Friday, August 12, 2016

Yoasuvaa 9 | யோசுவா 9 | Joshua 9

யோர்தானுக்கு  இப்புறத்திலே  மலைகளிலும்  பள்ளத்தாக்குகளிலும்  லீபனோனுக்கு  எதிரான  பெரிய  சமுத்திரத்தின்  கரையோரமெங்குமுள்ள  ஏத்தியரும்  எமோரியரும்  கானானியரும்  பெரிசியரும்  ஏவியரும்  எபூசியருமானவர்களுடைய  சகல  ராஜாக்களும்  அதைக்  கேள்விப்பட்டபோது,  (யோசுவா  9:1)

yoarthaanukku  ippu’raththilea  malaiga'lilum  pa'l'laththaakkuga'lilum  leebanoanukku  ethiraana  periya  samuththiraththin  karaiyoaramenggumu'l'la  eaththiyarum  emoariyarum  kaanaaniyarum  perisiyarum  eaviyarum  eboosiyarumaanavarga'ludaiya  sagala  raajaakka'lum  athaik  kea'lvippattapoathu,  (yoasuvaa  9:1)

அவர்கள்  ஒருமனப்பட்டு,  யோசுவாவோடும்  இஸ்ரவேலரோடும்  யுத்தம்பண்ண  ஏகமாய்க்  கூடினார்கள்.  (யோசுவா  9:2)

avarga'l  orumanappattu,  yoasuvaavoadum  isravealaroadum  yuththampa'n'na  eagamaayk  koodinaarga'l.  (yoasuvaa  9:2)

எரிகோவுக்கும்  ஆயிக்கும்  யோசுவா  செய்ததைக்  கிபியோனின்  குடிகள்  கேள்விப்பட்டபோது,  (யோசுவா  9:3)

erigoavukkum  aayikkum  yoasuvaa  seythathaik  kibiyoanin  kudiga'l  kea'lvippattapoathu,  (yoasuvaa  9:3)

ஒரு  தந்திரமான  யோசனைபண்ணி,  தங்களை  ஸ்தானாபதிகள்போலக்  காண்பித்து,  பழைய  இரட்டுப்  பைகளையும்,  பீறலும்  பொத்தலுமான  பழைய  திராட்சரசத்  துருத்திகளையும்  தங்கள்  கழுதைகள்மேல்  வைத்து,  (யோசுவா  9:4)

oru  thanthiramaana  yoasanaipa'n'ni,  thangga'lai  sthaanaabathiga'lpoalak  kaa'nbiththu,  pazhaiya  irattup  paiga'laiyum,  pee’ralum  poththalumaana  pazhaiya  thiraadcharasath  thuruththiga'laiyum  thangga'l  kazhuthaiga'lmeal  vaiththu,  (yoasuvaa  9:4)

பழுதுபார்க்கப்பட்ட  பழைய  பாதரட்சைகளைத்  தங்கள்  கால்களில்  போட்டு,  பழைய  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டார்கள்;  வழிக்கு  அவர்கள்  கொண்டுபோன  அப்பமெல்லாம்  உலர்ந்ததும்  பூசணம்  பூத்ததுமாயிருந்தது.  (யோசுவா  9:5)

pazhuthupaarkkappatta  pazhaiya  paatharadchaiga'laith  thangga'l  kaalga'lil  poattu,  pazhaiya  vasthirangga'lai  uduththikko'ndaarga'l;  vazhikku  avarga'l  ko'ndupoana  appamellaam  ularnthathum  poosa'nam  pooththathumaayirunthathu.  (yoasuvaa  9:5)

அவர்கள்  கில்காலில்  இருக்கிற  பாளயத்துக்கு  யோசுவாவினிடத்தில்  போய்,  அவனையும்  இஸ்ரவேல்  மனுஷரையும்  நோக்கி:  நாங்கள்  தூரதேசத்திலிருந்து  வந்தவர்கள்,  எங்களோடே  உடன்படிக்கைபண்ணுங்கள்  என்றார்கள்.  (யோசுவா  9:6)

avarga'l  kilgaalil  irukki’ra  paa'layaththukku  yoasuvaavinidaththil  poay,  avanaiyum  israveal  manusharaiyum  noakki:  naangga'l  thooratheasaththilirunthu  vanthavarga'l,  engga'loadea  udanpadikkaipa'n'nungga'l  en’raarga'l.  (yoasuvaa  9:6)

