Friday, August 12, 2016

Yoasuvaa 8 | யோசுவா 8 | Joshua 8

அப்பொழுது  கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  நீ  பயப்படாமலும்  கலங்காமலும்  இரு;  நீ  யுத்த  ஜனங்கள்  யாவரையும்  கூட்டிக்கொண்டு  எழுந்து,  ஆயிபட்டணத்தின்மேல்  போ,  இதோ,  ஆயியின்  ராஜாவையும்  அவன்  ஜனத்தையும்  அவன்  பட்டணத்தையும்  அவன்  நாட்டையும்  உன்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்.  (யோசுவா  8:1)

appozhuthu  karththar  yoasuvaavai  noakki:  nee  bayappadaamalum  kalanggaamalum  iru;  nee  yuththa  janangga'l  yaavaraiyum  koottikko'ndu  ezhunthu,  aayipatta'naththinmeal  poa,  ithoa,  aayiyin  raajaavaiyum  avan  janaththaiyum  avan  patta'naththaiyum  avan  naattaiyum  un  kaiyilea  oppukkoduththean.  (yoasuvaa  8:1)

நீ  எரிகோவுக்கும்  அதின்  ராஜாவுக்கும்  செய்ததுபோல,  ஆயிக்கும்  அதின்  ராஜாவுக்கும்  செய்யக்கடவாய்;  அதில்  கொள்ளையிட்ட  பொருள்களையும்  மிருகஜீவன்களையும்  உங்களுக்குக்  கொள்ளையாக  எடுத்துக்கொள்ளலாம்,  பட்டணத்துக்குப்  பின்னாலே  பதிவிடையை  வை  என்றார்.  (யோசுவா  8:2)

nee  erigoavukkum  athin  raajaavukkum  seythathupoala,  aayikkum  athin  raajaavukkum  seyyakkadavaay;  athil  ko'l'laiyitta  poru'lga'laiyum  mirugajeevanga'laiyum  ungga'lukkuk  ko'l'laiyaaga  eduththukko'l'lalaam,  patta'naththukkup  pinnaalea  pathividaiyai  vai  en’raar.  (yoasuvaa  8:2)

அப்பொழுது  ஆயியின்மேல்  போக,  யோசுவாவும்  சகல  யுத்தஜனங்களும்  எழுந்து  புறப்பட்டார்கள்;  யோசுவா  யுத்தவீரரான  முப்பதினாயிரம்  பேரைத்  தெரிந்தெடுத்து,  இராத்திரியிலே  அவர்களை  அனுப்பி,  (யோசுவா  8:3)

appozhuthu  aayiyinmeal  poaga,  yoasuvaavum  sagala  yuththajanangga'lum  ezhunthu  pu’rappattaarga'l;  yoasuvaa  yuththaveeraraana  muppathinaayiram  pearaith  therintheduththu,  iraaththiriyilea  avarga'lai  anuppi,  (yoasuvaa  8:3)

அவர்களுக்குக்  கட்டளையிட்டதாவது:  நீங்கள்  பட்டணத்தின்  பின்னாலே  பதிவிருக்கவேண்டும்;  பட்டணத்துக்கு  வெகுதூரமாய்ப்  போகாமல்,  எல்லாரும்  ஆயத்தமாயிருங்கள்.  (யோசுவா  8:4)

avarga'lukkuk  katta'laiyittathaavathu:  neengga'l  patta'naththin  pinnaalea  pathivirukkavea'ndum;  patta'naththukku  veguthooramaayp  poagaamal,  ellaarum  aayaththamaayirungga'l.  (yoasuvaa  8:4)

நானும்  என்னோடிருக்கிற  சகல  ஜனங்களும்  பட்டணத்தண்டையில்  கிட்டிச்  சேருவோம்;  அவர்கள்  முன்போல  எங்களுக்கு  எதிராகப்  புறப்பட்டு  வரும்போது,  அவர்களுக்கு  முன்னாக  நாங்கள்  ஓடிப்போவோம்.  (யோசுவா  8:5)

naanum  ennoadirukki’ra  sagala  janangga'lum  patta'naththa'ndaiyil  kittich  searuvoam;  avarga'l  munpoala  engga'lukku  ethiraagap  pu’rappattu  varumpoathu,  avarga'lukku  munnaaga  naangga'l  oadippoavoam.  (yoasuvaa  8:5)

