Friday, August 12, 2016

Yoasuvaa 4 | யோசுவா 4 | Joshua 4

ஜனங்கள்  எல்லாரும்  யோர்தானைக்  கடந்து  தீர்ந்தபோது,  கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  (யோசுவா  4:1)

janangga'l  ellaarum  yoarthaanaik  kadanthu  theernthapoathu,  karththar  yoasuvaavai  noakki:  (yoasuvaa  4:1)

நீங்கள்,  ஒவ்வொரு  கோத்திரத்திற்கு  ஒவ்வொருவராக  ஜனங்களில்  பன்னிரண்டுபேரைத்  தெரிந்துகொண்டு,  (யோசுவா  4:2)

neengga'l,  ovvoru  koaththiraththi’rku  ovvoruvaraaga  janangga'lil  pannira'ndupearaith  therinthuko'ndu,  (yoasuvaa  4:2)

இங்கே  யோர்தானின்  நடுவிலே  ஆசாரியர்களின்  கால்கள்  நிலையாய்  நின்ற  இடத்திலே  பன்னிரண்டு  கற்களை  எடுத்து,  அவைகளை  உங்களோடேகூட  அக்கரைக்குக்  கொண்டுபோய்,  நீங்கள்  இன்று  இரவில்  தங்கும்  ஸ்தானத்திலே  அவைகளை  வையுங்கள்  என்று  அவர்களுக்குக்  கட்டளையிடுங்கள்  என்றார்.  (யோசுவா  4:3)

inggea  yoarthaanin  naduvilea  aasaariyarga'lin  kaalga'l  nilaiyaay  nin’ra  idaththilea  pannira'ndu  ka’rka'lai  eduththu,  avaiga'lai  ungga'loadeakooda  akkaraikkuk  ko'ndupoay,  neengga'l  in’ru  iravil  thanggum  sthaanaththilea  avaiga'lai  vaiyungga'l  en’ru  avarga'lukkuk  katta'laiyidungga'l  en’raar.  (yoasuvaa  4:3)

அப்பொழுது  யோசுவா  இஸ்ரவேல்  புத்திரரில்  ஒவ்வொரு  கோத்திரத்திற்கு  ஒவ்வொருவராக  ஆயத்தப்படுத்தியிருந்த  பன்னிரண்டுபேரை  அழைத்து,  (யோசுவா  4:4)

appozhuthu  yoasuvaa  israveal  puththiraril  ovvoru  koaththiraththi’rku  ovvoruvaraaga  aayaththappaduththiyiruntha  pannira'ndupearai  azhaiththu,  (yoasuvaa  4:4)

அவர்களை  நோக்கி:  நீங்கள்  யோர்தானின்  மத்தியில்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  பெட்டிக்கு  முன்பாகக்  கடந்துபோய்,  உங்களுக்குள்ளே  ஒரு  அடையாளமாயிருக்கும்படிக்கு,  இஸ்ரவேல்  புத்திரருடைய  கோத்திரங்களின்  இலக்கத்திற்குச்  சரியாக,  உங்களில்  ஒவ்வொருவன்  ஒவ்வொரு  கல்லைத்  தன்  தோளின்மேல்  எடுத்துக்கொண்டு  போங்கள்.  (யோசுவா  4:5)

avarga'lai  noakki:  neengga'l  yoarthaanin  maththiyil  ungga'l  theavanaagiya  karththarin  pettikku  munbaagak  kadanthupoay,  ungga'lukku'l'lea  oru  adaiyaa'lamaayirukkumpadikku,  israveal  puththirarudaiya  koaththirangga'lin  ilakkaththi’rkuch  sariyaaga,  ungga'lil  ovvoruvan  ovvoru  kallaith  than  thoa'linmeal  eduththukko'ndu  poangga'l.  (yoasuvaa  4:5)

நாளை  இந்தக்  கற்கள்  ஏதென்று  உங்கள்  பிள்ளைகள்  உங்களைக்  கேட்கும்போது,  (யோசுவா  4:6)

naa'lai  inthak  ka’rka'l  eathen’ru  ungga'l  pi'l'laiga'l  ungga'laik  keadkumpoathu,  (yoasuvaa  4:6)