அப்பொழுது  இஸ்ரவேல்  மனுஷர்  அந்த  ஏவியரை  நோக்கி:  நீங்கள்  எங்கள்  நடுவிலே  குடியிருக்கிறவர்களாக்கும்;  நாங்கள்  எப்படி  உங்களோடே  உடன்படிக்கைபண்ணலாம்  என்றார்கள்.  (யோசுவா  9:7)

appozhuthu  israveal  manushar  antha  eaviyarai  noakki:  neengga'l  engga'l  naduvilea  kudiyirukki’ravarga'laakkum;  naangga'l  eppadi  ungga'loadea  udanpadikkaipa'n'nalaam  en’raarga'l.  (yoasuvaa  9:7)

அவர்கள்  யோசுவாவை  நோக்கி:  நாங்கள்  உமக்கு  அடிமைகள்  என்றார்கள்;  அதற்கு  யோசுவா:  நீங்கள்  யார்,  எங்கேயிருந்து  வந்தீர்கள்  என்று  கேட்டான்.  (யோசுவா  9:8)

avarga'l  yoasuvaavai  noakki:  naangga'l  umakku  adimaiga'l  en’raarga'l;  atha’rku  yoasuvaa:  neengga'l  yaar,  enggeayirunthu  vantheerga'l  en’ru  keattaan.  (yoasuvaa  9:8)

அதற்கு  அவர்கள்:  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தின்  பிரஸ்தாபத்தைக்  கேட்டு,  உமது  அடியாராகிய  நாங்கள்  வெகு  தூரதேசத்திலிருந்து  வந்தோம்;  அவருடைய  கீர்த்தியையும்,  அவர்  எகிப்திலே  செய்த  யாவையும்,  (யோசுவா  9:9)

atha’rku  avarga'l:  ummudaiya  theavanaagiya  karththarudaiya  naamaththin  pirasthaabaththaik  keattu,  umathu  adiyaaraagiya  naangga'l  vegu  thooratheasaththilirunthu  vanthoam;  avarudaiya  keerththiyaiyum,  avar  egipthilea  seytha  yaavaiyum,  (yoasuvaa  9:9)

அவர்  எஸ்போனின்  ராஜாவாகிய  சீகோனும்  அஸ்தரோத்திலிருந்த  பாசானின்  ராஜாவாகிய  ஓகும்  என்கிற  யோர்தானுக்கு  அப்புறத்திலிருந்த  எமோரியரின்  இரண்டு  ராஜாக்களுக்கும்  செய்த  யாவையும்  கேள்விப்பட்டோம்.  (யோசுவா  9:10)

avar  esboanin  raajaavaagiya  seegoanum  astharoaththiliruntha  baasaanin  raajaavaagiya  oakum  engi’ra  yoarthaanukku  appu’raththiliruntha  emoariyarin  ira'ndu  raajaakka'lukkum  seytha  yaavaiyum  kea'lvippattoam.  (yoasuvaa  9:10)

ஆகையால்,  எங்கள்  மூப்பரும்  எங்கள்  தேசத்துக்  குடிகளெல்லாரும்  எங்களை  நோக்கி:  உங்கள்  கைகளில்  வழிக்கு  ஆகாரம்  எடுத்துக்கொண்டு,  அவர்களுக்கு  எதிர்கொண்டுபோய்,  அவர்களிடத்தில்:  நாங்கள்  உங்கள்  அடியார்,  எங்களோடே  உடன்படிக்கை  பண்ணவேண்டும்  என்று  சொல்லச்சொன்னார்கள்.  (யோசுவா  9:11)

aagaiyaal,  engga'l  moopparum  engga'l  theasaththuk  kudiga'lellaarum  engga'lai  noakki:  ungga'l  kaiga'lil  vazhikku  aagaaram  eduththukko'ndu,  avarga'lukku  ethirko'ndupoay,  avarga'lidaththil:  naangga'l  ungga'l  adiyaar,  engga'loadea  udanpadikkai  pa'n'navea'ndum  en’ru  sollachsonnaarga'l.  (yoasuvaa  9:11)

