Friday, August 12, 2016

Yoasuvaa 5 | யோசுவா 5 | Joshua 5

இஸ்ரவேல்  புத்திரர்  கடந்து  தீருமளவும்,  கர்த்தர்  யோர்தானின்  தண்ணீரை  அவர்களுக்கு  முன்பாக  வற்றிப்போகப்பண்ணினதை,  யோர்தானுக்கு  மேல்கரையில்  குடியிருந்த  எமோரியரின்  சகல  ராஜாக்களும்,  சமுத்திரத்தருகே  குடியிருந்த  கானானியரின்  சகல  ராஜாக்களும்  கேட்டதுமுதற்கொண்டு,  அவர்கள்  இருதயம்  கரைந்து,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகச்  சோர்ந்துபோனார்கள்.  (யோசுவா  5:1)

israveal  puththirar  kadanthu  theeruma'lavum,  karththar  yoarthaanin  tha'n'neerai  avarga'lukku  munbaaga  vat’rippoagappa'n'ninathai,  yoarthaanukku  mealkaraiyil  kudiyiruntha  emoariyarin  sagala  raajaakka'lum,  samuththiraththarugea  kudiyiruntha  kaanaaniyarin  sagala  raajaakka'lum  keattathumutha’rko'ndu,  avarga'l  iruthayam  karainthu,  israveal  puththirarukku  munbaagach  soarnthupoanaarga'l.  (yoasuvaa  5:1)

அக்காலத்திலே  கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  நீ  கருக்கான  கத்திகளை  உண்டாக்கி,  திரும்ப  இரண்டாம்விசை  இஸ்ரவேல்  புத்திரரை  விருத்தசேதனம்பண்ணு  என்றார்.  (யோசுவா  5:2)

akkaalaththilea  karththar  yoasuvaavai  noakki:  nee  karukkaana  kaththiga'lai  u'ndaakki,  thirumba  ira'ndaamvisai  israveal  puththirarai  viruththaseathanampa'n'nu  en’raar.  (yoasuvaa  5:2)

அப்பொழுது  யோசுவா  கருக்கான  கத்திகளை  உண்டாக்கி,  இஸ்ரவேல்  புத்திரரை  ஆர்லோத்  மேட்டிலே  விருத்தசேதனம்பண்ணினான்.  (யோசுவா  5:3)

appozhuthu  yoasuvaa  karukkaana  kaththiga'lai  u'ndaakki,  israveal  puththirarai  aarloath  meattilea  viruththaseathanampa'n'ninaan.  (yoasuvaa  5:3)

யோசுவா  இப்படி  விருத்தசேதனம்  பண்ணின  முகாந்தரம்  என்னவென்றால்:  எகிப்திலிருந்து  புறப்பட்ட  சகல  ஆண்மக்களாகிய  யுத்தபுருஷர்  எல்லாரும்  எகிப்திலிருந்து  புறப்பட்டபின்பு,  வழியில்  வனாந்தரத்திலே  மாண்டுபோனார்கள்.  (யோசுவா  5:4)

yoasuvaa  ippadi  viruththaseathanam  pa'n'nina  mugaantharam  ennaven’raal:  egipthilirunthu  pu’rappatta  sagala  aa'nmakka'laagiya  yuththapurushar  ellaarum  egipthilirunthu  pu’rappattapinbu,  vazhiyil  vanaantharaththilea  maa'ndupoanaarga'l.  (yoasuvaa  5:4)

எகிப்திலிருந்து  புறப்பட்ட  எல்லா  ஜனங்களும்  விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்;  அவர்கள்  எகிப்திலிருந்து  புறப்பட்டபின்பு,  வழியில்  வனாந்தரத்திலே  பிறந்த  சகல  ஜனங்களும்  விருத்தசேதனம்பண்ணப்படாதிருந்தார்கள்.  (யோசுவா  5:5)

egipthilirunthu  pu’rappatta  ellaa  janangga'lum  viruththaseathanampa'n'nappattirunthaarga'l;  avarga'l  egipthilirunthu  pu’rappattapinbu,  vazhiyil  vanaantharaththilea  pi’rantha  sagala  janangga'lum  viruththaseathanampa'n'nappadaathirunthaarga'l.  (yoasuvaa  5:5)

கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படியாமற்போன  எகிப்திலிருந்து  புறப்பட்ட  யுத்தபுருஷரான  யாவரும்  மாளுமட்டும்,  இஸ்ரவேல்  புத்திரர்  நாற்பதுவருஷம்  வனாந்தரத்தில்  நடந்து  திரிந்தார்கள்;  கர்த்தர்  எங்களுக்குக்  கொடுக்கும்படி  அவர்கள்  பிதாக்களுக்கு  ஆணையிட்ட  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்தை  அவர்கள்  காண்பதில்லை  என்று  கர்த்தர்  அவர்களுக்கு  ஆணையிட்டிருந்தார்.  (யோசுவா  5:6)

karththarudaiya  saththaththi’rkuk  keezhppadiyaama’rpoana  egipthilirunthu  pu’rappatta  yuththapurusharaana  yaavarum  maa'lumattum,  israveal  puththirar  naa’rpathuvarusham  vanaantharaththil  nadanthu  thirinthaarga'l;  karththar  engga'lukkuk  kodukkumpadi  avarga'l  pithaakka'lukku  aa'naiyitta  paalum  theanum  oadugi’ra  theasaththai  avarga'l  kaa'nbathillai  en’ru  karththar  avarga'lukku  aa'naiyittirunthaar.  (yoasuvaa  5:6)

அவர்களுக்குப்  பதிலாக  அவர்  எழும்பப்பண்ணின  அவர்கள்  பிள்ளைகளை  யோசுவா  விருத்தசேதனம்பண்ணினான்;  வழியிலே  அவர்களை  விருத்தசேதனம்  பண்ணாததினால்  அவர்கள்  விருத்தசேதனம்  இல்லாதிருந்தார்கள்.  (யோசுவா  5:7)

avarga'lukkup  bathilaaga  avar  ezhumbappa'n'nina  avarga'l  pi'l'laiga'lai  yoasuvaa  viruththaseathanampa'n'ninaan;  vazhiyilea  avarga'lai  viruththaseathanam  pa'n'naathathinaal  avarga'l  viruththaseathanam  illaathirunthaarga'l.  (yoasuvaa  5:7)

ஜனங்களெல்லாரும்  விருத்தசேதனம்  பண்ணப்பட்டுத்  தீர்ந்தபின்பு,  அவர்கள்  குணமாகுமட்டும்  தங்கள்தங்கள்  இடத்திலே  பாளயத்தில்  தரித்திருந்தார்கள்.  (யோசுவா  5:8)

janangga'lellaarum  viruththaseathanam  pa'n'nappattuth  theernthapinbu,  avarga'l  ku'namaagumattum  thangga'lthangga'l  idaththilea  paa'layaththil  thariththirunthaarga'l.  (yoasuvaa  5:8)

கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  இன்று  எகிப்தின்  நிந்தையை  உங்கள்மேல்  இராதபடிக்குப்  புரட்டிப்போட்டேன்  என்றார்;  அதனால்  அந்த  ஸ்தலம்  இந்நாள்வரைக்கும்  கில்கால்  என்னப்படுகிறது.  (யோசுவா  5:9)

karththar  yoasuvaavai  noakki:  in’ru  egipthin  ninthaiyai  ungga'lmeal  iraathapadikkup  purattippoattean  en’raar;  athanaal  antha  sthalam  innaa'lvaraikkum  kilgaal  ennappadugi’rathu.  (yoasuvaa  5:9)

இஸ்ரவேல்  புத்திரர்  கில்காலில்  பாளயமிறங்கியிருந்து,  மாதத்தின்  பதினாலாம்  தேதி  அந்திநேரத்திலே  எரிகோவின்  சமனான  வெளிகளிலே  பஸ்காவை  ஆசரித்தார்கள்.  (யோசுவா  5:10)

israveal  puththirar  kilgaalil  paa'layami’ranggiyirunthu,  maathaththin  pathinaalaam  theathi  anthinearaththilea  erigoavin  samanaana  ve'liga'lilea  paskaavai  aasariththaarga'l.  (yoasuvaa  5:10)