அப்பொழுது  அவர்கள்:  முன்போல  நமக்கு  முன்னாக  முறிந்து  ஓடிப்போகிறார்கள்  என்று  சொல்லி,  எங்களைத்  துரத்தப்  புறப்படுவார்கள்;  நாங்களோ  அவர்களைப்  பட்டணத்தைவிட்டு  இப்பாலே  வரப்பண்ணுமட்டும்,  அவர்களுக்கு  முன்னாக  ஓடுவோம்.  (யோசுவா  8:6)

appozhuthu  avarga'l:  munpoala  namakku  munnaaga  mu’rinthu  oadippoagi’raarga'l  en’ru  solli,  engga'laith  thuraththap  pu’rappaduvaarga'l;  naangga'loa  avarga'laip  patta'naththaivittu  ippaalea  varappa'n'numattum,  avarga'lukku  munnaaga  oaduvoam.  (yoasuvaa  8:6)

அப்பொழுது  நீங்கள்  பதிவிலிருந்து  எழும்பிவந்து,  பட்டணத்தைப்  பிடிக்கவேண்டும்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  அதை  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுப்பார்.  (யோசுவா  8:7)

appozhuthu  neengga'l  pathivilirunthu  ezhumbivanthu,  patta'naththaip  pidikkavea'ndum;  ungga'l  theavanaagiya  karththar  athai  ungga'l  kaiga'lil  oppukkoduppaar.  (yoasuvaa  8:7)

நீங்கள்  பட்டணத்தைப்  பிடிக்கும்போது,  அதைத்  தீக்கொளுத்திப்போடுங்கள்;  கர்த்தருடைய  சொற்படி  செய்யுங்கள்;  இதோ,  நான்  உங்களுக்குக்  கட்டளையிட்டிருக்கிறேன்  என்று  சொல்லி,  (யோசுவா  8:8)

neengga'l  patta'naththaip  pidikkumpoathu,  athaith  theekko'luththippoadungga'l;  karththarudaiya  so’rpadi  seyyungga'l;  ithoa,  naan  ungga'lukkuk  katta'laiyittirukki’rean  en’ru  solli,  (yoasuvaa  8:8)

அவர்களை  அனுப்பினான்;  அவர்கள்  போய்,  பெத்தேலுக்கும்  ஆயிக்கும்  நடுவே,  ஆயிக்கு  மேற்காகப்  பதிவிருந்தார்கள்;  யோசுவா  அன்றுராத்திரி  ஜனங்களுக்குள்  தங்கினான்.  (யோசுவா  8:9)

avarga'lai  anuppinaan;  avarga'l  poay,  beththealukkum  aayikkum  naduvea,  aayikku  mea’rkaagap  pathivirunthaarga'l;  yoasuvaa  an’ruraaththiri  janangga'lukku'l  thangginaan.  (yoasuvaa  8:9)

அதிகாலமே  யோசுவா  எழுந்திருந்து,  ஜனங்களை  இலக்கம்பார்த்து,  இஸ்ரவேலின்  மூப்பரோடுங்கூட  ஜனங்களுக்கு  முன்னாலே  நடந்து,  ஆயியின்மேல்  போனான்.  (யோசுவா  8:10)

athikaalamea  yoasuvaa  ezhunthirunthu,  janangga'lai  ilakkampaarththu,  isravealin  moopparoadungkooda  janangga'lukku  munnaalea  nadanthu,  aayiyinmeal  poanaan.  (yoasuvaa  8:10)

அவனோடிருந்த  யுத்தஜனங்கள்  எல்லாரும்  நடந்து,  பட்டணத்துக்கு  எதிரே  வந்துசேர்ந்து,  ஆயிக்கு  வடக்கே  பாளயமிறங்கினார்கள்;  அவர்களுக்கும்  ஆயிக்கும்  நடுவே  ஒரு  பள்ளத்தாக்கு  இருந்தது.  (யோசுவா  8:11)

avanoadiruntha  yuththajanangga'l  ellaarum  nadanthu,  patta'naththukku  ethirea  vanthusearnthu,  aayikku  vadakkea  paa'layami’rangginaarga'l;  avarga'lukkum  aayikkum  naduvea  oru  pa'l'laththaakku  irunthathu.  (yoasuvaa  8:11)

