Friday, August 12, 2016

Yoasuvaa 10 | யோசுவா 10 | Joshua 10

யோசுவா  ஆயியைப்  பிடித்து,  சங்காரம்பண்ணி,  எரிகோவுக்கும்  அதின்  ராஜாவுக்கும்  செய்தபடி,  ஆயிக்கும்  அதின்  ராஜாவுக்கும்  செய்ததையும்,  கிபியோனின்  குடிகள்  இஸ்ரவேலோடே  சமாதானம்பண்ணி  அவர்களுக்குள்  வாசமாயிருக்கிறதையும்,  எருசலேமின்  ராஜாவாகிய  அதோனிசேதேக்  கேள்விப்பட்டபோது,  (யோசுவா  10:1)

yoasuvaa  aayiyaip  pidiththu,  sanggaarampa'n'ni,  erigoavukkum  athin  raajaavukkum  seythapadi,  aayikkum  athin  raajaavukkum  seythathaiyum,  kibiyoanin  kudiga'l  isravealoadea  samaathaanampa'n'ni  avarga'lukku'l  vaasamaayirukki’rathaiyum,  erusaleamin  raajaavaagiya  athoaniseatheak  kea'lvippattapoathu,  (yoasuvaa  10:1)

கிபியோன்  ராஜதானி  பட்டணங்களில்  ஒன்றைப்போல்  பெரிய  பட்டணமும்,  ஆயியைப்பார்க்கிலும்  பெரிதுமாயிருந்தபடியினாலும்,  அதின்  மனுஷரெல்லாரும்  பலசாலிகளாயிருந்தபடியினாலும்,  மிகவும்  பயந்தார்கள்.  (யோசுவா  10:2)

kibiyoan  raajathaani  patta'nangga'lil  on’raippoal  periya  patta'namum,  aayiyaippaarkkilum  perithumaayirunthapadiyinaalum,  athin  manusharellaarum  balasaaliga'laayirunthapadiyinaalum,  migavum  bayanthaarga'l.  (yoasuvaa  10:2)

ஆகையால்,  எருசலேமின்  ராஜாவாகிய  அதோனிசேதேக்  எபிரோனின்  ராஜாவாகிய  ஓகாமுக்கும்,  யர்மூத்தின்  ராஜாவாகிய  பீராமுக்கும்,  லாகீசின்  ராஜாவாகிய  யப்பியாவுக்கும்,  எக்லோனின்  ராஜாவாகிய  தெபீருக்கும்  ஆள்  அனுப்பி:  (யோசுவா  10:3)

aagaiyaal,  erusaleamin  raajaavaagiya  athoaniseatheak  ebiroanin  raajaavaagiya  oagaamukkum,  yarmooththin  raajaavaagiya  peeraamukkum,  laageesin  raajaavaagiya  yappiyaavukkum,  ekloanin  raajaavaagiya  thebeerukkum  aa'l  anuppi:  (yoasuvaa  10:3)

நாங்கள்  கிபியோனைச்  சங்கரிக்கும்படி,  நீங்கள்  என்னிடத்தில்  வந்து,  எனக்குத்  துணைசெய்யுங்கள்;  அவர்கள்  யோசுவாவோடும்  இஸ்ரவேல்  புத்திரரோடும்  சமாதானம்பண்ணினார்கள்  என்று  சொல்லி  அனுப்பினான்.  (யோசுவா  10:4)

naangga'l  kibiyoanaich  sanggarikkumpadi,  neengga'l  ennidaththil  vanthu,  enakkuth  thu'naiseyyungga'l;  avarga'l  yoasuvaavoadum  israveal  puththiraroadum  samaathaanampa'n'ninaarga'l  en’ru  solli  anuppinaan.  (yoasuvaa  10:4)

