,  seeriyaavin  raajaakka'lukkum,  avarga'l  moolamaayk  ko'nduvarappattathu.  (1iraajaakka’l  10:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!