உங்களிடத்தில்  வர  நாங்கள்  புறப்படுகிற  அன்றே,  எங்கள்  வழிப்பிரயாணத்துக்கு  இந்த  அப்பத்தைச்  சுடச்சுட  எங்கள்  வீட்டிலிருந்து  எடுத்துக்கொண்டு  வந்தோம்;  இப்பொழுது,  இதோ,  உலர்ந்து  பூசணம்  பூத்திருக்கிறது.  (யோசுவா  9:12)

ungga'lidaththil  vara  naangga'l  pu’rappadugi’ra  an’rea,  engga'l  vazhippirayaa'naththukku  intha  appaththaich  sudachsuda  engga'l  veettilirunthu  eduththukko'ndu  vanthoam;  ippozhuthu,  ithoa,  ularnthu  poosa'nam  pooththirukki’rathu.  (yoasuvaa  9:12)

நாங்கள்  இந்தத்  திராட்சரசத்  துருத்திகளை  நிரப்புகையில்  புதிதாயிருந்தது;  ஆனாலும்,  இதோ,  கிழிந்துபோயிற்று;  எங்கள்  வஸ்திரங்களும்  பாதரட்சைகளும்  நெடுந்தூரமான  பிரயாணத்தினாலே  பழசாய்ப்போயிற்று  என்றார்கள்.  (யோசுவா  9:13)

naangga'l  inthath  thiraadcharasath  thuruththiga'lai  nirappugaiyil  puthithaayirunthathu;  aanaalum,  ithoa,  kizhinthupoayit’ru;  engga'l  vasthirangga'lum  paatharadchaiga'lum  nedunthooramaana  pirayaa'naththinaalea  pazhasaayppoayit’ru  en’raarga'l.  (yoasuvaa  9:13)

அப்பொழுது  இஸ்ரவேலர்:  கர்த்தருடைய  வாக்கைக்  கேளாமல்  அவர்களுடைய  போஜனபதார்த்தத்தில்  சிறிது  வாங்கிக்கொண்டார்கள்.  (யோசுவா  9:14)

appozhuthu  isravealar:  karththarudaiya  vaakkaik  kea'laamal  avarga'ludaiya  poajanapathaarththaththil  si’rithu  vaanggikko'ndaarga'l.  (yoasuvaa  9:14)

யோசுவா  அவர்களோடே  சமாதானம்பண்ணி,  அவர்களை  உயிரோடே  காப்பாற்றும்  உடன்படிக்கையை  அவர்களோடே  பண்ணினான்;  அதற்காகச்  சபையின்  பிரபுக்கள்  அவர்களுக்கு  ஆணையிட்டுக்  கொடுத்தார்கள்.  (யோசுவா  9:15)

yoasuvaa  avarga'loadea  samaathaanampa'n'ni,  avarga'lai  uyiroadea  kaappaat’rum  udanpadikkaiyai  avarga'loadea  pa'n'ninaan;  atha’rkaagach  sabaiyin  pirabukka'l  avarga'lukku  aa'naiyittuk  koduththaarga'l.  (yoasuvaa  9:15)

அவர்களோடே  உடன்படிக்கைபண்ணி,  மூன்றுநாள்  சென்றபின்பு,  அவர்கள்  தங்கள்  அயலார்  என்றும்  தங்கள்  நடுவே  குடியிருக்கிறவர்கள்  என்றும்  கேள்விப்பட்டார்கள்.  (யோசுவா  9:16)

avarga'loadea  udanpadikkaipa'n'ni,  moon’runaa'l  sen’rapinbu,  avarga'l  thangga'l  ayalaar  en’rum  thangga'l  naduvea  kudiyirukki’ravarga'l  en’rum  kea'lvippattaarga'l.  (yoasuvaa  9:16)

இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணம்பண்ணுகையில்,  மூன்றாம்  நாளில்  அவர்கள்  பட்டணங்களுக்கு  வந்தார்கள்;  அந்தப்  பட்டணங்கள்  கிபியோன்,  கெபிரா,  பெயெரோத்,  கீரியாத்யெயாரீம்  என்பவைகள்.  (யோசுவா  9:17)

israveal  puththirar  pirayaa'nampa'n'nugaiyil,  moon’raam  naa'lil  avarga'l  patta'nangga'lukku  vanthaarga'l;  anthap  patta'nangga'l  kibiyoan,  kepiraa,  beyeroath,  keeriyaathyeyaareem  enbavaiga'l.  (yoasuvaa  9:17)