அப்படியே  எருசலேமின்  ராஜா,  எபிரோனின்  ராஜா,  யர்மூத்தின்  ராஜா,  லாகீசின்  ராஜா,  எக்லோனின்  ராஜா  என்கிற  எமோரியரின்  ஐந்து  ராஜாக்களும்  கூடிக்கொண்டு,  அவர்களும்  அவர்களுடைய  எல்லாச்  சேனைகளும்  போய்,  கிபியோனுக்கு  முன்பாகப்  பாளயமிறங்கி,  அதின்மேல்  யுத்தம்பண்ணினார்கள்.  (யோசுவா  10:5)

appadiyea  erusaleamin  raajaa,  ebiroanin  raajaa,  yarmooththin  raajaa,  laageesin  raajaa,  ekloanin  raajaa  engi’ra  emoariyarin  ainthu  raajaakka'lum  koodikko'ndu,  avarga'lum  avarga'ludaiya  ellaach  seanaiga'lum  poay,  kibiyoanukku  munbaagap  paa'layami’ranggi,  athinmeal  yuththampa'n'ninaarga'l.  (yoasuvaa  10:5)

அப்பொழுது  கிபியோனின்  மனுஷர்  கில்காலிலிருக்கிற  பாளயத்துக்கு  யோசுவாவினிடத்தில்  ஆளனுப்பி:  உமது  அடியாரைக்  கைவிடாமல்,  சீக்கிரமாய்  எங்களிடத்தில்  வந்து,  எங்களை  ரட்சித்து,  எங்களுக்குத்  துணைசெய்யும்;  பர்வதங்களிலே  குடியிருக்கிற  எமோரியரின்  ராஜாக்களெல்லாரும்  எங்களுக்கு  விரோதமாய்க்  கூடினார்கள்  என்று  சொல்லச்சொன்னார்கள்.  (யோசுவா  10:6)

appozhuthu  kibiyoanin  manushar  kilgaalilirukki’ra  paa'layaththukku  yoasuvaavinidaththil  aa'lanuppi:  umathu  adiyaaraik  kaividaamal,  seekkiramaay  engga'lidaththil  vanthu,  engga'lai  radchiththu,  engga'lukkuth  thu'naiseyyum;  parvathangga'lilea  kudiyirukki’ra  emoariyarin  raajaakka'lellaarum  engga'lukku  viroathamaayk  koodinaarga'l  en’ru  sollachsonnaarga'l.  (yoasuvaa  10:6)

உடனே  யோசுவாவும்  அவனோடேகூடச்  சகல  யுத்தமனுஷரும்  சகல  பராக்கிரமசாலிகளும்  கில்காலிலிருந்து  போனார்கள்.  (யோசுவா  10:7)

udanea  yoasuvaavum  avanoadeakoodach  sagala  yuththamanusharum  sagala  baraakkiramasaaliga'lum  kilgaalilirunthu  poanaarga'l.  (yoasuvaa  10:7)

கர்த்தர்  யோசுவாவை  நோக்கி:  அவர்களுக்குப்  பயப்படாயாக;  உன்  கைகளில்  அவர்களை  ஒப்புக்கொடுத்தேன்;  அவர்களில்  ஒருவரும்  உனக்கு  முன்பாக  நிற்பதில்லை  என்றார்.  (யோசுவா  10:8)

karththar  yoasuvaavai  noakki:  avarga'lukkup  bayappadaayaaga;  un  kaiga'lil  avarga'lai  oppukkoduththean;  avarga'lil  oruvarum  unakku  munbaaga  ni’rpathillai  en’raar.  (yoasuvaa  10:8)

யோசுவா  கில்காலிலிருந்து  இராமுழுதும்  நடந்து,  திடீரென்று  அவர்கள்மேல்  வந்துவிட்டான்.  (யோசுவா  10:9)

yoasuvaa  kilgaalilirunthu  iraamuzhuthum  nadanthu,  thideeren’ru  avarga'lmeal  vanthuvittaan.  (yoasuvaa  10:9)

கர்த்தரோ  அவர்களை  இஸ்ரவேலுக்கு  முன்பாகக்  கலங்கப்பண்ணினார்;  ஆகையால்  அவர்களைக்  கிபியோனிலே  மகா  சங்காரமாக  மடங்கடித்து,  பெத்தொரோனுக்குப்  போகிற  வழியிலே  துரத்தி,  அசெக்காமட்டும்  மக்கெதாமட்டும்  முறிய  அடித்தார்கள்.  (யோசுவா  10:10)

karththaroa  avarga'lai  isravealukku  munbaagak  kalanggappa'n'ninaar;  aagaiyaal  avarga'laik  kibiyoanilea  mahaa  sanggaaramaaga  madanggadiththu,  beththoroanukkup  poagi’ra  vazhiyilea  thuraththi,  asekkaamattum  makkethaamattum  mu’riya  adiththaarga'l.  (yoasuvaa  10:10)