அவன்  ஏறக்குறைய  ஐயாயிரம்  பேரைப்  பிரித்தெடுத்து,  அவர்களைப்  பெத்தேலுக்கும்  ஆயிக்கும்  நடுவே  பட்டணத்திற்கு  மேலண்டையில்  பதிவிடையாக  வைத்தான்.  (யோசுவா  8:12)

avan  ea’rakku’raiya  aiyaayiram  pearaip  piriththeduththu,  avarga'laip  beththealukkum  aayikkum  naduvea  patta'naththi’rku  meala'ndaiyil  pathividaiyaaga  vaiththaan.  (yoasuvaa  8:12)

பட்டணத்திற்கு  வடக்கே  இருந்த  சகல  சேனையையும்  பட்டணத்திற்கு  மேற்கே  பதிவிருக்கிறவர்களையும்  திட்டம்பண்ணினபின்பு,  யோசுவா  அன்று  ராத்திரி  பள்ளத்தாக்கிலே  போயிருந்தான்.  (யோசுவா  8:13)

patta'naththi’rku  vadakkea  iruntha  sagala  seanaiyaiyum  patta'naththi’rku  mea’rkea  pathivirukki’ravarga'laiyum  thittampa'n'ninapinbu,  yoasuvaa  an’ru  raaththiri  pa'l'laththaakkilea  poayirunthaan.  (yoasuvaa  8:13)

ஆயியின்  ராஜா  அதைக்  கண்டபோது,  அவனும்  பட்டணத்தின்  மனுஷராகிய  அவனுடைய  சகல  ஜனங்களும்  தீவிரித்து,  அதிகாலமே  குறித்த  வேளையில்  இஸ்ரவேலருக்கு  எதிரே  யுத்தம்பண்ணச்  சமனான  வெளிக்கு  நேராகப்  புறப்பட்டார்கள்;  பட்டணத்துக்குப்  பின்னாலே  தனக்குப்  பதிவிடை  வைத்திருக்கிறதை  அவன்  அறியாதிருந்தான்.  (யோசுவா  8:14)

aayiyin  raajaa  athaik  ka'ndapoathu,  avanum  patta'naththin  manusharaagiya  avanudaiya  sagala  janangga'lum  theeviriththu,  athikaalamea  ku’riththa  vea'laiyil  isravealarukku  ethirea  yuththampa'n'nach  samanaana  ve'likku  nearaagap  pu’rappattaarga'l;  patta'naththukkup  pinnaalea  thanakkup  pathividai  vaiththirukki’rathai  avan  a’riyaathirunthaan.  (yoasuvaa  8:14)

யோசுவாவும்  இஸ்ரவேலர்  எல்லாரும்  அவர்களுக்கு  முன்னாக  முறிந்து,  வனாந்தரத்துக்குப்  போகிற  வழியே  ஓடிப்போனார்கள்.  (யோசுவா  8:15)

yoasuvaavum  isravealar  ellaarum  avarga'lukku  munnaaga  mu’rinthu,  vanaantharaththukkup  poagi’ra  vazhiyea  oadippoanaarga'l.  (yoasuvaa  8:15)

அப்பொழுது  பட்டணத்துக்குள்  இருந்த  ஜனங்கள்  எல்லாரும்  அவர்களைத்  துரத்தும்படி  கூப்பிட்டுக்கொண்டு  யோசுவாவைப்  பின்தொடர்ந்து  பட்டணத்தைவிட்டு  அப்புறப்பட்டார்கள்.  (யோசுவா  8:16)

appozhuthu  patta'naththukku'l  iruntha  janangga'l  ellaarum  avarga'laith  thuraththumpadi  kooppittukko'ndu  yoasuvaavaip  pinthodarnthu  patta'naththaivittu  appu’rappattaarga'l.  (yoasuvaa  8:16)

ஆயியிலும்  பெத்தேலிலும்  இஸ்ரவேலரைப்  பின்தொடராத  மனுஷன்  இருந்ததில்லை;  பட்டணத்தைத்  திறந்துவைத்துவிட்டு,  இஸ்ரவேலரைத்  துரத்திக்கொண்டு  போனார்கள்.  (யோசுவா  8:17)

aayiyilum  beththealilum  isravealaraip  pinthodaraatha  manushan  irunthathillai;  patta'naththaith  thi’ranthuvaiththuvittu,  isravealaraith  thuraththikko'ndu  poanaarga'l.  (yoasuvaa  8:17)