சபையின்  பிரபுக்கள்  அவர்களுக்கு  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்பேரில்  ஆணையிட்டிருந்தபடியினால்,  இஸ்ரவேல்  புத்திரர்  அவர்களைச்  சங்காரம்பண்ணவில்லை;  ஆனாலும்  சபையார்  எல்லாரும்  பிரபுக்கள்மேல்  முறுமுறுத்தார்கள்.  (யோசுவா  9:18)

sabaiyin  pirabukka'l  avarga'lukku  isravealin  theavanaagiya  karththarpearil  aa'naiyittirunthapadiyinaal,  israveal  puththirar  avarga'laich  sanggaarampa'n'navillai;  aanaalum  sabaiyaar  ellaarum  pirabukka'lmeal  mu’rumu’ruththaarga'l.  (yoasuvaa  9:18)

அப்பொழுது  சகல  பிரபுக்களும்,  சபையார்  யாவரையும்  நோக்கி:  நாங்கள்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்பேரில்  அவர்களுக்கு  ஆணையிட்டுக்  கொடுத்தோம்;  ஆதலால்  அவர்களை  நாம்  தொடக்கூடாது.  (யோசுவா  9:19)

appozhuthu  sagala  pirabukka'lum,  sabaiyaar  yaavaraiyum  noakki:  naangga'l  isravealin  theavanaagiya  karththarpearil  avarga'lukku  aa'naiyittuk  koduththoam;  aathalaal  avarga'lai  naam  thodakkoodaathu.  (yoasuvaa  9:19)

கடுங்கோபம்  நம்மேல்  வராதபடிக்கு,  நாம்  அவர்களுக்கு  இட்ட  ஆணையினிமித்தம்  நாம்  அவர்களை  உயிரோடே  வைத்து,  அவர்களுக்கு  ஒன்று  செய்வோம்.  (யோசுவா  9:20)

kadungkoabam  nammeal  varaathapadikku,  naam  avarga'lukku  itta  aa'naiyinimiththam  naam  avarga'lai  uyiroadea  vaiththu,  avarga'lukku  on’ru  seyvoam.  (yoasuvaa  9:20)

பிரபுக்களாகிய  நாங்கள்  அவர்களுக்குச்  சொன்னபடி  அவர்கள்  உயிரோடிருந்து,  சபையார்  எல்லாருக்கும்  விறகு  வெட்டுகிறவர்களாகவும்,  தண்ணீர்  எடுக்கிறவர்களாகவும்  இருக்கக்கடவர்கள்  என்று  பிரபுக்கள்  அவர்களோடே  சொன்னார்கள்.  (யோசுவா  9:21)

pirabukka'laagiya  naangga'l  avarga'lukkuch  sonnapadi  avarga'l  uyiroadirunthu,  sabaiyaar  ellaarukkum  vi’ragu  vettugi’ravarga'laagavum,  tha'n'neer  edukki’ravarga'laagavum  irukkakkadavarga'l  en’ru  pirabukka'l  avarga'loadea  sonnaarga'l.  (yoasuvaa  9:21)

பின்பு  யோசுவா  அவர்களை  அழைப்பித்து:  நீங்கள்  எங்கள்  நடுவே  குடியிருக்கும்போது:  நாங்கள்  உங்களுக்கு  வெகுதூரமாயிருக்கிறவர்கள்  என்று  சொல்லி,  எங்களை  வஞ்சித்தது  என்ன?  (யோசுவா  9:22)

pinbu  yoasuvaa  avarga'lai  azhaippiththu:  neengga'l  engga'l  naduvea  kudiyirukkumpoathu:  naangga'l  ungga'lukku  veguthooramaayirukki’ravarga'l  en’ru  solli,  engga'lai  vagnchiththathu  enna?  (yoasuvaa  9:22)