அவர்கள்  பெத்தொரோனிலிருந்து  இறங்குகிற  வழியிலே  இஸ்ரவேலுக்கு  முன்பாக  ஓடிப்போகையில்,  அசெக்காமட்டும்  ஓடுகிற  அவர்கள்மேல்  கர்த்தர்  வானத்திலிருந்து  பெரிய  கற்களை  விழப்பண்ணினார்,  அவர்கள்  செத்தார்கள்;  இஸ்ரவேல்  புத்திரர்  பட்டயத்தால்  கொன்றவர்களைப்பார்க்கிலும்  கல்மழையினால்  செத்தவர்கள்  அதிகமாயிருந்தார்கள்.  (யோசுவா  10:11)

avarga'l  beththoroanilirunthu  i’ranggugi’ra  vazhiyilea  isravealukku  munbaaga  oadippoagaiyil,  asekkaamattum  oadugi’ra  avarga'lmeal  karththar  vaanaththilirunthu  periya  ka’rka'lai  vizhappa'n'ninaar,  avarga'l  seththaarga'l;  israveal  puththirar  pattayaththaal  kon’ravarga'laippaarkkilum  kalmazhaiyinaal  seththavarga'l  athigamaayirunthaarga'l.  (yoasuvaa  10:11)

கர்த்தர்  எமோரியரை  இஸ்ரவேல்  புத்திரருக்கு  முன்பாக  ஒப்புக்கொடுக்கிற  அந்நாளிலே,  யோசுவா  கர்த்தரை  நோக்கிப்  பேசி,  பின்பு  இஸ்ரவேலின்  கண்களுக்கு  முன்பாக:  சூரியனே,  நீ  கிபியோன்மேலும்,  சந்திரனே,  நீ  ஆயலோன்  பள்ளத்தாக்கின்மேலும்,  தரித்துநில்லுங்கள்  என்றான்.  (யோசுவா  10:12)

karththar  emoariyarai  israveal  puththirarukku  munbaaga  oppukkodukki’ra  annaa'lilea,  yoasuvaa  karththarai  noakkip  peasi,  pinbu  isravealin  ka'nga'lukku  munbaaga:  sooriyanea,  nee  kibiyoanmealum,  santhiranea,  nee  aayaloan  pa'l'laththaakkinmealum,  thariththunillungga'l  en’raan.  (yoasuvaa  10:12)

அப்பொழுது  ஜனங்கள்  தங்கள்  சத்துருக்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டுமட்டும்  சூரியன்  தரித்தது,  சந்திரனும்  நின்றது;  இது  யாசேரின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கவில்லையா;  அப்படியே  சூரியன்  அஸ்தமிக்கத்  தீவிரிக்காமல்,  ஏறக்குறைய  ஒரு  பகல்முழுதும்  நடுவானத்தில்  நின்றது.  (யோசுவா  10:13)

appozhuthu  janangga'l  thangga'l  saththurukka'lukku  neethiyaich  sarikkattumattum  sooriyan  thariththathu,  santhiranum  nin’rathu;  ithu  yaasearin  pusthagaththil  ezhuthiyirukkavillaiyaa;  appadiyea  sooriyan  asthamikkath  theevirikkaamal,  ea’rakku’raiya  oru  pagalmuzhuthum  naduvaanaththil  nin’rathu.  (yoasuvaa  10:13)

இப்படிக்  கர்த்தர்  ஒரு  மனிதனுடைய  சொல்கேட்ட  அந்நாளையொத்தநாள்  அதற்கு  முன்னுமில்லை  அதற்குப்  பின்னுமில்லை;  கர்த்தர்  இஸ்ரவேலுக்காக  யுத்தம்பண்ணினார்.  (யோசுவா  10:14)

ippadik  karththar  oru  manithanudaiya  solkeatta  annaa'laiyoththanaa'l  atha’rku  munnumillai  atha’rkup  pinnumillai;  karththar  isravealukkaaga  yuththampa'n'ninaar.  (yoasuvaa  10:14)