நீங்கள்:  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டிக்கு  முன்பாக  யோர்தானின்  தண்ணீர்  பிரிந்துபோனதினால்  அவைகள்  வைக்கப்பட்டிருக்கிறது;  யோர்தானைக்  கடந்துபோகிறபோது,  யோர்தானின்  தண்ணீர்  பிரிந்துபோயிற்று;  ஆகையால்  இந்தக்  கற்கள்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  என்றைக்கும்  நினைப்பூட்டும்  அடையாளம்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (யோசுவா  4:7)

neengga'l:  karththarudaiya  udanpadikkaip  pettikku  munbaaga  yoarthaanin  tha'n'neer  pirinthupoanathinaal  avaiga'l  vaikkappattirukki’rathu;  yoarthaanaik  kadanthupoagi’rapoathu,  yoarthaanin  tha'n'neer  pirinthupoayit’ru;  aagaiyaal  inthak  ka’rka'l  israveal  puththirarukku  en’raikkum  ninaippoottum  adaiyaa'lam  en’ru  sollungga'l  en’raan.  (yoasuvaa  4:7)

யோசுவா  கட்டளையிட்டபடி  இஸ்ரவேல்  புத்திரர்  செய்து,  கர்த்தர்  யோசுவாவோடே  சொன்னபடியே,  இஸ்ரவேல்  புத்திரருடைய  கோத்திரங்களின்  இலக்கத்திற்குச்  சரியாகப்  பன்னிரண்டு  கற்களை  யோர்தானின்  நடுவில்  எடுத்து,  அவைகளைத்  தங்களோடேகூட  அக்கரைக்குக்  கொண்டுபோய்,  தாங்கள்  தங்கின  இடத்திலே  வைத்தார்கள்.  (யோசுவா  4:8)

yoasuvaa  katta'laiyittapadi  israveal  puththirar  seythu,  karththar  yoasuvaavoadea  sonnapadiyea,  israveal  puththirarudaiya  koaththirangga'lin  ilakkaththi’rkuch  sariyaagap  pannira'ndu  ka’rka'lai  yoarthaanin  naduvil  eduththu,  avaiga'laith  thangga'loadeakooda  akkaraikkuk  ko'ndupoay,  thaangga'l  thanggina  idaththilea  vaiththaarga'l.  (yoasuvaa  4:8)

யோர்தானின்  நடுவிலும்  உடன்படிக்கைப்  பெட்டியைச்  சுமந்த  ஆசாரியரின்  கால்கள்  நின்ற  இடத்திலே  யோசுவா  பன்னிரண்டு  கற்களை  நாட்டினான்;  அவைகள்  இந்நாள்மட்டும்  அங்கே  இருக்கிறது.  (யோசுவா  4:9)

yoarthaanin  naduvilum  udanpadikkaip  pettiyaich  sumantha  aasaariyarin  kaalga'l  nin’ra  idaththilea  yoasuvaa  pannira'ndu  ka’rka'lai  naattinaan;  avaiga'l  innaa'lmattum  anggea  irukki’rathu.  (yoasuvaa  4:9)

மோசே  யோசுவாவுக்குக்  கட்டளையிட்டிருந்த  எல்லாவற்றின்படியும்  ஜனங்களுக்குச்  சொல்லும்படி,  கர்த்தர்  யோசுவாவுக்குக்  கட்டளையிட்டவையெல்லாம்  செய்து  முடியுமட்டும்,  பெட்டியைச்  சுமக்கிற  ஆசாரியர்  யோர்தானின்  நடுவே  நின்றார்கள்;  ஜனங்கள்  தீவிரித்துக்  கடந்துபோனார்கள்.  (யோசுவா  4:10)

moasea  yoasuvaavukkuk  katta'laiyittiruntha  ellaavat’rinpadiyum  janangga'lukkuch  sollumpadi,  karththar  yoasuvaavukkuk  katta'laiyittavaiyellaam  seythu  mudiyumattum,  pettiyaich  sumakki’ra  aasaariyar  yoarthaanin  naduvea  nin’raarga'l;  janangga'l  theeviriththuk  kadanthupoanaarga'l.  (yoasuvaa  4:10)