பஸ்காவின்  மறுநாளாகிய  அன்றையதினம்  அவர்கள்  தேசத்தினுடைய  தானியத்தாலாகிய  புளிப்பில்லாத  அப்பங்களையும்  சுட்ட  கதிர்களையும்  புசித்தார்கள்.  (யோசுவா  5:11)

paskaavin  ma’runaa'laagiya  an’raiyathinam  avarga'l  theasaththinudaiya  thaaniyaththaalaagiya  pu'lippillaatha  appangga'laiyum  sutta  kathirga'laiyum  pusiththaarga'l.  (yoasuvaa  5:11)

அவர்கள்  தேசத்தின்  தானியத்திலே  புசித்த  மறுநாளிலே  மன்னா  பெய்யாமல்  ஒழிந்தது;  அதுமுதல்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  மன்னா  இல்லாமற்போய்,  அவர்கள்  கானான்  தேசத்துப்  பலனை  அந்த  வருஷத்தில்தானே  புசித்தார்கள்.  (யோசுவா  5:12)

avarga'l  theasaththin  thaaniyaththilea  pusiththa  ma’runaa'lilea  mannaa  peyyaamal  ozhinthathu;  athumuthal  israveal  puththirarukku  mannaa  illaama’rpoay,  avarga'l  kaanaan  theasaththup  palanai  antha  varushaththilthaanea  pusiththaarga'l.  (yoasuvaa  5:12)

பின்னும்  யோசுவா  எரிகோவின்  வெளியிலிருந்து  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கும்போது,  இதோ,  ஒருவர்  அவனுக்கு  எதிரே  நின்றார்;  உருவின  பட்டயம்  அவர்  கையில்  இருந்தது;  யோசுவா  அவரிடத்தில்  போய்:  நீர்  எங்களைச்  சேர்ந்தவரோ,  எங்கள்  சத்துருக்களைச்  சேர்ந்தவரோ  என்று  கேட்டான்.  (யோசுவா  5:13)

pinnum  yoasuvaa  erigoavin  ve'liyilirunthu  than  ka'nga'lai  ea’reduththup  paarkkumpoathu,  ithoa,  oruvar  avanukku  ethirea  nin’raar;  uruvina  pattayam  avar  kaiyil  irunthathu;  yoasuvaa  avaridaththil  poay:  neer  engga'laich  searnthavaroa,  engga'l  saththurukka'laich  searnthavaroa  en’ru  keattaan.  (yoasuvaa  5:13)

அதற்கு  அவர்:  அல்ல,  நான்  கர்த்தருடைய  சேனையின்  அதிபதியாய்  இப்பொழுது  வந்தேன்  என்றார்;  அப்பொழுது  யோசுவா  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  பணிந்துகொண்டு,  அவரை  நோக்கி:  என்  ஆண்டவர்  தமது  அடியேனுக்குச்  சொல்லுகிறது  என்னவென்று  கேட்டான்.  (யோசுவா  5:14)

atha’rku  avar:  alla,  naan  karththarudaiya  seanaiyin  athibathiyaay  ippozhuthu  vanthean  en’raar;  appozhuthu  yoasuvaa  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthu  pa'ninthuko'ndu,  avarai  noakki:  en  aa'ndavar  thamathu  adiyeanukkuch  sollugi’rathu  ennaven’ru  keattaan.  (yoasuvaa  5:14)

அப்பொழுது  கர்த்தருடைய  சேனையின்  அதிபதி  யோசுவாவை  நோக்கி:  உன்  கால்களிலிருக்கிற  பாதரட்சைகளைக்  கழற்றிப்போடு,  நீ  நிற்கிற  இடம்  பரிசுத்தமானது  என்றார்;  யோசுவா  அப்படியே  செய்தான்.  (யோசுவா  5:15)

appozhuthu  karththarudaiya  seanaiyin  athibathi  yoasuvaavai  noakki:  un  kaalga'lilirukki’ra  paatharadchaiga'laik  kazhat’rippoadu,  nee  ni’rki’ra  idam  parisuththamaanathu  en’raar;  yoasuvaa  appadiyea  seythaan.  (yoasuvaa  5:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!