பின்பு  யோசுவா  இஸ்ரவேல்  அனைத்தோடும்கூடக்  கில்காலிலிருக்கிற  பாளயத்துக்குத்  திரும்பினான்.  (யோசுவா  10:15)

pinbu  yoasuvaa  israveal  anaiththoadumkoodak  kilgaalilirukki’ra  paa'layaththukkuth  thirumbinaan.  (yoasuvaa  10:15)

அந்த  ஐந்து  ராஜாக்களும்  ஓடிப்போய்,  மக்கெதாவிலிருக்கிற  ஒரு  கெபியில்  ஒளித்துக்கொண்டார்கள்.  (யோசுவா  10:16)

antha  ainthu  raajaakka'lum  oadippoay,  makkethaavilirukki’ra  oru  kebiyil  o'liththukko'ndaarga'l.  (yoasuvaa  10:16)

ஐந்து  ராஜாக்களும்  மக்கெதாவிலிருக்கிற  ஒரு  கெபியில்  ஒளித்திருந்து  அகப்பட்டார்கள்  என்று  யோசுவாவுக்கு  அறிவிக்கப்பட்டது.  (யோசுவா  10:17)

ainthu  raajaakka'lum  makkethaavilirukki’ra  oru  kebiyil  o'liththirunthu  agappattaarga'l  en’ru  yoasuvaavukku  a’rivikkappattathu.  (yoasuvaa  10:17)

அப்பொழுது  யோசுவா:  பெரிய  கற்களைக்  கெபியின்  வாயிலே  புரட்டி,  அவ்விடத்தில்  அவர்களைக்  காவல்காக்க  மனுஷரை  வையுங்கள்.  (யோசுவா  10:18)

appozhuthu  yoasuvaa:  periya  ka’rka'laik  kebiyin  vaayilea  puratti,  avvidaththil  avarga'laik  kaavalkaakka  manusharai  vaiyungga'l.  (yoasuvaa  10:18)

நீங்களோ  நில்லாமல்,  உங்கள்  சத்துருக்களைத்  துரத்தி,  அவர்களுடைய  பின்படைகளை  வெட்டிப்போடுங்கள்;  அவர்களைத்  தங்கள்  பட்டணங்களிலே  பிரவேசிக்கவொட்டாதிருங்கள்;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்றான்.  (யோசுவா  10:19)

neengga'loa  nillaamal,  ungga'l  saththurukka'laith  thuraththi,  avarga'ludaiya  pinpadaiga'lai  vettippoadungga'l;  avarga'laith  thangga'l  patta'nangga'lilea  piraveasikkavottaathirungga'l;  ungga'l  theavanaagiya  karththar  avarga'lai  ungga'l  kaiyil  oppukkoduththaar  en’raan.  (yoasuvaa  10:19)

யோசுவாவும்  இஸ்ரவேல்  புத்திரரும்  அவர்களை  மகா  பெரிய  சங்காரமாய்  அவர்கள்  அழியுமளவும்  சங்கரித்தார்கள்;  அவர்களில்  மீதியானவர்கள்  அரணான  பட்டணங்களுக்குள்  புகுந்தார்கள்.  (யோசுவா  10:20)

yoasuvaavum  israveal  puththirarum  avarga'lai  mahaa  periya  sanggaaramaay  avarga'l  azhiyuma'lavum  sanggariththaarga'l;  avarga'lil  meethiyaanavarga'l  ara'naana  patta'nangga'lukku'l  pugunthaarga'l.  (yoasuvaa  10:20)

ஜனங்களெல்லாரும்  சுகமாய்  மக்கெதாவிலிருக்கிற  பாளயத்திலே,  யோசுவாவினிடத்திற்குத்  திரும்பிவந்தார்கள்;  இஸ்ரவேல்  புத்திரருக்கு  விரோதமாக  ஒருவனும்  தன்  நாவை  அசைக்கவில்லை.  (யோசுவா  10:21)

janangga'lellaarum  sugamaay  makkethaavilirukki’ra  paa'layaththilea,  yoasuvaavinidaththi’rkuth  thirumbivanthaarga'l;  israveal  puththirarukku  viroathamaaga  oruvanum  than  naavai  asaikkavillai.  (yoasuvaa  10:21)