ஜனமெல்லாம்  கடந்துபோனபின்பு,  கர்த்தருடைய  பெட்டியும்  கடந்தது;  ஆசாரியர்  ஜனத்துக்கு  முன்பாகப்  போனார்கள்.  (யோசுவா  4:11)

janamellaam  kadanthupoanapinbu,  karththarudaiya  pettiyum  kadanthathu;  aasaariyar  janaththukku  munbaagap  poanaarga'l.  (yoasuvaa  4:11)

ரூபன்  புத்திரரும்  காத்  புத்திரரும்  மனாசேயின்  பாதிக்  கோத்திரத்தாரும்  மோசே  தங்களுக்குச்  சொன்னபடியே  அணியணியாய்  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாகக்  கடந்துபோனார்கள்.  (யோசுவா  4:12)

rooban  puththirarum  kaath  puththirarum  manaaseayin  paathik  koaththiraththaarum  moasea  thangga'lukkuch  sonnapadiyea  a'niya'niyaay  israveal  puththirarukku  munbaagak  kadanthupoanaarga'l.  (yoasuvaa  4:12)

ஏறக்குறைய  நாற்பதினாயிரம்பேர்  யுத்தசன்னத்தராய்  யுத்தம்பண்ணும்படி,  கர்த்தருக்கு  முன்பாக  எரிகோவின்  சமனான  வெளிகளுக்குக்  கடந்துபோனார்கள்.  (யோசுவா  4:13)

ea’rakku’raiya  naa’rpathinaayirampear  yuththasannaththaraay  yuththampa'n'numpadi,  karththarukku  munbaaga  erigoavin  samanaana  ve'liga'lukkuk  kadanthupoanaarga'l.  (yoasuvaa  4:13)

அந்நாளிலே  கர்த்தர்  யோசுவாவைச்  சகல  இஸ்ரவேலரின்  கண்களுக்கு  முன்பாகவும்  மேன்மைப்படுத்தினார்;  அவர்கள்  மோசேக்குப்  பயந்திருந்ததுபோல,  அவனுக்கும்,  அவன்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  பயந்திருந்தார்கள்.  (யோசுவா  4:14)

annaa'lilea  karththar  yoasuvaavaich  sagala  isravealarin  ka'nga'lukku  munbaagavum  meanmaippaduththinaar;  avarga'l  moaseakkup  bayanthirunthathupoala,  avanukkum,  avan  uyiroadiruntha  naa'lellaam  bayanthirunthaarga'l.  (yoasuvaa  4:14)

கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  (யோசுவா  4:15)

karththar  yoasuvaavai  noakki:  (yoasuvaa  4:15)

சாட்சியின்  பெட்டியைச்  சுமக்கிற  ஆசாரியர்  யோர்தானிலிருந்து  கரையேறும்படி  அவர்களுக்குக்  கட்டளையிடு  என்று  சொன்னார்.  (யோசுவா  4:16)

saadchiyin  pettiyaich  sumakki’ra  aasaariyar  yoarthaanilirunthu  karaiyea’rumpadi  avarga'lukkuk  katta'laiyidu  en’ru  sonnaar.  (yoasuvaa  4:16)

யோசுவா:  யோர்தானிலிருந்து  கரையேறி  வாருங்கள்  என்று  ஆசாரியர்களுக்குக்  கட்டளையிட்டான்.  (யோசுவா  4:17)

yoasuvaa:  yoarthaanilirunthu  karaiyea’ri  vaarungga'l  en’ru  aasaariyarga'lukkuk  katta'laiyittaan.  (yoasuvaa  4:17)

அப்பொழுது  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியைச்  சுமக்கிற  ஆசாரியர்  யோர்தான்  நடுவிலிருந்து  ஏறி,  அவர்கள்  உள்ளங்கால்கள்  கரையில்  ஊன்றினபோது,  யோர்தானின்  தண்ணீர்கள்  தங்களிடத்துக்குத்  திரும்பி,  முன்போல  அதின்  கரையெங்கும்  புரண்டது.  (யோசுவா  4:18)

appozhuthu  karththarudaiya  udanpadikkaip  pettiyaich  sumakki’ra  aasaariyar  yoarthaan  naduvilirunthu  ea’ri,  avarga'l  u'l'langkaalga'l  karaiyil  oon’rinapoathu,  yoarthaanin  tha'n'neerga'l  thangga'lidaththukkuth  thirumbi,  munpoala  athin  karaiyenggum  pura'ndathu.  (yoasuvaa  4:18)