இப்போதும்  நீங்கள்  சபிக்கப்பட்டவர்கள்;  என்  தேவனுடைய  ஆலயத்துக்கு  விறகுவெட்டுகிறவர்களும்,  தண்ணீர்  எடுக்கிறவர்களுமான  பணிவிடைக்காரராயிருப்பீர்கள்;  இந்த  ஊழியம்  உங்களைவிட்டு  நீங்கமாட்டாது  என்றான்.  (யோசுவா  9:23)

ippoathum  neengga'l  sabikkappattavarga'l;  en  theavanudaiya  aalayaththukku  vi’raguvettugi’ravarga'lum,  tha'n'neer  edukki’ravarga'lumaana  pa'nividaikkaararaayiruppeerga'l;  intha  oozhiyam  ungga'laivittu  neenggamaattaathu  en’raan.  (yoasuvaa  9:23)

அவர்கள்  யோசுவாவுக்குப்  பிரதியுத்தரமாக:  தேசத்தையெல்லாம்  உங்களுக்கு  ஒப்புக்கொடுக்கவும்,  தேசத்தின்  குடிகளையெல்லாம்  உங்களுக்கு  முன்பாக  அழிக்கவும்  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  தமது  தாசனாகிய  மோசேக்குக்  கட்டளையிட்டது  உமது  அடியாருக்கு  நிச்சயமாகவே  அறிவிக்கப்பட்டதினால்,  நாங்கள்  எங்கள்  ஜீவன்நிமித்தம்  உங்களுக்கு  மிகவும்  பயந்து,  இந்தக்  காரியத்தைச்  செய்தோம்.  (யோசுவா  9:24)

avarga'l  yoasuvaavukkup  pirathiyuththaramaaga:  theasaththaiyellaam  ungga'lukku  oppukkodukkavum,  theasaththin  kudiga'laiyellaam  ungga'lukku  munbaaga  azhikkavum  ummudaiya  theavanaagiya  karththar  thamathu  thaasanaagiya  moaseakkuk  katta'laiyittathu  umathu  adiyaarukku  nichchayamaagavea  a’rivikkappattathinaal,  naangga'l  engga'l  jeevannimiththam  ungga'lukku  migavum  bayanthu,  inthak  kaariyaththaich  seythoam.  (yoasuvaa  9:24)

இப்போதும்,  இதோ,  உமது  கையிலிருக்கிறோம்,  உம்முடைய  பார்வைக்கு  நன்மையும்  நியாயமுமாய்த்  தோன்றுகிறபடி  எங்களுக்குச்  செய்யும்  என்றார்கள்.  (யோசுவா  9:25)

ippoathum,  ithoa,  umathu  kaiyilirukki’roam,  ummudaiya  paarvaikku  nanmaiyum  niyaayamumaayth  thoan’rugi’rapadi  engga'lukkuch  seyyum  en’raarga'l.  (yoasuvaa  9:25)

அப்படியே  யோசுவா  அவர்களுக்குச்  செய்து,  இஸ்ரவேல்  புத்திரர்  அவர்களைக்  கொன்றுபோடாதபடிக்கு,  அவர்களை  இவர்கள்  கைக்குத்  தப்புவித்தான்.  (யோசுவா  9:26)

appadiyea  yoasuvaa  avarga'lukkuch  seythu,  israveal  puththirar  avarga'laik  kon’rupoadaathapadikku,  avarga'lai  ivarga'l  kaikkuth  thappuviththaan.  (yoasuvaa  9:26)

இந்நாள்மட்டும்  இருக்கிறபடியே,  அந்நாளில்  அவர்களைச்  சபைக்கும்,  கர்த்தர்  தெரிந்துகொள்ளும்  இடத்திலிருக்கும்  அவருடைய  பலிபீடத்துக்கும்  விறகு  வெட்டுகிறவர்களாகவும்  தண்ணீர்  எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.  (யோசுவா  9:27)

innaa'lmattum  irukki’rapadiyea,  annaa'lil  avarga'laich  sabaikkum,  karththar  therinthuko'l'lum  idaththilirukkum  avarudaiya  balipeedaththukkum  vi’ragu  vettugi’ravarga'laagavum  tha'n'neer  edukki’ravarga'laagavumaakkinaan.  (yoasuvaa  9:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!