அப்பொழுது  யோசுவா:  கெபியின்  வாயைத்  திறந்து,  அந்த  ஐந்து  ராஜாக்களையும்  அந்தக்  கெபியிலிருந்து  என்னிடத்திற்கு  வெளியே  கொண்டுவாருங்கள்  என்றான்.  (யோசுவா  10:22)

appozhuthu  yoasuvaa:  kebiyin  vaayaith  thi’ranthu,  antha  ainthu  raajaakka'laiyum  anthak  kebiyilirunthu  ennidaththi’rku  ve'liyea  ko'nduvaarungga'l  en’raan.  (yoasuvaa  10:22)

அவர்கள்  அப்படியே  செய்து,  எருசலேமின்  ராஜாவும்,  எபிரோனின்  ராஜாவும்,  யர்மூத்தின்  ராஜாவும்,  லாகீசின்  ராஜாவும்,  எக்லோனின்  ராஜாவுமாகிய  அந்த  ஐந்து  ராஜாக்களையும்  அந்தக்  கெபியிலிருந்து  அவனிடத்திற்கு  வெளியே  கொண்டுவந்தார்கள்.  (யோசுவா  10:23)

avarga'l  appadiyea  seythu,  erusaleamin  raajaavum,  ebiroanin  raajaavum,  yarmooththin  raajaavum,  laageesin  raajaavum,  ekloanin  raajaavumaagiya  antha  ainthu  raajaakka'laiyum  anthak  kebiyilirunthu  avanidaththi’rku  ve'liyea  ko'nduvanthaarga'l.  (yoasuvaa  10:23)

அவர்களை  யோசுவாவினிடத்திற்குக்  கொண்டுவந்தபோது,  யோசுவா  இஸ்ரவேல்  மனுஷரையெல்லாம்  அழைப்பித்து,  தன்னோடேகூட  வந்த  யுத்தமனுஷரின்  அதிபதிகளை  நோக்கி:  நீங்கள்  கிட்டவந்து,  உங்கள்  கால்களை  இந்த  ராஜாக்களுடைய  கழுத்துகளின்மேல்  வையுங்கள்  என்றான்;  அவர்கள்  கிட்டவந்து,  தங்கள்  கால்களை  அவர்கள்  கழுத்துகளின்மேல்  வைத்தார்கள்.  (யோசுவா  10:24)

avarga'lai  yoasuvaavinidaththi’rkuk  ko'nduvanthapoathu,  yoasuvaa  israveal  manusharaiyellaam  azhaippiththu,  thannoadeakooda  vantha  yuththamanusharin  athibathiga'lai  noakki:  neengga'l  kittavanthu,  ungga'l  kaalga'lai  intha  raajaakka'ludaiya  kazhuththuga'linmeal  vaiyungga'l  en’raan;  avarga'l  kittavanthu,  thangga'l  kaalga'lai  avarga'l  kazhuththuga'linmeal  vaiththaarga'l.  (yoasuvaa  10:24)

அப்பொழுது  யோசுவா  அவர்களை  நோக்கி:  நீங்கள்  பயப்படாமலும்  கலங்காமலும்  பலத்துத்  திடமனதாயிருங்கள்;  நீங்கள்  யுத்தம்பண்ணும்  உங்கள்  சத்துருக்களுக்கெல்லாம்  கர்த்தர்  இப்படியே  செய்வார்  என்றான்.  (யோசுவா  10:25)

appozhuthu  yoasuvaa  avarga'lai  noakki:  neengga'l  bayappadaamalum  kalanggaamalum  balaththuth  thidamanathaayirungga'l;  neengga'l  yuththampa'n'num  ungga'l  saththurukka'lukkellaam  karththar  ippadiyea  seyvaar  en’raan.  (yoasuvaa  10:25)

அதற்குப்பின்பு  யோசுவா  அவர்களை  வெட்டிக்  கொன்று,  ஐந்து  மரங்களிலே  தூக்கிப்போட்டான்;  சாயங்காலமட்டும்  மரங்களில்  தொங்கினார்கள்.  (யோசுவா  10:26)

atha’rkuppinbu  yoasuvaa  avarga'lai  vettik  kon’ru,  ainthu  marangga'lilea  thookkippoattaan;  saayanggaalamattum  marangga'lil  thongginaarga'l.  (yoasuvaa  10:26)