இந்தப்பிரகாரமாக  முதல்  மாதம்  பத்தாம்  தேதியிலே  ஜனங்கள்  யோர்தானிலிருந்து  கரையேறி,  எரிகோவுக்குக்  கீழெல்லையான  கில்காலிலே  பாளயமிறங்கினார்கள்.  (யோசுவா  4:19)

inthappiragaaramaaga  muthal  maatham  paththaam  theathiyilea  janangga'l  yoarthaanilirunthu  karaiyea’ri,  erigoavukkuk  keezhellaiyaana  kilgaalilea  paa'layami’rangginaarga'l.  (yoasuvaa  4:19)

அவர்கள்  யோர்தானில்  எடுத்துக்  கொண்டுவந்த  அந்தப்  பன்னிரண்டு  கற்களையும்  யோசுவா  கில்காலிலே  நாட்டி,  (யோசுவா  4:20)

avarga'l  yoarthaanil  eduththuk  ko'nduvantha  anthap  pannira'ndu  ka’rka'laiyum  yoasuvaa  kilgaalilea  naatti,  (yoasuvaa  4:20)

இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  நாளை  உங்கள்  பிள்ளைகள்  இந்தக்  கற்கள்  ஏதென்று  தங்கள்  பிதாக்களைக்  கேட்கும்போது,  (யோசுவா  4:21)

israveal  puththirarai  noakki:  naa'lai  ungga'l  pi'l'laiga'l  inthak  ka’rka'l  eathen’ru  thangga'l  pithaakka'laik  keadkumpoathu,  (yoasuvaa  4:21)

நீங்கள்  உங்கள்  பிள்ளைகளுக்கு  அறிவிக்கவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேலர்  வெட்டாந்தரை  வழியாய்  இந்த  யோர்தானைக்  கடந்துவந்தார்கள்.  (யோசுவா  4:22)

neengga'l  ungga'l  pi'l'laiga'lukku  a’rivikkavea'ndiyathu  ennaven’raal:  isravealar  vettaantharai  vazhiyaay  intha  yoarthaanaik  kadanthuvanthaarga'l.  (yoasuvaa  4:22)

பூமியின்  சகல  ஜனங்களும்  கர்த்தருடைய  கரம்  பலத்ததென்று  அறியும்படிக்கும்,  நீங்கள்  சகல  நாளும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பயப்படும்படிக்கும்,  (யோசுவா  4:23)

boomiyin  sagala  janangga'lum  karththarudaiya  karam  balaththathen’ru  a’riyumpadikkum,  neengga'l  sagala  naa'lum  ungga'l  theavanaagiya  karththarukkup  bayappadumpadikkum,  (yoasuvaa  4:23)

உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  சிவந்த  சமுத்திரத்தின்  தண்ணீரை  நாங்கள்  கடந்து  தீருமட்டும்  எங்களுக்கு  முன்பாக  வற்றிப்போகப்பண்ணினது  போல,  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  யோர்தானின்  தண்ணீருக்கும்  செய்து,  அதை  உங்களுக்கு  முன்பாக  நீங்கள்  கடந்து  தீருமளவும்  வற்றிப்போகப்பண்ணினார்  என்று  அறிவிக்கக்கடவீர்கள்  என்றான்.  (யோசுவா  4:24)

ungga'l  theavanaagiya  karththar  sivantha  samuththiraththin  tha'n'neerai  naangga'l  kadanthu  theerumattum  engga'lukku  munbaaga  vat’rippoagappa'n'ninathu  poala,  ungga'l  theavanaagiya  karththar  yoarthaanin  tha'n'neerukkum  seythu,  athai  ungga'lukku  munbaaga  neengga'l  kadanthu  theeruma'lavum  vat’rippoagappa'n'ninaar  en’ru  a’rivikkakkadaveerga'l  en’raan.  (yoasuvaa  4:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!