அப்பொழுது  கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  உன்  கையில்  இருக்கிற  ஈட்டியை  ஆயிக்கு  நேராக  நீட்டு;  அதை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றார்;  அப்படியே  யோசுவா  தன்  கையில்  இருந்த  ஈட்டியைப்  பட்டணத்துக்கு  நேராக  நீட்டினான்.  (யோசுவா  8:18)

appozhuthu  karththar  yoasuvaavai  noakki:  un  kaiyil  irukki’ra  eettiyai  aayikku  nearaaga  neettu;  athai  un  kaiyil  oppukkoduppean  en’raar;  appadiyea  yoasuvaa  than  kaiyil  iruntha  eettiyaip  patta'naththukku  nearaaga  neettinaan.  (yoasuvaa  8:18)

அவன்  தன்  கையை  நீட்டினவுடனே,  பதிவிருந்தவர்கள்  தீவிரமாய்த்  தாங்கள்  இருந்த  இடத்திலிருந்து  எழும்பி  ஓடி,  பட்டணத்துக்கு  வந்து,  அதைப்  பிடித்து,  தீவிரத்தோடே  பட்டணத்தைத்  தீக்கொளுத்தினார்கள்.  (யோசுவா  8:19)

avan  than  kaiyai  neettinavudanea,  pathivirunthavarga'l  theeviramaayth  thaangga'l  iruntha  idaththilirunthu  ezhumbi  oadi,  patta'naththukku  vanthu,  athaip  pidiththu,  theeviraththoadea  patta'naththaith  theekko'luththinaarga'l.  (yoasuvaa  8:19)

ஆயியின்  மனுஷர்  பின்னிட்டுப்  பார்த்தபோது,  இதோ,  பட்டணத்தின்  புகை  ஆகாசத்தில்  எழும்புகிறதைக்  கண்டார்கள்;  அப்பொழுது  அங்கும்  இங்கும்  ஓடிப்போகிறதற்கு  அவர்களுக்கு  இடம்  இல்லாமற்போயிற்று;  வனாந்தரத்துக்கு  ஓடின  ஜனங்கள்  தங்களைத்  தொடர்ந்தவர்கள்  முகமாய்த்  திரும்பினார்கள்.  (யோசுவா  8:20)

aayiyin  manushar  pinnittup  paarththapoathu,  ithoa,  patta'naththin  pugai  aagaasaththil  ezhumbugi’rathaik  ka'ndaarga'l;  appozhuthu  anggum  inggum  oadippoagi’ratha’rku  avarga'lukku  idam  illaama’rpoayit’ru;  vanaantharaththukku  oadina  janangga'l  thangga'laith  thodarnthavarga'l  mugamaayth  thirumbinaarga'l.  (yoasuvaa  8:20)

பதிவிருந்தவர்கள்  பட்டணத்தைப்  பிடித்ததையும்,  பட்டணத்தின்  புகை  எழும்புகிறதையும்,  யோசுவாவும்  இஸ்ரவேலரும்  பார்த்தபோது,  திரும்பிக்கொண்டு,  ஆயியின்  மனுஷரை  முறிய  அடித்தார்கள்.  (யோசுவா  8:21)

pathivirunthavarga'l  patta'naththaip  pidiththathaiyum,  patta'naththin  pugai  ezhumbugi’rathaiyum,  yoasuvaavum  isravealarum  paarththapoathu,  thirumbikko'ndu,  aayiyin  manusharai  mu’riya  adiththaarga'l.  (yoasuvaa  8:21)

பட்டணத்திலிருந்தவர்களும்  அவர்களுக்கு  எதிர்ப்பட்டதினால்,  சிலர்  இப்புறத்திலும்  சிலர்  அப்புறத்திலும்  இருந்த  இஸ்ரவேலின்  நடுவே  அகப்பட்டுக்கொண்டார்கள்;  ஆகையால்  அவர்களில்  ஒருவரும்  தப்பி  மீந்திராதபடிக்கு  அவர்களை  வெட்டிப்போட்டு,  (யோசுவா  8:22)

patta'naththilirunthavarga'lum  avarga'lukku  ethirppattathinaal,  silar  ippu’raththilum  silar  appu’raththilum  iruntha  isravealin  naduvea  agappattukko'ndaarga'l;  aagaiyaal  avarga'lil  oruvarum  thappi  meenthiraathapadikku  avarga'lai  vettippoattu,  (yoasuvaa  8:22)

ஆயியின்  ராஜாவை  உயிரோடே  பிடித்து,  யோசுவாவினிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  (யோசுவா  8:23)

aayiyin  raajaavai  uyiroadea  pidiththu,  yoasuvaavinidaththil  ko'nduvanthaarga'l.  (yoasuvaa  8:23)