சூரியன்  அஸ்தமிக்கிற  வேளையிலே,  யோசுவா  அவர்களை  மரங்களிலிருந்து  இறக்கக்  கட்டளையிட்டான்.  அவர்கள்  ஒளித்துக்கொண்டிருந்த  கெபியிலே  அவர்களைப்  போட்டு;  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  பெரிய  கற்களைக்  கெபியின்  வாயிலே  அடைத்தார்கள்.  (யோசுவா  10:27)

sooriyan  asthamikki’ra  vea'laiyilea,  yoasuvaa  avarga'lai  marangga'lilirunthu  i’rakkak  katta'laiyittaan.  avarga'l  o'liththukko'ndiruntha  kebiyilea  avarga'laip  poattu;  innaa'lvaraikkum  irukki’rapadi  periya  ka’rka'laik  kebiyin  vaayilea  adaiththaarga'l.  (yoasuvaa  10:27)

அந்நாளிலே  யோசுவா  மக்கெதாவைப்  பிடித்து,  அதைப்  பட்டயக்கருக்கினால்  அழித்து,  அதின்  ராஜாவையும்  அதிலுள்ள  மனுஷராகிய  சகல  நரஜீவன்களையும்,  ஒருவரையும்  மீதியாக  வைக்காமல்,  சங்காரம்பண்ணி,  எரிகோவின்  ராஜாவுக்குச்  செய்ததுபோல,  மக்கெதாவின்  ராஜாவுக்கும்  செய்தான்.  (யோசுவா  10:28)

annaa'lilea  yoasuvaa  makkethaavaip  pidiththu,  athaip  pattayakkarukkinaal  azhiththu,  athin  raajaavaiyum  athilu'l'la  manusharaagiya  sagala  narajeevanga'laiyum,  oruvaraiyum  meethiyaaga  vaikkaamal,  sanggaarampa'n'ni,  erigoavin  raajaavukkuch  seythathupoala,  makkethaavin  raajaavukkum  seythaan.  (yoasuvaa  10:28)

மக்கெதாவிலிருந்து  யோசுவா  இஸ்ரவேலர்  அனைவரோடுங்கூட  லிப்னாவுக்குப்  புறப்பட்டு,  லிப்னாவின்மேல்  யுத்தம்பண்ணினான்.  (யோசுவா  10:29)

makkethaavilirunthu  yoasuvaa  isravealar  anaivaroadungkooda  libnaavukkup  pu’rappattu,  libnaavinmeal  yuththampa'n'ninaan.  (yoasuvaa  10:29)

கர்த்தர்  அதையும்  அதின்  ராஜாவையும்  இஸ்ரவேலின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அதையும்  அதிலுள்ள  சகல  நரஜீவன்களையும்,  ஒருவரையும்  அதிலே  மீதியாக  வைக்காமல்,  பட்டயக்கருக்கினால்  அழித்து,  எரிகோவின்  ராஜாவுக்குச்  செய்ததுபோல,  அதின்  ராஜாவுக்கும்  செய்தான்.  (யோசுவா  10:30)

karththar  athaiyum  athin  raajaavaiyum  isravealin  kaiyil  oppukkoduththaar;  athaiyum  athilu'l'la  sagala  narajeevanga'laiyum,  oruvaraiyum  athilea  meethiyaaga  vaikkaamal,  pattayakkarukkinaal  azhiththu,  erigoavin  raajaavukkuch  seythathupoala,  athin  raajaavukkum  seythaan.  (yoasuvaa  10:30)

லிப்னாவிலிருந்து  யோசுவா  இஸ்ரவேல்  அனைத்தோடுங்கூட  லாகீசுக்குப்  புறப்பட்டு,  அதற்கு  எதிரே  பாளயமிறங்கி,  அதின்மேல்  யுத்தம்பண்ணினான்.  (யோசுவா  10:31)

libnaavilirunthu  yoasuvaa  israveal  anaiththoadungkooda  laageesukkup  pu’rappattu,  atha’rku  ethirea  paa'layami’ranggi,  athinmeal  yuththampa'n'ninaan.  (yoasuvaa  10:31)

கர்த்தர்  லாகீசை  இஸ்ரவேலின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அதை  இரண்டாம்  நாளிலே  பிடித்து,  லிப்னாவுக்குச்  செய்ததுபோல,  அதையும்  அதிலுள்ள  எல்லா  நரஜீவன்களையும்  பட்டயக்கருக்கினால்  அழித்தான்.  (யோசுவா  10:32)

karththar  laageesai  isravealin  kaiyil  oppukkoduththaar;  athai  ira'ndaam  naa'lilea  pidiththu,  libnaavukkuch  seythathupoala,  athaiyum  athilu'l'la  ellaa  narajeevanga'laiyum  pattayakkarukkinaal  azhiththaan.  (yoasuvaa  10:32)

அப்பொழுது  கேசேரின்  ராஜாவாகிய  ஓராம்  லாகீசுக்குத்  துணைசெய்யும்படி  வந்தான்;  யோசுவா  அவனையும்  அவன்  ஜனத்தையும்,  ஒருவனும்  மீதியாயிராதபடி,  வெட்டிப்போட்டான்.  (யோசுவா  10:33)

appozhuthu  keasearin  raajaavaagiya  oaraam  laageesukkuth  thu'naiseyyumpadi  vanthaan;  yoasuvaa  avanaiyum  avan  janaththaiyum,  oruvanum  meethiyaayiraathapadi,  vettippoattaan.  (yoasuvaa  10:33)

லாகீசிலிருந்து  யோசுவாவும்  இஸ்ரவேலர்  அனைவரும்  எக்லோனுக்குப்  புறப்பட்டு,  அதற்கு  எதிரே  பாளயமிறங்கி,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  (யோசுவா  10:34)

laageesilirunthu  yoasuvaavum  isravealar  anaivarum  ekloanukkup  pu’rappattu,  atha’rku  ethirea  paa'layami’ranggi,  athinmeal  yuththampa'n'ni,  (yoasuvaa  10:34)

அதை  அந்நாளிலே  பிடித்து,  அதைப்  பட்டயக்கருக்கினால்  அழித்தார்கள்;  லாகீசுக்குச்  செய்ததுபோல,  அதிலுள்ள  சகல  நரஜீவன்களையும்  அந்நாளிலேதானே  சங்காரம்பண்ணினான்.  (யோசுவா  10:35)

athai  annaa'lilea  pidiththu,  athaip  pattayakkarukkinaal  azhiththaarga'l;  laageesukkuch  seythathupoala,  athilu'l'la  sagala  narajeevanga'laiyum  annaa'lileathaanea  sanggaarampa'n'ninaan.  (yoasuvaa  10:35)

பின்பு  எக்லோனிலிருந்து  யோசுவாவும்  இஸ்ரவேலர்  அனைவருமாய்  எபிரோனுக்குப்  புறப்பட்டு,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  (யோசுவா  10:36)

pinbu  ekloanilirunthu  yoasuvaavum  isravealar  anaivarumaay  ebiroanukkup  pu’rappattu,  athinmeal  yuththampa'n'ni,  (yoasuvaa  10:36)

அதைப்  பிடித்து,  எக்லோனுக்குச்  செய்ததுபோல,  அதையும்  அதின்  ராஜாவையும்  அதற்கு  அடுத்த  எல்லாப்  பட்டணங்களையும்  அதிலுள்ள  சகல  நரஜீவன்களையும்,  ஒருவரையும்  மீதியாக  வைக்காமல்,  பட்டயக்கருக்கினால்  அழித்தார்கள்;  அதையும்  அதிலுள்ள  சகல  நரஜீவன்களையும்  சங்காரம்பண்ணினான்.  (யோசுவா  10:37)

athaip  pidiththu,  ekloanukkuch  seythathupoala,  athaiyum  athin  raajaavaiyum  atha’rku  aduththa  ellaap  patta'nangga'laiyum  athilu'l'la  sagala  narajeevanga'laiyum,  oruvaraiyum  meethiyaaga  vaikkaamal,  pattayakkarukkinaal  azhiththaarga'l;  athaiyum  athilu'l'la  sagala  narajeevanga'laiyum  sanggaarampa'n'ninaan.  (yoasuvaa  10:37)