இஸ்ரவேலர்  வனாந்தரவெளியிலே  தங்களைத்  துரத்தின  ஆயியின்  குடிகளையெல்லாம்  வெட்டித்  தீர்ந்தபோதும்,  அவர்கள்  அனைவரும்  நாசமாகுமட்டும்  பட்டயக்கருக்கினால்  விழுந்து  இறந்தபோதும்,  இஸ்ரவேலர்  எல்லாரும்  ஆயிக்குத்  திரும்பி,  அதைப்  பட்டயக்கருக்கினால்  சங்கரித்தார்கள்.  (யோசுவா  8:24)

isravealar  vanaantharave'liyilea  thangga'laith  thuraththina  aayiyin  kudiga'laiyellaam  vettith  theernthapoathum,  avarga'l  anaivarum  naasamaagumattum  pattayakkarukkinaal  vizhunthu  i’ranthapoathum,  isravealar  ellaarum  aayikkuth  thirumbi,  athaip  pattayakkarukkinaal  sanggariththaarga'l.  (yoasuvaa  8:24)

அந்நாளிலே  ஆணும்  பெண்ணுமாக  ஆயியின்  மனுஷர்  எல்லாரும்  பன்னீராயிரம்பேர்  விழுந்தார்கள்.  (யோசுவா  8:25)

annaa'lilea  aa'num  pe'n'numaaga  aayiyin  manushar  ellaarum  panneeraayirampear  vizhunthaarga'l.  (yoasuvaa  8:25)

ஆயியின்  குடிகளையெல்லாம்  சங்கரித்துத்  தீருமட்டும்,  யோசுவா  ஈட்டியை  நீட்டிக்கொண்டிருந்த  தன்  கையை  மடக்கவில்லை.  (யோசுவா  8:26)

aayiyin  kudiga'laiyellaam  sanggariththuth  theerumattum,  yoasuvaa  eettiyai  neettikko'ndiruntha  than  kaiyai  madakkavillai.  (yoasuvaa  8:26)

கர்த்தர்  யோசுவாவுக்குக்  கட்டளையிட்ட  வார்த்தையின்படி,  மிருகஜீவனையும்  அந்தப்  பட்டணத்தின்  கொள்ளையையும்மாத்திரம்  இஸ்ரவேலர்  எடுத்துக்கொண்டார்கள்.  (யோசுவா  8:27)

karththar  yoasuvaavukkuk  katta'laiyitta  vaarththaiyinpadi,  mirugajeevanaiyum  anthap  patta'naththin  ko'l'laiyaiyummaaththiram  isravealar  eduththukko'ndaarga'l.  (yoasuvaa  8:27)

யோசுவா  ஆயியைச்  சுட்டெரித்து,  அதை  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  என்றைக்கும்  பாழாய்க்கிடக்கும்  மண்மேடாக்கி,  (யோசுவா  8:28)

yoasuvaa  aayiyaich  sutteriththu,  athai  innaa'lvaraikkum  irukki’rapadi  en’raikkum  paazhaaykkidakkum  ma'nmeadaakki,  (yoasuvaa  8:28)

ஆயியின்  ராஜாவை  ஒரு  மரத்திலே  தூக்கிப்போடுவித்து,  சாயங்காலமட்டும்  அதிலே  தொங்கவிட்டான்;  சூரியன்  அஸ்தமித்தபின்பு  யோசுவா  அவன்  உடலை  மரத்தைவிட்டு  இறக்கச்  சொன்னான்;  அதைப்  பட்டணவாசலில்  போட்டு,  இந்நாள்வரைக்கும்  இருக்கிற  பெரிய  கற்குவியலை  அதின்மேல்  குவித்தார்கள்.  (யோசுவா  8:29)

aayiyin  raajaavai  oru  maraththilea  thookkippoaduviththu,  saayanggaalamattum  athilea  thonggavittaan;  sooriyan  asthamiththapinbu  yoasuvaa  avan  udalai  maraththaivittu  i’rakkach  sonnaan;  athaip  patta'navaasalil  poattu,  innaa'lvaraikkum  irukki’ra  periya  ka’rkuviyalai  athinmeal  kuviththaarga'l.  (yoasuvaa  8:29)

அப்பொழுது  யோசுவா:  கர்த்தரின்  தாசனாகிய  மோசே  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கட்டளையிட்டபடியும்,  மோசேயின்  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடியும்,  ஏபால்  பர்வதத்தில்  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருக்கு  இருப்பாயுதம்படாத  முழுக்கற்களால்  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்.  (யோசுவா  8:30)

appozhuthu  yoasuvaa:  karththarin  thaasanaagiya  moasea  israveal  puththirarukkuk  katta'laiyittapadiyum,  moaseayin  niyaayappiramaa'na  pusthagaththil  ezhuthiyirukki’rapadiyum,  eabaal  parvathaththil  isravealin  theavanaagiya  karththarukku  iruppaayuthampadaatha  muzhukka’rka'laal  oru  balipeedaththaik  kattinaan.  (yoasuvaa  8:30)

அதின்மேல்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தி,  சமாதானபலிகளையும்  இட்டார்கள்.  (யோசுவா  8:31)

athinmeal  karththarukkuch  sarvaangga  thaganabaliga'laich  seluththi,  samaathaanabaliga'laiyum  ittaarga'l.  (yoasuvaa  8:31)

இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாக  மோசே  எழுதியிருந்த  நியாயப்பிரமாணத்தை  அவன்  அங்கே  கற்களில்  பேர்த்தெழுதினான்.  (யோசுவா  8:32)

israveal  puththirarukku  munbaaga  moasea  ezhuthiyiruntha  niyaayappiramaa'naththai  avan  anggea  ka’rka'lil  pearththezhuthinaan.  (yoasuvaa  8:32)

இஸ்ரவேல்  ஜனங்களை  ஆசீர்வதிக்கும்படி  கர்த்தரின்  தாசனாகிய  மோசே  முதலில்  கட்டளையிட்டிருந்தபடியே,  இஸ்ரவேலர்  எல்லாரும்,  அவர்களுடைய  மூப்பரும்,  அதிபதிகளும்,  நியாயாதிபதிகளும்,  அந்நியர்களும்,  இஸ்ரவேலில்  பிறந்தவர்களும்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியைச்  சுமக்கிற  லேவியரான  ஆசாரியருக்கு  முன்பாக,  பெட்டிக்கு  இருபுறத்திலும்,  பாதிபேர்  கெரிசீம்  மலைக்கு  எதிர்புறமாகவும்,  பாதிபேர்  ஏபால்  மலைக்கு  எதிர்புறமாகவும்  நின்றார்கள்.  (யோசுவா  8:33)

israveal  janangga'lai  aaseervathikkumpadi  karththarin  thaasanaagiya  moasea  muthalil  katta'laiyittirunthapadiyea,  isravealar  ellaarum,  avarga'ludaiya  moopparum,  athibathiga'lum,  niyaayaathibathiga'lum,  anniyarga'lum,  isravealil  pi’ranthavarga'lum  karththarudaiya  udanpadikkaip  pettiyaich  sumakki’ra  leaviyaraana  aasaariyarukku  munbaaga,  pettikku  irupu’raththilum,  paathipear  keriseem  malaikku  ethirpu’ramaagavum,  paathipear  eabaal  malaikku  ethirpu’ramaagavum  nin’raarga'l.  (yoasuvaa  8:33)

அதற்குப்பின்பு  அவன்  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடி  நியாயப்பிரமாணத்தில்  சொல்லிய  ஆசீர்வாதமும்  சாபமுமாகிய  சகல  வார்த்தைகளையும்  வாசித்தான்.  (யோசுவா  8:34)

atha’rkuppinbu  avan  niyaayappiramaa'na  pusthagaththil  ezhuthiyirukki’rapadi  niyaayappiramaa'naththil  solliya  aaseervaathamum  saabamumaagiya  sagala  vaarththaiga'laiyum  vaasiththaan.  (yoasuvaa  8:34)

மோசே  கட்டளையிட்ட  எல்லாவற்றிலும்  யோசுவா,  இஸ்ரவேலின்  முழுச்சபைக்கும்,  ஸ்திரீகளுக்கும்  பிள்ளைகளுக்கும்,  அவர்களுக்குள்  நடமாடி  சஞ்சரித்த  அந்நியர்களுக்கும்  முன்பாக,  ஒரு  வார்த்தையையும்  விடாமல்  வாசித்தான்.  (யோசுவா  8:35)

moasea  katta'laiyitta  ellaavat’rilum  yoasuvaa,  isravealin  muzhuchsabaikkum,  sthireega'lukkum  pi'l'laiga'lukkum,  avarga'lukku'l  nadamaadi  sagnchariththa  anniyarga'lukkum  munbaaga,  oru  vaarththaiyaiyum  vidaamal  vaasiththaan.  (yoasuvaa  8:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!