பின்பு  யோசுவா  இஸ்ரவேலர்  அனைவரோடுங்கூடத்  தெபீருக்குத்  திரும்பிப்போய்,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  (யோசுவா  10:38)

pinbu  yoasuvaa  isravealar  anaivaroadungkoodath  thebeerukkuth  thirumbippoay,  athinmeal  yuththampa'n'ni,  (yoasuvaa  10:38)

அதையும்  அதின்  ராஜாவையும்  அதைச்  சேர்ந்த  எல்லாப்  பட்டணங்களையும்  பிடித்தான்;  அவைகளைப்  பட்டயக்கருக்கினால்  அழித்து,  அதிலுள்ள  நரஜீவன்களையெல்லாம்,  ஒருவரையும்  மீதியாக  வைக்காமல்,  சங்காரம்பண்ணினார்கள்;  எபிரோனுக்கும்  லிப்னாவுக்கும்  அவைகளின்  ராஜாவுக்கும்  செய்ததுபோலத்  தெபீருக்கும்  அதின்  ராஜாவுக்கும்  செய்தான்.  (யோசுவா  10:39)

athaiyum  athin  raajaavaiyum  athaich  searntha  ellaap  patta'nangga'laiyum  pidiththaan;  avaiga'laip  pattayakkarukkinaal  azhiththu,  athilu'l'la  narajeevanga'laiyellaam,  oruvaraiyum  meethiyaaga  vaikkaamal,  sanggaarampa'n'ninaarga'l;  ebiroanukkum  libnaavukkum  avaiga'lin  raajaavukkum  seythathupoalath  thebeerukkum  athin  raajaavukkum  seythaan.  (yoasuvaa  10:39)

இப்படியே  யோசுவா  மலைத்தேசம்  அனைத்தையும்  தென்தேசத்தையும்  சமபூமியையும்  நீர்ப்பாய்ச்சலான  இடங்களையும்  அவைகளின்  எல்லா  ராஜாக்களையும்,  ஒருவரையும்  மீதியாக  வைக்காமல்  அழித்து,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  கட்டளையிட்டபடியே,  சுவாசமுள்ள  எல்லாவற்றையும்  சங்காரம்பண்ணி,  (யோசுவா  10:40)

ippadiyea  yoasuvaa  malaiththeasam  anaiththaiyum  thentheasaththaiyum  samaboomiyaiyum  neerppaaychchalaana  idangga'laiyum  avaiga'lin  ellaa  raajaakka'laiyum,  oruvaraiyum  meethiyaaga  vaikkaamal  azhiththu,  isravealin  theavanaagiya  karththar  katta'laiyittapadiyea,  suvaasamu'l'la  ellaavat’raiyum  sanggaarampa'n'ni,  (yoasuvaa  10:40)

காதேஸ்பர்னேயாதுவக்கிக்  காத்சாமட்டும்  இருக்கிறதையும்  கிபியோன்மட்டும்  இருக்கிற  கோசேன்  தேசம்  அனைத்தையும்  அழித்தான்.  (யோசுவா  10:41)

kaatheasbarneayaathuvakkik  kaathsaamattum  irukki’rathaiyum  kibiyoanmattum  irukki’ra  koasean  theasam  anaiththaiyum  azhiththaan.  (yoasuvaa  10:41)

அந்த  ராஜாக்கள்  எல்லாரையும்  அவர்கள்  தேசத்தையும்  யோசுவா  ஒருமிக்கப்  பிடித்தான்;  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  இஸ்ரவேலுக்காக  யுத்தம்பண்ணினார்.  (யோசுவா  10:42)

antha  raajaakka'l  ellaaraiyum  avarga'l  theasaththaiyum  yoasuvaa  orumikkap  pidiththaan;  isravealin  theavanaagiya  karththar  isravealukkaaga  yuththampa'n'ninaar.  (yoasuvaa  10:42)

பின்பு  யோசுவா  இஸ்ரவேலனைத்தோடும்கூடக்  கில்காலிலிருக்கிற  பாளயத்துக்குத்  திரும்பினான்.  (யோசுவா  10:43)

pinbu  yoasuvaa  isravealanaiththoadumkoodak  kilgaalilirukki’ra  paa'layaththukkuth  thirumbinaan.  (yoasuvaa  10:43)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!